நானாகிய நான்


பிரிவு,
பசலை நோய்
பைத்தியக்காரத்தனம்
என்றேன்...
நான்
பைத்தியமாகும் வரை...முத்தம் மொழிந்த
உதடுகளுக்கு
மௌனம் கற்பிக்கிறேன்
பிரிவில்....
நான்
நீ
நாமாகி...
இன்று,
நான் மட்டுமாகிப்போனேன்...
அறியாத ராசிபலன்
மீன ராசிக்கு
இன்று வரவென்றது.....
கவனிப்பில்லாமல்
கதறும் குழந்தையாய்
தவித்துக்கிடக்கின்றன....
உனக்கான
என் கவிதைகள்
பிரிவுகளினும்
ரணம் கூட்டும்
இந்த வரிகளையாவது
வாங்கிக்கொள்.......


யோசிக்க நினைத்த
கவிதைகளிலெல்லாம்
கருவாகி
அவனில்லா
கவிதை என்பது
ஆக்ஸிஜன் தாண்டிய
சுவாசமானதெனக்கு.....

சாலையெங்கும்
சிதறிகிடக்கின்றன
இரத்தத்துளிகள்...
பிரிவில்
பிய்த்து எடுத்துவந்த
பாதி இதயமுடன்
நான்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

114 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

நட்புடன் ஜமால் said...

\\"நானாகிய நான்"\\

அருமை ...

நட்புடன் ஜமால் said...

\\நான்
பைத்தியமாகும் வரை...\\

ஹா ஹா ஹா

நிஜமாவா ...

நட்புடன் ஜமால் said...

\\யோசிக்க நினைத்த
கவிதைகளிலெல்லாம்
கருவாகி
அவனில்லா
கவிதை என்பது
ஆக்ஸிஜன் தாண்டிய
சுவாசமானதெனக்கு.....\\

மிக அழகு ...

Maddy said...

பிரிவு,
பசலை நோய்
பைத்தியக்காரத்தனம்
என்றேன்...
நான்
பைத்தியமாகும் வரை...

இந்த நோய்க்கு வைத்தியர் யாரவது உண்டா? இல்லை சுய வைத்தியம் தானா?

எப்போதும் போல வரிகள் அனைத்தும் அருமை. பிரிவிலே வளர்கிறதா??

logu.. said...

\\பிரிவு,
பசலை நோய்
பைத்தியக்காரத்தனம்
என்றேன்...
நான்
பைத்தியமாகும் வரை...\\

:))))))


\\முத்தம் மொழிந்த
உதடுகளுக்கு
மௌனம் கற்பிக்கிறேன்
பிரிவில்....\\

kathigal pesiya vizhikalai
enna seiveergal?

\\நான்
நீ
நாமாகி...
இன்று,
நான் மட்டுமாகிப்போனேன்...
அறியாத ராசிபலன்
மீன ராசிக்கு
இன்று வரவென்றது.....\\


ammam..
kathal mattume sumantha ithayathirku
ninaivugal paramthane..

கவனிப்பில்லாமல்
கதறும் குழந்தையாய்
தவித்துக்கிடக்கிண்டறன....
உனக்கான
என் கவிதைகள்
பிரிவுகளினும்
ரணம் கூட்டும்
இந்த வரிகளையாவது
வாங்கிக்கொள்.......

hyyo.. romba superp..
valigalum sugamthan..

\\யோசிக்க நினைத்த
கவிதைகளிலெல்லாம்
கருவாகி
அவனில்லா
கவிதை என்பது
ஆக்ஸிஜன் தாண்டிய
சுவாசமானதெனக்கு.....\\

:))))))))))

நான் ஆதவன் said...

நல்லாயிருக்கு, ஆனா ஏன் இம்புட்டு சோகம்?

இனியவள் புனிதா said...

//மீன ராசிக்கு//

நான் கூட அந்த இராசித்தான்..வரவு உண்டா? சம்பள நாளுக்கு இன்னமும் 10 நாட்கள் இருக்கே :-(

கானா பிரபா said...

எப்டீங்க அட எப்டீங்க இப்படியெல்லாம்

நட்புடன் ஜமால் said...

\\முத்தம் மொழிந்த
உதடுகளுக்கு
மௌனம் கற்பிக்கிறேன்
பிரிவில்....\\

இந்த வரிகளும் இதற்கான புகைப்படமும் மிகவும் அருமை.

வனம் said...

வணக்கம்

எப்படிங்க இதெல்லாம்
ஆமா படம் போட்டுட்டு கவிதை எழுதுவீர்களா இல்ல கவிதை எழூதீட்டு படம் போடுவீங்களா

சரி படம் எல்லாம் எப்படி எடுக்குறீங்க
நானும் போடனும், கொஞ்சம் சொன்னா பொலச்சுக்குவேன்

நன்றி
இராஜராஜன்

புதியவன் said...

//பிரிவு,
பசலை நோய்
பைத்தியக்காரத்தனம்
என்றேன்...
நான்
பைத்தியமாகும் வரை...//

அருமை...அருமை...
’பசலை’ இந்த வார்த்தைய ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன் நினைவு
படுத்தியதற்கு நன்றி...

புதியவன் said...

//முத்தம் மொழிந்த உதடுகளுக்கு மௌனம் கற்பிக்கிறேன் பிரிவில்....//

ரொம்ப நல்லா இருக்கு...

புதியவன் said...

//சிதறிகிடக்கின்றன
இரத்தத்துளிகள்...
பிரிவில்
பிய்த்து எடுத்துவந்த
பாதி இதயமுடன்
நான்...//

ரொம்ப சோகம்... இருந்தாலும் அருமை...

ஆயில்யன் said...

/பிரிவில்
பிய்த்து எடுத்துவந்த
பாதி இதயமுடன்
நான்... //


:((((((((

பெருசோகம்?!?!
”ஓ”வென்று பெருங்குரலெடுத்து அழத்தோன்றுகிறது!

ஆயில்யன் said...

பட் நீங்க செஞ்சது தப்புங்க எதுக்கு ஒரு பாதியை பிச்சு எடுத்துட்டு வந்தீங்க?

anbudan vaalu said...

ஸ்ரீ.....ரொம்ப feel பண்றீங்களே....யாருன்னு சொல்லுங்க நான் சேர்த்து வைக்கிறேன்....
;)))

கவிதை அருமை....வழக்கம் போலவே.....

ஆயில்யன் said...

//கானா பிரபா said...
எப்டீங்க அட எப்டீங்க இப்படியெல்லாம்
//

அண்ணாச்சி இங்கன சோகம் தெறிக்குது!

:( இப்பிடி அல்லாங்காட்டி :)))

எதாச்சும் எக்ஸ்பிரஷன் கொடுத்திட்டு போங்க !!

நிஜமா நல்லவன் said...

:)

நிஜமா நல்லவன் said...

/நட்புடன் ஜமால் said...

\\நான்
பைத்தியமாகும் வரை...\\

ஹா ஹா ஹா

நிஜமாவா .../


சொன்னா நம்பனும் அண்ணே....இப்படி எல்லாம் கேள்வி கேக்க கூடாது...:)

இனியவள் புனிதா said...

சுக ராகம் சோகம் என்பது போல் கவிதை முழுதும் சோகம் நிரம்பி வழிந்தும் சுகமாய் இருக்கிறது உங்கள் வரிகள்.. சோகம் கூட சுகமானதுதான் :-) எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மதி கவிதைகள் அனைத்தும்!!

thevanmayam said...

சாலையெங்கும்
சிதறிகிடக்கின்றன
இரத்தத்துளிகள்...
பிரிவில்
பிய்த்து எடுத்துவந்த
பாதி இதயமுடன்
நான்...///

உங்கள்
கவிதையில்
இதயத்தின்
ஓயாத
துடிப்பை
எப்படி
பதிகிறீர்கள்?

தேவா...

dharshini said...

// பிரிவு,
பசலை நோய்
பைத்தியக்காரத்தனம்
என்றேன்...
நான்
பைத்தியமாகும் வரை...//

உண்மைய ஒத்துக்கனா சரிதான்...

எல்லாமே சூப்பர்...

// சாலையெங்கும்
சிதறிகிடக்கின்றன
இரத்தத்துளிகள்...
பிரிவில்
பிய்த்து எடுத்துவந்த
பாதி இதயமுடன்
நான்.//

ரொம்ப சூப்பர்..

VIKNESHWARAN said...

நல்லா இருக்கு...

Divyapriya said...

// நான்
நீ
நாமாகி...
இன்று,
நான் மட்டுமாகிப்போனேன்...
அறியாத ராசிபலன்
மீன ராசிக்கு
இன்று வரவென்றது.....//

வாவ்…இது சூப்பரா இருக்கு…இது மட்டுமில்ல, எல்லாமே அருமை :)))

கோபிநாத் said...

ஒரு பெரிய கவிதையை வெட்டி வெட்டி போட்டது போல இருக்கு.

வித்தியாசமான முயற்சி ;)

கோபிநாத் said...

ஒரு பெரிய கவிதையை வெட்டி வெட்டி போட்டது போல இருக்கு.

வித்தியாசமான முயற்சி ;)

கோபிநாத் said...

\\கானா பிரபா said...
எப்டீங்க அட எப்டீங்க இப்படியெல்லாம்
\\\

தல உங்க பின்னூட்டத்தில் பல உள்குத்து இருக்கும் போல..;))

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்யன் said...
/பிரிவில்
பிய்த்து எடுத்துவந்த
பாதி இதயமுடன்
நான்... //


:((((((((

பெருசோகம்?!?!
”ஓ”வென்று பெருங்குரலெடுத்து அழத்தோன்றுகிறது!

எதுக்கு பாதி இதயத்தை அவங்க பிச்சி எடுத்துக்கிட்டாங்களே, அதுக்கா,
அது இதயம், சாப்பாடு இல்ல, அழாதீங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

எத்தனை தடவைதான் சொல்றது அருமையா இருக்கு அப்படின்னு.

ஒன்னு செய்யுங்க. இதை கட் அண்ட் பேஸ்ட் செய்து உங்களோட அடுத்த கவிதை பதிவுக்கும் போட்டுடுங்க.

தாமிரா said...

அமிர்தவர்ஷினி அம்மா said...
எத்தனை தடவைதான் சொல்றது அருமையா இருக்கு அப்படின்னு.
ஒன்னு செய்யுங்க. இதை கட் அண்ட் பேஸ்ட் செய்து உங்களோட அடுத்த கவிதை பதிவுக்கும் போட்டுடுங்க.///

ரிப்பீட்டு.!

தமிழ் தோழி said...

///பிரிவு,
பசலை நோய்
பைத்தியக்காரத்தனம்
என்றேன்...
நான்
பைத்தியமாகும் வரை...///

சூப்பர்

தமிழ் தோழி said...

///முத்தம் மொழிந்த உதடுகளுக்கு மௌனம் கற்பிக்கிறேன் பிரிவில்....
///

அருமையான வரிகள்

Minnveli said...

Miga sirappaga kavithaikal irukkinrana. ivvalavu kaathalai vaiththukkondu engirukkiraai penne

Karthik said...

வாவ், எல்லாமே சூப்பரா இருக்கு.

//அறியாத ராசிபலன்
மீன ராசிக்கு
இன்று வரவென்றது.....

சான்ஸே இல்லை.

தாரணி பிரியா said...

ஆஹா இதை எல்லாம் படிச்ச பிறகு சோகம் கூட இத்தனை அழகான்னு தோணுது ஸ்ரீ.

தாரணி பிரியா said...

//முத்தம் மொழிந்த உதடுகளுக்கு மௌனம் கற்பிக்கிறேன் பிரிவில்....//


எப்படி இப்படி எல்லாம் சான்ஸே இல்லை ஸ்ரீ

தாரணி பிரியா said...

//நீ
நாமாகி...
இன்று,
நான் மட்டுமாகிப்போனேன்...//


காதலோட பிரிவை இத்தனை ரசனையா கூட சொல்லமுடியுமா என்ன‌

தாரணி பிரியா said...

//யோசிக்க நினைத்த
கவிதைகளிலெல்லாம்
கருவாகி
அவனில்லா
கவிதை என்பது
ஆக்ஸிஜன் தாண்டிய
சுவாசமானதெனக்கு.....


சாலையெங்கும்
சிதறிகிடக்கின்றன
இரத்தத்துளிகள்...
பிரிவில்
பிய்த்து எடுத்துவந்த
பாதி இதயமுடன்
நான்//

காதலையும் அதன் வலிகளையும் அழுத்தமா சொல்லறீங்க‌

நாணல் said...

//பிரிவு,
பசலை நோய்
பைத்தியக்காரத்தனம்
என்றேன்...
நான்
பைத்தியமாகும் வரை...//


OO appadiyaa kadhai.... ;)


//கவனிப்பில்லாமல் கதறும் குழந்தையாய் தவித்துக்கிடக்கின்றன.... உனக்கான என் கவிதைகள் பிரிவுகளினும் ரணம் கூட்டும் இந்த வரிகளையாவது வாங்கிக்கொள்.......//

vaangikkongalen... paavam sri.... :P

Divya said...

சோகமான கவிதை என்றாலும்......உணர்வுபூர்வமான வரிகள் அனைத்துமே அருமை ஸ்ரீமதி:))

பாராட்டுக்கள்!!!

PoornimaSaran said...

//சாலையெங்கும்
சிதறிகிடக்கின்றன
இரத்தத்துளிகள்...
பிரிவில்
பிய்த்து எடுத்துவந்த
பாதி இதயமுடன்
நான்... //


ஆஹா!! அருமை அருமை :))

Saravana Kumar MSK said...

நான் லேட்..

Saravana Kumar MSK said...

கவிதைகள் வழக்கம் போல் கலக்கல் ஸ்ரீ..

Saravana Kumar MSK said...

//பிரிவு,
பசலை நோய்
பைத்தியக்காரத்தனம்
என்றேன்...
நான்
பைத்தியமாகும் வரை...//

கலக்கல்.. :)

Saravana Kumar MSK said...

//கவனிப்பில்லாமல்
கதறும் குழந்தையாய்
தவித்துக்கிடக்கின்றன....
உனக்கான
என் கவிதைகள்
பிரிவுகளினும்
ரணம் கூட்டும்
இந்த வரிகளையாவது
வாங்கிக்கொள்......//

அட்டகாசம்.. எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஸ்ரீ.. :)

Saravana Kumar MSK said...

//யோசிக்க நினைத்த
கவிதைகளிலெல்லாம்
கருவாகி
அவனில்லா
கவிதை என்பது
ஆக்ஸிஜன் தாண்டிய
சுவாசமானதெனக்கு....//

இதுவும் அட்டகாசம்.. :)

Saravana Kumar MSK said...

//சாலையெங்கும்
சிதறிகிடக்கின்றன
இரத்தத்துளிகள்...
பிரிவில்
பிய்த்து எடுத்துவந்த
பாதி இதயமுடன்
நான்...//

அட இதுவும்தான்.. :)

Saravana Kumar MSK said...

//நான்
பைத்தியமாகும் வரை...//

ஐயோ.. நீ பைத்தியமா.. ;)

(இது மட்டும் ச்சும்மா.. விளையாட்டுக்கு..)

Saravana Kumar MSK said...

எல்லா கவிதையும் கலக்கல்.. ஆனால் ஏன் சோகம்..???

Saravana Kumar MSK said...

Me the 50.. ;)

காண்டீபன் said...

நான்
நீ
நாமாகி...
இன்று,
நான் மட்டுமாகிப்போனேன்...//

அழகு. சோகம் கூட ஒரு வகையில் அழகு தான் தெரியுமா?

காண்டீபன் said...

//சாலையெங்கும்
சிதறிகிடக்கின்றன
இரத்தத்துளிகள்...
பிரிவில்
பிய்த்து எடுத்துவந்த
பாதி இதயமுடன்
நான்//

எல்லா காயமும் ஆறும் தோழி.. :)
இன்று இரத்தம் வடியும் இதயங்களில் சீக்கிரம் காதலும் அன்பும் பொங்க என் வாழ்த்துக்கள்.

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//\\"நானாகிய நான்"\\

அருமை ...//

நன்றி அண்ணா :))))

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//\\நான்
பைத்தியமாகும் வரை...\\

ஹா ஹா ஹா

நிஜமாவா ...//

ஹி ஹி ஹி

நிஜம்தான்...
(என்ன நிஜமாவா?? ;)))

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//\\யோசிக்க நினைத்த
கவிதைகளிலெல்லாம்
கருவாகி
அவனில்லா
கவிதை என்பது
ஆக்ஸிஜன் தாண்டிய
சுவாசமானதெனக்கு.....\\

மிக அழகு ...//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ Maddy
//பிரிவு,
பசலை நோய்
பைத்தியக்காரத்தனம்
என்றேன்...
நான்
பைத்தியமாகும் வரை...

இந்த நோய்க்கு வைத்தியர் யாரவது உண்டா? இல்லை சுய வைத்தியம் தானா?//

வைத்தியர் இல்லைன்னு தான் நினைக்கிறேன்..அனுபவசாலிகள் சொன்னா பரவால்ல.. ;)))

//எப்போதும் போல வரிகள் அனைத்தும் அருமை. பிரிவிலே வளர்கிறதா??//

பிரிவிலே வளர்கிறதா?? கவிதையா?? இல்லை.. :)))

ஸ்ரீமதி said...

@ logu..
//kathigal pesiya vizhikalai
enna seiveergal?//

விழிகள ஒன்னும் பண்ண முடியல.. :((

//ammam..
kathal mattume sumantha ithayathirku
ninaivugal paramthane..//

:)))

//hyyo.. romba superp..
valigalum sugamthan..

:))))))))))//

நன்றி லோகநாதன் :))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
//நல்லாயிருக்கு, ஆனா ஏன் இம்புட்டு சோகம்?//

சும்மா தான் அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////மீன ராசிக்கு//

நான் கூட அந்த இராசித்தான்..வரவு உண்டா? சம்பள நாளுக்கு இன்னமும் 10 நாட்கள் இருக்கே :-(//

ஹை ஆச தோச அப்பளம் வட.. ;))

ஸ்ரீமதி said...

@ கானா பிரபா
//எப்டீங்க அட எப்டீங்க இப்படியெல்லாம்//

என்னது அண்ணா?? :((

ஸ்ரீமதி said...

@ நட்புடன் ஜமால்
//\\முத்தம் மொழிந்த
உதடுகளுக்கு
மௌனம் கற்பிக்கிறேன்
பிரிவில்....\\

இந்த வரிகளும் இதற்கான புகைப்படமும் மிகவும் அருமை.//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ வனம்
//வணக்கம்

எப்படிங்க இதெல்லாம்
ஆமா படம் போட்டுட்டு கவிதை எழுதுவீர்களா இல்ல கவிதை எழூதீட்டு படம் போடுவீங்களா

சரி படம் எல்லாம் எப்படி எடுக்குறீங்க
நானும் போடனும், கொஞ்சம் சொன்னா பொலச்சுக்குவேன்

நன்றி
இராஜராஜன்//

கவிதை எழுதிட்டு தான் படம் தேடுவேன்.. கூகிள்ல சர்ச் பண்ணறேன் படங்களுக்கு.. ப்ளாக்ல எப்படி Upload பண்றதுன்னு கேட்கறீங்களா??

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////பிரிவு,
பசலை நோய்
பைத்தியக்காரத்தனம்
என்றேன்...
நான்
பைத்தியமாகும் வரை...//

அருமை...அருமை...
’பசலை’ இந்த வார்த்தைய ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன் நினைவு
படுத்தியதற்கு நன்றி...//

நன்றி புதியவன்.. :))) பசலைய உங்க பதிவுலையும் பார்த்தேன்.. ;))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////முத்தம் மொழிந்த உதடுகளுக்கு மௌனம் கற்பிக்கிறேன் பிரிவில்....//

ரொம்ப நல்லா இருக்கு...//

நன்றி புதியவன் :)))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////சிதறிகிடக்கின்றன
இரத்தத்துளிகள்...
பிரிவில்
பிய்த்து எடுத்துவந்த
பாதி இதயமுடன்
நான்...//

ரொம்ப சோகம்... இருந்தாலும் அருமை...//

:)))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
///பிரிவில்
பிய்த்து எடுத்துவந்த
பாதி இதயமுடன்
நான்... //


:((((((((

பெருசோகம்?!?!
”ஓ”வென்று பெருங்குரலெடுத்து அழத்தோன்றுகிறது!//

சரி அழுங்க ;))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//பட் நீங்க செஞ்சது தப்புங்க எதுக்கு ஒரு பாதியை பிச்சு எடுத்துட்டு வந்தீங்க?//

மிட்டாய் வாங்கி சாப்ட...

ஸ்ரீமதி said...

@ anbudan vaalu
//ஸ்ரீ.....ரொம்ப feel பண்றீங்களே....யாருன்னு சொல்லுங்க நான் சேர்த்து வைக்கிறேன்....
;)))//

:))))))

//கவிதை அருமை....வழக்கம் போலவே.....//

நன்றி வாலு :)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////கானா பிரபா said...
எப்டீங்க அட எப்டீங்க இப்படியெல்லாம்
//

அண்ணாச்சி இங்கன சோகம் தெறிக்குது!

:( இப்பிடி அல்லாங்காட்டி :)))

எதாச்சும் எக்ஸ்பிரஷன் கொடுத்திட்டு போங்க !!//

:))))))))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//:)//

:)))))))))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///நட்புடன் ஜமால் said...

\\நான்
பைத்தியமாகும் வரை...\\

ஹா ஹா ஹா

நிஜமாவா .../


சொன்னா நம்பனும் அண்ணே....இப்படி எல்லாம் கேள்வி கேக்க கூடாது...:)//

:))))))))))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//சுக ராகம் சோகம் என்பது போல் கவிதை முழுதும் சோகம் நிரம்பி வழிந்தும் சுகமாய் இருக்கிறது உங்கள் வரிகள்.. சோகம் கூட சுகமானதுதான் :-) எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மதி கவிதைகள் அனைத்தும்!!//

ஹை நன்றி அக்கா :))))))

ஸ்ரீமதி said...

@ thevanmayam
//சாலையெங்கும்
சிதறிகிடக்கின்றன
இரத்தத்துளிகள்...
பிரிவில்
பிய்த்து எடுத்துவந்த
பாதி இதயமுடன்
நான்...///

உங்கள்
கவிதையில்
இதயத்தின்
ஓயாத
துடிப்பை
எப்படி
பதிகிறீர்கள்?

தேவா...//

நன்றி தேவா :))

ஸ்ரீமதி said...

@ dharshini
//// பிரிவு,
பசலை நோய்
பைத்தியக்காரத்தனம்
என்றேன்...
நான்
பைத்தியமாகும் வரை...//

உண்மைய ஒத்துக்கனா சரிதான்...//

நாங்க எப்பவும் உண்மை தான் பேசுவோம்.. :)))

//எல்லாமே சூப்பர்...//

நன்றி :)))

//// சாலையெங்கும்
சிதறிகிடக்கின்றன
இரத்தத்துளிகள்...
பிரிவில்
பிய்த்து எடுத்துவந்த
பாதி இதயமுடன்
நான்.//

ரொம்ப சூப்பர்..//

நன்றி தர்ஷினி.. :)))

ஸ்ரீமதி said...

@ VIKNESHWARAN
//நல்லா இருக்கு...//

நன்றி அண்ணா.. :)))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//// நான்
நீ
நாமாகி...
இன்று,
நான் மட்டுமாகிப்போனேன்...
அறியாத ராசிபலன்
மீன ராசிக்கு
இன்று வரவென்றது.....//

வாவ்…இது சூப்பரா இருக்கு…இது மட்டுமில்ல, எல்லாமே அருமை :)))//

நன்றி அக்கா :))))))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//ஒரு பெரிய கவிதையை வெட்டி வெட்டி போட்டது போல இருக்கு.

வித்தியாசமான முயற்சி ;)//

ஹை நன்றி :))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//ஒரு பெரிய கவிதையை வெட்டி வெட்டி போட்டது போல இருக்கு.

வித்தியாசமான முயற்சி ;)//

?????????
!!!!!!!!! :)))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//\\கானா பிரபா said...
எப்டீங்க அட எப்டீங்க இப்படியெல்லாம்
\\\

தல உங்க பின்னூட்டத்தில் பல உள்குத்து இருக்கும் போல..;))//

என்னது?? :((

ஸ்ரீமதி said...

@ அமிர்தவர்ஷினி அம்மா
//ஆயில்யன் said...
/பிரிவில்
பிய்த்து எடுத்துவந்த
பாதி இதயமுடன்
நான்... //


:((((((((

பெருசோகம்?!?!
”ஓ”வென்று பெருங்குரலெடுத்து அழத்தோன்றுகிறது!

எதுக்கு பாதி இதயத்தை அவங்க பிச்சி எடுத்துக்கிட்டாங்களே, அதுக்கா,
அது இதயம், சாப்பாடு இல்ல, அழாதீங்க.//

அக்கா ரொம்ப ரசிச்சேன்.. :)))))))))

ஸ்ரீமதி said...

@ அமிர்தவர்ஷினி அம்மா
//எத்தனை தடவைதான் சொல்றது அருமையா இருக்கு அப்படின்னு.

ஒன்னு செய்யுங்க. இதை கட் அண்ட் பேஸ்ட் செய்து உங்களோட அடுத்த கவிதை பதிவுக்கும் போட்டுடுங்க.//

நன்றி அக்கா :))

ஸ்ரீமதி said...

@ தாமிரா
//அமிர்தவர்ஷினி அம்மா said...
எத்தனை தடவைதான் சொல்றது அருமையா இருக்கு அப்படின்னு.
ஒன்னு செய்யுங்க. இதை கட் அண்ட் பேஸ்ட் செய்து உங்களோட அடுத்த கவிதை பதிவுக்கும் போட்டுடுங்க.///

ரிப்பீட்டு.!//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ தமிழ் தோழி
/////பிரிவு,
பசலை நோய்
பைத்தியக்காரத்தனம்
என்றேன்...
நான்
பைத்தியமாகும் வரை...///

சூப்பர்//

நன்றி அக்கா :)))

ஸ்ரீமதி said...

@ தமிழ் தோழி
/////முத்தம் மொழிந்த உதடுகளுக்கு மௌனம் கற்பிக்கிறேன் பிரிவில்....
///

அருமையான வரிகள்//

நன்றி :)))))))

ஸ்ரீமதி said...

@ Minnveli
//Miga sirappaga kavithaikal irukkinrana. ivvalavu kaathalai vaiththukkondu engirukkiraai penne//

நன்றி முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்.. :))

ஸ்ரீமதி said...

@ Karthik
//வாவ், எல்லாமே சூப்பரா இருக்கு.

//அறியாத ராசிபலன்
மீன ராசிக்கு
இன்று வரவென்றது.....

சான்ஸே இல்லை.//

நன்றி கார்த்திக் :))

ஸ்ரீமதி said...

@ தாரணி பிரியா
//ஆஹா இதை எல்லாம் படிச்ச பிறகு சோகம் கூட இத்தனை அழகான்னு தோணுது ஸ்ரீ.//

நிஜமாவா அக்கா?? ;)))))))

ஸ்ரீமதி said...

@ தாரணி பிரியா
////முத்தம் மொழிந்த உதடுகளுக்கு மௌனம் கற்பிக்கிறேன் பிரிவில்....//


எப்படி இப்படி எல்லாம் சான்ஸே இல்லை ஸ்ரீ//

நன்றி அக்கா :))))))

ஸ்ரீமதி said...

@ தாரணி பிரியா
////நீ
நாமாகி...
இன்று,
நான் மட்டுமாகிப்போனேன்...//


காதலோட பிரிவை இத்தனை ரசனையா கூட சொல்லமுடியுமா என்ன‌//

:))))))))

ஸ்ரீமதி said...

@ தாரணி பிரியா
////யோசிக்க நினைத்த
கவிதைகளிலெல்லாம்
கருவாகி
அவனில்லா
கவிதை என்பது
ஆக்ஸிஜன் தாண்டிய
சுவாசமானதெனக்கு.....


சாலையெங்கும்
சிதறிகிடக்கின்றன
இரத்தத்துளிகள்...
பிரிவில்
பிய்த்து எடுத்துவந்த
பாதி இதயமுடன்
நான்//

காதலையும் அதன் வலிகளையும் அழுத்தமா சொல்லறீங்க‌//

நன்றி அக்கா அழகான ரசிப்பிற்கு :)))))

ஸ்ரீமதி said...

@ நாணல்
////பிரிவு,
பசலை நோய்
பைத்தியக்காரத்தனம்
என்றேன்...
நான்
பைத்தியமாகும் வரை...//


OO appadiyaa kadhai.... ;)//

ம்ம்ம் அப்படிதான்... ;)))))

////கவனிப்பில்லாமல் கதறும் குழந்தையாய் தவித்துக்கிடக்கின்றன.... உனக்கான என் கவிதைகள் பிரிவுகளினும் ரணம் கூட்டும் இந்த வரிகளையாவது வாங்கிக்கொள்.......//

vaangikkongalen... paavam sri.... :P//

ம்ம்ம் நல்லா சொல்லுங்க அக்கா.. பாவம் தானே நான்.. :))))))

ஸ்ரீமதி said...

@ Divya
//சோகமான கவிதை என்றாலும்......உணர்வுபூர்வமான வரிகள் அனைத்துமே அருமை ஸ்ரீமதி:))

பாராட்டுக்கள்!!!//

நன்றி அக்கா :))))))

ஸ்ரீமதி said...

@ PoornimaSaran
////சாலையெங்கும்
சிதறிகிடக்கின்றன
இரத்தத்துளிகள்...
பிரிவில்
பிய்த்து எடுத்துவந்த
பாதி இதயமுடன்
நான்... //


ஆஹா!! அருமை அருமை :))//

ஹை நன்றி :)))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//நான் லேட்..//

:)))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//கவிதைகள் வழக்கம் போல் கலக்கல் ஸ்ரீ..//

நன்றி சரவணா :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////பிரிவு,
பசலை நோய்
பைத்தியக்காரத்தனம்
என்றேன்...
நான்
பைத்தியமாகும் வரை...//

கலக்கல்.. :)//

நன்றி :)))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////கவனிப்பில்லாமல்
கதறும் குழந்தையாய்
தவித்துக்கிடக்கின்றன....
உனக்கான
என் கவிதைகள்
பிரிவுகளினும்
ரணம் கூட்டும்
இந்த வரிகளையாவது
வாங்கிக்கொள்......//

அட்டகாசம்.. எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஸ்ரீ.. :)//

நன்றி சரவணா :)))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////யோசிக்க நினைத்த
கவிதைகளிலெல்லாம்
கருவாகி
அவனில்லா
கவிதை என்பது
ஆக்ஸிஜன் தாண்டிய
சுவாசமானதெனக்கு....//

இதுவும் அட்டகாசம்.. :)//

:))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////சாலையெங்கும்
சிதறிகிடக்கின்றன
இரத்தத்துளிகள்...
பிரிவில்
பிய்த்து எடுத்துவந்த
பாதி இதயமுடன்
நான்...//

அட இதுவும்தான்.. :)//

:)))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////நான்
பைத்தியமாகும் வரை...//

ஐயோ.. நீ பைத்தியமா.. ;)

(இது மட்டும் ச்சும்மா.. விளையாட்டுக்கு..)//

:))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//எல்லா கவிதையும் கலக்கல்.. ஆனால் ஏன் சோகம்..???//

சும்மா தான் :))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//Me the 50.. ;)//

:)))

ஸ்ரீமதி said...

@ காண்டீபன்
//நான்
நீ
நாமாகி...
இன்று,
நான் மட்டுமாகிப்போனேன்...//

அழகு. சோகம் கூட ஒரு வகையில் அழகு தான் தெரியுமா?//

ம்ம்ம் ஆமாம் காண்டீபன் :)))

ஸ்ரீமதி said...

@ காண்டீபன்
////சாலையெங்கும்
சிதறிகிடக்கின்றன
இரத்தத்துளிகள்...
பிரிவில்
பிய்த்து எடுத்துவந்த
பாதி இதயமுடன்
நான்//

எல்லா காயமும் ஆறும் தோழி.. :)
இன்று இரத்தம் வடியும் இதயங்களில் சீக்கிரம் காதலும் அன்பும் பொங்க என் வாழ்த்துக்கள்.//

நன்றி காண்டீபன் :))

நவீன் ப்ரகாஷ் said...

//பிரிவு,
பசலை நோய்
பைத்தியக்காரத்தனம்
என்றேன்...
நான்
பைத்தியமாகும் வரை...//

உணர்வுகள் அழகு ஸ்ரீமதி :)))

ஸ்ரீமதி said...

@ நவீன் ப்ரகாஷ்
////பிரிவு,
பசலை நோய்
பைத்தியக்காரத்தனம்
என்றேன்...
நான்
பைத்தியமாகும் வரை...//

உணர்வுகள் அழகு ஸ்ரீமதி :)))//

நன்றி அண்ணா :))

அனுஜன்யா said...

நல்லா இருக்கு ஸ்ரீ. எப்படியெல்லாம் யோசிக்கறீங்க!

அனுஜன்யா

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//நல்லா இருக்கு ஸ்ரீ. எப்படியெல்லாம் யோசிக்கறீங்க!

அனுஜன்யா//

நன்றி அண்ணா :)))

Muthusamy said...

அருமை ...

ஸ்ரீமதி said...

@ Muthusamy
//அருமை ...//

நன்றி :)))

நவீன் ப்ரகாஷ் said...

தலைப்பே அழகா இருக்கு ஸ்ரீமதி !!! :))

ஸ்ரீமதி said...

@ நவீன் ப்ரகாஷ்
//தலைப்பே அழகா இருக்கு ஸ்ரீமதி !!! :))//

நன்றி அண்ணா :))

நவீன் ப்ரகாஷ் said...

//பிரிவு,
பசலை நோய்
பைத்தியக்காரத்தனம்
என்றேன்...
நான்
பைத்தியமாகும் வரை...//

ம்ம்ம்.... அப்படியா..? :))

உன்மத்தமான மனது.. அழகான வரிகளில்...

//சாலையெங்கும்
சிதறிகிடக்கின்றன
இரத்தத்துளிகள்...
பிரிவில்
பிய்த்து எடுத்துவந்த
பாதி இதயமுடன்
நான்...//

:))

ஏன் இப்படி கொடூரமா சிந்திச்சுகிட்டு இருக்கீங்க‌ ஸ்ரீமதி...?? :))))

ஸ்ரீமதி said...

@ நவீன் ப்ரகாஷ்
////பிரிவு,
பசலை நோய்
பைத்தியக்காரத்தனம்
என்றேன்...
நான்
பைத்தியமாகும் வரை...//

ம்ம்ம்.... அப்படியா..? :))

உன்மத்தமான மனது.. அழகான வரிகளில்...

//சாலையெங்கும்
சிதறிகிடக்கின்றன
இரத்தத்துளிகள்...
பிரிவில்
பிய்த்து எடுத்துவந்த
பாதி இதயமுடன்
நான்...//

:))

ஏன் இப்படி கொடூரமா சிந்திச்சுகிட்டு இருக்கீங்க‌ ஸ்ரீமதி...?? :))))//

பிரிவு இன்னும் கொடூரமானதே... அதான், இப்படி சிந்திச்சுட்டேன் அண்ணா.. ;))நன்றி அண்ணா அழகான ரசிப்பிற்கு.. :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது