Hey, Where is the party?

நெடு நாளாக இரவு விடியாமலே நீண்டது. கறுப்பு இரவுக்குள் மங்கலான உருவங்கள் வருவதுவும், மறைவதுவுமாயிருந்தன. கரித்துடைத்துத் தூக்கியெறியப்பட்ட வெள்ளைத்தாளென வானம் ஆங்காங்கு வெளுத்தும் பல இடங்களில் கறுத்தும் அவள் மனம் போலவே கலகமூட்டி, முத்தச்சத்தங்களுடனான இரவுகள் முடிவுக்கு வந்ததை அறிவித்தது.

கைப்பேசி அறுபதாவது முறையாக அவன் பெயரோடு சிணுங்கியது. இதுதான் கடைசி அழைப்பு என மனதை மறுமுறை சமாதானப்படுத்த முயன்று தோற்றாள். இனியும் பேச நாவிற்கு வலுவில்லை என்பதை உணர்ந்தாள். நின்றுப்போன கடிகாரம், வாடியப் பூ என்று நீளும் அவன் பரிசுகளின் பட்டியலில் இன்று அவனும், அவன் நினைவுகளும்.

காலை நேர உணவோ, காதைத்துளைக்கும் வாகனங்களின் இரைச்சலோ, காற்று அடித்து வந்த காகிதமோ, கடையோர செய்தித் தாள்களின் தலையங்கமோ என எதற்கும் அவன் நினைவைக் கலைக்கும் சக்தி இல்லாமல் போனது அவளுக்கு ஏமாற்றமே. அடுத்தமுறை கடவுச்சொல் மாற்ற அதிகம் யோசிக்க வேண்டியிராது பிரிவில் கண்ட முதல் ஆதாயம். பகுதி நேர வேலையாகிப் போயிருந்த முழுநேர வேலையை இனியும் முழுநேரம் செய்வதென திட்டமிட்டாள்.

இனியவளுக்கு வரப்போகும் நிர்பந்தங்களை அறிந்திருந்தாள். பத்து வயதில் பிரிந்துச் சென்ற நண்பனுக்காய் இன்று அழ நினைத்தாள். தொடர்பற்ற ஏதேதோ நினைவுகளில் சஞ்சரித்து பின் அலுவலகம் வந்ததை அறிந்தாள்.

காதல் ஒரு விசித்திரமானப் போர், முடிவு அறிந்த நாளிலிருந்துதான் தொடங்கும் சத்தங்களும், சாவுகளும். முடிவின் படியில் நின்றாள். மனப் போராட்டங்களில் ஒவ்வொரு முறையும் இவளின் நினைவுகள் ஜீவ சமாதி செய்யப்பட்டு, பின்பு தோண்டியெடுக்கப்பட்டு, மறுபடியும் புதைக்கப்பட்டது. முடிவுற்ற காதலின் எச்சம் முடியாமல் நீண்டது மாலைவரை இரவில் இவள் தோற்கப்போவது நிச்சயம் அவன் நினைவுகளால். என்றோ வெற்றிகரமாக முடித்த இவளின் ப்ராஜெக்ட்டுக்கு கைக்குலுக்கித் தோழி கேட்டாள்,

"Hey, Where is the party?"

-அன்புடன்,
ஸ்ரீமதி.

66 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

நட்புடன் ஜமால் said...

ஆமாம் ஆமாம்

where is the 'party'

நட்புடன் ஜமால் said...

\காதல் ஒரு விசித்திரமானப் போர், முடிவு அறிந்த நாளிலிருந்துதான் தொடங்கும் சத்தங்களும், சாவுகளும். முடிவின் படியில் நின்றாள். மனப் போராட்டங்களில் ஒவ்வொரு முறையும் இவளின் நினைவுகள் ஜீவ சமாதி செய்யப்பட்டு, பின்பு தோண்டியெடுக்கப்பட்டு, மறுபடியும் புதைக்கப்பட்டது. முடிவுற்ற காதலின் எச்சம் முடியாமல் நீண்டது மாலைவரை இரவில் இவள் தோற்கப்போவது நிச்சயம் அவன் நினைவுகளால்.\\

அருமை ...

ஆயில்யன் said...

//நெடு நாளாக இரவு விடியாமலே நீண்டது. ///

நல்லா தூங்கியிருப்பீங்க! :))))

ஆயில்யன் said...

//காதல் ஒரு விசித்திரமானப் போர்,//

ஆமாம்!

ஆயில்யன் said...

Hey, Where is the party?
Hey, Where is the party?
Hey, Where is the party?
Hey, Where is the party?
Hey, Where is the party?
Hey, Where is the party?
Hey, Where is the party?
Hey, Where is the party?
Hey, Where is the party?

புதியவன் said...

//நின்றுப்போன கடிகாரம், வாடியப் பூ என்று நீளும் அவன் பரிசுகளின் பட்டியலில் இன்று அவனும், அவன் நினைவுகளும்.//

நல்ல இருக்கு பரிசுகளின் பட்டியல்...

புதியவன் said...

//முடிவுற்ற காதலின் எச்சம் முடியாமல் நீண்டது மாலைவரை இரவில் இவள் தோற்கப்போவது நிச்சயம் அவன் நினைவுகளால்.//

காதலின் வலிகள் வார்த்தைகளில்
உணரமுடிகிறது அருமையான புனைவு...

கார்க்கி said...

என்ன சொல்றது? அப்புறம் வச்சிக்கிறேன் கச்சேரிய‌

smile said...

அடுத்தமுறை கடவுச்சொல் மாற்ற அதிகம் யோசிக்க வேண்டியிராது பிரிவில் கண்ட முதல் ஆதாயம். பகுதி நேர வேலையாகிப் போயிருந்த முழுநேர வேலையை இனியும் முழுநேரம் செய்வதென திட்டமிட்டாள்.

உண்மை , ஒன்றிலிருந்து விடுபட
மற்றொன்றில் மூழ்க வேண்டியிருக்கிறது

கடைசி பக்கம் said...

:-))

சின்ன அம்மிணி said...

பார்ட்டி எங்கன்னு சொல்லுங்க, வந்தற்றோம்

thevanmayam said...

முடிவற்ற காதலின் எச்சம்///

நல்ல வரிகள்!!!

தேவா..

SanJaiGan:-Dhi said...

ஸ்ஸ்ஸபாஆஆஆஆ.. :(

Karthik said...

//அடுத்தமுறை கடவுச்சொல் மாற்ற அதிகம் யோசிக்க வேண்டியிராது பிரிவில் கண்ட முதல் ஆதாயம்.

சூப்பர்ப்..!
:)

logu.. said...

Mudivurum kathalin..
Muthal mugavari..

vegu arumaiyaai..
aazhamaai solliyirukkireergal..

Nallarukku sri..

தாமிரா said...

வாழ்வின் விசித்திரமான தருணங்களில் ஒன்றை வெளிப்படுத்திய அழகான பதிவு. ரசித்தேன்.

ச்சின்னப் பையன் said...

பார்ட்டி எங்கேன்னு சொல்லுங்க. நானும் ரெடி.

Divyapriya said...

இப்படி சோகத்த பிழிஞ்சு பிழிஞ்சு எழுதறதுல உனக்கு நிகர் நீதாம்மா :(

Saravana Kumar MSK said...

அட்டகாசம்.. ரசித்து படித்தேன்..

Saravana Kumar MSK said...

//காலை நேர உணவோ, காதைத்துளைக்கும் வாகனங்களின் இரைச்சலோ, காற்று அடித்து வந்த காகிதமோ, கடையோர செய்தித் தாள்களின் தலையங்கமோ என எதற்கும் அவன் நினைவைக் கலைக்கும் சக்தி இல்லாமல் போனது அவளுக்கு ஏமாற்றமே.//

//அடுத்தமுறை கடவுச்சொல் மாற்ற அதிகம் யோசிக்க வேண்டியிராது பிரிவில் கண்ட முதல் ஆதாயம். //

சூப்பர்.. கலக்கல்.. :)

Saravana Kumar MSK said...

சரி.. சரி.. பார்ட்டி எங்கே எப்போ என்று சொல்லு.. நானும் வரேன்.. ;)

இராம்/Raam said...

கலக்கல்'ம்மா..... :)

நான் said...

வாழ்த்துகள் அருமை நன்றி

Divya said...

Very well written Srimathy:))

gayathri said...

smile said...
அடுத்தமுறை கடவுச்சொல் மாற்ற அதிகம் யோசிக்க வேண்டியிராது பிரிவில் கண்ட முதல் ஆதாயம். பகுதி நேர வேலையாகிப் போயிருந்த முழுநேர வேலையை இனியும் முழுநேரம் செய்வதென திட்டமிட்டாள்.

உண்மை , ஒன்றிலிருந்து விடுபட
மற்றொன்றில் மூழ்க வேண்டியிருக்கிறது

unnmai than reppppeeeeeeeeeeeettttttttuuuuuuuu

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//ஆமாம் ஆமாம்

where is the 'party'//

எதுக்கு அண்ணா?? :))

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//\காதல் ஒரு விசித்திரமானப் போர், முடிவு அறிந்த நாளிலிருந்துதான் தொடங்கும் சத்தங்களும், சாவுகளும். முடிவின் படியில் நின்றாள். மனப் போராட்டங்களில் ஒவ்வொரு முறையும் இவளின் நினைவுகள் ஜீவ சமாதி செய்யப்பட்டு, பின்பு தோண்டியெடுக்கப்பட்டு, மறுபடியும் புதைக்கப்பட்டது. முடிவுற்ற காதலின் எச்சம் முடியாமல் நீண்டது மாலைவரை இரவில் இவள் தோற்கப்போவது நிச்சயம் அவன் நினைவுகளால்.\\

அருமை ...//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////நெடு நாளாக இரவு விடியாமலே நீண்டது. ///

நல்லா தூங்கியிருப்பீங்க! :))))//

:)))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////காதல் ஒரு விசித்திரமானப் போர்,//

ஆமாம்!//

ஹைய்ய்ய்ய்ய்ய் அப்படியா?? ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//Hey, Where is the party?
Hey, Where is the party?
Hey, Where is the party?
Hey, Where is the party?
Hey, Where is the party?
Hey, Where is the party?
Hey, Where is the party?
Hey, Where is the party?
Hey, Where is the party?//

What for???????? :)))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////நின்றுப்போன கடிகாரம், வாடியப் பூ என்று நீளும் அவன் பரிசுகளின் பட்டியலில் இன்று அவனும், அவன் நினைவுகளும்.//

நல்ல இருக்கு பரிசுகளின் பட்டியல்...//

நன்றி புதியவன் :))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////முடிவுற்ற காதலின் எச்சம் முடியாமல் நீண்டது மாலைவரை இரவில் இவள் தோற்கப்போவது நிச்சயம் அவன் நினைவுகளால்.//

காதலின் வலிகள் வார்த்தைகளில்
உணரமுடிகிறது அருமையான புனைவு...//

நன்றி புதியவன் :))))

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
//என்ன சொல்றது? அப்புறம் வச்சிக்கிறேன் கச்சேரிய‌//

அச்சச்சோ என்ன அண்ணா?? :)))

ஸ்ரீமதி said...

@ smile
//அடுத்தமுறை கடவுச்சொல் மாற்ற அதிகம் யோசிக்க வேண்டியிராது பிரிவில் கண்ட முதல் ஆதாயம். பகுதி நேர வேலையாகிப் போயிருந்த முழுநேர வேலையை இனியும் முழுநேரம் செய்வதென திட்டமிட்டாள்.

உண்மை , ஒன்றிலிருந்து விடுபட
மற்றொன்றில் மூழ்க வேண்டியிருக்கிறது//

:)))))))
நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ கடைசி பக்கம்
//:-))//

:))))))

ஸ்ரீமதி said...

@ சின்ன அம்மிணி
//பார்ட்டி எங்கன்னு சொல்லுங்க, வந்தற்றோம்//

எதுக்கு பார்ட்டி?? யார் தரேன்னு சொன்னா?? தெரிஞ்சா எனக்கும் சொல்லுங்க அக்கா.. நானும் வரேன்.. :))

ஸ்ரீமதி said...

@ thevanmayam
//முடிவற்ற காதலின் எச்சம்///

நல்ல வரிகள்!!!

தேவா..//

நன்றி :)))))

ஸ்ரீமதி said...

@ SanJaiGan:-Dhi
//ஸ்ஸ்ஸபாஆஆஆஆ.. :(//

என்ன அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ Karthik
////அடுத்தமுறை கடவுச்சொல் மாற்ற அதிகம் யோசிக்க வேண்டியிராது பிரிவில் கண்ட முதல் ஆதாயம்.

சூப்பர்ப்..!
:)//

நன்றி கார்த்திக் :))

ஸ்ரீமதி said...

@ logu..
//Mudivurum kathalin..
Muthal mugavari..

vegu arumaiyaai..
aazhamaai solliyirukkireergal..

Nallarukku sri..//

நன்றி லோகநாதன் :))

ஸ்ரீமதி said...

@ தாமிரா
//வாழ்வின் விசித்திரமான தருணங்களில் ஒன்றை வெளிப்படுத்திய அழகான பதிவு. ரசித்தேன்.//

நன்றி அண்ணா :)))))

ஸ்ரீமதி said...

@ ச்சின்னப் பையன்
//பார்ட்டி எங்கேன்னு சொல்லுங்க. நானும் ரெடி.//

தெரியலையே அண்ணா... :)) (சிவாஜி ஸ்டைல்ல படிச்சா.. நான் பொறுப்பில்ல.. ;))))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//இப்படி சோகத்த பிழிஞ்சு பிழிஞ்சு எழுதறதுல உனக்கு நிகர் நீதாம்மா :(//

அவ்ளோ சோகமா இருக்கா அக்கா?? நன்றி :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//அட்டகாசம்.. ரசித்து படித்தேன்..//

நன்றி சரவணா :)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////காலை நேர உணவோ, காதைத்துளைக்கும் வாகனங்களின் இரைச்சலோ, காற்று அடித்து வந்த காகிதமோ, கடையோர செய்தித் தாள்களின் தலையங்கமோ என எதற்கும் அவன் நினைவைக் கலைக்கும் சக்தி இல்லாமல் போனது அவளுக்கு ஏமாற்றமே.//

//அடுத்தமுறை கடவுச்சொல் மாற்ற அதிகம் யோசிக்க வேண்டியிராது பிரிவில் கண்ட முதல் ஆதாயம். //

சூப்பர்.. கலக்கல்.. :)//

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//சரி.. சரி.. பார்ட்டி எங்கே எப்போ என்று சொல்லு.. நானும் வரேன்.. ;)//

யாருக்கு பார்ட்டி?? எதுக்கு பார்ட்டி?? யார் தரனும்?? எதுக்கு தரனும்?? :))

ஸ்ரீமதி said...

@ இராம்/Raam
//கலக்கல்'ம்மா..... :)//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ நான்
//வாழ்த்துகள் அருமை நன்றி//

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ Divya
//Very well written Srimathy:))//

Thanks akka :)))

ஸ்ரீமதி said...

@ gayathri
//smile said...
அடுத்தமுறை கடவுச்சொல் மாற்ற அதிகம் யோசிக்க வேண்டியிராது பிரிவில் கண்ட முதல் ஆதாயம். பகுதி நேர வேலையாகிப் போயிருந்த முழுநேர வேலையை இனியும் முழுநேரம் செய்வதென திட்டமிட்டாள்.

உண்மை , ஒன்றிலிருந்து விடுபட
மற்றொன்றில் மூழ்க வேண்டியிருக்கிறது

unnmai than reppppeeeeeeeeeeeettttttttuuuuuuuu//

Thanks Gayathri :))

நான் ஆதவன் said...

சூப்பர் ஸ்ரீமதி

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
//சூப்பர் ஸ்ரீமதி//

நன்றி அண்ணா :)))

தமிழ். சரவணன் said...

அருமையாண வலைப்பூ டிசைன்... எங்களுக்கம் தெரியப்படுத்தவும் எப்படி என்று

ஸ்ரீமதி said...

@ தமிழ். சரவணன்
//அருமையாண வலைப்பூ டிசைன்... எங்களுக்கம் தெரியப்படுத்தவும் எப்படி என்று//

கூகிள்ல தேடினாலே நிறைய Blogger templates கிடைக்கிறது அல்லது என் ப்ளாக் left corner-ல இருக்கற G லிங்க் யூஸ் பண்ணுங்க.. :))

நட்புடன் ஜமால் said...

\\Blogger ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//ஆமாம் ஆமாம்

where is the 'party'//

எதுக்கு அண்ணா?? :))\\

காரணமே இல்லையா ...

அதுக்கே வைக்கலாமே ...

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//\\Blogger ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//ஆமாம் ஆமாம்

where is the 'party'//

எதுக்கு அண்ணா?? :))\\

காரணமே இல்லையா ...

அதுக்கே வைக்கலாமே ...//

இது நல்லா கதையா இருக்கே.. :)))

Sundar said...

//காலை நேர உணவோ, காதைத்துளைக்கும் வாகனங்களின் இரைச்சலோ, காற்று அடித்து வந்த காகிதமோ, கடையோர செய்தித் தாள்களின் தலையங்கமோ என எதற்கும் அவன் நினைவைக் கலைக்கும் சக்தி இல்லாமல் போனது //
//முடிவுற்ற காதலின் எச்சம் முடியாமல் நீண்டது //
...தோண்டி புதைத்தாயிற்று என்றல்லவா நினைத்தேன்...இப்படி கிளறி கனப்படுத்தி விட்டீர்களே! : (
so bittersweet!

மன வலிகளுக்கு மட்டுமே மனம் மயக்கும் போதைகளை விட சக்தியுண்டு என்று நினைக்கிறேன்.

ஸ்ரீமதி said...

@ Sundar
//...தோண்டி புதைத்தாயிற்று என்றல்லவா நினைத்தேன்...இப்படி கிளறி கனப்படுத்தி விட்டீர்களே! : (
so bittersweet!//

அதெப்படி புதைந்து போகும்?? எப்படி புதைத்தீர்கள்??

//மன வலிகளுக்கு மட்டுமே மனம் மயக்கும் போதைகளை விட சக்தியுண்டு என்று நினைக்கிறேன்.//

ஆமாம் அவற்றைவிட சீக்கிரம் கொல்லும் சக்தியும் பெற்றது.. :)))

Sundar said...

//அதெப்படி புதைந்து போகும்?? எப்படி புதைத்தீர்கள்?? //
பச்சை மரத்தில் பதிந்த ஆணியையும் உள்ளடக்கி வளரும் மரத்தை போல. வெளியில் இருந்து ஒன்றும் தெரியாவிட்டாலும், உள்ளுக்குள் போன ஆணியை என்ன செய்ய :(

ஸ்ரீமதி said...

@ Sundar
////அதெப்படி புதைந்து போகும்?? எப்படி புதைத்தீர்கள்?? //
பச்சை மரத்தில் பதிந்த ஆணியையும் உள்ளடக்கி வளரும் மரத்தை போல. வெளியில் இருந்து ஒன்றும் தெரியாவிட்டாலும், உள்ளுக்குள் போன ஆணியை என்ன செய்ய :(//

இதுக்கு எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. :(( பட் உங்க சோகம் புரியுது.. :(( டேக் கேர்... :))

தமிழன்-கறுப்பி... said...

என்ன பிரச்சனை..?

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//என்ன பிரச்சனை..?//

என்ன பிரச்சனை?? யாருக்கு?? எப்போ?? எங்கே??

தமிழன்-கறுப்பி... said...

\\
காதல் ஒரு விசித்திரமானப் போர்,
\\

இது இப்பத்தானா தெரியுது ஆத்தா..:)

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//\\
காதல் ஒரு விசித்திரமானப் போர்,
\\

இது இப்பத்தானா தெரியுது ஆத்தா..:)//

:)))))))

இவன் said...

காலை நேர உணவோ, காதைத்துளைக்கும் வாகனங்களின் இரைச்சலோ, காற்று அடித்து வந்த காகிதமோ, கடையோர செய்தித் தாள்களின் தலையங்கமோ என எதற்கும் அவன் நினைவைக் கலைக்கும் சக்தி இல்லாமல் போனது அவளுக்கு ஏமாற்றமே

அருமையான வரிகள்.......

ஸ்ரீமதி said...

@ இவன்
//காலை நேர உணவோ, காதைத்துளைக்கும் வாகனங்களின் இரைச்சலோ, காற்று அடித்து வந்த காகிதமோ, கடையோர செய்தித் தாள்களின் தலையங்கமோ என எதற்கும் அவன் நினைவைக் கலைக்கும் சக்தி இல்லாமல் போனது அவளுக்கு ஏமாற்றமே

அருமையான வரிகள்.......//

நன்றி இவன் :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது