காதல் திருத்தம்-4

உனக்கான
என் கவிதைகள்
மீண்டும் எனதாக
வேண்டும்
காதல் செய்...
*****

நினைவுகளின் நீரோடையில் மூழ்கி முகத்தை இழந்து நதியோடு செல்லவும் முடியாமல் நீந்தி தப்பிக்கவும் தெரியாமல் தத்தளித்து நின்றாள். காலவெள்ளத்தில் எல்லாம் கரைந்தோடுமா காதலைத் தவிர?? இவள் கேள்விக்கெல்லாம் பதிலில்லை.

"என்னம்மா..?? ரொம்ப நேரமா எதோ யோசிக்கற போல இருக்கு..!!", நினைவை கையுடன் சேர்ந்த ஒரு குரல் தடுக்க திடுமென நிமிர்ந்தாள்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க...!!", இதயத்தைத் தொடாத புன்னகை ஒன்றை தற்காலிகமாக உதட்டின் வழி வழிய விட்டாள்.

"ம்ம்ம் சரி... சாப்டியா??"

"ம்ஹும்... பாட்டி இன்னும் பூஜை ரூம்ல இருந்து வரலியே...!!"

"அவங்க வர லேட் ஆகும்... நீ வாம்மா... எவ்ளோ நேரம் சாப்டாம இருப்ப?? இப்பவே மணி 12 ஆச்சு.... உட்காரும்மா...!!"

"ம்ம்ம்...!!"

"உன்ன பத்தி ஏன் ஒண்ணுமே சொல்லமாட்டேங்கிற?? சரி உன் வீட்டப் பத்தியாவது சொல்லு.... யார்?? யார்?? இருக்கா...??"

"நான், அப்பா, அம்மா, அப்பறம் ரெண்டு தங்கச்சிங்க... அவ்ளோ தான்..!!"

"ம்ம்ம்... உன் தங்கைகள் என்ன பண்றாங்க??"

"பெரியவ இன்ஜினியரிங் ஃபர்ஸ்ட் இயர் பண்றா... ரெண்டாவது தங்கச்சி லெவன்த் படிக்கறா...!!"

"ஓஓ அப்படியா?? ம்ம்ம்... ரொம்ப அழகான குடும்பம்....!!",சிறு ஏக்கத்துடன் சிரித்தார்.

"உனக்கென்னம்மா சோகம்???", திடீரென்ற அவரின் இந்த கேள்வியை அவள் எதிப்பார்கத்தானில்லை.

"எனக்கா...?? ஒன்னும் இல்லையே...!!"

"நீ ஒன்னும் இல்லன்னு அவசரமா மறுக்கறதிலேயே தெரியுது... எதோ இருக்குன்னு.... உன் சொந்த விஷயத்துல மூக்க நுழைக்கிறதா நினைச்சா... வேண்டாம்...!!"

"அப்படியெல்லாம் இல்ல ஆன்....!!"

"ம்ம்ம் பரவால்ல... ஆன்ட்டி-ன்னே சொல்லு.... அம்மான்னு சொல்லதான் பையன் இங்கில்ல...!!"

"உங்களுக்கு மகன் இருக்காரா??"

"ம்ம்ம் இருக்கான்.... அழகா ஒரு மருமகள் ஏன் பேர குழந்தைகள் கூட இருக்காங்க... ஆனா இங்க இல்ல கண்காணா தூரத்துல... எங்கேயோ ஒரு அந்நிய நாட்டுல வேலைப் பார்க்கிறான்... வருஷத்துக்கு ஒரு முறை வருவான்... இல்லேன்னா ஒரு போன் பண்ணி வரமுடியாததுக்கு காரணம் சொல்லுவான்.. அவ்ளோதான்... அவன சொல்லியும் ஒன்னும் குத்தமில்ல... எல்லாரும் அப்படிதான்....!!", சூடான பெருமூச்சு ஒன்று வெளியானது.

"ஆன்ட்டி.....!!"

"ம்ம்ம் ஒன்னும் கவலை இல்ல.... பழகி போச்சு...!!", கலகலவென சிரித்தார்.

"உனக்கொரு கதை தெரியுமா....?? ஒரு குட்டி கதை....!!"

"ம்ஹும்..!!"

"சரி சொல்றேன்.. கேளு..!!"

"ஒரு ஊர்ல ஒரு தாய் குருவியும் அதனோட இரண்டு குட்டி குருவிகளும் இருந்ததாம்.... ஒருநாள் அந்த பக்கமா வந்த வழிபோக்கர்கள் இந்த ஊர்ல வெள்ளம் வர வாய்ப்புகள் இருக்குன்னு பேசிகிட்டு போனாங்களாம்.. இதக் கேட்ட தாய் குருவி, உடனே ஒரு உயரமான மரத்துல கூடு கட்டி வெள்ளம் வரதுக்குள்ள அங்க இந்த ரெண்டு குட்டி குருவியையும் கொண்டு போயி வெச்சு வெள்ளத்துல இருந்து காப்பாத்தினதாம்... அங்க அந்த குட்டி குருவிங்க ரெண்டும் ரொம்ப சந்தோஷமா, பாதுகாப்பா, வளர்ந்ததாம்... இதப் பார்த்த தாய் குருவி கேட்டதாம்... "நான் உங்கள வளர்க்கறதுக்கும், பாதுகாக்கறதுக்கும் இவ்ளோ கஷ்டப்படறேனே... அதே மாதிரி நாளைக்கு.. நான் வயசான காலத்துல கஷ்டப்படும்போது... நீங்க ரெண்டுபேரும் என்ன காப்பாத்துவீங்களா??"-ன்னு கேட்டதாம்... அதுக்கு அந்த குட்டி குருவிகள் சொன்னதாம்... "அம்மா.. ஒரு ஆபத்து வரும் போது நீ உன் குடும்பமான எங்கள தான் காப்பாத்த நினைச்சியே.. ஒழிய, உன் அம்மா, அப்பாவ பத்தி நினைச்சியா??? அதே மாதிரி தான், நாளைக்கு ஒரு துன்பமோ, ஆபத்தோ வரும் போது நாங்க எங்க குடும்பத்த தான் பார்ப்போம்"-னு சொல்லிச்சாம்... ம்ம்ம் குருவியா இருந்தா என்ன?? மனிதர்களா இருந்தா என்ன?? அவங்கவங்களுக்கு, அவங்க வாழ்க்கை, அவங்க குடும்பம் தான் முக்கியம்... இது தான் நிதர்சனம்...!!", சொல்லியத் தாயின் தொண்டை அடைத்தது.

"அன்னைக்கு, அம்மா, அப்பா வேண்டாம்ன்னு.. நான் நினைச்சேன்...!! இன்னைக்கு நான் வேண்டாம்ன்னு மகன் நினைக்கிறான்... அவ்ளோ தான்..!!".

இதற்குமேல் எதுவும் கேட்க தோணாமல் வசுமதி நகர்ந்தாள். இது போன்றதொரு சொல்வீசினால் தான்.. தான் கட்டிய காதல் மாளிகை சுக்குநூறாக உடைந்ததை நினைக்க கண்களில் நீர் கோர்த்தது.

அதேசமயம் அங்கே, "ஏய் என்னடா அருண் இப்படி மிட் நைட்ல வந்துருக்க...?? நீ போன வேகத்த பார்த்தா கல்யாணம் முடிஞ்சி தான் வருவன்னு நினைச்சேன்...!!".

'நேரம், காலம் தெரியாம இவன் வேற..!!' , இளங்கோவின் வார்த்தை அருணின் கோபத்தைக் கிளறினாலும் வீண்வாதம் வேண்டாம் என நினைத்து... "ம்ம்ம் வந்துட்டேன்...!!" , என சம்பந்தமே இல்லாமல் முடித்தான்.

"யாரு அருண் அண்ணாவா?? எப்படி இருக்கீங்க அண்ணா??"

"ம்ம்ம்.. நல்லாயிருக்கேன்மா..!!".

இளங்கோ, ரமா... அருணால் சேர்த்துவைக்கப்பட்ட காதல் ஜோடி. இளங்கோ வேலைப் பார்ப்பது அருணோடு.. ரமா படித்துக்கொண்டிருந்த கல்லுரிக்கு அருகில் தான் அருண், இளங்கோவின் வீடு. முதலில் இளங்கோ தான் காதலிப்பதாக சொல்லும்போது பொய் என்றே நினைத்தான் அருண். அவன் ராமாவுடன் நடுராத்திரி வந்து ரூம் கதவைத் தட்டும் வரை,

"டேய் சாரிடா எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல... அவ வீட்ல மாப்ள பார்க்கராங்கன்னு சொன்னா... நானும் சும்மாதான்னு நினைச்சேன்.. கடைசியில வீட்ட விட்டே வந்துட்டாடா... நான் என்ன பண்ணுவேன்?? எங்க போவேன்?? எனக்கு உன்ன விட்டா யார தெரியும்??", கண்கலங்கி நின்ற நண்பனுக்கு ஆறுதல் சொல்வதன்றி ஏதும் தோணாமல் நின்றான். நிறைய எதிர்ப்புகளுக்குப் பிறகு அருண் முன்னின்று கல்யாணத்தை நடத்தி வைத்தான்.

"அருண் நாமளும் இப்படி தான் ஓடி போயி கல்யாணம் பண்ணிக்கனுமா??", கல்யாணத்துக்கு வீட்டில் பொய் சொல்லிவிட்டு வந்த வசுமதி கேட்டாள். நல்லபடியாக கல்யாணம் முடிந்து, வழக்கம் போல இருவீட்டின் எதிர்ப்புக்கும் உள்ளாகி, அருண், இளங்கோ தங்கியிருந்த வீட்டின் கீழே இளங்கோ, ரமா தங்க வைக்கப்பட்டனர்.

"இளங்கோ மாடி சாவி குடு..!!".

"இருங்க அண்ணா.. நான் காபி போட்டு தரேன்..!!".

"இருக்கட்டும்மா... நான் காலைல வந்து குடிச்சிக்கறேன்...!!"

அலங்கோலமாய்க் கிடந்த அறையை சுத்தப்படுத்தக் கூட தோணாமல் சோபாவில் சாய்ந்தான்.

"டேய் மாப்ள... மணி பத்து இன்னுமா தூங்கற?? இந்தா காபி... குடிச்சிட்டு, குளிச்சிட்டு, கீழ வா.. இன்னைக்கு ஒருநாள் அங்க சாப்ட்டுக்கலாம்... ஆமா போன மேட்டர் என்ன ஆச்சு?? அத பத்தி ஒண்ணுமே சொல்லமாட்டேங்கிற...!!".

"ஒன்னும் இல்ல....!!"

"என்ன காதல் கிளோசா???"

"இளங்கோ......!!"

"கோவப்படாத நண்பா... நாந்தான் அப்பவே சொன்னேன்ல... காதலிக்காதன்னு... அனுபவஸ்தன் சொன்னா கேட்கணும்... சரி, சரி சீக்கிரம் வந்துரு குளிச்சிட்டு...!!"

"என்ன ஆச்சு??"

"ஒன்னும் சொல்லமாட்டேங்கிறான்....!!"

"ம்ம்ம்ம் உங்க ஃப்ரெண்ட ஒரு பொண்ணு லவ் பண்ணதே பெரிசு... இதுல கோவம் வேறயா??"

"ஏய் கத்தி பேசாத அவன் காதுல விழுந்துடப்போகுது..!!"

ரமா, இளங்கோவின் உரையாடல் காதில் மட்டுமல்ல, அவன் இதயத்திலும் வேலைப் பாய்ச்சியது. எல்லோரும் இருந்தும் யாருமே இல்லாதது போலான தனிமை முதல்முதலாக அவனை வாட்டியது.

"அருண் குட் மார்னிங்... என்ன இன்னைக்கு சீக்கிரம் எழுந்துட்ட போல இருக்கு.... ரெண்டு நாளா நீ ஊர்ல வேற இல்லையா எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல... நானும் உன்னோட வேலூர் வந்துடலாம்னு நினைச்சேன்... அப்பறம் அந்த எண்ணத்த விட்டுட்டேன்... சரி நீ சாப்டியா?? ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க?? உடம்பெதும் சரி இல்லையா?? என்ன ஆச்சு?? நான்பாட்டுக்கு பேசிகிட்டே இருக்கேன்... நீ ஒண்ணுமே சொல்லமாட்டேங்கிற....??"

"வசு ப்ளீஸ் லீவ் மீ அலோன்.... சும்மா எப்பப்பாரு என்னையே ஏன் சுத்திவர?? நான் என்ன நாய் குட்டியா?? எனக்கு உடம்பு சரியில்ல... இல்ல, பசிக்குதுன்னா... எனக்கு பார்த்துக்கத் தெரியும்... நீ ஒன்னும் அத அடிக்கடி கேட்க வேண்டாம்....", நேற்று அவன் நலம் விசாரித்து அவனின் அலுவலகத்துக்கு இவள் தொலைப்பேசியதால் வந்த விளைவு இது என பின்பு அறிந்து கொண்டாள்.

'ச்சே அன்னைக்கு அவ எவ்ளோ வருத்தப்பட்டிருப்பா??'.

இப்பொழுது எல்லாமுமாய் சேர்ந்து அவனை வருத்தியது.. தனிமை இன்னும் கொடுமையாய்....

-திருத்தங்கள் தொடரும்....

காதல் திருத்தம்-5

காதல் திருத்தம்-6

-அன்புடன்,
ஸ்ரீமதி.

72 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

ஆயில்யன் said...

அட! இம்புட்டு பெரிய்ய்ய்ய் கதையா !

அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டுக்கிறேன் பிறகு வந்து படிக்கிறேன் :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

காலவெள்ளத்தில் எல்லாம் கரைந்தோடுமா காதலைத் தவிர??

காலவெள்ளத்துக்கு காதலென்றும் தெரியாது, கல்யாணமென்றும் தெரியாது. ஓடும் ஓடும் எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு ஓடிவிடும்.

சிம்பா said...

நானும் இன்னைக்கு உள்ளேன் அம்மா.. ( ப்ரெசென்ட் போட்டாச்சு.. அதுக்காக மார்க்ல கை வைக்க கூடாது...)

அமிர்தவர்ஷினி அம்மா said...

இதயத்தைத் தொடாத புன்னகை
அழகான உருவகம்.

கதை நல்லா இருக்கு. கதைக்குள் ஒரு கதையா. நல்லா கதை விடறேப்பா.

ம்ம்ம் குருவியா இருந்தா என்ன?? மனிதர்களா இருந்தா என்ன?? அவங்கவங்களுக்கு, அவங்க வாழ்க்கை, அவங்க குடும்பம் தான் முக்கியம்... இது தான் நிதர்சனம்...!!",
யதார்த்தமான உண்மை. மறுக்கவோ மறுதலிக்கவோ முடியாது.

கட்டிய காதல் மாளிகை சுக்குநூறாக உடைந்ததை நினைக்க கண்களில் நீர் கோர்த்தது.
கற்பனை வறட்சியா? என்ன ஆயிற்று ஸ்ரீமா. ஏதாவது புதுசா சொல்ல டரை பண்ணியிருக்கலாமே.

அவன் நலம் விசாரித்து அவனின் அலுவலகத்துக்கு இவள் தொலைப்பேசியதால்
நீண்ட வாசகம். மூன்று முறை படித்தபின்னேதான் புரிந்தது.

இந்தத் திருத்தம் கொஞ்ச்மே கொஞ்ச்மே டல்லடிக்குது ஸ்ரீமா. என்ன ஆச்சு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இப்படி அட்டெண்டன்ஸ் போடறவங்களெல்லாம் மீ த பர்ஸ்ட் ஆகிடமுடியாது.

நெசம்ம்மாவே நான் தானே பர்ஸ்ட்டு

நீ சொல்லு ஸ்ரீமா.

நாணல் said...

அமிர்தவர்ஷினி அம்மா said...
காலவெள்ளத்தில் எல்லாம் கரைந்தோடுமா காதலைத் தவிர??

காலவெள்ளத்துக்கு காதலென்றும் தெரியாது, கல்யாணமென்றும் தெரியாது. ஓடும் ஓடும் எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு ஓடிவிடும்.


:) nijam thaan.....

நிஜமா நல்லவன் said...

குருவி கதை சூப்பர்!

இனியவள் புனிதா said...

//ஆயில்யன் said...
அட! இம்புட்டு பெரிய்ய்ய்ய் கதையா !

அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டுக்கிறேன் பிறகு வந்து படிக்கிறேன் :)//

Repeattu.....!!!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

பெரிய
நல்ல
கதை....
அதுவும்
அந்த
குருவி கதை

மனச டச் ...

நல்லா எழுதியிருக்கீங்கக்கா...

gayathri said...

ஆயில்யன் said...
அட! இம்புட்டு பெரிய்ய்ய்ய் கதையா !

அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டுக்கிறேன் பிறகு வந்து படிக்கிறேன் :)

நான் சொல்லாலாம்னு நினைச்சேன்.நீங்க சொல்லீடீங்க ஃப்ரண்டு

Repeattttttttttuuuuuuuu

நாணல் said...

kadhaikkula irukkara kadhai super... :) mothathula kadhai nalla poguthu...aduthu enna agumonnu bayangara suspense la mudikareenga... :)

gayathri said...

hai sri kathai nalla iruku.
kathain mudivula nalla suspense vakera pa.

saravanan said...

குருவி கதை சூப்பர். அடுத்த கதை மன்னிக்கவும் எனக்கு புரியவில்லை. கொஞ்சம் புரியும்படி எழுத்து நடை இருந்தால் நன்றாக இருக்கும்.

தமிழ் பிரியன் said...

மீ த 14 ... மாலையில் படிக்கிறென்... :)

தமிழ் பிரியன் said...
This comment has been removed by the author.
ஆயில்யன் said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
இப்படி அட்டெண்டன்ஸ் போடறவங்களெல்லாம் மீ த பர்ஸ்ட் ஆகிடமுடியாது.

நெசம்ம்மாவே நான் தானே பர்ஸ்ட்டு

நீ சொல்லு ஸ்ரீமா.
///

நீதான்ம்மா பர்ஸ்ட்டு!

(இதே ஸ்பீடு ஆபிஸ்க்கு வர்றப்பா இருக்கணும் எங்க?
போறப்பத்தானே இருக்கு!!!!)

ஆயில்யன் said...

//நாணல் said...
அமிர்தவர்ஷினி அம்மா said...
காலவெள்ளத்தில் எல்லாம் கரைந்தோடுமா காதலைத் தவிர??

காலவெள்ளத்துக்கு காதலென்றும் தெரியாது, கல்யாணமென்றும் தெரியாது. ஓடும் ஓடும் எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு ஓடிவிடும்.

:) nijam thaan.....
//


இப்ப ரெண்டு தங்கச்சிங்களும் எங்க நிக்கிறீங்க சொல்லுங்க முதல்ல????

anbudan vaalu said...

:)))

Divyapriya said...

கதை எப்படி போகுதுன்னு ஒரு குளுவும் கிடைக்க மாட்டேங்குது…பயங்கர சஸ்பென்ஸ் எல்லாம் போதும்...

என்ன தான் ஆச்சு? இன்னும் எத்தன பாகம், சீக்கரன் போடும்மா, அடுத்த பகுதி கொஞ்சம் பெருசா போடு :)

Saravana Kumar MSK said...

Template நல்லா இருக்கு Sri.. :))

Saravana Kumar MSK said...

//Divyapriya said...
கதை எப்படி போகுதுன்னு ஒரு குளுவும் கிடைக்க மாட்டேங்குது…பயங்கர சஸ்பென்ஸ் எல்லாம் போதும்...

என்ன தான் ஆச்சு? இன்னும் எத்தன பாகம், சீக்கரன் போடும்மா, அடுத்த பகுதி கொஞ்சம் பெருசா போடு :)//

ரிப்பீட்டு..

Saravana Kumar MSK said...

ஹலோ.. என்ன இதெல்லாம்.. கமல் படம் மாதிரி என்ன ஸ்க்ரீன் ப்ளே இது..!!

கலக்கலா இருக்கு.. ஆனா மூனாவது பகுதி எப்படி ஒரு நாலாவது பகுதியை பரிணாமம் பெற்றது..

Saravana Kumar MSK said...

//உனக்கான என் கவிதைகள்
மீண்டும் எனதாக
வேண்டும்
காதல் செய்... //

மிக அழகு.. :))

Saravana Kumar MSK said...
This comment has been removed by the author.
Saravana Kumar MSK said...

ஒன்னு சொல்லவா.. ரொம்ப அருமையா இந்த பகுதியை எழுதி இருக்கிறாய்.. கை தேர்ந்த கதாசிரியர் போல.. Intelligent play..

It ROCKS..

ஜி said...

:)))

aduthathu??

கோபிநாத் said...

இந்த பகுதியில கதைக்குள் கதை சூப்பர் ;))

ஒரு பாகத்தில் இருந்து இன்னொரு பாகத்திற்கு சொல்லும் போது ஏதோ மிஸ்னா மாதிரி இருக்கு!!!

அப்புறம் இந்த ENTER KEY ரொம்ப படிக்குமா உங்களுக்கு அனியாத்துக்கு தட்டி வச்சியிருக்கிங்க..!;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//அட! இம்புட்டு பெரிய்ய்ய்ய் கதையா !

அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டுக்கிறேன் பிறகு வந்து படிக்கிறேன் :)//

இன்டெர்னல் மார்க்ல கை வெச்சாதான்.. நீங்க ஒழுங்கா படிப்பீங்கன்னு நினைக்கிறேன்... ;)))

ஸ்ரீமதி said...

@ அமிர்தவர்ஷினி அம்மா
//காலவெள்ளத்தில் எல்லாம் கரைந்தோடுமா காதலைத் தவிர??

காலவெள்ளத்துக்கு காதலென்றும் தெரியாது, கல்யாணமென்றும் தெரியாது. ஓடும் ஓடும் எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு ஓடிவிடும்.//

நீங்க சொன்னா சரிதான் அம்மா.. :)))

ஸ்ரீமதி said...

@ சிம்பா
//நானும் இன்னைக்கு உள்ளேன் அம்மா.. ( ப்ரெசென்ட் போட்டாச்சு.. அதுக்காக மார்க்ல கை வைக்க கூடாது...)//

சரி இந்த ஒருமுறை உங்கள விட்டுடுறேன்... ;))))

ஸ்ரீமதி said...

@ அமிர்தவர்ஷினி அம்மா
//இதயத்தைத் தொடாத புன்னகை
அழகான உருவகம்.//

நன்றி அம்மா... :)))

//கதை நல்லா இருக்கு. கதைக்குள் ஒரு கதையா. நல்லா கதை விடறேப்பா.//

ஹி ஹி ஹி... ;))

//ம்ம்ம் குருவியா இருந்தா என்ன?? மனிதர்களா இருந்தா என்ன?? அவங்கவங்களுக்கு, அவங்க வாழ்க்கை, அவங்க குடும்பம் தான் முக்கியம்... இது தான் நிதர்சனம்...!!",
யதார்த்தமான உண்மை. மறுக்கவோ மறுதலிக்கவோ முடியாது.//

துன்பகரமான உண்மை.. :((

//கட்டிய காதல் மாளிகை சுக்குநூறாக உடைந்ததை நினைக்க கண்களில் நீர் கோர்த்தது.
கற்பனை வறட்சியா? என்ன ஆயிற்று ஸ்ரீமா. ஏதாவது புதுசா சொல்ல டரை பண்ணியிருக்கலாமே.//

அக்கா எப்பவுமே அடுத்த பார்ட் என்னன்னு யோசிக்கும்போதே, மோஸ்ட்லி டையலாக்ஸ்ம் யோசிச்சுடுவேன்.. பட், இந்த முறை ஏனோ ஒண்ணுமே தோணல..:(( யோசிச்சு சளிச்சிட்டேன்.. அதனால தான்னு நினைக்கிறேன்..

//அவன் நலம் விசாரித்து அவனின் அலுவலகத்துக்கு இவள் தொலைப்பேசியதால்
நீண்ட வாசகம். மூன்று முறை படித்தபின்னேதான் புரிந்தது.//

சாரி இனிமே எளிமையா எழுதறேன் அக்கா.. :))

//இந்தத் திருத்தம் கொஞ்ச்மே கொஞ்ச்மே டல்லடிக்குது ஸ்ரீமா. என்ன ஆச்சு.//

இந்த திருத்தத்துல வந்த சோகமா இருக்கலாம்... இனிமே சரி பண்ணிடறேன் அக்கா... :))))))

ஸ்ரீமதி said...

@ அமிர்தவர்ஷினி அம்மா
//இப்படி அட்டெண்டன்ஸ் போடறவங்களெல்லாம் மீ த பர்ஸ்ட் ஆகிடமுடியாது.

நெசம்ம்மாவே நான் தானே பர்ஸ்ட்டு

நீ சொல்லு ஸ்ரீமா.//

யக்கா எனக்கு உங்கள நினைச்சு ஆனந்த கண்ணீர் வருதுக்கா...:)) நான் போயி எல்லாரோட பதிவிலும் 'மீ த ஃபர்ஸ்ட்' போடறேன்.. என் பதிவுல போட உங்களுக்கு ஆசையா??:)) நன்றி அக்கா... :))) ஆயில்ஸ் அண்ணாவே ஒத்துகிட்டாரு நீங்க தான் பர்ஸ்ட்டுன்னு... :))))))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//அமிர்தவர்ஷினி அம்மா said...
காலவெள்ளத்தில் எல்லாம் கரைந்தோடுமா காதலைத் தவிர??

காலவெள்ளத்துக்கு காதலென்றும் தெரியாது, கல்யாணமென்றும் தெரியாது. ஓடும் ஓடும் எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு ஓடிவிடும்.

:) nijam thaan.....//

அப்படியா அக்கா?? ;)) நன்றி... :))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//குருவி கதை சூப்பர்!//

நன்றி அண்ணா... :)))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////ஆயில்யன் said...
அட! இம்புட்டு பெரிய்ய்ய்ய் கதையா !

அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டுக்கிறேன் பிறகு வந்து படிக்கிறேன் :)//

Repeattu.....!!!//

U too akka?? :((

ஸ்ரீமதி said...

@ சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்)
//பெரிய
நல்ல
கதை....
அதுவும்
அந்த
குருவி கதை

மனச டச் ...

நல்லா எழுதியிருக்கீங்கக்கா...//

ரொம்ப நன்றி அண்ணா... :)))))))

ஸ்ரீமதி said...

@ gayathri
//ஆயில்யன் said...
அட! இம்புட்டு பெரிய்ய்ய்ய் கதையா !

அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டுக்கிறேன் பிறகு வந்து படிக்கிறேன் :)

நான் சொல்லாலாம்னு நினைச்சேன்.நீங்க சொல்லீடீங்க ஃப்ரண்டு

Repeattttttttttuuuuuuuu//

:(((

ஸ்ரீமதி said...

@ நாணல்
//kadhaikkula irukkara kadhai super... :) mothathula kadhai nalla poguthu...aduthu enna agumonnu bayangara suspense la mudikareenga... :)//

ம்ம்ம் அப்படியா அக்கா?? :)) நன்றி...:)))))

ஸ்ரீமதி said...

@ gayathri
//hai sri kathai nalla iruku.
kathain mudivula nalla suspense vakera pa.//

நன்றி அக்கா.. :))))))

ஸ்ரீமதி said...

@ saravanan
//குருவி கதை சூப்பர். அடுத்த கதை மன்னிக்கவும் எனக்கு புரியவில்லை. கொஞ்சம் புரியும்படி எழுத்து நடை இருந்தால் நன்றாக இருக்கும்.//

அண்ணா குருவி கதை, கதைக்குள்ள வர குட்டிக்கதை.. மத்தது தொடர்க்கதை. நீங்க இந்த பாகம் மட்டும் படிச்சீங்களா அண்ணா?? :)))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//மீ த 14 ... மாலையில் படிக்கிறென்... :)//

ம்ம்ம் ஓகே அண்ணா...:))(உங்களுக்கு இன்னும் மாலை ஆகலியா??)

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////அமிர்தவர்ஷினி அம்மா said...
இப்படி அட்டெண்டன்ஸ் போடறவங்களெல்லாம் மீ த பர்ஸ்ட் ஆகிடமுடியாது.

நெசம்ம்மாவே நான் தானே பர்ஸ்ட்டு

நீ சொல்லு ஸ்ரீமா.
///

நீதான்ம்மா பர்ஸ்ட்டு!

(இதே ஸ்பீடு ஆபிஸ்க்கு வர்றப்பா இருக்கணும் எங்க?
போறப்பத்தானே இருக்கு!!!!)//

:)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////நாணல் said...
அமிர்தவர்ஷினி அம்மா said...
காலவெள்ளத்தில் எல்லாம் கரைந்தோடுமா காதலைத் தவிர??

காலவெள்ளத்துக்கு காதலென்றும் தெரியாது, கல்யாணமென்றும் தெரியாது. ஓடும் ஓடும் எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு ஓடிவிடும்.

:) nijam thaan.....
//


இப்ப ரெண்டு தங்கச்சிங்களும் எங்க நிக்கிறீங்க சொல்லுங்க முதல்ல????//

நீங்க நிக்கறதுக்கு ஒரு படி கீழன்னு நினைக்கிறேன்.. ;)))

ஸ்ரீமதி said...

@ anbudan vaalu
//:)))//

:))))))))))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//கதை எப்படி போகுதுன்னு ஒரு குளுவும் கிடைக்க மாட்டேங்குது…பயங்கர சஸ்பென்ஸ் எல்லாம் போதும்...//

நீங்க தான் கதை லீக்கிங் சங்கமாச்சே.. உங்களுக்கே கதை எப்படி போகுதுன்னு புரியலியா?? ஓகே ஓகே... ;))))))

//என்ன தான் ஆச்சு? இன்னும் எத்தன பாகம், சீக்கரன் போடும்மா, அடுத்த பகுதி கொஞ்சம் பெருசா போடு :)//

இன்னும் எத்தன பாகமா?? சத்தியமா தெரியல அக்கா.. (ஏன் அதுக்குள்ள போர் அடிக்குதா??) ஆனா கதை முடிஞ்சிடிச்சினா அப்பறம் போடமாட்டேன்..;)) யக்கா இந்த பாகம் கொஞ்சம் பெரிசா போட்டதுக்கே எத்தன பேர் எக்ஸ்செப்ஷன் கேட்டு போயிருக்காங்க பாருங்க..:))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//Template நல்லா இருக்கு Sri.. :))//

தேங்க்ஸ் சரவணா... :)))))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////Divyapriya said...
கதை எப்படி போகுதுன்னு ஒரு குளுவும் கிடைக்க மாட்டேங்குது…பயங்கர சஸ்பென்ஸ் எல்லாம் போதும்...

என்ன தான் ஆச்சு? இன்னும் எத்தன பாகம், சீக்கரன் போடும்மா, அடுத்த பகுதி கொஞ்சம் பெருசா போடு :)//

ரிப்பீட்டு..//

உனக்கும் அதே பதில் தான்.. ;)))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//ஹலோ.. என்ன இதெல்லாம்.. கமல் படம் மாதிரி என்ன ஸ்க்ரீன் ப்ளே இது..!!//

கமல் படம் மாதிரி ஸ்க்ரீன் ப்ளேவா??

//கலக்கலா இருக்கு.. ஆனா மூனாவது பகுதி எப்படி ஒரு நாலாவது பகுதியை பரிணாமம் பெற்றது..//

இது எனக்கு புரியல... :((

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////உனக்கான என் கவிதைகள்
மீண்டும் எனதாக
வேண்டும்
காதல் செய்... //

மிக அழகு.. :))//

நன்றி சரவணா.. :))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//ஒன்னு சொல்லவா.. ரொம்ப அருமையா இந்த பகுதியை எழுதி இருக்கிறாய்.. கை தேர்ந்த கதாசிரியர் போல.. Intelligent play..

It ROCKS..//

ரொம்ப நன்றி சரவணா..:)) இதை தான் மேலயும் சொல்ல நினைச்சியோ?? :))

ஸ்ரீமதி said...

@ ஜி
//:)))

aduthathu??//

ம்ம்ம் போடறேன் அண்ணா..:)))))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//இந்த பகுதியில கதைக்குள் கதை சூப்பர் ;))//

ஹை நன்றி.. :))))

//ஒரு பாகத்தில் இருந்து இன்னொரு பாகத்திற்கு சொல்லும் போது ஏதோ மிஸ்னா மாதிரி இருக்கு!!!//

ஆமா மிஸ் ஆகுது.. பாகம் எண்.. அததானே சொல்லவந்தீங்க?? ;)))))))

//அப்புறம் இந்த ENTER KEY ரொம்ப படிக்குமா உங்களுக்கு அனியாத்துக்கு தட்டி வச்சியிருக்கிங்க..!;))//

அது எடிட் பண்ணும் போது வர ப்ராப்ளம் அண்ணா...:))))))

தமிழ் பிரியன் said...

கலக்கலா போகுது ஸ்ரீமதி! நான் சீரியஸாவே தொடரை விரும்பி படிக்க ஆரம்பித்து விட்டேன்...நல்ல முயற்சி! கீப் இட் அப்!

கோபிநாத் said...

\\ ஸ்ரீமதி said...
@ கோபிநாத்
//ஒரு பாகத்தில் இருந்து இன்னொரு பாகத்திற்கு சொல்லும் போது ஏதோ மிஸ்னா மாதிரி இருக்கு!!!//

ஆமா மிஸ் ஆகுது.. பாகம் எண்.. அததானே சொல்லவந்தீங்க?? ;)))))))
\\

ரைட்டு..தெளிவாக தான் இருக்கிங்க..;)

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//கலக்கலா போகுது ஸ்ரீமதி! நான் சீரியஸாவே தொடரை விரும்பி படிக்க ஆரம்பித்து விட்டேன்...நல்ல முயற்சி! கீப் இட் அப்!//

அப்பா இவ்ளோ நாள் ஜோக்கா படிச்சீங்களா??? :(( வாழ்த்துக்கு நன்றி அண்ணா... :))))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//\\ ஸ்ரீமதி said...
@ கோபிநாத்
//ஒரு பாகத்தில் இருந்து இன்னொரு பாகத்திற்கு சொல்லும் போது ஏதோ மிஸ்னா மாதிரி இருக்கு!!!//

ஆமா மிஸ் ஆகுது.. பாகம் எண்.. அததானே சொல்லவந்தீங்க?? ;)))))))
\\

ரைட்டு..தெளிவாக தான் இருக்கிங்க..;)//

ஹை நன்றி.. ;)))))))

இசக்கிமுத்து said...

‍அடடே அருமை...

ஸ்ரீமதி said...

@ இசக்கிமுத்து
//அடடே அருமை...//

முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி அண்ணா... :)))

முரளிகண்ணன் said...

காதல் சொட்ட சொட்ட எழுதுறீங்களே!!!

ஸாவரியா said...

என்ன, பயங்கரமா கலக்கிட்டு இருக்கீங்க!

இப்ப தான் Freeஆ ஆனேன். Fullஆ படிச்சிட்டு சொல்றேன்

ஸ்ரீமதி said...

@ முரளிகண்ணன்
//காதல் சொட்ட சொட்ட எழுதுறீங்களே!!!//

நிஜம்மாவா?? ;)) நன்றி அண்ணா முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்... :))

ஸ்ரீமதி said...

@ ஸாவரியா
//என்ன, பயங்கரமா கலக்கிட்டு இருக்கீங்க!

இப்ப தான் Freeஆ ஆனேன். Fullஆ படிச்சிட்டு சொல்றேன்//

ஹை செல்லம் வந்தாச்சு... :))))) வெல்கம் பேக் டியர்... :))) ம்ம்ம் படிச்சிட்டு சொல்லு... Me the waiting... ;)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆஹா ஸ்ரீமா என்னன்வோ புதுசு புதுசா பண்ணியிருக்க. புதுப்பொலிவோட இருக்கு ப்ளாக்.
எனக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடேன். இதையெல்லம் எப்படி செய்றதுன்னு.
முக்கியமா, ரைட் சைட்ல பாடல் வரிகள் வருதே அத எப்படி போடனும்.

ஸ்ரீமதி said...

@ அமிர்தவர்ஷினி அம்மா
//ஆஹா ஸ்ரீமா என்னன்வோ புதுசு புதுசா பண்ணியிருக்க. புதுப்பொலிவோட இருக்கு ப்ளாக்.
எனக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடேன். இதையெல்லம் எப்படி செய்றதுன்னு.
முக்கியமா, ரைட் சைட்ல பாடல் வரிகள் வருதே அத எப்படி போடனும்.//

அக்கா இது ஒரு பெரிய விஷயமே இல்ல.. நீங்க என்னோட பழைய பதிவு எதுலயாவது உங்க மெயில் ஐடி-ய குடுங்க.. நான் விவரமா மெயில் பண்றேன்... ஓகேவா?? :))

முரளிகண்ணன் said...

ஸ்ரீமதி said...
என் பின்னுட்டத்த மட்டும் விட்டது ஏனோ அண்ணா?? :((
\\


கவனகுறைவாக விட்டுவிட்டேன். தொடர்ந்து வருகை தரவும்

ஸ்ரீமதி said...

முரளிகண்ணன்
//ஸ்ரீமதி said...
என் பின்னுட்டத்த மட்டும் விட்டது ஏனோ அண்ணா?? :((
\\


கவனகுறைவாக விட்டுவிட்டேன். தொடர்ந்து வருகை தரவும்//

:)))))))Thats ok anna.. No need to explain... :)))

thevanmayam said...

நான் வலைக்கு புதியவன்
என் வலைக்கு அனைவரையும்
வரவேற்கிறேன்.
உங்கள் கருத்துக்களையும்
தெரிவிக்கவும்!
தேவா.
Thevanmayam.blogspot.com.

ஸ்ரீமதி said...

@ thevanmayam
//நான் வலைக்கு புதியவன்
என் வலைக்கு அனைவரையும்
வரவேற்கிறேன்.
உங்கள் கருத்துக்களையும்
தெரிவிக்கவும்!
தேவா.
Thevanmayam.blogspot.com.//

கண்டிப்பாக வருகிறோம்.. நன்றி தேவா.. :))

thevanmayam said...

காதல் ஒரு கடல்!
உங்கள் பதிவுகள்
----!!!! என்னவென்று
சொல்வதம்மா!!!!
என் பதிவில்
அபிதேவா வில்
கவிதை படிக்க வரவும்!!!
தேவா.

ஸ்ரீமதி said...

@ thevanmayam
//காதல் ஒரு கடல்!
உங்கள் பதிவுகள்
----!!!! என்னவென்று
சொல்வதம்மா!!!!
என் பதிவில்
அபிதேவா வில்
கவிதை படிக்க வரவும்!!!
தேவா.//

நன்றி தேவா..

புதியவன் said...

ரொம்ப அழகா குருவி கதைய சொல்லியிருக்கிறீங்க...அடுத்த பகுதியை படித்துவிட்டு...வருகிறேன்...

ஸ்ரீமதி said...

@ புதியவன்
//ரொம்ப அழகா குருவி கதைய சொல்லியிருக்கிறீங்க...அடுத்த பகுதியை படித்துவிட்டு...வருகிறேன்...//

நன்றி புதியவன் :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது