ம்ம்மாகண்விழிக்குமுன்னே
காதுகளில் ஸ்பரிசிக்கும்
நேற்றிரவு உரையாடலின் எச்சம்,
கலைந்துவிடாமல் குளித்து
கவனமாய் சேர்த்துவைக்கும்
கன்னத்து முத்தம்,
கண்ணுக்கு மை
இன்னும் தீட்டியிருக்கலாமோ?
எனத்தோன்றிய எண்ணம்,
காற்றுக்கு கொஞ்சம்
இடைவெளி தந்து
கணுக்கால்களை வருடும்
முதல் புடவை...,
நெரிசலில் நசுங்கிவிடாமல்
பாதுகாத்த
அவசர காலை தொடர்வண்டியின்
கூந்தற்பூ பயணம்...
என எல்லாவற்றையும்
புறந்தள்ளியது
பின்னிருக்கைக்குழந்தை
தலைவருடி சொன்ன
'ம்ம்மா' என்னும் வார்த்தை....

  • இன்று பிறந்தநாள் கொண்டாடும் இனியவள் புனிதா அக்காவிற்காக இந்த கவிதை. அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :-))

பி.கு.1: அவங்க பிறந்த நாளுக்கும் இந்த கவிதைக்கும் என்ன சம்பந்தம்ன்னு யாராவது கேட்டா, கேட்டவங்க பிறந்தநாளுக்கு இதவிட கொடுமையான கவிதை ஒன்னு எழுதித்தரப்படும்... ;-))

பி.கு.2:இங்க வந்து வெறும 'பிறந்தநாள் வாழ்த்துகள்'ன்னு மட்டும் பின்னூட்டம் போட்டாலும், மேலே சொன்ன அதே தண்டனைதான்.. முக்கியமா 'கோபிநாத்' அவர்களுக்கு.... ;-))-அன்புடன்,
ஸ்ரீமதி.

104 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

நிஜமா நல்லவன் said...

பிரசண்ட் போட்டுக்கிறேன்...:)

நிஜமா நல்லவன் said...

அட நான் தான் பர்ஸ்ட்டா???

நிஜமா நல்லவன் said...

சரி பதிவை படிச்சிட்டு வர்ரேன்..:)

நிஜமா நல்லவன் said...

சூப்பர்!

நிஜமா நல்லவன் said...

கலக்கல்!

நிஜமா நல்லவன் said...

அருமை!

நிஜமா நல்லவன் said...

இனியவள் புனிதா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

நிஜமா நல்லவன் said...

/

பி.கு.1: அவங்க பிறந்த நாளுக்கும் இந்த கவிதைக்கும் என்ன சம்பந்தம்ன்னு யாராவது கேட்டா, அவங்க பிறந்தநாளுக்கு இதவிட கொடுமையான கவிதை ஒன்னு எழுதித்தரப்படும்... ;-)

/

என்ன சம்பந்தம் இல்லைன்னு நான் கேக்குறேன்.....:)

நிஜமா நல்லவன் said...

கும்மி பின்னூட்டங்கள் நூறு தாண்ட வாழ்த்துக்கள்!

நிஜமா நல்லவன் said...

இங்க ஏன் இன்னும் யாருமே வரலை?

நிஜமா நல்லவன் said...

இவ்ளோ அதிகாலைல போஸ்ட் போட்டா யாரு தான் வருவாங்க..:)

நிஜமா நல்லவன் said...

எல்லோரும் என்னைய மாதிரி விடியற்காலைல 10 மணிக்கு எழுந்திருப்பாங்களா என்ன?

நிஜமா நல்லவன் said...

எனக்கு ரொம்ப பசிக்குது....பிறந்தநாள் கேக் எதுவும் கிடைக்குமா?

நிஜமா நல்லவன் said...

ஸ்ரீ மதி நீ இனிமே இந்த கவிதை மாதிரி நல்லா புரியுற மாதிரி எழுதணும்....சரியா?

நிஜமா நல்லவன் said...

/கலைந்துவிடாமல் குளித்து
கவனமாய் சேர்த்துவைக்கும்/

ஆமா...இந்த வரிக்கு அர்த்தம் தூக்கம் களைந்து விடாமல் குளிக்கிறது தானே....?

நிஜமா நல்லவன் said...

/கண்ணுக்கு மை
இன்னும் தீட்டியிருக்கலாமோ?/

எப்படி.... சந்திரமுகி ஜோதிகா மாதிரியா? ஏன் இப்படி பயமுறுத்துற?

நிஜமா நல்லவன் said...

திரும்பவும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லிட்டு விடை பெறுகிறேன்...மறக்காம எனக்கு கேக் அனுப்பி வச்சிடுங்க புனிதா அக்கா..:)

கோபிநாத் said...

நான் டைப் அடிச்சி சொல்ல நினைச்சேன் ஆனா பாருங்க நீங்களே ரெடியாக அடிச்சி வச்சியிருக்கிங்க ரொம்ப நன்னி ;))

பிறந்தநாள் வாழ்த்துகள் புனிதா ;)

கோபிநாத் said...

\மேலே சொன்ன அதே தண்டனைதான்\\

உண்மையில் இந்த கவிதை நன்றாக இயல்பாக இருக்கு..அதனால தண்டனை மீண்டும் கிடைச்சாலும் நல்லது தான் ;))

கோபிநாத் said...

20 - ஒரு ரவுண்டுக்கு..;)

நட்புடன் ஜமால் said...

நான் தான் 1

அட இருபத்தி 1ங்க

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

கவனமாய் சேர்த்துவைக்கும்
கன்னத்து முத்தம்\\

அருமை

நட்புடன் ஜமால் said...

ம்ம்மா - வாய் திறந்து பேசும் எல்லா உயிரணங்களின் முதல் வார்த்தை.

thevanmayam said...

/கலைந்துவிடாமல் குளித்து
கவனமாய் சேர்த்துவைக்கும்/

ஆஹா!!!
என்ன கவிதை!!!
உண்மை தாங்க!!

தேவா..

நட்புடன் ஜமால் said...

பி.கு 1:

நான் கேட்கலையே ...

thevanmayam said...

அதுதானே!!
சைக்கிள்
கேப்பில்
ஜமால்
முந்தீட்டார்.

thevanmayam said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

thevanmayam said...

அவசர காலை தொடர்வண்டியின்
கூந்தற்பூ பயணம்...//

சூப்பருங்கோ!!!

thevanmayam said...

தொடருங்க!!
நான் கிளம்பிட்டேன்...

தேவா....

நட்புடன் ஜமால் said...

பி.கு. 2:

நான் அவர் இல்லை.

thevanmayam said...

ஜமால்
என் புதிய
கவிதைக்கு
கருத்து
தெரிவித்ததை
இப்போதான்
பார்த்தேன்
நன்றி..

logu.. said...

\\பிறந்தநாள் வாழ்த்துகள் புனிதா \\

Kavithaium nallarukkkkkkkungov..

Muthusamy said...

இந்த கவிதையை பிறந்த நாள் கவிதையாக யாரேனும் எனக்கு புரிய வைத்தால் நன்றிகள் கோடி...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

கரையோர கனவுகள் எல்லாமே நன்றாக உள்ளன.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அ.மு.செய்யது said...

// முதல் புடவை...,
நெரிசலில் நசுங்கிவிடாமல்
பாதுகாத்த
அவசர காலை தொடர்வண்டியின்
கூந்தற்பூ பயணம்... //

அழ‌கான‌ வ‌ர்ண‌னைக‌ள்...

அ.மு.செய்யது said...

இனிய‌வ‌ள் புனிதா அவ‌ர்க‌ளுக்கு எங்க‌ள் சார்பிலும் பிற‌ந்த‌ நாள் ந‌ல்வாழ்த்துக‌ள்.

Maddy said...

இங்க வந்து வெறும 'பிறந்தநாள் வாழ்த்துகள்'ன்னு மட்டும் பின்னூட்டம் போட்டாலும், மேலே சொன்ன அதே தண்டனைதான்.. ...........
எதுக்கு வம்பு!!!! வெறுமனே பிறந்த நாள் வாழ்த்து சொல்லிட்டு தண்டனையே அனுபவிக்கனும்... ஏதோ என்னால முடிஞ்ச தண்டனை கவிதைங்கற பேருல இங்கே


வரட்டும் ஒரு நற்செய்தி
வரும் இந்த புது ஆண்டில்!!
மகிழ்ச்சியான செய்தியாக
மனதில் வந்து விழட்டும்
அம்மாவின் அரவணைப்பும்
அப்பாவின் அன்பும்
ஆண்டு பல தொடரட்டும்
அண்ணன் தம்பி அக்கா தங்கை என
அனைவரின் பாசமழை பொழியட்டும்
பாரினில் உள்ளோர் பாராட்டடும்
புகழ் வரட்டும்
புன்னகை என்றென்றும்
உன் முகம் பூசிக்கொள்ளட்டும்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
புனிதா பெண்ணுக்கு

Maddy said...

அய்யோ!! ஸ்ரீ யோட கவிதை பத்தி சொல்லலைனா அதுக்கு என்ன தண்டனையோ??

அருமை!!!

கலைந்துவிடாமல் குளித்து
கவனமாய் சேர்த்துவைக்கும்
கன்னத்து முத்தம்,..............

கன்னத்துல உண்டியல் ஏதாவது இருக்குமோ??

நான் said...

புனிதா இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

நான் said...

ஸ்ரீமதி கவிதை நன்று வாழ்த்துகள்
புனிதாவின் மின்னஞ்சல் முகவரியை கீழ் காணும் என் முகவரிக்கு தெரிவிக்கவும் theanthuli@gmail.com

சிம்பா said...

:))

Divyapriya said...

ஸ்ரீமதி! கலக்குற, நல்லா இருக்கு கவிதை...புனிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

அபுஅஃப்ஸர் said...

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

சின்ன அம்மிணி said...

கவிதை அருமை , டெம்ப்ளேட் அதைவிட அருமை.,

நாகை சிவா said...

//இங்க வந்து வெறும 'பிறந்தநாள் வாழ்த்துகள்'ன்னு மட்டும் பின்னூட்டம் போட்டாலும்//

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

சென்ஷி said...

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனியவள் புனிதா..

இனியவள் புனிதா said...

இனிய கவிதையாய் பதிவு...நன்றி மதி :-) வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பர்களுக்கும் இவ்வேளையில் மிக்க நன்றி :-)

சென்ஷி said...

49

சென்ஷி said...

ஹைய்யா மீ த 50 ;-))

தாரணி பிரியா said...

மீ த 51 மொய் கணக்கு எழுதி இருக்கறதால பெரிய பீஸ் கேக் எனக்குதானே

புதியவன் said...

//எல்லாவற்றையும்
புறந்தள்ளியது
பின்னிருக்கைக்குழந்தை
தலைவருடி சொன்ன
'ம்ம்மா' என்னும் வார்த்தை....//

கவிதை அழகு...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

Karthik said...

//எல்லாவற்றையும்
புறந்தள்ளியது
பின்னிருக்கைக்குழந்தை
தலைவருடி சொன்ன
'ம்ம்மா' என்னும் வார்த்தை....

சூப்பர்ப்பா இருக்குங்க. :)

இனியவள் புனிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Sundar said...

அருமை!

Saravana Kumar MSK said...

இந்த குழந்தையின் படமே ஒரு அழகான கவிதை..
அக்குழந்தையை இன்னும் மிக அழகாக காட்டி இருக்கிறது உன் கவிதை..

படத்திற்கான கவிதையா அல்லது கவிதைக்கான படமா.. வியக்கிறேன்..
ரெண்டுமே செம அழகு.

Saravana Kumar MSK said...

புனிதாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Saravana Kumar MSK said...

பின்குறிப்புகள் அட்டகாசம்..

PoornimaSaran said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புனிதா:)

PoornimaSaran said...

கவிதை அழகோ அழகு குழந்தை படம் போலவே !!

PoornimaSaran said...

60

ஆயில்யன் said...

இனியவள் புனிதாக்காவுக்கு வாழ்த்துக்கள் :)))

ஆயில்யன் said...

போட்டோ ஸூப்பரூ :)

ஆயில்யன் said...

பாஸ் நி.நல்லவன் பின்னூட்டங்கள பாக்கறச்ச அவுங்க வீட்ல “மொத்து மொத்துன்னு மொத்திக்கிட்டிருக்கற சவுண்ட் எபெக்ட் கேக்குது பாஸ்! :))

பாவம் நிஜம்ஸ் :(

ஆயில்யன் said...

//நிஜமா நல்லவன் said...
ஸ்ரீ மதி நீ இனிமே இந்த கவிதை மாதிரி நல்லா புரியுற மாதிரி எழுதணும்....சரியா?
//

என்ன கொடுமை சார் இது :)))

இனியவள் புனிதா said...

//ஆயில்யன் said...
இனியவள் புனிதாக்காவுக்கு வாழ்த்துக்கள் :)))//

என்னது அக்காவா? செம்ம டெரரா இருக்குண்ணே :-((

இனியவள் புனிதா said...

//தாரணி பிரியா said...
மீ த 51 மொய் கணக்கு எழுதி இருக்கறதால பெரிய பீஸ் கேக் எனக்குதானே//

அனுப்பி வச்சிட்டா போகுது.. என் சார்பா ஸ்ரீ அனுப்பி வைப்பா :-)

இனியவள் புனிதா said...

//புதியவன் said...
//எல்லாவற்றையும்
புறந்தள்ளியது
பின்னிருக்கைக்குழந்தை
தலைவருடி சொன்ன
'ம்ம்மா' என்னும் வார்த்தை....//

கவிதை அழகு...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...//

நன்றிங்க புதியவன் :-))

இனியவள் புனிதா said...

//Karthik said...
//எல்லாவற்றையும்
புறந்தள்ளியது
பின்னிருக்கைக்குழந்தை
தலைவருடி சொன்ன
'ம்ம்மா' என்னும் வார்த்தை....

சூப்பர்ப்பா இருக்குங்க. :)

இனியவள் புனிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி கார்த்திக் :-))

இனியவள் புனிதா said...

// Saravana Kumar MSK said...
இந்த குழந்தையின் படமே ஒரு அழகான கவிதை..
அக்குழந்தையை இன்னும் மிக அழகாக காட்டி இருக்கிறது உன் கவிதை..

படத்திற்கான கவிதையா அல்லது கவிதைக்கான படமா.. வியக்கிறேன்..
ரெண்டுமே செம அழகு.//

ரிப்பிட்டேய் :-))

இனியவள் புனிதா said...

// Saravana Kumar MSK said...
புனிதாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.//

நன்றி சரவணா :-)

இனியவள் புனிதா said...

//PoornimaSaran said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புனிதா:)//

நன்றி பூர்ணி :-)

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்

//பிரசண்ட் போட்டுக்கிறேன்...:)//

நோட் பண்ணிக்கிட்டேன் :))

//அட நான் தான் பர்ஸ்ட்டா???//

ம்ம்ம் ஆமா அண்ணா :))

//சரி பதிவை படிச்சிட்டு வர்ரேன்..:)//

ம்ம்ம்ம் :))

//சூப்பர்!

கலக்கல்!

அருமை!//

இதெல்லாம் என்ன?? உங்க பின்னூட்டங்களுக்கு நீங்களே சொல்லிகிட்ட பாராட்டா??

//இனியவள் புனிதா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!//

அக்கா சார்பில் நன்றி :)))

///

பி.கு.1: அவங்க பிறந்த நாளுக்கும் இந்த கவிதைக்கும் என்ன சம்பந்தம்ன்னு யாராவது கேட்டா, அவங்க பிறந்தநாளுக்கு இதவிட கொடுமையான கவிதை ஒன்னு எழுதித்தரப்படும்... ;-)

/

என்ன சம்பந்தம் இல்லைன்னு நான் கேக்குறேன்.....:)//

அதே தான் நானும் கேட்கறேன் :))

//கும்மி பின்னூட்டங்கள் நூறு தாண்ட வாழ்த்துக்கள்!//

ஹை நன்றி ;))

//இங்க ஏன் இன்னும் யாருமே வரலை?//

பதிவு போட்ட நேரம் அப்படி :))

//இவ்ளோ அதிகாலைல போஸ்ட் போட்டா யாரு தான் வருவாங்க..:)//

ஹை ஆராய்ச்சி முடிவ தெரிஞ்சி வெச்சிருக்கீங்களே ;)))

//எல்லோரும் என்னைய மாதிரி விடியற்காலைல 10 மணிக்கு எழுந்திருப்பாங்களா என்ன?//

அதானே??

//எனக்கு ரொம்ப பசிக்குது....பிறந்தநாள் கேக் எதுவும் கிடைக்குமா?//

அய்யய்யோ அவ்ளோ கேக்குக்கு அக்கா எங்க போவாங்க?? :((

//ஸ்ரீ மதி நீ இனிமே இந்த கவிதை மாதிரி நல்லா புரியுற மாதிரி எழுதணும்....சரியா?//

ஹை அப்ப இது உங்களுக்கு புரிஞ்சிடிச்சா?? ;))

///கலைந்துவிடாமல் குளித்து
கவனமாய் சேர்த்துவைக்கும்/

ஆமா...இந்த வரிக்கு அர்த்தம் தூக்கம் களைந்து விடாமல் குளிக்கிறது தானே....?//

கரெக்ட் அண்ணா.. க.க.க.போ.. ;))

///கண்ணுக்கு மை
இன்னும் தீட்டியிருக்கலாமோ?/

எப்படி.... சந்திரமுகி ஜோதிகா மாதிரியா? ஏன் இப்படி பயமுறுத்துற?//

அட இப்படி ஒன்னு இருக்கா?? இத நான் யோசிக்கவே இல்லையே.. :((

//திரும்பவும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லிட்டு விடை பெறுகிறேன்...மறக்காம எனக்கு கேக் அனுப்பி வச்சிடுங்க புனிதா அக்கா..:)//

நன்றி அண்ணா :)) (அப்பா புயல் அடிச்சு ஓஞ்ச மாதிரி இருக்கு.. ;))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//நான் டைப் அடிச்சி சொல்ல நினைச்சேன் ஆனா பாருங்க நீங்களே ரெடியாக அடிச்சி வச்சியிருக்கிங்க ரொம்ப நன்னி ;))

பிறந்தநாள் வாழ்த்துகள் புனிதா ;)//

நன்றி அக்கா சார்பில் :))

//\மேலே சொன்ன அதே தண்டனைதான்\\

உண்மையில் இந்த கவிதை நன்றாக இயல்பாக இருக்கு..அதனால தண்டனை மீண்டும் கிடைச்சாலும் நல்லது தான் ;))//

பின்னூட்டம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா ஸ்மைலி சரி இல்லையே.. சும்மானாச்சிக்கும் சொன்ன மாதிரியே ஒரு பீலிங்... ;)))

//20 - ஒரு ரவுண்டுக்கு..;)//

அப்ப ரெண்டு ரவுண்டுக்கு??

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//நான் தான் 1

அட இருபத்தி 1ங்க//
//வாழ்த்துக்கள்//
//கவனமாய் சேர்த்துவைக்கும்
கன்னத்து முத்தம்\\
அருமை//
//ம்ம்மா - வாய் திறந்து பேசும் எல்லா உயிரணங்களின் முதல் வார்த்தை.//
//பி.கு 1:

நான் கேட்கலையே ...//
//பி.கு. 2:

நான் அவர் இல்லை.//

நன்றி அண்ணா வருகைக்கும் வாழ்த்திற்கும் :)))

ஸ்ரீமதி said...

@ thevanmayam
///கலைந்துவிடாமல் குளித்து
கவனமாய் சேர்த்துவைக்கும்/

ஆஹா!!!
என்ன கவிதை!!!
உண்மை தாங்க!!

தேவா..

அதுதானே!!
சைக்கிள்
கேப்பில்
ஜமால்
முந்தீட்டார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

அவசர காலை தொடர்வண்டியின்
கூந்தற்பூ பயணம்...//

சூப்பருங்கோ!!!

தொடருங்க!!
நான் கிளம்பிட்டேன்...

தேவா....//

நன்றி தேவா வருகைக்கும் அழகான வாழ்த்துக்கும் :))

ஸ்ரீமதி said...

@ logu..
//\\பிறந்தநாள் வாழ்த்துகள் புனிதா \\

Kavithaium nallarukkkkkkkungov..//

நன்றி லோகநாதன் :)))

ஸ்ரீமதி said...

@ Muthusamy
//இந்த கவிதையை பிறந்த நாள் கவிதையாக யாரேனும் எனக்கு புரிய வைத்தால் நன்றிகள் கோடி...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்//

உங்களுக்கு ஒரு கொலைவெறி கவுஜ பார்செல்... ;))வாழ்த்துகளுக்கு நன்றி.. :))

ஸ்ரீமதி said...

@ கார்த்திகைப் பாண்டியன்
//கரையோர கனவுகள் எல்லாமே நன்றாக உள்ளன.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்//

நன்றி கார்த்திகைப் பாண்டியன் :))

ஸ்ரீமதி said...

@ அ.மு.செய்யது
//// முதல் புடவை...,
நெரிசலில் நசுங்கிவிடாமல்
பாதுகாத்த
அவசர காலை தொடர்வண்டியின்
கூந்தற்பூ பயணம்... //

அழ‌கான‌ வ‌ர்ண‌னைக‌ள்...//

நன்றி செய்யது :))

//இனிய‌வ‌ள் புனிதா அவ‌ர்க‌ளுக்கு எங்க‌ள் சார்பிலும் பிற‌ந்த‌ நாள் ந‌ல்வாழ்த்துக‌ள்.//

வாழ்த்துகளுக்கு நன்றி செய்யது :))

ஸ்ரீமதி said...

@ Maddy
//இங்க வந்து வெறும 'பிறந்தநாள் வாழ்த்துகள்'ன்னு மட்டும் பின்னூட்டம் போட்டாலும், மேலே சொன்ன அதே தண்டனைதான்.. ...........
எதுக்கு வம்பு!!!! வெறுமனே பிறந்த நாள் வாழ்த்து சொல்லிட்டு தண்டனையே அனுபவிக்கனும்... ஏதோ என்னால முடிஞ்ச தண்டனை கவிதைங்கற பேருல இங்கே


வரட்டும் ஒரு நற்செய்தி
வரும் இந்த புது ஆண்டில்!!
மகிழ்ச்சியான செய்தியாக
மனதில் வந்து விழட்டும்
அம்மாவின் அரவணைப்பும்
அப்பாவின் அன்பும்
ஆண்டு பல தொடரட்டும்
அண்ணன் தம்பி அக்கா தங்கை என
அனைவரின் பாசமழை பொழியட்டும்
பாரினில் உள்ளோர் பாராட்டடும்
புகழ் வரட்டும்
புன்னகை என்றென்றும்
உன் முகம் பூசிக்கொள்ளட்டும்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
புனிதா பெண்ணுக்கு//

நன்றி அண்ணா அழகான கவிதையான வாழ்த்திற்கு.. :))

//அய்யோ!! ஸ்ரீ யோட கவிதை பத்தி சொல்லலைனா அதுக்கு என்ன தண்டனையோ??

அருமை!!!

கலைந்துவிடாமல் குளித்து
கவனமாய் சேர்த்துவைக்கும்
கன்னத்து முத்தம்,..............

கன்னத்துல உண்டியல் ஏதாவது இருக்குமோ??//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ நான்
//புனிதா இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்//

நன்றி நான் :))

//ஸ்ரீமதி கவிதை நன்று வாழ்த்துகள்
புனிதாவின் மின்னஞ்சல் முகவரியை கீழ் காணும் என் முகவரிக்கு தெரிவிக்கவும் theanthuli@gmail.com//

முகவரி கிடைத்ததா??

ஸ்ரீமதி said...

@ சிம்பா
//:))//

:))))))))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//ஸ்ரீமதி! கலக்குற, நல்லா இருக்கு கவிதை...புனிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...//

நன்றி அக்கா :)))

ஸ்ரீமதி said...

@ அபுஅஃப்ஸர்
//என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்//

நன்றி அபுஅஃப்ஸர்.. :)))

ஸ்ரீமதி said...

@ சின்ன அம்மிணி
//கவிதை அருமை , டெம்ப்ளேட் அதைவிட அருமை.,//

நன்றி அக்கா முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.. :))

ஸ்ரீமதி said...

@ நாகை சிவா
////இங்க வந்து வெறும 'பிறந்தநாள் வாழ்த்துகள்'ன்னு மட்டும் பின்னூட்டம் போட்டாலும்//

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ;)) வாழ்த்துகளுக்கு நன்றி.. :)))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனியவள் புனிதா..//

நன்றி அண்ணா, அக்கா சார்பா.. :))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//இனிய கவிதையாய் பதிவு...நன்றி மதி :-) வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பர்களுக்கும் இவ்வேளையில் மிக்க நன்றி :-)//

வாழ்த்துகள் அக்கா :)))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//ஹைய்யா மீ த 50 ;-))//

:))))))

ஸ்ரீமதி said...

@ தாரணி பிரியா
//மீ த 51 மொய் கணக்கு எழுதி இருக்கறதால பெரிய பீஸ் கேக் எனக்குதானே//

ஓகே நீங்களே வெச்சிக்கோங்க... :))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////எல்லாவற்றையும்
புறந்தள்ளியது
பின்னிருக்கைக்குழந்தை
தலைவருடி சொன்ன
'ம்ம்மா' என்னும் வார்த்தை....//

கவிதை அழகு...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...//

நன்றி புதியவன் :)))

ஸ்ரீமதி said...

@ Karthik
////எல்லாவற்றையும்
புறந்தள்ளியது
பின்னிருக்கைக்குழந்தை
தலைவருடி சொன்ன
'ம்ம்மா' என்னும் வார்த்தை....

சூப்பர்ப்பா இருக்குங்க. :)

இனியவள் புனிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.//

நன்றி கார்த்திக் :))

ஸ்ரீமதி said...

@ Sundar
//அருமை!//

நன்றி சுந்தர் :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//இந்த குழந்தையின் படமே ஒரு அழகான கவிதை..
அக்குழந்தையை இன்னும் மிக அழகாக காட்டி இருக்கிறது உன் கவிதை..

படத்திற்கான கவிதையா அல்லது கவிதைக்கான படமா.. வியக்கிறேன்..
ரெண்டுமே செம அழகு.//

குழந்தை அழகா இருக்கா?? நன்றி.. :)) அது எனக்கு ஃபார்வேர்ட் மெயில்ல வந்தது.. பார்த்ததும் கவிதை எழுதனும்னு தோணிச்சு.. அத வெச்சு தான் எழுதினேன்.. :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//புனிதாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.//

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//பின்குறிப்புகள் அட்டகாசம்..//

ஹை நன்றிஸ் :))

ஸ்ரீமதி said...

@ PoornimaSaran
//கவிதை அழகோ அழகு குழந்தை படம் போலவே !!//

நன்றி அக்கா :))

இனியவள் புனிதா said...

98

இனியவள் புனிதா said...

99

இனியவள் புனிதா said...

me the 100th :-))

இனியவள் புனிதா said...

ரொம்ப நாளாச்சு உன் பதிவில் நூறாவது பின்னூட்டம் போட்டு :-)

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//இனியவள் புனிதாக்காவுக்கு வாழ்த்துக்கள் :)))//

நன்றி அண்ணா :))

//போட்டோ ஸூப்பரூ :)//

ஹை தேங்க்ஸ் :))

//பாஸ் நி.நல்லவன் பின்னூட்டங்கள பாக்கறச்ச அவுங்க வீட்ல “மொத்து மொத்துன்னு மொத்திக்கிட்டிருக்கற சவுண்ட் எபெக்ட் கேக்குது பாஸ்! :))

பாவம் நிஜம்ஸ் :(//

அய்யோ பாவம் அண்ணா :((

//நிஜமா நல்லவன் said...
ஸ்ரீ மதி நீ இனிமே இந்த கவிதை மாதிரி நல்லா புரியுற மாதிரி எழுதணும்....சரியா?
//

என்ன கொடுமை சார் இது :)))//

என்னக் கொடுமை அண்ணா இது?? ;))

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிகவும் ரசிக்க வைத்த கவிதை. அருமை.

ஸ்ரீமதி said...

@ வெ.இராதாகிருஷ்ணன்
//மிகவும் ரசிக்க வைத்த கவிதை. அருமை.//

நன்றி இராதாகிருஷ்ணன்.. :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது