காதல் திருத்தம்-7

உடுத்திப்போட்ட
உடையெனக்
களைந்துக்கிடக்கிறது
நம் காதல்
திருத்தித்தர
உடனே வா....!!
****
என்றோ நாம் சிரித்ததை நினைத்து இன்று கண்ணீர் சிந்துவோம்..., என்றோ நாம் அழுததை நினைத்து இன்று சிரிப்போம்... இது நட்பில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். ஆனால், காதலில் மட்டும் என்றோ அழுததை நினைத்தாலும், சிரித்து மகிழ்ந்ததை நினைத்தாலும், கண்களைத் தாண்டி கண்ணீர் வெளிவரத் துடித்துக்கொண்டுதானிருக்கும். இன்று அவள் கண்களில் வரும் கண்ணீருக்குக் காரணமான நிகழ்வு என்றோ நிகழ்ந்து முடிந்து விட்டது என்று அவள் சொன்னாலும் யாரும் நம்புவாரில்லை. ஏனெனில், ஒவ்வொரு முறையும் அவன் பிரிவின் வலி அவளுள் ஆழமான கண்ணீர் கடலை உருவாக்கி வைத்திருந்தது. அது என்றும் வற்றாமல் ஒவ்வொரு முறை அவனை நினைக்கும் போதும் தன்னோடு உப்பையும் சேர்த்துக்கொண்டு கண்கள் கரிக்க கன்னம் தாண்டியது.

"அம்மா வசுமதி... எங்க இருக்க??".

குரல் கேட்டு கண்கள் துடைத்தாள். ஆனால், கண்ணீரால் சிவந்த கண்களை என்ன செய்வதெனத் தெரியாமல் தலையை தாழ்த்தி, வார்த்தைகளுக்கு போராடி, அது வர மறுத்த பட்சத்தில் மிகவும் மெல்லியக் குரலில், "ம்ம்" என்றாள்.

"இந்த இருட்டுல... இவ்ளோ குளிர்ல.. இங்க என்னமா பண்ற??"

"ஒண்ணுமில்ல ஆன்டி.. சும்மா தான்.. காத்து வாங்கலாம்ன்னு வந்தேன்.."

"நல்லா காத்து வாங்கினே போ... உடம்புக்கு ஏதாவது வந்துட போகுது.. உள்ள வா.."

வெளிச்சத்திருக்கு வந்ததும் அவளின் கண்களின் சிவப்பு நன்கு புலனாகியது. எனினும், ஏற்கனவே அழுதிருக்கும் அவளிடம் எதுவும் கேட்டால் மீண்டும் அழக்கூடுமென பேசாமலிருந்தார்.

என்றும் போலவே இன்றும் சூரியன் கிழக்கில் தான் உதித்தது.. எனினும் அவளுள் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது.. நேற்று மனம் விட்டு அழுததால் என நினைத்தாள்.

"வசு எழுந்துட்டியா?? உன்ன பார்க்க விடியக்காலையே யாரோ ஒரு பையன் வந்தான்.. நீ தூங்கரன்னு சொன்னதும் உன்ன எழுப்ப வேணாம் வெயிட் பண்றேன்னு சொல்லி, உனக்காக வாசல்ல வெயிட் பண்ணிட்டு இருக்கான் போயி பாரேன்.."

"பையனா??", கொஞ்சம் அதிர்ந்து தான் போனாள்.

'யாராக இருக்கும்?? ஒருவேள.. ஒருவேள.. அருணோ?? ச்சே.. ச்சே.. நிச்சயமா இருக்காது... பின்ன யாரு??'

வாசலைப்பார்த்து திரும்பி நின்றவன் முதுகு மிகவும் பரிச்சயமானது.

"சாரி வசு மறந்துடுன்னு சொல்லிட்டு போயிட்டேனே தவிர, என்னால சத்தியமா முடியல... எவ்ளோ பிரச்சனை வந்தா என்ன?? சமாளிச்சு எதிர்நீச்சல் போட்டு காதல்ல ஜெயிக்கனும்கர முடிவுல வந்துருக்கேன்.. ஆனா, உடனே இப்போவே என்னால உன்ன எங்க வீட்டுக்கெல்லாம் கூட்டிட்டு போக முடியாது.. நீ எனக்காக வெயிட் பண்ணுவன்னு நம்பறேன்.. நான் வரேன்..."

எப்பொழுதும் போலவே அவள் பதிலுக்கு காத்திராமல் சென்று கொண்டிருந்தவனை கண்கள் வழி காதலோடு பருகிக்கொண்டிருந்தாள்..

-முற்றும்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.

82 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

gayathri said...

hey me they firsta

gayathri said...

lovers sa sethu vachathuku thanks ma

gayathri said...

kathai nalla irunthuchi ma

நாணல் said...

:) அவசர அவசரமா சேர்த்து வெசுட்டீங்க போல...

நாணல் said...

ஆரம்ப கவிதை சூப்பர்........

ஆயில்யன் said...

நல்லா அழகா முடிச்சிட்டீங்க !


சோகமில்லாம :(


நான் வரேன்.

loga.. said...

"ஆனால், காதலில் மட்டும் என்றோ அழுததை நினைத்தாலும், சிரித்து மகிழ்ந்ததை நினைத்தாலும், கண்களைத் தாண்டி கண்ணீர் வெளிவரத் துடித்துக்கொண்டுதானிருக்கும்.."

Palichnu manasula ottikichu..
starting kavithai nallarukku.

அருண் said...

ஒரே ஃபிலிங்ஸ்ஸா இருக்கே.. என்ன விஷயம் ஸ்ரீமதி அக்கா?

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்னப்பா இது, இவ்வளவு அவசர அவசரமா முடிச்சிருக்கீங்க, அழகா கொண்டுபோய், சாரிப்பா இந்த முடிவு உங்களின் கதைபோல், கதையில் வந்த கவிதைபோல, உருவகங்களைப்போல, வரிகளைப் போல
அழகாக இல்லை. (மன்னிக்கவும்)
இப்படி சொல்வதற்காய்.

இது நட்பில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். ஆனால், காதலில் மட்டும் என்றோ அழுததை நினைத்தாலும், சிரித்து மகிழ்ந்ததை நினைத்தாலும், கண்களைத் தாண்டி கண்ணீர் வெளிவரத் துடித்துக்கொண்டுதானிருக்கும்.//
உண்மைதான்

ஜீவன் said...

இந்த முடிவும் நல்லாத்தான் இருக்கு!


என்னங்க, காயத்ரி சந்தோசமா?

Ŝ₤Ω..™ said...

எல்லாருடைய கட்டாயத்தின் பேரில் தான் அருண் வசுமதியை சந்தித்து பேசி இருக்கிறான்.. கட்டாயத்திலேயே அவளை திருமணத்திற்கு காக்க சொல்லி இருக்கிறான்..

இது நல்லா இல்லை..

அவ்ளோதான் சொல்ல முடியும்..

முரளிகண்ணன் said...

nice

கார்க்கி said...

உன் நல்லெண்ணம் புரியுது. எனக்கென்னவோ சேர்ந்த காதலை விட சேராத காதலின் வீரியம் அதிகம். அப்படி முடிக்கும் போது சில காலம் அது மனசை பிசையும். (சரி சரி பொறாமைல சொல்ற‌துதான். ங்கொய்யால நமக்கு கிடைக்கல இவனுக்கு மட்டுமா?)

நல்ல கதை.. வாழ்த்துகள்

புதியவன் said...

//உடுத்திப்போட்ட
உடையெனக்
களைந்துக்கிடக்கிறது
நம் காதல்
திருத்தித்தர
உடனே வா....!!//

அழகா திருத்தியிருக்கீங்க காதல...

//எப்பொழுதும் போலவே அவள் பதிலுக்கு காத்திராமல் சென்று கொண்டிருந்தவனை கண்கள் வழி காதலோடு பருகிக்கொண்டிருந்தாள்..//

சுபமா முடிசிருக்கீங்க கதையா...

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி. உங்க எழுத்து நடை அழகா இருக்கு...

Maddy said...

எப்பொழுதும் போலவே அவள் பதிலுக்கு காத்திராமல் சென்று கொண்டிருந்தவனை கண்கள் வழி காதலோடு பருகிக்கொண்டிருந்தாள்..

இந்த பொண்ணுங்க எப்பவும் இப்படி தானா?? ஆளை பார்த்த கோபம், அழுகை எல்லாம் பறந்து போய்டுமா? அதுவும் பதிலுக்கு கூட வெயிட் பண்ணாத ஆளை பார்த்து கண்கள் வழி காதலோடு பருகிக்கொண்டிருந்தாள்.. ச்சே! தெரியாம போய்டுச்சு, இல்லைனா நானும் என்னோட காலத்தில முயற்சி செய்திருக்கலாம். ஓகே! ஓகே! ஸ்ரீ குட்டி, வீட்ல போட்டு குடுத்துடாதே!!

நான் ஆதவன் said...

இரண்டு பேரும் சேர்ந்திடுவாங்கன்னு தெரியும் ஆனா இவ்வளவு சீக்கரமா நடக்கும்ன்னு எதிர்பாக்கல...

யாரோ உன்னை ப்ளாக்மெயில் செய்து அந்த இரண்டு பேரையும் உடனே சேர்த்திடுன்னு சொல்லி சேர்த்து வச்ச மாதிரி இருக்கு..

அருள் said...

// உடுத்திப்போட்ட
உடையெனக்
களைந்துக்கிடக்கிறது
நம் காதல்
திருத்தித்தர
உடனே வா....!! //

நிஜத்த சொல்லனும்ன்னா, ஒரு காதலி தன் காதலனிடத்தில் கசங்கிய தன் காதலை சரி செய்ய இதை விட ஒரு அழக்கன உவமையை உபயோகப் படுத்த முடியுமாங்கறது சந்தேகம் தான்... வரிகள் அழகு... உங்கள் உணர்வுகளுடன்...

அருள் said...

கதை போன போக்க பாத்தப்போ... இன்னும் ஒரு நாலு அல்லது அஞ்சு பதிவு வரை போகுன்னு நெனச்சேன்...

ஆனா இவ்வளவு சிக்கிரமா இவங்க காதல் திருத்தப் பட்டது எதிர் பாராத ஒன்று.

வேக வேகமா முடிச்சத பார்த்த... விரைவில் இன்னொரு கதைக்கு பூஜை போடுவிங்கனு நினைக்கிறேன்...

தமிழ் பிரியன் said...

அவசர அவசரமா சேர்த்து வெசுட்டீங்க போல... உங்ககிட்ட இன்னும் எதிர்பார்க்கிறோம்..:)

தமிழ் பிரியன் said...

நல்ல முயற்சி ஸ்ரீமதி! அடுத்த தொடருக்கு வாழ்த்துக்கள்!

அருள் said...

உங்களுடைய வார்த்தை பிரயோகத்தையும், எழுத்து நடையையும், கவிதையானாலும் கதையானாலும் அதை கொண்டு செல்லும் விதம்...
இவைகளை பார்த்து நான் பிரமித்த நாட்கள் அதிகம்.

அவசரமாக திருத்தப் பட்ட இந்த முடிவு சிறிய ஏமாற்றத்தை தந்தாலும்...

அதிக வசனங்கள் இல்லாமல்...வெறும் உணர்வுப் பரிமாற்றத் துடன் இயல்பாய் முடிக்கப்பட்ட விதம் மென்மையையும் அழகையும் சேர்த்திருக்கு.

மொத்தத்தில் நல்ல முடிவு.

gayathri said...

ஜீவன் said...
இந்த முடிவும் நல்லாத்தான் இருக்கு!


என்னங்க, காயத்ரி சந்தோசமா

rompa rompa santhosam ஜீவன்

logu.. said...

gayathrikku santhosamellam varuma..
sollave illa.

gayathri said...

logu.. said...
gayathrikku santhosamellam varuma..
sollave illa.

ada pavi nee ippadi sonna. itha padikuravanga naan ennamo eppavum sogama iruka matheri nenaika poranga da.

ஸ்ரீமதி said...

@ gayathri
//hey me they firsta//

:)))

ஸ்ரீமதி said...

@ gayathri
//lovers sa sethu vachathuku thanks ma//

பொறுமையா எல்லா பார்ட்டும் படிச்சு, பின்னூட்டமும் போட்டதுக்கு, நான் தான் அக்கா உங்களுக்கு நன்றி சொல்லணும்.. :))

ஸ்ரீமதி said...

@ gayathri
//kathai nalla irunthuchi ma//

அப்படியா?? நன்றி அக்கா.. :))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//:) அவசர அவசரமா சேர்த்து வெசுட்டீங்க போல...//

இதவிட இதுல இன்னும் என்ன சொல்ரதுன்னுத் தெரியல அக்கா.. அதான்.. :)))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//ஆரம்ப கவிதை சூப்பர்........//

நன்றி அக்கா :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//நல்லா அழகா முடிச்சிட்டீங்க !//

நன்றி அண்ணா :))

//சோகமில்லாம :(//

அதுக்கேன் நீங்க இவ்ளோ சோகமா கமெண்டிருக்கீங்க?? :)))))

//நான் வரேன்.//

:))))

ஸ்ரீமதி said...

@ loga..
//"ஆனால், காதலில் மட்டும் என்றோ அழுததை நினைத்தாலும், சிரித்து மகிழ்ந்ததை நினைத்தாலும், கண்களைத் தாண்டி கண்ணீர் வெளிவரத் துடித்துக்கொண்டுதானிருக்கும்.."

Palichnu manasula ottikichu..
starting kavithai nallarukku.//

நன்றி லோகநாதன் :))

ஸ்ரீமதி said...

@ அருண்
//ஒரே ஃபிலிங்ஸ்ஸா இருக்கே.. என்ன விஷயம் ஸ்ரீமதி அக்கா?//

ஒன்னுமில்லையே தம்பி... :)) (நீ ஃபுல் கதையும் படிச்ச?? ;)))

ஸ்ரீமதி said...

@ அமிர்தவர்ஷினி அம்மா
//என்னப்பா இது, இவ்வளவு அவசர அவசரமா முடிச்சிருக்கீங்க, அழகா கொண்டுபோய், சாரிப்பா இந்த முடிவு உங்களின் கதைபோல், கதையில் வந்த கவிதைபோல, உருவகங்களைப்போல, வரிகளைப் போல
அழகாக இல்லை. (மன்னிக்கவும்)
இப்படி சொல்வதற்காய்.//

அக்கா வாழ்க்கைல சில நல்ல விஷயங்கள நினைச்சதும் முடிச்சிடனும்.. தள்ளிப் போட்டோம்னா அத செய்ய ஒரு சோம்பேறித்தனமும், அப்பறம் ஒரு வெறுப்பும், நம்ம மேலையே ஒரு காழ்ப்புணர்ச்சியும் வந்துடும்.. எப்படி எந்த ஒரு முன்னறிவிப்போ, முறையான யோசனையோ இல்லாம அவள விட்டு பிரிஞ்சிடறதா அவன் சொன்னானோ.. அந்த நிமிஷமே அவள இன்னும் விரும்ப ஆரம்பிச்சிட்டதா தானே அர்த்தம்... அவள் சம்பந்தப்பட்ட ஒன்னொன்னையும் நினைச்சு பார்த்தவனுக்கு எப்படியும், எப்பாடுபட்டாவது மறுபடியும் அவளோட சேர்ந்துடனும்ன்னு தான் நினைப்பானே ஒழிய.. கால நேரம் அதற்குத் தேவை இல்லை.. அதான் அவனுக்கு தோணின இந்த நல்ல விஷயத்த உடனே ஓடி வந்து சொல்லிட்டான்.. அவள் எதிர்ப்பார்த்ததும் இது தானே.. :)))

//இது நட்பில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். ஆனால், காதலில் மட்டும் என்றோ அழுததை நினைத்தாலும், சிரித்து மகிழ்ந்ததை நினைத்தாலும், கண்களைத் தாண்டி கண்ணீர் வெளிவரத் துடித்துக்கொண்டுதானிருக்கும்.//
உண்மைதான்//

நன்றி அக்கா அழகான, மனம் திறந்த பின்னூட்டத்திற்கு.. :)))

ஸ்ரீமதி said...

@ ஜீவன்
//இந்த முடிவும் நல்லாத்தான் இருக்கு!//

நன்றி அண்ணா :))

//என்னங்க, காயத்ரி சந்தோசமா?//

அக்காதான் குஷில கமெண்டிகிட்டே இருக்காங்க.. ;))

ஸ்ரீமதி said...

@ Ŝ₤Ω..™
//எல்லாருடைய கட்டாயத்தின் பேரில் தான் அருண் வசுமதியை சந்தித்து பேசி இருக்கிறான்.. கட்டாயத்திலேயே அவளை திருமணத்திற்கு காக்க சொல்லி இருக்கிறான்..

இது நல்லா இல்லை..

அவ்ளோதான் சொல்ல முடியும்..//

அண்ணா... என்ன அண்ணா சொல்றீங்க?? இது புதுக்கதையா இருக்கே?? யார் அருண கட்டாயப்படுத்தினா?? :))

ஸ்ரீமதி said...

@ முரளிகண்ணன்
//nice//

நன்றி அண்ணா.. :)) (உங்களுக்கு இவ்ளோ சின்ன, அவசரமான முடிவு பிடிக்கலைன்னு நினைக்கிறேன்.. என்ன அண்ணா பண்றது?? இந்த காலத்து பசங்களே இப்படி தான்.. ஹி ஹி ஹி... ;)) சும்மா சொன்னேன் அண்ணா.. )

ஸ்ரீமதி said...

@ கார்க்கி
//உன் நல்லெண்ணம் புரியுது. எனக்கென்னவோ சேர்ந்த காதலை விட சேராத காதலின் வீரியம் அதிகம். அப்படி முடிக்கும் போது சில காலம் அது மனசை பிசையும். (சரி சரி பொறாமைல சொல்ற‌துதான். ங்கொய்யால நமக்கு கிடைக்கல இவனுக்கு மட்டுமா?)

நல்ல கதை.. வாழ்த்துகள்//

உண்மை தான் அண்ணா.. என்னைப் பொருத்தவரைக்கும் இந்தக் கதை இதற்கு முந்தையப் பகுதியோட முடிஞ்சு போச்சு.. இது நேயர் விருப்பம் தான்.. :))நன்றி அண்ணா:))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////உடுத்திப்போட்ட
உடையெனக்
களைந்துக்கிடக்கிறது
நம் காதல்
திருத்தித்தர
உடனே வா....!!//

அழகா திருத்தியிருக்கீங்க காதல...

//எப்பொழுதும் போலவே அவள் பதிலுக்கு காத்திராமல் சென்று கொண்டிருந்தவனை கண்கள் வழி காதலோடு பருகிக்கொண்டிருந்தாள்..//

சுபமா முடிசிருக்கீங்க கதையா...

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி. உங்க எழுத்து நடை அழகா இருக்கு...//

நன்றி புதியவன் எல்லா பாகத்தையும் படிச்சு, கமெண்ட்டும் போட்டதுக்கு.. :)))

ஸ்ரீமதி said...

@ Maddy
//எப்பொழுதும் போலவே அவள் பதிலுக்கு காத்திராமல் சென்று கொண்டிருந்தவனை கண்கள் வழி காதலோடு பருகிக்கொண்டிருந்தாள்..

இந்த பொண்ணுங்க எப்பவும் இப்படி தானா?? ஆளை பார்த்த கோபம், அழுகை எல்லாம் பறந்து போய்டுமா? அதுவும் பதிலுக்கு கூட வெயிட் பண்ணாத ஆளை பார்த்து கண்கள் வழி காதலோடு பருகிக்கொண்டிருந்தாள்.. ச்சே! தெரியாம போய்டுச்சு, இல்லைனா நானும் என்னோட காலத்தில முயற்சி செய்திருக்கலாம். ஓகே! ஓகே! ஸ்ரீ குட்டி, வீட்ல போட்டு குடுத்துடாதே!!//

ஆணோ, பெண்ணோ நம்ம எதிர்ப்பார்ப்ப ஓகே பண்ணா நமக்கு ஓகே தானே அண்ணா... அதே மாதிரி தான் இதுவும்.. அவனிடமான அவளின் எதிர்ப்பார்ப்பும் அது தானே அண்ணா.. அதாவது ரெண்டு பெரும் சேரனும்கறது.. அவன் ஒன்னும் அவள பிடிக்காம விட்டுட்டு போகலியே.. அதனால அவள் முடிவு அவனுக்கு ஏற்கனவே தெரிஞ்சது தான்.. அதான் பதிலுக்கு வெயிட் பண்ணல.. வெயிட் பண்ணிருந்தாலும் அவ ஒன்னும் சொல்லிருக்கப்போறதில்ல.. இல்ல இன்னும் வேணும்னா.. தமிழ் சினிமா காதலர்கள் பிரிஞ்சு ஒன்னு சேரும்போது... சரி வேண்டாம்.. ;)) வீட்ல சொல்ல மாட்டேன் நீங்க இந்த மட்டோடு நிற்கும்வரை.. ;))))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
//இரண்டு பேரும் சேர்ந்திடுவாங்கன்னு தெரியும் ஆனா இவ்வளவு சீக்கரமா நடக்கும்ன்னு எதிர்பாக்கல...

யாரோ உன்னை ப்ளாக்மெயில் செய்து அந்த இரண்டு பேரையும் உடனே சேர்த்திடுன்னு சொல்லி சேர்த்து வச்ச மாதிரி இருக்கு..//

பாவம் அண்ணா எவ்ளோ நாள் தான் ரெண்டு போரையும் பிரிச்சிவெச்சி அழவெக்கறது?? அதான் சீக்கிரம் சேர்த்து வெச்சுட்டேன்.. ;))

ஸ்ரீமதி said...

@ அருள்
//// உடுத்திப்போட்ட
உடையெனக்
களைந்துக்கிடக்கிறது
நம் காதல்
திருத்தித்தர
உடனே வா....!! //

நிஜத்த சொல்லனும்ன்னா, ஒரு காதலி தன் காதலனிடத்தில் கசங்கிய தன் காதலை சரி செய்ய இதை விட ஒரு அழக்கன உவமையை உபயோகப் படுத்த முடியுமாங்கறது சந்தேகம் தான்... வரிகள் அழகு... உங்கள் உணர்வுகளுடன்...//

ரொம்ப நன்றி அருள் அழகான உங்க கருத்துக்கு.. :))

ஸ்ரீமதி said...

@ அருள்
//கதை போன போக்க பாத்தப்போ... இன்னும் ஒரு நாலு அல்லது அஞ்சு பதிவு வரை போகுன்னு நெனச்சேன்...

ஆனா இவ்வளவு சிக்கிரமா இவங்க காதல் திருத்தப் பட்டது எதிர் பாராத ஒன்று.

வேக வேகமா முடிச்சத பார்த்த... விரைவில் இன்னொரு கதைக்கு பூஜை போடுவிங்கனு நினைக்கிறேன்...//

இல்ல அருள் ஏற்கனவே ஆறு பார்ட் போட்டாச்சு.. இன்னும் எத்தனை நாளுக்கு தான் அருனுக்காகவும் வசுவுக்காகவும் மட்டுமே யோசிச்சிட்டு இருக்கறதுன்னு தோணிச்சு.. அதான் முடிச்சிட்டேன்.. பாகம் சின்னதுன்னாலும் எனக்கென்னவோ இது தான் சரின்னு பட்டுச்சு.. அது உங்களுக்கு ஏமாற்றமா இருந்துதுன்னா.. மன்னிச்சிடுங்க.. இப்போதைக்கு கதை எழுதும் ஐடியா இல்ல.. :)))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//அவசர அவசரமா சேர்த்து வெசுட்டீங்க போல... உங்ககிட்ட இன்னும் எதிர்பார்க்கிறோம்..:)//

ஆமா அண்ணா அவங்களா ஓடி போயி நம்ம மானத்த வாங்கறத விட, நாமலே சேர்த்துவெச்சு மீசைல மண்ணு ஒட்டலன்னு சொல்லிக்கலாம்ன்னு ஆசைப்பட்டேன்.. ;))))))) என்னது இன்னும் எதிர்ப்பார்க்கறீங்களா?? என்னவெச்சு காமெடி, கீமெடி பண்ணலியே?? ;))))))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//நல்ல முயற்சி ஸ்ரீமதி! அடுத்த தொடருக்கு வாழ்த்துக்கள்!//

நன்றி அண்ணா.. :)) (இது உண்மையான பின்னூட்டம்தானா? இல்ல டெம்ப்லேட்டா? ;))

ஸ்ரீமதி said...

@ அருள்
//உங்களுடைய வார்த்தை பிரயோகத்தையும், எழுத்து நடையையும், கவிதையானாலும் கதையானாலும் அதை கொண்டு செல்லும் விதம்...
இவைகளை பார்த்து நான் பிரமித்த நாட்கள் அதிகம்.

அவசரமாக திருத்தப் பட்ட இந்த முடிவு சிறிய ஏமாற்றத்தை தந்தாலும்...

அதிக வசனங்கள் இல்லாமல்...வெறும் உணர்வுப் பரிமாற்றத் துடன் இயல்பாய் முடிக்கப்பட்ட விதம் மென்மையையும் அழகையும் சேர்த்திருக்கு.

மொத்தத்தில் நல்ல முடிவு.//

ரொம்ப நன்றி அருள் நேர்மையான உங்க கருத்துக்கு... :)))))

ஸ்ரீமதி said...

@ gayathri
//ஜீவன் said...
இந்த முடிவும் நல்லாத்தான் இருக்கு!


என்னங்க, காயத்ரி சந்தோசமா

rompa rompa santhosam ஜீவன்//

:))))))))

Saravana Kumar MSK said...

"காதல் திருத்தம்-7" எதிர்பார்க்கவில்லை.. நேயர் விருப்பமா..??

கலக்கல்.. ;)

Saravana Kumar MSK said...

//உடுத்திப்போட்ட
உடையெனக்
களைந்துக்கிடக்கிறது
நம் காதல்
திருத்தித்தர
உடனே வா....!!//

ஜூப்பரப்பு..

Saravana Kumar MSK said...

//என்றோ நாம் சிரித்ததை நினைத்து இன்று கண்ணீர் சிந்துவோம்..., என்றோ நாம் அழுததை நினைத்து இன்று சிரிப்போம்... இது நட்பில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். ஆனால், காதலில் மட்டும் என்றோ அழுததை நினைத்தாலும், சிரித்து மகிழ்ந்ததை நினைத்தாலும், கண்களைத் தாண்டி கண்ணீர் வெளிவரத் துடித்துக்கொண்டுதானிருக்கும்.//

இந்த மாதிரி எல்லாம் எப்படி எழுதற..??
ஏதோ நூறு வருஷம் அனுபவித்து வாழ்ந்தவர்கள் மாதிரி..

Saravana Kumar MSK said...

50 ;)

Saravana Kumar MSK said...

முடிக்க வேண்டுமென்று முடித்தாலும்.. உன் வரிகள் நல்லா இருக்கு.. ;)

Karthik said...

Tamil Cinema la inda kadai padamaaga varuma?? Nalla irundhuchu!!! Link la munnadi thandadhu rombha udaviya irundhuchu!!

anbudan vaalu said...

appadi oru vazhiya serthu vachitta sri........

dharshini said...

//"அம்மா வசுமதி... எங்க இருக்க??"//

நல்லா கேட்டீங்களா எனக்கு "அம்மா ஸ்ரீம‌தி... எங்க இருக்க??"ன்னு தான் கேட்டுச்சு.

coooooooooooooooooooooollllllllllllllll...

nice ending sri.

பரிசல்காரன் said...

//உடுத்திப்போட்ட
உடையெனக்
களைந்துக்கிடக்கிறது
நம் காதல்
திருத்தித்தர
உடனே வா....!! //


திருத்தித்தரணுமா..

களைந்துகிடக்கிறது இல்ல ஸ்ரீ..

‘கலைந்து'கிடைக்கிறது.

சரியா தப்பா..?

அப்பறம் இன்னைக்கு வலைச்சரத்துல உங்க வலையைப் பத்தி எழுதறேன். பதிலுக்கு இதே மாதிரி எனக்கும் ப்ளாக்கை டிசைன் பண்ணித்தரணும்.. டீல் ஓக்கேவா?

:-))))))

SK said...

:) :) :)

Vishnu... said...

முடிவு நல்லா இருக்கு ஸ்ரீ ..மா ...

அடுத்த தொடர் எப்போது தங்கையே ...

கோபிநாத் said...

;)

ஜி said...

:)) This part doesn't fit for the story :((

mayvee said...

nice post

Divyapriya said...

என்ன கதை இப்படி டபக்கென்று முடிந்திவிட்டது தங்கச்சி? ஏற்கனவே முடிஞ்சிடுச்சுன்னு ஒரு ஃபீல் குடுத்துட்டு, இப்ப கிளைமாக்ஸ் வைக்கறது, இது ஒரு புது விதமான ஸ்டைலா தான் தான் இருக்கு ;)
எப்படியோ, கதை கவிதை எல்லாமே டாப்பு...தொடர்ந்து நிறைய தொடர் கதை, கதை எழுதவும்...

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//"காதல் திருத்தம்-7" எதிர்பார்க்கவில்லை.. நேயர் விருப்பமா..??

கலக்கல்.. ;)//

நன்றி சரவணா :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////உடுத்திப்போட்ட
உடையெனக்
களைந்துக்கிடக்கிறது
நம் காதல்
திருத்தித்தர
உடனே வா....!!//

ஜூப்பரப்பு..//

நன்றி :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////என்றோ நாம் சிரித்ததை நினைத்து இன்று கண்ணீர் சிந்துவோம்..., என்றோ நாம் அழுததை நினைத்து இன்று சிரிப்போம்... இது நட்பில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். ஆனால், காதலில் மட்டும் என்றோ அழுததை நினைத்தாலும், சிரித்து மகிழ்ந்ததை நினைத்தாலும், கண்களைத் தாண்டி கண்ணீர் வெளிவரத் துடித்துக்கொண்டுதானிருக்கும்.//

இந்த மாதிரி எல்லாம் எப்படி எழுதற..??
ஏதோ நூறு வருஷம் அனுபவித்து வாழ்ந்தவர்கள் மாதிரி..//

:)))))நூறு வருஷம் இல்ல சரவணா.. ஒவ்வொரு நிமிஷத்தையும் சந்தோஷமா அனுபவிச்சு வாழனும்.. வாழறதுக்கு தானே வாழ்க்கை?? அந்த மாதிரி இருந்து பாரு இது மாதிரி நீயும் நிறைய எழுத ஆரம்பிச்சிடுவ.. ;)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//50 ;)//

:)))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//முடிக்க வேண்டுமென்று முடித்தாலும்.. உன் வரிகள் நல்லா இருக்கு.. ;)//

நன்றி சரவணா உன் தொடர் ஆதரவுக்கு.. :))

ஸ்ரீமதி said...

@ Karthik
//Tamil Cinema la inda kadai padamaaga varuma?? Nalla irundhuchu!!! Link la munnadi thandadhu rombha udaviya irundhuchu!!//

தமிழ் சினிமால இந்த கதையா?? நல்ல ஜோக்.. :))) நன்றி கார்த்திக் முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்.. :)))))

ஸ்ரீமதி said...

@ anbudan vaalu
//appadi oru vazhiya serthu vachitta sri........//

நன்றி வாலு :)))))

ஸ்ரீமதி said...

@ dharshini
////"அம்மா வசுமதி... எங்க இருக்க??"//

நல்லா கேட்டீங்களா எனக்கு "அம்மா ஸ்ரீம‌தி... எங்க இருக்க??"ன்னு தான் கேட்டுச்சு.

coooooooooooooooooooooollllllllllllllll...

nice ending sri.//

நன்றி தர்ஷினி :))))))

ஸ்ரீமதி said...

@ பரிசல்காரன்
////உடுத்திப்போட்ட
உடையெனக்
களைந்துக்கிடக்கிறது
நம் காதல்
திருத்தித்தர
உடனே வா....!! //


திருத்தித்தரணுமா..

களைந்துகிடக்கிறது இல்ல ஸ்ரீ..

‘கலைந்து'கிடைக்கிறது.

சரியா தப்பா..?//

நீங்க சொன்னது தான் சரின்னு நினைக்கிறேன் அண்ணா.. :)))))

//அப்பறம் இன்னைக்கு வலைச்சரத்துல உங்க வலையைப் பத்தி எழுதறேன். பதிலுக்கு இதே மாதிரி எனக்கும் ப்ளாக்கை டிசைன் பண்ணித்தரணும்.. டீல் ஓக்கேவா?

:-))))))//

என் வலைப்பூ பத்தி எழுதினதுக்கு நன்றி அண்ணா.. :)) இதுமாதிரி உங்க ப்ளாகும் டிசைன் பண்ணித் தரணுமா?? கண்டிப்பா பண்ணித்தரேன் அண்ணா.. :))))))))டீல் டபுள் ஓகே.. :))))))

ஸ்ரீமதி said...

@ SK
//:) :) :)//

இன்னாத்துக்கு இப்ப இப்படி விட்டு விட்டு சிரிக்கிறீங்க?? ;)))))

ஸ்ரீமதி said...

@ Vishnu...
//முடிவு நல்லா இருக்கு ஸ்ரீ ..மா ...

அடுத்த தொடர் எப்போது தங்கையே ...//

முடிவு நல்லா இருந்ததா?? நன்றி அண்ணா.. :)) அடுத்தத்தொடர் இப்போதைக்குக் கிடையாது பயப்படாம இருங்க அண்ணா.. ;))))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//;)//

:))))))))

ஸ்ரீமதி said...

@ ஜி
//:)) This part doesn't fit for the story :((//

:))))))I know... But what to do anna?? ;))) Gimme onemore chance.. ll try to write better in the next story.. ;))

ஸ்ரீமதி said...

@ mayvee
//nice post//

நன்றி :)))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//என்ன கதை இப்படி டபக்கென்று முடிந்திவிட்டது தங்கச்சி? ஏற்கனவே முடிஞ்சிடுச்சுன்னு ஒரு ஃபீல் குடுத்துட்டு, இப்ப கிளைமாக்ஸ் வைக்கறது, இது ஒரு புது விதமான ஸ்டைலா தான் தான் இருக்கு ;)
எப்படியோ, கதை கவிதை எல்லாமே டாப்பு...தொடர்ந்து நிறைய தொடர் கதை, கதை எழுதவும்...//

இது அருணோட திடீர் முடிவு.. அதான்.. ;))))))) நன்றி அக்கா.. :)))தொடர்ந்து எழுதவா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. ;)))))))

PoornimaSaran said...

//எப்பொழுதும் போலவே அவள் பதிலுக்கு காத்திராமல் சென்று கொண்டிருந்தவனை கண்கள் வழி காதலோடு பருகிக்கொண்டிருந்தாள்..

//

கவிதை மாதிரி இருக்குங்க.. ரொம்ப அழகான முடிவு..

ஸ்ரீமதி said...

@ PoornimaSaran
////எப்பொழுதும் போலவே அவள் பதிலுக்கு காத்திராமல் சென்று கொண்டிருந்தவனை கண்கள் வழி காதலோடு பருகிக்கொண்டிருந்தாள்..

//

கவிதை மாதிரி இருக்குங்க.. ரொம்ப அழகான முடிவு..//

நன்றி பூர்ணிமாசரண்.. :))

Saravana Kumar MSK said...

//:)))))நூறு வருஷம் இல்ல சரவணா.. ஒவ்வொரு நிமிஷத்தையும் சந்தோஷமா அனுபவிச்சு வாழனும்.. வாழறதுக்கு தானே வாழ்க்கை?? அந்த மாதிரி இருந்து பாரு இது மாதிரி நீயும் நிறைய எழுத ஆரம்பிச்சிடுவ.. ;)))//

பெரிய ஆளுங்க சொல்றீங்க.. கேட்டுக்கறேன்.. ;)

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////:)))))நூறு வருஷம் இல்ல சரவணா.. ஒவ்வொரு நிமிஷத்தையும் சந்தோஷமா அனுபவிச்சு வாழனும்.. வாழறதுக்கு தானே வாழ்க்கை?? அந்த மாதிரி இருந்து பாரு இது மாதிரி நீயும் நிறைய எழுத ஆரம்பிச்சிடுவ.. ;)))//

பெரிய ஆளுங்க சொல்றீங்க.. கேட்டுக்கறேன்.. ;)//

நன்றி... :))

Ks friends said...

Wht is this ma ??
romba fast ta finish panita..
oru thrill..:-(
But goog climax..
inum konjam lateta vathuiukalam..

Onum illa namma tamil cinema pathu palakiruchu.. :-))))

ஸ்ரீமதி said...

@ Ks friends
//Wht is this ma ??
romba fast ta finish panita..
oru thrill..:-(
But goog climax..
inum konjam lateta vathuiukalam..

Onum illa namma tamil cinema pathu palakiruchu.. :-))))//

அடுத்த கதை எழுதும்போது கண்டிப்பா நீங்க சொன்ன மாதிரி செய்யறேன்... ஓகே?? :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது