இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டா..!


மாதவா...!!

* எனக்கு அண்ணனா பிறந்ததத் தவிர வேறெந்த புண்ணியமும் நீ செய்யாதிருந்திருந்தாலும்,

* என் பிறந்த நாளா இருந்தாலும், உன் பிறந்த நாளா இருந்தாலும் எனக்கும் புது டிரஸ் வாங்கித்தரனும் என்கிற நம்ம குடும்ப வழக்கத்த மறந்து நீ மட்டும் தனியா போயி உனக்கு மட்டும் டிரஸ் வாங்கிண்டாலும்,
*புது செல் போன் வாங்கின புதுசுல யாருமே போன் பண்ணலடின்னு சொல்லி பூத் போயி உனக்கே நீ மிஸ்டு கால் கொடுத்திருந்தாலும்,

*இந்த உடம்பு குறைய ஜிம்மும், வாக்கிங்கும் போயி, "நான் வாக்கிங் போறப்ப எல்லாம் வேப்பந்தளிர் சாப்புடுறேண்டி... அது உடம்புக்கு ரொம்ப நல்லது"-ன்னு நீ சொன்னத நம்பி நானும் உன்கூட வந்து, நீ சாப்ட்டது முருங்க தழை தான்னு நான் இருட்டுல கண்டுப்பிடிச்சாலும்,

* வாங்கின ரேங்க் ஷீட்ல எல்லாம் நானே உனக்கு அம்மா சைன் போட்டு தந்திருந்தாலும்,

* "நான் பாடி செகண்ட் ப்ரைஸ் வாங்கினேன் காலேஜ்ல" அப்படின்னு நீ சொல்லிக்கிட்டு திரியற அந்த போட்டில மொத்தமே ரெண்டு பேர் தான் கலந்துக்கிட்டாங்க என்ற உண்மை எனக்கு தெரிஞ்சாலும்,

*எப்போதும் உன் பேங்க் பேலன்ஸ் மட்டும் 0.00-ல இருந்தாலும்,

*நைட்டு 12 மணிக்கு உன் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கடமை உணர்ச்சியோட கால் பண்ணி என் தூக்கத்த கெடுத்திருந்தாலும்,

**நான் சொல்றது ஒன்னே ஒன்னு தான்....,

Happy Birthday to you.....
Happy Birthday to you.....
Happy Birthday to Madhavan.....
Happy Birthday to you.....

உனக்கு இது அதிர்ச்சியாக்கூட இருக்கலாம்... எப்பவும் உன் பிறந்தநாள் முடிஞ்ச மூணாவது நாள் மறக்காம போன் பண்ணி சாரி சொல்லி, வழிஞ்சு, அப்பறம் வாழ்த்து சொன்ன நீயா இப்படி பிறந்தநாள் அன்னைக்கே வாழ்த்து சொல்றதுன்னு... ஆனா, வாழ்க்கைல சில விஷயங்கள ஏன், எதுக்குன்னு கேள்வி கேட்காம நம்பிதான் ஆகணும்..

உனக்காக கவிதை எதுவும் எழுதிடக்கூடாதுன்னு நீ என்கிட்டே சத்தியம் வாங்கிக்கிட்டதால பாடலாம்ன்னு நினைச்சேன்... ஆனா, "ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி"-ங்கற பாடல் தேவை இல்லாம நினைவுக்கு வரதுனால... உனக்கு பிடிச்ச "என்னவளே அடி என்னவளே" பாடல உனக்கு டெடிக்கேட் பண்றேன்.... எனக்கு தெரியும் அது உன் செல் போன்லையே இருக்கு... என் சார்பா அத இன்னொரு முறை கேட்டுக்கோ...

அடுத்த பிறந்தநாளுக்காவது எனக்கும் டிரஸ் வாங்கித்தருவ என்ற ஆவலுடன்....

-அன்பு தங்கை,
ஸ்ரீமதி.

60 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள்

விஜய் said...

உங்கள் அண்ணனுக்கு வாழ்த்து சொல்லிடுங்க. ஆனாலும் இப்படி அண்ணனை இந்த வாரு வார வேண்டாம்.

அனுஜன்யா said...

மாதவா, எப்படிப்பா சமாளிக்கற!

பிறந்த நாள் வாழ்த்துகள். Have another rocking year.

அனுஜன்யா

புதியவன் said...

அண்ணன் மேல் என்ன ஒரு பாசம்...மெய்சிலிர்க்குது...வாழ்த்துக்கள்..

கார்க்கி said...

அண்ணாவுக்கு வாழ்த்துகள் சொல்லிடு

தாரணி பிரியா said...

ஸ்ரீ உங்க அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிடுங்க.

அப்புறம் இன்னிக்கு என் ரங்கமணிக்கும் பிறந்தநாள். எனக்கும் புது டிரெஸ் கிடைச்சுதே :)

Muthusamy said...

Wishing him a many more happy returns of the day...

I am at a lose that I don't have a sister who could write like this on my birthday. :-(

Thank You!

Muthusamy said...

ஸ்ரீ உங்க அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிடுங்க.

""அப்புறம் இன்னிக்கு என் ரங்கமணிக்கும் பிறந்தநாள். எனக்கும் புது டிரெஸ் கிடைச்சுதே :)"" -

ஸ்ரீ, சரி சரி...ஏதோ புகையுற மாதிரி வாசம் வல்ல? இந்த வலைப்பக்கம்???

Muthusamy said...

ஆக மொத்தம் ஆடை இல்லை என்பதை இவ்வளவு நீளமா இழுத்துருக்கீங்க...சேலை மாதிரி..அப்படித்தானே?

TKB காந்தி said...

மாதவனுக்கு என் வாழ்த்துக்கள்.

//என் சார்பா அத இன்னொரு முறை கேட்டுக்கோ//

Cute :)

அபி அப்பா said...

அவன் இவன் என்கிற ஏக வசனங்கள் வேண்டாம்! இல்லாவிடில் பதிலுக்கு வாடீ போடீ டிட்டிடீ என்றெல்லாம் சொல்ல வேண்டி வரும் - என்ன ஒரு வில்லத்தனம் அண்ணாத்தய பார்த்து இப்படில்லாம்:--))

ச்சும்மா.........வாழ்த்துக்கள் மாதவனுக்கு!

ஆ! இதழ்கள் said...

தங்கையிருந்தாலே இவ்வளவு கொடுமையும் தாங்கித்தான் ஆகணும் போல. :(

வாழ்த்துக்கள் மாதவன்.

:)

Madhavan said...

frist thanks for all,Romba santhosam, un blogla enna thinathuku........... veetuku va birthday treat vaikiren..''##^^??

Maddy said...

அதை செய்திருந்தாலும் இதை செய்திருந்தாலும் எதை செய்திருந்தாலும், அப்புறம் அதை செய்யாதிருந்திருந்தாலும் இதை செய்யாதிருந்திருந்தாலும் எதையும் செய்யாதிருந்திருந்தாலும் நீதாண்டா என் பாசமான அண்ணன்ன்னு சொல்ற பிறந்த நாள் வாழ்த்து இது!!

மாதவனுக்கு மாதவனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லா வளமும் எல்லா சுகமும் பெற்று வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள். வருடங்கள் பல கடந்தாலும் இந்த அண்ணன் தங்கை பாசம் வரும் சந்ததியும் வாய் பிளக்க தொடரட்டும்

Muthusamy said...

photo matching a illiye...he is yr elder brother and looking small compared to..in this pic???

maatikitiyaaa? :-)

முரளிகண்ணன் said...

மாதவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். சிறிதே அனுதாபங்களும்

gayathri said...

ஸ்ரீ உங்க அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிடுங்க.

Happy Birthday to you.....
Happy Birthday to you.....
Happy Birthday to Madhavan.....
Happy Birthday to you.....

அபுஅஃப்ஸர் said...

வாழ்த்துக்கள்

Valaipookkal said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

வெண்பூ said...

உங்கள் அண்ணனுக்கு வாழ்த்துகள்.. நல்ல வித்தியாசமான வாழ்த்துதான் இது.. உங்க அண்ணன் இதை படிச்சிட்டு என்ன சொன்னாருன்னு சொல்லுங்க..

மிஸஸ்.டவுட் said...

எப்படி சொன்னாலும் வாழ்த்து வாழ்த்து தான்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்கள் அண்ணனுக்கு .

அமிர்தவர்ஷினி அம்மா said...

இப்படி ஒரு வாழ்த்து சொன்னதுக்கு சொல்லமலேயே இருந்திருக்கலாம்

நாங்களாவது அவரை எதுவும் சொல்லாம
பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கிறோம்.
சேர்த்துடுங்க.

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்சி"-

சரியா வளரலை போல இருக்கே (’ச்’ சை காணோம்) எங்கே தனியா வாழ்த்து சொல்லப் போயிருக்கா ?

(ச்சும்மா)

ஆயில்யன் said...

//என் பிறந்த நாளா இருந்தாலும், உன் பிறந்த நாளா இருந்தாலும் எனக்கும் புது டிரஸ் வாங்கித்தரனும் என்கிற நம்ம குடும்ப வழக்கத்த மறந்து நீ மட்டும் தனியா போயி உனக்கு மட்டும் டிரஸ் வாங்கிண்டாலும்,//

superu :))))
thaniye thannathaniye
naan dress vangi vangi parthen - potten

rangela maadhava padikittiruparu :))))

ஆயில்யன் said...

happy birthday

appadinu sollidunga brother kitta :)

ஆயில்யன் said...

haiiiiiiiiii

me the 25 :)

ஆயில்யன் said...

//ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்சி//


ithu yaruku ??????

ஆயில்யன் said...

//புது செல் போன் வாங்கின புதுசுல யாருமே போன் பண்ணலடின்னு சொல்லி பூத் போயி உனக்கே நீ மிஸ்டு கால் கொடுத்திருந்தாலும்,//


ada neraiya visiyam kathukitalam pola.....!

நாகை சிவா said...

Good Post...

Enjoyed Lot..

Birtdhay Wishes to your brother :)

ஆயில்யன் said...

//நைட்டு 12 மணிக்கு உன் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கடமை உணர்ச்சியோட கால் பண்ணி என் தூக்கத்த கெடுத்திருந்தாலும்//

ende deivame!

enga girl friends ungaluku call pannunago :(

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள்!

நிஜமா நல்லவன் said...

/அனுஜன்யா said...

மாதவா, எப்படிப்பா சமாளிக்கற! /


ரிப்பீட்டு...:)

நான் ஆதவன் said...

வாழ்த்துகள் மாதவா, ஆனா உனக்கு கோயில் கட்டியே கும்பிடலாம்....

//உனக்காக கவிதை எதுவும் எழுதிடக்கூடாதுன்னு நீ என்கிட்டே சத்தியம் வாங்கிக்கிட்டதால//

நீ புத்திசாலிங்கறத ஒத்துக்கிறேன் மாதவா....

நான் ஆதவன் said...

////உனக்காக கவிதை எதுவும் எழுதிடக்கூடாதுன்னு நீ என்கிட்டே சத்தியம் வாங்கிக்கிட்டதால//

இதவிட பெரிய கிப்ட் எதுவும் நீ கொடுக்க முடியாது ஸ்ரீமதி..

கோபிநாத் said...

வாழ்த்துக்கள்! :)

அன்புடன் அருணா said...

//எனக்கு அண்ணனா பிறந்ததத் தவிர வேறெந்த புண்ணியமும் நீ செய்யாதிருந்திருந்தாலும்//

பாவம்பா உங்க அண்ணன்!!!
வாழ்த்துக்கள்...
அனபுடன் அருணா

இனியவள் புனிதா said...

மாதவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் :-)

சென்ஷி said...

Happy Birth Day Madhava...!

வெ.இராதாகிருஷ்ணன் said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் மாதவன் தம்பி.

Divyapriya said...

ஆனாலும் உனக்கு அநியாய நக்கல் தான் ஸ்ரீமதி…ஒவ்வொரு வரியும் ரசிச்சுப் படிச்சேன்…உங்க அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஜி said...

ennudaiya bday vaazththukkalum :))

சிம்பா said...

நண்பா மாதவா.. நல்ல வேலை நீ வெளியூர்ல இருக்க.. உனக்கு பிறந்த நாள் என்பதை காட்டிலும், இவங்களுக்கு புது துணி எடுக்கல என்ற கோபத்தை மனசில் வச்சுக்கிட்டு பிறந்த நாள் அன்னைக்கே வாழ்த்து என்ற பேருல வாரி விட வந்திருகாங்க...

பாசமலர் படம் தோத்து போச்சு போங்கப்பா...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். புது துணி இல்லாட்டி கூட பார்லே டீ இருந்தாலும் போதும்...

வாழ்க வளமுடன்...

வண்ணத்துபூச்சியார் said...

மாதவா .. வாழ்த்துகள்.

ஸ்ரீ.. இந்த மாதிரி "பாசமலர்" தங்கை எனக்கில்லையே..???

Karthik said...

அன்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

:)

but, why this kola veri?!

ஸாவரியா said...

வாழ்த்துக்கள் மாதவன்!

Good one, Srimathy!

நான் said...

உங்கள் எழுத்துகள் அருமை உங்க அண்ணாவுக்கு வாழ்த்துகள்

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்

நன்றி அண்ணா :))

@ விஜய்
//உங்கள் அண்ணனுக்கு வாழ்த்து சொல்லிடுங்க. ஆனாலும் இப்படி அண்ணனை இந்த வாரு வார வேண்டாம்.//

இப்ப விட்டா அப்பறம் இப்படி ஒரு நல்ல சந்தர்பம் கிடைக்காது அண்ணா.. ;))

@ அனுஜன்யா
//மாதவா, எப்படிப்பா சமாளிக்கற!

பிறந்த நாள் வாழ்த்துகள். Have another rocking year.

அனுஜன்யா//

ஹா ஹா ஹா நான் ரொம்ப சமர்த்து அண்ணா ;)))

@ புதியவன்
//அண்ணன் மேல் என்ன ஒரு பாசம்...மெய்சிலிர்க்குது...வாழ்த்துக்கள்..//

நன்றி புதியவன் :))

@ கார்க்கி
//அண்ணாவுக்கு வாழ்த்துகள் சொல்லிடு//

சொல்லிட்டேன் அண்ணா :))

@ தாரணி பிரியா
//ஸ்ரீ உங்க அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிடுங்க.

அப்புறம் இன்னிக்கு என் ரங்கமணிக்கும் பிறந்தநாள். எனக்கும் புது டிரெஸ் கிடைச்சுதே :)//

அக்கா அண்ணாவுக்கும் (உங்களவர்) என் வாழ்த்துகள சொல்லிடுங்க.. புது டிரஸ்ஸா உங்களுக்கு மட்டும்?? ம்ம்ம் கலக்குங்க.. :))

@ Muthusamy
நன்றி அண்ணா :))

@ TKB காந்தி
//TKB காந்தி said...
மாதவனுக்கு என் வாழ்த்துக்கள்.

//என் சார்பா அத இன்னொரு முறை கேட்டுக்கோ//

Cute :)//

நன்றி :))

@ அபி அப்பா
//அவன் இவன் என்கிற ஏக வசனங்கள் வேண்டாம்! இல்லாவிடில் பதிலுக்கு வாடீ போடீ டிட்டிடீ என்றெல்லாம் சொல்ல வேண்டி வரும் - என்ன ஒரு வில்லத்தனம் அண்ணாத்தய பார்த்து இப்படில்லாம்:--))

ச்சும்மா.........வாழ்த்துக்கள் மாதவனுக்கு!//

நன்றி அண்ணா :)))

@ ஆ! இதழ்கள்
//தங்கையிருந்தாலே இவ்வளவு கொடுமையும் தாங்கித்தான் ஆகணும் போல. :(

வாழ்த்துக்கள் மாதவன்.

:)//

தங்கையா இருந்தாலும் இந்த கொடுமைகள தாங்கனும் :P நன்றி :)))

@ Madhavan
//frist thanks for all,Romba santhosam, un blogla enna thinathuku........... veetuku va birthday treat vaikiren..''##^^??//

ஏன்டா லாஸ்ட்ல வந்து தேங்க்ஸ் சொல்லலாம்ல :))

@ Maddy
அண்ணா ரொம்ப நன்றி :))

@ முரளிகண்ணன்
எதுக்கு அண்ணா அனுதாபம்??

@ gayathri, அபு அஃப்ஸர்
நன்றிகள் :))

@ வெண்பூ
//உங்கள் அண்ணனுக்கு வாழ்த்துகள்.. நல்ல வித்தியாசமான வாழ்த்துதான் இது.. உங்க அண்ணன் இதை படிச்சிட்டு என்ன சொன்னாருன்னு சொல்லுங்க..//

படிச்சிட்டான் அண்ணா.. வீட்டுக்கு வா ட்ரீட் தரேன்னு சொன்னான்.. :)))

@ மிஸஸ்.டவுட்
//எப்படி சொன்னாலும் வாழ்த்து வாழ்த்து தான்.//

ஆமா அக்கா.. :)) நன்றி முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்.. :))

@ அமிர்தவர்ஷினி அம்மா
//இப்படி ஒரு வாழ்த்து சொன்னதுக்கு சொல்லமலேயே இருந்திருக்கலாம்//

ஏன் அக்கா?? :(( அவன் பத்தின உண்மையெல்லாம் நான் சொல்லிட்டேன்னு நினைச்சீங்களா?? இல்லையே... இதெல்லாம் நீ செஞ்சிருந்தாலும் நான் யாருக்கும் இத சொல்ல மாட்டேன்னு அப்படின்னு பதிவுல போடனும்ன்னு நினைச்சேன் மறந்துட்டேன்.. ;)))

@ ஆயில்யன்
//ithu yaruku ??????//

பயப்படாதீங்க உங்களுக்கில்ல அவனுக்கு இந்த லைன் ;)))

//enga girl friends ungaluku call pannunago :(//

எனக்கு பண்ணல அண்ணா அவனுக்கு பண்ணது தான்.. பட் எனக்கு தூக்கம் போச்சு :((

@ நாகை சிவா
//Good Post...

Enjoyed Lot..

Birtdhay Wishes to your brother :)//

Thank you very much anna :))

@ நிஜமா நல்லவன்
///அனுஜன்யா said...

மாதவா, எப்படிப்பா சமாளிக்கற! /


ரிப்பீட்டு...:)//

கிர்ர்ர்ர்ர்ர்ர்... நன்றி அண்ணா.. :))

@ நான் ஆதவன்
//வாழ்த்துகள் மாதவா, ஆனா உனக்கு கோயில் கட்டியே கும்பிடலாம்....

//உனக்காக கவிதை எதுவும் எழுதிடக்கூடாதுன்னு நீ என்கிட்டே சத்தியம் வாங்கிக்கிட்டதால//

நீ புத்திசாலிங்கறத ஒத்துக்கிறேன் மாதவா....//

ஹா ஹா ஹா நன்றி அண்ணா :))

@ கோபிநாத்
//வாழ்த்துக்கள்! :)//

நன்றி :))

@ அன்புடன் அருணா
////எனக்கு அண்ணனா பிறந்ததத் தவிர வேறெந்த புண்ணியமும் நீ செய்யாதிருந்திருந்தாலும்//

பாவம்பா உங்க அண்ணன்!!!
வாழ்த்துக்கள்...
அனபுடன் அருணா//

ஏன் அக்கா பாவம்?? :)))

@ இனியவள் புனிதா, சென்ஷி,வெ.இராதாகிருஷ்ணன்

நன்றிகள் :)))

@ Divyapriya
//ஆனாலும் உனக்கு அநியாய நக்கல் தான் ஸ்ரீமதி…ஒவ்வொரு வரியும் ரசிச்சுப் படிச்சேன்…உங்க அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.//

நன்றி அக்கா :)))

@ ஜி

நன்றி அண்ணா :))

@ சிம்பா
//நண்பா மாதவா.. நல்ல வேலை நீ வெளியூர்ல இருக்க.. உனக்கு பிறந்த நாள் என்பதை காட்டிலும், இவங்களுக்கு புது துணி எடுக்கல என்ற கோபத்தை மனசில் வச்சுக்கிட்டு பிறந்த நாள் அன்னைக்கே வாழ்த்து என்ற பேருல வாரி விட வந்திருகாங்க...

பாசமலர் படம் தோத்து போச்சு போங்கப்பா...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். புது துணி இல்லாட்டி கூட பார்லே டீ இருந்தாலும் போதும்...

வாழ்க வளமுடன்...//

அண்ணா அவன் இந்த ஊர்ல என் கூட தான் இருக்கான்... :))இனிமே ஒழுங்கா வாங்கித் தருவான்ல அதுக்கு தான்.. நன்றி அண்ணா வாழ்த்துக்கு :))

@ வண்ணத்துபூச்சியார்
//மாதவா .. வாழ்த்துகள்.

ஸ்ரீ.. இந்த மாதிரி "பாசமலர்" தங்கை எனக்கில்லையே..???//

என்ன அண்ணா இதுக்கெல்லாம் கவலை படலாமா?? நீங்க இந்த மாதிரி என்னென்ன நல்ல வேலைகள் செஞ்சீங்களோ அதெல்லாம் எழுதி எனக்கு மெயில் பண்ணுங்க... உங்க பிறந்த நாளுக்கும் இந்த மாதிரி போஸ்ட் போட்டு கலக்கிடலாம்... :)))

@ Karthik
//அன்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

:)

but, why this kola veri?!//

கொலைவெறியா?? சும்மா கார்த்திக்.. :)) உன் தங்கைக்கிட்ட நீ படாததா?? ;))

@ ஸாவரியா
//வாழ்த்துக்கள் மாதவன்!

Good one, Srimathy!//

நன்றி ஸாவரியா :))

@ நான்
//உங்கள் எழுத்துகள் அருமை உங்க அண்ணாவுக்கு வாழ்த்துகள்//

நன்றி நான் :))

தமிழ் பிரியன் said...

அண்ணனுக்கு வாழ்த்து(க்)கள்!

தமிழ் பிரியன் said...

வாழ்த்து சொல்லியாச்சு... என்ன பிறந்தநாள் பரிசு கொடுத்தீங்க..:))

தமிழ் பிரியன் said...

மீ த 49!

தமிழ் பிரியன் said...

50!

முகுந்தன் said...

உங்கள் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.

Saravana Kumar MSK said...

உங்கள் அண்ணனுக்கு என் வாழ்த்துக்களை சொல்லிடுங்க..

Saravana Kumar MSK said...

ஆனாலும் உனக்கு அநியாய நக்கல் தான் ஸ்ரீமதி…

நண்பரே மாதவா.. எப்படி இந்த புள்ளையை வீட்ல வச்சி சமாளிக்கிறீங்க..?????


(நல்லவேளை எனக்கு சகோதரிகளே இல்லை!!!)

தாமிரா said...

மிக மிக அழகான பதிவு.. அட்டகாசம்.!

நல்ல கவிதை உணர்வும், நகைச்சுவை உணர்வும் ஒருங்கேயமைந்த அரிதான‌ பெண் நீங்கள்.. வாழ்த்துகள்.. உங்களுக்கும், உங்கள் அண்ணாவுக்கும்.!

தாமிரா said...

பிறந்தநாள் பாடல் ROTFL..

Poornima Saravana kumar said...

ஸ்ரீ அண்ணாவிற்க்கு இனிய பிறந்த நாள் வாழ்துக்கள்:))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//அண்ணனுக்கு வாழ்த்து(க்)கள்!//

நன்றி அண்ணா :))

//வாழ்த்து சொல்லியாச்சு... என்ன பிறந்தநாள் பரிசு கொடுத்தீங்க..:))//

இந்த பதிவு தான்... இவ்ளோ பேரோட வாழ்த்துகளே அவனுக்கு நிஜமான பரிசு இல்லையா?? :))

@ முகுந்தன்
//உங்கள் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.//

நன்றி அண்ணா :))

@ Saravana Kumar MSK
//உங்கள் அண்ணனுக்கு என் வாழ்த்துக்களை சொல்லிடுங்க..//

கண்டிப்பா சரவணா... நன்றி.. :)))

//ஆனாலும் உனக்கு அநியாய நக்கல் தான் ஸ்ரீமதி…//

இதெல்லாம் நக்கல் இல்ல சரவணா.. உண்மைகள்.. ;))

//நண்பரே மாதவா.. எப்படி இந்த புள்ளையை வீட்ல வச்சி சமாளிக்கிறீங்க..?????//

Konjam kashtamdhaan from Madhavan..

//(நல்லவேளை எனக்கு சகோதரிகளே இல்லை!!!)//

உன் புகழை எல்லாம் என்கிட்டே சொல்லு.. நான் போடறேன் பதிவா.. :))

@ தாமிரா
//மிக மிக அழகான பதிவு.. அட்டகாசம்.!

நல்ல கவிதை உணர்வும், நகைச்சுவை உணர்வும் ஒருங்கேயமைந்த அரிதான‌ பெண் நீங்கள்.. வாழ்த்துகள்.. உங்களுக்கும், உங்கள் அண்ணாவுக்கும்.!//

மிக்க நன்றி அண்ணா :)))

//பிறந்தநாள் பாடல் ROTFL..//

ஹா ஹா ஹா :)))

@ Poornima Saravana kumar
//ஸ்ரீ அண்ணாவிற்க்கு இனிய பிறந்த நாள் வாழ்துக்கள்:))//

நன்றி அக்கா :)))

சுரேகா.. said...

மன்னிக்கணும்...கொஞ்சம் லேட்டாயிடுச்சு!

அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!

தங்கச்சி பிறந்தநாளுக்கு இன்னும் நிறைய வாரி.... பதிவு போட நாங்கள் அனைவரும் அவருக்கு உதவுவோம் என்ற எச்சரிக்கையுடன்..
:)

(என்ன பண்றது ஸ்மைலி தானா வந்து விழுந்துடுது)

ஸ்ரீமதி said...

@ சுரேகா..
//மன்னிக்கணும்...கொஞ்சம் லேட்டாயிடுச்சு!

அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!

தங்கச்சி பிறந்தநாளுக்கு இன்னும் நிறைய வாரி.... பதிவு போட நாங்கள் அனைவரும் அவருக்கு உதவுவோம் என்ற எச்சரிக்கையுடன்..
:)

(என்ன பண்றது ஸ்மைலி தானா வந்து விழுந்துடுது)//

நன்றி அண்ணா வாழ்த்துக்கும், அழகான ஸ்மைலிக்கும்.. :)))

ஜீவா said...

புது செல் போன் வாங்கின புதுசுல யாருமே போன் பண்ணலடின்னு சொல்லி பூத் போயி உனக்கே நீ மிஸ்டு கால் கொடுத்திருந்தாலும், .////


முதல்ல சிரிச்சுக்கிறேன் :)
ரொம்ப பாசமான குடும்பம் வரங்களாய்

தோழமையுடன்
ஜீவா

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது