காதல் திருத்தம்-கவிதைகள்

பனிப்படர்ந்த
கண்ணாடிகளில் எல்லாம்
உன் பெயரால்
பூ செய்யும்
பைத்தியம் நான்

எனக்கு
உன்னை உணர்த்திக்கொண்டே
இருக்கும்
என் துப்பட்டாவின்
உன் வாசம்

வார்த்தைகள்
இல்லா மொழி
'காதல்'
அதை வாசிக்கக்
கற்றுத் தந்தவன்
நீ..!!

வார்த்தைகளால்
வடிவமைக்கப்படாத
காதல் ஒன்று
வெட்கம் பூசி
அலைந்தது

உனக்கான
என் கவிதைகள்
மீண்டும் எனதாக
வேண்டும்
காதல் செய்...

மழையில் ஊறிய
மரக்கதவாய்
கனக்கிறது நெஞ்சம்
காதல் கொண்ட
கண்ணீரில்...!!

கண்கள் கோர்த்த
கண்ணீரை
கவிதையாக்கி
காகிதத்தில்
தூக்கிலிட்டேன்...

உன் பெயர் சுமந்த
பலகைக் கூட
காதல்
சின்னம் தான்

கற்பனை தொலைத்து
கவிதையா??
நீயில்லாமல்
காதலா??

பசுமரமாய் இருந்த
கவிதைகளெல்லாம்
கழுமரமாயின
இன்று
காதலின் பிரிவால்...

உன்னால்
தூக்கம் கெட்ட
என்னிரவுகள்
உட்கார்ந்திருக்கின்றன
வாசலில்
காதலை சபித்தபடி

உடுத்திப்போட்ட
உடையெனக்
களைந்துக்கிடக்கிறது
நம் காதல்
திருத்தித்தர
உடனே வா....!!


-அன்புடன்,
ஸ்ரீமதி.

60 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

gayathri said...

me they first

gayathri said...

kavithai ketha padangal

Subbu said...

அய்யய்யோ பஷ்டு பொச்சே :(

Muthusamy said...

அருமை நல்லா இருக்கு ஸ்ரீமதி

narsim said...

//உனக்கான
என் கவிதைகள்
மீண்டும் எனதாக
வேண்டும்
காதல் செய்...//

gud one

ஜோதிபாரதி said...

ஓ! நீங்கதானா அந்த ஸ்ரீமதி!
அருமை!

Muthusamy said...

கவிதைகள் சின்னதா இருக்கு ஆனால் ஆழம் அதிகம்
காதல் கண்டிப்பாகவும் இருக்க வேண்டும் உன்னுள்
இல்லையென்று சொல்லி என்னை சங்கடப்படுத்தி
சந்தேகப் படவைத்து விடாதே இந்த உணர்வுகளை
என்ன தான் கற்பனைகளாக இருந்தாலும் பெரிய
அளவில் சில நிஜங்களோடு ஒத்து போகிறதே
அதனால் தான் கேட்கிறேன்...

நன்றி!!!

கார்க்கி said...

நான் படிக்கல படிக்கல படிக்கல

புதியவன் said...

கதையோடு சேர்த்து படித்த கவிதைகள் தான் என்றாலும் தனியாக படிக்கும் போது தனி அழகு தான்...

புதியவன் said...

//எனக்கு
உன்னை உணர்த்திக்கொண்டே
இருக்கும்
என் துப்பட்டாவின்
உன் வாசம்எனக்கு
உன்னை உணர்த்திக்கொண்டே
இருக்கும்
என் துப்பட்டாவின்
உன் வாசம்//

அழகிய நினைவுகளின் வாசம்...

புதியவன் said...

//மழையில் ஊறிய
மரக்கதவாய்
கனக்கிறது நெஞ்சம்
காதல் கொண்ட
கண்ணீரில்...!!//

மனதை கனக்கச் செய்யும் நினைவுகள்...

புதியவன் said...

//உன்னால்
தூக்கம் கெட்ட
என்னிரவுகள்
உட்கார்ந்திருக்கின்றன
வாசலில்
காதலை சபித்தபடி//

இந்தக் காதலில் சாபமும் கூட வரம் தான்...
அனைத்தும் அழகு...வாழ்த்துக்கள் ஸ்ரீமதி...

தமிழன்-கறுப்பி... said...

தொடர்கதையில் எனக்கு பிடிச்சதே இந்த கவிதைகள்தான் ...

சென்ஷி said...

எல்லாக்கவிதையுமே கலக்கலா இருக்குது..

//பனிப்படர்ந்த
கண்ணாடிகளில் எல்லாம்
உன் பெயரால்
பூ செய்யும்
பைத்தியம் நான்//

அட்டகாசம்...

ப்ரியன் said...

மிக நல்ல கவிதைகள்...

Divyapriya said...

//மழையில் ஊறிய
மரக்கதவாய்
கனக்கிறது நெஞ்சம்
காதல் கொண்ட
கண்ணீரில்...!!//

This is my all time fav :)

venkatx5 said...

/*
வார்த்தைகள்
இல்லா மொழி
'காதல்'
அதை வாசிக்கக்
கற்றுத் தந்தவன்
நீ..!!
*/
நல்லா தப்பில்லாம வாசிங்கோ.. :)


/*
பசுமரமாய் இருந்த
கவிதைகளெல்லாம்
கழுமரமாயின
இன்று
காதலின் பிரிவால்...
*/
என்ன ஸ்ரீ பீலிங்க்ஸ்-ஆ??

ஆதவா said...

காதல் மழையில் ஒவ்வொரு சொட்டாக நனைந்தேன்...

தொடருங்கள்.

ஆதவா said...

வார்த்தைகளில்லா மொழி, காதல்
மொழியில்லா காதல் அவளா??

அருமை தொடருங்கள்.

ஆதவா said...

தொடர்ந்து எழுதுங்க.. குறுங்கவிதைகளாக இருந்தாலும் அழகு ததும்பும் காதல் உள்ளே ஒளிந்திருக்கிறது.

ஆயில்யன் said...

//உனக்கான
என் கவிதைகள்
மீண்டும் எனதாக
வேண்டும்
காதல் செய்...//


நல்லா இருக்கு :)

ஆயில்யன் said...

//ஆதவா said...
தொடர்ந்து எழுதுங்க.. குறுங்கவிதைகளாக இருந்தாலும் அழகு ததும்பும் காதல் உள்ளே ஒளிந்திருக்கிறது.
//

நான் நினைச்சேன் இவுங்க சொல்லிட்டாங்க :))

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிகவும் அற்புதமாக இருக்கிறது காதல் திருத்தங்கள். நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்ன மேடம் மீள் பதிவா

இனியவள் புனிதா said...

//மழையில் ஊறிய
மரக்கதவாய்
கனக்கிறது நெஞ்சம்
காதல் கொண்ட
கண்ணீரில்...!!//

ஏற்கனவே படித்து இருந்தாலும் மீண்டும் மீண்டும் கவி மழையில் நனைய கசக்குமா என்ன? அசத்தல் செல்லம் :-)

இனியவள் புனிதா said...

//உனக்கான
என் கவிதைகள்
மீண்டும் எனதாக
வேண்டும்
காதல் செய்...//


இது அற்புதம் :-)

தாமிரா said...

Honey dews..

முரளிகண்ணன் said...

super super super

Muthusamy said...

Also see in

"எல்லாம் சுகமே...., என்னைத் தவிர..."

நீயென நான் is it கட்டியுரங்கும் or கட்டியுறங்கும் என் தலையணை...

Hereafter read it again once you are done with writing. So that you can yourself avoid these mistakes. The sad part is, I can see more than 50 comments for your poems and no one writes about the fault. There is a chance that, the wrong words might get into someone's usage. This shouldn't be encouraged knowing its wrong. As always, all I expect is, there is no fault in not doing things, but what we do should have no fault.

Thank You!

Muthusamy said...

Have you done any web(page) designing course? I like this template a lot!

ஜி said...

erkanave vaasichirunthaalum... kavithaiya thaniyaa vaasikkumpothu attakaasamaathaan irukku...

// உன்னால்
தூக்கம் கெட்ட
என்னிரவுகள்
உட்கார்ந்திருக்கின்றன
வாசலில்
காதலை சபித்தபடி
//

ithu innum pudichirukkuthu :))

Muthusamy said...

I think, I've read the rest of the posts and didn't find any spelling mistakes...Why don't you try to not to place too many க் ப் ச் in between words..I feel it takes away the taste. It's not a fault, may be it's your way of writing..but said what I felt.

Thank You!

நான் ஆதவன் said...

ம்ம்ம்ம் ஆணி அதிகமா?

ஏற்கனவே வந்த கவிதையா இருக்கே.

வெண்பூ said...

முதல் வரியும் கடைசி வரியும் கலக்கல்.. அப்ப மத்த வரியெல்லாம் சுமாரான்னு கேக்கக்கூடாது, ஆமான்னு பதில் சொல்லிடுவேன்.. :)))

நிஜமா நல்லவன் said...

ஏற்கனவே வந்த கவிதையா இருக்கே:)

நட்புடன் ஜமால் said...

காதலுக்கு திருத்தமா

காதலையே திருத்தனுமா

நட்புடன் ஜமால் said...

எனக்கு
உன்னை உணர்த்திக்கொண்டே
இருக்கும்
என் துப்பட்டாவின்
உன் வாசம்\\

அட - ரொம்ப வாசமா இருக்கே ...

ஸாவரியா said...

தொடர்கதைக் காட்டிலும் நான் ரொம்ப ரசித்தது இந்த கவிதைகளை தான்...அத்தனையும் அசத்தல் முக்கியாம எனக்கு பிடிச்சது...


//வார்த்தைகளால்
வடிவமைக்கப்படாத
காதல் ஒன்று
வெட்கம் பூசி
அலைந்தது

மழையில் ஊறிய
மரக்கதவாய்
கனக்கிறது நெஞ்சம்
காதல் கொண்ட
கண்ணீரில்...!!

உன்னால்
தூக்கம் கெட்ட
என்னிரவுகள்
உட்கார்ந்திருக்கின்றன
வாசலில்
காதலை சபித்தபடி //

SIMPLY SUPERB!!!
Thanks for compiling these poems as separate post.

"Its my world" said...

கற்பனை தொலைத்து
கவிதையா??
நீயில்லாமல்
காதலா??

உடுத்திப்போட்ட
உடையெனக்
களைந்துக்கிடக்கிறது
நம் காதல்
திருத்தித்தர
உடனே வா....!!


AMAZINGGGGG SRI!!!!!!

Poornima Saravana kumar said...

கவிதைகள் அனைத்தும் அழகு ஸ்ரீமா:)

Poornima Saravana kumar said...

//வார்த்தைகளால்
வடிவமைக்கப்படாத
காதல் ஒன்று
வெட்கம் பூசி
அலைந்தது
//

பலமுறை படித்துப் படித்து ரசித்தேன்!!

Muthusamy said...

Do you have any a/c in orkut? I did see a profile with your name and with the same photo!

Thank You!

TKB காந்தி said...

திரும்பவும் படிப்பதற்கு இன்னும் தித்திப்பாக இருந்தது :)

anbudan vaalu said...

//கண்கள் கோர்த்த
கண்ணீரை
கவிதையாக்கி
காகிதத்தில்
தூக்கிலிட்டேன்...//

இது நான் ரொம்ப ரசித்தது......

Saravana Kumar MSK said...

கதையோடு படித்ததை விட, இப்போது இன்னும் மிக அழகாக இருக்கிறது/இனிக்கிறது கவிதைகள்..

இதெல்லாம் காதலர் தின முன்னோட்ட கவிதைகளா..??

Saravana Kumar MSK said...

//வார்த்தைகளால்
வடிவமைக்கப்படாத
காதல் ஒன்று
வெட்கம் பூசி
அலைந்தது//

கொன்னுட்ட..
கவிதை.. அழகான கவிதை.. அழகழகான கவிதை.. :)

(காதல் திருத்தத்தில் எழுதிய அதே பின்னூட்டம்..:))

Saravana Kumar MSK said...

//பனிப்படர்ந்த
கண்ணாடிகளில் எல்லாம்
உன் பெயரால்
பூ செய்யும்
பைத்தியம் நான்//


//உன்னால்
தூக்கம் கெட்ட
என்னிரவுகள்
உட்கார்ந்திருக்கின்றன
வாசலில்
காதலை சபித்தபடி//

இந்த இரண்டும் மிக அழகானவை..

Saravana Kumar MSK said...

Me the 48 :)

Saravana Kumar MSK said...

Me the 48 :)

Saravana Kumar MSK said...

Yes.. Me the 50 ;)

viji said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

TKB காந்தி said...

//Muthusamy said...
கவிதைகள் சின்னதா இருக்கு ஆனால் ஆழம் அதிகம்
காதல் கண்டிப்பாகவும் இருக்க வேண்டும் உன்னுள்
இல்லையென்று சொல்லி என்னை சங்கடப்படுத்தி
சந்தேகப் படவைத்து விடாதே இந்த உணர்வுகளை
என்ன தான் கற்பனைகளாக இருந்தாலும் பெரிய
அளவில் சில நிஜங்களோடு ஒத்து போகிறதே
அதனால் தான் கேட்கிறேன்...//

மன்னிக்கனும் முத்துசாமி, ஒரு பொண்ணு காதலைப்பத்தி எழுதறதே பெரிய விஷயம்ங்கும்போது, நீங்க இவர் கிட்ட லவ் பண்ணறங்களான்னு கேட்கறது அவங்க பர்சனல் லைப்ல தலையிடுறமாதிரி இருக்கு, அதனால இதப்பத்தி கேட்காம இருப்பது நலம்.

ஸ்ரீ இப்படி உங்க கமெண்ட்-க்கு reply பண்ணதுக்கு மன்னிக்கவும். கொஞ்சம் weird-a இருந்தா delete பண்ணிடுங்க :)

Muthusamy said...

:-)

VISITED CHENNAI CENTRAL PRISON said...

Thanks for the counsel TKB!

ஜீவா said...

உங்க கவிதை விகடனில் வந்துள்ளது :)

http://youthful.vikatan.com/youth/bcorner.asp

VISITED CHENNAI CENTRAL PRISON said...

விகட கவியோ? ஸ்ரீமதி!
வாழ்த்துக்கள்!!

அபி அப்பா said...

அபிஅப்பாவின் மானியம் ஆயிரத்தி ஒரு பொற்க்காசுகள் அன்பு தங்காச்சிக்கு:-))

ஸ்ரீமதி said...

வந்திருந்து படித்து, வாழ்த்திய, கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.. :)))

நான் said...

நன்று வாழ்த்துகள் மதி

ஸ்ரீமதி said...

@ நான்
//நன்று வாழ்த்துகள் மதி//

நன்றி நான் :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது