அதனால......


விரைந்தோடிய வேர்கள் மண்ணைப்பிளந்து, வரம்புமீறி, வான் பார்க்க மண்ணில் பரவியிருந்தது. தன் வளர்ச்சிக்காக நீரை யாசிக்கும் இந்த வேர்களில் அமர்ந்துதான், எனக்கான உயிராக நினைத்திருந்த அவள் பார்வைகளின் வருடல்களை யாசித்திருந்தேன். விழுந்திருந்த விழுதுகளில் ஒன்றென அவள் என்னை எண்ணியிருக்கக்கூடுமென்பது, ஏனோ அவள் என்னை உதாசீனப்படுத்தும் வரை அறிந்திருக்கவில்லை.

காலங்கள் கரைந்து காத்திருப்புகளின் கணக்குகளில் என்னின் பகல் பொழுதுகளும், இராப்பொழுதுகளும் என்னைக் கேளாமல் ஏறி அமர்ந்து பயணிக்கத்தொடங்கின. நீலம் தோய்ந்த மேகங்களுக்கு மத்தியில் நிலவின் தேய்பிறை மட்டுமே எனக்குக் காணக்கிடைத்த வினாடிகளிலெல்லாம் அவள் மீதான எல்லையற்ற காதலின் உச்சி மேலேறி நிற்கும் இன்றைய வெறுப்புகள் மட்டுமே மிஞ்சும்.

ஒவ்வொருநாளும் ஏடுகளில் நிரம்பும் வார்த்தைக்கூடுகளில் உன்னையோ, என்னையோ அல்லது நம்மில் நீ அற்ற என் காதலையோ, தேடும் முயற்சி அதனோடு சதையின் எச்சமென ஒட்டியிருக்கும். காற்புள்ளிகளை எல்லாம் தாண்டி, முற்றுப்புள்ளியினருகே செல்ல பயந்து, மீண்டும் காற்புள்ளியோடு நிறுத்தி மூடிவைக்கிறேன் என் ஏடுகளையும், உன்னுடையதாகிவிட்ட என் எண்ணங்களையும்.

என்னைக் கிழித்த அத்தருணங்களில் எல்லாம் ஏதோ ஓர் கரிய இருளில் நிழல்களாகிய நிஜங்களோடு நடைப்போட்டு பின் ஒரு நீள் மூச்சோடு நுரையீரல் நிரப்பித் திரும்புவேன். காற்றும் என்னைச் சுமக்க மறுப்பெழுதி, புழுதி வாரியிறைத்துக் கொண்டிருந்தது. மாலைப்பொழுதுகளெல்லாம் மரத்தை முறிக்கும் கோடாளிகளென மனதில் வலியோடு இறங்கி...

"அய்யோ போதும்.... இங்க ஒருத்தியும் என்ன பார்க்கறதே இல்ல... அதனால.... லேடீஸ் காலேஜ் பக்கம் போகப்போறேன்".

-அன்புடன்,
ஸ்ரீமதி.

58 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

நாகை சிவா said...

எகொச இது?

:))))

கார்க்கி said...

//
என்னைக் கிழித்த அத்தருணங்களில் எல்லாம் ஏதோ ஓர் கரிய இருளில் நிழல்களாகிய நிஜங்களோடு நடைப்போட்டு பின் ஒரு நீள் மூச்சோடு நுரையீரல் நிரப்பித் திரும்புவே//

பின்நவீனத்துவம் வாழ்க..

அபுஅஃப்ஸர் said...

//"அய்யோ போதும்.... இங்க //

நீங்களே சொல்லிட்டீங்க அப்புற என்னாத்தை சொல்றது

அபுஅஃப்ஸர் said...

//நீரை யாசிக்கும் இந்த வேர்களில் அமர்ந்துதான், எனக்கான உயிராக நினைத்திருந்த அவள் பார்வைகளின் வருடல்களை யாசித்திருந்தேன். விழுந்திருந்த விழுதுகளில் ஒன்றென அவள் என்னை எண்ணியிருக்கக்கூடுமென்பது, ஏனோ அவள் என்னை உதாசீனப்படுத்தும் வரை அறிந்திருக்கவில்லை.//

தாங்கமுடியாத உதாசீணமோ,, வருத்தப்படும் விசயம்

அபுஅஃப்ஸர் said...

நல்ல (குழப்பும்) எழுத்துவரிகள்
வாழ்த்துக்கள்

Muthusamy said...

இராப்போழுதுகளும் check this, it should be இராப்பொழுதுகளும்.,

Thank you,

Muthusamy said...

குழப்பங்களை குத்தகைக்கு
எடுத்திருக்கிறாயோ நீ?

கவின் said...

:)

தமிழன்-கறுப்பி... said...

என்னாதிது இது...:)

தமிழன்-கறுப்பி... said...

வார்த்தைகள் வலுவாகிக்கொண்டிருக்கின்றன..

சென்ஷி said...

:-)))))

நடத்துங்க.. நடத்துங்க...

அன்புடன் அருணா said...

//அதனால.... லேடீஸ் காலேஜ் பக்கம் போகப்போறேன்"//

அடப் பாவி இவ்வ்ளோதானா?
அன்புடன் அருணா

கோபிநாத் said...

\\"அய்யோ போதும்.... இங்க ஒருத்தியும் என்ன பார்க்கறதே இல்ல... அதனால.... லேடீஸ் காலேஜ் பக்கம் போகப்போறேன்".\\

இப்படி எழுதிட்டு

\\அன்புடன்,
ஸ்ரீமதி.
\\

இப்படி சொன்ன இது நியமா!!!? ;))

TKB காந்தி said...

'என்னைக் கிழித்த அத்தருணங்களில் எல்லாம் ஏதோ ஓர் கரிய இருளில் நிழல்களாகிய நிஜங்களோடு நடைப்போட்டு பின் ஒரு நீள் மூச்சோடு நுரையீரல் நிரப்பித் திரும்புவேன்.'

ஸ்ரீ, எவ்ளோ அழகான வரிகள். நெறைய படிக்கறீங்கன்னு புரியுது. அப்புறம், புனைவுகள் உங்களின் பலம்ன்னு நெனைக்கறேன். நெறைய புனைவுகளும் எழுதுங்க.

தாரணி பிரியா said...

பின்நவீனத்துவவாதி ஸ்ரீ வாழ்க வாழ்க :)

பின்னறே ஸ்ரீ

"விழுந்திருந்த விழுதுகளில் ஒன்றென அவள் என்னை எண்ணியிருக்கக்கூடுமென்பது, ஏனோ அவள் என்னை உதாசீனப்படுத்தும் வரை அறிந்திருக்கவில்லை."

சூப்பர் :)

"காலங்கள் கரைந்து காத்திருப்புகளின் கணக்குகளில் என்னின் பகல் பொழுதுகளும், இராப்பொழுதுகளும் என்னைக் கேளாமல் ஏறி அமர்ந்து பயணிக்கத்தொடங்கி"

இது அதை விட சூப்பர் :)

இப்படி அருமையான எழுதினா எப்படி நாங்க கும்மியடிக்கிறது :)

புதியவன் said...

//என்னைக் கிழித்த அத்தருணங்களில் எல்லாம் ஏதோ ஓர் கரிய இருளில் நிழல்களாகிய நிஜங்களோடு நடைப்போட்டு பின் ஒரு நீள் மூச்சோடு நுரையீரல் நிரப்பித் திரும்புவேன்.'//

வரிகள் அழகு...

புதியவன் said...

//அய்யோ போதும்.... இங்க ஒருத்தியும் என்ன பார்க்கறதே இல்ல... அதனால.... லேடீஸ் காலேஜ் பக்கம் போகப்போறேன்//

இது தான் ஸ்ரீமதியின் குறும்பு...

ஸ்ரீமதி said...

@ நாகை சிவா
//எகொச இது?

:))))//

என்ன கொடுமை சரவணா இது? தானே நீங்க சொல்ல வந்தது?? :)))

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
////
என்னைக் கிழித்த அத்தருணங்களில் எல்லாம் ஏதோ ஓர் கரிய இருளில் நிழல்களாகிய நிஜங்களோடு நடைப்போட்டு பின் ஒரு நீள் மூச்சோடு நுரையீரல் நிரப்பித் திரும்புவே//

பின்நவீனத்துவம் வாழ்க..//

ஹா ஹா ஹா :))

ஸ்ரீமதி said...

@ அபுஅஃப்ஸர்
////"அய்யோ போதும்.... இங்க //

நீங்களே சொல்லிட்டீங்க அப்புற என்னாத்தை சொல்றது//

அச்சச்சோ அவ்ளோ கொடுமையா இருந்ததா?? :))

ஸ்ரீமதி said...

@ அபுஅஃப்ஸர்
////நீரை யாசிக்கும் இந்த வேர்களில் அமர்ந்துதான், எனக்கான உயிராக நினைத்திருந்த அவள் பார்வைகளின் வருடல்களை யாசித்திருந்தேன். விழுந்திருந்த விழுதுகளில் ஒன்றென அவள் என்னை எண்ணியிருக்கக்கூடுமென்பது, ஏனோ அவள் என்னை உதாசீனப்படுத்தும் வரை அறிந்திருக்கவில்லை.//

தாங்கமுடியாத உதாசீணமோ,, வருத்தப்படும் விசயம்//

ம்ம்ம்ம் ஆமா :))

ஸ்ரீமதி said...

@ அபுஅஃப்ஸர்
//நல்ல (குழப்பும்) எழுத்துவரிகள்
வாழ்த்துக்கள்//

(குழப்பும்?!) நன்றி அபுஅஃப்ஸர் :))))

ஸ்ரீமதி said...

@ Muthusamy
//இராப்போழுதுகளும் check this, it should be இராப்பொழுதுகளும்.,

Thank you,//

மாத்திட்டேன்.. :)) நன்றி.. :))

ஸ்ரீமதி said...

@ Muthusamy
//குழப்பங்களை குத்தகைக்கு
எடுத்திருக்கிறாயோ நீ?//

இல்லீங்க.. :(( அவ்ளோ குழப்பமாவா இருக்கு??:))

ஸ்ரீமதி said...

@ கவின்
//:)//

:)))))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//என்னாதிது இது...:)//

ஹா ஹா ஹா புனைவு, அண்ணா.. :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//வார்த்தைகள் வலுவாகிக்கொண்டிருக்கின்றன..//

ஹை நன்றிஸ்.. :)))))))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//:-)))))

நடத்துங்க.. நடத்துங்க...//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ அன்புடன் அருணா
////அதனால.... லேடீஸ் காலேஜ் பக்கம் போகப்போறேன்"//

அடப் பாவி இவ்வ்ளோதானா?
அன்புடன் அருணா//

ஆமா அவ்ளோ தான் அக்கா ;))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//\\"அய்யோ போதும்.... இங்க ஒருத்தியும் என்ன பார்க்கறதே இல்ல... அதனால.... லேடீஸ் காலேஜ் பக்கம் போகப்போறேன்".\\

இப்படி எழுதிட்டு

\\அன்புடன்,
ஸ்ரீமதி.
\\

இப்படி சொன்ன இது நியமா!!!? ;))//

நான் படிச்சு முடிச்சுட்டேங்ணா.. இனி நான் போயும் ஒன்னும் பிரயோஜனமில்ல.. :))))

ஸ்ரீமதி said...

@ TKB காந்தி
//'என்னைக் கிழித்த அத்தருணங்களில் எல்லாம் ஏதோ ஓர் கரிய இருளில் நிழல்களாகிய நிஜங்களோடு நடைப்போட்டு பின் ஒரு நீள் மூச்சோடு நுரையீரல் நிரப்பித் திரும்புவேன்.'

ஸ்ரீ, எவ்ளோ அழகான வரிகள். நெறைய படிக்கறீங்கன்னு புரியுது. அப்புறம், புனைவுகள் உங்களின் பலம்ன்னு நெனைக்கறேன். நெறைய புனைவுகளும் எழுதுங்க.//

ம்ம்ம்ம் கண்டிப்பா எழுதறேன் காந்தி. நன்றி :))

ஸ்ரீமதி said...

@ தாரணி பிரியா
//பின்நவீனத்துவவாதி ஸ்ரீ வாழ்க வாழ்க :)//

யாருக்கா அது பின்நவீனத்துவவாதி ஸ்ரீ?? :))

//பின்னறே ஸ்ரீ//

நன்றி அக்கா :))

//"விழுந்திருந்த விழுதுகளில் ஒன்றென அவள் என்னை எண்ணியிருக்கக்கூடுமென்பது, ஏனோ அவள் என்னை உதாசீனப்படுத்தும் வரை அறிந்திருக்கவில்லை."

சூப்பர் :)

"காலங்கள் கரைந்து காத்திருப்புகளின் கணக்குகளில் என்னின் பகல் பொழுதுகளும், இராப்பொழுதுகளும் என்னைக் கேளாமல் ஏறி அமர்ந்து பயணிக்கத்தொடங்கி"

இது அதை விட சூப்பர் :)

இப்படி அருமையான எழுதினா எப்படி நாங்க கும்மியடிக்கிறது :)//

கும்மிக்கு தானே?? சரி வேற பதிவு போடறேன்... அப்போ வந்து அடிங்க.. ஓகே?? :))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////என்னைக் கிழித்த அத்தருணங்களில் எல்லாம் ஏதோ ஓர் கரிய இருளில் நிழல்களாகிய நிஜங்களோடு நடைப்போட்டு பின் ஒரு நீள் மூச்சோடு நுரையீரல் நிரப்பித் திரும்புவேன்.'//

வரிகள் அழகு...//

நன்றி புதியவன் :))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////அய்யோ போதும்.... இங்க ஒருத்தியும் என்ன பார்க்கறதே இல்ல... அதனால.... லேடீஸ் காலேஜ் பக்கம் போகப்போறேன்//

இது தான் ஸ்ரீமதியின் குறும்பு...//

ஹா ஹா ஹா.. :)) நன்றி புதியவன்.. :)))

narsim said...

ஆரம்ப வரிகள் அசத்தல்.. அடுத்த வரிகள்??? அதைவிட அசத்தல்..

நாகை சிவா said...

//
என்ன கொடுமை சரவணா இது? தானே நீங்க சொல்ல வந்தது?? :)))//

கககபோ :)

அதே!

ஸ்ரீமதி said...

@ narsim
//ஆரம்ப வரிகள் அசத்தல்.. அடுத்த வரிகள்??? அதைவிட அசத்தல்..//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ நாகை சிவா
////
என்ன கொடுமை சரவணா இது? தானே நீங்க சொல்ல வந்தது?? :)))//

கககபோ :)

அதே!//

ஹா ஹா ஹா நன்றி :))

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்ன ஆச்சு

ஏதோ கதையும், கவிதையுமா நல்லாதானே ஓடிட்டு இருந்த கனவு

திடீர்னு லேடிஸ் காலேஜ் பக்கமா ட்ராக் மாறிப்போச்சு.

ஆனாலும் முதல் பத்தி அசத்தல்.

Muthusamy said...

என்ன சொல்கிறோம் என்பதை விடவும்...சொன்னதெதுவும் பார்த்தவர்களுக்கு சேர்ந்திருக்கிறதா என்பதே முக்கியம்...[மூன்றாம் நிலை மனிதன் எப்படி பார்ப்பன் என்று பார்த்து எழுதுங்கள் எல்லோருக்கும் புரியும்]...கருத்தை விட்டுவிட்டு குழப்பத்தினால் என்ன பயன்?

நன்றி

வெ.இராதாகிருஷ்ணன் said...

ஹா ஹா ஹா! பல கனவுகள் அர்த்தமில்லாமலே முடிந்துவிடுகின்றன. காதலில் இருந்தே காதலைத் தொலைத்துவிட்டு பின்னர் காதல் தேடும் அழகே தனிதான் இந்த கனவுக்கு. நன்றி.

ஸ்ரீமதி said...

@ அமிர்தவர்ஷினி அம்மா
//என்ன ஆச்சு

ஏதோ கதையும், கவிதையுமா நல்லாதானே ஓடிட்டு இருந்த கனவு

திடீர்னு லேடிஸ் காலேஜ் பக்கமா ட்ராக் மாறிப்போச்சு.

ஆனாலும் முதல் பத்தி அசத்தல்.//

நன்றி அக்கா :))

ஸ்ரீமதி said...

@ Muthusamy
//என்ன சொல்கிறோம் என்பதை விடவும்...சொன்னதெதுவும் பார்த்தவர்களுக்கு சேர்ந்திருக்கிறதா என்பதே முக்கியம்...[மூன்றாம் நிலை மனிதன் எப்படி பார்ப்பன் என்று பார்த்து எழுதுங்கள் எல்லோருக்கும் புரியும்]...கருத்தை விட்டுவிட்டு குழப்பத்தினால் என்ன பயன்?

நன்றி//

படிக்கறவங்களுக்கு புரியாத மாதிரி எழுதனும்கறது என் நோக்கமில்ல.. நான் எழுதின ஒன்னு எல்லாருக்கும் புரியாம போச்சு.. இனிமே அப்படி ஆகாம பார்த்துக்கிறேன்.. நன்றி..

ஸ்ரீமதி said...

@ வெ.இராதாகிருஷ்ணன்
//ஹா ஹா ஹா! பல கனவுகள் அர்த்தமில்லாமலே முடிந்துவிடுகின்றன. காதலில் இருந்தே காதலைத் தொலைத்துவிட்டு பின்னர் காதல் தேடும் அழகே தனிதான் இந்த கனவுக்கு. நன்றி.//

மிக்க நன்றி இராதாகிருஷ்ணன் அழகான புரிதலுக்கு.. :)))

Muthusamy said...

படிக்கறவங்களுக்கு புரியாத மாதிரி எழுதனும்கறது என் நோக்கமில்ல.. நான் எழுதின ஒன்னு எல்லாருக்கும் புரியாம போச்சு... ---- இது

வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில்நீ சுமந்ததில்ல
வயித்தில்நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு! -இப்படியிருக்கு

புரிந்தால் நலமே...ஆதிகால மருத்துவ ஏடாய் போகக் கூடாதல்லவா?

கருத்தை ஏற்றதற்கு
நன்றிகள் ஏராளம்

ஸ்ரீமதி said...

@ Muthusamy
//படிக்கறவங்களுக்கு புரியாத மாதிரி எழுதனும்கறது என் நோக்கமில்ல.. நான் எழுதின ஒன்னு எல்லாருக்கும் புரியாம போச்சு... ---- இது

வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில்நீ சுமந்ததில்ல
வயித்தில்நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு! -இப்படியிருக்கு

புரிந்தால் நலமே...ஆதிகால மருத்துவ ஏடாய் போகக் கூடாதல்லவா?

கருத்தை ஏற்றதற்கு
நன்றிகள் ஏராளம்//

நன்றி முத்துசாமி :))

Karthik said...

ஸாரி லேட்.

போஸ்ட் மாடர்னிஸமா??

ஸ்ரீமதி said...

@ Karthik
//ஸாரி லேட்.

போஸ்ட் மாடர்னிஸமா??//

அச்சச்சோ இது பின் நவீனத்துவம் இல்ல.. புனைவு தான்.. :)) (இததான் போஸ்ட் மாடர்னிஸம்ன்னு சொன்னியா?? ;)))

gayathri said...

2&3 times padicha than puriyuthu pa

gayathri said...

me they 50

அனுஜன்யா said...

ஷப்பா, முடியல. கடைசி இரண்டு வரிகள் புரிந்தது. இந்த மாதிரி வார்த்தைகளைப் பிரயோகிக்க முடியுமா! எங்கேயோ போய்க்கொண்டு இருக்கிறாய் ஸ்ரீ. வாழ்த்துகள்.

அனுஜன்யா

Muthusamy said...

Also see in "ஊடல்களும் காதலே"

திடீரென தூக்கம்
தொலைத்த இரவுகளனைத்தும்
உன்னையே தேட
முடிவு செய்துவிட்டேன்
இனி
தூக்கத்தைத் is it 'துரப்பதென' or 'துறப்பதென'

நன்றி

ஸ்ரீமதி said...

@ gayathri
//2&3 times padicha than puriyuthu pa//

புரிஞ்சிடிச்சா?? ;)) நன்றி.. :))

ஸ்ரீமதி said...

@ gayathri
//me they 50//

:))

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//ஷப்பா, முடியல. கடைசி இரண்டு வரிகள் புரிந்தது. இந்த மாதிரி வார்த்தைகளைப் பிரயோகிக்க முடியுமா! எங்கேயோ போய்க்கொண்டு இருக்கிறாய் ஸ்ரீ. வாழ்த்துகள்.

அனுஜன்யா//

உங்களுக்கும் புரியலியா அண்ணா?? :((

ஸ்ரீமதி said...

@ Muthusamy
//Also see in "ஊடல்களும் காதலே"

திடீரென தூக்கம்
தொலைத்த இரவுகளனைத்தும்
உன்னையே தேட
முடிவு செய்துவிட்டேன்
இனி
தூக்கத்தைத் is it 'துரப்பதென' or 'துறப்பதென'

நன்றி//

மாற்றிவிட்டேன்.. நன்றி.. :))

Muthusamy said...

நன்றிகள் பல :-)

ஸ்ரீமதி said...

@ Muthusamy
//நன்றிகள் பல :-)//

:)))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது