காதல் திருத்தம்

பனிப்படர்ந்த
கண்ணாடிகளில் எல்லாம்
உன் பெயரால்
பூ செய்யும்
பைத்தியம் நான்
பூவுக்கும், தனக்குமான ஊடலில் பூமியைவிட்டு, தான் பிறந்த தாயகம் மேகத்திற்கு ஆவியாகி பனி செல்லும் இளங்காலைப்பொழுது. பூக்களுக்கு தலைக்கோதி, புல்வெளிக்குள் புகுந்து, பூமிக்கு புதுமை செய்யும் தென்றல், மெதுவாக உருவாகி, அவள் தலைக்கோதி சென்றது. சாதாரண நாளாக இருந்திருந்தால் இந்த இயற்கைக் காட்சிகளுக்கு அவள் இந்நேரம் கவிதை புனைந்திருக்கக்கூடும்.


அவள், அழகான கனவுகள் பல படைக்கும் நீல நிற கண்ணுக்கு சொந்தக்காரி. யாரையும் ஒரு முறை நின்று திரும்பிப் பார்க்கவைக்கும் அழகு. பூமியில் எந்த விதிமுறைகளுமின்றி நடமாடவிடப்பட்ட தேவதை. காற்றுக்கு கவிதைக் கற்றுக்கொடுக்கும் கனிவான பேச்சுக்குறியவள். இந்த வன தேவதைக்கு அம்மா, அப்பாவால் சூட்டப்பட்ட புனைப்பெயர் வசுமதி.


"வசு... நீ கண்டிப்பா போய் தான் ஆகணுமா??".


"அம்மா... நீ இதையே எத்தன முறை தான் கேட்ப?? நான் போகணும்...!!"


"ஏன்மா..?? அவ்ளோ தூரம்.. அதோட எங்க இருக்குன்னு கூட உனக்கு தெரியாது.. நீ படிச்சதுக்கு இந்த ஊர்லையே ஒரு நல்ல வேலைக் கிடைக்காமலா போய்டும்?? நான் வேணா நம்ம ராஜன் அண்ணா கிட்ட சொல்லட்டா?? உனக்கொரு நல்ல வேலைக்கு...!!"


'ராஜன் மாமா... ச்சே அந்த குடும்ப சவகாசமே வேண்டாம்ன்னு தான்.. நானே ஊர விட்டு எங்கயோ கண்காணா தூரம் போறேன்.. மறுபடியும் அவர் பத்தியா??'


"அம்மா ப்ளீஸ் வேண்டாம்... கொஞ்ச நாள் வேலைப் பார்க்கிறேன்.. அப்பறம் உன் இஷ்டப்படி கல்யாணம் பண்ணிக்கிறேன்.. போதுமா??", ஏதோ இந்த மட்டும் அவள் சம்மதித்ததே போதும் என நினைத்தாள் அவள் அம்மா சாந்தி.


"பத்திரம்மா போயிட்டுவாம்மா.. போனதும் போன் பண்ணு..!!"


"ம்ம்ம் சரிமா.. நான் வரேன்.. அப்பா, தங்கைகள் எல்லாம் வந்ததும் சொல்லிடு..!!"


'அழகான குடும்பம்.. அம்மா, அப்பா, ரெண்டு தங்கைகள்ன்னு.. இப்ப எல்லாரையும் பிரிஞ்சு, எங்கேயோ கண்காணா தூரத்துல என்னை நானே மறைச்சிக்கிற நிலைமை'.


பேருந்தின் ஜன்னல் வழி உலகம் பரந்துவிரிந்து பச்சையால் ஆக்ரமிக்கப்பட்டிருந்தது. 'பச்சை... அவனுக்கு ரொம்ப பிடிச்ச கலர்...!!'.


"வசு நீ அந்த பச்சை நிற சுடிதார்ல அழகா இருந்த தெரியுமா..??", சொன்ன நாளிலிருந்து எல்லாமே அவளுக்கு பசுமையாகியிருந்தது. 'ச்சே இனிமே அவனப் பத்தி நினைக்கக் கூடாது..!!'.


மழைவரப் போவதை மண்வாசம் உணர்த்தியது. இப்படி ஒரு இயற்கை சூழலில் இருக்கவேண்டுமென்று தான் அவள் எப்பவும் ஆசைப்பட்டு அவனிடம் கேட்பாள்.


"அருண் ஒரு கிராமம்... அங்க அழகா ஒரு சின்ன வீடு... நிறைய தென்ன மரம்.... ம்ம்ம்... அப்பறம்....!!"


"ஏன் 'காணிநிலம் வேண்டும் பராசக்தி'-ன்னு பாட வேண்டியதுதானே?? இப்படி ஒன்னு ஒண்ணா சொல்றதுக்கு...!!"


"ஹே போடா... உனக்கு எப்பவுமே விளையாட்டு தான்... நான் நிஜமா தான் சொல்றேன்... நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் நாம, நான் சொல்றமாதிரியான பச்சை பசேல்ன்னு இருக்குற ஒரு கிராமத்துல தான் இருக்கணும்... நான் காலேஜ் கேம்ப் போனேன்ல ஒரு கிராமம்.... பேர் ஞாபகம் இல்ல.. அந்த மாதிரி ஒரு இடம்... என்ன ஓகேவா?? சரின்னு சொல்லேன்.. ப்ளீஸ்..!!", அவனிடம் அன்று கேஞ்சியதெல்லாம் நினைத்து இன்று அருவெறுப்பாக உணர்ந்தாள். அதற்குள் மழை வலுத்திருந்தது.


"அம்மா அந்த ஜன்னல கொஞ்சம் சாத்தேம்மா... சாரல் அடிக்குதில்ல...!!", பக்கத்து சீட்டு பெண்மணி பாதி நனைந்திருந்தார். "சாரி..!!", என சொல்லி ஜன்னலை சாத்த மனமின்றி சாத்தினாள். இன்னும் போக வேண்டிய ஊர் எவ்வளவு தொலைவு என மனதிற்குள் கணக்கிட்டாள். அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் இருக்கிறதை உறுதிசெய்தாள். முதலில் வேலைப் பற்றி சொன்னதும் அம்மாதான் கொதித்தெழுந்தாள். அம்மாவுக்கு இவள் வேலைக்கு செல்வதே பிடிக்கவில்லை. அதுவும் இது போன்றதொரு வேலையில் சுத்தமாக விருப்பமில்லை.


"உனக்கு ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க... அவங்களையும் நாங்க பார்க்க வேண்டாமா?? உனக்கொரு கல்யாணம் பண்ணி வெச்சா.. எங்க நிலை கொஞ்சம் தெளியும்னு பார்த்தா.. அதுதான் இவ்ளோ நாள் வேண்டாம்னு சொன்ன... இப்ப என்னடானா இப்படி ஒரு வேலை தேடிட்டு வந்து நிக்கற.. உனக்கு என்னடி ஆச்சு??"


"அம்மா இது ஒன்னும் அவ்ளோ மோசமான வேலைக் கிடையாதும்மா... எனக்கு ஒரு பாட்டி இருந்திருந்தா நான் பார்த்துக்க மாட்டேன்னா?? அது மாதிரி தான்... பாவம் யாரோ வயசானவங்க தனியா இருக்காங்க.. பக்கத்துல பார்த்துக்க பையன் இல்ல... அதான் தன்னைப் பார்த்துக்க ஆள் தேவைன்னு விளம்பரம் கொடுத்துருக்காங்க... நான் அப்ளே பண்ணேன் கிடைச்சிது... அவ்ளோ தான்..!!",அவள் அம்மாவுக்கு திருப்தி இல்லை.


"விடு சாந்தி... என் அம்மாவ கடைசி காலத்துல என்னால பார்த்துக்க முடியல.. இதோ என் பொண்ணு யாரோ ஒருத்தருக்காக வாழ போறா.. நாளைக்கு நம்மளையும் அவ நிச்சயம் நல்லாப் பார்த்துப்பா..!!" சுந்தரத்தின் பேச்சால் இறங்கிவந்தார் அவள் அம்மா.


பழைய ஞாபகங்களை தற்போதைக்கு மூட்டைக்கட்டினாள், இறங்க வேண்டிய இடம் வந்ததால். 'முதல்ல அவங்களுக்கு போன் பண்ணனும்... இந்த கிராமத்துல எங்க போன் பூத் தேடறது...??', அவளை ரொம்பவும் அலைய வைக்காமல் அங்கே ஒரு பூத் தென்பட்டது.
"ஹலோ மீனாட்ஷி அம்மாள் இல்லம்..?? நான் வசுமதி பேசறேன்...!!", அவர்களிடம் சரியான விலாசமும், வருவதற்கான தகவலும் தெரிவித்து தொடர்பைத் துண்டித்தாள்.'இனி இது தான் என் உலகம்... அவனைப் பற்றியோ, இல்லை அவன் காதல் பற்றியோ.. நான் நினைக்கத் தேவையில்லாத இடம்..!!'.ஏனோ எண்ணங்கள் சில சமயம் நிஜ வாழ்க்கையிடம் தோற்று விடுகின்றன. அதுதான் அவள் விஷயத்திலும் நடந்தது..எங்கே வந்தால் நிம்மதி கிடைக்குமென நினைத்தாளோ... அங்கும் பிரச்சனை வருமென பாவம் அவள் எதிர்ப்பார்க்கதான் இல்லை...!!-திருத்தங்கள் தொடரும்...

காதல் திருத்தம்-2

காதல் திருத்தம்-3

காதல் திருத்தம்-4

காதல் திருத்தம்-5

காதல் திருத்தம்-6

-அன்புடன்,
ஸ்ரீமதி.

88 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

நாணல் said...

me the first...
padichuttu comment poduren... :)

சிம்பா said...

நான் சொல்லலாம்னு நெனச்சேன்... நாணல் சொல்லிடாங்க.. நீண்ட நாள் கழித்து, தொடர் பதிவு எல்லாம் முடித்து, வந்த மதியை வருக வருக என வரவேற்று...

அடடா... நானும் பதிவ படிக்கல.. ஸோ படிச்சிட்டு வரேன்...

ஆயில்யன் said...

//ஏனோ எண்ணங்கள் சில சமயம் நிஜ வாழ்க்கையிடம் தோற்று விடுகின்றன//

ரியலி?

அல்லது

இதுதான் ரியாலிட்டி?!

TKB Gandhi said...

//அழகான கனவுகள் பல படைக்கும் நீல நிற கண்ணுக்கு சொந்தக்காரி.//
//பூமியில் எந்த விதிமுறைகளுமின்றி நடமாடவிடப்பட்ட தேவதை.//

நல்லருக்கு!

வசுமதி, பேர் நல்லா இருக்கு!

//ஏனோ எண்ணங்கள் சில சமயம் நிஜ வாழ்க்கையிடம் தோற்று விடுகின்றன.//
அழகான லைன்.

எத்தன partsங்க? சீக்கரம் பெருசு பெருசா எழுதி முடுச்சுடுங்க, suspense தாங்க முடியல

ஜீவன் said...

பூவுக்கும், தனக்குமான ஊடலில் பூமியைவிட்டு, தான் பிறந்த தாயகம் மேகத்திற்கு ஆவியாகி பனி செல்லும் இளங்காலைப்பொழுது. பூக்களுக்கு தலைக்கோதி, புல்வெளிக்குள் புகுந்து, பூமிக்கு புதுமை செய்யும் தென்றல், மெதுவாக உருவாகி, அவள் தலைக்கோதி சென்றது

இதுல, அந்த அக்கா வேற கவிதை சொல்லனுமா!

அருமை!!

ஜி said...

:)))

Epdima? Epdi?? Kathaiya paththi ippothaikku no comments... kaviththuvamaai kathai sollum paangu arumai...

கோபிநாத் said...

\\-திருத்தங்கள் தொடரும்...\\\

இன்னும் எம்புட்டு பிழைகள் இருக்கோ!! ;)

Divyapriya said...

kavidhai and first 2 paras...pinnitte srimadhi :))
kalakku...

சென்ஷி said...

super-a irukkuthu...

thodarungal thodarai :)

Saravana Kumar MSK said...

//பனிப்படர்ந்த
கண்ணாடிகளில் எல்லாம்
உன் பெயரால்
பூ செய்யும்
பைத்தியம் நான்//

WOW.. ரொம்ப ரொம்ப அழகா இருக்கே..
இந்த கவிதைக்கு அப்பறம் நான் கொஞ்ச நேரம் கதை படிக்க ஆரம்பிக்கவே இல்லை.. அவ்ளோ அழகு..

Saravana Kumar MSK said...

//பூமியில் எந்த விதிமுறைகளுமின்றி நடமாடவிடப்பட்ட தேவதை. //

சான்ஸே இல்லை.. தேவதை.. இந்த வார்த்தை ஒரு மாய வார்த்தை..

Saravana Kumar MSK said...

//இந்த இயற்கைக் காட்சிகளுக்கு அவள் இந்நேரம் கவிதை புனைந்திருக்கக்கூடும்.//
//இந்த வன தேவதைக்கு அம்மா, அப்பாவால் சூட்டப்பட்ட புனைப்பெயர் வசுமதி.//

வசுமதியா?? ஸ்ரீமதி மாதிரியே இருக்கு.. ;)) படிக்கும் போது..

Saravana Kumar MSK said...

//"அருண் ஒரு கிராமம்... அங்க அழகா ஒரு சின்ன வீடு... நிறைய தென்ன மரம்.... ம்ம்ம்... அப்பறம்....!!" //

உன் எழுத்துக்கள்ல அடிக்கடி இந்த அருண் பேரு வருதே.. [அப்பாடா.. இன்னைக்கு தூக்கம் நல்லா வரும்...]

Saravana Kumar MSK said...

காதல் திருத்தம்.. பேரு வித்தியாசமா இருக்கு.. ஆரம்பம் ரொம்ப நல்லா இருக்கு.. இன்னும் எத்தனை பகுதி வரும்??

ஆயில்யன் said...

நல்லா இருக்கு :)

ஆயில்யன் said...

//பூவுக்கும், தனக்குமான ஊடலில் பூமியைவிட்டு, தான் பிறந்த தாயகம் மேகத்திற்கு ஆவியாகி பனி செல்லும் இளங்காலைப்பொழுது///


எது நல்ல இருக்குன்னு சொல்ல மறந்துட்டேன்!

இந்த வரிகள் :)

தமிழ் பிரியன் said...

ஸ்ரீமதி! வித்தியாசமா ஆரம்பிச்சு இருக்கீங்க... நல்லா இருக்கு. தொடர்கதையை இடைவெளி இல்லாமல் எழுதுங்கள்! அப்போது தான் ஆர்வத்துடன் படிக்க இயலும்!

TKB Gandhi said...

//பனிப்படர்ந்த
கண்ணாடிகளில் எல்லாம்
உன் பெயரால்
பூ செய்யும்
பைத்தியம் நான்//

சொல்ல மறந்துட்டேன்! கவிதை நல்லா இருக்கு.

இனியவள் புனிதா said...

Me the 19th...கதையைப் படிசிட்டு வந்துடுறேன்!!!

நாணல் said...

Saravana Kumar MSK said...
//இந்த இயற்கைக் காட்சிகளுக்கு அவள் இந்நேரம் கவிதை புனைந்திருக்கக்கூடும்.//
//இந்த வன தேவதைக்கு அம்மா, அப்பாவால் சூட்டப்பட்ட புனைப்பெயர் வசுமதி.//

//வசுமதியா?? ஸ்ரீமதி மாதிரியே இருக்கு.. ;)) படிக்கும் போது..//

repeatuu... rendu thadavai perai thirumbi thirumbi paarthen... vasumathi thaan....... ;)

நாணல் said...

kadhai nalla irukku sri.....aarambame asathal...

நாணல் said...

//பனிப்படர்ந்த கண்ணாடிகளில் எல்லாம் உன் பெயரால் பூ செய்யும் பைத்தியம் நான்//

அருமை... :)

நாணல் said...

அடுத்த பகுதிக்காக waitings... :)

நாணல் said...

//'அழகான குடும்பம்.. அம்மா, அப்பா, ரெண்டு தங்கைகள்ன்னு.. இப்ப எல்லாரையும் பிரிஞ்சு, எங்கேயோ கண்காணா தூரத்துல என்னை நானே மறைச்சிக்கிற நிலைமை'.//

nalla irukku... ippadi thaan palaraum maraindhu maraindhu vaazhnduttu irukiranaga...

இனியவள் புனிதா said...

இரமணி சந்திரனை நினைவுப் படுத்தி செல்கிறது...மன்னிசிடுங்க...ஆனா கவித்துவமான ஆரம்பம்!!!

Ŝ₤Ω..™ said...

தொடர்ச்சி எப்போ??

ஸ்ரீமதி said...

@ நாணல்
//me the first...
padichuttu comment poduren... :)//

:)))))))

ஸ்ரீமதி said...

@ சிம்பா
//நான் சொல்லலாம்னு நெனச்சேன்... நாணல் சொல்லிடாங்க.. நீண்ட நாள் கழித்து, தொடர் பதிவு எல்லாம் முடித்து, வந்த மதியை வருக வருக என வரவேற்று...

அடடா... நானும் பதிவ படிக்கல.. ஸோ படிச்சிட்டு வரேன்...//

இன்னுமா அண்ணா படிச்சிட்டே இருக்கீங்க?? ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////ஏனோ எண்ணங்கள் சில சமயம் நிஜ வாழ்க்கையிடம் தோற்று விடுகின்றன//

ரியலி?

அல்லது

இதுதான் ரியாலிட்டி?!//

"நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது"-ன்னு அதுக்கு தான் சொல்றோம்ன்னு நினைக்கிறேன்...!!

ஸ்ரீமதி said...

@ TKB Gandhi
////அழகான கனவுகள் பல படைக்கும் நீல நிற கண்ணுக்கு சொந்தக்காரி.//
//பூமியில் எந்த விதிமுறைகளுமின்றி நடமாடவிடப்பட்ட தேவதை.//

நல்லருக்கு!

வசுமதி, பேர் நல்லா இருக்கு!//

நன்றி..!! :))

////ஏனோ எண்ணங்கள் சில சமயம் நிஜ வாழ்க்கையிடம் தோற்று விடுகின்றன.//
அழகான லைன்.

எத்தன partsங்க? சீக்கரம் பெருசு பெருசா எழுதி முடுச்சுடுங்க, suspense தாங்க முடியல//

ம்ம்ம் சீக்கிரம் முடிக்கிறேன்..!! :))

ஸ்ரீமதி said...

@ ஜீவன்
//பூவுக்கும், தனக்குமான ஊடலில் பூமியைவிட்டு, தான் பிறந்த தாயகம் மேகத்திற்கு ஆவியாகி பனி செல்லும் இளங்காலைப்பொழுது. பூக்களுக்கு தலைக்கோதி, புல்வெளிக்குள் புகுந்து, பூமிக்கு புதுமை செய்யும் தென்றல், மெதுவாக உருவாகி, அவள் தலைக்கோதி சென்றது

இதுல, அந்த அக்கா வேற கவிதை சொல்லனுமா!

அருமை!!//

நன்றி அண்ணா...!! :))

ஸ்ரீமதி said...

@ ஜி
//:)))

Epdima? Epdi?? Kathaiya paththi ippothaikku no comments... kaviththuvamaai kathai sollum paangu arumai...//

எல்லாம் உங்க ஆசிவாதம் தான் அண்ணா... நன்றி..!! :))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//\\-திருத்தங்கள் தொடரும்...\\\

இன்னும் எம்புட்டு பிழைகள் இருக்கோ!! ;)//

அது போக போகதான் தெரியும்..!! :P

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//kavidhai and first 2 paras...pinnitte srimadhi :))
kalakku...//

Thank you akka..!! :))))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//super-a irukkuthu...

thodarungal thodarai :)//

நன்றி அண்ணா..!! :)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////பனிப்படர்ந்த
கண்ணாடிகளில் எல்லாம்
உன் பெயரால்
பூ செய்யும்
பைத்தியம் நான்//

WOW.. ரொம்ப ரொம்ப அழகா இருக்கே..
இந்த கவிதைக்கு அப்பறம் நான் கொஞ்ச நேரம் கதை படிக்க ஆரம்பிக்கவே இல்லை.. அவ்ளோ அழகு..//

அப்படியா?? நன்றி சரவணா..!! :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////பூமியில் எந்த விதிமுறைகளுமின்றி நடமாடவிடப்பட்ட தேவதை. //

சான்ஸே இல்லை.. தேவதை.. இந்த வார்த்தை ஒரு மாய வார்த்தை..//

:)))))ம்ஹும்.. தேங்க்ஸ் சரவணா..!! ;-)))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////இந்த இயற்கைக் காட்சிகளுக்கு அவள் இந்நேரம் கவிதை புனைந்திருக்கக்கூடும்.//
//இந்த வன தேவதைக்கு அம்மா, அப்பாவால் சூட்டப்பட்ட புனைப்பெயர் வசுமதி.//

வசுமதியா?? ஸ்ரீமதி மாதிரியே இருக்கு.. ;)) படிக்கும் போது..//

ம்ம்ம் இருக்குமே... சரவணா வேண்டாம் இந்த கொலைவெறி..!! ;)))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////"அருண் ஒரு கிராமம்... அங்க அழகா ஒரு சின்ன வீடு... நிறைய தென்ன மரம்.... ம்ம்ம்... அப்பறம்....!!" //

உன் எழுத்துக்கள்ல அடிக்கடி இந்த அருண் பேரு வருதே.. [அப்பாடா.. இன்னைக்கு தூக்கம் நல்லா வரும்...]//

ஓ அப்படியா??? எனக்கு தெரியாதே..!! ;)))) சரி அப்ப வேற பேர் வெக்கறேன் இனிமே..!! :P

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//காதல் திருத்தம்.. பேரு வித்தியாசமா இருக்கு.. ஆரம்பம் ரொம்ப நல்லா இருக்கு.. இன்னும் எத்தனை பகுதி வரும்??//

எத்தன பகுதின்னு தெரியல சரவணா..!! ;))) நன்றி..!! :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//நல்லா இருக்கு :)//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////பூவுக்கும், தனக்குமான ஊடலில் பூமியைவிட்டு, தான் பிறந்த தாயகம் மேகத்திற்கு ஆவியாகி பனி செல்லும் இளங்காலைப்பொழுது///


எது நல்ல இருக்குன்னு சொல்ல மறந்துட்டேன்!

இந்த வரிகள் :)//

ஓஓ ஓகே அண்ணா...!! :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//ஸ்ரீமதி! வித்தியாசமா ஆரம்பிச்சு இருக்கீங்க... நல்லா இருக்கு. தொடர்கதையை இடைவெளி இல்லாமல் எழுதுங்கள்! அப்போது தான் ஆர்வத்துடன் படிக்க இயலும்!//

கண்டிப்பாக அண்ணா.. நானும் அதுதான் நினைத்தேன்.. ஆனா பாருங்க தீபாவளி லீவ் வந்துடுச்சே..:(( சோ அது முடிஞ்சுதான் அடுத்த பகுதி வரும்னு நினைக்கிறேன்..!! :))

ஸ்ரீமதி said...

@ TKB Gandhi
////பனிப்படர்ந்த
கண்ணாடிகளில் எல்லாம்
உன் பெயரால்
பூ செய்யும்
பைத்தியம் நான்//

சொல்ல மறந்துட்டேன்! கவிதை நல்லா இருக்கு.//

நன்றி காந்தி..!! :))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//Me the 19th...கதையைப் படிசிட்டு வந்துடுறேன்!!!//

:))))))))))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//Saravana Kumar MSK said...
//இந்த இயற்கைக் காட்சிகளுக்கு அவள் இந்நேரம் கவிதை புனைந்திருக்கக்கூடும்.//
//இந்த வன தேவதைக்கு அம்மா, அப்பாவால் சூட்டப்பட்ட புனைப்பெயர் வசுமதி.//

//வசுமதியா?? ஸ்ரீமதி மாதிரியே இருக்கு.. ;)) படிக்கும் போது..//

repeatuu... rendu thadavai perai thirumbi thirumbi paarthen... vasumathi thaan....... ;)//

U too akka?? :((

ஸ்ரீமதி said...

@ நாணல்
//kadhai nalla irukku sri.....aarambame asathal...//

நன்றி அக்கா..!! :))

ஸ்ரீமதி said...

@ நாணல்
////பனிப்படர்ந்த கண்ணாடிகளில் எல்லாம் உன் பெயரால் பூ செய்யும் பைத்தியம் நான்//

அருமை... :)//

நன்றி அக்கா..!! :))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//அடுத்த பகுதிக்காக waitings... :)//

சீக்கிரம் போடறேன் அக்கா..!! :))

ஸ்ரீமதி said...

@ நாணல்
////'அழகான குடும்பம்.. அம்மா, அப்பா, ரெண்டு தங்கைகள்ன்னு.. இப்ப எல்லாரையும் பிரிஞ்சு, எங்கேயோ கண்காணா தூரத்துல என்னை நானே மறைச்சிக்கிற நிலைமை'.//

nalla irukku... ippadi thaan palaraum maraindhu maraindhu vaazhnduttu irukiranaga...//

ம்ம்ம் ஆமாம் அக்கா..!! :((

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா said...
//இரமணி சந்திரனை நினைவுப் படுத்தி செல்கிறது...மன்னிசிடுங்க...ஆனா கவித்துவமான ஆரம்பம்!!!//

:)))))))அக்கா எதுக்கு மன்னிப்பெல்லாம்?? உங்களுக்கு என்ன தோணுதோ அத சொல்லத் தானே பின்னுட்டப் பெட்டிய திறந்தே வெச்சிருக்கேன்... :))) நன்றி அக்கா..!! :)))))

ஸ்ரீமதி said...

@ Ŝ₤Ω..™
//தொடர்ச்சி எப்போ??//

போய் சமர்த்தா பட்டாசெல்லாம் வெடிச்சிட்டு, பக்ஷணம் எல்லாம் சாப்டுட்டு வாங்க... நான் அதுக்குள்ள எழுதிவெச்சிருக்கேன்... ஓகேவா?? ;))))))

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

//ஏனோ எண்ணங்கள் சில சமயம் நிஜ வாழ்க்கையிடம் தோற்று விடுகின்றன//

ரியலி?

அல்லது

இதுதான் ரியாலிட்டி?!/


அண்ணே சின்னபுள்ள தனமா கேள்வி கேக்காதீங்க......:)

நிஜமா நல்லவன் said...

பேரும்(வசுமதி) நல்லா இருக்கு. கதையும்(கதை தானே?) நல்லா இருக்கு...:)

நிஜமா நல்லவன் said...

/பனிப்படர்ந்த
கண்ணாடிகளில் எல்லாம்
உன் பெயரால்
பூ செய்யும்
பைத்தியம் நான்/

சூப்பர்!

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
/ஆயில்யன் said...

//ஏனோ எண்ணங்கள் சில சமயம் நிஜ வாழ்க்கையிடம் தோற்று விடுகின்றன//

ரியலி?

அல்லது

இதுதான் ரியாலிட்டி?!/


அண்ணே சின்னபுள்ள தனமா கேள்வி கேக்காதீங்க......:)//

யாரோ ரொம்ப நாள் கழிச்சு என் ப்ளாக் பக்கம் வந்தாமாதிரி இருக்கு..!! ;)))))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//பேரும்(வசுமதி) நல்லா இருக்கு. கதையும்(கதை தானே?) நல்லா இருக்கு...:)//

நன்றி அண்ணா..!! :)))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///பனிப்படர்ந்த
கண்ணாடிகளில் எல்லாம்
உன் பெயரால்
பூ செய்யும்
பைத்தியம் நான்/

சூப்பர்!//

நன்றி அண்ணா..!! :)))

நிஜமா நல்லவன் said...

/ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
/ஆயில்யன் said...

//ஏனோ எண்ணங்கள் சில சமயம் நிஜ வாழ்க்கையிடம் தோற்று விடுகின்றன//

ரியலி?

அல்லது

இதுதான் ரியாலிட்டி?!/


அண்ணே சின்னபுள்ள தனமா கேள்வி கேக்காதீங்க......:)//

யாரோ ரொம்ப நாள் கழிச்சு என் ப்ளாக் பக்கம் வந்தாமாதிரி இருக்கு..!! ;)))))/

ஹலோ...இதெல்லாம் ரொம்ப ஓவர்....:)

AMIRDHAVARSHINI AMMA said...

பனிப்படர்ந்த
கண்ணாடிகளில் எல்லாம்
உன் பெயரால்
பூ செய்யும்
பைத்தியம் நான்
CUTE.

என்னப்பா தொடரும் போட்டுட்ட. எப்ப தொடருவ.

கடையம் ஆனந்த் said...

நல்லா இருக்கு.

Siva said...

@ நிஜமா நல்லவன் said...
//பேரும்(வசுமதி) நல்லா இருக்கு. கதையும்(கதை தானே?) நல்லா இருக்கு...:)
//

ஸாரெ மொதல்ல போய் லெபிள பாரு ஸாரெ!!..
அவங்களெ இது 'கத மாதிரி' னு போட்டிருக்காங்க... அப்புறமென்ன??

தாரணி பிரியா said...

hai sri
kadaiyum supera ezhutharingale

waiting for the next part

இவன் said...

கதை நல்லா இருக்குது... அடுத்த திருத்தம் எப்போ??

K.Ravishankar said...

பிடிச்சிருக்கு! வாங்க நம்ம சைட்டுக்கு.
raviaditya.blogspot.com

kavathai undu.

gayathri said...

hai sri kavithaium naalla eluthurenga kathaium naal elutherenga next part sekarama eluthunga pa.

YILAVEANIL said...

வணக்கம் சகோதரி....

இத்தனை நாட்கள் நிம்மதியாய் இருந்த உங்களை மீண்டும் தொல்லை செய்ய வந்து விட்டேன்...

என்ன ஆச்சு ? எங்க போனீங்க ? என்ற உங்கள் கேள்விகள் எனக்கு கேட்டாலும்... மன்னித்து விடுங்கள்.... வருவேன் விடை தருவேன்...

நாளை தீபாவளி திருநாள்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும்

எமது உளங்கனிந்த

தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

மீண்டும் சந்திப்போம்..

வணக்கம்..

மிக்க அன்புடன்

இளவேனில்


பி.கு: பதிவுகள் படித்த பின் கருத்து பதிவு செய்வேன்....

அதுவரை மன்னிக்க வேண்டுகிறேன்...

anbudan vaalu said...

nice sreemathi :))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
/ஆயில்யன் said...

//ஏனோ எண்ணங்கள் சில சமயம் நிஜ வாழ்க்கையிடம் தோற்று விடுகின்றன//

ரியலி?

அல்லது

இதுதான் ரியாலிட்டி?!/


அண்ணே சின்னபுள்ள தனமா கேள்வி கேக்காதீங்க......:)//

யாரோ ரொம்ப நாள் கழிச்சு என் ப்ளாக் பக்கம் வந்தாமாதிரி இருக்கு..!! ;)))))/

ஹலோ...இதெல்லாம் ரொம்ப ஓவர்....:)//

:)))))

ஸ்ரீமதி said...

@ AMIRDHAVARSHINI AMMA
//பனிப்படர்ந்த
கண்ணாடிகளில் எல்லாம்
உன் பெயரால்
பூ செய்யும்
பைத்தியம் நான்
CUTE.

என்னப்பா தொடரும் போட்டுட்ட. எப்ப தொடருவ.//

போட்டுட்டேன் அக்கா...:)) படிச்சிட்டு சொல்லுங்க..!! :))

ஸ்ரீமதி said...

@ கடையம் ஆனந்த்
//நல்லா இருக்கு.//

நன்றி ஆனந்த் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்..!! :)))

ஸ்ரீமதி said...

@ Siva
//@ நிஜமா நல்லவன் said...
//பேரும்(வசுமதி) நல்லா இருக்கு. கதையும்(கதை தானே?) நல்லா இருக்கு...:)
//

ஸாரெ மொதல்ல போய் லெபிள பாரு ஸாரெ!!..
அவங்களெ இது 'கத மாதிரி' னு போட்டிருக்காங்க... அப்புறமென்ன??//

:)))))))))

ஸ்ரீமதி said...

@ தாரணி பிரியா
//hai sri
kadaiyum supera ezhutharingale//

Thank you akka..!! :))

//waiting for the next part//

Posted..!! ;))

ஸ்ரீமதி said...

@ இவன்
//கதை நல்லா இருக்குது... அடுத்த திருத்தம் எப்போ??//

நன்றி இவன்..!! :)) போஸ்ட் பண்ணிட்டேன்..!! :))))

ஸ்ரீமதி said...

@ K.Ravishankar
//பிடிச்சிருக்கு! வாங்க நம்ம சைட்டுக்கு.
raviaditya.blogspot.com

kavathai undu.//

நன்றி அண்ணா.. :)) இதோ வரேன்.. கொஞ்சம் லேட் ஆகிடிச்சு.. சாரி..!! :))

ஸ்ரீமதி said...

@ gayathri
//hai sri kavithaium naalla eluthurenga kathaium naal elutherenga next part sekarama eluthunga pa.//

போட்டுட்டேன் அக்கா.. படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. நன்றி..!! :))

ஸ்ரீமதி said...

@ YILAVEANIL
//வணக்கம் சகோதரி....

இத்தனை நாட்கள் நிம்மதியாய் இருந்த உங்களை மீண்டும் தொல்லை செய்ய வந்து விட்டேன்...

என்ன ஆச்சு ? எங்க போனீங்க ? என்ற உங்கள் கேள்விகள் எனக்கு கேட்டாலும்... மன்னித்து விடுங்கள்.... வருவேன் விடை தருவேன்...

நாளை தீபாவளி திருநாள்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும்

எமது உளங்கனிந்த

தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

மீண்டும் சந்திப்போம்..

வணக்கம்..

மிக்க அன்புடன்

இளவேனில்


பி.கு: பதிவுகள் படித்த பின் கருத்து பதிவு செய்வேன்....

அதுவரை மன்னிக்க வேண்டுகிறேன்...//

உங்களுக்கும் பிலேட்டட் தீபாவளி விஷேஸ் அண்ணா... :)) பொறுமையா வந்து படிச்சிட்டு சொல்லுங்க..!! :))

ஸ்ரீமதி said...

@ anbudan vaalu
//nice sreemathi :))//

மிக்க நன்றி..!! :))))

loganathan said...

பனிப்படர்ந்த
கண்ணாடிகளில் எல்லாம்
உன் பெயரால்
பூ செய்யும்
பைத்தியம் நான்...

Nallarukkunga..
innum neraiya cotinue pannunga..
naan padichutte irukken...
ovvoru kathaium simpla nalla irukkunga.

loganathan said...

பனிப்படர்ந்த
கண்ணாடிகளில் எல்லாம்
உன் பெயரால்
பூ செய்யும்
பைத்தியம் நான்..

nallarukkunga...
eallame..
pani vasikkum kannadi jannalai
thandi mugam varudum
athigalai sooriyanai pol
manathi varuduginrana.

innum neraiya continue pannunga..

naan padichutte irukken.

ஸ்ரீமதி said...

@ loganathan
//பனிப்படர்ந்த
கண்ணாடிகளில் எல்லாம்
உன் பெயரால்
பூ செய்யும்
பைத்தியம் நான்...

Nallarukkunga..
innum neraiya cotinue pannunga..
naan padichutte irukken...
ovvoru kathaium simpla nalla irukkunga.//

வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி லோகநாதன்.. :))

ஸ்ரீமதி said...

@ loganathan
//பனிப்படர்ந்த
கண்ணாடிகளில் எல்லாம்
உன் பெயரால்
பூ செய்யும்
பைத்தியம் நான்..

nallarukkunga...
eallame..
pani vasikkum kannadi jannalai
thandi mugam varudum
athigalai sooriyanai pol
manathi varuduginrana.

innum neraiya continue pannunga..

naan padichutte irukken.//

"பனி வசிக்கும் கண்ணாடி ஜன்னலை
தாண்டி முகம் வருடும்
அதிகாலை சூரியனை போல்
மனதை வருடுகின்றன."

நீங்க கூட ரொம்ப அழகா கவிதை சொல்றீங்க... ஒரு ப்ளாக் ஆரம்பிங்க..:)))))

loga.. said...

Hai..

Neenga sonnamathiriye..
ungalai follow panni oru block
open pannirukken..
just eluthiyirukken..
parthuttu sollunga..

கிருஷ்ணா said...

பனிப்படர்ந்த
கண்ணாடிகளில் எல்லாம்
உன் பெயரால்
பூ செய்யும்
பைத்தியம் நான்.....

இந்த கவிதையெல்லாம் படிக்கும் போது என் இளமைக்காலங்கள் எல்லாம் நாபகத்திற்கு வருதுங்க........

புதியவன் said...

//பூமியில் எந்த விதிமுறைகளுமின்றி நடமாடவிடப்பட்ட தேவதை. காற்றுக்கு கவிதைக் கற்றுக்கொடுக்கும் கனிவான பேச்சுக்குறியவள்.//

உங்களோட இந்த காதல் திருத்தம் க(வி)தையப் படிக்கிறதுக்கு இன்னிக்குத்தாங்க வாய்ப்பு கிடைச்சது அழகா ஆரம்பிச்சிருக்கீங்க...மற்ற பகுதிகளையும் படிச்சுட்டு வர்றேன்....

ஸ்ரீமதி said...

@ loga..
//Hai..

Neenga sonnamathiriye..
ungalai follow panni oru block
open pannirukken..
just eluthiyirukken..
parthuttu sollunga..//

:)))

ஸ்ரீமதி said...

@ கிருஷ்ணா
//பனிப்படர்ந்த
கண்ணாடிகளில் எல்லாம்
உன் பெயரால்
பூ செய்யும்
பைத்தியம் நான்.....

இந்த கவிதையெல்லாம் படிக்கும் போது என் இளமைக்காலங்கள் எல்லாம் நாபகத்திற்கு வருதுங்க........//

அப்படியா?? நன்றி கிருஷ்ணா.. :))

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////பூமியில் எந்த விதிமுறைகளுமின்றி நடமாடவிடப்பட்ட தேவதை. காற்றுக்கு கவிதைக் கற்றுக்கொடுக்கும் கனிவான பேச்சுக்குறியவள்.//

உங்களோட இந்த காதல் திருத்தம் க(வி)தையப் படிக்கிறதுக்கு இன்னிக்குத்தாங்க வாய்ப்பு கிடைச்சது அழகா ஆரம்பிச்சிருக்கீங்க...மற்ற பகுதிகளையும் படிச்சுட்டு வர்றேன்....//

நன்றி புதியவன் எல்லா பாகங்களையும் படிச்சு, உங்க கருத்தையும் என்னோட பகிர்ந்துகிட்டதுக்கு.. :)))))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது