அந்த விடியலில்,.........

சேவல்
அடைகாக்க
பெட்டை
பூபாளமிசைக்கும்....!!
மீன்கள்
தூண்டிலிட்டு
கரையில்
காத்திருக்கும்..!!
மான்களெல்லாம்
வேட்டையாடி
வேடனை
வீழ்த்தும்..!!
வேர்கள் வெளியே
சுவாசிக்க
கிளைகளெல்லாம்
மண்ணுக்குள்
முகவரி தேடும்...!!
அதிசயமாய்
தொலைக்காட்சிகளில்
தமிழே
முழு நாளும்...!!
பெண் குழந்தையே
பிறக்க வேண்டுமென
ஆலயம் தோறும்
பெற்றோர்களின்
வேண்டுதல் முடிச்சுகள்...!!
அந்த விடியலில்,.........
கட்டிய புடவையுடன்
மட்டுமே காத்திருக்கும்
என்னை
கைப்பிடிக்க
வருவான்
ஒரு ராஜகுமாரன்...!!
-அன்புடன்,
ஸ்ரீமதி.

108 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

இவன் said...

me the first??

இவன் said...

இருங்க படிச்சிட்டு வாரேன்

இவன் said...

ஹும்ம்ம் கவிதை நல்லாத்தான் இருக்குது

அனுஜன்யா said...

ஸ்ரீ,

நல்லா இருக்கு. ரொம்ப சோகமாவும். ஏன்?

அனுஜன்யா

தமிழ் பிரியன் said...

ஏன் வர மாட்டார்கள். கண்டிப்பாக வருவார்கள்.. இதற்கு ஏன் சோக லேபிள்?.. :)

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
ஏன் வர மாட்டார்கள். கண்டிப்பாக வருவார்கள்.. இதற்கு ஏன் சோக லேபிள்?.. :)
//

யோவ்!

அந்த சோகம் வர்றவனுக்குய்யா

ஹய்யோ ஹய்யோ!

:)))))

ஆயில்யன் said...

/சேவல் அடைகாக்க பெட்டை பூபாளமிசைக்கும்....!! மீன்கள் தூண்டிலிட்டு கரையில் காத்திருக்கும்..!! மான்களெல்லாம் வேட்டையாடி வேடனை வீழ்த்தும்..!! வேர்கள் வெளியே சுவாசிக்க கிளைகளெல்லாம் மண்ணுக்குள் முகவரி தேடும்...!! ///

எல்லாம் அததுங்க அதது வேலையை பார்க்கும் :))

நாம மட்டும்தான் ஆபிஸ்ல போய் உக்காந்துக்கிட்டு இப்படி பிளாக்குவோம் :)))))))))))))))))

அமுதா said...

நல்லா இருக்கு.

வீரசுந்தர் said...

பதிவுக்கு கரையோரக் கனவுகள்-ன்னே தலைப்பு வச்சிருக்கலாம். :D

சிம்பா said...

mathi ithil ne podava katta maten endru solla varraya.. illa rajakumaaran varamaataan,, raajaathi raja raja gambeera raaja... appadiyaaravathu varuvaannu soldriyaa..

ஜீவன் said...

அப்பா,அம்மாவுக்கு, கல்யாணமாகி இருபத்தஞ்சு வருஷம் ஆச்சு,அத சொல்லியாச்சு! அடுத்தது என்ன? தங்கச்சிக்கு மாப்பிள்ள பார்க்கணுமாம்! அதுதான் விஷயம்!
அதுக்கு

சேவல் அடைகாக்கனுமாம்!
மீன் தூண்டில் போடணுமாம்!
மான் வேட்டைஆடனுமாம் !
மரமெல்லாம் மண்ணுக்குள்ள போகனுமாம்!
அப்பா! போன் நம்பர் கொடும்மா!

ஸ்ரீமதி said...

@ இவன்
//me the first??//

ம்ம்ம்ம் நீங்க தான்...!! :))

ஸ்ரீமதி said...

@ இவன்
//இருங்க படிச்சிட்டு வாரேன்//

:)))))

ஸ்ரீமதி said...

@ இவன்
//ஹும்ம்ம் கவிதை நல்லாத்தான் இருக்குது//

நன்றி அண்ணா...!! :))

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//ஸ்ரீ,

நல்லா இருக்கு. ரொம்ப சோகமாவும். ஏன்? //

அது உண்மையாவே சோகமான விஷயம் தானே அண்ணா... அதான் எழுதும்போது தானா சோகம் வந்துடுச்சு..!! :))

இனியவள் புனிதா said...

காத்திருந்தால் காதல் நீளுமாமே..ஆக உங்க காத்திருப்பும் சீக்கிரம் பலன் தரும் :-)))
நன்கு உள்ளது!!!

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//ஏன் வர மாட்டார்கள். கண்டிப்பாக வருவார்கள்.. இதற்கு ஏன் சோக லேபிள்?.. :)//

எல்லா பெண்களுக்கும் இதே மாதிரி கட்டின புடவையோட வந்தா போதும்ன்னு சொல்ற ராஜகுமாரன் கிடைச்சிட்டா.. நான் சோகம் லேபிள எடுத்துடறேன் அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////தமிழ் பிரியன் said...
ஏன் வர மாட்டார்கள். கண்டிப்பாக வருவார்கள்.. இதற்கு ஏன் சோக லேபிள்?.. :)
//

யோவ்!

அந்த சோகம் வர்றவனுக்குய்யா

ஹய்யோ ஹய்யோ!

:)))))//

:))))))))

இனியவள் புனிதா said...

நீண்ட நாட்களாக சொல்ல நினைத்தது...மன்னிசிடுங்க இன்றைக்குச் சொல்லியேத் தீர வேண்டிய நிலை...:-(
உங்க Profile படம் மிக அழகாக இருக்கு!!! ;-)

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
///சேவல் அடைகாக்க பெட்டை பூபாளமிசைக்கும்....!! மீன்கள் தூண்டிலிட்டு கரையில் காத்திருக்கும்..!! மான்களெல்லாம் வேட்டையாடி வேடனை வீழ்த்தும்..!! வேர்கள் வெளியே சுவாசிக்க கிளைகளெல்லாம் மண்ணுக்குள் முகவரி தேடும்...!! ///

எல்லாம் அததுங்க அதது வேலையை பார்க்கும் :))

நாம மட்டும்தான் ஆபிஸ்ல போய் உக்காந்துக்கிட்டு இப்படி பிளாக்குவோம் :)))))))))))))))))//

ம்ம்ம்ம்ம்ம்ம் நீங்க சொன்னா சரி தான் அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ அமுதா
//நல்லா இருக்கு.//

நன்றி அக்கா முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்..!! :)))))

இனியவள் புனிதா said...

//எல்லா பெண்களுக்கும் இதே மாதிரி கட்டின புடவையோட வந்தா போதும்ன்னு சொல்ற ராஜகுமாரன் கிடைச்சிட்டா.. நான் சோகம் லேபிள எடுத்துடறேன் அண்ணா..!! //

ஏன் போட்டிருக்கும் சுடிதார்..ஜீன்ஸ் மட்டும் போதுமென்று சொல்ற இராஜாகுமாரன் வந்தா விரட்டி அடிச்சிடுவீங்களா!!!

ஸ்ரீமதி said...

@ வீரசுந்தர்
//பதிவுக்கு கரையோரக் கனவுகள்-ன்னே தலைப்பு வச்சிருக்கலாம். :D//

உண்மை தான் அண்ணா இதெல்லாம் கனவில் மட்டுமே காணப்படும் நிஜம்..!! :)) "பொன்னள்ளி வைத்தால் தானே.. பூமாலை தோளில் ஏறும்.. இல்லாத ஏழைக்கெல்லாம் பொல்லாத தனிமைக் காலம்..!!"

இனியவள் புனிதா said...

//ஜீவன் said...
அப்பா,அம்மாவுக்கு, கல்யாணமாகி இருபத்தஞ்சு வருஷம் ஆச்சு,அத சொல்லியாச்சு! அடுத்தது என்ன? தங்கச்சிக்கு மாப்பிள்ள பார்க்கணுமாம்! அதுதான் விஷயம்!
அதுக்கு

சேவல் அடைகாக்கனுமாம்!
மீன் தூண்டில் போடணுமாம்!
மான் வேட்டைஆடனுமாம் !
மரமெல்லாம் மண்ணுக்குள்ள போகனுமாம்!
அப்பா! போன் நம்பர் கொடும்மா!//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!

ஸ்ரீமதி said...

@ சிம்பா
//mathi ithil ne podava katta maten endru solla varraya.. illa rajakumaaran varamaataan,, raajaathi raja raja gambeera raaja... appadiyaaravathu varuvaannu soldriyaa..//

நான் என் அண்ணா புடவைக் கட்ட மாட்டேன்னு சொல்லப் போறேன்?? :) எனக்கு புடவை ரொம்ப பிடிக்கும்..!! நான் இங்க சொல்ல வந்தது, சொல்ல நினைத்தது, வரதட்சணை கொடுக்க முடியாமல், கொடுக்க வசதி இல்லாமல் முதிர் கன்னிகளாகவே இருக்கும் ஏழைப் பெண்களைப் பற்றி..!!

ஸ்ரீமதி said...

@ ஜீவன்
//அப்பா,அம்மாவுக்கு, கல்யாணமாகி இருபத்தஞ்சு வருஷம் ஆச்சு,அத சொல்லியாச்சு! அடுத்தது என்ன? தங்கச்சிக்கு மாப்பிள்ள பார்க்கணுமாம்! அதுதான் விஷயம்!
அதுக்கு

சேவல் அடைகாக்கனுமாம்!
மீன் தூண்டில் போடணுமாம்!
மான் வேட்டைஆடனுமாம் !
மரமெல்லாம் மண்ணுக்குள்ள போகனுமாம்!
அப்பா! போன் நம்பர் கொடும்மா!//

அண்ணா ஏன் இந்த கொலைவெறி?? ;)) நான் நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலியா?? (அப்ப கல்யாணம் பண்ணிகிட்டவங்கெல்லாம் நல்லா இல்லையான்னு கேட்க கூடாது..!! ;))

இனியவள் புனிதா said...

//நான் இங்க சொல்ல வந்தது, சொல்ல நினைத்தது, வரதட்சணை கொடுக்க முடியாமல், கொடுக்க வசதி இல்லாமல் முதிர் கன்னிகளாகவே இருக்கும் ஏழைப் பெண்களைப் பற்றி..!!//

இன்னுமா இந்த கொடுமை மாறவில்லை :-(

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//காத்திருந்தால் காதல் நீளுமாமே..ஆக உங்க காத்திருப்பும் சீக்கிரம் பலன் தரும் :-)))
நன்கு உள்ளது!!!//

அச்சச்சோ டாபிக்கயே சேன்ஜ் பண்ணிட்டேள்..!! ;)))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//நீண்ட நாட்களாக சொல்ல நினைத்தது...மன்னிசிடுங்க இன்றைக்குச் சொல்லியேத் தீர வேண்டிய நிலை...:-(
உங்க Profile படம் மிக அழகாக இருக்கு!!! ;-)//

எது?? நானும் நாய்க்குட்டியும் இருக்கற படமா?? நன்றி..!! ;)))))

இனியவள் புனிதா said...

//அச்சச்சோ டாபிக்கயே சேன்ஜ் பண்ணிட்டேள்..!! ;)))))//

:-))

இனியவள் புனிதா said...

//எது?? நானும் நாய்க்குட்டியும் இருக்கற படமா?? நன்றி..!! ;)))))//

அது நீங்க அத நாங்க நம்பனும் ? சரி நம்பிட்டேன்!!

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////எல்லா பெண்களுக்கும் இதே மாதிரி கட்டின புடவையோட வந்தா போதும்ன்னு சொல்ற ராஜகுமாரன் கிடைச்சிட்டா.. நான் சோகம் லேபிள எடுத்துடறேன் அண்ணா..!! //

ஏன் போட்டிருக்கும் சுடிதார்..ஜீன்ஸ் மட்டும் போதுமென்று சொல்ற இராஜாகுமாரன் வந்தா விரட்டி அடிச்சிடுவீங்களா!!!//

இப்ப கல்யாணத்துல இதெல்லாமா அல்லொவ் பண்றாங்க?? அடடா தெரியாம போச்சே..!!டெக்னாலஜி ஹாஸ் இம்ப்ரூவ்ட் சோ மச்..!! ;))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////ஜீவன் said...
அப்பா,அம்மாவுக்கு, கல்யாணமாகி இருபத்தஞ்சு வருஷம் ஆச்சு,அத சொல்லியாச்சு! அடுத்தது என்ன? தங்கச்சிக்கு மாப்பிள்ள பார்க்கணுமாம்! அதுதான் விஷயம்!
அதுக்கு

சேவல் அடைகாக்கனுமாம்!
மீன் தூண்டில் போடணுமாம்!
மான் வேட்டைஆடனுமாம் !
மரமெல்லாம் மண்ணுக்குள்ள போகனுமாம்!
அப்பா! போன் நம்பர் கொடும்மா!//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!//

நன்றி..!! ;)))))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////நான் இங்க சொல்ல வந்தது, சொல்ல நினைத்தது, வரதட்சணை கொடுக்க முடியாமல், கொடுக்க வசதி இல்லாமல் முதிர் கன்னிகளாகவே இருக்கும் ஏழைப் பெண்களைப் பற்றி..!!//

இன்னுமா இந்த கொடுமை மாறவில்லை :-(//

மாறிடுத்து... இப்பல்லாம் பெத்தவங்களே எப்பாடு பட்டாவது பொண்ணுங்கள பொட்லம் கட்டி அனுப்பிடுறாங்க..!! Sorry to say this..!! :((

இனியவள் புனிதா said...

//மாறிடுத்து... இப்பல்லாம் பெத்தவங்களே எப்பாடு பட்டாவது பொண்ணுங்கள பொட்லம் கட்டி அனுப்பிடுறாங்க..!! Sorry to say this..!! :((//

இந்த சமயம் ஏபிசிடி படம் நினைவுக்கு வருது :-(

Ŝ₤Ω..™ said...

மெல்லிய சோகம் இழையோட இருக்கும் இக்கவிதை, படித்து முடித்தபின் மனசு என்னமோ பண்ணுது..

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////அச்சச்சோ டாபிக்கயே சேன்ஜ் பண்ணிட்டேள்..!! ;)))))//

:-))//

மாத்தறதையும் மாத்திட்டு சிரிப்பப்பாரு ச்சின்னப் புள்ளத் தனமா..!! ;))

ஸ்ரீராம் பொன்ஸ் said...

இதில் சோகம் எங்கே வந்தது..நம்பிக்கையல்லவா தெரிகிறது..

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////எது?? நானும் நாய்க்குட்டியும் இருக்கற படமா?? நன்றி..!! ;)))))//

அது நீங்க அத நாங்க நம்பனும் ? சரி நம்பிட்டேன்!!//

உங்களுக்கெல்லாம் என் போட்டோ அனுப்பி வெக்கரதத் தவிர பெரிய தண்டனை வேற கிடையாது..!! ;))))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////மாறிடுத்து... இப்பல்லாம் பெத்தவங்களே எப்பாடு பட்டாவது பொண்ணுங்கள பொட்லம் கட்டி அனுப்பிடுறாங்க..!! Sorry to say this..!! :((//

இந்த சமயம் ஏபிசிடி படம் நினைவுக்கு வருது :-(//

ஏன் E F G H படமெல்லாம் ஞாபகம் வரலியா??? முக்கியமான விஷயம் பேசும் போது L.K.G குழந்தை மாதிரி பேசப் பாரு...!! ;)) இது அக்காவின் சோகம் போக :))

பாரதி said...

kavithai nalla irukku....sogam yean'nu theriyalaiye????

ஸ்ரீமதி said...

@ Ŝ₤Ω..™
//மெல்லிய சோகம் இழையோட இருக்கும் இக்கவிதை, படித்து முடித்தபின் மனசு என்னமோ பண்ணுது..//

செந்தில் அண்ணா வருகைக்கும், கவிதையை ரசித்ததற்கும் நன்றி..!! :)) (தொடர் பதிவுல நான் போட்ட மொக்கைக்கு அப்பறம் வர மாட்டீங்களோன்னு பயந்துட்டேன்..!! ;)))

ஸ்ரீமதி said...

@ ஸ்ரீராம் பொன்ஸ்
//இதில் சோகம் எங்கே வந்தது..நம்பிக்கையல்லவா தெரிகிறது..//

காத்திருக்கும் ராஜகுமாரிக்கு, ராஜகுமாரன் கிடைப்பானோ, மாட்டானோ என்கிற சோகம் தான் வேற ஒன்னும் இல்ல..!! ;))

ஸ்ரீமதி said...

@ பாரதி
//kavithai nalla irukku....sogam yean'nu theriyalaiye????//

அது சும்மா லுல்லுல்லுக்கு..!! ;)))))

tkbg said...

//மான்களெல்லாம்
வேட்டையாடி
வேடனை
வீழ்த்தும்..!!//

//பெண் குழந்தையே
பிறக்க வேண்டுமென
ஆலயம் தோறும்
பெற்றோர்களின்
வேண்டுதல் முடிச்சுகள்...!!//

lines ellam arumaiyaa irrukku... aana என்னங்க இது, சோகமான கவிதை எழுதி இருக்கீங்க! Unusual Sree!

AMIRDHAVARSHINI AMMA said...

வேர்கள் வெளியே
சுவாசிக்க
கிளைகளெல்லாம்
மண்ணுக்குள்
முகவரி தேடும்...!!

எல்லா வரிகளும் அருமை அழகான கவிதை

ஒரு மெல்லிய சோகம் எல்லா கவிதைகளிலும் தென்படுகிறதே.

ஏன் ஸ்ரீமா.

ஸ்ரீமதி said...

@ tkbg
////மான்களெல்லாம்
வேட்டையாடி
வேடனை
வீழ்த்தும்..!!//

//பெண் குழந்தையே
பிறக்க வேண்டுமென
ஆலயம் தோறும்
பெற்றோர்களின்
வேண்டுதல் முடிச்சுகள்...!!//

lines ellam arumaiyaa irrukku... aana என்னங்க இது, சோகமான கவிதை எழுதி இருக்கீங்க! Unusual Sree!//

சோகமா எழுதனும்னு எழுதல.. அது சோகமான விஷயம்கறதால.. கவிதையும் சோகமா அமைஞ்சிடுச்சு..!! ;)) நன்றி காந்தி..!! :))

ஸ்ரீமதி said...

@ AMIRDHAVARSHINI AMMA
//வேர்கள் வெளியே
சுவாசிக்க
கிளைகளெல்லாம்
மண்ணுக்குள்
முகவரி தேடும்...!!

எல்லா வரிகளும் அருமை அழகான கவிதை

ஒரு மெல்லிய சோகம் எல்லா கவிதைகளிலும் தென்படுகிறதே.

ஏன் ஸ்ரீமா.//

கவிதைக்கு பொய் எவ்ளோ அழகோ.. அதே அளவுக்கு சோகமும் அழகுன்னு நினைக்கிறேன்.. அதுக்காக இனிமேலும் சோகமாவே எழுதுவேன்னு நினைச்சிடாதீங்க.. :) சுகமான கவிதைகள் படிச்சு, ரசிக்கலாம்.. ஆனா, சோகமான கவிதைகள மட்டும் தான் அனுபவிச்சு, படிக்க முடியும்... ஏன்னா... எல்லாரும் நிச்சயம் அப்படிப்பட்ட சூழல்கள கடந்து வந்திருப்பாங்க... சோ, என் கவிதையும் அந்த சோகங்களைப் போலவே மனசுல தங்கும்ன்னு நினைக்கிறேன்.. அவ்ளோ தான்..!! :)அமிர்தவர்ஷிணி அம்மா நன்றி..!! :))

சிம்பா said...

//இங்க சொல்ல வந்தது, சொல்ல நினைத்தது, வரதட்சணை கொடுக்க முடியாமல், கொடுக்க வசதி இல்லாமல் முதிர் கன்னிகளாகவே இருக்கும் ஏழைப் பெண்களைப் பற்றி//

மதி இப்பெல்லாம் பொண்ணு கிடைக்கிறதுதான் சிரமமா இருக்கு. அதோட இந்த காலத்து பொண்ணுக ரொம்ப விவரமாகிடாங்க..

வரதட்சணை வாங்கி பண்ற கல்யாணம், மாட்டு சந்தை மாதிரி தான். அங்க மாடு, இங்க மாப்பிள்ளை.

ஸ்ரீமதி said...

@ சிம்பா
////இங்க சொல்ல வந்தது, சொல்ல நினைத்தது, வரதட்சணை கொடுக்க முடியாமல், கொடுக்க வசதி இல்லாமல் முதிர் கன்னிகளாகவே இருக்கும் ஏழைப் பெண்களைப் பற்றி//

மதி இப்பெல்லாம் பொண்ணு கிடைக்கிறதுதான் சிரமமா இருக்கு. அதோட இந்த காலத்து பொண்ணுக ரொம்ப விவரமாகிடாங்க..

வரதட்சணை வாங்கி பண்ற கல்யாணம், மாட்டு சந்தை மாதிரி தான். அங்க மாடு, இங்க மாப்பிள்ளை.//

அண்ணா நீங்க சொல்றது ரொம்பவும் கரெக்ட்.. :)) நான் இப்ப ஒரு உண்மை சொல்றேன் யார்கிட்டயும் சொல்லிடாதீங்க ஓகேவா?? இந்த கவிதை நான் இப்ப எழுதினதில்ல.. என் ஸ்கூல் காம்படீஷன் ஒண்ணுக்காக நான் ட்வெல்த் படிக்கும்போது எழுதினது... இன்னைக்கு மனசு ஒன்னும் சரியில்ல.. புதுசா எழுத முடியல.. சோ, ட்ராப்ட்ல இருந்தத எடுத்து போட்டுட்டேன்.. ;))

சிம்பா said...

சேம் Blood. இன்னைக்கு நம்ம பதிவர்களோட பழைய பதிவ படிச்சிக்கிட்டு இருந்தேன். அதுல நல்லா இருந்த ஒன்ன "படித்ததில் பிடித்தது" தலைப்பு போட்டு வலையேத்திடேன். இத நீயும் ரகசியமா வச்சுக்கோ.

ஆமா அப்போவே கவிதை ஆரம்பிச்சாச்சா மதி... சொல்லவே இல்ல...

ஸ்ரீமதி said...

@ சிம்பா
//சேம் Blood. இன்னைக்கு நம்ம பதிவர்களோட பழைய பதிவ படிச்சிக்கிட்டு இருந்தேன். அதுல நல்லா இருந்த ஒன்ன "படித்ததில் பிடித்தது" தலைப்பு போட்டு வலையேத்திடேன். இத நீயும் ரகசியமா வச்சுக்கோ.

ஆமா அப்போவே கவிதை ஆரம்பிச்சாச்சா மதி... சொல்லவே இல்ல...//

இல்ல அண்ணா நான் அப்போ எழுதினது கவிதை மாதிரி இல்ல.. ஒரு சின்ன கதை மாதிரி எழுதி, யாருக்கும் தெரியாம மாத்ஸ் நோட்ல மறைச்சு வெச்சு, அம்மா கண்டுபிடிச்சு, நான் அசடு வழிஞ்சுன்னு.. என்னென்னமோ ஆச்சு.. :)) இப்ப அத கொஞ்சம் கவிதை மாதிரி மாடிபை பண்ணி போட்ருக்கேன்..!! ;)))

குடுகுடுப்பை said...

கவிதை நல்லா இருக்கு, முதிர்கன்னி பற்றிய கவலை கவிதைன்னு நீங்க சொல்லிதான் இந்த ஜடத்துக்கு புரியுது.
கட்டிய சேலையுடன் ஒரு முதிர்கண்ணன் வருவான் என்று ஒரு அருஞ்சொற்பொருள் தந்திருக்கலாமோ.

ஜி said...

:)) 'kattuna pudavai' ya entha cinema kathaasiriyar kandupudichaano??

kavithai nandru... pathivu neelathukkaaga konjam konjamaa udachu pottirukkiyo?? ;)))

ஜி said...

//இந்த கவிதை நான் இப்ப எழுதினதில்ல.. என் ஸ்கூல் காம்படீஷன் ஒண்ணுக்காக நான் ட்வெல்த் படிக்கும்போது எழுதினது... //

oh!!! Nee appo MOOTHTHA ezuthaalaraa??

Divyapriya said...

செம ஸ்ரீ...chance less...கலக்கிட்டமா...

வெண்பூ said...

அருமையான கவிதை கலக்கிட்டீங்க.. ஆரம்பத்துல என்னடா வித்தியாசமே போகுதேன்னு படிச்சா கடைசியில மனசை கனக்க வெச்சிட்டீங்க.. நல்ல கவிதை..

Saravana Kumar MSK said...

என்ன Sri.. திடீர்னு இப்படி ஒரு கவிதை..???

Saravana Kumar MSK said...

நல்லா எழுதி இருக்க Sri.

கமல் மாதிரி ஒவ்வொரு பதிவிலும் ஒரு கெட்அப் மாத்தி எழுதற.. [வெரைட்டி யா எழுதறேன்னு சொல்ல வந்தேன்..

Saravana Kumar MSK said...

//ஜீவன் said...
அப்பா,அம்மாவுக்கு, கல்யாணமாகி இருபத்தஞ்சு வருஷம் ஆச்சு,அத சொல்லியாச்சு! அடுத்தது என்ன? Sri-க்கு மாப்பிள்ள பார்க்கணுமாம்! அதுதான் விஷயம்!
அதுக்கு

சேவல் அடைகாக்கனுமாம்!
மீன் தூண்டில் போடணுமாம்!
மான் வேட்டைஆடனுமாம் !
மரமெல்லாம் மண்ணுக்குள்ள போகனுமாம்!
அப்பா! போன் நம்பர் கொடும்மா!//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!

Saravana Kumar MSK said...

//ஸ்ரீமதி said...
இல்ல அண்ணா நான் அப்போ எழுதினது கவிதை மாதிரி இல்ல.. ஒரு சின்ன கதை மாதிரி எழுதி, யாருக்கும் தெரியாம மாத்ஸ் நோட்ல மறைச்சு வெச்சு, அம்மா கண்டுபிடிச்சு, நான் அசடு வழிஞ்சுன்னு.. என்னென்னமோ ஆச்சு.. :))//

அடடா.. மிஸ் பண்ணிட்டேனே.. இந்த நிமிடங்களை நேரில் பார்த்திருந்தா எப்படி இருந்திருக்கும்..??!!!!!!!!!

Saravana Kumar MSK said...

//கவிதைக்கு பொய் எவ்ளோ அழகோ.. அதே அளவுக்கு சோகமும் அழகுன்னு நினைக்கிறேன்.. //

//ஆனா, சோகமான கவிதைகள மட்டும் தான் அனுபவிச்சு, படிக்க முடியும்... ஏன்னா... எல்லாரும் நிச்சயம் அப்படிப்பட்ட சூழல்கள கடந்து வந்திருப்பாங்க... சோ, என் கவிதையும் அந்த சோகங்களைப் போலவே மனசுல தங்கும்ன்னு நினைக்கிறேன்.. அவ்ளோ தான்..!! //

இப்ப தெரியுதா.. நான் ஏன் சோகமா எழுதறேன்னு.. [அப்பாடா.. காரணம் கெடைச்சிருச்சி..]

ஆயில்யன் said...

/ஸ்ரீமதி said...
@ தமிழ் பிரியன்
//ஏன் வர மாட்டார்கள். கண்டிப்பாக வருவார்கள்.. இதற்கு ஏன் சோக லேபிள்?.. :)//

எல்லா பெண்களுக்கும் இதே மாதிரி கட்டின புடவையோட வந்தா போதும்ன்னு சொல்ற ராஜகுமாரன் கிடைச்சிட்டா.. நான் சோகம் லேபிள எடுத்துடறேன் அண்ணா..!! :))
//

ரசித்தேன்!

மாத்து புடவை எடுக்க தி நகர் போத்தீஸ் போகும் கதாநாயகியையும் நாயகனையும் நினைத்து சிரித்தேன் :))))

ஆயில்யன் said...

//ஜீவன் said...
அப்பா,அம்மாவுக்கு, கல்யாணமாகி இருபத்தஞ்சு வருஷம் ஆச்சு,அத சொல்லியாச்சு! அடுத்தது என்ன? தங்கச்சிக்கு மாப்பிள்ள பார்க்கணுமாம்! அதுதான் விஷயம்!
அதுக்கு

சேவல் அடைகாக்கனுமாம்!
மீன் தூண்டில் போடணுமாம்!
மான் வேட்டைஆடனுமாம் !
மரமெல்லாம் மண்ணுக்குள்ள போகனுமாம்!
அப்பா! போன் நம்பர் கொடும்மா!
//

ஜீவன் முறையாத்தான் வருவாரு!
அவுரு வர்ற படி வரட்டும்!

எனக்கு நீ அந்த பையன் நம்பர் கொடும்மா பாவம் அந்த பயபுள்ளகிட்ட பேசி சரி பண்றேன்!

:)))))))

ஆயில்யன் said...

//ஸ்ரீமதி said...
@ அனுஜன்யா
//ஸ்ரீ,

நல்லா இருக்கு. ரொம்ப சோகமாவும். ஏன்? //

அது உண்மையாவே சோகமான விஷயம் தானே அண்ணா... அதான் எழுதும்போது தானா சோகம் வந்துடுச்சு..!! :))
///

எங்களுக்கு படிக்கும்போது பயங்கர சோகமோ சோகம்!

பாவம்அந்த ராஜகுமாரன் :(

ஆயில்யன் said...

//இனியவள் புனிதா said...
நீண்ட நாட்களாக சொல்ல நினைத்தது...மன்னிசிடுங்க இன்றைக்குச் சொல்லியேத் தீர வேண்டிய நிலை...:-(
உங்க Profile படம் மிக அழகாக இருக்கு!!! ;-)
///

அதுவும் அந்த நாய்குட்டி எம்புட்டு அழகு :))

ஆனா பக்கதுல ஒரு பாப்பா எதுக்கு திருஷ்டி பொட்டு மாதிரின்னே தெரியல :(((((

ஆயில்யன் said...

//ஸ்ரீமதி said...
@ இனியவள் புனிதா
////நான் இங்க சொல்ல வந்தது, சொல்ல நினைத்தது, வரதட்சணை கொடுக்க முடியாமல், கொடுக்க வசதி இல்லாமல் முதிர் கன்னிகளாகவே இருக்கும் ஏழைப் பெண்களைப் பற்றி..!!//

இன்னுமா இந்த கொடுமை மாறவில்லை :-(//

மாறிடுத்து... இப்பல்லாம் பெத்தவங்களே எப்பாடு பட்டாவது பொண்ணுங்கள பொட்லம் கட்டி அனுப்பிடுறாங்க..!! Sorry to say this..!! :((
//

ரொம்ப கஷ்டமான சங்கதி!

நானும் சில குடும்பங்களில் நேரில் கண்டிருக்கிறேன்! :(((

மாறுவது எப்பொழுதோ

அப்பொழுதே நல்பொழுது !

ஆயில்யன் said...

//ஸ்ரீமதி said...
@ இனியவள் புனிதா
////எது?? நானும் நாய்க்குட்டியும் இருக்கற படமா?? நன்றி..!! ;)))))//

அது நீங்க அத நாங்க நம்பனும் ? சரி நம்பிட்டேன்!!//

உங்களுக்கெல்லாம் என் போட்டோ அனுப்பி வெக்கரதத் தவிர பெரிய தண்டனை வேற கிடையாது..!! ;))))))
///

அக்கம்பக்கத்து ஊருக்காரங்கள இப்பிடியெல்லாம் பயமுறுத்தறது தப்பும்மா! அப்புறம் நம்ம ஊரை பத்தி என்ன நினைப்பாங்க !

சாரி புனிதாக்கா நான் சொல்லிட்டேன் அவுங்க போட்டோ அனுப்பமாட்டாங்க நீங்க தைரியமா இருங்க! பயப்படாதீங்க !

ஆயில்யன் said...

// ஸ்ரீமதி said...
@ ஸ்ரீராம் பொன்ஸ்
//இதில் சோகம் எங்கே வந்தது..நம்பிக்கையல்லவா தெரிகிறது..//

காத்திருக்கும் ராஜகுமாரிக்கு, ராஜகுமாரன் கிடைப்பானோ, மாட்டானோ என்கிற சோகம் தான் வேற ஒன்னும் இல்ல..!! ;))
//

அடி ஆத்தி...........!

மிதிவண்டி இடைவெளியில் ராஜகுமாரி எங்க வந்தாங்க இங்க????????

ஆயில்யன் said...

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்!

சோகமாவே ஃபீல் பண்ணி சோகமாவே எழுதுங்க!

பட்!

படிக்கிற நாங்க ரொம்ப ஃபீல் பண்ணிட்டோம்ன்னா சும்மா கமெண்ட்ல ஒப்பாரி வைச்சு அழுவோம் ஆமாம் சொல்லிப்புட்டேன்! (நானெல்லாம் ஒப்பாரி வைச்சு அழுதா அது நிக்க 3 நாள் ஆக்கும்ம் அப்புறம் விக்கிறது நிக்க 4 நாள் ஆகும் அம்புட்டுதான்!)

ஆயில்யன் said...

அட ஆயில்யா!

எப்பிடிடா டைமிங்கா 70ல ரொம்ப எகத்தாளமா கமெண்டியிருக்க? வெரிகுட் :)))))

சென்ஷி said...

நல்லாருக்குங்க கவிதை..!

Vishnu... said...

// ஸ்ரீமதி...சேவல் அடைகாக்க பெட்டை பூபாளமிசைக்கும்....!! மீன்கள் தூண்டிலிட்டு கரையில் காத்திருக்கும்..!! மான்களெல்லாம் வேட்டையாடி வேடனை வீழ்த்தும்..!! //

தொடக்கமே அமர்களமா ....அசத்துகிறாய் தங்கையே ..

கவிதை ரொம்ப இனிமை ..
வாழ்த்துக்கள் ...

Vishnu... said...

//நீ சொன்ன ரகசியத்தை நானும் கேட்டுவிட்டேன் ..

ரொம்ப நாள் முன்னாடியே இப்படி எல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டாயா ?///

கேள்விகளுடன்
அண்ணா ..

Vishnu... said...

//ஸ்ரீமதி said... மாறிடுத்து... இப்பல்லாம் பெத்தவங்களே எப்பாடு பட்டாவது பொண்ணுங்கள பொட்லம் கட்டி அனுப்பிடுறாங்க..!! Sorry to say this..!! :((//

நீ சொல்வது மிக சரி..
தங்கையே ..ஆனால்
பெத்தவங்களை
தப்பு சொல்லி பயன் இல்லை
அவங்களுக்கும்
வேற வழி இல்லையே ..

Sorry to say this..!! :((

Vishnu... said...

மீண்டும் ஒரு நல்ல கவிதை
எனது தங்கையின் படைப்புக்களில் ..

வாழ்த்துக்களுடன் ...

அன்பு
அண்ணா ..

கோபிநாத் said...

77 ;)

அந்த ராஜகுமாரன் எங்கு இருந்தாலும் வாழ்க ;)

ஸ்ரீமதி said...

@ குடுகுடுப்பை
//கவிதை நல்லா இருக்கு, முதிர்கன்னி பற்றிய கவலை கவிதைன்னு நீங்க சொல்லிதான் இந்த ஜடத்துக்கு புரியுது.
கட்டிய சேலையுடன் ஒரு முதிர்கண்ணன் வருவான் என்று ஒரு அருஞ்சொற்பொருள் தந்திருக்கலாமோ.//

நாலுவரி கவிதைக்கு நாப்பது வரி விளக்கமா?? நல்லாருக்கு..!! ;)))நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ ஜி
//:)) 'kattuna pudavai' ya entha cinema kathaasiriyar kandupudichaano??//

என்னக்கென்னமோ இதை சினிமா கதாசிரியர் கண்டுபிடிச்சதா தோணல... பொண்ணுங்க புடவைக்கட்ட கத்து கொண்ட காலத்துலையே தோன்றின வார்த்தையா இருக்கும்.. எதுக்கும் நீங்க வரலாற்ற புரட்டி பாருங்க தெரியும்..!! ;))))))))

//kavithai nandru... pathivu neelathukkaaga konjam konjamaa udachu pottirukkiyo?? ;)))//

ஆம் அண்ணா..!! ;)))நன்றி..!! :))

ஸ்ரீமதி said...

@ ஜி
////இந்த கவிதை நான் இப்ப எழுதினதில்ல.. என் ஸ்கூல் காம்படீஷன் ஒண்ணுக்காக நான் ட்வெல்த் படிக்கும்போது எழுதினது... //

oh!!! Nee appo MOOTHTHA ezuthaalaraa??//

அண்ணா அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல..!! :((

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//செம ஸ்ரீ...chance less...கலக்கிட்டமா...//

ஹை தேங்க்ஸ் அக்கா..!! :)))

ஸ்ரீமதி said...

@ வெண்பூ
//அருமையான கவிதை கலக்கிட்டீங்க.. ஆரம்பத்துல என்னடா வித்தியாசமே போகுதேன்னு படிச்சா கடைசியில மனசை கனக்க வெச்சிட்டீங்க.. நல்ல கவிதை..//

நன்றி அண்ணா...!! :)))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//என்ன Sri.. திடீர்னு இப்படி ஒரு கவிதை..???//

சும்மா தான் சரவணா..!! :)))

நாணல் said...

//அனுஜன்யா said...
ஸ்ரீ,

நல்லா இருக்கு. ரொம்ப சோகமாவும். ஏன்?

அனுஜன்யா//

repeatuu....

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//நல்லா எழுதி இருக்க Sri.

கமல் மாதிரி ஒவ்வொரு பதிவிலும் ஒரு கெட்அப் மாத்தி எழுதற.. [வெரைட்டி யா எழுதறேன்னு சொல்ல வந்தேன்..//

நன்றி சரவணா...:)) ஆனா கமல் மாதிரின்னு சொன்னத நான் அச்செப்ட் பண்ணிகிட்டா என்ன கொலவெறியோட தொரத்த ஆள் ரெடியா இருப்பாங்க..!! ;))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////ஜீவன் said...
அப்பா,அம்மாவுக்கு, கல்யாணமாகி இருபத்தஞ்சு வருஷம் ஆச்சு,அத சொல்லியாச்சு! அடுத்தது என்ன? Sri-க்கு மாப்பிள்ள பார்க்கணுமாம்! அதுதான் விஷயம்!
அதுக்கு

சேவல் அடைகாக்கனுமாம்!
மீன் தூண்டில் போடணுமாம்!
மான் வேட்டைஆடனுமாம் !
மரமெல்லாம் மண்ணுக்குள்ள போகனுமாம்!
அப்பா! போன் நம்பர் கொடும்மா!//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!! ;)))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////ஸ்ரீமதி said...
இல்ல அண்ணா நான் அப்போ எழுதினது கவிதை மாதிரி இல்ல.. ஒரு சின்ன கதை மாதிரி எழுதி, யாருக்கும் தெரியாம மாத்ஸ் நோட்ல மறைச்சு வெச்சு, அம்மா கண்டுபிடிச்சு, நான் அசடு வழிஞ்சுன்னு.. என்னென்னமோ ஆச்சு.. :))//

அடடா.. மிஸ் பண்ணிட்டேனே.. இந்த நிமிடங்களை நேரில் பார்த்திருந்தா எப்படி இருந்திருக்கும்..??!!!!!!!!!//

:)))))))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////கவிதைக்கு பொய் எவ்ளோ அழகோ.. அதே அளவுக்கு சோகமும் அழகுன்னு நினைக்கிறேன்.. //

//ஆனா, சோகமான கவிதைகள மட்டும் தான் அனுபவிச்சு, படிக்க முடியும்... ஏன்னா... எல்லாரும் நிச்சயம் அப்படிப்பட்ட சூழல்கள கடந்து வந்திருப்பாங்க... சோ, என் கவிதையும் அந்த சோகங்களைப் போலவே மனசுல தங்கும்ன்னு நினைக்கிறேன்.. அவ்ளோ தான்..!! //

இப்ப தெரியுதா.. நான் ஏன் சோகமா எழுதறேன்னு.. [அப்பாடா.. காரணம் கெடைச்சிருச்சி..]//

:))))))))))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
///ஸ்ரீமதி said...
@ தமிழ் பிரியன்
//ஏன் வர மாட்டார்கள். கண்டிப்பாக வருவார்கள்.. இதற்கு ஏன் சோக லேபிள்?.. :)//

எல்லா பெண்களுக்கும் இதே மாதிரி கட்டின புடவையோட வந்தா போதும்ன்னு சொல்ற ராஜகுமாரன் கிடைச்சிட்டா.. நான் சோகம் லேபிள எடுத்துடறேன் அண்ணா..!! :))
//

ரசித்தேன்!

மாத்து புடவை எடுக்க தி நகர் போத்தீஸ் போகும் கதாநாயகியையும் நாயகனையும் நினைத்து சிரித்தேன் :))))//

:)))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////ஜீவன் said...
அப்பா,அம்மாவுக்கு, கல்யாணமாகி இருபத்தஞ்சு வருஷம் ஆச்சு,அத சொல்லியாச்சு! அடுத்தது என்ன? தங்கச்சிக்கு மாப்பிள்ள பார்க்கணுமாம்! அதுதான் விஷயம்!
அதுக்கு

சேவல் அடைகாக்கனுமாம்!
மீன் தூண்டில் போடணுமாம்!
மான் வேட்டைஆடனுமாம் !
மரமெல்லாம் மண்ணுக்குள்ள போகனுமாம்!
அப்பா! போன் நம்பர் கொடும்மா!
//

ஜீவன் முறையாத்தான் வருவாரு!
அவுரு வர்ற படி வரட்டும்!

எனக்கு நீ அந்த பையன் நம்பர் கொடும்மா பாவம் அந்த பயபுள்ளகிட்ட பேசி சரி பண்றேன்!

:)))))))//

அவன் நம்பரா?? அதெல்லாம் நீங்க தான் கண்டுபிடிக்கணும்... அப்பறம் எதுக்கு அண்ணானு இருக்கீங்க?? நாங்களே பையனும் பார்க்கணுமாம், நாங்களே கல்யாணமும் பண்ணிக்கனுமாம், இது நல்லா இருக்கே..!! :P

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////ஸ்ரீமதி said...
@ அனுஜன்யா
//ஸ்ரீ,

நல்லா இருக்கு. ரொம்ப சோகமாவும். ஏன்? //

அது உண்மையாவே சோகமான விஷயம் தானே அண்ணா... அதான் எழுதும்போது தானா சோகம் வந்துடுச்சு..!! :))
///

எங்களுக்கு படிக்கும்போது பயங்கர சோகமோ சோகம்!

பாவம்
அந்த ராஜகுமாரன் :(//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!! :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////இனியவள் புனிதா said...
நீண்ட நாட்களாக சொல்ல நினைத்தது...மன்னிசிடுங்க இன்றைக்குச் சொல்லியேத் தீர வேண்டிய நிலை...:-(
உங்க Profile படம் மிக அழகாக இருக்கு!!! ;-)
///

அதுவும் அந்த நாய்குட்டி எம்புட்டு அழகு :))

ஆனா பக்கதுல ஒரு பாப்பா எதுக்கு திருஷ்டி பொட்டு மாதிரின்னே தெரியல :(((((//

:)))))))அந்த பாப்பா இருக்கறதுனால தான் அந்த நாய்குட்டியே அழகா தெரியுது..!! :P

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////ஸ்ரீமதி said...
@ இனியவள் புனிதா
////நான் இங்க சொல்ல வந்தது, சொல்ல நினைத்தது, வரதட்சணை கொடுக்க முடியாமல், கொடுக்க வசதி இல்லாமல் முதிர் கன்னிகளாகவே இருக்கும் ஏழைப் பெண்களைப் பற்றி..!!//

இன்னுமா இந்த கொடுமை மாறவில்லை :-(//

மாறிடுத்து... இப்பல்லாம் பெத்தவங்களே எப்பாடு பட்டாவது பொண்ணுங்கள பொட்லம் கட்டி அனுப்பிடுறாங்க..!! Sorry to say this..!! :((
//

ரொம்ப கஷ்டமான சங்கதி!

நானும் சில குடும்பங்களில் நேரில் கண்டிருக்கிறேன்! :(((

மாறுவது எப்பொழுதோ

அப்பொழுதே நல்பொழுது !//

ம்ம்ம்ம் ஆமாம் அண்ணா..!! :)

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////ஸ்ரீமதி said...
@ இனியவள் புனிதா
////எது?? நானும் நாய்க்குட்டியும் இருக்கற படமா?? நன்றி..!! ;)))))//

அது நீங்க அத நாங்க நம்பனும் ? சரி நம்பிட்டேன்!!//

உங்களுக்கெல்லாம் என் போட்டோ அனுப்பி வெக்கரதத் தவிர பெரிய தண்டனை வேற கிடையாது..!! ;))))))
///

அக்கம்பக்கத்து ஊருக்காரங்கள இப்பிடியெல்லாம் பயமுறுத்தறது தப்பும்மா! அப்புறம் நம்ம ஊரை பத்தி என்ன நினைப்பாங்க !

சாரி புனிதாக்கா நான் சொல்லிட்டேன் அவுங்க போட்டோ அனுப்பமாட்டாங்க நீங்க தைரியமா இருங்க! பயப்படாதீங்க !//

ம்ம்ம் நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//// ஸ்ரீமதி said...
@ ஸ்ரீராம் பொன்ஸ்
//இதில் சோகம் எங்கே வந்தது..நம்பிக்கையல்லவா தெரிகிறது..//

காத்திருக்கும் ராஜகுமாரிக்கு, ராஜகுமாரன் கிடைப்பானோ, மாட்டானோ என்கிற சோகம் தான் வேற ஒன்னும் இல்ல..!! ;))
//

அடி ஆத்தி...........!

மிதிவண்டி இடைவெளியில் ராஜகுமாரி எங்க வந்தாங்க இங்க????????//

வரப்போறவன் ராஜகுமரன்னா.. காத்துட்டு இருக்கறவ ராஜகுமாரி தானேன்னு.. நானே யோசிச்சு எழுதினேன்..!! ;)))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்!

சோகமாவே ஃபீல் பண்ணி சோகமாவே எழுதுங்க!

பட்!

படிக்கிற நாங்க ரொம்ப ஃபீல் பண்ணிட்டோம்ன்னா சும்மா கமெண்ட்ல ஒப்பாரி வைச்சு அழுவோம் ஆமாம் சொல்லிப்புட்டேன்! (நானெல்லாம் ஒப்பாரி வைச்சு அழுதா அது நிக்க 3 நாள் ஆக்கும்ம் அப்புறம் விக்கிறது நிக்க 4 நாள் ஆகும் அம்புட்டுதான்!)//

ம்ம்ம் தெரிஞ்சிகிட்டேன் அண்ணா..!! ;)))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//அட ஆயில்யா!

எப்பிடிடா டைமிங்கா 70ல ரொம்ப எகத்தாளமா கமெண்டியிருக்க? வெரிகுட் :)))))//

இது என்ன?? உங்களுக்கு நீங்களே சொல்லிகிட்டதா?? நல்லாருக்கு..!! :P

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//நல்லாருக்குங்க கவிதை..!//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ Vishnu...
//// ஸ்ரீமதி...சேவல் அடைகாக்க பெட்டை பூபாளமிசைக்கும்....!! மீன்கள் தூண்டிலிட்டு கரையில் காத்திருக்கும்..!! மான்களெல்லாம் வேட்டையாடி வேடனை வீழ்த்தும்..!! //

தொடக்கமே அமர்களமா ....அசத்துகிறாய் தங்கையே ..

கவிதை ரொம்ப இனிமை ..
வாழ்த்துக்கள் ...//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ Vishnu...
////நீ சொன்ன ரகசியத்தை நானும் கேட்டுவிட்டேன் ..

ரொம்ப நாள் முன்னாடியே இப்படி எல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டாயா ?///

கேள்விகளுடன்
அண்ணா ..//

:))))))))நீ ரொம்ப நாளாவே இப்படி தானான்னு... கேட்கற மாதிரி இருக்கு..!! :))

ஸ்ரீமதி said...

@ Vishnu...
////ஸ்ரீமதி said... மாறிடுத்து... இப்பல்லாம் பெத்தவங்களே எப்பாடு பட்டாவது பொண்ணுங்கள பொட்லம் கட்டி அனுப்பிடுறாங்க..!! Sorry to say this..!! :((//

நீ சொல்வது மிக சரி..
தங்கையே ..ஆனால்
பெத்தவங்களை
தப்பு சொல்லி பயன் இல்லை
அவங்களுக்கும்
வேற வழி இல்லையே ..

Sorry to say this..!! :((//

அண்ணா பரவால்ல விடுங்க.. :)) இதுக்கெதுக்கு சாரி எல்லாம்.. :)))

ஸ்ரீமதி said...

@ Vishnu...
//மீண்டும் ஒரு நல்ல கவிதை
எனது தங்கையின் படைப்புக்களில் ..

வாழ்த்துக்களுடன் ...

அன்பு
அண்ணா ..//

நன்றி அண்ணா வாழ்த்துக்கு..!! :)))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//77 ;)

அந்த ராஜகுமாரன் எங்கு இருந்தாலும் வாழ்க ;)//

டாங்க்ஸ்..!! ;)

ஸ்ரீமதி said...

@ நாணல்
////அனுஜன்யா said...
ஸ்ரீ,

நல்லா இருக்கு. ரொம்ப சோகமாவும். ஏன்?

அனுஜன்யா//

repeatuu....//

என்ன ரிப்பீட்டு?? ச்சின்னப் புள்ளத் தனமா..!! ;))நன்றி அக்கா..!! :))

நாணல் said...

ரொம்ப லேட் ஆ பதிவு பக்கம் வந்த repeattu மட்டும் தான் போட முடியும்...
மக்களே எல்லாம் சொல்லிட்டாங்க ;) ... அதான் எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு repeattu மட்டும் போட்டுட்டேன்.. :p

ஸ்ரீமதி said...

@ நாணல்
//ரொம்ப லேட் ஆ பதிவு பக்கம் வந்த repeattu மட்டும் தான் போட முடியும்...
மக்களே எல்லாம் சொல்லிட்டாங்க ;) ... அதான் எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு repeattu மட்டும் போட்டுட்டேன்.. :p//

புரிஞ்சது அக்கா... :)) சும்மா தான் கேட்டேன்..!! :))

Maddy said...

Eppadi miss pannennu theiryalaye ithai?

ஸ்ரீமதி said...

@ Maddy
//Eppadi miss pannennu theiryalaye ithai?//

Ippo padichitteengalla?? ;))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது