ஏன் எனக்கு மட்டும் இப்படி??

வாரத்தின் முதல் நாள் திங்கள் அதுவுமா இப்படி எழுத எனக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு... ஆனா இப்ப எழுதலேனா அப்பறம் எப்ப எழுதுவேன்னு தெரியல.... :-(( அதான், இப்ப எழுதறேன்.. முன்ன எல்லாம் ஏதாவது எழுதணும்ன்னு நினைச்சா உடனே எழுதிடுவேன்.. ஆனா, இப்பல்லாம் முடியறதில்ல.... அது ஏன்னு நான் ஆராய்ச்சி பண்ணி (நம்பனும் ஆமா) கண்டுபிடிச்சதுல மூணு விஷயம் தெரிஞ்சது.... அது என்னன்னா,

1.இப்பல்லாம் நிஜமாவே ஆணி அதிகமா இருக்கு... (உண்மைய சொன்னா சிரிக்கக்கூடாது....!!).

2.அடுத்தது எதையாவது எழுதலாம்ன்னு நினைச்சா.. இதென்ன சின்னப்புள்ளத்தனமா இதப் போயி எழுதறதுன்னு நானே அந்த எண்ணத்த கை விட்டுடுறேன்... (தப்பிச்சீங்க...)


3.மூணாவது வேற எதுவும் இல்ல.. பிரசித்திப் பெற்ற என்னோட அளவில்லாப் பொறுமை (சரி... சரி...) சோம்பேறித்தனம்.... இதனால தான் நான் கவிதை மட்டுமே போட்டேன். அது எழுதறதும் ஈசி படிக்கிற உங்களுக்கும் ஈசி ஹி ஹி ஹி... ;-))

ஆனா நான் இப்ப சொல்லவந்தது இந்த விஷயம் இல்ல.. அடப்பாவி இன்னும் ஆரம்பிக்கவே இல்லையான்னு நீங்க கேட்கறது புரியுது.. என்னைக்குமே சொல்ல வந்த விஷயத்த விட, அத சொல்ல நாம பண்ற பில்டப்பும், அதுக்கு வாங்கற பல்பும் தான் செம சூப்பரா இருக்கும்.... நானும் என் ஃப்ரெண்டும் பேசிட்டு இருந்தோம்... திடீர்ன்னு அவ,

"ஹே... நம்ம சஸ்வதி வீட்ல...."

"என்னது??"

"சஸ்வதி வீட்ல...."

"உன் வாய்ல தர்பையப் போட்டு பொசுக்க... அது 'சஸ்வதி' இல்லடி... 'சரஸ்வதி' சொல்லு...."

"போதும் நிறுத்தறியா உன் தமிழ் கிளாஸ..."

"சரி சொல்லு... சரஸ்வதி வீட்ல...??"

"ம்ம்ம்ம்ம் பெருமாள் சாமிக்கு பொண்ணே இல்லையாம்...."

"ஹே சொல்லுடி...."

"............"

"சொல்லு..."

"............"

அப்போ போனவதான் அப்பறம் என் பக்கம் திரும்பவே இல்ல... :-((

வெள்ளிக்கிழமை அதிக வேலையால(நிஜமா.. ;-)) ) நான் கிளம்ப நேரம் ஆகிடிச்சு...

"ஹாய் ஸ்ரீ... என்ன மணி 8:30 ஆச்சு இன்னுமா கிளம்பல??"

"ம்ம்ம் கொஞ்சம் வேலை இருந்தது..."

"ஓ...! ஓகே... ஓகே... ஸ்டேஷன் தானே போற?? இரு நானும் வரேன்.... தனியா போக பயமா இல்ல??"

"ம்ஹும்... நம்ம ஊர்ல ராமராஜ்யம் இல்லன்னாலும்...., ராமராஜன்கள் அதிகம்... பொண்ணுங்களுக்கு எதாவதுனா ஓடி வந்து செய்வாங்க...."


"..............."

"நவீன் நில்லு....."

"................."

"நவீன்....."

ம்ம்ம் இதுதான் இப்படி ஆச்சுன்னா.... எனக்கு எல்லாமே கொஞ்சம் தலைகீழா தான் நடக்குது....

2008 எப்படி முடிஞ்சதோ அதே மாதிரி தான் 2009-ம் ஆரம்பிச்சது..... எப்படியா?? ஆபீஸ், சனிக்கிழமைன்னா காலேஜ், ஞாயிற்று கிழமை தூக்கம்... இப்படி ஸ்மூத்தா போயிட்டிருந்தது 27-ம் தேதி மதியம் வரைக்கும்.... நானும் அப்படியே இருந்திருக்கலாம்.... சும்மா இருந்தவள வா ஷெட்டில்கார்க் விளையாடலாம்ன்னு கூப்டான் என் அண்ணா... சரின்னு நானும் விளையாடி கால் உடைச்சுகிட்டு கட்டு போட்டுகிட்டு வந்தேன்.... அதுதான் அப்படி ஆச்சு... அப்பறம் சரியா போச்சுன்னு நான் நினைச்சுகிட்டு அத கண்டுக்காம விட்டுட்டேன்....

புத்தாண்டு, வழக்கம் போல தூங்கி,.... ஃப்ரெண்ட்ஸ் கால் எல்லாம் மிஸ்டு காலாகி... திட்டு வாங்கி முடிஞ்சது.... அன்னைக்கும் எனக்கு ஆபீஸ் :-( .....அப்பறம் மறுபடியும் 5-ம் தேதி விழுந்துட்டேன்... அதெல்லாம் விடுங்க... :-((

இதுக்கு நடுவுல எனக்கு திவ்யா அக்கா பட்டர்ஃப்ளை அவார்ட் எல்லாம் தந்து கௌரவிசிருக்காங்க... அவங்களுக்கு என் நன்றி.... இத நான் இன்னும் யாருக்கும் தரல.... அந்த ரெண்டுபேர்,

1. இவர் ரொம்ப யதார்த்தமான... ஆனா, எண்ணிக்கைல குறைவான கவிதைகள் எழுதிருக்கார்.. நிறைய முறை உயிர்மைல இவர் கவிதை வந்திருக்கு... அவரை படிக்க....

2.அடுத்தது இவங்க ரொம்ப அழகா ரொம்ப ரொம்ப கூலா எழுதறவங்க அவங்கள படிக்க...

இதுதாங்க விஷயம்... இத சொல்லவா இவ்ளோ சுத்தி வலைச்சன்னு கேட்கரவங்களுக்கெல்லாம் ஒன்னு சொல்லிகிறேன்...... ஹி ஹி ஹி ஆமா.... ;-))) இப்ப விட்டா அப்பறம் என் கவலைகளை எல்லாம் எப்ப சொல்றது?? அதான்... ;-)))

பி.கு: பயங்கர வேலைக்கு நடுவுல டைப்பறேன்.... அதனால எப்படி எழுதிருக்கேன்னு தெரியல.... :-((

-அன்புடன்,
ஸ்ரீமதி.

106 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

புதியவன் said...

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி உங்களுக்கும்
உங்களிடமிருந்து விருது
பெற்றவர்களுக்கும்...

Ŝ₤Ω..™ said...

என்னம்மா இது??
ஒன்னுமே என் சிறு மூளைக்கு விளங்கல..

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள்

பெற்றவருக்கும் தங்களுக்கும்.

தாமிரா said...

வாழ்த்துக்கள்
பெற்றவருக்கும் தங்களுக்கும்.

:-))

ஆயில்யன் said...

//"ம்ஹும்... நம்ம ஊர்ல ராமராஜ்யம் இல்லன்னாலும்...., ராமராஜன்கள் அதிகம்... பொண்ணுங்களுக்கு எதாவதுனா ஓடி வந்து செய்வாங்க...///


டோட்டல் டேமேஜ் :(

இனியவள் புனிதா said...

ME THE 6TH

இனியவள் புனிதா said...

//இதென்ன சின்னப்புள்ளத்தனமா இதப் போயி எழுதறதுன்னு//

குழந்தையின் கிறுக்கல் அப்படித்தான் இருக்கும்...இதுக்கெல்லாம் ஃபீல் ஆகக்கூடாது செல்லம்...ஆனாலும் வெரி சாரி உன் நிலைமையை படிக்கும்போது :-))

ஆயில்யன் said...

//வாரத்தின் முதல் நாள் திங்கள் அதுவுமா இப்படி எழுத எனக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு...//


ஹைய்ய்ய்ய்!

υnĸnown вlogger™ said...

ஒன்னுமே புரியல உலகத்துல.இந்த ஸ்ரீமதி பதிவு எல்லாம் மர்மாக இருக்குது :)

ஆயில்யன் said...

//இப்பல்லாம் நிஜமாவே ஆணி அதிகமா இருக்கு.//

நான் நம்பிட்டேன்!

Sundar said...

சரி அடுத்த கவிதை போடுங்க. இனிமே கொஞ்சம் அதிகமா புரியும்ன்னு நினைக்கிறேன்.

ஆயில்யன் said...

//இப்ப விட்டா அப்பறம் என் கவலைகளை எல்லாம் எப்ப சொல்றது?? அதான்... ;-)))///

கவலைக்குரிய விசயம்தான் :(

சந்தனமுல்லை said...

வாழ்த்துக்கள் ஸ்ரீ!!

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் :)

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள் :)

Maddy said...

பி.கு: பயங்கர வேலைக்கு நடுவுல டைப்பறேன்.... அதனால எப்படி எழுதிருக்கேன்னு தெரியல.... :-((

மேல இருக்கற பின்னூட்டும் எல்லாம் இதுக்கு பதிலா இருக்கும்ன்னு நம்பறேன்

மூணு காரணம் மட்டும் தான் இங்கே இருக்கு. அந்த நாலாவது காரணம் என்னன்னு நான் யோசிச்சிட்டு இருந்தேன்!! பதிவ முழுசா படிச்சப்போ தெரிஞ்சது!!..... தலைய பிச்சுகிட்டா நான் பொறுப்பு இல்லை.


:-( .....அப்பறம் மறுபடியும் 5-ம் தேதி விழுந்துட்டேன்...

பட்ட காலிலே படும்ன்றது இது தானா?
Take care

வெண்பூ said...

கொஞ்சம் லேட்டான புத்தாண்டு மற்றும் கொஞ்சம் அட்வான்ஸான பொங்கல் நல்வாழ்த்துகள்..

//
நானும் விளையாடி கால் உடைச்சுகிட்டு கட்டு போட்டுகிட்டு வந்தேன்....
//
:( take care.. get well soon..

நான் ஆதவன் said...

//"ம்ம்ம்ம்ம் பெருமாள் சாமிக்கு பொண்ணே இல்லையாம்...."//

இரு இரு சாருகிட்ட சொல்றேன்

நான் ஆதவன் said...

//நான் கவிதை மட்டுமே போட்டேன். அது எழுதறதும் ஈசி படிக்கிற உங்களுக்கும் ஈசி ஹி ஹி ஹி... ;-))//

அத நாங்க சொல்லனும் அம்மணி...படிக்கிறது ஈஸி தான் ஆனா புரிஞ்ச மாதிரி பின்னூட்டம் போடுறது தான் கஷ்டம்

நான் ஆதவன் said...

//சும்மா இருந்தவள வா ஷெட்டில்கார்க் விளையாடலாம்ன்னு கூப்டான் என் அண்ணா... சரின்னு நானும் விளையாடி கால் உடைச்சுகிட்டு கட்டு போட்டுகிட்டு வந்தேன்....//

கார்க் பொறுக்கி போட கூப்பிட்டதுக்கே இவ்வளவு பில்டப்பா????

நான் ஆதவன் said...

//அப்பறம் மறுபடியும் 5-ம் தேதி விழுந்துட்டேன்... அதெல்லாம் விடுங்க... :-((//

அதெப்படி விடுறது...ட்ரீட் வேணுமே

நான் ஆதவன் said...

//அவங்களுக்கு என் நன்றி.... இத நான் இன்னும் யாருக்கும் தரல.... அந்த ரெண்டுபேர்,//

எனக்கு வேண்டாம்மா...அட சொன்னா கேளு எனக்கு வேண்டாம்.. சொல்றேன்ல எனக்கு வேண்டாம்ன்னு...
ஒரு தடவை சொன்னா தெரியாதா எனக்கு வேண்டாம்ன்னு??

//1. இவர் ரொம்ப யதார்த்தமான... ஆனா, எண்ணிக்கைல குறைவான கவிதைகள் எழுதிருக்கார்.. நிறைய முறை உயிர்மைல இவர் கவிதை வந்திருக்கு... அவரை படிக்க....

2.அடுத்தது இவங்க ரொம்ப அழகா ரொம்ப ரொம்ப கூலா எழுதறவங்க அவங்கள படிக்க.....//

அப்ப எனக்கு இல்லையா..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நான் ஆதவன் said...

//பி.கு: பயங்கர வேலைக்கு நடுவுல டைப்பறேன்.... அதனால எப்படி எழுதிருக்கேன்னு தெரியல.... :-((//

பயங்கர வேலைன்னா???? பேய்க்கு பேன் பாக்குற வேலையா? இல்ல பிசாசுக்கு கை கால் அமுக்கி விடுற வேலையா??

நான் ஆதவன் said...

//இதுதாங்க விஷயம்... இத சொல்லவா இவ்ளோ சுத்தி வலைச்சன்னு கேட்கரவங்களுக்கெல்லாம் ஒன்னு சொல்லிகிறேன்...... //

தமிழ் டீச்சரே "வலைச்சு"ஆ இல்ல "வளைச்சா" எந்த லகரம் வருமுங்கோ

நான் ஆதவன் said...

டைம் ஆச்சு அப்பீட் ஆய்கிறேனுங்கோ....

Divyapriya said...

சீரியஸா என்ன சொல்ல வரேன்னே கடைசி வரைக்கும் புரியவே இல்ல…கடைசியில ஒரு வழியா சொல்ல வந்த விஷயத்த சொல்லிட்ட :) புது வருஷத்துலையாவது கை, கால ஒழுங்கா உடைக்காம வச்சுக்க வாழ்த்துக்கள் ;)

தமிழன்-கறுப்பி... said...

விருதுக்கு வாழ்த்துக்கள்...

தமிழன்-கறுப்பி... said...

என்னமோ ஏதோன்னு ஓடிவந்தா பிள்ளை நம்மளைல் இந்த கேள்வியை கேட்க வைக்குது...:)

எங்களுக்கெல்லாம் ஏன் இப்படி...:(

தமிழன்-கறுப்பி... said...

\\
இப்பல்லாம் நிஜமாவே ஆணி அதிகமா இருக்கு... (உண்மைய சொன்னா சிரிக்கக்கூடாது....!!).
\\

:))

தமிழன்-கறுப்பி... said...

\\
மூணாவது வேற எதுவும் இல்ல.. பிரசித்திப் பெற்ற என்னோட அளவில்லாப் பொறுமை (சரி... சரி...) சோம்பேறித்தனம்....
\\

நம்மளுக்கும் இருக்கறதுதான்...

தமிழன்-கறுப்பி... said...

\\
இதனால தான் நான் கவிதை மட்டுமே போட்டேன். அது எழுதறதும் ஈசி படிக்கிற உங்களுக்கும் ஈசி ஹி ஹி ஹி... ;-))
\\

அது கவிதைகளிலேயே தெரியுது...!

ஆனா எனக்கெல்லாம தலைகீழா நின்னாலும் இரண்டு வரி கூட தேறாதாம்...:(

தமிழன்-கறுப்பி... said...

இப்ப பரவால்லையா மறுபடியும் விழுந்திடாதிங்க..

தமிழன்-கறுப்பி... said...

\\
ம்ஹும்... நம்ம ஊர்ல ராமராஜ்யம் இல்லன்னாலும்...., ராமராஜன்கள் அதிகம்... பொண்ணுங்களுக்கு எதாவதுனா ஓடி வந்து செய்வாங்க...."
\\

:)
ஏனிப்படி..பழிவாங்குறிங்க...:)

கார்க்கி said...

:))))

Dinesh C said...

//நம்ம ஊர்ல ராமராஜ்யம் இல்லன்னாலும்...., ராமராஜன்கள் அதிகம்... //

எல்லாம் நேரம் :)


பதிவு.. ரசித்தேன்..
மொக்கை கூட நல்லா தான் போடறீங்க

சென்ஷி said...

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி உங்களுக்கும்
உங்களிடமிருந்து விருது
பெற்றவர்களுக்கும்...

Thamizhmaangani said...

முதல் தடவையா இந்த பக்கம் வரேன்னு நினைக்குறேன். பட்ட காலிலே படும் கதைய கேட்டு ரொம்ப கஷ்டமா போச்சு (அட நிஜமா தான்ங்க..) :)

நிறைய மசாலா மிக்ஸ் பார்ப்பீங்களோ, உங்க எழுத்துகளில் நான் அறிந்தேன். ரசித்தும் படித்தேன்:)

ஐயோ.. ஐயோ பாத்துங்க... கீழ விழ போறீங்களோ நினைச்சேன்.. கால்களை பத்திரமா பாத்துங்கோ!:)

கவின் said...

வாழ்த்துக்கள்
பெற்றவருக்கும் தங்களுக்கும்.

logu.. said...

\\ Ŝ₤Ω..™ said...
என்னம்மா இது??
ஒன்னுமே என் சிறு மூளைக்கு விளங்கல..\\\

mmm.. enakkumthaann..

thevanmayam said...

பொங்கல் வாழ்த்துக்கள்!!!!

தேவா...

அமிர்தவர்ஷினி அம்மா said...

பயங்கர வேலைக்கு நடுவுல டைப்பறேன்.... அதனால எப்படி எழுதிருக்கேன்னு தெரியல.... :-((


பயங்கர வேலையா அது எப்படி இருக்கும்?

விருது வாங்கிய உங்களுக்கும், விருது பெற்றவருக்கும் வாழ்த்துக்கள்

நாணல் said...

:) வாழ்துக்கள் ஸ்ரீ... பாவம் ஒர் சின்ன பொண்ணுக்கு இவ்வளவு ப்ரச்சனையா... ;)

தவநெறிச்செல்வன் said...

மிக அழகான வலைப்பூ, இதுதான்முதல் முறை, மிக நேர்த்தியான அமைப்பு, இயல்பான எழுத்து. நல்லாயிருக்கிறது.

வாழ்த்துக்கள்

TKB காந்தி said...

பாத்து நடங்க ஸ்ரீ, ரெண்டு முறை விழுந்திருக்கீங்க - வருசத்துக்கு ஒன்னுங்ற கணக்குல, இனிமே இப்படி விழாதீங்க - பாத்து பத்திரமா நடங்க, விளையாடுங்க.

இந்த Butterfly award உங்ககிட்ட இருந்து வாங்கறது ரொம்ப ரொம்ப சந்தோஷம். 'எண்ணிக்கைல குறைவான' - உள்குத்துங்களா :). Award-க்கு நன்றி ஸ்ரீ. என்ன வாழ்த்தின புதியவன், ஜமால், தாமிரா, சென்ஷி, கவின், அமிர்தவர்ஷினி - எல்லோருக்கும் நன்றி :) இத என் blog-ல கண்டிப்பா போடுறேன் ஆனா இந்த award-க்கான formalities-ல எனக்கு concession வேணும், அதாவது இத ஒரு post-ஆ போடுறதுலேருந்து எனக்கு விலக்களிக்கணும் (உங்களமாதிரி கோர்வையா எழுதவராதுங்க). அப்பறம் இந்த award-அ என்ன வாழ்த்தின புதியவன், ஜமால், தாமிரா, சென்ஷி, கவின், அமிர்தவர்ஷினி இவங்களுக்கெல்லாம் கொடுக்கறேன் (இந்த comment-அ இவெங்கெல்லாம் பாப்பாங்கன்னு நம்பறேன்) :) Thanks once again Sri. Take care.

TKB காந்தி

ஸ்ரீமதி said...

@ புதியவன்
//வாழ்த்துக்கள் ஸ்ரீமதி உங்களுக்கும்
உங்களிடமிருந்து விருது
பெற்றவர்களுக்கும்...//

நன்றி புதியவன் :))

ஸ்ரீமதி said...

@ Ŝ₤Ω..™
//என்னம்மா இது??
ஒன்னுமே என் சிறு மூளைக்கு விளங்கல..//

அண்ணா இதுல புரியாத அளவுக்கு நான் ஒண்ணுமே எழுதலியே அண்ணா... :(( உங்களுக்காக வேணும்னா அடுத்தது பி.ந பதிவு போடவா?? ;)))

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//வாழ்த்துக்கள்

பெற்றவருக்கும் தங்களுக்கும்.//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ தாமிரா
//வாழ்த்துக்கள்
பெற்றவருக்கும் தங்களுக்கும்.

:-))//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////"ம்ஹும்... நம்ம ஊர்ல ராமராஜ்யம் இல்லன்னாலும்...., ராமராஜன்கள் அதிகம்... பொண்ணுங்களுக்கு எதாவதுனா ஓடி வந்து செய்வாங்க...///


டோட்டல் டேமேஜ் :(//

:)))))))))))))))))))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//ME THE 6TH//

ME THE 50 ;):)

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////இதென்ன சின்னப்புள்ளத்தனமா இதப் போயி எழுதறதுன்னு//

குழந்தையின் கிறுக்கல் அப்படித்தான் இருக்கும்...இதுக்கெல்லாம் ஃபீல் ஆகக்கூடாது செல்லம்...ஆனாலும் வெரி சாரி உன் நிலைமையை படிக்கும்போது :-))//

ம்ம்ம் அப்ப ஓகே... இனிமே எழுதிடுறேன் அக்கா.. :)) ம்ம்ம் பாவம் தானே நான்?? :((

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////வாரத்தின் முதல் நாள் திங்கள் அதுவுமா இப்படி எழுத எனக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு...//


ஹைய்ய்ய்ய்!//

என்னாதிது?? :((

ஸ்ரீமதி said...

@ υnĸnown вlogger™
//ஒன்னுமே புரியல உலகத்துல.இந்த ஸ்ரீமதி பதிவு எல்லாம் மர்மாக இருக்குது :)//

இதுல என்ன புரியல?? :((

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////இப்பல்லாம் நிஜமாவே ஆணி அதிகமா இருக்கு.//

நான் நம்பிட்டேன்!//

நன்றிங்ணா... :)))

ஸ்ரீமதி said...

@ Sundar
//சரி அடுத்த கவிதை போடுங்க. இனிமே கொஞ்சம் அதிகமா புரியும்ன்னு நினைக்கிறேன்.//

எப்படி அண்ணா இவ்ளோ நம்பிக்கையோட சொல்றீங்க?? எனக்கு அப்படியே ஆனந்த கண்ணீர் வருது.... :')) ;)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////இப்ப விட்டா அப்பறம் என் கவலைகளை எல்லாம் எப்ப சொல்றது?? அதான்... ;-)))///

கவலைக்குரிய விசயம்தான் :(//

ம்ம்ம்ம் ரொம்பவே.. :((

ஸ்ரீமதி said...

@ சந்தனமுல்லை
//வாழ்த்துக்கள் ஸ்ரீ!!//

நன்றி அக்கா :))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//வாழ்த்துக்கள் :)//

நன்றிஸ் :)))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//வாழ்த்துக்கள் :)//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ Maddy
//பி.கு: பயங்கர வேலைக்கு நடுவுல டைப்பறேன்.... அதனால எப்படி எழுதிருக்கேன்னு தெரியல.... :-((

மேல இருக்கற பின்னூட்டும் எல்லாம் இதுக்கு பதிலா இருக்கும்ன்னு நம்பறேன்//

ம்ம்ம் ஆமா பாவம்... நொந்து போயி போட்ருக்காங்க பின்னூட்டம் எல்லாம்.. ;)))

//மூணு காரணம் மட்டும் தான் இங்கே இருக்கு. அந்த நாலாவது காரணம் என்னன்னு நான் யோசிச்சிட்டு இருந்தேன்!! பதிவ முழுசா படிச்சப்போ தெரிஞ்சது!!..... தலைய பிச்சுகிட்டா நான் பொறுப்பு இல்லை.//

:)))))))))

//:-( .....அப்பறம் மறுபடியும் 5-ம் தேதி விழுந்துட்டேன்...

பட்ட காலிலே படும்ன்றது இது தானா?
Take care//

ம்ம்ம் சரி அண்ணா.. :)))

ஸ்ரீமதி said...

@ வெண்பூ
//கொஞ்சம் லேட்டான புத்தாண்டு மற்றும் கொஞ்சம் அட்வான்ஸான பொங்கல் நல்வாழ்த்துகள்..//

ஹை நன்றி அண்ணா.. :)) உங்களுக்கும் என்னோட வாழ்த்துகள்.. :)))

////
நானும் விளையாடி கால் உடைச்சுகிட்டு கட்டு போட்டுகிட்டு வந்தேன்....
//
:( take care.. get well soon..//

Yeah sure.. Thank you anna.. :)))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
////"ம்ம்ம்ம்ம் பெருமாள் சாமிக்கு பொண்ணே இல்லையாம்...."//

இரு இரு சாருகிட்ட சொல்றேன்//

அது யாரு அண்ணா சாரு?? பெருமாள் சாமியோட பொண்ணா?? ;)))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
////நான் கவிதை மட்டுமே போட்டேன். அது எழுதறதும் ஈசி படிக்கிற உங்களுக்கும் ஈசி ஹி ஹி ஹி... ;-))//

அத நாங்க சொல்லனும் அம்மணி...படிக்கிறது ஈஸி தான் ஆனா புரிஞ்ச மாதிரி பின்னூட்டம் போடுறது தான் கஷ்டம்//

ஓ அப்படியா?? அச்சோ பாவம்.. ;))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
////சும்மா இருந்தவள வா ஷெட்டில்கார்க் விளையாடலாம்ன்னு கூப்டான் என் அண்ணா... சரின்னு நானும் விளையாடி கால் உடைச்சுகிட்டு கட்டு போட்டுகிட்டு வந்தேன்....//

கார்க் பொறுக்கி போட கூப்பிட்டதுக்கே இவ்வளவு பில்டப்பா????//

அப்படியே கார்க் பொறுக்கி கொடுக்கறதுன்னாலும்.. அதுக்கும் ஓடனும் தானே?? என்னதிது சின்னப்புள்ளத்தனமா கேள்வி கேட்டுகிட்டு?? ;))))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
////அப்பறம் மறுபடியும் 5-ம் தேதி விழுந்துட்டேன்... அதெல்லாம் விடுங்க... :-((//

அதெப்படி விடுறது...ட்ரீட் வேணுமே//

பாவி அண்ணா விழுந்துட்டு வந்துருக்கேன் அதுக்கு கவலைப்படாம... ட்ரீட் வேணுமாமே.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ;)))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
////அவங்களுக்கு என் நன்றி.... இத நான் இன்னும் யாருக்கும் தரல.... அந்த ரெண்டுபேர்,//

எனக்கு வேண்டாம்மா...அட சொன்னா கேளு எனக்கு வேண்டாம்.. சொல்றேன்ல எனக்கு வேண்டாம்ன்னு...
ஒரு தடவை சொன்னா தெரியாதா எனக்கு வேண்டாம்ன்னு??//

ஏன் அண்ணா நீ இவ்ளோ சொன்னதுக்கு அப்பறமும் நான் உன் பேச்ச கேட்காம போவேனா??

////1. இவர் ரொம்ப யதார்த்தமான... ஆனா, எண்ணிக்கைல குறைவான கவிதைகள் எழுதிருக்கார்.. நிறைய முறை உயிர்மைல இவர் கவிதை வந்திருக்கு... அவரை படிக்க....

2.அடுத்தது இவங்க ரொம்ப அழகா ரொம்ப ரொம்ப கூலா எழுதறவங்க அவங்கள படிக்க.....//

அப்ப எனக்கு இல்லையா..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

அச்சச்சோ டோன்ட் க்ரைய்.. அடுத்த அவார்ட் கண்டிப்பா உனக்கு தான்.. ஓகேவா அண்ணா?? :))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
////பி.கு: பயங்கர வேலைக்கு நடுவுல டைப்பறேன்.... அதனால எப்படி எழுதிருக்கேன்னு தெரியல.... :-((//

பயங்கர வேலைன்னா???? பேய்க்கு பேன் பாக்குற வேலையா? இல்ல பிசாசுக்கு கை கால் அமுக்கி விடுற வேலையா??//

இதெல்லாம் நீங்க செய்ற வேலை... :P நான் இதெல்லாம் செய்யறதில்ல அண்ணா.. :))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
////இதுதாங்க விஷயம்... இத சொல்லவா இவ்ளோ சுத்தி வலைச்சன்னு கேட்கரவங்களுக்கெல்லாம் ஒன்னு சொல்லிகிறேன்...... //

தமிழ் டீச்சரே "வலைச்சு"ஆ இல்ல "வளைச்சா" எந்த லகரம் வருமுங்கோ//

நான் தான் சொன்னேன்ல வேலைக்கு நடுவுல டைப்பறேன்னு.. :((( பேசாம நான் ஆதவனுக்கு பதிலா நான் நக்கீரன்னு வெச்சிக்கோங்க உங்க பேர பொருத்தமா இருக்கும்.. ;)))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
//டைம் ஆச்சு அப்பீட் ஆய்கிறேனுங்கோ....//

:))))))நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//சீரியஸா என்ன சொல்ல வரேன்னே கடைசி வரைக்கும் புரியவே இல்ல…கடைசியில ஒரு வழியா சொல்ல வந்த விஷயத்த சொல்லிட்ட :) புது வருஷத்துலையாவது கை, கால ஒழுங்கா உடைக்காம வச்சுக்க வாழ்த்துக்கள் ;)//

சீரியஸா இங்க ஒண்ணுமே சொல்லல அக்கா... எல்லாமே நார்மல் தான்.. ;)))) இந்த வருஷத்துக்கு தான் முன்னாடியே உடைச்சிக்கிட்டேனே... பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு.. :(( நன்றி அக்கா.. :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//விருதுக்கு வாழ்த்துக்கள்...//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//என்னமோ ஏதோன்னு ஓடிவந்தா பிள்ளை நம்மளைல் இந்த கேள்வியை கேட்க வைக்குது...:)

எங்களுக்கெல்லாம் ஏன் இப்படி...:(//

ஹை... வெற்றி... வெற்றி.. ;)))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//\\
இப்பல்லாம் நிஜமாவே ஆணி அதிகமா இருக்கு... (உண்மைய சொன்னா சிரிக்கக்கூடாது....!!).
\\

:))//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... சிரிக்கக்கூடாதுன்னு சொன்னேன்ல அண்ணா.. :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//\\
மூணாவது வேற எதுவும் இல்ல.. பிரசித்திப் பெற்ற என்னோட அளவில்லாப் பொறுமை (சரி... சரி...) சோம்பேறித்தனம்....
\\

நம்மளுக்கும் இருக்கறதுதான்...//

ஹை... சேம் பின்ச்... ;)))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//\\
இதனால தான் நான் கவிதை மட்டுமே போட்டேன். அது எழுதறதும் ஈசி படிக்கிற உங்களுக்கும் ஈசி ஹி ஹி ஹி... ;-))
\\

அது கவிதைகளிலேயே தெரியுது...!

ஆனா எனக்கெல்லாம தலைகீழா நின்னாலும் இரண்டு வரி கூட தேறாதாம்...:(//

நான் சாதா'ரணமா' எழுதறேன்.. ;)) ஆனா, நீங்க தேவதைக்கு எழுதறீங்க.. அதனால நிறைய யோசிச்சு எழுதுவீங்க.. அதான் ரெண்டு வரி தேறவே நேரம் ஆகிடுது.. :)))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//இப்ப பரவால்லையா மறுபடியும் விழுந்திடாதிங்க..//

ம்ம்ம் இப்ப பரவால்ல அண்ணா.. :)))

ம்ம்ம் கவனித்து நடக்கிறேன்
ஆழமான
கவிதை (காதல்) கடலில்
சிக்கித் திணற.. ;))))))))

ஸ்ரீமதி said...

@ தமிழன்-கறுப்பி...
//\\
ம்ஹும்... நம்ம ஊர்ல ராமராஜ்யம் இல்லன்னாலும்...., ராமராஜன்கள் அதிகம்... பொண்ணுங்களுக்கு எதாவதுனா ஓடி வந்து செய்வாங்க...."
\\

:)
ஏனிப்படி..பழிவாங்குறிங்க...:)//

அச்சச்சோ நான் யாரையும் பழி வாங்கல அண்ணா.. :))

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
//:))))//

:)))))))))))

ஸ்ரீமதி said...

@ Dinesh C
////நம்ம ஊர்ல ராமராஜ்யம் இல்லன்னாலும்...., ராமராஜன்கள் அதிகம்... //

எல்லாம் நேரம் :)//

:)))))))))

//பதிவு.. ரசித்தேன்..
மொக்கை கூட நல்லா தான் போடறீங்க//

அப்படியா?? ;)) நன்றி தினேஷ் C.. :))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//வாழ்த்துக்கள் ஸ்ரீமதி உங்களுக்கும்
உங்களிடமிருந்து விருது
பெற்றவர்களுக்கும்...//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ Thamizhmaangani
//முதல் தடவையா இந்த பக்கம் வரேன்னு நினைக்குறேன். பட்ட காலிலே படும் கதைய கேட்டு ரொம்ப கஷ்டமா போச்சு (அட நிஜமா தான்ங்க..) :)//

ஹை... முதல் வருகைக்கும், எனக்காக கவலைப்பட்டதுக்கும் நன்றி தமிழ் மாங்கனி.. :))) (வாவ் எனக்காக ஒரு ஜீவன்.. :)))

//நிறைய மசாலா மிக்ஸ் பார்ப்பீங்களோ, உங்க எழுத்துகளில் நான் அறிந்தேன். ரசித்தும் படித்தேன்:)//

மசாலா மிக்ஸ்ஸா?? ஹி ஹி ஹி.. ;)) நன்றி.. :))

//ஐயோ.. ஐயோ பாத்துங்க... கீழ விழ போறீங்களோ நினைச்சேன்.. கால்களை பத்திரமா பாத்துங்கோ!:)//

ஓ கண்டிப்பா பத்திரமா பார்த்துக்கறேன்.. :))))))

ஸ்ரீமதி said...

@ கவின்
//வாழ்த்துக்கள்
பெற்றவருக்கும் தங்களுக்கும்.//

நன்றி கவின் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்.. :))))

ஸ்ரீமதி said...

@ logu..
//\\ Ŝ₤Ω..™ said...
என்னம்மா இது??
ஒன்னுமே என் சிறு மூளைக்கு விளங்கல..\\\

mmm.. enakkumthaann..//

இதுல என்ன புரியல? :((

ஸ்ரீமதி said...

@ thevanmayam
//பொங்கல் வாழ்த்துக்கள்!!!!

தேவா...//

நன்றி... :)) உங்களுக்கும் எனது வாழ்த்துகள்.. :)))

ஸ்ரீமதி said...

@ அமிர்தவர்ஷினி அம்மா
//பயங்கர வேலைக்கு நடுவுல டைப்பறேன்.... அதனால எப்படி எழுதிருக்கேன்னு தெரியல.... :-((


பயங்கர வேலையா அது எப்படி இருக்கும்?//

பயங்கரமா இருக்கும்.. ;))))

//விருது வாங்கிய உங்களுக்கும், விருது பெற்றவருக்கும் வாழ்த்துக்கள்//

நன்றி அக்கா :))))))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//:) வாழ்துக்கள் ஸ்ரீ... பாவம் ஒர் சின்ன பொண்ணுக்கு இவ்வளவு ப்ரச்சனையா... ;)//

ம்ம்ம்ம் பாருங்க அக்கா ஒரு ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சின்னப் பொண்ணுக்கு எவ்ளோ பிரச்சனைகள்.. ;)) நன்றி அக்கா :))

ஸ்ரீமதி said...

@ தவநெறிச்செல்வன்
//மிக அழகான வலைப்பூ, இதுதான்முதல் முறை, மிக நேர்த்தியான அமைப்பு, இயல்பான எழுத்து. நல்லாயிருக்கிறது.

வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்கு நன்றிகள் :)))))

ஸ்ரீமதி said...

@ TKB காந்தி
//பாத்து நடங்க ஸ்ரீ, ரெண்டு முறை விழுந்திருக்கீங்க - வருசத்துக்கு ஒன்னுங்ற கணக்குல, இனிமே இப்படி விழாதீங்க - பாத்து பத்திரமா நடங்க, விளையாடுங்க.//

ம்ம்ம் கண்டிப்பா :))

//இந்த Butterfly award உங்ககிட்ட இருந்து வாங்கறது ரொம்ப ரொம்ப சந்தோஷம்.//

நன்றி :))

//'எண்ணிக்கைல குறைவான' - உள்குத்துங்களா :). Award-க்கு நன்றி ஸ்ரீ.//

இதிலென்ன உள்குத்து?? நீங்க வோர்ட்ப்ரெஸ்ல போட்டதும் கொஞ்சம் தானே?? அச்சச்சோ தெரியல... :(( இங்க எல்லாம் Blocked.. நிறைய போட்ருந்தாலும் பரவால்ல.. இன்னும் நிறைய போடுங்க.. கொஞ்ச நாளா கவிதையும் காணோம், ஆளையும் காணோம்.. ;))))))

//என்ன வாழ்த்தின புதியவன், ஜமால், தாமிரா, சென்ஷி, கவின், அமிர்தவர்ஷினி - எல்லோருக்கும் நன்றி :) இத என் blog-ல கண்டிப்பா போடுறேன் ஆனா இந்த award-க்கான formalities-ல எனக்கு concession வேணும், அதாவது இத ஒரு post-ஆ போடுறதுலேருந்து எனக்கு விலக்களிக்கணும் (உங்களமாதிரி கோர்வையா எழுதவராதுங்க). அப்பறம் இந்த award-அ என்ன வாழ்த்தின புதியவன், ஜமால், தாமிரா, சென்ஷி, கவின், அமிர்தவர்ஷினி இவங்களுக்கெல்லாம் கொடுக்கறேன் (இந்த comment-அ இவெங்கெல்லாம் பாப்பாங்கன்னு நம்பறேன்) :) Thanks once again Sri. Take care.

TKB காந்தி//

இந்த கமெண்ட்ட எடுத்து உங்க ப்ளாக்ல போட்ருந்தீங்கன்னா அதுதான் பதிவு... யப்பா எவ்ளோ பெரிய கமெண்ட்.. ;))))) நன்றி.. :)))))

Saravana Kumar MSK said...

//நான் ஆதவன் said
//"ம்ம்ம்ம்ம் பெருமாள் சாமிக்கு பொண்ணே இல்லையாம்...."//

இரு இரு சாருகிட்ட சொல்றேன்//

ஹா..ஹா.. ரிப்பீட்டு.. ;)

Saravana Kumar MSK said...

//நான் ஆதவன் said
//அப்பறம் மறுபடியும் 5-ம் தேதி விழுந்துட்டேன்... அதெல்லாம் விடுங்க... :-((//

அதெப்படி விடுறது...ட்ரீட் வேணுமே//

ரிப்பீட்டு.. :)

Saravana Kumar MSK said...

//ம்ஹும்... நம்ம ஊர்ல ராமராஜ்யம் இல்லன்னாலும்...., ராமராஜன்கள் அதிகம்... பொண்ணுங்களுக்கு எதாவதுனா ஓடி வந்து செய்வாங்க....//

என்ன கொடும சரவணன் இது.. :(

Saravana Kumar MSK said...

//ஸ்ரீமதி said...

ம்ம்ம் கவனித்து நடக்கிறேன்
ஆழமான
கவிதை (காதல்) கடலில்
சிக்கித் திணற.. ;))))))))//

இந்த ரணகளத்திலையும் ஒரு கிளுகிளுப்பா..

Saravana Kumar MSK said...

Take Care Sri..

narsim said...

நல்லா இருந்துச்சு.. ஹேப்பி மாட்டுப் பொங்கல் தமக்கை

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////நான் ஆதவன் said
//"ம்ம்ம்ம்ம் பெருமாள் சாமிக்கு பொண்ணே இல்லையாம்...."//

இரு இரு சாருகிட்ட சொல்றேன்//

ஹா..ஹா.. ரிப்பீட்டு.. ;)//

அவர் சொன்னதே எனக்கு புரியல.. இதுல ரிப்பீட்டு வேற.. :P

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////நான் ஆதவன் said
//அப்பறம் மறுபடியும் 5-ம் தேதி விழுந்துட்டேன்... அதெல்லாம் விடுங்க... :-((//

அதெப்படி விடுறது...ட்ரீட் வேணுமே//

ரிப்பீட்டு.. :)//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////ம்ஹும்... நம்ம ஊர்ல ராமராஜ்யம் இல்லன்னாலும்...., ராமராஜன்கள் அதிகம்... பொண்ணுங்களுக்கு எதாவதுனா ஓடி வந்து செய்வாங்க....//

என்ன கொடும சரவணன் இது.. :(//

இதுல என்ன கொடுமை இருக்கு?? :((

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////ஸ்ரீமதி said...

ம்ம்ம் கவனித்து நடக்கிறேன்
ஆழமான
கவிதை (காதல்) கடலில்
சிக்கித் திணற.. ;))))))))//

இந்த ரணகளத்திலையும் ஒரு கிளுகிளுப்பா..//

:)))))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//Take Care Sri..//

Mmmm sure... :))

ஸ்ரீமதி said...

@ narsim
//நல்லா இருந்துச்சு.. ஹேப்பி மாட்டுப் பொங்கல் தமக்கை//

எது அண்ணா நல்லா இருந்தது?? நான் விழுந்ததா?? ;))) நன்றி அண்ணா... :)) உங்களுக்கும் ஹேப்பி மாட்டுப் பொங்கல்.. ;)))))

Saravana Kumar MSK said...

//ஸ்ரீமதி said...
அவர் சொன்னதே எனக்கு புரியல.. இதுல ரிப்பீட்டு வேற.. :P//

சாருவோட நூற்றியெட்டு சிறுகதைகளின் நாயகன் பெயர் பெருமாள்.. சமீபத்தில் உயிர்மை பதிப்பகம் மூலம் புத்தகமாகவும் வந்து இருக்கிறது..

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////ஸ்ரீமதி said...
அவர் சொன்னதே எனக்கு புரியல.. இதுல ரிப்பீட்டு வேற.. :P//

சாருவோட நூற்றியெட்டு சிறுகதைகளின் நாயகன் பெயர் பெருமாள்.. சமீபத்தில் உயிர்மை பதிப்பகம் மூலம் புத்தகமாகவும் வந்து இருக்கிறது..//

ஓஓ அப்படியா.. நன்றி சரவணா தகவலுக்கு.. :)) நான் GK-ல கொஞ்சம் வீக்.. :((

ஸாவரியா said...

என் செல்ல ஸ்ரீமதி க்கு
உங்க "ஏன் எனக்கு மட்டும் இப்படி??"
படிச்சுட்டு எனக்கு கஷ்டமாப் போச்சு
BUTTERFLY AWARDக்கு பெரிய வாழ்த்துக்கள்! அடுத்தது BUTTERFLIGHT AWARDதான் உங்களுக்கு
சரின்னு கீழ வந்துப் பார்த்தா...எனக்கும் Butterfly Award ரொம்ப ரொம்ப நன்றி!
கொஞ்ச நாளாவே,..ஜலதோஷம்,..இருமல்,.ஜுரம்ன்னு அவதிப்பட்டதால சரி வர தளங்களுக்கு போய்ப் படிக்க முடியல..தாமததுக்கு மன்னிக்கவும்

ஸ்ரீமதி said...

@ ஸாவரியா
//என் செல்ல ஸ்ரீமதி க்கு
உங்க "ஏன் எனக்கு மட்டும் இப்படி??"
படிச்சுட்டு எனக்கு கஷ்டமாப் போச்சு
BUTTERFLY AWARDக்கு பெரிய வாழ்த்துக்கள்! அடுத்தது BUTTERFLIGHT AWARDதான் உங்களுக்கு
சரின்னு கீழ வந்துப் பார்த்தா...எனக்கும் Butterfly Award ரொம்ப ரொம்ப நன்றி!
கொஞ்ச நாளாவே,..ஜலதோஷம்,..இருமல்,.ஜுரம்ன்னு அவதிப்பட்டதால சரி வர தளங்களுக்கு போய்ப் படிக்க முடியல..தாமததுக்கு மன்னிக்கவும்//

அச்சச்சோ சாவரியா நீயும் உடம்ப பார்த்துக்கோ.. வாழ்த்துகள்.. :)) நன்றி. :))

Ramya said...

hi SriMathi ...

I read some of ur kavidhai(கரையோர கனவுகள் )
I liked very much.....

ஸ்ரீமதி said...

@ Ramya
//hi SriMathi ...

I read some of ur kavidhai(கரையோர கனவுகள் )
I liked very much.....//

நன்றி ரம்யா :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது