க(ன)ணப்பொழுதுகள்..!


உனக்காக காத்திருக்கிறேன்
காலங்கள் நீள்கிறது
தவம் கூட வரமே
காதலில்.....
காத்திருந்தேன்...
வருகிறாய்,
கரைகிறேன்...
பிரிகிறாய்,
காத்திருக்கிறேன் கரைவதற்கு...
ஒரு சந்திப்பிற்கும்,
மறு சந்திப்பிற்கும்
உண்டான காத்திருத்தலின்
இடைவெளியை
உருட்டி செய்தது தான்
ஆலகால விஷமென்பேன்....

மதியமும் வேண்டாம்,
மாலையும் வேண்டாம்,
முழுநாளையும்..
உன்னைக்கொண்டு மட்டுமே
உருவாக்குவேன்....


காத்திருக்கிறேன்..
கணப்பொழுதுகள்
கனப்பொழுதுகளாகின்றன...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

72 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

நட்புடன் ஜமால் said...

\\காத்திருந்தேன்...
வருகிறாய்,
கறைகிறேன்...
பிரிகிறாய்,
காத்திருக்கிறேன் கறைவதற்கு...\\

அழகு.

கார்க்கி said...

//உனக்காக காத்திருக்கிறேன்
காலங்கள் நீள்கிறது
தவம் கூட வரமே
காதலில்.//

ம்ம்.. எனக்கு அப்படி இல்ல.. ஒரு முடிவுக்காக காத்திருக்கலாம். என் கதைல காத்திருப்பதே முடிவாயிடுச்சு. காலைல மூட் அப்செட் பண்ண உனக்கு இருக்கு.. :(((

Thamizhmaangani said...

very nice kutti kavithaigal.:)

ஆ! இதழ்கள் said...

காத்திருக்கிறேன் கறைவதற்கு...//

ஒரே உருகலோ உருகல்.

நித்யகுமாரன் said...

////
காத்திருக்கிறேன்..
கணப்பொழுதுகள்
கனப்பொழுதுகளாகின்றன...
////

வாழ்க்கை விளையாட்டா...
வார்த்தை விளையாட்டா...

சிறப்பு.

அன்பு நித்யன்

புதியவன் said...

//ஒரு சந்திப்பிற்கும்,
மறு சந்திப்பிற்கும்
உண்டான காத்திருத்தலின்
இடைவெளியை
உருட்டி செய்தது தான்
ஆலகால விஷமென்பேன்.... //

காதலில் காத்திருப்பு கொடுமையானது தான்...கவிதை அருமை...

தாரணி பிரியா said...

//ஒரு சந்திப்பிற்கும்,
மறு சந்திப்பிற்கும்
உண்டான காத்திருத்தலின்
இடைவெளியை
உருட்டி செய்தது தான்
ஆலகால விஷமென்பேன்....//

super sri :)

பரிசல்காரன் said...

//ஒரு சந்திப்பிற்கும்,
மறு சந்திப்பிற்கும்
உண்டான காத்திருத்தலின்
இடைவெளியை
உருட்டி செய்தது தான்
ஆலகால விஷமென்பேன்....//

ஸ்ரீ.. சத்தியமா சொல்றேன்.. இது உன்கிட்டேர்ந்து வந்ததால இப்படி வெறும் பதிவோட போகுது. எக்ஸலண்ட் திங்கிக் இது. ஹாட்ஸ் ஆஃப்!

அப்புறம் இந்த கார்க்கிய எதால அடிக்கறதுன்னு சொல்லுங்கப்பா!!! லொள்ளு தாங்கல...

yathra said...

அருமையா இருக்கு, ,,,,,,,,,,,,,

narsim said...

சுமார்தான் சிஸ்டர்.. அந்த ஆலகாம் அருமை..

தமிழ் பிரியன் said...

கனலான பொழுதுகளோ?... நல்லா இருக்கு!

ஆயில்யன் said...

//மதியமும் வேண்டாம்,
மாலையும் வேண்டாம்,
முழுநாளையும்..
உன்னைக்கொண்டு மட்டுமே
உருவாக்குவேன்....//

sema terroara iruku :)))

Poornima Saravana kumar said...

//காத்திருக்கிறேன்..
கணப்பொழுதுகள்
கனப்பொழுதுகளாகின்றன...
//

அழகா சொல்லிட்டே ஆனா பாருமா என்னால ரொம்ப நேரம் சுமக்க முடியலை ரொம்ப கனக்குது.. சீக்கிரம் வா கண்ணம்மா!

Poornima Saravana kumar said...

//மதியமும் வேண்டாம்,
மாலையும் வேண்டாம்,
முழுநாளையும்..
உன்னைக்கொண்டு மட்டுமே
உருவாக்குவேன்....
//

ஆஹா!!

dharshini said...

//காத்திருக்கிறேன்..
கணப்பொழுதுகள்
கனப்பொழுதுகளாகின்றன...
//
அருமை sri.

SK said...

//காத்திருக்கிறேன்..
கணப்பொழுதுகள்
கனப்பொழுதுகளாகின்றன...
//

இந்த வார்த்தை விளையாட்டு பிடித்து இருந்தது :)

ஆல கால விஷம் ஒப்பீடும் அருமை

அபுஅஃப்ஸர் said...

அருமையான வரிகள்

Mohan said...

ரொம்ப அருமையா இருக்குங்க! அனுபவிச்சி எழுதறீங்களோ?

தாமிரா said...

அழகான கவிதைகள்.!

நிஜமா நல்லவன் said...

/பரிசல்காரன் said...

//ஒரு சந்திப்பிற்கும்,
மறு சந்திப்பிற்கும்
உண்டான காத்திருத்தலின்
இடைவெளியை
உருட்டி செய்தது தான்
ஆலகால விஷமென்பேன்....//

ஸ்ரீ.. சத்தியமா சொல்றேன்.. இது உன்கிட்டேர்ந்து வந்ததால இப்படி வெறும் பதிவோட போகுது. எக்ஸலண்ட் திங்கிக் இது. ஹாட்ஸ் ஆஃப்!/


வழி மொழிகிறேன்!

நாணல் said...

//காத்திருந்தேன்...
வருகிறாய்,
கரைகிறேன்...
பிரிகிறாய்,
காத்திருக்கிறேன் கரைவதற்கு...//

கரையோரக் கனவுகளோ....

//ஒரு சந்திப்பிற்கும்,
மறு சந்திப்பிற்கும்
உண்டான காத்திருத்தலின்
இடைவெளியை
உருட்டி செய்தது தான்
ஆலகால விஷமென்பேன்....//

எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கறீங்களோ... நல்ல சிந்தனை...

//காத்திருக்கிறேன்..
கணப்பொழுதுகள்
கனப்பொழுதுகளாகின்றன...//

ரொம்ப கனமா இருக்கு ... இறக்கிவைக்கலாமா ஸ்ரீ...

கவின் said...

காதல்.. காதல்..

சென்ஷி said...

//காத்திருந்தேன்...
வருகிறாய்,
கரைகிறேன்...
பிரிகிறாய்,
காத்திருக்கிறேன் கரைவதற்கு...//

ரொம்ப நல்லாயிருக்குது ஸ்ரீமதி.

எம்.எம்.அப்துல்லா said...

////ஒரு சந்திப்பிற்கும்,
மறு சந்திப்பிற்கும்
உண்டான காத்திருத்தலின்
இடைவெளியை
உருட்டி செய்தது தான்
ஆலகால விஷமென்பேன்....//

ஸ்ரீ நாங்க உன் கவிதைகளைப் படித்து விட்டு நம்ம மாதிரி மொக்கச்சாமியெல்லாம் எதுக்கு பின்னூடம் போட்டு கேவலப்படுத்திக்கிட்டுன்னு பேசாம போய்ருவேன். இன்று அதையும் மீறி டைப்பிக்கிறேன், நல்லா இருக்கு!நல்லா இரு புகழோடு!

Muthusamy said...

good one

ஜி said...

amaam.. oru padathula "Today is April 1" nu pottirukke.. athula any ulkuththus??

ஷீ-நிசி said...

உனக்காக,
காத்திருக்கும்போதெல்லாம்
நீ வருகிறாயோ, இல்லையோ!

எனக்குள் ஒரு கவிதை
வந்துவிடுகிறது!


உங்கள் படைப்பை படிக்கையிலே உண்டான வரிகள்..

ரொம்ப நல்லாருக்கு வரிகளெல்லாம்...

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி!

பட்டாம்பூச்சி said...

அருமை sri.

TKB காந்தி said...

உண்மைய சொல்லணும்னா உங்க கவிதைய பாரட்டி சலிச்சுட்டேன். ‘நல்ல கவிதை,’ ‘அழகான கவிதை’ன்னு சொல்லி போர் அடிக்குதுங்க ஸ்ரீ. எல்லா கவிதையும் நல்லாயிருந்தா என்ன பண்ணறதுங்க?

நான் said...

காத்திருத்தலின் சுகம் நன்று வாழ்த்துகள்

Saravana Kumar MSK said...

திங்களன்றே படித்து விட்டேன்.. பின்னூட்ட இப்போதான் நேரம் கிடைக்கிறது..

Saravana Kumar MSK said...

கொஞ்ச நாளாவே ரொம்ப ஃப்லிங்க்ஸா இருக்கே.. இன்னா மேட்டரு??

Saravana Kumar MSK said...

//மதியமும் வேண்டாம்,
மாலையும் வேண்டாம்,
முழுநாளையும்..
உன்னைக்கொண்டு மட்டுமே
உருவாக்குவேன்....//

செம.. செம..

But
//ஜி said...
amaam.. oru padathula "Today is April 1" nu pottirukke.. athula any ulkuththus??//

Saravana Kumar MSK said...

//காத்திருந்தேன்...
வருகிறாய்,
கரைகிறேன்...
பிரிகிறாய்,
காத்திருக்கிறேன் கரைவதற்கு...//

இது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஸ்ரீ.. அட்டகாசம்.

இனியவள் புனிதா said...

காத்திருந்தால் காதல் நீளுமாம்...ஆக காத்திருப்புகூட சுகமானதுதான் இல்லையா?

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//\\காத்திருந்தேன்...
வருகிறாய்,
கறைகிறேன்...
பிரிகிறாய்,
காத்திருக்கிறேன் கறைவதற்கு...\\

அழகு.//

மிக்க நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
////உனக்காக காத்திருக்கிறேன்
காலங்கள் நீள்கிறது
தவம் கூட வரமே
காதலில்.//

ம்ம்.. எனக்கு அப்படி இல்ல.. ஒரு முடிவுக்காக காத்திருக்கலாம். என் கதைல காத்திருப்பதே முடிவாயிடுச்சு. காலைல மூட் அப்செட் பண்ண உனக்கு இருக்கு.. :(((//

அச்சச்சோ உங்க கதை கொஞ்சம் ட்ராஜடி தான் போல.. :((

ஸ்ரீமதி said...

@ Thamizhmaangani
//very nice kutti kavithaigal.:)//

Thank you Tamizh.. :))

ஸ்ரீமதி said...

@ ஆ! இதழ்கள்
//காத்திருக்கிறேன் கறைவதற்கு...//

ஒரே உருகலோ உருகல்.//

நன்றியோ நன்றி.. :)) (ஹைய்ய்ய்ய்ய்ய்யி பொங்கலோ பொங்கல் மாதிரி இல்ல??;))))

ஸ்ரீமதி said...

@ நித்யகுமாரன்
//////
காத்திருக்கிறேன்..
கணப்பொழுதுகள்
கனப்பொழுதுகளாகின்றன...
////

வாழ்க்கை விளையாட்டா...
வார்த்தை விளையாட்டா...

சிறப்பு.

அன்பு நித்யன்//

வாழ்க்கை விளையாட்டால் வந்த வார்த்தை விளையாட்டு.. ;))) நன்றி நித்யன் முதல் வருகைக்கு.. :)))

ஸ்ரீமதி said...

புதியவன் said...
//ஒரு சந்திப்பிற்கும்,
மறு சந்திப்பிற்கும்
உண்டான காத்திருத்தலின்
இடைவெளியை
உருட்டி செய்தது தான்
ஆலகால விஷமென்பேன்.... //

காதலில் காத்திருப்பு கொடுமையானது தான்...கவிதை அருமை...//

ஆமாம் புதியவன் காத்திருப்பு கொடுமையானது தான்... நன்றி புதியவன் அழகான புரிதலுக்கு.. :)))

ஸ்ரீமதி said...

@ தாரணி பிரியா
////ஒரு சந்திப்பிற்கும்,
மறு சந்திப்பிற்கும்
உண்டான காத்திருத்தலின்
இடைவெளியை
உருட்டி செய்தது தான்
ஆலகால விஷமென்பேன்....//

super sri :)//

நன்றி அக்கா :)))

ஸ்ரீமதி said...

@ பரிசல்காரன்
////ஒரு சந்திப்பிற்கும்,
மறு சந்திப்பிற்கும்
உண்டான காத்திருத்தலின்
இடைவெளியை
உருட்டி செய்தது தான்
ஆலகால விஷமென்பேன்....//

ஸ்ரீ.. சத்தியமா சொல்றேன்.. இது உன்கிட்டேர்ந்து வந்ததால இப்படி வெறும் பதிவோட போகுது. எக்ஸலண்ட் திங்கிக் இது. ஹாட்ஸ் ஆஃப்!

அப்புறம் இந்த கார்க்கிய எதால அடிக்கறதுன்னு சொல்லுங்கப்பா!!! லொள்ளு தாங்கல...//

எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல... :)) உங்களுக்கு இந்த கவிதை பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி.. :))) நன்றி அண்ணா..:))

ஸ்ரீமதி said...

@ yathra
//அருமையா இருக்கு, ,,,,,,,,,,,,,//

நன்றி யாத்ரா :))))

ஸ்ரீமதி said...

@ narsim
//சுமார்தான் சிஸ்டர்.. அந்த ஆலகாம் அருமை..//

அடுத்த முறை நல்லா எழுத முயற்சிக்கிறேன் அண்ணா.. :))) நன்றி.. :)))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//கனலான பொழுதுகளோ?... நல்லா இருக்கு!//

அப்படியா?? :))) நன்றி அண்ணா.. :)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////மதியமும் வேண்டாம்,
மாலையும் வேண்டாம்,
முழுநாளையும்..
உன்னைக்கொண்டு மட்டுமே
உருவாக்குவேன்....//

sema terroara iruku :)))//

அப்படியா? :)

ஸ்ரீமதி said...

@ Poornima Saravana kumar
////காத்திருக்கிறேன்..
கணப்பொழுதுகள்
கனப்பொழுதுகளாகின்றன...
//

அழகா சொல்லிட்டே ஆனா பாருமா என்னால ரொம்ப நேரம் சுமக்க முடியலை ரொம்ப கனக்குது.. சீக்கிரம் வா கண்ணம்மா!//

யார் அக்கா வரணும்?? நானா?? :O

ஸ்ரீமதி said...

@ Poornima Saravana kumar
////மதியமும் வேண்டாம்,
மாலையும் வேண்டாம்,
முழுநாளையும்..
உன்னைக்கொண்டு மட்டுமே
உருவாக்குவேன்....
//

ஆஹா!!//

:))))))

ஸ்ரீமதி said...

@ dharshini
////காத்திருக்கிறேன்..
கணப்பொழுதுகள்
கனப்பொழுதுகளாகின்றன...
//
அருமை sri.//

நன்றி தர்ஷினி :))))

ஸ்ரீமதி said...

@ SK
////காத்திருக்கிறேன்..
கணப்பொழுதுகள்
கனப்பொழுதுகளாகின்றன...
//

இந்த வார்த்தை விளையாட்டு பிடித்து இருந்தது :)

ஆல கால விஷம் ஒப்பீடும் அருமை//

நன்றி எஸ்.கே. :))

ஸ்ரீமதி said...

@ அபுஅஃப்ஸர்
//அருமையான வரிகள்//

நன்றி அபுஅஃப்ஸர் :)))

ஸ்ரீமதி said...

@ Mohan
//ரொம்ப அருமையா இருக்குங்க! அனுபவிச்சி எழுதறீங்களோ?//

நன்றிங்க மோகன் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்.. :))))

ஸ்ரீமதி said...

@ தாமிரா
//அழகான கவிதைகள்.!//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//வழி மொழிகிறேன்!//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ நாணல்
////காத்திருந்தேன்...
வருகிறாய்,
கரைகிறேன்...
பிரிகிறாய்,
காத்திருக்கிறேன் கரைவதற்கு...//

கரையோரக் கனவுகளோ....//

கரையேறாத கனவுகள்.

////ஒரு சந்திப்பிற்கும்,
மறு சந்திப்பிற்கும்
உண்டான காத்திருத்தலின்
இடைவெளியை
உருட்டி செய்தது தான்
ஆலகால விஷமென்பேன்....//

எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கறீங்களோ... நல்ல சிந்தனை... //

நன்றி அக்கா :))

////காத்திருக்கிறேன்..
கணப்பொழுதுகள்
கனப்பொழுதுகளாகின்றன...//

ரொம்ப கனமா இருக்கு ... இறக்கிவைக்கலாமா ஸ்ரீ...//

ம்ம்ம் சரி ;)))

ஸ்ரீமதி said...

@ கவின்
//காதல்.. காதல்..//

நன்றி.. நன்றி.. ;)))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
////காத்திருந்தேன்...
வருகிறாய்,
கரைகிறேன்...
பிரிகிறாய்,
காத்திருக்கிறேன் கரைவதற்கு...//

ரொம்ப நல்லாயிருக்குது ஸ்ரீமதி.//

ரொம்ப நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ எம்.எம்.அப்துல்லா
//////ஒரு சந்திப்பிற்கும்,
மறு சந்திப்பிற்கும்
உண்டான காத்திருத்தலின்
இடைவெளியை
உருட்டி செய்தது தான்
ஆலகால விஷமென்பேன்....//

ஸ்ரீ நாங்க உன் கவிதைகளைப் படித்து விட்டு நம்ம மாதிரி மொக்கச்சாமியெல்லாம் எதுக்கு பின்னூடம் போட்டு கேவலப்படுத்திக்கிட்டுன்னு பேசாம போய்ருவேன். இன்று அதையும் மீறி டைப்பிக்கிறேன், நல்லா இருக்கு!நல்லா இரு புகழோடு!//

அண்ணா அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும், இன்னைக்கு சொல்றதுதான் என்னைக்கும்... அன்னைக்கு என்ன சொன்னேன்னு தெரியும் தானே அண்ணா?? இப்பவும் சொல்றேன்.. நீங்க என் ப்ளாகுக்கு வரது எனக்கு பெருமை தான் தயவு செய்து இப்படி,
//மொக்கச்சாமியெல்லாம் எதுக்கு பின்னூடம் போட்டு கேவலப்படுத்திக்கிட்டுன்னு பேசாம போய்ருவேன்.//
சொல்லாதீங்க...

ஸ்ரீமதி said...

@ Muthusamy
//good one//

Thank you anna.. :)))

ஸ்ரீமதி said...

@ ஜி
//amaam.. oru padathula "Today is April 1" nu pottirukke.. athula any ulkuththus??//

இதெல்லாம் கவனிங்க... ஆனா, கவிதை பத்தி மட்டும் ஒன்னும் சொல்லாதீங்க... :)) (என்னது எங்க கவிதையா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... ;))

ஸ்ரீமதி said...

@ ஷீ-நிசி
//உனக்காக,
காத்திருக்கும்போதெல்லாம்
நீ வருகிறாயோ, இல்லையோ!

எனக்குள் ஒரு கவிதை
வந்துவிடுகிறது!


உங்கள் படைப்பை படிக்கையிலே உண்டான வரிகள்..

ரொம்ப நல்லாருக்கு வரிகளெல்லாம்...

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி!//

நன்றி ஷீ-நிசி கவிதையான பின்னூட்டத்திற்கு... :)))

ஸ்ரீமதி said...

@ பட்டாம்பூச்சி
//அருமை sri.//

நன்றி பட்டாம்பூச்சி :)))

ஸ்ரீமதி said...

@ TKB காந்தி
//உண்மைய சொல்லணும்னா உங்க கவிதைய பாரட்டி சலிச்சுட்டேன். ‘நல்ல கவிதை,’ ‘அழகான கவிதை’ன்னு சொல்லி போர் அடிக்குதுங்க ஸ்ரீ. எல்லா கவிதையும் நல்லாயிருந்தா என்ன பண்ணறதுங்க?//

ம்ம்ம் என்ன பண்ணலாம்?? இனிமே இப்படி எழுதினா வீட்டுக்கு ஆட்டோ வரும்ன்னு வேணா சொல்லிப்பாருங்களேன்.. :)) (மார்னிங் ஆபீஸ் வர ஈசியா இருக்கும்.. ;))))

ஸ்ரீமதி said...

@ நான்
//காத்திருத்தலின் சுகம் நன்று வாழ்த்துகள்//

நன்றி நான் :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//திங்களன்றே படித்து விட்டேன்.. பின்னூட்ட இப்போதான் நேரம் கிடைக்கிறது..//

பிஸியா சரவணா?? :)

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//கொஞ்ச நாளாவே ரொம்ப ஃப்லிங்க்ஸா இருக்கே.. இன்னா மேட்டரு??//

என்ன சொல்ற சரவணா?? ;)

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////மதியமும் வேண்டாம்,
மாலையும் வேண்டாம்,
முழுநாளையும்..
உன்னைக்கொண்டு மட்டுமே
உருவாக்குவேன்....//

செம.. செம..//

நன்றி... நன்றி... :))

//But
//ஜி said...
amaam.. oru padathula "Today is April 1" nu pottirukke.. athula any ulkuththus??////

இதெல்லாம் கரெக்ட்டா கண்டுபிடிச்சி எடுத்து போட்டுடு... ஆனா, ஏன் லேட்ன்னு கேட்டா மட்டும் ஸ்கூல் பசங்க மாதிரி காரணம் சொல்லு.. ;)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////காத்திருந்தேன்...
வருகிறாய்,
கரைகிறேன்...
பிரிகிறாய்,
காத்திருக்கிறேன் கரைவதற்கு...//

இது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஸ்ரீ.. அட்டகாசம்.//

நன்றி சரவணா :)))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//காத்திருந்தால் காதல் நீளுமாம்...ஆக காத்திருப்புகூட சுகமானதுதான் இல்லையா?//

அதற்குதான்.. "கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்.. உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன்.." ;)) (இதுவும் அதே பாட்டு தான்... விளக்கம் கேட்டு மெயில் அனுப்பிடாதீங்க அக்கா.. ;))))

இனியவள் புனிதா said...

//அதற்குதான்.. "கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்.. உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன்.." ;)) (இதுவும் அதே பாட்டு தான்... விளக்கம் கேட்டு மெயில் அனுப்பிடாதீங்க அக்கா.. ;))))//

நிச்சயமாக மாட்டேன்...:-)) இவள்கூட காலடி தடம் பார்த்துப் பூத்திருப்பவள்தானே... ஏன் என்று நீயும் விளக்கம் கேட்கக்கூடாது சரியா ;-)

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////அதற்குதான்.. "கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்.. உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன்.." ;)) (இதுவும் அதே பாட்டு தான்... விளக்கம் கேட்டு மெயில் அனுப்பிடாதீங்க அக்கா.. ;))))//

நிச்சயமாக மாட்டேன்...:-)) இவள்கூட காலடி தடம் பார்த்துப் பூத்திருப்பவள்தானே... ஏன் என்று நீயும் விளக்கம் கேட்கக்கூடாது சரியா ;-)//

ம்ம்ம் சரி கேட்க மாட்டேன் :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது