காதலர் தினமென...
உன்னுடன் நான் கழித்த
நொடிகளைத்தான்
உருக்கி வார்த்து
உலகம் கொண்டாடுகிறது
காதலர் தினமென...
நிறைய நீ;
கொஞ்சம் நானென
இன்னும் வாழ்கின்றன
காதலர் தினங்கள்..உன் தொலைப்பேசி
முத்தங்களுக்கெல்லாம்
மௌனமே காக்கிறேன்
பரிசுகளாக திருப்பித்தர
காதலர் தினத்தை
எதிர்பார்த்து...


வாழ்த்துமடல்களில்லை,
வந்து குவியும் பரிசுகளில்லை,
நான் அங்கும், நீ இங்குமில்லை,
எல்லா விடுமுறை நாட்களின்
மதியப் பொழுதின்
வெறுமைப் போலவே
கழிகிறது
இந்த காதலர் தினமும்...


இந்தக் காதலர் தினத்திலாவது
தந்துவிடுவாய்
என ஏக்கத்துடன் நான்...
பிரிவிற்கு பின்னும்
உன்னுடையதாகவே இருக்கும்
என்னிதயம்...


கடற்கரைக் காணும் போதும்,
கைக்கோர்த்த காதலர்கள்
கடக்கும் போதும்,
காதலர் தினப் பரிசுகளை
தோழி வரிசைப்படுத்தும்போதும்,
முள்ளென முளைத்து நிற்கும்
தனிமையை என்ன செய்ய??சிவப்பெழுத்துல இருக்கறவங்கல்லாம் சீக்கிரம் பச்சைக்கு மாற வாழ்த்துக்கள்... பச்சைல இருக்கறவங்கல்லாம் ஸ்ரீராம் சேனா கைல மாட்டியோ, இல்ல அப்பா, அம்மாகிட்ட சொல்லியோ சீக்கிரம் டும் டும் டும் ஆக வாழ்த்துகள்.... மொத்தத்துல....

எல்லோருக்கும் காதலர் தின நல்வாழ்த்துகள்...:-))

-அன்புடன்,
ஸ்ரீமதி.

47 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

Muthusamy said...

முதல் ஓட்டு

Muthusamy said...

கவிதைகள் அழகு!
காதலர்களுக்கு வாழ்த்துகள்!!

நன்றி!!!

சிம்பா said...

கலர் கலரா காதலை பிரிச்சு மேஞ்ச தானைய தலைவி, காதல் காவலாளி ஸ்ரீ வாழ்க.. ;)

Divyapriya said...

//எல்லா விடுமுறை நாட்களின்
மதியப் பொழுதின்
வெறுமைப் போலவே
கழிகிறது
இந்த காதலர் தினமும்...//

கலக்கற ஸ்ரீ...சூப்பரா இருக்கு....

சிவப்பு பச்சைன்னு பின்னி பெடலெடுத்துடா போ!

Divyapriya said...

சரியா 12 மணிக்கு இந்த குட்டிப் பொண்ணு இப்படி கவிதை எல்லாம் போடுது...என்னவோ இருக்குப்பா :))

சிம்பா said...

ஆமா திவ்யா... எனக்கும் கூட அதே சந்தேகம் தான்..

அபி அப்பா said...

நான் சிவப்பா பச்சையான்னே தெரியலையே என்ன செய்யட்டும்:-))

முரளிகண்ணன் said...

super as always

நாணல் said...

பதிவு பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு...எட்டிப் பார்த்தா ஸ்ரீ குட்டி குட்டியா அழகழகா கவிதை எழுதி இருக்காங்க....
எப்பவும் போல எல்லாம் அழகு...

சிவப்போ பச்சையோ , மொத்ததுல காதலர் தினம் வாழ்துக்கள்... :)

நாணல் said...

//வாழ்த்துமடல்களில்லை,
வந்து குவியும் பரிசுகளில்லை,
நான் அங்கும், நீ இங்குமில்லை,
எல்லா விடுமுறை நாட்களின்
மதியப் பொழுதின்
வெறுமைப் போலவே
கழிகிறது
இந்த காதலர் தினமும்...//

leave la vandhuduchennu feelings ah ;) ....


//சிவப்பெழுத்துல இருக்கறவங்கல்லாம் சீக்கிரம் பச்சைக்கு மாற வாழ்த்துக்கள்... பச்சைல இருக்கறவங்கல்லாம் ஸ்ரீராம் சேனா கைல மாட்டியோ, இல்ல அப்பா, அம்மாகிட்ட சொல்லியோ சீக்கிரம் டும் டும் டும் ஆக வாழ்த்துகள்....//

நீங்க எந்த நிறம் ஸ்ரீ....
(அப்பாடி வந்த வேலை முடிந்தது.... ;) )

Saravana Kumar MSK said...

// Divyapriya said...

சரியா 12 மணிக்கு இந்த குட்டிப் பொண்ணு இப்படி கவிதை எல்லாம் போடுது...என்னவோ இருக்குப்பா :))//

அதே.. அதே.. something fishy..

// SanJai காந்தி said...
// ஸ்ரீமதி said...
அடப்பாவி அண்ணா உனக்கும் ஏதோ லவ் வோர்கௌட் ஆகிடிச்சி போலன்னு நினைச்சேன்... //
நோட் திஸ் பாய்ண்ட் மக்களே..
((உனக்கும்)) :))//

வந்த வேலை இவ்ளோ சுலபமா முடிஞ்சிடுச்சி..

Saravana Kumar MSK said...

கவிதையெல்லாம் செம அழகு ஸ்ரீ.. பின்ற..

//கடற்கரைக் காணும் போதும்,
கைக்கோர்த்த காதலர்கள்
கடக்கும் போதும்,
காதலர் தினப் பரிசுகளை
தோழி வரிசைப்படுத்தும்போதும்,
முள்ளென முளைத்து நிற்கும்
தனிமையை என்ன செய்ய??//

இது எனக்கான கவிதையா??
சிவப்பில் இருக்கிறேன்..

Saravana Kumar MSK said...

//வாழ்த்துமடல்களில்லை,
வந்து குவியும் பரிசுகளில்லை,
நான் அங்கும், நீ இங்குமில்லை,
எல்லா விடுமுறை நாட்களின்
மதியப் பொழுதின்
வெறுமைப் போலவே
கழிகிறது
இந்த காதலர் தினமும்...//

இது மிக அருமை.. அட்டகாசம்..

அபுஅஃப்ஸர் said...

//

வாழ்த்துமடல்களில்லை,
வந்து குவியும் பரிசுகளில்லை,
நான் அங்கும், நீ இங்குமில்லை,
எல்லா விடுமுறை நாட்களின்
மதியப் பொழுதின்
வெறுமைப் போலவே
கழிகிறது
இந்த காதலர் தினமும்...//

இப்படியே வெற்றிடமாய்தான் கழிகிறது இந்த காதலர்தினம்
வரிகள் அருமை
வாழ்த்துக்கள், அனைத்து காதல்களும் சக்ஸஸ் ஆவாதற்கு

இத்யாதி said...

எப்பவும் போல அருமை !! :)

வெ.இராதாகிருஷ்ணன் said...

கவிதைகள் மிகவும் அழகு. அருமை. நன்றி ஸ்ரீமதி.

ஜி said...

redla irukurathula last kavithai mattum eligible... maththa rendum patchaiya thaandi pona caseskku :))

as usual pinnittama..

ஜி said...

//எல்லா விடுமுறை நாட்களின்
மதியப் பொழுதின்
வெறுமைப் போலவே
கழிகிறது
இந்த காதலர் தினமும்// Ulti...

Divya said...

கவிதைகள் மிகவும் அழகு!!!


\\இந்தக் காதலர் தினத்திலாவது
தந்துவிடுவாய்
என ஏக்கத்துடன் நான்...
பிரிவிற்கு பின்னும்
உன்னுடையதாகவே இருக்கும்
என்னிதயம்...\\


ரொம்ப நல்லா இருக்கு இந்த வரிகள்:))

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி!

புதியவன் said...

//உன்னுடன் நான் கழித்த
நொடிகளைத்தான்
உருக்கி வார்த்து
உலகம் கொண்டாடுகிறது
காதலர் தினமென...//

ஓஹோ...காதலர் தினம் வந்த வழி இது தானா...?

புதியவன் said...

//இந்தக் காதலர் தினத்திலாவது
தந்துவிடுவாய்
என ஏக்கத்துடன் நான்...
பிரிவிற்கு பின்னும்
உன்னுடையதாகவே இருக்கும்
என்னிதயம்...//

இந்தக் கவிதை எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு...
வாழ்த்துக்கள் ஸ்ரீமதி....

Thamizhmaangani said...

கலர் கலரா கவிதை சூப்பரா இருக்கு!:)

தாரணி பிரியா said...

கவிதைகள் மிகவும் அழகு :)

காதலர் தினவாழ்த்துகள்

இவன் said...

கடற்கரைக் காணும் போதும்,
கைக்கோர்த்த காதலர்கள்
கடக்கும் போதும்,
காதலர் தினப் பரிசுகளை
தோழி வரிசைப்படுத்தும்போதும்,
முள்ளென முளைத்து நிற்கும்
தனிமையை என்ன செய்ய??

ஆழமான வரிகள்

தாமிரா said...

அழகழகான கவிதைகள்.. ரசனையான பெண்மணியம்மா நீங்கள்.. நீங்கள் பச்சையா, சிவப்பா சொல்லவேயில்லையே? நாங்கல்லாம் கருப்பு (கல்யாணமானவங்க..).!

ஆ! இதழ்கள் said...

நல்ல நல்ல கவிதைகள்.

வாழ்த்துக்கள்.

விஜய் said...

கவிதைகள் அழகோ அழகு.

விஜய் said...

\\? நாங்கல்லாம் கருப்பு (கல்யாணமானவங்க..).\\

கறுப்பு தான் எனக்குப் புடிச்ச கலருன்னு ஊருல நிரைய சுத்திக்கிட்டு திரியிறாங்க :-)

narsim said...

//உன்னுடன் நான் கழித்த
நொடிகளைத்தான்
உருக்கி வார்த்து
உலகம் கொண்டாடுகிறது
காதலர் தினமென... //

ALL THE BEST..

கார்க்கி said...

நல்லாயிருக்குனு சொல்ல முடியல.. படிச்சிருக்க கூடாதோ?

வெண்பூ said...

//
சிவப்பெழுத்துல இருக்கறவங்கல்லாம் சீக்கிரம் பச்சைக்கு மாற வாழ்த்துக்கள்... பச்சைல இருக்கறவங்கல்லாம் ஸ்ரீராம் சேனா கைல மாட்டியோ, இல்ல அப்பா, அம்மாகிட்ட சொல்லியோ சீக்கிரம் டும் டும் டும் ஆக வாழ்த்துகள்....
//

அப்ப கல்யாணம் ஆகி புள்ள பெத்த நாங்க எல்லாம் என்ன பண்ணுறதாம்?

இனியவள் புனிதா said...

//விஜய் said...
கவிதைகள் அழகோ அழகு.//

Repeattuuuuu :-)

gayathri said...

உன் தொலைப்பேசி
முத்தங்களுக்கெல்லாம்
மௌனமே காக்கிறேன்
பரிசுகளாக திருப்பித்தர
காதலர் தினத்தை
எதிர்பார்த்து.

ennapa iniku than loversday.enna avangaluku tharavendiyatha thanthutengala illya

gayathri said...

Saravana Kumar MSK said...
// Divyapriya said...

சரியா 12 மணிக்கு இந்த குட்டிப் பொண்ணு இப்படி கவிதை எல்லாம் போடுது...என்னவோ இருக்குப்பா :))//

அதே.. அதே.. something fishy..

enna ithu chinnapulla mathiri innum srimathey ya santhega patrenga.athan 12 'O' clock pathivu pottu avanga love conform panitanglaa apparam enna .

அனுஜன்யா said...

ரொம்ப நல்லா இருக்கு கவிதைகள். எவ்வளவு ட்ரை பண்ணியும், இந்த மாதிரி எழுத வர மாட்டேங்குது. வாழ்த்துகள் ஸ்ரீ.

அப்புறம், உன் அனுமதி இல்லாமல் ஒரு திருட்டு. அங்க வந்து திட்டவும் :)

அனுஜன்யா

ஜீவன் said...

கல்யாணமாகி குழந்தை குட்டி பெத்தவங்க
இந்த நாள எப்படிம்மா கொண்டாடுறது?

TKB காந்தி said...

கலர் கலரா கலக்கிருக்கீங்க ஸ்ரீ.

அப்புறம், ஒரு சின்ன கொஸ்டியன், டும் டும் டும் ஆனவங்க என்ன பண்ணறதுன்னே சொல்லலையே?

வண்ணத்துபூச்சியார் said...

Xlent..

அருமை.

வாழ்த்துகள்

Karthik said...

சூப்பர்ப் கவிதைகள்..சிவப்பு, பச்சைனு எல்லாத்துலையும் கலக்குறீங்க..!

அமிர்தவர்ஷினி அம்மா said...

நிறைய நீ;
கொஞ்சம் நானென
இன்னும் வாழ்கின்றன
காதலர் தினங்கள்..

எக்கச்ச்சக்கம்மா காதல் போப்பா

செமயா காதலிக்கிறீங்க சாரி
காதல் கவித எழுதறீங்க.

கடற்கரைக் காணும் போதும்,
கைக்கோர்த்த காதலர்கள்
கடக்கும் போதும்,
காதலர் தினப் பரிசுகளை
தோழி வரிசைப்படுத்தும்போதும்,
முள்ளென முளைத்து நிற்கும்
தனிமையை என்ன செய்ய??
ஒன்னும் செய்யமுடியாது
வயித்தெரிச்சல் படுவதைத் தவிர

வாழ்த்துமடல்களில்லை,
வந்து குவியும் பரிசுகளில்லை,
நான் அங்கும், நீ இங்குமில்லை,
எல்லா விடுமுறை நாட்களின்
மதியப் பொழுதின்
வெறுமைப் போலவே
கழிகிறது
இந்த காதலர் தினமும்...
சூப்பர்மா.

ஸ்ரீமதி said...

@ Muthusamy, சிம்பா

நன்றி :))

@ Divyapriya

அக்கா 12 மணிக்கு schedule பண்ணியிருந்தேன்... அதான் வேற ஒன்னும் இல்ல... :))

@ அபி அப்பா
அண்ணிக்கிட்ட கேளுங்க அண்ணா ;))

@ முரளிகண்ணன்
நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ நாணல்
நான் மஞ்சள் நிறம் :))

@ Saravanakumar MSK
//வந்த வேலை இவ்ளோ சுலபமா முடிஞ்சிடுச்சி..//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் நன்றி :))

@ அபு அஃப்ஸர், இத்யாதி, வெ.இராதாகிருஷ்ணன்,ஜி,திவ்யா,
நன்றி :))

@ புதியவன்
//ஓஹோ...காதலர் தினம் வந்த வழி இது தானா...?//

ம்ம்ம்ம் இருக்கலாம் ;))

ஸ்ரீமதி said...

@ Thamizhmaangani, தாரணி பிரியா, இவன்
நன்றி :))

@ தாமிரா
//அழகழகான கவிதைகள்.. ரசனையான பெண்மணியம்மா நீங்கள்.. நீங்கள் பச்சையா, சிவப்பா சொல்லவேயில்லையே? நாங்கல்லாம் கருப்பு (கல்யாணமானவங்க..).!//

கறுப்பா? நல்லது.. நன்றி அண்ணா.. :))

@ஆ! இதழ்கள், விஜய்,narsim
நன்றி :))

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
//நல்லாயிருக்குனு சொல்ல முடியல.. படிச்சிருக்க கூடாதோ?//

ஏன்?? :((

@ வெண்பூ
//அப்ப கல்யாணம் ஆகி புள்ள பெத்த நாங்க எல்லாம் என்ன பண்ணுறதாம்?//

தாமிரா அண்ணா சொன்னத கேட்கலியா அண்ணா நீங்க‌?? ;))

@ இனியவள் புனிதா, Gayathri
நன்றி :))

@ அனுஜன்யா
//ரொம்ப நல்லா இருக்கு கவிதைகள். எவ்வளவு ட்ரை பண்ணியும், இந்த மாதிரி எழுத வர மாட்டேங்குது. வாழ்த்துகள் ஸ்ரீ.

அப்புறம், உன் அனுமதி இல்லாமல் ஒரு திருட்டு. அங்க வந்து திட்டவும் :)//

திட்டறதா?? நானா?? உங்களையா?? அவ்ளோ தான்.. உங்க ரசிகர்கள் என்ன அடிக்க வருவாங்க‌.. :))

ஸ்ரீமதி said...

@ ஜீவன்
//கல்யாணமாகி குழந்தை குட்டி பெத்தவங்க
இந்த நாள எப்படிம்மா கொண்டாடுறது?//

இதென்ன அண்ணா கேள்வி மனைவியோட தான்.. இப்படி என்கிட்ட கேட்ட மாதிரி அண்ணிகிட்டயும் கேட்டு அடி வாங்கிக்காதீங்க சரியா?? ;))

@ TKB காந்தி
//கலர் கலரா கலக்கிருக்கீங்க ஸ்ரீ.

அப்புறம், ஒரு சின்ன கொஸ்டியன், டும் டும் டும் ஆனவங்க என்ன பண்ணறதுன்னே சொல்லலையே?//

ஏன் உங்களுக்கு கல்யாணம் ஆகிடிச்சா?? அப்ப உங்க மனைவியோட கொண்டாடுங்க‌.. :))

@ வண்ணத்துபூச்சியார், Karthik, அமிர்தவர்ஷினி அம்மா
நன்றிகள் பல :))

ஷீ-நிசி said...

//உன்னுடன் நான் கழித்த
நொடிகளைத்தான்
உருக்கி வார்த்து
உலகம் கொண்டாடுகிறது
காதலர் தினமென...//

ரொம்ப அழகா இருக்கு! நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள்!

ஸ்ரீமதி said...

@ ஷீ-நிசி
////உன்னுடன் நான் கழித்த
நொடிகளைத்தான்
உருக்கி வார்த்து
உலகம் கொண்டாடுகிறது
காதலர் தினமென...//

ரொம்ப அழகா இருக்கு! நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள்!//

நன்றி ஷீ-நிசி முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்.. :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது