தாய்மை

"இன்னைக்கு கார்த்தாலதான் நான் அதப் பார்த்தேன்.. ஒரு நாலு அஞ்சு இருக்கும்.."

"ஐ டூ சா தட்... உவ்வே..."

"நீ பாக்கலியா??"

"இல்ல மாமி... நான் வெளில போகவே இல்ல..." இன்றைய காலை தேநீர் நேரத்து ரொட்டித்துண்டுகளாகிப் போயிருந்தது அந்த நாலு ஐந்தின் வருகைக்கான பேச்சு.

"ம்ம்ம் என்னமோ போ... ஊரே மழையும், புயலுமா இருக்கு.. இதுங்க எப்படி தான் இருக்க போறதோ?? நான் போறேன் எங்காத்து மாமா ஆபீஸ் கிளம்பனும் டிபன் செய்யலேன்னா வள்ளுன்னுவார்".

மாமி நகர்ந்ததும் சுபாவும் கிளம்பினாள். வானம் இன்னுமொரு பெருமழைக்கு கறுப்புக் கம்பளம் விரித்திருந்தது. என்னவரின் கண்கள் காலைநேர காபியோடு செய்தித் தாள்களின் விளையாட்டு செய்திகளில் லயித்திருந்தது. பால்கனியிலிருந்து பார்த்தால் தெரியும். அழகாக இருந்தது. கருப்பு வெள்ளையும் கொஞ்சம் செம்மண்ணும் வெள்ளையுமாய் ஐந்து நாய்க்குட்டிகள். எங்கள் தெருவின் புதுவரவு.

"அதெல்லாம் வேண்டாம்", குரல் கேட்டுத் திரும்பினாள்.

"என் பாஸ் குடுத்த பொமேரேனின் என்னாச்சு?? இந்த மாதிரி அப்பார்மெண்ட்ஸ்ல எல்லாம் நாய் வெச்சிக்கறது கஷ்டம்.", கல்யாணமான இந்த நான்கு வருடங்களில் நான் சொல்லாமல் அவர் புரிந்துக்கொண்ட ஒரு விஷயம் இது என்பதில் எனக்கு மகிழ்ச்சி கலந்த வருத்தம் உண்டு. சிறுவயதிலெல்லாம் எங்கேயாவது நானும் அண்ணாவும் நாய்க்குட்டியைப் பார்த்தால் போதும் வீட்டிற்கு தூக்கிவந்துவிடுவோம் அம்மாதான் சொல்வாள்,

"டேய் இத ஏன் இங்க தூக்கிண்டு வந்தீங்க??"

"அம்மா இதுக்கு அம்மா இல்லம்மா... பாவம் தனியா கத்திண்டு இருந்தது... அதான் எடுத்துண்டு வந்துட்டோம்.."

"அதோட அம்மா எங்கயாவது இதுக்கு சாப்பாடு தேட போயிருக்கும்... இப்ப அது இந்த குட்டிய தேடிண்டு இருக்கும்.. போயி எடுத்த இடத்துலேயே போட்டுட்டு வந்துடுங்க பாவம்... கத்தறது பாரு.." அடுத்த ஐந்தாவது நிமிஷம் அதன் அம்மா தேடிக்கொண்டு எங்கள் வீடு வந்துவிடுமோ என பயந்து எடுத்த இடத்தில் போட்டுவிட்டு வருவோம்.

"மாலினி டிபன் ரெடியா??"

"இதோ ஒரு நிமிஷம் சட்னி மட்டும் அரைச்சிடுறேன்.."

"ம்ம்.... இன்னைக்கு நான் வர கொஞ்சம் லேட் ஆனாலும் ஆகும்.. நீ சாப்டுட்டு தூங்கு.. அந்த நாய்க்குட்டிகள நேத்து நைட்டே யாரோ சாக்குல கட்டி கொண்டுவந்து போட்டா நான் பார்த்தேன்... ஈவினிங்க்குள்ள ப்ளூ கிராஸ்க்கு போன் பண்றேன்", மனசுக்குள் ஏதோவருத்தியது. நாள் முழுவதும் அந்த குட்டிகளின் சத்தமும், மாமியின் அதைப்பற்றிய தகவல்களும், என்னை கவலையுறச் செய்தது.

"நம்ம முசுடு நாராயணன் எதானு பண்ணிடுவான் மாலி..."

"எஸ்" சுபா வேறு ஒத்துப்பாடினாள்..

முசுடு நாராயணன் இந்த இரண்டடுக்கு அப்பார்மெண்ட்ஸின் கீழ்தளத்தில் வசிப்பவர். குழந்தையில்லை, அவரும் அவர் மனைவியும் மட்டும் தான். இதுவரை அவர் அதிர்ந்து பேசியும் நான் கேட்டதில்லை, அனாவசியமாக பேசியும் நான் கேட்டதில்லை. பின் ஏன் அவருக்கு இப்பெயர் என மாமியிடம் கேட்க நினைத்து தொண்டையோடு வடிகட்டிவிடுவேன் வார்த்தைகளை...

என்னவரின் உடம்பு சரியில்லாமல் மூன்று நாள் ஹாஸ்பிடல் வீடு என நான் இருந்த காலத்தில் முசுடு நாராயணனும் அவர் மனைவியுமே துணையாயிருந்தனர் என நான் சொல்ல மகள் பிரசவத்திற்கென ஊர் சென்று திரும்பியிருந்த மாமி வாய் பிளந்தாள்.

"அதுங்க சத்தமே கொஞ்ச நேரமா காணலியே..."

"ஓ ரிஷி டோன்ட் லைக் பப்பிஸ்... உவ்வே..", என்றாள் சுபா.

"ஏண்டி மாலி உனக்குதான் ரொம்ப பிடிக்குமே.."

"இல்ல மாமி அவருக்கு பிடிக்காது..".

என்றைக்கும் இல்லாமல் இன்று தனிமை மிகவும் வாட்டுவதாயிருந்தது. இப்பொழுது நிஜமாகவே அவற்றின் குரல்கள் அடங்கியிருந்தது. தனிமை ஏதேதோ எண்ணங்களை உருவாக்கியிருந்தது.

"இன்னும் எவ்ளோ நாள் இப்படியே இருக்கறதா உத்தேசம்??" கடைசி முறை ஊருக்கு வந்த அவரின் அம்மாவின் கேள்வி.

"அவர் ஏதோ ஆன்ஸைட் போக சான்சஸ் இருக்கு அதனால இப்ப வேண்டாம்ன்னு சொல்லிட்டார் அம்மா..."

"இப்படி சொல்லியே நாலு வருஷமாயிடுத்து... கேக்கரவாளுக்கு பதில் சொல்லிமாலல... நான் இனி இந்த வரதா இருந்தா அது உன் வளைக்காப்பு சீமந்தமா தான் இருக்கணும்..." சொல்லி சென்று பத்து மாதம் ஆகிறது.

கடைசியாக மாமி சொன்னாள் "ஏய் மாலி இந்த கூத்த கேளு முசுடும் அதோட ஆத்துக்காரியும் அந்த நாய்க்குட்டிகள அவா வீட்ல கொண்டு போயி வெச்சிண்டு இருக்கா... ம்ம்ம் நம்மாத்துல எல்லாம் குழந்தைங்க இருக்கு அதுகளுக்கு இதெல்லாம் ஆகாது..."

"என்ன மாலி தூங்கல??"

"ம்ஹும்... என்னங்க.."

"ம்ம்ம்..."

"நமக்கும் ஒரு குழந்தை வேணும்..", படித்துக்கொண்டிருந்த புத்தகத்திலிருந்து விழி விலக்கி சிரித்தான்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.

72 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

logu.. said...

hai sreeeee..

mmm.. padichuttu solren..

தமிழ் பிரியன் said...

மீ த செகண்ட்ட்டு

வண்ணத்துபூச்சியார் said...

நல்லாவும் நெகிழ்வாகவும் இருக்கு.

கதையா..?? நிஜமா..??

கதையல்ல நிஜமா.??

எதுவானாலும் really nice.

logu.. said...

nallarukku..
:)))

logu.. said...

eathachum picture
pottrukkalamla?

தமிழ் பிரியன் said...

நெகிழ்ச்சியா இருந்தது தங்கச்சி..குட்! கீப் இட் அப்!

வண்ணத்துபூச்சியார் said...

விரைவில் ஸ்ரீ ரசிகர் மன்றம்... வர இருக்குமோ..??

வாழ்த்துக்கள்

அதிரை ஜமால் said...

\\"நமக்கும் ஒரு குழந்தை வேணும்..", படித்துக்கொண்டிருந்த புத்தகத்திலிருந்து விழி விளக்கி சிரித்தான்.\\

நல்லா இருக்கு.

ஆமா கதையா - கதை மாதிரியா...

ஆயில்யன் said...

//வானம் இன்னுமொரு பெருமழைக்கு கறுப்புக் கம்பளம் விரித்திருந்தது//

அழகாய் இருக்கிறது இந்த வரிகள்!

ஆயில்யன் said...

சிறுகதை நல்லா இருக்கு,கதை பாத்திரங்களின் சில சோகங்கள் மனதில் தங்கிச்செல்கின்றது!

கே.ரவிஷங்கர் said...

ஸ்ரீமதி,

பேஷ்!பேஷ்!நன்னா எழுதியிருக்கேளே!
கதையின் மைய புள்ளி “குழந்தை ஏக்கம்” நாய் குட்டிகளின் மூலமா
வெளிப்படரது.

இதே மாதிரி “நறுக்” தெரித்தபோல
எழுதுங்கோ! ததாஸ்து!

சென்ஷி said...

நல்லா இருக்குது ஸ்ரீமதி...

அமுதா said...

நல்லா இருக்கு

புதியவன் said...

தாய்மை எப்படி சொன்னாலும் அழகான உணர்வு அதை நாய் குட்டிகளின் கதை மூலமா சொல்லியிருப்பது வெகு அழகு...

நான் ஆதவன் said...

nice srimathi..

gayathri said...

nalla iruku sri kathai

Chuttiarun said...

வணக்கம்

நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி --> Add a Gadget --> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

இனியவள் புனிதா said...

ம்ம்ம் ரொம்பவும் பிடிச்சிருக்குடா :-)

கோபிநாத் said...

ரசித்தேன்..;)

விஜய் said...

உங்கள் பதிவை நிறைய படிச்சிருக்கேன். ஆனா கமெண்ட் போட்றதுக்கு கொஞ்சம் சோம்பல் :-)

இந்தக் கதை நல்லா இருக்கு. சிறுகதைப் போட்டிக்கு அனுப்பலாம். Good flow :-)

Sundar said...

excellent flow. sweet!

ஜீவன் said...

''டச்சிங்''

Divyapriya said...

ஹை ரொம்ப நல்லா இருக்கே இந்த கதை! வித்யாசமா, இது வரைக்கும் எங்கயும் படிக்காத மாதிரி இருக்கு srimadhi...

PoornimaSaran said...

//என்றைக்கும் இல்லாமல் இன்று தனிமை மிகவும் வாட்டுவதாயிருந்தது. இப்பொழுது நிஜமாகவே அவற்றின் குரல்கள் அடங்கியிருந்தது. தனிமை ஏதேதோ எண்ணங்களை உருவாக்கியிருந்தது//

உண்மை தான்..

அழகான கதை:))

TKB Gandhi said...

ஸ்ரீ,

உங்க கதை நடை ரொம்ப அழகா இருக்கு. உங்க சிறுகதை, பி.நா, புனைவு(இதுமட்டும் எனக்கு புரிஞ்சதேல்லங்க! ஆனாலும்) எல்லாம் நல்லாருக்கு இன்னும் சொல்லனும்னா உங்க கவிதைகளைவிடன்னு கூட சொல்லலாம். நீங்க புனைவெல்லாம் இப்போ எழுதறதேல்ல, அதையும் கொஞ்சம் கண்டுக்கோங்களேன்!

TKB காந்தி

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாவ்

ஸ்ரீமா ரொம்ப அருமையா இருக்கு.
[நீ சின்னப்பொண்னா இருக்க வாய்ப்பே இல்லை.]

எவ்வளவு அழகான வார்த்தை கோர்வைகள், விழி விலக்காமல் படித்தேன்.

என மாமியிடம் கேட்க நினைத்து தொண்டையோடு வடிகட்டிவிடுவேன் வார்த்தைகளை...//
வழக்கம் போல அருமை

படித்துக்கொண்டிருந்த புத்தகத்திலிருந்து விழி விளக்கி சிரித்தான்.
ம்ஹும் கதையின் முடிவு அருமை

anbudan vaalu said...

nalla irukku sri.......

ஸ்ரீமதி said...

@ logu..
//hai sreeeee..

mmm.. padichuttu solren..//

வாங்க லோகநாதன் :)

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//மீ த செகண்ட்ட்டு//

:)))))))

ஸ்ரீமதி said...

@ வண்ணத்துபூச்சியார்
//நல்லாவும் நெகிழ்வாகவும் இருக்கு.//

நன்றி அண்ணா.. :))

//கதையா..?? நிஜமா..??

கதையல்ல நிஜமா.??

எதுவானாலும் really nice//

கதை கதை கதை மட்டுமே.. கதையைத் தவிர வேறெதுவும் இல்லை.. :)))

ஸ்ரீமதி said...

@ logu..
//nallarukku..
:)))//

நன்றி லோகநாதன் :))

ஸ்ரீமதி said...

@ logu..
//eathachum picture
pottrukkalamla?//

படம் போடனும்ன்னு தோணல.. அதான் போடல.. :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//நெகிழ்ச்சியா இருந்தது தங்கச்சி..குட்! கீப் இட் அப்!//

அப்படியா?? நன்றி அண்ணா.. :)))

ஸ்ரீமதி said...

@ வண்ணத்துபூச்சியார்
//விரைவில் ஸ்ரீ ரசிகர் மன்றம்... வர இருக்குமோ..??

வாழ்த்துக்கள்//

என்னது ரசிகர் மன்றமா?? ஏன் அண்ணா இந்த கொலைவெறி?? :))))

ஸ்ரீமதி said...

@ அதிரை ஜமால்
//\\"நமக்கும் ஒரு குழந்தை வேணும்..", படித்துக்கொண்டிருந்த புத்தகத்திலிருந்து விழி விளக்கி சிரித்தான்.\\

நல்லா இருக்கு.

ஆமா கதையா - கதை மாதிரியா...//

கதைன்னு நினைச்சு தான் எழுதினேன்.. அது கதை மாதிரியாவது இருக்கான்னு நீங்க தான் அண்ணா சொல்லணும்.. :)) நன்றி அண்ணா.. :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////வானம் இன்னுமொரு பெருமழைக்கு கறுப்புக் கம்பளம் விரித்திருந்தது//

அழகாய் இருக்கிறது இந்த வரிகள்!//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//சிறுகதை நல்லா இருக்கு,கதை பாத்திரங்களின் சில சோகங்கள் மனதில் தங்கிச்செல்கின்றது!//

நன்றி அண்ணா :)))

ஸ்ரீமதி said...

@ கே.ரவிஷங்கர்
//ஸ்ரீமதி,

பேஷ்!பேஷ்!நன்னா எழுதியிருக்கேளே!
கதையின் மைய புள்ளி “குழந்தை ஏக்கம்” நாய் குட்டிகளின் மூலமா
வெளிப்படரது.

இதே மாதிரி “நறுக்” தெரித்தபோல
எழுதுங்கோ! ததாஸ்து!//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//நல்லா இருக்குது ஸ்ரீமதி...//

நன்றி அண்ணா :))

ஸ்ரீமதி said...

@ அமுதா
//நல்லா இருக்கு//

நன்றி அக்கா :))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
//தாய்மை எப்படி சொன்னாலும் அழகான உணர்வு அதை நாய் குட்டிகளின் கதை மூலமா சொல்லியிருப்பது வெகு அழகு...//

நன்றி புதியவன் :))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
//nice srimathi..//

Thanks anna :))

ஸ்ரீமதி said...

@ gayathri
//nalla iruku sri kathai//

Thank you very much akka.. :))

ஸ்ரீமதி said...

@ Chuttiarun

Will do it after sometime.. Thank you for visiting.. :)

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//ம்ம்ம் ரொம்பவும் பிடிச்சிருக்குடா :-)//

ஹை ரொம்பவும் பிடிச்சிருக்கா அக்கா?? நன்றி.. :))))))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//ரசித்தேன்..;)//

ஹை நன்றிஸ் :)))

ஸ்ரீமதி said...

@ விஜய்
//உங்கள் பதிவை நிறைய படிச்சிருக்கேன். ஆனா கமெண்ட் போட்றதுக்கு கொஞ்சம் சோம்பல் :-)

இந்தக் கதை நல்லா இருக்கு. சிறுகதைப் போட்டிக்கு அனுப்பலாம். Good flow :-)//

ரொம்ப நன்றி அண்ணா உங்கள் வாழ்த்திற்கு :)))

ஸ்ரீமதி said...

@ Sundar
//excellent flow. sweet!//

Thank you anna :))

ஸ்ரீமதி said...

@ ஜீவன்
//''டச்சிங்''//

ஹை நிஜமாவா அண்ணா?? :))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//ஹை ரொம்ப நல்லா இருக்கே இந்த கதை! வித்யாசமா, இது வரைக்கும் எங்கயும் படிக்காத மாதிரி இருக்கு srimadhi...//

ஹை நிஜம்மாவா அக்கா?? :)) நன்றி.. :)))))

ஸ்ரீமதி said...

@ PoornimaSaran
////என்றைக்கும் இல்லாமல் இன்று தனிமை மிகவும் வாட்டுவதாயிருந்தது. இப்பொழுது நிஜமாகவே அவற்றின் குரல்கள் அடங்கியிருந்தது. தனிமை ஏதேதோ எண்ணங்களை உருவாக்கியிருந்தது//

உண்மை தான்..

அழகான கதை:))//

நன்றி அக்கா :)))

ஸ்ரீமதி said...

@ TKB Gandhi
//ஸ்ரீ,

உங்க கதை நடை ரொம்ப அழகா இருக்கு. உங்க சிறுகதை, பி.நா, புனைவு(இதுமட்டும் எனக்கு புரிஞ்சதேல்லங்க! ஆனாலும்) எல்லாம் நல்லாருக்கு இன்னும் சொல்லனும்னா உங்க கவிதைகளைவிடன்னு கூட சொல்லலாம். நீங்க புனைவெல்லாம் இப்போ எழுதறதேல்ல, அதையும் கொஞ்சம் கண்டுக்கோங்களேன்!

TKB காந்தி//

என் கதை நடை நல்லா இருக்கறது இருக்கட்டும்... இந்த சாக்குல என் புனைவு புரியலன்னு சொல்லிட்டீங்கல்ல?? இதுக்காகவே புனைவு எழுதறேன்.. அதுக்கு நீங்க வந்து விளக்கம் சொல்லணும்.. இதுதான் உங்களுக்கு பனிஷ்மென்ட்.. :)))

ஸ்ரீமதி said...

@ அமிர்தவர்ஷினி அம்மா
//வாவ்

ஸ்ரீமா ரொம்ப அருமையா இருக்கு.//

நன்றி அக்கா :))

//[நீ சின்னப்பொண்னா இருக்க வாய்ப்பே இல்லை.]//

யக்கா ஒய் திஸ் மர்டர் வெறி?? ஏன் இப்படி?? :))

//எவ்வளவு அழகான வார்த்தை கோர்வைகள், விழி விலக்காமல் படித்தேன்.//

நன்றி அக்கா :))

//என மாமியிடம் கேட்க நினைத்து தொண்டையோடு வடிகட்டிவிடுவேன் வார்த்தைகளை...//
வழக்கம் போல அருமை

படித்துக்கொண்டிருந்த புத்தகத்திலிருந்து விழி விளக்கி சிரித்தான்.
ம்ஹும் கதையின் முடிவு அருமை//

ஹி ஹி ஹி டாங்க்ஸ்.. :))))

ஸ்ரீமதி said...

@ anbudan vaalu
//nalla irukku sri.......//

நன்றி வாலு :)))))))

TKB Gandhi said...

இதுக்காகவே புனைவு எழுதறேன்.. அதுக்கு நீங்க வந்து விளக்கம் சொல்லணும்.. இதுதான் உங்களுக்கு பனிஷ்மென்ட்.. :)))//

இவ்ளவு பெரிய பனிஷ்மென்ட் எல்லாம் வேண்டாங்க ஸ்ரீ, கொஞ்சம் கொறச்சுகொங்க :)

ஜி said...

Gud one :))

ஸ்ரீமதி said...

@ TKB Gandhi
//இதுக்காகவே புனைவு எழுதறேன்.. அதுக்கு நீங்க வந்து விளக்கம் சொல்லணும்.. இதுதான் உங்களுக்கு பனிஷ்மென்ட்.. :)))//

இவ்ளவு பெரிய பனிஷ்மென்ட் எல்லாம் வேண்டாங்க ஸ்ரீ, கொஞ்சம் கொறச்சுகொங்க :)//

அதெல்லாம் முடியாது.. சொன்னா சொன்னதுதான்... ;)))

ஸ்ரீமதி said...

@ ஜி
//Gud one :))//

ஹை தேங்க்ஸ் அண்ணா.. :))))

அனுஜன்யா said...

வாவ்! பிரமாதம் ஸ்ரீ. எல்லாப் பெண்களுக்கும் உள்ள உன்னத உணர்வை அழகாகப் பதிவு செய்து இருக்கிறாய். நிறைய பேர் சொன்னது போல் good flow all through. ரவிசங்கர் இலேசில் பாராட்ட மாட்டார். நானும் நீயும் அம்மா திட்டத் திட்ட நாய்க்குட்டி கொண்டு வந்தது நேற்றுப் போல் இருக்கிறது. இப்போ நீ பெரிய மனுஷி போல கதை கவிதை எல்லாம் எழுதத் துவங்கி ஆயிற்று!

ஸ்ரீ, உனக்கு நிறைய திறமை இருக்கு. நிறைய படி. பெரிய பத்திரிக்கைகளுக்கு எழுதிப் போடு. வாசகர்களைக் கவரும் திறன் மிக முக்கியம். அது உனக்கு இலகுவில் வருகிறது. வாழ்த்துக்கள்.

நான் எப்போதும் படு தாமதமாக வருவதற்கு, பிரசித்தி பெற்ற என் சோம்பேறித் தனத்துடன், உனக்கு வரும் எல்லாப் பின்னூட்டங்களையும் ஒரே மூச்சில் படிக்கும் பேராசையும் காரணம். ஆதலால், நான் லேட்டாதான் வருவேன். லேட்டஸ்டாவும்தான் :))))

அன்புடன் உன் அண்ணன்

அனுஜன்யா said...

ஸ்ரீ, உனக்கு மிக ஆச்சரியமாக இருக்கலாம். உன் கதையில் வரும் காட்சி கிட்டத் தட்ட என் கவிதை ஒன்றில் கொடுக்க முயன்றேன். அது உயிரோசை (17th Nov.2008 issue). பதிவில் இன்னும் போடவில்லை. போட வேண்டும். :)))

அனுஜன்யா

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//வாவ்! பிரமாதம் ஸ்ரீ. எல்லாப் பெண்களுக்கும் உள்ள உன்னத உணர்வை அழகாகப் பதிவு செய்து இருக்கிறாய். நிறைய பேர் சொன்னது போல் good flow all through. ரவிசங்கர் இலேசில் பாராட்ட மாட்டார். நானும் நீயும் அம்மா திட்டத் திட்ட நாய்க்குட்டி கொண்டு வந்தது நேற்றுப் போல் இருக்கிறது. இப்போ நீ பெரிய மனுஷி போல கதை கவிதை எல்லாம் எழுதத் துவங்கி ஆயிற்று!//

ஹை நன்றி அண்ணா நான் கூப்டதும் வந்ததுக்கு.. :)))

//ஸ்ரீ, உனக்கு நிறைய திறமை இருக்கு. நிறைய படி. பெரிய பத்திரிக்கைகளுக்கு எழுதிப் போடு. வாசகர்களைக் கவரும் திறன் மிக முக்கியம். அது உனக்கு இலகுவில் வருகிறது. வாழ்த்துக்கள்.//

நிச்சயம் செய்கிறேன் அண்ணா நன்றி.. :)))

//நான் எப்போதும் படு தாமதமாக வருவதற்கு, பிரசித்தி பெற்ற என் சோம்பேறித் தனத்துடன், உனக்கு வரும் எல்லாப் பின்னூட்டங்களையும் ஒரே மூச்சில் படிக்கும் பேராசையும் காரணம். ஆதலால், நான் லேட்டாதான் வருவேன். லேட்டஸ்டாவும்தான் :))))

அன்புடன் உன் அண்ணன்//

நீங்க லேட்டா வரதுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கா?? இது தெரியாமபோச்சே... :)) கவலைப்படாதீங்க அண்ணா எப்படியும் உங்க கமெண்ட் தான் லாஸ்ட் கமெண்ட்டா இருக்கும்.. ;))

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//ஸ்ரீ, உனக்கு மிக ஆச்சரியமாக இருக்கலாம். உன் கதையில் வரும் காட்சி கிட்டத் தட்ட என் கவிதை ஒன்றில் கொடுக்க முயன்றேன். அது உயிரோசை (17th Nov.2008 issue). பதிவில் இன்னும் போடவில்லை. போட வேண்டும். :)))

அனுஜன்யா//

அண்ணா அந்த கடற்கரையில் ஓர் காலை கவிதையா அண்ணா?? ஹை சேம் பின்ச்.. :)))))))))

Saravana Kumar MSK said...

கலக்கல்.. தேர்ந்த எழுத்தாளரின் நடை.. பின்ற போ..

Saravana Kumar MSK said...

//இன்றைய காலை தேநீர் நேரத்து ரொட்டித்துண்டுகளாகிப் போயிருந்தது அந்த நாலு ஐந்தின் வருகைக்கான பேச்சு.//

//வானம் இன்னுமொரு பெருமழைக்கு கறுப்புக் கம்பளம் விரித்திருந்தது. //

செம அழகு.. :)

sathish said...

reminding me of another post I read somewhere in the past. going good keep it up sis!

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//கலக்கல்.. தேர்ந்த எழுத்தாளரின் நடை.. பின்ற போ..//

நன்றி சரவணா :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////இன்றைய காலை தேநீர் நேரத்து ரொட்டித்துண்டுகளாகிப் போயிருந்தது அந்த நாலு ஐந்தின் வருகைக்கான பேச்சு.//

//வானம் இன்னுமொரு பெருமழைக்கு கறுப்புக் கம்பளம் விரித்திருந்தது. //

செம அழகு.. :)//

நன்றிகள் பல சரவணா :))

ஸ்ரீமதி said...

@ sathish
//reminding me of another post I read somewhere in the past. going good keep it up sis!//

Thank you very much anna :))

நாணல் said...

ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீ.. :) தலைப்புக்கேற்ற கதை.... :)

ஸ்ரீமதி said...

@ நாணல்
//ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீ.. :) தலைப்புக்கேற்ற கதை.... :)//

ஹை நன்றி அக்கா :)))

மகி said...

அருமை ஸ்ரீ
அனுபவிச்சு எழுதின மாதிரி இருக்கு.
இத்தனை நாளா மிஸ் பண்ணிட்டேன், உங்க எழுத்த.

ஸ்ரீமதி said...

@ மகி
//அருமை ஸ்ரீ
அனுபவிச்சு எழுதின மாதிரி இருக்கு.
இத்தனை நாளா மிஸ் பண்ணிட்டேன், உங்க எழுத்த.//

நன்றி மகி முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்.. :)) அனுபவமெல்லாம் இல்ல.. சும்மா எழுதினது.. உங்களுக்கு பிடிச்சதுல மகிழ்ச்சி.. :))))))))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது