அப்பாவும், நானும் அப்பறம் என் தமிழும்...

ஏன் இப்படி எல்லாம் எனக்கு மட்டும்?? இது என்னோட முந்தைய மொக்க போஸ்ட் தலைப்பு... ஆனா, இப்ப நிஜமும் அதுதான்.. ஏற்கனவே சொன்னா மாதிரி இப்பல்லாம் பதிவு எழுதவே வரதில்ல... அட்லீஸ்ட் படிச்சு பின்னூட்டலாம்னாலும் அதுக்கும் டைம் கிடைக்கறதில்ல... வாட் டு டூ?? பார்த்தீங்களா நான் எழுதினது நாலு வரி கூட இல்ல.. ஆனா, அதுக்குள்ள எவ்ளோ ஆங்கில கலப்பு இப்படி தான் பேசிட்டு திரிஞ்சிட்டு இருக்கோம்.. (நானும் தான்)... ஆனா, முடிஞ்ச வரைக்கும் தமிழ்ல பேசி அத வளத்துட்டு (கொன்னுகிட்டு) இருக்கேன்... நான் பேசறதெல்லாம் தமிழே இல்லன்னு மாதவன் சொல்வான்... அவ்ளோ அழகு தமிழ் என்னோடது... இத நான் பெருமையா சொல்லல... என் தமிழையே இவ்ளோ கிண்டல் பண்றானே அப்போ மத்தவங்க பேசறத எவ்ளோ கிண்டல் பண்ணுவான்னு நினைச்சு சிரிச்சிக்கிறேன்... ;-))

அதோட என் தமிழ் அறிவு பத்தி தான் எல்லாருக்கும் தெரியுமே... காணாகாக்குன்னு எழுதின மேதாவி நான்... இந்த புலம்பல்ஸ் எல்லாம் இப்ப எதுக்குன்னு கேட்கறீங்களா?? வேற ஒன்னும் இல்ல, நான் பாட்டுக்கு நானுண்டு, என் ஆணி உண்டுன்னு இருந்தேன்... அப்போ சும்மா இல்லாம ஜி அண்ணா போஸ்ட்ல போயி கும்மி அடிச்சேன்... நீ வேலையில்லாமதான் சுத்திகிட்டு இருக்கியான்னு சொல்லி அண்ணா தமிழ வளக்க நீதான் சரியான ஆள்ன்னு எனக்கு இந்த பொறுப்பக் கொடுத்துட்டார்... (சரி மேட்டர்க்குவான்னு சொல்றீங்களா?? அது தெரிஞ்சா நான் ஏன் இவ்ளோ எழுதப்போறேன்??;-))

நான் சின்னப் பொண்ணா இருக்கும் போதெல்லாம் (இப்பவும் தான்..;-)) சன் டிவில, இது ஆக்ஷன் வாரம்... இது அந்த வாரம்... இது இந்த வாரம்... (வாரம்.. வானரம் இல்ல... ஓகே??)... இப்படி ஏதாவது வரிசைல படத்த வாரா வாரம் (அப்பா எவ்ளோ வாரம்?? :O) போடுவாங்க... அது மாதிரி இது காதல் வாரம்.. எல்லாரும் காதல் பத்தி காதலர் தினத்த ஒட்டி எழுதிட்டாங்க... நானும் அது மாதிரி கவுஜ எழுதலாம்ன்னு நினைச்சேன்... (தப்பிச்சீங்க.. ;-))... ஆனா அண்ணா கூப்ட்டு இந்த பொறுப்ப தந்ததால, இத எழுதலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்.... (நீ திருந்தவே மாட்ட... அதானே சொல்லப் போறீங்க??) ஆனாலும், உங்கள விடறதா இல்ல...

சரி நான் என்னதான் எழுதப்போறேன்னு சொல்லிடறேன்... வேற ஒன்னும் இல்லங்க புழக்கத்தில் இருந்து.. ஆனா, இப்ப அதிகம் உபயோகிக்கப்படாமல் இருக்கிற தமிழ் சொற்களா எழுதப்போறேன்....

நித்தம்- நிதம்- நிதந்தோறும்-தினந்தோறும்- அர்த்தம் புரிஞ்சிருக்கும்... நான் சின்ன வயசுல நித்தம்-ன்னு சொன்னதா ஞாபகம்... ஆனா, இப்ப எல்லாம் டெய்லி தான்... ;-))

முடிதல்- "எண்ணிய முடிதல் வேண்டும்".... அதே முடிதல் தான்.. இருந்தாலும் இத அதிகம் யூஸ் பண்றது 'தலைய முடிஞ்சிக்கோன்னு' தான்... இப்ப இத யாரும் உபயோகிக்கறதில்லன்னு நினைக்கிறேன்... பாஞ்சாலி சபதத்துலையும் "நறுநெய் பூசி முடியேன் யான்" அப்படின்னு திரௌபதி சொன்னதா வரும்.. பாரதியார் பாஞ்சாலி சபதம்...

இட்டு- 'மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்' , இது தமிழ் வார்த்தை தான்னு நினைக்கிறேன்... ஏன் இப்படி ஒரு சந்தேகம்னா, நான் எங்கயாவது இந்த வார்த்தைய யூஸ் பண்ணா 'அப்படின்னா என்ன?' அப்படின்னு கேட்கறவங்க அதிகம்... அதான், யோசிக்கிறேன்... இந்த வார்த்தைய அதிகம் யாரும் உபயோகிச்சு நான் பார்த்ததில்ல... நக்கீரர் யாராவது இருந்து, நெற்றிக்கண்ண தொறந்துடாதீங்க... ;-))

மாடம்- 'தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய'-ன்னு ஆண்டாளோட திருப்பாவை பாடல் ஒன்னு இருக்கு... தவிர மாடப்புறா... இதெல்லாம் குறிக்கறது இந்த மாடம் தான்... எங்க பாட்டி வீட்ல எல்லாம் திண்ணைக்கு மேல சுவர்ல சின்னதா ஒரு ஜன்னல் அல்லது இடம் மாதிரி இருக்கும்... குறைந்தபட்சம் அதுல ஒரு அகல் விளக்கு வைக்கலாம்... அதுக்கு தான் அத உபயோகிப்பாங்கன்னு நினைக்கிறேன்... இப்பவும் இத இப்படி தான் கூப்பிடுறாங்களா? இல்ல வேற ஏதும் சொல் வழக்கத்துல இருக்கான்னு தெரியல... மாடம் இல்லாத வீடுகள் தான் நான் இப்ப பார்க்கிறேன்.... :-((

அவ்ளோதாங்க என் அறிவுக்கு(?!) எட்டினது... :-(( இதுபோல இன்னும் நிறைய வார்த்தைகள் இருக்கு.... அவற்றோட பின் நவீனத்துவத்தையும் பிசைந்து ஊட்ட நம்ம சரவணன அழைக்கிறேன்... நன்றி...!! வணக்கம்...!! :-))


பி.கு_1:சரி இவ்ளோ சொல்லிட்டு தலைப்புக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்ன்னு சொல்லாம போனா என்ன அர்த்தம்ன்னு கேட்கறீங்களா?? என் அப்பாவுக்கு தமிழ் தெரியாது... (இப்போ தெரியும்)... நான் பிறந்து 5 வயசு வரைக்கும் சுந்தர தெலுங்க கேட்டு வளர்ந்தவ... அதனால், தவறிருப்பின் ஷமிக்கணும்... :-))

பி.கு_2: ம்ம் அப்பறம் இன்னுமொரு முக்கியமான விஷயம்... "இந்த வார்த்தையா?? இது எனக்கு நல்லாத் தெரியுமே....!!", "ஹை... இது எனக்கு ரொம்ப தெரிஞ்ச வார்த்தை...", "இதெல்லாம் புது வார்த்தைகளா??" இப்படிப்பட்ட பின்னூட்டங்கள் போடுவதை எதிர்க்கிறேன்... "அடடா... ரொம்ப புது வார்த்தை... சொன்னதுக்கு நன்றி..!!" என்ற பின்னூட்டங்களை வரவேற்கிறேன்.. ;-))))))

-அன்புடன்,
ஸ்ரீமதி.

69 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

SK said...

:) :)

அ.மு.செய்யது said...

ஆல் ஆர் நைஸ் அண்ட் பிராண்ட் நீயு டமில் வேர்ட்ஸ்....

சோ ஐயம் பாராட்டிங் யு...

அபுஅஃப்ஸர் said...

ப்ளீஸ் கண்டினியூ அண்டு இன்ட்ரடுயூஸ் லைக் நியூ டமில் வேர்ட்ஸ்

வாழ்த்துக்கள் நல்லாவே புது புது தமிழ் வர்த்தைகள் விளையாடுது உங்கள் வரிகளில்..

அபுஅஃப்ஸர் said...

இங்கேயே தமிழ் எம்.ஏ. வரைக்கும் படிக்கலாம்னு நினைக்கிறேன்...ம்ம் தொடருங்கள்

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிகவும் அருமையாக பாஞ்சாலி சபதம், திருப்பாவை என இட்டு, அருமையாய் முடியட்டும் என இப்பதிவைத் தந்திருக்கும் தாங்கள் நித்தம் ஒரு பதிவு என குறைந்தபட்சம் ஒரு பதிவினை இட்டு விடுங்கள்.

புதிய வார்த்தைகள் கண்டேன். :)

SK said...

இந்த பதிவிற்கு மொக்கை என லேபில் தந்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

gayathri said...

adada ippadi ellam kuda thamila varthaigal iruka.

ok saravanan enna than eluthurarunu pakalame

கார்க்கி said...

மொக்கை என்பது தமிழா??????????

இராம்/Raam said...

//"இந்த வார்த்தையா?? இது எனக்கு நல்லாத் தெரியுமே....!!", "ஹை... இது எனக்கு ரொம்ப தெரிஞ்ச வார்த்தை...", "இதெல்லாம் புது வார்த்தைகளா??" இப்படிப்பட்ட பின்னூட்டங்கள் போடுவதை எதிர்க்கிறேன்... "அடடா... ரொம்ப புது வார்த்தை... சொன்னதுக்கு நன்றி..!!" என்ற பின்னூட்டங்களை வரவேற்கிறேன்.. ;-))))))//

:))

MayVee said...

ஏன்ங்க......
உங்களை தமிழ் வார்த்தை பற்றி எழுத சொன்ன.... இப்படி மொக்கை போடுறிங்க.
இத்தனை நாள் வரைக்கும் நான் மொக்கை போடுறதுல திலம்னு நினைச்சேன்; என்னக்கு போட்டிய நீங்க இருக்கிங்களே.....

எங்க டமில் கலரசம் வாருத்தைகல் நாள்ள எழுதுது ......

இதுக்கு தான் ... ஒருத்தங்க ப்ளோக் போய் கும்மி அடிக்கறதுக்கு முன்னாடி யோசிக்கணும்

MayVee said...

"அபுஅஃப்ஸர் said...
இங்கேயே தமிழ் எம்.ஏ. வரைக்கும் படிக்கலாம்னு நினைக்கிறேன்"

periya repeatuuu........

திகழ்மிளிர் said...

/இன்னும் நிறைய வார்த்தைகள் இருக்கு./

இன்னுமா ?
சும்மா தான்


வாழ்த்துகள்

தாமிரா said...

அழகான வார்த்தைகளும் அவற்றோடு தந்த இலக்கிய வரிகளும்.. உங்கள் பிரத்யேக நடையும்.. ரசனை.

Divyapriya said...

அடடா... ரொம்ப புது வார்த்தை... சொன்னதுக்கு நன்றி..!! :))

தாரணி பிரியா said...

அடடா... ரொம்ப புது வார்த்தை... சொன்னதுக்கு நன்றி..!! :))

:) :) :) :)

Muthusamy said...

I was not aware that you are from AP and it is a great thing that you are able to write such nice poems in Tamil (not many Tamils do it). I am sorry for rigorously identifying the faults without knowing this fact..I wish you to write more and more and have a look at it before you publish the post.

Thank you very much,

நான் ஆதவன் said...

//ஏற்கனவே சொன்னா மாதிரி இப்பல்லாம் பதிவு எழுதவே வரதில்ல...//

நாங்க போன ஜென்மத்தில செஞ்ச புண்ணியம்...

நான் ஆதவன் said...

//அட்லீஸ்ட் படிச்சு பின்னூட்டலாம்னாலும் அதுக்கும் டைம் கிடைக்கறதில்ல... வாட் டு டூ??//

நாங்க போன ஜென்மத்தில செஞ்ச பாவம்...

நான் ஆதவன் said...

//நான் சின்னப் பொண்ணா இருக்கும் போதெல்லாம் (இப்பவும் தான்//

என்ன ஒரு மூணடி இருப்பையா??

நான் ஆதவன் said...

//புழக்கம்//

இதுவே இப்ப நிறைய இடத்தில சொல்றதில்லை...

"கும்மி" என்ற தமிழ் வார்த்தை இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பது நம் வலையுலகத்தால் தான். அதை நினைத்து பெருமைப்படு தங்காச்சி

தமிழன்-கறுப்பி... said...

:)

தமிழன்-கறுப்பி... said...

எதை எழுதினாலும் கலக்குறியே ஆத்தா..!

தமிழன்-கறுப்பி... said...

கார்க்கி said...
\\
மொக்கை என்பது தமிழா??????????

\\

இதுக்கு பதில் தரவும்...:)

தமிழன்-கறுப்பி... said...

25

புதியவன் said...

//அடடா... ரொம்ப புது வார்த்தை... சொன்னதுக்கு நன்றி..!!//

இதையே என்ன்னோட பின்னூட்டமா போட்டுக்கிறேன்...

இனியவள் புனிதா said...

"அடடா... ரொம்ப புது வார்த்தை...!!!!"

ஆயில்யன் said...

//ஏற்கனவே சொன்னா மாதிரி இப்பல்லாம் பதிவு எழுதவே வரதில்ல... ///


ende deivame.......!

ஆயில்யன் said...

//'தலைய முடிஞ்சிக்கோன்னு' தான்... இப்ப இத யாரும் உபயோகிக்கறதில்லன்னு நினைக்கிறேன்... ///


nomba correctu :)

நான் said...

நன்றி மதி தொடரவும்

narsim said...

மிக நல்ல பதிவு.. வார்த்தைகள் பற்றி நல்லா எழுதியிருக்கீங்க.. "இட்டு" ..மிக நல்ல சொல்லாடல்..பாடல்..

கோபிநாத் said...

:))

எம்.எம்.அப்துல்லா said...

:)))

நிஜமா நல்லவன் said...

:)

நிஜமா நல்லவன் said...

/நான் பேசறதெல்லாம் தமிழே இல்லன்னு மாதவன் சொல்வான்... /

நீ தமிழ் பேசுறது இருக்கட்டும்...முதலில் மரியாதையா பேசு...:)

நிஜமா நல்லவன் said...

/நான் பாட்டுக்கு நானுண்டு, என் ஆணி உண்டுன்னு இருந்தேன்... /

அங்க ஒரு குண்டூசி கூட இல்லை ... இதில ஆணி வேறயா????

நிஜமா நல்லவன் said...

/நித்தம்- நிதம்- நிதந்தோறும்-தினந்தோறும்- அர்த்தம் புரிஞ்சிருக்கும்... நான் சின்ன வயசுல நித்தம்-ன்னு சொன்னதா ஞாபகம்... ஆனா, இப்ப எல்லாம் டெய்லி தான்... ;-)/

நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்காய் .... இந்த பாட்டுல வர்ற நித்தம் தானே...? அதுக்கு அர்த்தம் டெய்லியா...இது கூட தெரியாம இருந்திருக்கேனே...நான் ஏதோ நித்தம் நித்தம்னு ஒரு நெல்லு இருக்கு போலன்னு நினைச்சிட்டேன்...:)

நிஜமா நல்லவன் said...

/பாஞ்சாலி சபதத்துலையும் "நறுநெய் பூசி முடியேன் யான்" அப்படின்னு திரௌபதி சொன்னதா வரும்../

இதை உனக்கு சொன்னது யாரு?

நிஜமா நல்லவன் said...

/மாடம்- 'தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய'-ன்னு ஆண்டாளோட திருப்பாவை பாடல் ஒன்னு இருக்கு.../

ஆண்டாள் பாசுரம் எல்லாம் சொல்லி விளக்குனா எப்படி புரியும்....மாடத்திலே கன்னி மாடத்திலேன்னு சொன்னா ஈஸியா புரியும்...:)

நிஜமா நல்லவன் said...

/இட்டு- 'மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்' , இது தமிழ் வார்த்தை தான்னு நினைக்கிறேன்.../

எங்க தான் தேடி இப்படி எல்லாம் எழுதுறியோ....:)

நிஜமா நல்லவன் said...

/ அ.மு.செய்யது said...

ஆல் ஆர் நைஸ் அண்ட் பிராண்ட் நீயு டமில் வேர்ட்ஸ்....

சோ ஐயம் பாராட்டிங் யு.../

தல பின்னிட்டீங்க...:)

நிஜமா நல்லவன் said...

/அபுஅஃப்ஸர் said...

ப்ளீஸ் கண்டினியூ அண்டு இன்ட்ரடுயூஸ் லைக் நியூ டமில் வேர்ட்ஸ்

வாழ்த்துக்கள் நல்லாவே புது புது தமிழ் வர்த்தைகள் விளையாடுது உங்கள் வரிகளில்../

வார்த்தை விளையாட்டு என்பது இது தானா?

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

//'தலைய முடிஞ்சிக்கோன்னு' தான்... இப்ப இத யாரும் உபயோகிக்கறதில்லன்னு நினைக்கிறேன்... ///


nomba correctu :)/

ரிப்பீட்டு...:)

நிஜமா நல்லவன் said...

/ அபுஅஃப்ஸர் said...

இங்கேயே தமிழ் எம்.ஏ. வரைக்கும் படிக்கலாம்னு நினைக்கிறேன்...ம்ம் தொடருங்கள்/

ரிப்பீட்டு...:)

சுரேகா.. said...

//"அடடா... ரொம்ப புது வார்த்தை... சொன்னதுக்கு நன்றி..!!" //

வரவேற்புக்குரிய பின்னூட்டமிட்ட மகிழ்ச்சியுடன்....!

:)

எப்புடி???

ஆ! இதழ்கள் said...

உபயம் - கோனார் தமிழ் உரை.

:))))

Poornima Saravana kumar said...

தமிழ அக்கு வேரா ஆணி வேரா பிரிக்கற உனக்கே இப்படினா அப்போ எங்க நிலைமை??

ஸாவரியா said...

அடடா... ரொம்ப புது வார்த்தை... சொன்னதுக்கு நன்றி..!!"
:)))

ippa o.k. vaa :)))

ரங்கன் said...

ஸ்ஸ்ஸ்ஸ்...ஸாரி
தெரியாம வந்துட்டேன்...
மன்னிச்சுரு...
அவ்வ்வ்வ்வ்வ்வ்.... :)))))

இனியவள் புனிதா said...

:-) 50

தங்கம் said...

தமிழை நீங்கள் எல்லாம் வளர்க்க நினைத்தது போல தமிழன் என்றொரு இனம் ஈழத்தில் அழியாமல் காக்கவும் உதவுங்கள் சகோதரர்களே...

Saravana Kumar MSK said...

இந்த வார்த்தையா?? இது எனக்கு நல்லாத் தெரியுமே....!!

Saravana Kumar MSK said...

ஹை... இது எனக்கு ரொம்ப தெரிஞ்ச வார்த்தை...

Saravana Kumar MSK said...

இதெல்லாம் புது வார்த்தைகளா??

Saravana Kumar MSK said...

உனக்கு தாய்மொழி தெலுங்கா?
தமிழ்ல இந்த கலக்கு கலக்கற.. சான்ஸே இல்லை ஸ்ரீ..

Saravana Kumar MSK said...

எதை பத்தி எழுதினாலும் நக்கலும், கேலியும், கிண்டலும்.. சூப்பர்..

i really like it.. :)

Saravana Kumar MSK said...

//நான் சின்னப் பொண்ணா இருக்கும் போதெல்லாம் (இப்பவும் தான்..;-)) //

இருந்தாலும் இது ஓவரு..

Saravana Kumar MSK said...

பாரதியார் பாஞ்சாலி சபதம்...
ஆண்டாளோட திருப்பாவை

இதெல்லாம் என்னது.. நீ படிச்சி இருக்கியா..
நான் இப்போதான் கேள்வியே படறேன். :)

Saravana Kumar MSK said...

//அவற்றோட பின் நவீனத்துவத்தையும் பிசைந்து ஊட்ட நம்ம சரவணன அழைக்கிறேன்...//

நானா.. பின் நவீனமா??
சரி. சரி..

ஸ்ரீமதி said...

@ SK

நன்றி :))

@ அ.மு.செய்யது

தேங்க்ஸ் :))

@ அபுஅஃப்ஸர்

தமிழ் எம்.ஏ.வா?? வாழ்த்துகள்.. ;))

@ வெ.இராதாகிருஷ்ணன்

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ SK

ஏன்??

@ Gayathri

Thanks :))

@ கார்க்கி

//மொக்கை என்பது தமிழா??????????//

தெரியாது.. :))

@ இராம்/Raam

:)))))

ஸ்ரீமதி said...

@ MayVee

நல்லா மொக்கை போடறேனா?? நன்றி.. :)))

@ திகழ்மிளிர்

நீங்க நிஜமாகூட இன்னுமான்னு கேட்கலாம் நான் ஒன்னும் நினைச்சுக்க மாட்டேன்.. :))

@ தாமிரா
//அழகான வார்த்தைகளும் அவற்றோடு தந்த இலக்கிய வரிகளும்.. உங்கள் பிரத்யேக நடையும்.. ரசனை.//

நன்றி அண்ணா :))

@ Divyapriya
//அடடா... ரொம்ப புது வார்த்தை... சொன்னதுக்கு நன்றி..!! :))//

இந்த டெம்ப்ளேட் நான் போடாமலே இருந்திருக்கலாம் ;)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்க பேச்சு கா

நான் தொடர் பதிவெழுத சொன்னாமட்டும் எழுதலை இல்ல.

ஸ்ரீமதி said...

@ தாரணி பிரியா
//அடடா... ரொம்ப புது வார்த்தை... சொன்னதுக்கு நன்றி..!! :))

:) :) :) :)//

Girrrrrrrrrr.. ;))

@ Muthusamy

Am not from AP.. My father was there for few years.. Its not a problem Muthusamy.. Hereafter ll do my writings seriously.. and ll make it better.. Thank you for ur concerns.. :))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
//என்ன ஒரு மூணடி இருப்பையா??//

சின்ன வயசுல தானே?? ஆமா..

////புழக்கம்//

இதுவே இப்ப நிறைய இடத்தில சொல்றதில்லை...

"கும்மி" என்ற தமிழ் வார்த்தை இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பது நம் வலையுலகத்தால் தான். அதை நினைத்து பெருமைப்படு தங்காச்சி//

உண்மைதான் அண்ணா :))

@ தமிழன்-கறுப்பி...
//எதை எழுதினாலும் கலக்குறியே ஆத்தா..!//

நிஜமாவா?? நன்றி அண்ணா :))

//இதுக்கு பதில் தரவும்...:)//

சொல்லிட்டேன் :))

ஸ்ரீமதி said...

@ புதியவன், இனியவள் புனிதா அக்கா, ஆயில்யன் அண்ணா, நான்

நன்றி :))

@ narsim
//மிக நல்ல பதிவு.. வார்த்தைகள் பற்றி நல்லா எழுதியிருக்கீங்க.. "இட்டு" ..மிக நல்ல சொல்லாடல்..பாடல்..//

நன்றி அண்ணா :))

@ கோபிநாத்,எம்.எம்.அப்துல்லா

:(((

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//நீ தமிழ் பேசுறது இருக்கட்டும்...முதலில் மரியாதையா பேசு...:)//

மரியாதைன்னா??

//அங்க ஒரு குண்டூசி கூட இல்லை ... இதில ஆணி வேறயா????//

Girrrrrrrrrrr...

//நான் ஏதோ நித்தம் நித்தம்னு ஒரு நெல்லு இருக்கு போலன்னு நினைச்சிட்டேன்...:)//

கொடுமை :(((

//இதை உனக்கு சொன்னது யாரு?//

நானே கண்டு பிடிச்சேன் :))

//ஆண்டாள் பாசுரம் எல்லாம் சொல்லி விளக்குனா எப்படி புரியும்....மாடத்திலே கன்னி மாடத்திலேன்னு சொன்னா ஈஸியா புரியும்...:)//

சாரி, அப்போ இந்த பாட்டு ஞாபகம் வரல :((

//எங்க தான் தேடி இப்படி எல்லாம் எழுதுறியோ....:)//

திருப்பாவைல ;))

ஸ்ரீமதி said...

@ சுரேகா..
//எப்புடி???//

இருந்தாலும் நானே உங்களுக்கு இப்படி ஒரு டெம்ப்ளேட் குடுத்துருக்கக்கூடாது... உங்கள டைப் பண்ண வெச்சிருக்கணும்.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... :))

@ ஆ! இதழ்கள்
//உபயம் - கோனார் தமிழ் உரை.//

என்னது??

@ Poornima Saravana kumar
//தமிழ அக்கு வேரா ஆணி வேரா பிரிக்கற உனக்கே இப்படினா அப்போ எங்க நிலைமை??//

அடடா அப்போ உங்கள மாட்டி விட்டிருந்துருக்கலாமே ;)))

ஸ்ரீமதி said...

@ ஸாவரியா
//அடடா... ரொம்ப புது வார்த்தை... சொன்னதுக்கு நன்றி..!!"
:)))

ippa o.k. vaa :)))//

u too?? :((

@ ரங்கன்
//ஸ்ஸ்ஸ்ஸ்...ஸாரி
தெரியாம வந்துட்டேன்...
மன்னிச்சுரு...
அவ்வ்வ்வ்வ்வ்வ்.... :)))))//

Thats ok.. மன்னிச்சுட்டேன் ;)))

@ இனியவள் புனிதா
//:-) 50//

;))))

@ தங்கம்
//தமிழை நீங்கள் எல்லாம் வளர்க்க நினைத்தது போல தமிழன் என்றொரு இனம் ஈழத்தில் அழியாமல் காக்கவும் உதவுங்கள் சகோதரர்களே...//

நானும் தமிழ் தான்..

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//உனக்கு தாய்மொழி தெலுங்கா?
தமிழ்ல இந்த கலக்கு கலக்கற.. சான்ஸே இல்லை ஸ்ரீ..//

என் தந்தை மொழிதான் தெலுங்கு.. ;))

////நான் சின்னப் பொண்ணா இருக்கும் போதெல்லாம் (இப்பவும் தான்..;-)) //

இருந்தாலும் இது ஓவரு..//

அப்போ எது சிக்ஸர்?? அத சொல்லிட்டு போ.. ;))

//பாரதியார் பாஞ்சாலி சபதம்...
ஆண்டாளோட திருப்பாவை

இதெல்லாம் என்னது.. நீ படிச்சி இருக்கியா..
நான் இப்போதான் கேள்வியே படறேன். :)//

அடப்பாவி.. :O

//நானா.. பின் நவீனமா??//

நீ தான்.. நீயே தான்.. :))

@ அமிர்தவர்ஷினி அம்மா
//உங்க பேச்சு கா

நான் தொடர் பதிவெழுத சொன்னாமட்டும் எழுதலை இல்ல.//

சாரி, அக்கா நீங்க சொன்ன பதிவ எழுத ரொம்ப மூளை வேணும் ஹி ஹி ஹி.. ;)))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது