பிறந்தநாள் பரிசாக...


முதுகின் மச்சம்
போலவே
அவனறியாதது....
அவன் மேலான
என் காதலும்.....

தொலைந்த
மோதிரத்தின்
அழியாத்தடம் போல...
இழந்தப் பின்னும்
உருமாறாத
என் காதல்.....


என் வெட்கத்தைக்
குத்திக் கிழித்துவிட்ட
களிப்பு
அவன் முத்தத்தின்
முடிவில்....


எழுதியவை எல்லாம்
கவிதையென
மகிழ்கிறேன்
அவை
உன்னைப்பற்றியதாயிருப்பின்....



படித்துக்கொண்டிருந்த
புத்தக வரிகளில்
தானாக வந்தமர்கிறது
முற்றுப்புள்ளிகளென
அவன் முகம்....



வெறும் சத்தங்களைத்
தரும் அழைப்பேசியின்
முத்தங்கள் வேண்டாம்...
எண்ணம் குழைத்த
என் வார்த்தைகள்
வாங்கிக்கொள்
பிறந்தநாள் பரிசாக.... :-))



-அன்புடன்,
ஸ்ரீமதி.

பிரதிபலிப்பு

சீட்டுக்கட்டின் சின்னங்களாக
சிதறிக்கிடக்கிறது இதயம்
உடைந்த சில்லின்
ஒவ்வொரு துகளிலும்
உன் முகமே பிரதிபலிக்க
இனி நினைப்பதுக்கூடாது
என நினைத்து
போர்வையின் முனைகளுக்குள்
முழுவதும் மறைந்து
பின்னும் உன்னை நினைத்து
நாற்பதாவது முறையாக
தோற்றேன் நேற்று...
-அன்புடன்,
ஸ்ரீமதி.

Hey, Where is the party?

நெடு நாளாக இரவு விடியாமலே நீண்டது. கறுப்பு இரவுக்குள் மங்கலான உருவங்கள் வருவதுவும், மறைவதுவுமாயிருந்தன. கரித்துடைத்துத் தூக்கியெறியப்பட்ட வெள்ளைத்தாளென வானம் ஆங்காங்கு வெளுத்தும் பல இடங்களில் கறுத்தும் அவள் மனம் போலவே கலகமூட்டி, முத்தச்சத்தங்களுடனான இரவுகள் முடிவுக்கு வந்ததை அறிவித்தது.

கைப்பேசி அறுபதாவது முறையாக அவன் பெயரோடு சிணுங்கியது. இதுதான் கடைசி அழைப்பு என மனதை மறுமுறை சமாதானப்படுத்த முயன்று தோற்றாள். இனியும் பேச நாவிற்கு வலுவில்லை என்பதை உணர்ந்தாள். நின்றுப்போன கடிகாரம், வாடியப் பூ என்று நீளும் அவன் பரிசுகளின் பட்டியலில் இன்று அவனும், அவன் நினைவுகளும்.

காலை நேர உணவோ, காதைத்துளைக்கும் வாகனங்களின் இரைச்சலோ, காற்று அடித்து வந்த காகிதமோ, கடையோர செய்தித் தாள்களின் தலையங்கமோ என எதற்கும் அவன் நினைவைக் கலைக்கும் சக்தி இல்லாமல் போனது அவளுக்கு ஏமாற்றமே. அடுத்தமுறை கடவுச்சொல் மாற்ற அதிகம் யோசிக்க வேண்டியிராது பிரிவில் கண்ட முதல் ஆதாயம். பகுதி நேர வேலையாகிப் போயிருந்த முழுநேர வேலையை இனியும் முழுநேரம் செய்வதென திட்டமிட்டாள்.

இனியவளுக்கு வரப்போகும் நிர்பந்தங்களை அறிந்திருந்தாள். பத்து வயதில் பிரிந்துச் சென்ற நண்பனுக்காய் இன்று அழ நினைத்தாள். தொடர்பற்ற ஏதேதோ நினைவுகளில் சஞ்சரித்து பின் அலுவலகம் வந்ததை அறிந்தாள்.

காதல் ஒரு விசித்திரமானப் போர், முடிவு அறிந்த நாளிலிருந்துதான் தொடங்கும் சத்தங்களும், சாவுகளும். முடிவின் படியில் நின்றாள். மனப் போராட்டங்களில் ஒவ்வொரு முறையும் இவளின் நினைவுகள் ஜீவ சமாதி செய்யப்பட்டு, பின்பு தோண்டியெடுக்கப்பட்டு, மறுபடியும் புதைக்கப்பட்டது. முடிவுற்ற காதலின் எச்சம் முடியாமல் நீண்டது மாலைவரை இரவில் இவள் தோற்கப்போவது நிச்சயம் அவன் நினைவுகளால். என்றோ வெற்றிகரமாக முடித்த இவளின் ப்ராஜெக்ட்டுக்கு கைக்குலுக்கித் தோழி கேட்டாள்,

"Hey, Where is the party?"

-அன்புடன்,
ஸ்ரீமதி.

நானே நானா?? யாரோ தானா??

ரொம்ப நாளாவே எனக்கொரு ஆசை.... அது என்னன்னு கடைசில சொல்றேன். எல்லாரும் ரொம்ப ஹாப்பியா பொங்கல் கொண்டாடி இருப்பீங்க... ஆனா எனக்கு தான் லீவே இல்ல.... :-((கிடைச்ச 1 1/2 நாள்ல ஊர்ல போயி தலைய காட்டினேன்.. (அஜித் இல்லங்க என் தலைய தான்....).

ரொம்ப நாளைக்கு ம்ஹும் ரொம்ப வருடங்களுக்கு பிறகு என் பாட்டி வீட்ல பொங்கல் கொண்டாடினோம்.... என் சின்ன வயசு நண்பர்கள பார்த்தேன்.... அப்பறம் என் பேவரிட் திண்ணைல விளையாடினேன்.. (கால் உடைச்சிக்காம தான்.) சின்ன வயசுல அந்த திண்ணைல உட்கார்ந்து எங்க செட்ல யாரு பெரியவங்களோ அவங்க கண்ண கட்டி விடுவாங்க... நாம "இது போட்டு இது போட்டு இது யாரு"-ன்னு சொல்லணும்.... நாம சொல்றவங்க பேர் சரியா இருந்தா அவங்க அடுத்தது கண்ண கட்டிக்கணும்... இல்லைன்னா ஓடி போயி ஒளிஞ்சிப்பாங்க... நாம தேடிப்பிடிக்கணும்...

ரொம்ப நாள் இந்த விளையாட்டுல நான் ஒப்புக்கு சப்பாணிதான்... சின்னப் பொண்ணுன்னு விளையாட்டுக்கு சேர்த்துக்கமாட்டான் அண்ணா.. அப்பாகிட்ட சொல்லிடுவேன்னு அன்பா ;-) சொன்னதுக்கப்பறம் போனா போகுதுன்னு சேர்த்துப்பான்.... அதுவும் நான் ஓடிகிட்டே இருப்பேன்.... நான் மாட்டினாலும் அவுட் கிடையாது..... :-(( எனக்குன்னு ஒரு செட் சேர்ந்ததுக்கு அப்பறம் நாங்க லாக் அண்ட் கீ, ஷரப், ப்ரீஸ் இப்படி விளையாடுவோம்... இதெல்லாம் என் ஸ்கூல்ல இருந்து கத்துகிட்டு வந்து மாதவனுக்கு தெரியாம என் பாட்டி ஊர் தோழிகளுக்கு கத்துக்கொடுப்பேன்... இதுக்கு தட்ஷனையா எனக்கு நிலக்கடலை, மாங்கா எல்லாம் கிடைக்கும்.. ;-)))

பொங்கல் நேரம் இன்னும் சூப்பரா இருக்கும்... இந்த பரபரப்பான நகரங்கள விட இன்னும் கிராமங்களில் தான் பொங்கல் ரொம்ப விமர்சையா கொண்டாடப்படுது... எங்க பாரு நிறைய நிறைய கரும்பு (நான் ஒன்னு கூட சாப்டல.. :-(( ) அழகா அலங்கரிச்ச மாடு, ஒழுகற வீடெல்லாம் கூட இந்த ரெண்டு நாளைக்கு வெள்ளை மாளிகையா மாறியிருக்கறது... இப்படி எல்லாமே படு அழகு.... :-))

இந்த முறை நான் நைட் ட்ராவல்ங்கறதுனால போயி நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்தேன். குளிரான சாயங்காலம் எழுந்து அப்படியே வயல்ல வாக் போகணும்ன்னு ஆசைப்பட்டேன்.... பட் ரொம்ப குளிரா இருந்ததுனால அப்பா என் ஆசைக்கு தடை விதிச்சுட்டார்.... சோ எப்போதும் போல திண்ணைல உட்கார்ந்து அம்மா கோலம் போடறத வேடிக்கைப் பார்க்க ஆரம்பிச்சேன்.... நாம நிம்மதியா இருந்தாதான் கூட பொறந்தவனுக்கு கண்ணு உறுத்துமே....

"அம்மா அவள கோலம் போட சொல்லேன்மா.... உன்னால தான் முடியலல்ல..."

"கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... சரி புள்ளி வெச்சிக்குடும்மா நான் போடறேன்...."

"அதென்ன புள்ளிவெக்க ஒரு ஆளு?? நீயே போடு....", தங்கையா இருக்கறது ரொம்ப கஷ்டம் ஆண்டவா.... சில சமயம் Why Me அப்படின்னு அம்பி மாதிரி கேட்டாலும்.... பல சமயம் Try Me-ன்னு அந்நியன் வந்துடுது... அப்பறம் அப்படியே சமாளிச்சு போட்டுட்டேன் கோலத்த...

"என்ன செந்தில் ஆட்டோ புதுசா?? பழைய ஆட்டோ எங்க??"

"புதுசு இல்ல... பழைய ஆட்டோ தான் சர்வீஸ் பண்ணேன்.... 45,000 ஆச்சு"

"என்னையா நீ? இவ்ளோ காசு குடுத்து ஆட்டோவயே புதுசா மாத்திருக்க அந்த நம்பர மாத்தலியே..."

"ஐயோ பாவம்டா விட்டுடு.."

"விட்டுடலாம்கற??"

"ம்ம்ம்"

"சரி.... பொழைச்சி போகட்டும்"

நாங்க இருந்த ரெண்டு நாளும் ஆட்டோ செந்தில் வரவே இல்ல.. தாத்தாவுக்கும் அவர் ஏன் வரலைன்னு தெரியாம... அவர திட்டிட்டு இருந்தார்... பாவம் செந்தில்...

அப்பறம் இந்த ட்ரிப்போட ரொம்ப முக்கியமான விஷயமா நான் நினைச்சது, நான் அ ஆ இ ஈ எழுத ஆரம்பிச்ச நாலு கோடு நோட்ல இருந்து என்னோட காலேஜ் பைனல் இயர் நோட்ஸ் வரைக்கும் என் தாத்தா பத்திரமா வெச்சிருந்ததுதான்.... நான் முதல் முதல்ல எழுத ஆரம்பிச்ச நாட்கள் நினைவில்லைன்னாலும் அத என் தாத்தா சொல்ல சொல்ல நான் கணக்குங்கரத 'காணாகாக்கு'ன்னு எழுதிட்டு போனத எல்லாம் (எல்லாருக்கும்) சொல்லி சிரிச்சோம் (வேற வழி??)...

காலேஜ் நோட்ல நான் எடுத்துருந்த நோட்ஸ் எல்லாம் பார்க்கும் போது நானே நானா?? யாரோ தானான்னு தோணித்து... (வந்துடுச்சா?? வந்துடுச்சா?? தலைப்புக்கு சம்பந்தமா வந்துடுச்சா?? ஹப்பா....;-)))) ஏன்னா அவ்ளோ நோட்ஸ் எழுதிருந்தேன்.... பார்ரா நாமளும் ரௌடிதான் போலன்னு நினைச்சுக்கிட்டேன்.... ஏன்னா இப்பல்லாம் காலேஜ்ல போயி உட்கார்ந்தா எங்க கிளாஸ் கவனிக்கிறோம்?? அஞ்சு நாளும் அவ ப்ராஜெக்ட்ல என்ன நடந்தது?? என் ப்ராஜெக்ட்ல என்ன நடந்தது?? புதுசா வாங்கின சுடிதார், பிரெண்ட்ஸ் கூட போன சினிமான்னு கிளாஸ் புல்லா இதே பேச்சு தான்... அப்பறம் எங்க கிளாஸ் கவனிக்கறது?? அங்கேயும் இதே மாதிரிதான்... ஆனா டெய்லி பார்த்துக்கரதால கிளாஸ் ஹௌர்ஸ்ல இவ்ளோ பேசமாட்டோம்... அதும் நான் கிளாஸ் கவனிக்கும் போது என்கிட்ட யாராவது பேசினா அவ்ளோ தான் பயங்கர கோவம் வரும்....

"பாப்பா என்ன படிக்குது??"

"அவ படிச்சு முடிச்சுட்டா... இப்ப வேலை பார்க்கிறா.."

"எங்க இருக்காப்ல??"

"சென்னைல..."

"அப்படியா?? என் பேரனும் அங்க தான் இருக்கான்... நீ பார்த்துருக்கியா பாப்பா??"

இன்னும் மாறாத வெள்ளந்தியான மனிதர்கள். கரும்பு வாங்க வயலுக்கு போயி பாம்ப பாத்துட்டு வந்து கதை சொன்னது.... மாட்டு பொங்கலுக்கு பக்கத்து வீட்டு கன்னுக்குட்டிய எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து அது கதற கதற பொங்கல் ஊட்டுனது... 'ஏன்ம்மா நம்ம நாய்க்கெல்லாம் பொங்கல் இல்ல?'ன்னு கேட்டு அழுதது.... எல்லாமே இன்னும் பசுமையா இருக்கு..... பாட்டி தாத்தா மனசுக்குள்ள... (அப்பப்ப சொல்லி... கரெக்ட்டா மானத்த வாங்கிட்டார்... ;-)))

"டேய் கொஞ்சம் நகருடா... அந்த ப்ரெஷ்ஷ எடு.... தண்ணிய நகர்த்துடா.... இது ஓகேவா பாரு.... இந்த பக்கம்... ம்ம்ம் அப்பறம்...."

"ஏய் போதுண்டி ஒரு கோலத்துக்கு செம்மண் அடிக்க நீ கொடுக்கற பில்ட் அப்பு...."

ஹி ஹி ஹி அவ்ளோ தான் நாம இந்த பொங்கலுக்கு செஞ்சது... ;-)))

இன்னும் எவ்ளோவோ இருக்கு... ஞாபகம் வரும்போது கண்டிப்பா சொல்றேன்... இப்போ இவ்ளோ தான் ஞாபகம் இருக்கு.. :-(( அதனால பை... பை... :-))

ம்ம்ம்ம் அந்த ரொம்ப நாளைய ஆசை.... அது வேற ஒன்னும் இல்லங்க இப்படி ஒரு பயணக்கட்டுரை எழுதணும்ன்னு ஆசைப்பட்டேன்... அவ்ளோதான்.. ;-)) (என்னது?? இது பயணக்கட்டுரை இல்லையா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... )

-அன்புடன்,
ஸ்ரீமதி.

ஏன் எனக்கு மட்டும் இப்படி??

வாரத்தின் முதல் நாள் திங்கள் அதுவுமா இப்படி எழுத எனக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு... ஆனா இப்ப எழுதலேனா அப்பறம் எப்ப எழுதுவேன்னு தெரியல.... :-(( அதான், இப்ப எழுதறேன்.. முன்ன எல்லாம் ஏதாவது எழுதணும்ன்னு நினைச்சா உடனே எழுதிடுவேன்.. ஆனா, இப்பல்லாம் முடியறதில்ல.... அது ஏன்னு நான் ஆராய்ச்சி பண்ணி (நம்பனும் ஆமா) கண்டுபிடிச்சதுல மூணு விஷயம் தெரிஞ்சது.... அது என்னன்னா,

1.இப்பல்லாம் நிஜமாவே ஆணி அதிகமா இருக்கு... (உண்மைய சொன்னா சிரிக்கக்கூடாது....!!).

2.அடுத்தது எதையாவது எழுதலாம்ன்னு நினைச்சா.. இதென்ன சின்னப்புள்ளத்தனமா இதப் போயி எழுதறதுன்னு நானே அந்த எண்ணத்த கை விட்டுடுறேன்... (தப்பிச்சீங்க...)


3.மூணாவது வேற எதுவும் இல்ல.. பிரசித்திப் பெற்ற என்னோட அளவில்லாப் பொறுமை (சரி... சரி...) சோம்பேறித்தனம்.... இதனால தான் நான் கவிதை மட்டுமே போட்டேன். அது எழுதறதும் ஈசி படிக்கிற உங்களுக்கும் ஈசி ஹி ஹி ஹி... ;-))

ஆனா நான் இப்ப சொல்லவந்தது இந்த விஷயம் இல்ல.. அடப்பாவி இன்னும் ஆரம்பிக்கவே இல்லையான்னு நீங்க கேட்கறது புரியுது.. என்னைக்குமே சொல்ல வந்த விஷயத்த விட, அத சொல்ல நாம பண்ற பில்டப்பும், அதுக்கு வாங்கற பல்பும் தான் செம சூப்பரா இருக்கும்.... நானும் என் ஃப்ரெண்டும் பேசிட்டு இருந்தோம்... திடீர்ன்னு அவ,

"ஹே... நம்ம சஸ்வதி வீட்ல...."

"என்னது??"

"சஸ்வதி வீட்ல...."

"உன் வாய்ல தர்பையப் போட்டு பொசுக்க... அது 'சஸ்வதி' இல்லடி... 'சரஸ்வதி' சொல்லு...."

"போதும் நிறுத்தறியா உன் தமிழ் கிளாஸ..."

"சரி சொல்லு... சரஸ்வதி வீட்ல...??"

"ம்ம்ம்ம்ம் பெருமாள் சாமிக்கு பொண்ணே இல்லையாம்...."

"ஹே சொல்லுடி...."

"............"

"சொல்லு..."

"............"

அப்போ போனவதான் அப்பறம் என் பக்கம் திரும்பவே இல்ல... :-((

வெள்ளிக்கிழமை அதிக வேலையால(நிஜமா.. ;-)) ) நான் கிளம்ப நேரம் ஆகிடிச்சு...

"ஹாய் ஸ்ரீ... என்ன மணி 8:30 ஆச்சு இன்னுமா கிளம்பல??"

"ம்ம்ம் கொஞ்சம் வேலை இருந்தது..."

"ஓ...! ஓகே... ஓகே... ஸ்டேஷன் தானே போற?? இரு நானும் வரேன்.... தனியா போக பயமா இல்ல??"

"ம்ஹும்... நம்ம ஊர்ல ராமராஜ்யம் இல்லன்னாலும்...., ராமராஜன்கள் அதிகம்... பொண்ணுங்களுக்கு எதாவதுனா ஓடி வந்து செய்வாங்க...."


"..............."

"நவீன் நில்லு....."

"................."

"நவீன்....."

ம்ம்ம் இதுதான் இப்படி ஆச்சுன்னா.... எனக்கு எல்லாமே கொஞ்சம் தலைகீழா தான் நடக்குது....

2008 எப்படி முடிஞ்சதோ அதே மாதிரி தான் 2009-ம் ஆரம்பிச்சது..... எப்படியா?? ஆபீஸ், சனிக்கிழமைன்னா காலேஜ், ஞாயிற்று கிழமை தூக்கம்... இப்படி ஸ்மூத்தா போயிட்டிருந்தது 27-ம் தேதி மதியம் வரைக்கும்.... நானும் அப்படியே இருந்திருக்கலாம்.... சும்மா இருந்தவள வா ஷெட்டில்கார்க் விளையாடலாம்ன்னு கூப்டான் என் அண்ணா... சரின்னு நானும் விளையாடி கால் உடைச்சுகிட்டு கட்டு போட்டுகிட்டு வந்தேன்.... அதுதான் அப்படி ஆச்சு... அப்பறம் சரியா போச்சுன்னு நான் நினைச்சுகிட்டு அத கண்டுக்காம விட்டுட்டேன்....

புத்தாண்டு, வழக்கம் போல தூங்கி,.... ஃப்ரெண்ட்ஸ் கால் எல்லாம் மிஸ்டு காலாகி... திட்டு வாங்கி முடிஞ்சது.... அன்னைக்கும் எனக்கு ஆபீஸ் :-( .....அப்பறம் மறுபடியும் 5-ம் தேதி விழுந்துட்டேன்... அதெல்லாம் விடுங்க... :-((

இதுக்கு நடுவுல எனக்கு திவ்யா அக்கா பட்டர்ஃப்ளை அவார்ட் எல்லாம் தந்து கௌரவிசிருக்காங்க... அவங்களுக்கு என் நன்றி.... இத நான் இன்னும் யாருக்கும் தரல.... அந்த ரெண்டுபேர்,

1. இவர் ரொம்ப யதார்த்தமான... ஆனா, எண்ணிக்கைல குறைவான கவிதைகள் எழுதிருக்கார்.. நிறைய முறை உயிர்மைல இவர் கவிதை வந்திருக்கு... அவரை படிக்க....

2.அடுத்தது இவங்க ரொம்ப அழகா ரொம்ப ரொம்ப கூலா எழுதறவங்க அவங்கள படிக்க...

இதுதாங்க விஷயம்... இத சொல்லவா இவ்ளோ சுத்தி வலைச்சன்னு கேட்கரவங்களுக்கெல்லாம் ஒன்னு சொல்லிகிறேன்...... ஹி ஹி ஹி ஆமா.... ;-))) இப்ப விட்டா அப்பறம் என் கவலைகளை எல்லாம் எப்ப சொல்றது?? அதான்... ;-)))

பி.கு: பயங்கர வேலைக்கு நடுவுல டைப்பறேன்.... அதனால எப்படி எழுதிருக்கேன்னு தெரியல.... :-((

-அன்புடன்,
ஸ்ரீமதி.

நானாகிய நான்


பிரிவு,
பசலை நோய்
பைத்தியக்காரத்தனம்
என்றேன்...
நான்
பைத்தியமாகும் வரை...



முத்தம் மொழிந்த
உதடுகளுக்கு
மௌனம் கற்பிக்கிறேன்
பிரிவில்....




நான்
நீ
நாமாகி...
இன்று,
நான் மட்டுமாகிப்போனேன்...
அறியாத ராசிபலன்
மீன ராசிக்கு
இன்று வரவென்றது.....




கவனிப்பில்லாமல்
கதறும் குழந்தையாய்
தவித்துக்கிடக்கின்றன....
உனக்கான
என் கவிதைகள்
பிரிவுகளினும்
ரணம் கூட்டும்
இந்த வரிகளையாவது
வாங்கிக்கொள்.......


யோசிக்க நினைத்த
கவிதைகளிலெல்லாம்
கருவாகி
அவனில்லா
கவிதை என்பது
ஆக்ஸிஜன் தாண்டிய
சுவாசமானதெனக்கு.....

சாலையெங்கும்
சிதறிகிடக்கின்றன
இரத்தத்துளிகள்...
பிரிவில்
பிய்த்து எடுத்துவந்த
பாதி இதயமுடன்
நான்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

பட்டியல்


ஜோதிடமோ, ஜாதகமோ...
ஜாதி, மத பேதங்களோ, சமூகப் பிரச்சனைகளோ...
செல்லிடைப் பேசியின்
அழைப்புகளோ, குறுந்தகவல்களோ..
அழகியல் கவிதைகளோ,
அறிஞர்களின் கட்டுரைகளோ,
என் வெட்கங்களோ..
உனக்கான என் கோபங்களோ,..
என எதுவுமே
எனைக்கவர்ந்ததில்லை...
உனக்குப் பிடித்தமானவற்றை
நீ பட்டியலிடும்வரை....



-அன்புடன்,
ஸ்ரீமதி.

நாங்களும் சொல்வோம்ல....


Looking Forward - 2009 !




2004.....2007 and 2008 was when.........
when we got a job.........
when we passed out of college....
when we made new amazing friends.....
when some of us moved to a new city.....
When some of us celebrated our 21st - 25th birthdays.....
When we waved good bye to our buddies leaving to the states for higher studies...
when some of us fell in love........
when some of us fell out of love
when some of us got hurt
when some of your ‘friends’ screwed up your love life… when some ‘one’ you liked, did not like ‘you’….
when we would have made mistakes
when we made life decisions.......
when these decisions turned out to be a tragedy when some of us felt lonely ....
when some of us made an amazing friends in a new city when some of us would have learnt to be stronger.....
when some of us would have realized that everything happens for a reason.....
when some of us let out our anger.....
when some of us never opened up to our friends about how we felt....
when some of us felt so glad and happy to be the way they are.....
when we go out everyday and meet up with our friends...
when we had serious talks with our dad about our future.....
when we missed each other when we were at hometown………..
when we missed our mom here …..
when we cried for each other …….
When we celebrated our first new year with our friends ….
When we were jobless all the time in office ……..
When we walked around the streets late in the night ……
When we put budget for the next month (but strictly not following it) Last year has taken us through all our ups and downs we faced in our life...


2009.......one more year.....A year to....

To find our life partner (might be)
to forget old crushes…
to smile........
to let people know how much u care...
to learn from our mistakes.......
to cry when we are feeling down.....
to follow our dreams.......
to fight against everything for our dreams to come true.....
to be more confident.........
to be more strong at heart and mind.....
to enrich our knowledge.........
to make others happy....
Lets take each day as it comes........
Forget about the downs we came across in the past year........
And remember every lesson we learnt through them........
Let’s Enjoy Life to the Fullest............


LET’S WAIT FOR THE WONDERFUL YEAR AHEAD - 2009 !!



May this New Year turn all your dreams into reality and all your efforts into great achievements.

Wish you all an extremely prosperous, recession-controlled, financially-stable, war-free, air/water/rail/road-safe, earthquake free, tsunami free, friends-filled, healthy, joyous and cheerful New Year 2009.

பி.கு: ஆங்கில புத்தாண்டுல்ல.. அதான், பீட்டர்ல வாழ்த்து சொல்லிருக்கேன்.. ;-)) இருந்தாலும், எல்லாருக்காகவும் மறுபடியும் ஒரு முறை சொல்லிக்கிறேன்..

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!! :-)

-அன்புடன்,
ஸ்ரீமதி.

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது