ஊடல்களும் காதலே...!!
நம் ஊடலெல்லாம்ஊடல்கள் அல்ல
நீ உன்னில்
ஒளிந்துக்கொண்டு
செய்யும் காதல்
ஒரு நிலாபல விண்மீன்களென
வானமே நிறைந்திருந்தது
நீயும்
உன் நினைவுகளையும்
சூழ்ந்த என்
மனம் போல
அவசரத்தில் வந்துகால் நனைக்கும்
அலையாய்
ஏக்கத்திலும்
சிறு தயக்கத்திலும்
உன்
முதல் முத்தம்

இருண்ட
நிசப்த இரவில்
சப்தப்படுத்திக்கொண்டே
இருக்கின்றன
ஊடலில் உண்டான
உன் மௌனங்கள்

"ஏய் பார்த்து போடி..!!
போனதும் போன் பண்ணு...!!"
திரும்ப உன்னிடமே
ஓடிவந்துவிடத் துடிக்கும்
கால்களை அடக்கி
நடைப்போட்டேன்
இரவை சபித்தபடி..!!

உன்னுடன் கழித்த
இரவனைத்தையும்
நெஞ்சுக்குள்
நட்டு வைத்திருந்தேன்
அவை
போன்சாய் மரங்களாய்
இன்று
உன் பெயரைக்கூறிக்கொண்டு

இரவில் நிலவில்
நீ சொன்ன
வார்த்தைகள்தான்
என் வீடு முழுவதும்
சிதறிக்கிடக்கிறது
சின்னச் சின்ன
நட்சத்திரங்களாய்
இரவில் நடக்க
தயங்குவதே இல்லை
நெஞ்சுக்குள்
நீயிருக்கும்
துணிவில்..
Tuesday, December 23, 2008 | கனவு காண: கவிதை, காதல் | 122 Comments
பின்விளைவு
- உயிரோசையில் பிரசுரமான கவிதை .
-அன்புடன்,
ஸ்ரீமதி.
Tuesday, December 16, 2008 | கனவு காண: உயிர்மை, கவிதை, காதல் | 104 Comments
முகமூடி மனிதர்கள்
ஸ்ரீமதி.
Friday, December 12, 2008 | கனவு காண: கதை, கதை மாதிரி, புனைவு | 133 Comments
தாய்மை
"இன்னைக்கு கார்த்தாலதான் நான் அதப் பார்த்தேன்.. ஒரு நாலு அஞ்சு இருக்கும்.."
"ஐ டூ சா தட்... உவ்வே..."
"நீ பாக்கலியா??"
"இல்ல மாமி... நான் வெளில போகவே இல்ல..." இன்றைய காலை தேநீர் நேரத்து ரொட்டித்துண்டுகளாகிப் போயிருந்தது அந்த நாலு ஐந்தின் வருகைக்கான பேச்சு.
"ம்ம்ம் என்னமோ போ... ஊரே மழையும், புயலுமா இருக்கு.. இதுங்க எப்படி தான் இருக்க போறதோ?? நான் போறேன் எங்காத்து மாமா ஆபீஸ் கிளம்பனும் டிபன் செய்யலேன்னா வள்ளுன்னுவார்".
மாமி நகர்ந்ததும் சுபாவும் கிளம்பினாள். வானம் இன்னுமொரு பெருமழைக்கு கறுப்புக் கம்பளம் விரித்திருந்தது. என்னவரின் கண்கள் காலைநேர காபியோடு செய்தித் தாள்களின் விளையாட்டு செய்திகளில் லயித்திருந்தது. பால்கனியிலிருந்து பார்த்தால் தெரியும். அழகாக இருந்தது. கருப்பு வெள்ளையும் கொஞ்சம் செம்மண்ணும் வெள்ளையுமாய் ஐந்து நாய்க்குட்டிகள். எங்கள் தெருவின் புதுவரவு.
"அதெல்லாம் வேண்டாம்", குரல் கேட்டுத் திரும்பினாள்.
"என் பாஸ் குடுத்த பொமேரேனின் என்னாச்சு?? இந்த மாதிரி அப்பார்மெண்ட்ஸ்ல எல்லாம் நாய் வெச்சிக்கறது கஷ்டம்.", கல்யாணமான இந்த நான்கு வருடங்களில் நான் சொல்லாமல் அவர் புரிந்துக்கொண்ட ஒரு விஷயம் இது என்பதில் எனக்கு மகிழ்ச்சி கலந்த வருத்தம் உண்டு. சிறுவயதிலெல்லாம் எங்கேயாவது நானும் அண்ணாவும் நாய்க்குட்டியைப் பார்த்தால் போதும் வீட்டிற்கு தூக்கிவந்துவிடுவோம் அம்மாதான் சொல்வாள்,
"டேய் இத ஏன் இங்க தூக்கிண்டு வந்தீங்க??"
"அம்மா இதுக்கு அம்மா இல்லம்மா... பாவம் தனியா கத்திண்டு இருந்தது... அதான் எடுத்துண்டு வந்துட்டோம்.."
"அதோட அம்மா எங்கயாவது இதுக்கு சாப்பாடு தேட போயிருக்கும்... இப்ப அது இந்த குட்டிய தேடிண்டு இருக்கும்.. போயி எடுத்த இடத்துலேயே போட்டுட்டு வந்துடுங்க பாவம்... கத்தறது பாரு.." அடுத்த ஐந்தாவது நிமிஷம் அதன் அம்மா தேடிக்கொண்டு எங்கள் வீடு வந்துவிடுமோ என பயந்து எடுத்த இடத்தில் போட்டுவிட்டு வருவோம்.
"மாலினி டிபன் ரெடியா??"
"இதோ ஒரு நிமிஷம் சட்னி மட்டும் அரைச்சிடுறேன்.."
"ம்ம்.... இன்னைக்கு நான் வர கொஞ்சம் லேட் ஆனாலும் ஆகும்.. நீ சாப்டுட்டு தூங்கு.. அந்த நாய்க்குட்டிகள நேத்து நைட்டே யாரோ சாக்குல கட்டி கொண்டுவந்து போட்டா நான் பார்த்தேன்... ஈவினிங்க்குள்ள ப்ளூ கிராஸ்க்கு போன் பண்றேன்", மனசுக்குள் ஏதோவருத்தியது. நாள் முழுவதும் அந்த குட்டிகளின் சத்தமும், மாமியின் அதைப்பற்றிய தகவல்களும், என்னை கவலையுறச் செய்தது.
"நம்ம முசுடு நாராயணன் எதானு பண்ணிடுவான் மாலி..."
"எஸ்" சுபா வேறு ஒத்துப்பாடினாள்..
முசுடு நாராயணன் இந்த இரண்டடுக்கு அப்பார்மெண்ட்ஸின் கீழ்தளத்தில் வசிப்பவர். குழந்தையில்லை, அவரும் அவர் மனைவியும் மட்டும் தான். இதுவரை அவர் அதிர்ந்து பேசியும் நான் கேட்டதில்லை, அனாவசியமாக பேசியும் நான் கேட்டதில்லை. பின் ஏன் அவருக்கு இப்பெயர் என மாமியிடம் கேட்க நினைத்து தொண்டையோடு வடிகட்டிவிடுவேன் வார்த்தைகளை...
என்னவரின் உடம்பு சரியில்லாமல் மூன்று நாள் ஹாஸ்பிடல் வீடு என நான் இருந்த காலத்தில் முசுடு நாராயணனும் அவர் மனைவியுமே துணையாயிருந்தனர் என நான் சொல்ல மகள் பிரசவத்திற்கென ஊர் சென்று திரும்பியிருந்த மாமி வாய் பிளந்தாள்.
"அதுங்க சத்தமே கொஞ்ச நேரமா காணலியே..."
"ஓ ரிஷி டோன்ட் லைக் பப்பிஸ்... உவ்வே..", என்றாள் சுபா.
"ஏண்டி மாலி உனக்குதான் ரொம்ப பிடிக்குமே.."
"இல்ல மாமி அவருக்கு பிடிக்காது..".
என்றைக்கும் இல்லாமல் இன்று தனிமை மிகவும் வாட்டுவதாயிருந்தது. இப்பொழுது நிஜமாகவே அவற்றின் குரல்கள் அடங்கியிருந்தது. தனிமை ஏதேதோ எண்ணங்களை உருவாக்கியிருந்தது.
"இன்னும் எவ்ளோ நாள் இப்படியே இருக்கறதா உத்தேசம்??" கடைசி முறை ஊருக்கு வந்த அவரின் அம்மாவின் கேள்வி.
"அவர் ஏதோ ஆன்ஸைட் போக சான்சஸ் இருக்கு அதனால இப்ப வேண்டாம்ன்னு சொல்லிட்டார் அம்மா..."
"இப்படி சொல்லியே நாலு வருஷமாயிடுத்து... கேக்கரவாளுக்கு பதில் சொல்லிமாலல... நான் இனி இந்த வரதா இருந்தா அது உன் வளைக்காப்பு சீமந்தமா தான் இருக்கணும்..." சொல்லி சென்று பத்து மாதம் ஆகிறது.
கடைசியாக மாமி சொன்னாள் "ஏய் மாலி இந்த கூத்த கேளு முசுடும் அதோட ஆத்துக்காரியும் அந்த நாய்க்குட்டிகள அவா வீட்ல கொண்டு போயி வெச்சிண்டு இருக்கா... ம்ம்ம் நம்மாத்துல எல்லாம் குழந்தைங்க இருக்கு அதுகளுக்கு இதெல்லாம் ஆகாது..."
"என்ன மாலி தூங்கல??"
"ம்ஹும்... என்னங்க.."
"ம்ம்ம்..."
"நமக்கும் ஒரு குழந்தை வேணும்..", படித்துக்கொண்டிருந்த புத்தகத்திலிருந்து விழி விலக்கி சிரித்தான்.
-அன்புடன்,
ஸ்ரீமதி.
Tuesday, December 09, 2008 | கனவு காண: கதை, கதை மாதிரி | 72 Comments
கரை காதல்
கடலலையிலிருந்துகிளிஞ்சல் பொறுக்கி
பாவாடையில் சேமிக்கும்
சிறுமியாய் சேகரிக்கிறேன்
உனக்கும் எனக்குமான
நம் காதலை
நெஞ்சுக்குள்...
காலை ஒட்டிக்கொண்டுஉதிர மறுக்கும்
கடற்கரை மண்ணாய்
என்னைக் கட்டிக்கொண்டு
இறங்க மறுக்கிறது
உன் காதல்
கடலலையும்உன்னைப் போலத்தான்
நான் ஊடலோடு
கால் நனைக்க வந்தால்
காதலோடு
தலை நனைக்கிறது

கைப்பிடி அளவு
காதலோடு
நான்
உன் காதல் கடலில்
கொஞ்சம்
கால் நனைத்தபடி
Thursday, December 04, 2008 | கனவு காண: கவிதை, காதல் | 144 Comments
துளி காதல்
அடை மழையில்
நாணக்குடைபிடித்தும்
முழுவதும் நனைந்துவிடுகிறேன்
உன் காதல்
மழையில்....

'ஏய் இனிமே
மழைல நனையாதடி...!!'
வருத்தப்பட்டுக்கொண்டிருந்தது..
நீ அணைத்த
தடம் அழிக்கும்
மழை....
அந்த மழைநாளின்விளிம்பில்
நீ தந்த முத்தம் தான்
சூடான தேநீராய்
இன்னும் இனிக்கிறது
இதழோரம்....
ஒரு குடையில்என்னோடு
நீ சேர்ந்து
நடந்த நாளில் தான்
ஆரம்பித்தன
என் வாழ்வின்
மழைக்காலம்...



நீலம் பூசிய
வானத்தைவிட
கார்கால மேகம்
அழகு...
உன் நீலவிழிகளில்
தீட்டிய
கரு மைப்போல...

மழையில் நனைந்தும்
தலைத் துவட்டுவதில்லை
எப்படியும்
உன் அணைப்பின்
சூட்டில்
காயத்தான் போகிறது...

குடையில்லா நேரத்து
ஸ்ரீமதி.
Monday, December 01, 2008 | கனவு காண: கவிதை, காதல் | 214 Comments
கரையோரம்
ரசிகையாய் இங்கு...
கனவில் இதுவரை
கனவுகளில்
-
-
-
-
தீர்ப்பின் வழக்கு2 weeks ago
-
-
காதல் புத்தாண்டு1 month ago
-
மோட்சப் பிரசாதம்1 month ago
-
சீர்காழி கோவிந்தராஜன்2 months ago
-
-
போராளி - திரைவிமர்சனம்5 months ago
-
வாழ்த்துகள் தீபா @ கபீஷ்8 months ago
-
விடையாய் நீ!!8 months ago
-
‘இ’ எனும் நைட்மேர்10 months ago
-
நிழற்படம்1 year ago
-
ஸ்டேட்மெண்ட்.1 year ago
-
எண்ணங்கள் விரிக்கும் வலை...!1 year ago
-
போஸ்டர் கலாச்சாரம்1 year ago
-
மீள்வருகை2 years ago
-
ஸ்கெட்ச் போட்டுட்டாய்ங்க!!!2 years ago
-
நம்பிக்கை துரோகம்2 years ago
-
வளமான வாழ்த்துக்கள்2 years ago
-
Should I or Shouldn’t I3 years ago
-
இன்னும் கொஞ்சம் கொஞ்சவா...?3 years ago
-
காதலிப்போமா?????3 years ago
கனவில்
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

















