நிச்சயிக்கப்பட்ட சொர்க்கம்

கனவுகள் சுமந்த
கவிதைகளால்
காகிதம் நிரப்பியிருந்தேன்....
மைப்பட்ட புத்தகத்தின்
பக்கங்களாக மறைந்துவிட்டிருந்தது
கண்ணீரில் குலைந்த காதலால்....
எதேட்சையாக கண்களில்
பட்டுத்தொலைக்கும்
உன் பெயரும்...
நாம் சென்ற கடற்கரையின்
மணலில் தான்
இன்னும்
இன்றும் நீ நடைப்போடுகிறாய்
என்ற எண்ணங்களும்...
வரம்பு மீறிவிட்ட வார்த்தைகளும்...
இனி எதுவும், எவையும்
துணைவரப்போவதில்லை....
பிரிவுகள் கொண்டாட
இதயம் பழக்கிவிட்டேன்......
இருந்தபோது விரும்பி,
இன்று வெறுக்கும்
வாலாட்டும் ஜீவன் தானே அது??
.
.
.
.

பிரிவெழுத பிரியமில்லை...
.
.
எனினும்,
திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்......
என் நிச்சயிக்கப்பட்டுவிட்ட
சொர்க்கத்திற்கு,
திருமணநாள் நல்வாழ்த்துகள்...


-அன்புடன்,
ஸ்ரீமதி.

60 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

புதியவன் said...

//எனினும்,
திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்......
என் நிச்சயிக்கப்பட்டுவிட்ட
சொர்க்கத்திற்கு,
திருமணநாள் நல்வாழ்த்துகள்...//

காதலின் வலியையும்...காதலியின் திருமணநாள் நல்வாழ்த்துகளையும் இதை விட அழகா இதுவரை யாரும் சொல்லியாதாய் நினவில் இல்லை...

நட்புடன் ஜமால் said...

\\திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்......
என் நிச்சயிக்கப்பட்டுவிட்ட
சொர்க்கத்திற்கு,
திருமணநாள் நல்வாழ்த்துகள்... \\

நல் வார்த்தைகள் கொண்டு

சோகம் சொல்கின்றீர்கள் ...

நல்ல முயற்சி

ஆயில்யன் said...

சோகம் சொல்லியிருக்கீங்க!

இருந்தாலும் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன் :)

ஆயில்யன் said...

கிகிகிகிகி ஹய்ய்ய்ய்ய்ய் நாந்தான் மூணு :)

கார்க்கி said...

:)))

ஜீவா said...

nice one

நாகை சிவா said...

நல்லா இருக்குங்க !

கார்க்கி said...

இன்னும் ஒருவர் சேர்ந்தால் 100 followers..

வாழ்த்துகள் ஸ்ரீ

தாமிரா said...

ஜொள்ளி வெச்சு பதிவு போடுறீங்களா? ஜூப்பர்.!

தாமிரா said...

100 பாலோயர்ஸுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்..

அபுஅஃப்ஸர் said...

வரிகளின் காதலின் வலி தெரிகிறது

அருமையா வார்த்தைகளில் வடித்திருக்கீங்க‌

வாழ்த்துக்கள்

கோபிநாத் said...

ஏன் சோகம்...பட் நல்லாயிருக்கு

அமிர்தவர்ஷினி அம்மா said...

கவிதை நல்லாருக்கு, ஆனா ரொம்ப சோகமா இருக்கு ஸ்ரீமா.

Raghavendran D said...

அப்படி என்னதான் சோகம் உங்க காதல்ல..?

Maddy said...

""திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்......""

காலம் காலமாக நாம் இப்படி சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம் இல்லை எனில் சந்தோசப்பட்டு கொள்கிறோம். இல்வாழ்க்கை சொர்க்க மென்பது நாம் உருவாக்கி கொள்வதே!! எனவே

"" என் நிச்சயிக்கப்பட்டுவிட்ட
சொர்க்கத்திற்கு..........""

என்ற எண்ணமே ஒரு ஆரோக்யமான விஷயமாக உணர்கிறேன்.

""பிரிவெழுத பிரியமில்லை.........

அன்பு வேறு பரிணாமம் கொண்டால் மட்டுமே இது சாத்தியமோ? வினாக்கள் ஏனோ எளாமல் இல்லை.

எப்போதும் போல ஸ்ரீ குட்டி கவிதைகள் அருமையிலும் அருமை!! படித்து அனுபவிக்க வைக்கும் வார்த்தைகள், வரிகள்.

yathra said...

//இனி எதுவும், எவையும்
துணைவரப்போவதில்லை....
பிரிவுகள் கொண்டாட
இதயம் பழக்கிவிட்டேன்......//

ரொம்ப ஆழமா மனதைத் தொடுகிறது, இந்த வரிகள்

ஷீ-நிசி said...

//எனினும்,
திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்......
என் நிச்சயிக்கப்பட்டுவிட்ட
சொர்க்கத்திற்கு,
திருமணநாள் நல்வாழ்த்துகள்... ////

ம்ம்ம்... வலியான வார்த்தைகள் தான்...

கவிதையில் சோகம் இழையோடுகிறது...

கணினி தேசம் said...

கவிதை நலம்.

வாழ்த்துக்கள்

தமிழ் பிரியன் said...

ஹைய்யா.. இந்த கற்பனை கூட நல்லா தான் இருக்கு!

நான் said...

மதி சோகத்திலும் உங்கள் வாழ்த்து மிகமிக அருமை, வலிகளையும் காயங்களையும் இவ்வளவு அழகாய் வடித்து ஒரு வாழ்த்து அழகு மிகஅழகு,
வாழ்த்துக்கள்

Muthusamy said...

good one

தமிழ் பிரியன் said...

எப்படிம்மா தங்கச்சி.. உனக்கு மட்டும் இப்படி எல்லாம் எல்லாம் யோசிக்கத் தோணுது... நிச்சயிக்கப்பட்ட சொர்க்கத்திற்கு வாழ்த்துக்கள்!

இனியவள் புனிதா said...

அருமை!!!

நிஜமா நல்லவன் said...

தலைப்பு சூப்பர்! வாழ்த்துகள்!!

narsim said...

வாழ்த்துக்கள்

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////எனினும்,
திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்......
என் நிச்சயிக்கப்பட்டுவிட்ட
சொர்க்கத்திற்கு,
திருமணநாள் நல்வாழ்த்துகள்...//

காதலின் வலியையும்...காதலியின் திருமணநாள் நல்வாழ்த்துகளையும் இதை விட அழகா இதுவரை யாரும் சொல்லியாதாய் நினவில் இல்லை...//

நன்றி புதியவன் விரிவான வாழ்த்திற்கு :))

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்

//நல் வார்த்தைகள் கொண்டு

சோகம் சொல்கின்றீர்கள் ...

நல்ல முயற்சி//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//சோகம் சொல்லியிருக்கீங்க!

இருந்தாலும் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன் :)//

ம்ம்ம்ம் நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//கிகிகிகிகி ஹய்ய்ய்ய்ய்ய் நாந்தான் மூணு :)//

ம்ம்ம் ஆமா :))

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
//:)))//

:)))))))

ஸ்ரீமதி said...

@ ஜீவா
//nice one//

Thank you Jeeva.. :)))

ஸ்ரீமதி said...

@ நாகை சிவா
//நல்லா இருக்குங்க !//

அப்படியா? :) நன்றி.. :))

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
//இன்னும் ஒருவர் சேர்ந்தால் 100 followers..

வாழ்த்துகள் ஸ்ரீ//

100 followers வந்தாச்சு அண்ணா.. நன்றி.. :)))

ஸ்ரீமதி said...

@ தாமிரா
//ஜொள்ளி வெச்சு பதிவு போடுறீங்களா? ஜூப்பர்.!//

ஹா ஹா ஹா ம்ம்ம் ஆமாம் அண்ணா... :))

ஸ்ரீமதி said...

@ தாமிரா
//100 பாலோயர்ஸுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்..//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ அபுஅஃப்ஸர்
//வரிகளின் காதலின் வலி தெரிகிறது

அருமையா வார்த்தைகளில் வடித்திருக்கீங்க‌

வாழ்த்துக்கள்//

நன்றி அபுஅஃப்ஸர் :)))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//ஏன் சோகம்...பட் நல்லாயிருக்கு//

சோகம் சும்மா கவிதைக்கு அண்ணா.. நன்றி.. :)))

ஸ்ரீமதி said...

@ அமிர்தவர்ஷினி அம்மா
//கவிதை நல்லாருக்கு, ஆனா ரொம்ப சோகமா இருக்கு ஸ்ரீமா.//

அச்சச்சோ அப்படியா?? சரி இனிமே சோகத்த கொஞ்சம் குறைச்சுக்கரேன் அக்கா.. :))

ஸ்ரீமதி said...

@ Raghavendran D
//அப்படி என்னதான் சோகம் உங்க காதல்ல..?//

சோகம் கவிதைல மட்டும் தான் ராகவேந்திரன்.. முதல் வருகைக்கு நன்றி.. :)))

ஸ்ரீமதி said...

@ Maddy
//""திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்......""

காலம் காலமாக நாம் இப்படி சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம் இல்லை எனில் சந்தோசப்பட்டு கொள்கிறோம். இல்வாழ்க்கை சொர்க்க மென்பது நாம் உருவாக்கி கொள்வதே!! எனவே

"" என் நிச்சயிக்கப்பட்டுவிட்ட
சொர்க்கத்திற்கு..........""

என்ற எண்ணமே ஒரு ஆரோக்யமான விஷயமாக உணர்கிறேன்.

""பிரிவெழுத பிரியமில்லை.........

அன்பு வேறு பரிணாமம் கொண்டால் மட்டுமே இது சாத்தியமோ? வினாக்கள் ஏனோ எளாமல் இல்லை.

எப்போதும் போல ஸ்ரீ குட்டி கவிதைகள் அருமையிலும் அருமை!! படித்து அனுபவிக்க வைக்கும் வார்த்தைகள், வரிகள்.//

நன்றி அண்ணா அழகான, விரிவான பின்னூட்டத்திற்கு.. :)) சிறப்பான புரிதல்.. :)))

ஸ்ரீமதி said...

@ yathra
////இனி எதுவும், எவையும்
துணைவரப்போவதில்லை....
பிரிவுகள் கொண்டாட
இதயம் பழக்கிவிட்டேன்......//

ரொம்ப ஆழமா மனதைத் தொடுகிறது, இந்த வரிகள்//

அப்படியா? மகிழ்ச்சி.. :)) நன்றி யாத்ரா.. :))

ஸ்ரீமதி said...

@ ஷீ-நிசி
////எனினும்,
திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்......
என் நிச்சயிக்கப்பட்டுவிட்ட
சொர்க்கத்திற்கு,
திருமணநாள் நல்வாழ்த்துகள்... ////

ம்ம்ம்... வலியான வார்த்தைகள் தான்...

கவிதையில் சோகம் இழையோடுகிறது...//

நன்றி ஷீ-நிஷி :))

ஸ்ரீமதி said...

@ கணினி தேசம்
//கவிதை நலம்.

வாழ்த்துக்கள்//

நன்றி கணினி தேசம் :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//ஹைய்யா.. இந்த கற்பனை கூட நல்லா தான் இருக்கு!//

என்ன அண்ணா நீங்களும் வர வர ஆயில்ஸ் அண்ணா மாதிரி கமெண்ட் போட ஆரம்பிச்சிட்டீங்க‌?? ;)))))

ஸ்ரீமதி said...

@ நான்
//மதி சோகத்திலும் உங்கள் வாழ்த்து மிகமிக அருமை, வலிகளையும் காயங்களையும் இவ்வளவு அழகாய் வடித்து ஒரு வாழ்த்து அழகு மிகஅழகு,
வாழ்த்துக்கள்//

நன்றி நான் அழகான புரிதலுக்கு :)))

ஸ்ரீமதி said...

@ Muthusamy
//good one//

Thank you anna.. :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//எப்படிம்மா தங்கச்சி.. உனக்கு மட்டும் இப்படி எல்லாம் எல்லாம் யோசிக்கத் தோணுது... நிச்சயிக்கப்பட்ட சொர்க்கத்திற்கு வாழ்த்துக்கள்!//

என்ன அண்ணா சுத்தி சுத்தி வந்து வாழ்த்து சொல்லீருக்கீங்க?? ;))நன்றி.. :))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//அருமை!!!//

நன்றி அக்கா :)))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//தலைப்பு சூப்பர்! வாழ்த்துகள்!!//

ம்ம்ம் நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ narsim
//வாழ்த்துக்கள்//

நன்றி அண்ணா :))

Saravana Kumar MSK said...

வாழ்த்துக்கள் for 100 followers.. :)

Saravana Kumar MSK said...

கவிதை நல்லா இருக்கு.. ஆனா ரொம்ப ஃபீலிங்க்ஸா இருக்கு.

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//வாழ்த்துக்கள் for 100 followers.. :)//

நன்றி சரவணா :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//கவிதை நல்லா இருக்கு.. ஆனா ரொம்ப ஃபீலிங்க்ஸா இருக்கு.//

ம்ம்ம் அப்படியா?? :((

logu.. said...

\\மைப்பட்ட புத்தகத்தின்
பக்கங்களாக மறைந்துவிட்டிருந்தது
கண்ணீரில் குலைந்த காதலால்....
எதேட்சையாக கண்களில்
பட்டுத்தொலைக்கும்
உன் பெயரும்...
நாம் சென்ற கடற்கரையின்
மணலில் தான்
இன்னும்
இன்றும் நீ நடைப்போடுகிறாய்
என்ற எண்ணங்களும்...
வரம்பு மீறிவிட்ட வார்த்தைகளும்...
இனி எதுவும், எவையும்
துணைவரப்போவதில்லை....
பிரிவுகள் கொண்டாட
இதயம் பழக்கிவிட்டேன்......\\

Hayyo.. eapdinga ippdi..
Nitharsanamillamal thavaravittuvittu
thinamum anuanuvai
puthainthukondirukkum
parithaba vazhkaiyin
sathiya varigal ivai.

rasithen.

ஸ்ரீமதி said...

@ logu..
//\\மைப்பட்ட புத்தகத்தின்
பக்கங்களாக மறைந்துவிட்டிருந்தது
கண்ணீரில் குலைந்த காதலால்....
எதேட்சையாக கண்களில்
பட்டுத்தொலைக்கும்
உன் பெயரும்...
நாம் சென்ற கடற்கரையின்
மணலில் தான்
இன்னும்
இன்றும் நீ நடைப்போடுகிறாய்
என்ற எண்ணங்களும்...
வரம்பு மீறிவிட்ட வார்த்தைகளும்...
இனி எதுவும், எவையும்
துணைவரப்போவதில்லை....
பிரிவுகள் கொண்டாட
இதயம் பழக்கிவிட்டேன்......\\

Hayyo.. eapdinga ippdi..
Nitharsanamillamal thavaravittuvittu
thinamum anuanuvai
puthainthukondirukkum
parithaba vazhkaiyin
sathiya varigal ivai.

rasithen.//

நன்றி லோகநாதன் :))

reena said...

//என் நிச்சயிக்கப்பட்டுவிட்ட
சொர்க்கத்திற்கு,
திருமணநாள் நல்வாழ்த்துகள்...//

ஸ்ரீ... மிக அழகு இந்த கவிதை... காதலின் வலி வரிகளில் தெரிகிறது

ஸ்ரீமதி said...

@ reena
////என் நிச்சயிக்கப்பட்டுவிட்ட
சொர்க்கத்திற்கு,
திருமணநாள் நல்வாழ்த்துகள்...//

ஸ்ரீ... மிக அழகு இந்த கவிதை... காதலின் வலி வரிகளில் தெரிகிறது//

நன்றி ரீனா முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் :)))

Nathimoolam said...

வணக்கம்,
எல்லாம் நன்னா இருக்குன்னா, கூடுதல் அளுத்தமான வரிகள் அந்த தலைப்புத்தான்.
நல்ல தம்பதிகள் தான் சொர்கத்தை சொந்தமாக்கிக்கொள்கின்றனர்.

நன்றி.

அன்புடன்,
நதிமூலம்.

ஸ்ரீமதி said...

நன்றி நதிமூலம் :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது