காணாமல் போன கனவுகள்!


பட்டாம்பூச்சிகள் பிடிப்பது
பாவமென்றாய்,
மழையில் நனைந்த சிறகானது மனது..
வெயிலும், மழையும்
விரும்புதல் தவறென்றாய்..
கற்பனைக் காளான்கள் கருகின
ஒவ்வொரு மழைநாளிலும்...
இடைவருட எத்தனித்த
ஒற்றைப்பின்னல் கூடாதென்றாய்,
இரண்டானது
பின்னலும், மனதும்..
பால்ய நண்பனிடம் பழகுதல்
குற்றமென்றாய்,
நண்பர்கள் தொலைத்து
நான் மட்டும் நடைபோட்டேன்
நாட்கள் தள்ளி...
பிடித்த நிறங்களும்,
பணிகளும், பொழுதுபோக்குகளும்,
விளையாட்டுகளும்
என்னால் கண்டுகொள்ளப்படாமல்
உன்னால் திணிக்கப்பட்டது...
கனவில் மட்டுமே கைநிறையும்
மண்குடிசை மழலையின்
மாளிகை பொம்மையென
கண்ணீரில் பிரதிபலிக்கும்
செவ்வானமானது
என்னின் காதல் கனவுகள்
இதோ,
இன்று, வேறு பாதையை நோக்கி
என்னை செலுத்த தயார்படுத்துகின்றாய்
கடிவாளமிட்ட குதிரையென
கடக்க காத்திருக்கிறேன்
மீதமுள்ள வாழ்க்கையையும்
தலையை மட்டும் ஆட்டும்
பழக்கப்பட்ட பொம்மையாய்..
உனக்கும், எனக்குமாய்
பல கற்பித்தல்களும்,
கருத்து வேறுபாடுகளும்
இவற்றினூடே,
இன்னும் காணப்படாமலே
இருக்கின்றன அம்மா,
என்னின் பல கனவுகள்...

  • (02-03-09)உயிரோசை இதழில் பிரசுரமானது.


-அன்புடன்,
ஸ்ரீமதி.

73 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

புதியவன் said...

//கனவில் மட்டுமே கைநிறையும்
மண்குடிசை மழலையின்
மாளிகை பொம்மையென
கண்ணீரில் பிரதிபலிக்கும்
செவ்வானமானது
என்னின் காதல் கனவுகள்//

மிக அருமையான உவமை...கவிதை ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீமதி...

கார்க்கி said...

/மீதமுள்ள வாழ்க்கையையும்
தலையை மட்டும் ஆட்டும்
பழக்கப்பட்ட பொம்மையாய்..//

:((

அமுதா said...

நன்றாக உள்ளது...

அபுஅஃப்ஸர் said...

வரிகளில் யதார்த்தம் தெரிகிறது

கவிதை அருமை

வாழ்த்துக்கள்

இனியவள் புனிதா said...

வரிகள் ஒவ்வொன்றும் யதார்த்தத்தின் வெளிப்பாடு...அருமை மதி...!!!!!!

Valaipookkal said...

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

" உழவன் " " Uzhavan " said...

உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளீர்கள். நன்று!

சந்திப்பிழைகள் இருக்கிறதோ?

//நடை -ப்- போட்டேன்//
//பல -க்- கனவுகள்...//


உழவன்

Karthik said...

நல்லாருக்குங்க..! ஆனா சோகமா இருக்கு.

தமிழன்-கறுப்பி... said...

ஐயையோ கரையோர கனவுகள்ள கனவுகள் காணாம போயிடுச்சா.. :)இருங்க படிச்சுட்டு வாறேன்..

தமிழன்-கறுப்பி... said...

என்னாச்சு யாரோட கோபம்..?

தமிழன்-கறுப்பி... said...

ஏனிந்த சோகம்...

சென்ஷி said...

//உனக்கும், எனக்குமாய்
பல கற்பித்தல்களும்,
கருத்து வேறுபாடுகளும்
இவற்றினூடே,
இன்னும் காணப்படாமலே
இருக்கின்றன அம்மா,
என்னின் பல கனவுகள்...
//

தங்களின் மகள் இதுபோன்ற கவிதை எழுதாமலிருக்க என் வாழ்த்துக்கள் :-)

கவிதை ரொம்ப நல்லா இருக்குது

anbudan vaalu said...

கவிதை நல்லாருக்கு ஸ்ரீ....

\\தங்களின் மகள் இதுபோன்ற கவிதை எழுதாமலிருக்க என் வாழ்த்துக்கள் :-)\\

இந்த கமென்ட் அசத்தல்

நான் said...

பட்டியலிட்டவை எல்லாம் இயல்பாய் இருக்கிறது வாழ்த்துகள்

Divyapriya said...

கவிதை நல்லா இருக்கு...ஆனா, அம்மாவா இப்படி பண்ணுவாங்கன்னு நம்ப முடியலை :(

தமிழ் பிரியன் said...

:)

கோபிநாத் said...

\\\சென்ஷி said...
//உனக்கும், எனக்குமாய்
பல கற்பித்தல்களும்,
கருத்து வேறுபாடுகளும்
இவற்றினூடே,
இன்னும் காணப்படாமலே
இருக்கின்றன அம்மா,
என்னின் பல கனவுகள்...
//

தங்களின் மகள் இதுபோன்ற கவிதை எழுதாமலிருக்க என் வாழ்த்துக்கள் :-)

கவிதை ரொம்ப நல்லா இருக்குது
\\

மாப்பி கலக்கிட்ட டா ;))

ரீப்பிட்டேய் ;))

Muthusamy said...

good one

Subbu said...

நல்லா இருக்கு :))

ஆயில்யன் said...

//இன்று, வேறு பாதையை நோக்கி
என்னை செலுத்த தயார்படுத்துகின்றாய்
கடிவாளமிட்ட குதிரையென
கடக்க காத்திருக்கிறேன்
மீதமுள்ள வாழ்க்கையையும்
தலையை மட்டும் ஆட்டும்
பழக்கப்பட்ட பொம்மையாய்..//


சோகமா இருக்கு பாஸ்!

ஆயில்யன் said...

//Blogger Divyapriya said...

கவிதை நல்லா இருக்கு...ஆனா, அம்மாவா இப்படி பண்ணுவாங்கன்னு நம்ப முடியலை :(///


அதானே.....!!!

மீ டூ சேம் ஃபீலிங்....!

ஆயில்யன் said...

// தமிழ் பிரியன் said...

:)///


ஹய்ய்ய்ய்ய்ய் தம்பி ! :)

(ஒய் டெம்ப்ளட்...?)

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

TKB காந்தி said...

ரொம்ப அழகான கவிதை. இப்பவும் இது உண்மைங்கறது அசிங்கமான விஷயம்.

Saravana Kumar MSK said...

Me the 25 ;)

Saravana Kumar MSK said...

அன்பு என்ற பெயரில் நிகழ்த்தப்படும் ஒரு ஆதிக்க மனோபாவ வன்முறை..

கவிதை ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீ.. உணரமுடிகிறது..
:)

ஜி said...

Chanceless.... kalakkalaa irukuthu

narsim said...

//இன்னும் காணப்படாமலே
//

மிக ஆழமான வரிகள்.. ஸ்ரீ..

Maddy said...

பல எதார்த்தங்கள் இந்த கவிதை பிரதிபலிக்கிறது!! இதில் அம்மா மகள் உறவில் உள்ள பிரச்சனைகள் மட்டுமே பேச பட்டும் புரிந்து கொள்ள பட்டும் இருப்பதாக கருதுகிறேன்!! ஒரு அம்மாவின் நிலையில் இருந்து பார்த்தால் எப்படி இருக்குமென்று நினைக்க தோன்றுகிறது.

நிஜமா நல்லவன் said...

சோகம்???? ஆனா நல்லா இருக்கு!

yathra said...

இடைவருட எத்தனித்த
ஒற்றைப்பின்னல் கூடாதென்றாய்,
இரண்டானது
பின்னலும், மனதும்..ஏன் சிறு வயதில் பெற்றோர்களும் பள்ளிகளும் ஒற்றைப்பின்னலை கவனமாய் தவிர்க்கவேண்டும். இதேபோல் தான் முடிவெட்டிக்கொண்டு வந்த பிறகு, மறுபடியும் அழைத்து சென்று, இன்னும் கொஞ்சம் ஓட்ட வெட்டி விடுங்க என்பது, வன்மம் ஊட்டி வளர்க்கப்படுகிறோம்

ஜி said...

amma sogam... kavithai nalla irunthathu...

neththe padichitten... comment poda varra timela oru issue.. odivaa nu aani pudunga vituttaanunga :((

ஸாவரியா said...

அருமையான யதார்த்த கவிதை ஸ்ரீ

//Saravana Kumar MSK said...
அன்பு என்ற பெயரில் நிகழ்த்தப்படும் ஒரு ஆதிக்க மனோபாவ வன்முறை..//
இது அம்மா மகள் இடையே மட்டுமில்ல,..கணவன் மனைவி ஏன் காதலி காதல்ன் இடையே இருக்கு...புரிந்து கொள்ளுதல் மாத்திரமே இதற்கு நல்ல தீர்வு

தாமிரா said...

ஏன் இப்படி சோகம்? சிறப்பான கவிதை

சரவணகுமார், ஸாவரியாவின் கருத்துகள் ஏற்புடையவை.!

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////கனவில் மட்டுமே கைநிறையும்
மண்குடிசை மழலையின்
மாளிகை பொம்மையென
கண்ணீரில் பிரதிபலிக்கும்
செவ்வானமானது
என்னின் காதல் கனவுகள்//

மிக அருமையான உவமை...கவிதை ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீமதி...//

மிக்க நன்றி புதியவன் :))

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
///மீதமுள்ள வாழ்க்கையையும்
தலையை மட்டும் ஆட்டும்
பழக்கப்பட்ட பொம்மையாய்..//

:((//

என்ன ஆச்சு?? :))

ஸ்ரீமதி said...

@ அமுதா
//நன்றாக உள்ளது...//

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ அபுஅஃப்ஸர்
//வரிகளில் யதார்த்தம் தெரிகிறது

கவிதை அருமை

வாழ்த்துக்கள்//

நன்றி அபுஅஃப்ஸர் :)))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//வரிகள் ஒவ்வொன்றும் யதார்த்தத்தின் வெளிப்பாடு...அருமை மதி...!!!!!!//

நன்றி அக்கா :)))

ஸ்ரீமதி said...

@ " உழவன் " " Uzhavan "
//உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளீர்கள். நன்று!

சந்திப்பிழைகள் இருக்கிறதோ?

//நடை -ப்- போட்டேன்//
//பல -க்- கனவுகள்...//


உழவன்//

மாற்றிவிட்டேன் நன்றி :))))

ஸ்ரீமதி said...

@ Karthik
//நல்லாருக்குங்க..! ஆனா சோகமா இருக்கு.//

நன்றி கார்த்திக் :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//ஐயையோ கரையோர கனவுகள்ள கனவுகள் காணாம போயிடுச்சா.. :)இருங்க படிச்சுட்டு வாறேன்..//

படிக்காமலே ஐயையோவா?? :)))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//என்னாச்சு யாரோட கோபம்..?//

கோவம்லாம் இல்ல அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//ஏனிந்த சோகம்...//

சோகம் கவிதைக்காக :)))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
////உனக்கும், எனக்குமாய்
பல கற்பித்தல்களும்,
கருத்து வேறுபாடுகளும்
இவற்றினூடே,
இன்னும் காணப்படாமலே
இருக்கின்றன அம்மா,
என்னின் பல கனவுகள்...
//

தங்களின் மகள் இதுபோன்ற கவிதை எழுதாமலிருக்க என் வாழ்த்துக்கள் :-)

கவிதை ரொம்ப நல்லா இருக்குது//

ஹா ஹா என் மகள் கண்டிப்பா இதவிட கொடுமையா என்ன திட்டி கவிதை எழுதுவா... எனக்கு நம்பிக்கை இருக்கு.. :)))

ஸ்ரீமதி said...

@ anbudan vaalu
//கவிதை நல்லாருக்கு ஸ்ரீ....

\\தங்களின் மகள் இதுபோன்ற கவிதை எழுதாமலிருக்க என் வாழ்த்துக்கள் :-)\\

இந்த கமென்ட் அசத்தல்//

நன்றி வாலு :)))

ஸ்ரீமதி said...

@ நான்
//பட்டியலிட்டவை எல்லாம் இயல்பாய் இருக்கிறது வாழ்த்துகள்//

நன்றி நான் :))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//கவிதை நல்லா இருக்கு...ஆனா, அம்மாவா இப்படி பண்ணுவாங்கன்னு நம்ப முடியலை :(//

எல்லா அம்மாவும் இப்படிதான்... எல்லா மகளும் இப்படி தான் :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//:)//

:))))))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//\\\சென்ஷி said...
//உனக்கும், எனக்குமாய்
பல கற்பித்தல்களும்,
கருத்து வேறுபாடுகளும்
இவற்றினூடே,
இன்னும் காணப்படாமலே
இருக்கின்றன அம்மா,
என்னின் பல கனவுகள்...
//

தங்களின் மகள் இதுபோன்ற கவிதை எழுதாமலிருக்க என் வாழ்த்துக்கள் :-)

கவிதை ரொம்ப நல்லா இருக்குது
\\

மாப்பி கலக்கிட்ட டா ;))

ரீப்பிட்டேய் ;))//

நான் கூட நீங்க தான் இவ்ளோ பெரிய கமெண்ட் போட்டுட்டீங்களோன்னு ஆச்சர்யபட்டுட்டேன்... அப்பறம் தான் பார்த்தா ரீப்பிட்டேய்... :))

ஸ்ரீமதி said...

@ Muthusamy
//good one//

Thank you.. :))

ஸ்ரீமதி said...

@ Subbu
//நல்லா இருக்கு :))//

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////இன்று, வேறு பாதையை நோக்கி
என்னை செலுத்த தயார்படுத்துகின்றாய்
கடிவாளமிட்ட குதிரையென
கடக்க காத்திருக்கிறேன்
மீதமுள்ள வாழ்க்கையையும்
தலையை மட்டும் ஆட்டும்
பழக்கப்பட்ட பொம்மையாய்..//


சோகமா இருக்கு பாஸ்!//

அச்சச்சோ அப்படியா அண்ணா?? :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////Blogger Divyapriya said...

கவிதை நல்லா இருக்கு...ஆனா, அம்மாவா இப்படி பண்ணுவாங்கன்னு நம்ப முடியலை :(///


அதானே.....!!!

மீ டூ சேம் ஃபீலிங்....!//

அதே பதில் தான் அண்ணா உங்களுக்கும் :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//// தமிழ் பிரியன் said...

:)///


ஹய்ய்ய்ய்ய்ய் தம்பி ! :)

(ஒய் டெம்ப்ளட்...?)//

அவருக்கு கவிதை பிடிக்கல போல ;))

ஸ்ரீமதி said...

@ TKB காந்தி
//ரொம்ப அழகான கவிதை. இப்பவும் இது உண்மைங்கறது அசிங்கமான விஷயம்.//

:))) நன்றி காந்தி :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//Me the 25 ;)//

:)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//அன்பு என்ற பெயரில் நிகழ்த்தப்படும் ஒரு ஆதிக்க மனோபாவ வன்முறை..

கவிதை ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீ.. உணரமுடிகிறது..
:)//

ஆதிக்கம்ன்னு சொல்லமுடியாது.. அதுதான் நல்லதுன்னு அவங்க நினைச்சுக்கறாங்க.. அவங்க நினைச்சுக்கறது மட்டுமில்லாம நம்மையும் நம்ப சொல்லி படுத்தறாங்க.. :)))

ஸ்ரீமதி said...

@ ஜி
//Chanceless.... kalakkalaa irukuthu//

நன்றி அண்ணா :))))

ஸ்ரீமதி said...

@ narsim
////இன்னும் காணப்படாமலே
//

மிக ஆழமான வரிகள்.. ஸ்ரீ..//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ Maddy
//பல எதார்த்தங்கள் இந்த கவிதை பிரதிபலிக்கிறது!! இதில் அம்மா மகள் உறவில் உள்ள பிரச்சனைகள் மட்டுமே பேச பட்டும் புரிந்து கொள்ள பட்டும் இருப்பதாக கருதுகிறேன்!! ஒரு அம்மாவின் நிலையில் இருந்து பார்த்தால் எப்படி இருக்குமென்று நினைக்க தோன்றுகிறது.//

எல்லார் கிட்டயும் அவங்க அவங்க செயல நியாயப்படுத்த ஒரு காரணம் இருக்க தான் செய்யுது அண்ணா.. கேட்டா இப்படி தான் வளர்க்கணும்ன்னு சொல்வாங்க.. யார் கோடு போட்டான்னு தெரியல.. ஆனா இவங்க நல்லாவே ரோடு போடறாங்க.. :))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//சோகம்???? ஆனா நல்லா இருக்கு!//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ yathra
//இடைவருட எத்தனித்த
ஒற்றைப்பின்னல் கூடாதென்றாய்,
இரண்டானது
பின்னலும், மனதும்..ஏன் சிறு வயதில் பெற்றோர்களும் பள்ளிகளும் ஒற்றைப்பின்னலை கவனமாய் தவிர்க்கவேண்டும். இதேபோல் தான் முடிவெட்டிக்கொண்டு வந்த பிறகு, மறுபடியும் அழைத்து சென்று, இன்னும் கொஞ்சம் ஓட்ட வெட்டி விடுங்க என்பது, வன்மம் ஊட்டி வளர்க்கப்படுகிறோம்//

நல்ல கேள்வி பதில் தான் இல்லை.. :(( நன்றி யாத்ரா முதல் வருகைக்கு.. :)))

ஸ்ரீமதி said...

@ ஜி
//amma sogam... kavithai nalla irunthathu...

neththe padichitten... comment poda varra timela oru issue.. odivaa nu aani pudunga vituttaanunga :((//

அப்போ இதுக்கு முன்னாடி போட்ட கமெண்ட் இந்த கவிதைக்கு இல்லையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்.. ;))

ஸ்ரீமதி said...

@ ஸாவரியா
//அருமையான யதார்த்த கவிதை ஸ்ரீ

//Saravana Kumar MSK said...
அன்பு என்ற பெயரில் நிகழ்த்தப்படும் ஒரு ஆதிக்க மனோபாவ வன்முறை..//
இது அம்மா மகள் இடையே மட்டுமில்ல,..கணவன் மனைவி ஏன் காதலி காதல்ன் இடையே இருக்கு...புரிந்து கொள்ளுதல் மாத்திரமே இதற்கு நல்ல தீர்வு//

உண்மை தான் சாவரியா.. உங்கள் கருத்தோடு முழுவதும் ஒத்துப்போகிறேன் :)))

ஸ்ரீமதி said...

@ தாமிரா
//ஏன் இப்படி சோகம்? சிறப்பான கவிதை

சரவணகுமார், ஸாவரியாவின் கருத்துகள் ஏற்புடையவை.!//

உண்மைகள் சோகம் தடவப்பட்டே வருகின்றன அண்ணா... :)) நன்றி :))

புன்னகை said...

யதார்த்தமாய் இருந்தாலும்
அம்மாவை உருவக படுத்தும் பொழுது
யோசிக்க வைக்குது
வாழ்த்துக்கள் ஸ்ரீ உயிரோசையில்(02-03-09) வந்திருக்கு

ஸ்ரீமதி said...

@ புன்னகை
//யதார்த்தமாய் இருந்தாலும்
அம்மாவை உருவக படுத்தும் பொழுது
யோசிக்க வைக்குது
வாழ்த்துக்கள் ஸ்ரீ உயிரோசையில்(02-03-09) வந்திருக்கு//

நன்றி புன்னகை வருகைக்கும், வாழ்த்துக்கும்... :)))

அனுஜன்யா said...

ஸ்ரீ,

நல்லா வந்திருக்கு கவிதை. வாழ்த்துகள்.

அனுஜன்யா

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//ஸ்ரீ,

நல்லா வந்திருக்கு கவிதை. வாழ்த்துகள்.

அனுஜன்யா//

நன்றி அண்ணா :))

reena said...

//உனக்கும், எனக்குமாய்
பல கற்பித்தல்களும்,
கருத்து வேறுபாடுகளும்
இவற்றினூடே,
இன்னும் காணப்படாமலே
இருக்கின்றன அம்மா,
என்னின் பல கனவுகள்...
//
அருமையான கவிதை... வாழ்த்துக்கள்:)))

ஸ்ரீமதி said...

@ reena
////உனக்கும், எனக்குமாய்
பல கற்பித்தல்களும்,
கருத்து வேறுபாடுகளும்
இவற்றினூடே,
இன்னும் காணப்படாமலே
இருக்கின்றன அம்மா,
என்னின் பல கனவுகள்...
//
அருமையான கவிதை... வாழ்த்துக்கள்:)))//

நன்றி ரீனா :)))

cheena (சீனா) said...

நாம் கானும் கனவுகள் நிறவேறாமல் போவதும் - நம் மீது பிறரின் எண்ணங்கள் திணிக்கப் படுவதும் இயல்பாய் நடைபெறுகின்றன. என்ன செய்வது ..... தனித்துவம் என்பது பெண்களூக்கு சற்றே கடினம் தான்

நல்ல எண்ணங்கலீல் விளைந்த கவிதை

நல்வாழ்த்துகள் ஸ்ரீமதி

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது