கவிதைகளும் தான்...

குமிழி உடைக்கும்
குழந்தையாயிருந்தேன்...
குற்றப்பத்திரிக்கைகள் சுமக்காமல்,
பருவம் கடந்தேன்...
எங்கெங்கோ தாறுமாறாய்த் திரிந்த
வார்த்தைகளணைத்துக்
கவிதை என்றேன்...
உன்மேலெனக்கு
காதல் என்றனர்...
தடைத் தாண்டிச் செல்லத்
திணவின்றி திரும்பிவந்தன...
நினைவுகளனைத்தும் நாடோடிகளாய்...
பின்,
தனிமையைத் தனிமைப்படுத்தும்
முயற்சியில்
படுதோல்வியுற்று,
பிரித்துக்கொடுத்திருக்கிறேன் உன்மேலான
பிரியங்களை...
என்னிருபது நண்பர்களுக்கு...
ஏனோ, இப்பொழுதெல்லாம்
கண்ணுக்குத் தெரியாமலே போய்விட்டது...
என் குழந்தைப் பருவம்
மட்டுமல்ல,
என் காதல் சுமந்த
கவிதைகளும் தான்...
-அன்புடன்,
ஸ்ரீமதி.

84 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

நட்புடன் ஜமால் said...

கவிதை என்றேன்...
உன்மேலெனக்கு
காதல் என்றனர்...\\

அழகு ...

நட்புடன் ஜமால் said...

என் குழந்தைப் பருவம்
மட்டுமல்ல,
என் காதல் சுமந்த
கவிதைகளும் தான்\\

இதுவும் அழகு ...

கார்க்கி said...

இனிமேல நீ கவிதையே எழுதாம பண்றதுக்கு என்ன செய்யனும்?

/தனிமையைத் தனிமைப்படுத்தும்
முயற்சியில்
படுதோல்வியுற்று,
பிரித்துக்கொடுத்திருக்கிறேன் உன்மேலான
பிரியங்களை...
என்னிருபது நண்பர்களுக்கு...//

வேலையை பாருடா கார்க்கி. இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணிக்கிட்டு

புதியவன் said...

//ஏனோ, இப்பொழுதெல்லாம்
கண்ணுக்குத் தெரியாமலே போய்விட்டது...
என் குழந்தைப் பருவம்
மட்டுமல்ல,
என் காதல் சுமந்த
கவிதைகளும் தான்...//

காதலும் கவிதையும் அழகு...

புதியவன் said...

//தனிமையைத் தனிமைப்படுத்தும்
முயற்சியில்
படுதோல்வியுற்று,//

மிகவும் ரசிதேன் இந்த வரிகளை...

அனுஜன்யா said...

ஸ்ரீ,

வித்தியாசமாக எழுதத் துவங்கிவிட்டாய். நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

அனுஜன்யா

இனியவள் புனிதா said...

//தனிமையைத் தனிமைப்படுத்தும்
முயற்சியில்
படுதோல்வியுற்று,
பிரித்துக்கொடுத்திருக்கிறேன் உன்மேலான
பிரியங்களை//

எவ்வளவு நிதர்சனமான வரிகள்...அழுத்தமான உண்மையுங்கூட :-)

தமிழன்-கறுப்பி... said...

வார்த்தைகள் வித்தியாசப்படுகின்றன!

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள்!!

தமிழன்-கறுப்பி... said...

கனவுகள் காணாமப்போச்சுங்கறிங்க கவிதைகள் காணாமப்போச்சுங்கறிங்க என்னங்க ஆச்சு...

ஆமா ஸ்ரீமதி இருக்கிறாங்க தானே ;)

yathra said...

//தனிமையைத் தனிமைப்படுத்தும்
முயற்சியில்
படுதோல்வியுற்று//

மிகவும் தனிமையாய் உணர்கிறேன்
என்னுடன் இருப்பாயா
என்றது தனிமை
உன்னுடன் நிறையநேரம் இருந்து
உன்னையும் விரோதித்துக்கொண்டால்
எனக்கு வேறு போக்கிடம் இல்லை

தாமிரா said...

அப்பிடியெல்லாம் அவ்வளவு சீக்கிரம் காணாமல் போக கவிதைகளை விட்டுறாதீங்க.. உங்க ஸ்பெஷலே தேன்துளிக் கவிதைகளே.!

தமிழ் பிரியன் said...

என்னோட கமெண்ட் எங்கே?.. :((

தமிழ் பிரியன் said...

நல்லா இருக்கு!

Karthik said...

அட்டகாசம்..!

one of the best of yours. i really liked this one so much. :))

Iyarkai said...

//தனிமையைத் தனிமைப்படுத்தும்
முயற்சியில்
படுதோல்வியுற்று,
பிரித்துக்கொடுத்திருக்கிறேன் உன்மேலான
பிரியங்களை//

அழகு...

நாணல் said...

//பிரித்துக்கொடுத்திருக்கிறேன் உன்மேலான
பிரியங்களை...
என்னிருபது நண்பர்களுக்கு...//

நல்லா இருக்கே...

கவிதை சோகமா நல்லா இருக்கு...

Muthusamy said...

good one

நான் ஆதவன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் கொஞ்சம் சின்னதா இருந்தாலே இந்த மரமண்டைக்கு கவிதை ஏறுவது கொஞ்சம் கஷ்டம்...அதுல இம்புட்டு நீளமா. இரு படிச்சுட்டு வரேன்....

நான் ஆதவன் said...

//எங்கெங்கோ தாறுமாறாய்த் திரிந்த
வார்த்தைகளணைத்துக்
கவிதை என்றேன்..//

அப்படியா சங்கதி...இனி நானும் வார்த்தைகள் புடிச்சு ஒரு கவிதை எழுதப்பார்க்கிறேன்

ஜீவா said...

நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
நான் பைத்தியமாகலாமடி...!////


அத்தனை அழகான விஷயம் இது. இதற்காகவே என் தேவதையிடம் தோற்றவன் நான் :)

Divya said...

மிக மிக அழகான கவிதை ஸ்ரீமதி!!

tamil24.blogspot.com said...

!!பருவம் கடந்தேன்...
எங்கெங்கோ தாறுமாறாய்த் திரிந்த
வார்த்தைகளணைத்துக்
கவிதை என்றேன்...!!

கடந்து சென்ற பாதைகள் திரும்பிப் பார்க்கின்ற போது இனிய ஞாபகங்களாக விரியும்.

பாராட்டுக்கள்.

நிஜமா நல்லவன் said...

/குமிழி உடைக்கும்
குழந்தையாயிருந்தேன்.../


இப்பவும் அப்படித்தானே இருக்க...:)

நிஜமா நல்லவன் said...

/குற்றப்பத்திரிக்கைகள் சுமக்காமல்,
பருவம் கடந்தேன்.../


குட்..

நிஜமா நல்லவன் said...

/எங்கெங்கோ தாறுமாறாய்த் திரிந்த
வார்த்தைகளணைத்துக்
கவிதை என்றேன்.../


இது சூப்பரு...:)

நிஜமா நல்லவன் said...

/தனிமையைத் தனிமைப்படுத்தும்
முயற்சியில்
படுதோல்வியுற்று,/

ஆஹா...சூப்பர்!

நிஜமா நல்லவன் said...

/
Divya said...

மிக மிக அழகான கவிதை ஸ்ரீமதி!!/


திவ்யா மாஸ்டர் சொன்னா சரியாத்தான் இருக்கு,....அதனால ரிப்பீட்டு...:)

TKB காந்தி said...

தனிமையைத் தனிமைப்படுத்தும்
முயற்சியில்
படுதோல்வியுற்று


அழகு :)

Maddy said...

பிரித்துக்கொடுத்திருக்கிறேன் உன்மேலான
பிரியங்களை...
என்னிருபது நண்பர்களுக்கு.........

அருமையான ஆரோக்யமான கற்பனையாக தெரிகிறது!!! பிரியங்களை பகிர்ந்தளித்தல் கேட்டு இருக்கிறேன், பிரித்து கொடுத்தல்...... ஏதோ எதுகை மோனைக்காக இருக்குமோ?? எப்படி என்றாலும் ஒன்று இருபது ஆகும்போது இருபதும் பிரியங்களை திருப்பி செலுத்தினால் இனிமை தான்!!

கோபிநாத் said...

நல்லாயிருக்கு ;)

Saravana Kumar MSK said...

என்ன சொல்றதுனே தெரியல.. ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கு..

Saravana Kumar MSK said...

//பிரித்துக்கொடுத்திருக்கிறேன் உன்மேலான
பிரியங்களை...
என்னிருபது நண்பர்களுக்கு...//

நல்லா இருக்கு ஸ்ரீ.

ஷீ-நிசி said...

//நினைவுகளைத்தும் நாடோடிகளாய்...///

நினைவுகளனைத்தும் என்று வரவேண்டும் என்று நினைக்கிறேன்...

கவிதையில் ஒரு ஏக்கம் தொக்கி நிற்கிறது....

உணர்வுபூர்வமான கவிதை ஸ்ரீமதி!

வாழ்த்துக்கள்!

பரிசல்காரன் said...

இந்தக் கவிதை.. கார்க்கிக்கு சமர்ப்பணம்!

எனக்குப் பிடித்த வரிகள்.. முதல் மூன்று வரிகள் ஸ்ரீ!

ஜோதிபாரதி said...

அருமை ஸ்ரீமதி!

முரளிகண்ணன் said...

அழகு

venkatx5 said...

/*
கண்ணுக்குத் தெரியாமலே போய்விட்டது...
என் குழந்தைப் பருவம்
மட்டுமல்ல,
என் காதல் சுமந்த
கவிதைகளும் தான்
*/

சூப்பர்.. சூப்பர்..

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//கவிதை என்றேன்...
உன்மேலெனக்கு
காதல் என்றனர்...\\

அழகு ...//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//என் குழந்தைப் பருவம்
மட்டுமல்ல,
என் காதல் சுமந்த
கவிதைகளும் தான்\\

இதுவும் அழகு ...//

அப்படியா?? ;))

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
//இனிமேல நீ கவிதையே எழுதாம பண்றதுக்கு என்ன செய்யனும்?//

ஏன் இந்த கொலைவெறி?? :((

///தனிமையைத் தனிமைப்படுத்தும்
முயற்சியில்
படுதோல்வியுற்று,
பிரித்துக்கொடுத்திருக்கிறேன் உன்மேலான
பிரியங்களை...
என்னிருபது நண்பர்களுக்கு...//

வேலையை பாருடா கார்க்கி. இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணிக்கிட்டு//

ஹா ஹா ஹா நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////ஏனோ, இப்பொழுதெல்லாம்
கண்ணுக்குத் தெரியாமலே போய்விட்டது...
என் குழந்தைப் பருவம்
மட்டுமல்ல,
என் காதல் சுமந்த
கவிதைகளும் தான்...//

காதலும் கவிதையும் அழகு...//

நன்றி புதியவன் :)))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////தனிமையைத் தனிமைப்படுத்தும்
முயற்சியில்
படுதோல்வியுற்று,//

மிகவும் ரசிதேன் இந்த வரிகளை...//

எனக்கும் மிக பிடித்த வரிகள்.. :)) நன்றி.. :))

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//ஸ்ரீ,

வித்தியாசமாக எழுதத் துவங்கிவிட்டாய். நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

அனுஜன்யா//

வித்தியாசமாவா அண்ணா இருக்கு?? :)) நன்றி.. :)))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////தனிமையைத் தனிமைப்படுத்தும்
முயற்சியில்
படுதோல்வியுற்று,
பிரித்துக்கொடுத்திருக்கிறேன் உன்மேலான
பிரியங்களை//

எவ்வளவு நிதர்சனமான வரிகள்...அழுத்தமான உண்மையுங்கூட :-)//

ம்ம்ம் ஆமா அக்கா :)))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//வார்த்தைகள் வித்தியாசப்படுகின்றன!//

ஆனாலும் உங்கள் தேவதை கவிதைகள் போலில்லை... :((( உங்களுடையது மிக அருமை :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//வாழ்த்துக்கள்!!//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//கனவுகள் காணாமப்போச்சுங்கறிங்க கவிதைகள் காணாமப்போச்சுங்கறிங்க என்னங்க ஆச்சு...

ஆமா ஸ்ரீமதி இருக்கிறாங்க தானே ;)//

ம்ம்ம் இங்க தான் அண்ணா இருக்கேன் :)))

ஸ்ரீமதி said...

@ yathra
////தனிமையைத் தனிமைப்படுத்தும்
முயற்சியில்
படுதோல்வியுற்று//

மிகவும் தனிமையாய் உணர்கிறேன்
என்னுடன் இருப்பாயா
என்றது தனிமை
உன்னுடன் நிறையநேரம் இருந்து
உன்னையும் விரோதித்துக்கொண்டால்
எனக்கு வேறு போக்கிடம் இல்லை//

கவிதையான பின்னூட்டம் யாத்ரா.. :))) நன்றி :))

ஸ்ரீமதி said...

@ தாமிரா
//அப்பிடியெல்லாம் அவ்வளவு சீக்கிரம் காணாமல் போக கவிதைகளை விட்டுறாதீங்க.. உங்க ஸ்பெஷலே தேன்துளிக் கவிதைகளே.!//

சரி அண்ணா காணாமல் போக விடல.. :)) நன்றி அக்கறையான பின்னூட்டத்திற்கு.. :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//என்னோட கமெண்ட் எங்கே?.. :((//

காக்கா தூக்கிண்டு போச்சு.. ;)))))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//நல்லா இருக்கு!//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ Karthik
//அட்டகாசம்..!

one of the best of yours. i really liked this one so much. :))//

Really? :)) Thanks dude.. :)))

ஸ்ரீமதி said...

@ Iyarkai
////தனிமையைத் தனிமைப்படுத்தும்
முயற்சியில்
படுதோல்வியுற்று,
பிரித்துக்கொடுத்திருக்கிறேன் உன்மேலான
பிரியங்களை//

அழகு...//

நன்றி இயற்கை :)))

ஸ்ரீமதி said...

@ நாணல்
////பிரித்துக்கொடுத்திருக்கிறேன் உன்மேலான
பிரியங்களை...
என்னிருபது நண்பர்களுக்கு...//

நல்லா இருக்கே...

கவிதை சோகமா நல்லா இருக்கு...//

ஹைய்ய்ய்ய் நல்லாயிருக்கா?? நன்றி அக்கா.. :)))

ஸ்ரீமதி said...

@ Muthusamy
//good one//

Thank you.. :)))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் கொஞ்சம் சின்னதா இருந்தாலே இந்த மரமண்டைக்கு கவிதை ஏறுவது கொஞ்சம் கஷ்டம்...அதுல இம்புட்டு நீளமா. இரு படிச்சுட்டு வரேன்....//

ஹா ஹா ஹா அப்போ நீங்க கவிதைய படிச்சிட்டுதான் கமெண்ட்டுறீங்களா அண்ணா?? அடடா இது தெரியாம போச்சே.. ;))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
////எங்கெங்கோ தாறுமாறாய்த் திரிந்த
வார்த்தைகளணைத்துக்
கவிதை என்றேன்..//

அப்படியா சங்கதி...இனி நானும் வார்த்தைகள் புடிச்சு ஒரு கவிதை எழுதப்பார்க்கிறேன்//

ம்ம்ம்ம் சீக்கிரம் எழுதுங்க.. நான் படிச்சிட்டு கமெண்டுரேன்.. ;)))

ஸ்ரீமதி said...

@ ஜீவா
//நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
நான் பைத்தியமாகலாமடி...!////


அத்தனை அழகான விஷயம் இது. இதற்காகவே என் தேவதையிடம் தோற்றவன் நான் :)//

வாவ்... :)))) ரொம்ப நன்றி தளத்தில் முதல் பின்னூட்டம்.. :)))

ஸ்ரீமதி said...

@ Divya
//மிக மிக அழகான கவிதை ஸ்ரீமதி!!//

நன்றி அக்கா :))

ஸ்ரீமதி said...

@ tamil24.blogspot.com
//!!பருவம் கடந்தேன்...
எங்கெங்கோ தாறுமாறாய்த் திரிந்த
வார்த்தைகளணைத்துக்
கவிதை என்றேன்...!!

கடந்து சென்ற பாதைகள் திரும்பிப் பார்க்கின்ற போது இனிய ஞாபகங்களாக விரியும்.

பாராட்டுக்கள்.//

ஆமாம்.. :))) நன்றி தமிழ் பாராட்டுகளுக்கு.. :)))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///குமிழி உடைக்கும்
குழந்தையாயிருந்தேன்.../


இப்பவும் அப்படித்தானே இருக்க...:)//

பப்ளிக்ல உண்மை சொல்லக்கூடாது ;))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///குற்றப்பத்திரிக்கைகள் சுமக்காமல்,
பருவம் கடந்தேன்.../


குட்..//

டேங்ஸ்..;))))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///எங்கெங்கோ தாறுமாறாய்த் திரிந்த
வார்த்தைகளணைத்துக்
கவிதை என்றேன்.../


இது சூப்பரு...:)//

அப்படியா?? :)))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///தனிமையைத் தனிமைப்படுத்தும்
முயற்சியில்
படுதோல்வியுற்று,/

ஆஹா...சூப்பர்!//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///
Divya said...

மிக மிக அழகான கவிதை ஸ்ரீமதி!!/


திவ்யா மாஸ்டர் சொன்னா சரியாத்தான் இருக்கு,....அதனால ரிப்பீட்டு...:)//

:))))))))

ஸ்ரீமதி said...

@ TKB காந்தி
//தனிமையைத் தனிமைப்படுத்தும்
முயற்சியில்
படுதோல்வியுற்று

அழகு :)//

நன்றி காந்தி :)

ஸ்ரீமதி said...

@ Maddy
//பிரித்துக்கொடுத்திருக்கிறேன் உன்மேலான
பிரியங்களை...
என்னிருபது நண்பர்களுக்கு.........

அருமையான ஆரோக்யமான கற்பனையாக தெரிகிறது!!! பிரியங்களை பகிர்ந்தளித்தல் கேட்டு இருக்கிறேன், பிரித்து கொடுத்தல்...... ஏதோ எதுகை மோனைக்காக இருக்குமோ?? எப்படி என்றாலும் ஒன்று இருபது ஆகும்போது இருபதும் பிரியங்களை திருப்பி செலுத்தினால் இனிமை தான்!!//

பகிர்ந்தளித்தலும் பிரித்துக்கொடுத்தாலும் ஒன்னு இல்லையா?? அவ்வ்வ்வ்வ்வ்.. :))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//நல்லாயிருக்கு ;)//

நன்றி :)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//என்ன சொல்றதுனே தெரியல.. ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கு..//

வித்தியாசமா இருக்கா?? நல்லா இருக்கா?? இல்லயா?? :((

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////பிரித்துக்கொடுத்திருக்கிறேன் உன்மேலான
பிரியங்களை...
என்னிருபது நண்பர்களுக்கு...//

நல்லா இருக்கு ஸ்ரீ.//

நன்றி சரவணா :))

ஸ்ரீமதி said...

@ ஷீ-நிசி
////நினைவுகளைத்தும் நாடோடிகளாய்...///

நினைவுகளனைத்தும் என்று வரவேண்டும் என்று நினைக்கிறேன்...

கவிதையில் ஒரு ஏக்கம் தொக்கி நிற்கிறது....

உணர்வுபூர்வமான கவிதை ஸ்ரீமதி!

வாழ்த்துக்கள்!//

மாற்றிவிட்டேன் நன்றி ஷீ-‍‍நிசி.. :)) வாழ்த்துகளுக்கும் நன்றி.. :))

ஸ்ரீமதி said...

@ பரிசல்காரன்
//இந்தக் கவிதை.. கார்க்கிக்கு சமர்ப்பணம்!//

கார்க்கி அண்ணாவுக்கா?? :))

//எனக்குப் பிடித்த வரிகள்.. முதல் மூன்று வரிகள் ஸ்ரீ!//

எனி உள்குத்து?? :))

ஸ்ரீமதி said...

@ ஜோதிபாரதி
//அருமை ஸ்ரீமதி!//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ முரளிகண்ணன்
//அழகு//

நன்றி அண்ணா.. :)))

ஸ்ரீமதி said...

@ venkatx5
///*
கண்ணுக்குத் தெரியாமலே போய்விட்டது...
என் குழந்தைப் பருவம்
மட்டுமல்ல,
என் காதல் சுமந்த
கவிதைகளும் தான்
*/

சூப்பர்.. சூப்பர்..//

நன்றி.. நன்றி.. ;)))))

dharshini said...

super :)

ஸ்ரீமதி said...

@ dharshini
//super :)//

Thank you Dharshini.. :))

நசரேயன் said...

அருமை.. ரெம்ப நல்லா இருக்கு

ஸ்ரீமதி said...

@ நசரேயன்
//அருமை.. ரெம்ப நல்லா இருக்கு//

நன்றி நசரேயன் முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்.. :))

dharshini said...

என்ன sri அடிக்கடி வந்து பார்க்கிறேன். அதேதான் இருக்கு புதுசா ஒன்னும் இல்லையா? சின்ன பொன்ன இப்படியா ஏமாத்தறது.

// ஏனோ, இப்பொழுதெல்லாம்
கண்ணுக்குத் தெரியாமலே போய்விட்டது...
என் குழந்தைப் பருவம்
மட்டுமல்ல,
என் காதல் சுமந்த
கவிதைகளும் தான்... //
அதனால தான் கவிதை வரலியா?

dharshini said...

sorry sri.some prob fr my a/c.2day only i noticed.

vijaya said...

என்னிருபது நண்பர்களுக்கு...
ஏனோ, இப்பொழுதெல்லாம்
கண்ணுக்குத் தெரியாமலே போய்விட்டது...
என் குழந்தைப் பருவம்
மட்டுமல்ல,
என் காதல் சுமந்த
கவிதைகளும் தான்...)


அழகான வரிகள்.

vijaya said...

(என்னிருபது நண்பர்களுக்கு...
ஏனோ, இப்பொழுதெல்லாம்
கண்ணுக்குத் தெரியாமலே போய்விட்டது...
என் குழந்தைப் பருவம்
மட்டுமல்ல,
என் காதல் சுமந்த
கவிதைகளும் தான்...)


அழகான வரிகள்.

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது