மறுபடியும் ம்ம்ம்மாட்டிகிட்டேன்..!!

இதெல்லாம் ரொம்ப அநியாயம்-ங்க பின்னூட்டம் போட்டதுக்கு போய் யாராவது இப்படி செய்வாங்களா?? பாருங்க இப்ப எனக்கு என்ன ஆச்சுன்னு..!! ம்ம்ம் என்ன சொல்லி என்ன பிரயோஜனம்?? எழுதறேன்னு நாக்கு சாரி.. வாக்குக் கொடுத்துட்டேன் எழுதிதான் ஆகணும்... ஆனா பாருங்க இந்த கேள்வி பதிலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்...... (எவ்ளோ தூரம்னு கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது ச்ச்சின்னப் புள்ளத்தனமா..!!) நான் ஸ்கூல் படிக்கும் போதே (அட நிஜம்மா படிச்சேன்) 5 கேள்வி கேட்டா மேல மூணு, கீழ ரெண்டுன்னு சாய்ஸ்ல விட்டுடுவேன்.... இங்க அநியாயமா 11 கேள்விகள்... ஏதோ எனக்குத் தெரிஞ்சதுக்கு மட்டும் விடை சொல்றேன்.. ஓகே...!! :))


ம்ம்ம்ம்ம்ம்மாட்டிவிட்ட செந்தில்க்கு நன்றிகள்..!! :)))


1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

வயசு சத்தியமா ஞாபகம் இல்ல..!! :(( ஆனா அடம்பிடிச்சு பார்த்தப் படம் "எழுந்துரு அஞ்சலி..!! அஞ்சலி...!! எழுந்துரு அஞ்சலி..!!"-ன்னு ஒரு பொண்ணு கத்துமே அந்த படம்தான்... என்ன உணர்ந்தேனா?? நீங்க வேற அதப் பார்த்துட்டு வந்து அதேமாதிரி அண்ணாவ எழுப்பறேன்னு சொல்லி அடிவாங்கினது தான் மிச்சம்..!!:((

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

"சரோஜா"- (இது ரகசியம் யார்கிட்டயும் சொல்லக் கூடாது..!!) கிளாஸ் கட் அடிச்சிட்டு பிரெண்ட்ஸ்ஸோட பார்த்தப் படம்...!! அப்பறம் இன்னுமொரு முக்கியமான விஷயம் நான் எந்த படம், அரங்கு மட்டுமல்ல... எங்க பார்த்தாலும், அமர்ந்துப் பார்க்கறதுதான் வழக்கம்.. சோ நெக்ஸ்ட் டைம் இந்த மாதிரி அமர்ந்து பார்த்தப் படம்னெல்லாம் கேட்கக்கூடாது... ஓகே?? ;)))3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

அச்சச்சோ அதையேன் கேட்கறீங்க..!! இந்த ஞாயி்ற்றுக் கிழைமை சன் டிவில போட்ட அனகோண்டா பார்த்தேன்..!! யப்பா பயந்தே போயிட்டேன்... :( நான் சாதாரணமா ரொம்ப பயப்பட மாட்டேன் ஹி ஹி ஹி..!! ;)) ஆனா இந்த பாம்பு, தண்ணி (குடிக்கிற + குளிக்கிற தண்ணி) இதுக்கெல்லாம் கொஞ்சம் பயம்..!! ஆனா அதுதான் அந்த படம் முழுசும்... உவ்வே..!! :(( அப்பறம் இதுல எல்லாரும் தமிழ்ல தான் பேசினாங்க.. சோ இங்க போட்டுட்டேன்.. மத்தபடி நான் சினிமா பார்க்க டைம்மே கிடைக்கிறதில்ல..!! ஐ அம் ஆல்வேஸ் பிஸி யூ நோவ்..!! ;))))))

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

யூ மீன் சினிமாக்கு போயி அடிவாங்கினத கேட்கறீங்களா?? ஹி ஹி ஹி..!! :)) அதுமட்டும் தான் நடந்துருக்கு... மத்தபடி என்னைத் தாக்கின சினிமான்னு ஒன்னும் இல்ல... பிகாஸ், அது சினிமா... வாழ்க்கை இல்ல... 3 மணிநேரம் படம் பார்த்தேன்னா அத மோஸ்ட்லி அங்கேயே மறந்துட்டு வந்துடனும்னு ஆசைப்படற ஜந்து நான்.... :)) சோ எந்த சினிமாவும் என்ன பாதிச்சதில்ல... அதுமட்டுமில்லாம என்ன பாதிக்குன்னு தெரிஞ்சா அந்த சினிமாவுக்கு போகாம தவிர்த்துடுவேன்... லைக் "பருத்திவீரன்", "சுப்ரமணியபுரம்" இந்த மாதிரி...நீ சுத்த வேஸ்ட்ன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது...!! ;))பட் வாட் டு டூ?? சிரிச்சே பழகிட்டேன்..!! :)))

5.அ உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

இன்னும் ஒரு தடவக்கூட ஓட்டே போடல... அதுக்குள்ள உனக்கென்ன அரசியல்??ன்னு என் அண்ணன் கேட்கறான்... சோ இந்த கேள்விய நான் சாய்ஸ்ல விடறேன்..!! :)) ஹி ஹி ஹி...!! ;))

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

இப்படியெல்லாம் சுத்தி சுத்தி கேள்வி கேட்டா அழுதுடுவேன் ஆமா..!! :(( நானும் எவ்ளோ நேரம் தான் பதில் தெரிஞ்ச மாதிரியே நடிக்கறது?????? :(( வீட்ல என்னடானா சினிமா பார்த்தா கெட்டு போய்டுவன்னு டிவி கூட இல்ல நான் படிக்கிற காலத்துல..... இங்க ஒரே சினிமா பத்தின கேள்விகள்..!!:(( சோ இதையும் சாய்ஸ்ல விடறேன்...!!! ;)))) (இத ஏண்டாப்பா இவ கைல கொடுத்தோம்னு செந்தில் கஷ்டப்படறது புரியுது.... ஹி ஹி ஹி..!! ;)))

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

ஓஓஓஓ நிறைய்ய்யவே... எந்த ஹீரோயின்க்கு/ஹீரோக்கு கல்யாணம் ஆகியிருக்கு?? அவளுக்கு/அவனுக்கு ஏன் ஆகல?? இது அவளுக்கு/அவனுக்கு எத்தனாவது கல்யாணம்?? இப்படி பல மேட்டர் தெரிஞ்சிப்பேன்..!! ;)) இதெல்லாம் தானே இப்ப ஹாட் டாபிக்ஸ்..!! ;)))


7.தமிழ்ச்சினிமா இசை?

இது ஒன்னு தாங்க ஆறுதல்... நான் சினிமான்னு ஒன்னு பார்க்கப் போறேன்னா எனக்கு அதுல பாடல்கள் நல்லா இருக்கணும்... அப்படி போயி நிறைய்ய மொக்கைப் படம் பார்த்த அனுபவம் இருக்கு...:(( உதாரணம் "ஜில்லுன்னு ஒரு காதல்" (பிடித்தவர்கள் மன்னிக்கவும்..!!;)) இந்தப் படத்துக்கு அநியாயமா பொய் எல்லாம் சொல்லி, காலேஜ் எல்லாம் கட் அடிச்சு போனேன்...!! :(( அதுக்கு நான் கிளாஸ்லையே பேசாம தூங்கிருக்கலாம்..!! :(( மத்தபடி யுவன், A.R. ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜான்னு கலந்துகட்டி பாட்டு கேட்பேன்... இதுல பிடிச்சவங்க, பிடிக்காதவங்கன்னு கிடையாது...!! :))


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?


தமிழ் தவிர வேறு இந்திய மொழி படம்ன்னா.... தெலுங்கு கொஞ்சம் புரியும்.. சோ அது பார்ப்பேன்... ஆனா அது தாக்கலாம் இல்ல..!! :(( அப்பறம் ஹிந்தி படம் பார்ப்பேன்.. "ஏக் துஜே கேலியே" மறக்க முடியாத படம்... எனக்கு ஹிந்தி சுத்தமா தெரியாது...அப்பா டைலாக்ஸ் சொல்ல சொல்ல (அப்பாவுக்கு ஹிந்தி தெரியும்) கேட்டு பார்த்தேன்... ஆனாலும் மொழி புரியாம அழவெச்ச படம்... ஹாட்ஸ் ஆப் டு கமல்..!! :))


நானெல்லாம் ஹாலிவுட் மூவிஸ் தான் அதிகம் பார்ப்பேன் அப்படினெல்லாம் பீட்டர் விட மாட்டேன்... நான் பார்த்த ஹாலிவுட் படமெல்லாம் சொன்னா சிரிப்பீங்க... Ice age I & II, Cast away, Big, Fat, Lier, The Breed, Evil death(அதிக பட்சம் ரெண்டு சி.டி-ய மூணு நாள் பார்த்தேன்...அப்பவும் சௌண்ட முயூட் பண்ணி தான் ம்ஹீம் முடியல..!! ), Titanic(டைடானிக்-2ன்னு ஒன்னு வந்ததே.. அது 2 இல்ல தூ... நம்பி போய் உட்கார்ந்தா...!!).


அவ்ளோ தாங்க நம்ம உலக அறிவு...!! :(( இதுல என்ன தாக்கினது ஜேக் மரணம்... :(( பேசாம ரோஸ் செத்துருக்கலாம் அவனுக்கு பதிலா... ஹி ஹி ஹி...!! ;)))


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடி தொடர்புன்னா எப்படி??? நான் டிக்கெட் வாங்கி, ஒழுங்கா பாக்கனும்னு நினைக்கிற புது படத்த, தியேட்டர் போய் பார்ப்பேன்...ஓஓ இத நான் பிடிச்சு தான் செய்யறேன்...மறுபடியுமா??? அதுக்கு நல்ல படமா வரணுமே... அது கொஞ்சம் கஷ்டம் தான்... ஹி ஹி ஹி...!! ;)) நிச்சயமா... பின்ன திருட்டு வி.சி.டி-ல பார்க்காம தியேட்டர் வரணும்ன்னு தானே அவங்களே ஆசைப்படறாங்க... ஆனா வரவங்கள அவங்களே அடிச்சு தொரத்தாத குறையா ஓட வெக்கறாங்க.... அதுவேற விஷயம்..!! ;))


10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எனக்கு எதிகாலம் தெரியாது... ஆனா இனிமேலும் குசேலன் பார்ட்-2 வரும்னா... தமிழ் சினிமாவ அந்த கண்ணனாலையே(Lord Krishna..!!) காப்பாத்த முடியாது...!! ;)))


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?


என்னில் எந்த மாற்றமும் கிடையாது... இப்ப எப்படி இருக்கானோ அப்படி தான் இருப்பேன்... இன்னும் நிறைய மக்கள் மறந்து போன பழைய பாடல்கள் கேட்பேன்...!! :)) மக்களும் அதே மாதிரி "அடடா அந்த காலத்துல என்னமா படம் எடுத்துருக்கான் பாரேன்"-னு பழைய பட வி.சி.டி எல்லாம் போட்டு பார்த்து குசேல டைரக்டர கிழிப்பாங்க...!! ;)) மெகா சீரியல்கள், மெகா மெகா சீரியல்கள் ஆகும்...!! நயன்தாரா அம்மன் வேஷமும், அரைப்பாவடையோடவும் சீரியல்ல தரிசனம் தந்து தமிழ் மக்களை காப்பாத்துவா..!! ;))


நான் ம்ம்மாட்டிவிடப்போறவங்க....


1.பேருக்கும் ஆளுக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லாத பெரியவர்- பொடியன் சஞ்சய்.


2.கொஞ்சநாளா தலை மறைவா இருக்கும் என் அன்பு சகோதரி- நாணல்.


3.பெயரில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் நல்லவராகவே இருக்கும்- நிஜமா நல்லவர் அண்ணா (நீங்க சொன்ன மாதிரியே போட்டுட்டேன்.. பதிவ சமத்தா எழுதிடணும் புரிஞ்சதா அண்ணா?? ;)))


4. இனிய கவிதைகள் பல தரும் எங்கள் அக்கா ஹி ஹி ஹி..!! ;)) - இனியவள் புனிதா


5.எல்லாருக்கும் ஹோம் வொர்க் தரும் எங்கள் அண்ணா - சென்ஷி... ஹி ஹி ஹி..!! ;)))))


நன்றி...!! வணக்கம்..!! டாட்டா..!! குட் மார்னிங்... சாரி குட் பை...!! ;))


பி.கு: ஒரு போஸ்ட்டாவது கலர்புல்லா போடனும்னு நான் ஆசைப் பட்டத்தின் விளைவு...!! ;)) பொறுத்தருள்க...!! :)))


-அன்புடன்,
ஸ்ரீமதி.

151 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

தமிழ் பிரியன் said...

மீ த பர்ஸ்ட்டா?

தமிழ் பிரியன் said...

ஒரே நாளில் இரண்டு பதிவெல்லாம் போட்டா செல்லாது! செல்லாது! நாட்டாமை தீர்ப்பை மாத்தி நாளைக்கு பதிவைப் போடுங்க

ஆயில்யன் said...

நல்லா இருக்கு :))

Vanthana said...

Nee enna eluthunaalum nallathan srimathi irukum... irunthalum nan padichitu comments solren :)

ஆயில்யன் said...

//கிளாஸ் கட் அடிச்சிட்டு பிரெண்ட்ஸ்ஸோட பார்த்தப் படம்...!!///

என்னது கிளாஸ் கட் அடிச்சிட்டா

அப்பன்னா......?????

ஆயில்யன் said...

// Vanthana said...

Nee enna eluthunaalum nallathan srimathi irukum... irunthalum nan padichitu comments solren :)//


வஞ்ச புகழ்ச்சி அணிக்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டு வந்தனா அக்கா சொல்லியிருக்காங்க!

எனக்கு நொம்ப பிடிச்சிருக்கு :)))

நன்றி வந்தனாக்கா :)

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...
//கிளாஸ் கட் அடிச்சிட்டு பிரெண்ட்ஸ்ஸோட பார்த்தப் படம்...!!///
என்னது கிளாஸ் கட் அடிச்சிட்டா
அப்பன்னா......?????////

அண்ணே! எல்லாரும் உங்களை மாதிரி அப்பாவிகளா இருப்பாங்களா? இது மாதிரி சில அ(ட)ப்பாவிகளும் இருக்கனும்ல

narsim said...

5வது கேள்விக்கு நல்லா பதில் சொல்லியிருக்கீங்க..

நர்சிம்

Ŝ₤Ω..™ said...

கலர்புல்லா போஸ்ட் போட்டதுக்கு வாழ்த்துக்கள்.. (இப்படி ஒரு ஆசையை நிறைவேத்தி வெச்சதுக்கே எனக்கு ஒரு ட்ரீட் தரனும்)

ஒரு நாக்கு.. ஒரு வாக்கு.. அப்படி கொள்கையோட சொன்ன சொல்லை காப்பாற்ற தொடர்வண்டி தடம்புரளாம அடுத்த ஸ்டேஷனுக்கு அனுப்பி வைச்சதுக்கு நன்றி (அம்மாடி.. எம்மாம்பெரிய வாக்கியம்..)


பதிவு ரொம்ப லைட்டா.. ஒரு சிரிப்போடவே படிக்கிற மாதிரி இருக்கு.. நல்லா இருக்கு...

மற்றபடி...

***
(இத ஏண்டாப்பா இவ கைல கொடுத்தோம்னு செந்தில் கஷ்டப்படறது புரியுது.... ஹி ஹி ஹி..!! ;))
***
உண்மையான வார்த்தைகள்.. :‍(

***
எந்த ஹீரோயின்க்கு/ஹீரோக்கு கல்யாணம் ஆகியிருக்கு?? அவளுக்கு/அவனுக்கு ஏன் ஆகல?? இது அவளுக்கு/அவனுக்கு எத்தனாவது கல்யாணம்?? இப்படி பல மேட்டர் தெரிஞ்சிப்பேன்..!! ;)
***
ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயங்கள் தான்..

***
பேசாம ரோஸ் செத்துருக்கலாம் அவனுக்கு பதிலா... ஹி ஹி ஹி...!! ;)
***
என்ன கொடுமை சரவணன் இது??
ஆனாலும் இந்த கொலைவெறி ஆகாது...

நான் ஆதவன் said...

5வது கேள்விக்கு பதில்...இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா சொல்லிபுட்டேன்!

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...

மீ த பர்ஸ்ட்டா?//


இந்த ஆர்வம் இன்னிக்கு வேலைக்கு போறதுக்கு இருந்திருந்தா எம்புட்டு நல்லா இருந்திருக்கும் :)))))

வெண்பூ said...

இந்த பதிவில் "ஹி" என்ற எழுத்து எத்தனை முறை வருகிறது என்று சரியாக எண்ணி சொல்பவர்களுக்கு ஒரு குசேலன் டிவிடி பரிசாக வழங்கப்படும்.. ஹி..ஹி..ஹி..

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

//Titanic(டைடானிக்-2ன்னு ஒன்னு வந்ததே.. அது 2 இல்ல தூ... நம்பி போய் உட்கார்ந்தா...!!).//

ஹாஹாஹா...

நல்லா பதில் சொல்லுறிங்களே, இன்னும் கூட அதிகமா கேள்வி கேட்கலாம் போல...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

;)) அய்யோ அய்யோ முடியல.. ஹ்ஹிஹீஹி.. உன் பதிவைப்படிக்கனும்ன்னா இனி எல்லாரையும் ரூமை விட்டு துரத்தி விட்டுட்டு தனியாத்தான் படிக்கனும்..

உருப்புடாதது_அணிமா said...

(எவ்ளோ தூரம்னு கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது ச்ச்சின்னப் புள்ளத்தனமா..!!) ///நான் அப்படி தான் கேப்பேன் ..

நீங்க சொல்லி தான் ஆகணும்.. எவ்ளோ தூரம்??

உருப்புடாதது_அணிமா said...

இதெல்லாம் ரொம்ப அநியாயம்-ங்க பின்னூட்டம் போட்டதுக்கு போய் யாராவது இப்படி செய்வாங்களா?? ///

என்னங்க பண்றது??
முற்பகல் செய்யின் பிற்பகல் தானே?? அப்புறம் என்னங்க? மறந்து போச்சே??

.:: மை ஃபிரண்ட் ::. said...

//என்ன உணர்ந்தேனா?? நீங்க வேற அதப் பார்த்துட்டு வந்து அதேமாதிரி அண்ணாவ எழுப்பறேன்னு சொல்லி அடிவாங்கினது தான் மிச்சம்..!!:(( //

அண்ணாவுக்கு உங்க பாசம் புரியல. ;-)

உருப்புடாதது_அணிமா said...

இங்க அநியாயமா 11 கேள்விகள்... ஏதோ எனக்குத் தெரிஞ்சதுக்கு மட்டும் விடை சொல்றேன்.///

இப்படி சொல்லி சொல்லியே, எல்லா கேள்விக்கும் விடை சொல்லிட்டீங்க..
புடிங்க நூத்துக்கு நூத்தி பத்து மார்க்கு ..

.:: மை ஃபிரண்ட் ::. said...

//சரோஜா"- (இது ரகசியம் யார்கிட்டயும் சொல்லக் கூடாது..!!)//

உங்க அம்மா படிச்சிட்டாங்களாமே? ;-)

உருப்புடாதது_அணிமா said...

ம்ம்ம்ம்ம்ம்மாட்டிவிட்ட செந்தில்க்கு நன்றிகள்..!! :))) ////


என்னோட நன்றிகளையும் சேர்த்துகோங்க

.:: மை ஃபிரண்ட் ::. said...

//வீட்ல என்னடானா சினிமா பார்த்தா கேட்டு போய்டுவன்னு /

கெட்டு? ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

கோர்த்து விட்ட மக்கள் எல்லாம் அருமை. சூப்பரா செய்வாங்க. :-)

உருப்புடாதது_அணிமா said...

வயசு சத்தியமா ஞாபகம் இல்ல..!! :(( ///

நம்பிட்டேன்...

உருப்புடாதது_அணிமா said...

நான் சினிமா பார்க்க டைம்மே கிடைக்கிறதில்ல..!! ஐ அம் ஆல்வேஸ் பிஸி யூ நோவ்..!! ;)))))) //////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆயில்யன் said...

அட இங்கன மை ப்ரெண்டு சத்தம் கேட்டுச்சே ????

உருப்புடாதது_அணிமா said...

"சரோஜா"- (இது ரகசியம் யார்கிட்டயும் சொல்லக் கூடாது..!!)/////


யார்கிட்ட சொல்ல கூடாது..
யார்ன்னு சொன்னீங்கன்னா, அவங்ககிட்ட நான் சொல்ல மாட்டேன் ( நம்புங்க )

நிஜமா நல்லவன் said...

/.:: மை ஃபிரண்ட் ::. said...

கோர்த்து விட்ட மக்கள் எல்லாம் அருமை. சூப்பரா செய்வாங்க. :-)/

என்னைய தவிர.....(உண்மைய சொல்லிடனும்ல)

நிஜமா நல்லவன் said...

நல்லா இருக்கு ஸ்ரீ...!

நிஜமா நல்லவன் said...

/"சரோஜா"- (இது ரகசியம் யார்கிட்டயும் சொல்லக் கூடாது..!!) கிளாஸ் கட் அடிச்சிட்டு பிரெண்ட்ஸ்ஸோட பார்த்தப் படம்...!! /


:)

நிஜமா நல்லவன் said...

/3 மணிநேரம் படம் பார்த்தேன்னா அத மோஸ்ட்லி அங்கேயே மறந்துட்டு வந்துடனும்னு ஆசைப்படற ஜந்து நான்..../

Good...:)

"Its my world" said...

சூப்பர் ஸ்ரீ :))))))
இன்னிமே யாருமே உங்க கிட்ட கேள்வி எ க்க மடங்க போங்க ;-))))))))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//மீ த பர்ஸ்ட்டா?//

ஹை ஆமாங்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//ஒரே நாளில் இரண்டு பதிவெல்லாம் போட்டா செல்லாது! செல்லாது! நாட்டாமை தீர்ப்பை மாத்தி நாளைக்கு பதிவைப் போடுங்க//

நாட்டாம தீர்ப்பெல்லாம் மாத்தப்படாது..!! தப்பு தப்பு..!! ;)))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//நல்லா இருக்கு :))//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ Vanthana
//Nee enna eluthunaalum nallathan srimathi irukum... irunthalum nan padichitu comments solren :)//

Comment sonnathukku dankz..!! ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////கிளாஸ் கட் அடிச்சிட்டு பிரெண்ட்ஸ்ஸோட பார்த்தப் படம்...!!///

என்னது கிளாஸ் கட் அடிச்சிட்டா

அப்பன்னா......?????//

அப்படின்னா என்னன்னு தெரியாதா?? கிளாஸ் பங்க் பண்றது... லேச்சரருக்கு தெரியாம போறது.. இதெல்லாம் தான் கட் அடிப்பது எனப்படும். ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//// Vanthana said...

Nee enna eluthunaalum nallathan srimathi irukum... irunthalum nan padichitu comments solren :)//


வஞ்ச புகழ்ச்சி அணிக்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டு வந்தனா அக்கா சொல்லியிருக்காங்க!

எனக்கு நொம்ப பிடிச்சிருக்கு :)))

நன்றி வந்தனாக்கா :)//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..!! :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
/////ஆயில்யன் said...
//கிளாஸ் கட் அடிச்சிட்டு பிரெண்ட்ஸ்ஸோட பார்த்தப் படம்...!!///
என்னது கிளாஸ் கட் அடிச்சிட்டா
அப்பன்னா......?????////

அண்ணே! எல்லாரும் உங்களை மாதிரி அப்பாவிகளா இருப்பாங்களா? இது மாதிரி சில அ(ட)ப்பாவிகளும் இருக்கனும்ல//

அவரு அப்பாவியா??? உங்கள நினைச்சா எனக்கு பாவமா இருக்கு..!! ;)) இப்படி கட் அடிக்க எனக்கு கத்து கொடுத்த குருவே அவர் தான்..!! ;)))))

ஸ்ரீமதி said...

@ narsim
//5வது கேள்விக்கு நல்லா பதில் சொல்லியிருக்கீங்க..//

ஹை நன்றி அண்ணா..!! ;))))

ஸ்ரீமதி said...

@ Ŝ₤Ω..™
//கலர்புல்லா போஸ்ட் போட்டதுக்கு வாழ்த்துக்கள்.. (இப்படி ஒரு ஆசையை நிறைவேத்தி வெச்சதுக்கே எனக்கு ஒரு ட்ரீட் தரனும்)//

ட்ரீட் தானே குடுத்துட்டா போச்சு.. எவ்ளோவோ பண்றோம் இத பண்ண மாட்டோமா??;)))

//ஒரு நாக்கு.. ஒரு வாக்கு.. அப்படி கொள்கையோட சொன்ன சொல்லை காப்பாற்ற தொடர்வண்டி தடம்புரளாம அடுத்த ஸ்டேஷனுக்கு அனுப்பி வைச்சதுக்கு நன்றி (அம்மாடி.. எம்மாம்பெரிய வாக்கியம்..)//

நன்றி..!! :))(ரொம்ப சின்ன வாக்கியம் படிக்கிற உங்களுக்கு மூச்சு வாங்காம இருக்க ;))

//பதிவு ரொம்ப லைட்டா.. ஒரு சிரிப்போடவே படிக்கிற மாதிரி இருக்கு.. நல்லா இருக்கு...//

லைட்டா தான் சிரிச்சீங்களா?? அதுல என்ன கஞ்சத்தனம்??;)) தாராளமா சிரிக்கறது..!! :)))

//மற்றபடி...

***
(இத ஏண்டாப்பா இவ கைல கொடுத்தோம்னு செந்தில் கஷ்டப்படறது புரியுது.... ஹி ஹி ஹி..!! ;))
***
உண்மையான வார்த்தைகள்.. :‍(//

நாங்க எப்பவும் உண்மைதான் பேசுவோம்..!! ;))))

//***
எந்த ஹீரோயின்க்கு/ஹீரோக்கு கல்யாணம் ஆகியிருக்கு?? அவளுக்கு/அவனுக்கு ஏன் ஆகல?? இது அவளுக்கு/அவனுக்கு எத்தனாவது கல்யாணம்?? இப்படி பல மேட்டர் தெரிஞ்சிப்பேன்..!! ;)
***
ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயங்கள் தான்..//

இல்லையா பின்ன?????? ;))

//***
பேசாம ரோஸ் செத்துருக்கலாம் அவனுக்கு பதிலா... ஹி ஹி ஹி...!! ;)
***
என்ன கொடுமை சரவணன் இது??
ஆனாலும் இந்த கொலைவெறி ஆகாது...//

சரி ஜேக்கே செத்துட்டு போகட்டும்.. ஏன்னா அந்த படத்துல வயசானப்பறம் ரோஸ் பாட்டியா வர மாதிரி ஜேக் தாத்தாவா வரத என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியல..!! ;)))))

ஸ்ரீமதி said...

@ நான் ஆதவன்
//5வது கேள்விக்கு பதில்...இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா சொல்லிபுட்டேன்!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்... அதுல என்ன எழுதிட்டேன்னு எல்லாரும் இப்படி கொலவெறியோட இருக்கீங்க?? ஒரு கேள்வி தெரியலன்னு விட்டது தப்பா?? எங்க மிஸ்ஸெல்லாம் இப்படி கேள்விய விட்டா போய் தொல உன்னைத் திருத்த முடியாதுன்னு விட்டுடுவாங்க... இப்படி சுத்தி சுத்தி கேட்க மாட்டாங்க..!! ;))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////தமிழ் பிரியன் said...

மீ த பர்ஸ்ட்டா?//


இந்த ஆர்வம் இன்னிக்கு வேலைக்கு போறதுக்கு இருந்திருந்தா எம்புட்டு நல்லா இருந்திருக்கும் :)))))//

:))))))

ஸ்ரீமதி said...

@ வெண்பூ
//இந்த பதிவில் "ஹி" என்ற எழுத்து எத்தனை முறை வருகிறது என்று சரியாக எண்ணி சொல்பவர்களுக்கு ஒரு குசேலன் டிவிடி பரிசாக வழங்கப்படும்.. ஹி..ஹி..ஹி..//

ஒய் திஸ் மர்டர் வெறி??????? ;))))

ஸ்ரீமதி said...

@ சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்)
////Titanic(டைடானிக்-2ன்னு ஒன்னு வந்ததே.. அது 2 இல்ல தூ... நம்பி போய் உட்கார்ந்தா...!!).//

ஹாஹாஹா...

நல்லா பதில் சொல்லுறிங்களே, இன்னும் கூட அதிகமா கேள்வி கேட்கலாம் போல...//

ஆஹா என்னது நல்லா பதில் சொல்லிருக்கேனா???? இதுவும் வஞ்ச புகழ்ச்சி அணிக்கு உதாரணமா?? ;))))நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ முத்துலெட்சுமி-கயல்விழி
//;)) அய்யோ அய்யோ முடியல.. ஹ்ஹிஹீஹி.. உன் பதிவைப்படிக்கனும்ன்னா இனி எல்லாரையும் ரூமை விட்டு துரத்தி விட்டுட்டு தனியாத்தான் படிக்கனும்..//

ஏன் அக்கா?? ஏன் இப்படி ஒரு மொக்க பதிவ படிக்கறன்னு சுத்தி இருந்தவங்க அடிச்சிட்டாங்களா?? ;))

ஸ்ரீமதி said...

@ உருப்புடாதது_அணிமா
//(எவ்ளோ தூரம்னு கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது ச்ச்சின்னப் புள்ளத்தனமா..!!) ///நான் அப்படி தான் கேப்பேன் ..

நீங்க சொல்லி தான் ஆகணும்.. எவ்ளோ தூரம்??//

சரி நீங்க கேட்டதால சொல்றேன்... இவ்ளோ தூரம்.....

ஸ்ரீமதி said...

@ உருப்புடாதது_அணிமா
//இதெல்லாம் ரொம்ப அநியாயம்-ங்க பின்னூட்டம் போட்டதுக்கு போய் யாராவது இப்படி செய்வாங்களா?? ///

என்னங்க பண்றது??
முற்பகல் செய்யின் பிற்பகல் தானே?? அப்புறம் என்னங்க? மறந்து போச்சே??//

தாமே விளையும்-ன்னு நினைக்கிறேன்...சாரி எனக்கும் மறந்து போச்சு...!! :((

ஸ்ரீமதி said...

@ .:: மை ஃபிரண்ட் ::.
////என்ன உணர்ந்தேனா?? நீங்க வேற அதப் பார்த்துட்டு வந்து அதேமாதிரி அண்ணாவ எழுப்பறேன்னு சொல்லி அடிவாங்கினது தான் மிச்சம்..!!:(( //

அண்ணாவுக்கு உங்க பாசம் புரியல. ;-)//

ஆமாம்கா..!! :((

ஸ்ரீமதி said...

@ உருப்புடாதது_அணிமா
//இங்க அநியாயமா 11 கேள்விகள்... ஏதோ எனக்குத் தெரிஞ்சதுக்கு மட்டும் விடை சொல்றேன்.///

இப்படி சொல்லி சொல்லியே, எல்லா கேள்விக்கும் விடை சொல்லிட்டீங்க..
புடிங்க நூத்துக்கு நூத்தி பத்து மார்க்கு ..//

எங்க ஸ்கூல்லல்லாம் எல்லா கேள்வியும் அட்டென்ட் பண்ணிருந்தாலும் ஆன்சர் கரெக்ட்டா இருந்தாதான் மார்க் குடுப்பாங்க.. அப்ப இந்த ஆன்சர் எல்லாம் கரெக்ட்டா???? ;)))))

ஸ்ரீமதி said...

@ .:: மை ஃபிரண்ட் ::.
////சரோஜா"- (இது ரகசியம் யார்கிட்டயும் சொல்லக் கூடாது..!!)//

உங்க அம்மா படிச்சிட்டாங்களாமே? ;-)//

அம்மாவுக்கெல்லாம் பயந்ததில்லீங்க்கா..!! ;)))))

ஸ்ரீமதி said...

@ உருப்புடாதது_அணிமா
//ம்ம்ம்ம்ம்ம்மாட்டிவிட்ட செந்தில்க்கு நன்றிகள்..!! :))) ////


என்னோட நன்றிகளையும் சேர்த்துகோங்க//

பாவம்க அவரு.. நொந்து நூடுல்ஸ் ஆகிட்டாருன்னு நினைக்கிறேன்..!! :(

ஸ்ரீமதி said...

@ .:: மை ஃபிரண்ட் ::.
////வீட்ல என்னடானா சினிமா பார்த்தா கேட்டு போய்டுவன்னு /

கெட்டு? ;-)//

மாத்திட்டேன் அக்கா..!! :))

ஸ்ரீமதி said...

@ .:: மை ஃபிரண்ட் ::.
//கோர்த்து விட்ட மக்கள் எல்லாம் அருமை. சூப்பரா செய்வாங்க. :-)//

ஆமாம்கா..!! :)))

ஸ்ரீமதி said...

@ உருப்புடாதது_அணிமா
//வயசு சத்தியமா ஞாபகம் இல்ல..!! :(( ///

நம்பிட்டேன்...//

நன்றி..!! :))

ஸ்ரீமதி said...

@ உருப்புடாதது_அணிமா
//நான் சினிமா பார்க்க டைம்மே கிடைக்கிறதில்ல..!! ஐ அம் ஆல்வேஸ் பிஸி யூ நோவ்..!! ;)))))) //////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

:)))))))

நாணல் said...

அட இவ்வளவு நல்லவங்களா ஸ்ரீ நீங்க... எப்படி தான் இப்படி பொறுமையா எல்லா கேள்விக்கும் பதிலளிச்சிருக்கீங்களோ... :)
வாழ்க ஸ்ரீ.... ;)

நாணல் said...

//"சரோஜா"- (இது ரகசியம் யார்கிட்டயும் சொல்லக் கூடாது..!!)//

ஹை இது எனக்கு தெரியுமே.... ;)

குடுகுடுப்பை said...

எனக்கு எல்லா கேள்வியும் புரியுது.:)

சும்மா சொல்லக்கூடாது. நீ நல்லாவே எழுதறம்மா.

வாழ்த்துக்கள்.

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//அட இங்கன மை ப்ரெண்டு சத்தம் கேட்டுச்சே ????//

ஆமாம் வந்தாங்க..!! :))

ஜி said...

Colorful post jooper... nsoi maadi :)))

விஜய் ஆனந்த் said...

:-))))...

சென்ஷி said...

சூப்பர் பதிவு.. ரசிச்சு படிச்சு சிரிச்சேன். நல்லா கலாய்.. கலாய்ன்னு கலாய்ச்சிருக்கீங்க சினிமாவ :))

//அப்பறம் இன்னுமொரு முக்கியமான விஷயம் நான் எந்த படம், அரங்கு மட்டுமல்ல... எங்க பார்த்தாலும், அமர்ந்துப் பார்க்கறதுதான் வழக்கம்.. சோ நெக்ஸ்ட் டைம் இந்த மாதிரி அமர்ந்து பார்த்தப் படம்னெல்லாம் கேட்கக்கூடாது... ஓகே?? ;)))//

அய்யய்யோ.. சத்தியமா முடியல தாயே :))

சென்ஷி said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
//என்ன உணர்ந்தேனா?? நீங்க வேற அதப் பார்த்துட்டு வந்து அதேமாதிரி அண்ணாவ எழுப்பறேன்னு சொல்லி அடிவாங்கினது தான் மிச்சம்..!!:(( //

அண்ணாவுக்கு உங்க பாசம் புரியல. ;-)
//

ரிப்பீட்டே :)

ஸாவரியா said...

கலக்கிர... ஸ்ரீ Sorry Sorry கலாய்ச்சுட்ட ஸ்ரீமதி :)))

***
பேசாம ரோஸ் செத்துருக்கலாம் அவனுக்கு பதிலா... ஹி ஹி ஹி...!! ;) ****

அடிப்பாவி...

Divyapriya said...

கலக்கல் ஸ்ரீ :))
நல்லா சிரிச்சேன்...

Divyapriya said...

//யூ மீன் சினிமாக்கு போயி அடிவாங்கினத கேட்கறீங்களா?? //

//இப்படியெல்லாம் சுத்தி சுத்தி கேள்வி கேட்டா அழுதுடுவேன் ஆமா..!! :(( //

ஹா ஹா ஹா :)

Divyapriya said...

//எனக்கு எதிகாலம் தெரியாது... ஆனா இனிமேலும் குசேலன் பார்ட்-2 வரும்னா...//

உய்...யாரது தலைவர் படம் பத்தி தப்பா பேசறது?

Divyapriya said...

//நயன்தாரா அம்மன் வேஷமும், அரைப்பாவடையோடவும் சீரியல்ல தரிசனம் தந்து தமிழ் மக்களை காப்பாத்துவா..!! ;))//

ஹா ஹா ஹா...செம காமடி :))

கோபிநாத் said...

குட் ;)

Saravana Kumar MSK said...

எப்படித்தான் இவ்ளோ ஹியூமரா எழுதறயோ.. கலக்கலா இருக்கு..
மொத்த பதிவும் அருமையா இருந்துச்சு.. :)))

Saravana Kumar MSK said...

மேலே நண்பர்கள் சொன்ன அத்துணை பின்னூட்டங்களுக்கும் ஒரு பெரிய ரிப்பீட்டு.. :)

கடைசி பக்கம் said...

:-)()(

ஸ்ரீமதி said...

@ உருப்புடாதது_அணிமா
//"சரோஜா"- (இது ரகசியம் யார்கிட்டயும் சொல்லக் கூடாது..!!)/////


யார்கிட்ட சொல்ல கூடாது..
யார்ன்னு சொன்னீங்கன்னா, அவங்ககிட்ட நான் சொல்ல மாட்டேன் ( நம்புங்க )//

சொல்லிட்டேன்... கேட்டதா??? யார் கிட்டயும் சொல்லாதீங்க... ஓகே?? ;))))))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///.:: மை ஃபிரண்ட் ::. said...

கோர்த்து விட்ட மக்கள் எல்லாம் அருமை. சூப்பரா செய்வாங்க. :-)/

என்னைய தவிர.....(உண்மைய சொல்லிடனும்ல)//

:))))))))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//நல்லா இருக்கு ஸ்ரீ...!//

நன்றி அண்ணா..!! :))))))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///"சரோஜா"- (இது ரகசியம் யார்கிட்டயும் சொல்லக் கூடாது..!!) கிளாஸ் கட் அடிச்சிட்டு பிரெண்ட்ஸ்ஸோட பார்த்தப் படம்...!! /

:)//

;)))))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///3 மணிநேரம் படம் பார்த்தேன்னா அத மோஸ்ட்லி அங்கேயே மறந்துட்டு வந்துடனும்னு ஆசைப்படற ஜந்து நான்..../

Good...:)//

Dankz..!! ;))))))

ஸ்ரீமதி said...

@ "Its my world"
//சூப்பர் ஸ்ரீ :))))))
இன்னிமே யாருமே உங்க கிட்ட கேள்வி எ க்க மடங்க போங்க ;-)))//

அச்சச்சோ என்ன பவானி இப்படி சொல்லிட்டீங்க?? :((

ஸ்ரீமதி said...

@ நாணல்
//அட இவ்வளவு நல்லவங்களா ஸ்ரீ நீங்க... எப்படி தான் இப்படி பொறுமையா எல்லா கேள்விக்கும் பதிலளிச்சிருக்கீங்களோ... :)
வாழ்க ஸ்ரீ.... ;)//

யக்கா உங்கள மாட்டி விட்ட போதே தெரியல?? நான் எவ்ளோ நல்லவன்னு..!! ;)))))))

ஸ்ரீமதி said...

@ நாணல்
////"சரோஜா"- (இது ரகசியம் யார்கிட்டயும் சொல்லக் கூடாது..!!)//

ஹை இது எனக்கு தெரியுமே.... ;)//

சரி.. அப்ப நீங்க யார்கிட்டயும் சொல்லக் கூடாது.. ஓகே?? ;))))

ஸ்ரீமதி said...

@ குடுகுடுப்பை
//எனக்கு எல்லா கேள்வியும் புரியுது.:)

சும்மா சொல்லக்கூடாது. நீ நல்லாவே எழுதறம்மா.

வாழ்த்துக்கள்.//

அண்ணா நான் எப்பவுமே புரியாத மாதிரி எழுதுறவ-ன்னு முடிவு கட்டிட்டீங்களா?? அப்படியெல்லாம் இல்ல அண்ணா..!! :(( வாழ்த்துக்கு நன்றி அண்ணா..!! :)))))

ஸ்ரீமதி said...

@ ஜி
//Colorful post jooper... nsoi maadi :)))//

ஹை நன்றி அண்ணா..!! :))))))))

ஸ்ரீமதி said...

@ விஜய் ஆனந்த்
//:-))))...//

:))))))))))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//சூப்பர் பதிவு.. ரசிச்சு படிச்சு சிரிச்சேன். நல்லா கலாய்.. கலாய்ன்னு கலாய்ச்சிருக்கீங்க சினிமாவ :))//

ஏதோ நம்மால் முடிஞ்சது..!! ;)))

////அப்பறம் இன்னுமொரு முக்கியமான விஷயம் நான் எந்த படம், அரங்கு மட்டுமல்ல... எங்க பார்த்தாலும், அமர்ந்துப் பார்க்கறதுதான் வழக்கம்.. சோ நெக்ஸ்ட் டைம் இந்த மாதிரி அமர்ந்து பார்த்தப் படம்னெல்லாம் கேட்கக்கூடாது... ஓகே?? ;)))//

அய்யய்யோ.. சத்தியமா முடியல தாயே :))//

ஒய்??? வாட் ஹேப்பண்டு டு யு?? ;)))))

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
////.:: மை ஃபிரண்ட் ::. said...
//என்ன உணர்ந்தேனா?? நீங்க வேற அதப் பார்த்துட்டு வந்து அதேமாதிரி அண்ணாவ எழுப்பறேன்னு சொல்லி அடிவாங்கினது தான் மிச்சம்..!!:(( //

அண்ணாவுக்கு உங்க பாசம் புரியல. ;-)
//

ரிப்பீட்டே :)//

:)))))))))

ஸ்ரீமதி said...

@ ஸாவரியா
//கலக்கிர... ஸ்ரீ Sorry Sorry கலாய்ச்சுட்ட ஸ்ரீமதி :)))//

அப்படியா?? ;)))

//***
பேசாம ரோஸ் செத்துருக்கலாம் அவனுக்கு பதிலா... ஹி ஹி ஹி...!! ;) ****

அடிப்பாவி...//

ஒய்???????? ;))))))))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//கலக்கல் ஸ்ரீ :))
நல்லா சிரிச்சேன்...//

அப்படியா நன்றிகா..!! :)))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
////யூ மீன் சினிமாக்கு போயி அடிவாங்கினத கேட்கறீங்களா?? //

//இப்படியெல்லாம் சுத்தி சுத்தி கேள்வி கேட்டா அழுதுடுவேன் ஆமா..!! :(( //

ஹா ஹா ஹா :)//

:))))))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
////எனக்கு எதிகாலம் தெரியாது... ஆனா இனிமேலும் குசேலன் பார்ட்-2 வரும்னா...//

உய்...யாரது தலைவர் படம் பத்தி தப்பா பேசறது?//

உய்...யாரது பேசறது?????? யாரது பேசறது???????பேசறது???????;))))தமிழ்நாடே பேசுது..!! ;)))))))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
////நயன்தாரா அம்மன் வேஷமும், அரைப்பாவடையோடவும் சீரியல்ல தரிசனம் தந்து தமிழ் மக்களை காப்பாத்துவா..!! ;))//

ஹா ஹா ஹா...செம காமடி :))//

இது கடுப்புல எழுதினதுக்கா..!! :))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//குட் ;)//

டேங்க்ஸ்..!! ;)))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//எப்படித்தான் இவ்ளோ ஹியூமரா எழுதறயோ.. கலக்கலா இருக்கு..
மொத்த பதிவும் அருமையா இருந்துச்சு.. :)))//

நன்றி சரவணா..!! :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//மேலே நண்பர்கள் சொன்ன அத்துணை பின்னூட்டங்களுக்கும் ஒரு பெரிய ரிப்பீட்டு.. :)//

நன்றி சரவணா..!! :)))))))) (கடைசியா வந்ததும் இல்லாம ரிப்பீட்டப் பாரு ச்சின்னப் புள்ளத்தனமா..!! ;))))

ஸ்ரீமதி said...

@ கடைசி பக்கம்
//:-)()(//

:)()(

இனியவள் புனிதா said...

நான் ரொம்பவும் எஞ்சாய் பண்ணி படித்தேன்...நல்லா இருக்குடா செல்லம்.. (என்னை மாட்டிவிட்ட மேட்டருல்லு பிறகு பார்த்துக் கொ(ல்)கிறேன் :-))

இனியவள் புனிதா said...

//*மேட்டருல்லு//

மேட்டருக்கு...

பல வண்ண கலவையில் புது சினிமாவே காண்பித்துவிட்டீர்கள். கலக்கல் பதில்கள்!!!

இனியவள் புனிதா said...

மீ த 97

இனியவள் புனிதா said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
கோர்த்து விட்ட மக்கள் எல்லாம் அருமை. சூப்பரா செய்வாங்க. :-)//

அவ்வ்வ்வ் நீங்களுமா?

இனியவள் புனிதா said...
This comment has been removed by the author.
இனியவள் புனிதா said...

//
என்னில் எந்த மாற்றமும் கிடையாது... இப்ப எப்படி இருக்கானோ அப்படி தான் இருப்பேன்... இன்னும் நிறைய மக்கள் மறந்து போன பழைய பாடல்கள் கேட்பேன்...!! :)) மக்களும் அதே மாதிரி "அடடா அந்த காலத்துல என்னமா படம் எடுத்துருக்கான் பாரேன்"-னு பழைய பட வி.சி.டி எல்லாம் போட்டு பார்த்து குசேல டைரக்டர கிழிப்பாங்க...!! ;)) மெகா சீரியல்கள், மெகா மெகா சீரியல்கள் ஆகும்...!! நயன்தாரா அம்மன் வேஷமும், அரைப்பாவடையோடவும் சீரியல்ல தரிசனம் தந்து தமிழ் மக்களை காப்பாத்துவா..!! ;))//

இதுதான் ஹைலைட்... :-))
மீ த 100... சினிமாவுக்கு மட்டும்தான் வெள்ளிவிழா கொண்டாடுவாங்களா? இங்கே நாங்களும் கொண்டாடுவோம்ல!!! :-)))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//நான் ரொம்பவும் எஞ்சாய் பண்ணி படித்தேன்...நல்லா இருக்குடா செல்லம்.. (என்னை மாட்டிவிட்ட மேட்டருல்லு பிறகு பார்த்துக் கொ(ல்)கிறேன் :-))//

ஹை அப்படியா அக்கா??;))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////*மேட்டருல்லு//

மேட்டருக்கு...//

புரிந்துக்கொண்டேன்..!! :))

//பல வண்ண கலவையில் புது சினிமாவே காண்பித்துவிட்டீர்கள். கலக்கல் பதில்கள்!!!//

நன்றி..!! ;)))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////.:: மை ஃபிரண்ட் ::. said...
கோர்த்து விட்ட மக்கள் எல்லாம் அருமை. சூப்பரா செய்வாங்க. :-)//

அவ்வ்வ்வ் நீங்களுமா?//

ம்ம்ம்ம்ம் அவங்களும் தான்... சீக்கிரம் போஸ்ட் போடுங்க..!! ;)))))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////
என்னில் எந்த மாற்றமும் கிடையாது... இப்ப எப்படி இருக்கானோ அப்படி தான் இருப்பேன்... இன்னும் நிறைய மக்கள் மறந்து போன பழைய பாடல்கள் கேட்பேன்...!! :)) மக்களும் அதே மாதிரி "அடடா அந்த காலத்துல என்னமா படம் எடுத்துருக்கான் பாரேன்"-னு பழைய பட வி.சி.டி எல்லாம் போட்டு பார்த்து குசேல டைரக்டர கிழிப்பாங்க...!! ;)) மெகா சீரியல்கள், மெகா மெகா சீரியல்கள் ஆகும்...!! நயன்தாரா அம்மன் வேஷமும், அரைப்பாவடையோடவும் சீரியல்ல தரிசனம் தந்து தமிழ் மக்களை காப்பாத்துவா..!! ;))//

இதுதான் ஹைலைட்... :-))
மீ த 100... சினிமாவுக்கு மட்டும்தான் வெள்ளிவிழா கொண்டாடுவாங்களா? இங்கே நாங்களும் கொண்டாடுவோம்ல!!! :-)))//

நீங்களும் நானும் ஒரே வேவ் லெங்க்த்ல இருக்கோம்..!! ;)) கொண்டாடிட்டா போச்சு..!! :)))))

இனியவள் புனிதா said...

//ஹை அப்படியா அக்கா??;))))//

அட எவ்வளவு மகிழ்ச்சி... கொல்லாமல் கொல்வது எப்படின்னு இப்போ தெரியுது!!!

இனியவள் புனிதா said...

//ம்ம்ம்ம்ம் அவங்களும் தான்... சீக்கிரம் போஸ்ட் போடுங்க..!! ;)))))))//

இந்த மாதம் விடுத்து ...அடுத்த மாதம் போடலாமா...தீபாவளி ரிலீஸ் நாங்களும் காட்டுவோம்ல!!!

இனியவள் புனிதா said...

//நீங்களும் நானும் ஒரே வேவ் லெங்க்த்ல இருக்கோம்..!! ;)) கொண்டாடிட்டா போச்சு..!! :)))))//

நம்ம கட்சி கொள்கையில் இதெல்லாம் சகஜமில்லையா? :-))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////ஹை அப்படியா அக்கா??;))))//

அட எவ்வளவு மகிழ்ச்சி... கொல்லாமல் கொல்வது எப்படின்னு இப்போ தெரியுது!!!//

நீங்க இப்படி சொல்லாமல் சொல்வது என்னன்னு சொன்னா நல்லாருக்கும்... ;)) ஐ மீன் புரியல..!! :(

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////ம்ம்ம்ம்ம் அவங்களும் தான்... சீக்கிரம் போஸ்ட் போடுங்க..!! ;)))))))//

இந்த மாதம் விடுத்து ...அடுத்த மாதம் போடலாமா...தீபாவளி ரிலீஸ் நாங்களும் காட்டுவோம்ல!!!//

ம்ம்ம் ஓகே அக்கா..!! :))))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////நீங்களும் நானும் ஒரே வேவ் லெங்க்த்ல இருக்கோம்..!! ;)) கொண்டாடிட்டா போச்சு..!! :)))))//

நம்ம கட்சி கொள்கையில் இதெல்லாம் சகஜமில்லையா? :-))//

அட ஆமாம்ல..!! :))))

இனியவள் புனிதா said...

//நீங்க இப்படி சொல்லாமல் சொல்வது என்னன்னு சொன்னா நல்லாருக்கும்... ;)) ஐ மீன் புரியல..!! :(//

யாருக்குத் தெரியும்?

இனியவள் புனிதா said...

//ம்ம்ம் ஓகே அக்கா..!! :))))))//

ரொம்பவும் நல்லவங்க நீங்க...(எப்படியோ தப்பிசாச்சு..ஆனா தீபாவளி இந்த மாதமா கொண்டாடுறாங்க..சொல்லவே இல்லை...)தீபாவளி ரிலீஸ்னா தீபாவளிக்குல்ல போடனும் :-))) போட்டுட்டா போச்சு!!

இனியவள் புனிதா said...

//அட ஆமாம்ல..!! :))))//

:-)))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////நீங்க இப்படி சொல்லாமல் சொல்வது என்னன்னு சொன்னா நல்லாருக்கும்... ;)) ஐ மீன் புரியல..!! :(//

யாருக்குத் தெரியும்?//

அடப்பாவி அக்கா......!! ;))))))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////ம்ம்ம் ஓகே அக்கா..!! :))))))//

ரொம்பவும் நல்லவங்க நீங்க...(எப்படியோ தப்பிசாச்சு..ஆனா தீபாவளி இந்த மாதமா கொண்டாடுறாங்க..சொல்லவே இல்லை...)தீபாவளி ரிலீஸ்னா தீபாவளிக்குல்ல போடனும் :-))) போட்டுட்டா போச்சு!!//

ஆமாங்கா இந்த மாசம் தான் தீபாவளி...!! :))Same blood.. நானும் மறந்துட்டேன்..!! :((

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////அட ஆமாம்ல..!! :))))//

:-)))//

:)))))

நான் சிரித்தால் தீபாவளி..!! ;)))) (இது எனக்கு நானே போட்டுகிட்ட பாட்டு... உங்களுக்கு அப்பறமா யோசிச்சு சொல்றேன்.. ஓகே?? ;))))

இனியவள் புனிதா said...

//அடப்பாவி அக்கா......!! ;))))))))//

விடுங்க விடுங்க அப்புறம் எப்படி சென்சுரி அடிப்பதாம் ;-)))

இனியவள் புனிதா said...

//ஆமாங்கா இந்த மாசம் தான் தீபாவளி...!! :))Same blood.. நானும் மறந்துட்டேன்..!! :((//

:-)) ஒரே வேவ்லெங்த் அப்ப்டித்தான் இருக்கும்!!!!

இனியவள் புனிதா said...

//நான் சிரித்தால் தீபாவளி..!! ;)))) (இது எனக்கு நானே போட்டுகிட்ட பாட்டு... உங்களுக்கு அப்பறமா யோசிச்சு சொல்றேன்.. ஓகே?? ;))))//

அப்போ நான் சிரித்தால் பொங்கல் :-))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////அடப்பாவி அக்கா......!! ;))))))))//

விடுங்க விடுங்க அப்புறம் எப்படி சென்சுரி அடிப்பதாம் ;-)))//

:))))))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////ஆமாங்கா இந்த மாசம் தான் தீபாவளி...!! :))Same blood.. நானும் மறந்துட்டேன்..!! :((//

:-)) ஒரே வேவ்லெங்த் அப்ப்டித்தான் இருக்கும்!!!!//

:))))))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////நான் சிரித்தால் தீபாவளி..!! ;)))) (இது எனக்கு நானே போட்டுகிட்ட பாட்டு... உங்களுக்கு அப்பறமா யோசிச்சு சொல்றேன்.. ஓகே?? ;))))//

அப்போ நான் சிரித்தால் பொங்கல் :-))//

ஹையோ சமத்து..... பாரேன் தனக்குன்னு ஒரு பாட்ட தேடிக்கிட்டாங்க........!! :))))))

கானா பிரபா said...

கலக்கல்ஸ் ;-)

உங்களுக்கு ஒரு ஆறுதல் செய்தி குசேலன் பார்ட் 2 வருதாம், தொடர்ந்து 10 பாகங்கள் வருதாம்.

ஸ்ரீமதி said...

@ கானா பிரபா
//கலக்கல்ஸ் ;-)

உங்களுக்கு ஒரு ஆறுதல் செய்தி குசேலன் பார்ட் 2 வருதாம், தொடர்ந்து 10 பாகங்கள் வருதாம்.//

அச்சச்சோ ஏன் அண்ணா இந்த கொலைவெறி?? ;))வாழ்த்துக்கு நன்றி அண்ணா..!!! :))

ஜீவன் said...

என்னத்த சொல்ல

ஸ்ரீமதி said...

@ ஜீவன்
//என்னத்த சொல்ல//

ஏன் அண்ணா?? :))

சிம்பா said...

//"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
நான்
பைத்தியமாகலாமடி...!! //


மதி நான் பதிவ பத்தி எழுத வரல.. ஆனா சைடுல இருக்க சின்ன சின்ன பொக்கிசத்துல ஒன்ன சும்மானாச்சிக்கு சுட்டு நானே எழுதினதுன்னு ஒருத்தர் கிட்ட சொன்னேன். கடைசீ வரை நம்பல.

ஏன் நா அது ஒன்னு ஒன்னும் அவளோ நல்லா இருக்கு. அதனால உண்மைய சொல்லிடு வந்தேன். அவங்க நல்லா இருக்குன்னு சொல்ல சொன்னாங்க.

Saravana Kumar MSK said...

//கடைசியா வந்ததும் இல்லாம ரிப்பீட்டப் பாரு ச்சின்னப் புள்ளத்தனமா..!! ;))))//

:))))

இனி சீக்கிரம் வரேன்.. ஓகே??

Saravana Kumar MSK said...

//நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
நான்
பைத்தியமாகலாமடி...!!//

இது அழகு..:)

நான் சொல்லனும்னு நெனச்சேன். சிம்பா முந்திக்கொண்டார்..

Gowri Shankar said...

அது என்ன 'குசேலன்-2' வந்தா நாடு தாங்காது? இதெல்லாம் ரொம்ப ஓவர்....

தமிழன்... said...

கலக்கல்...:)

தமிழன்... said...

இந்தப்பதிவுக்கு பலபேரு நகைச்சுவையா பதில் எழுதி இருந்தாங்க நீங்கதான் சிரிச்சுக்கிட்டே எழுதி இருக்கிறிங்க ரொம்ப சிரிச்சிருக்கிறிங்க போல...;)

தமிழன்... said...

நானும் பதிவை சிரிச்சுக்கிட்டே படிச்சேன் செமையா கலாய்க்கறிங்க கேள்வி கேக்குறவங்களையும் சினிமாவையும்...:)

ஸ்ரீமதி said...

@ சிம்பா
////"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
நான்
பைத்தியமாகலாமடி...!! //


மதி நான் பதிவ பத்தி எழுத வரல.. ஆனா சைடுல இருக்க சின்ன சின்ன பொக்கிசத்துல ஒன்ன சும்மானாச்சிக்கு சுட்டு நானே எழுதினதுன்னு ஒருத்தர் கிட்ட சொன்னேன். கடைசீ வரை நம்பல.

ஏன் நா அது ஒன்னு ஒன்னும் அவளோ நல்லா இருக்கு. அதனால உண்மைய சொல்லிடு வந்தேன். அவங்க நல்லா இருக்குன்னு சொல்ல சொன்னாங்க.//

ம்ம்ம்ம் நன்றி அண்ணா..!! :)) அவங்களுக்கு நீங்க இதவிட நல்ல கவிதையா எழுதி குடுத்துடுங்க.. ஓகே?? :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////கடைசியா வந்ததும் இல்லாம ரிப்பீட்டப் பாரு ச்சின்னப் புள்ளத்தனமா..!! ;))))//

:))))

இனி சீக்கிரம் வரேன்.. ஓகே??//

ம்ம்ம் சரி நான் உன்ன நம்பறேன்.. ஓகே?? :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
நான்
பைத்தியமாகலாமடி...!!//

இது அழகு..:)

நான் சொல்லனும்னு நெனச்சேன். சிம்பா முந்திக்கொண்டார்..//

:))நன்றி சரவணா..!! :)))

ஸ்ரீமதி said...

@ Gowri Shankar
//அது என்ன 'குசேலன்-2' வந்தா நாடு தாங்காது? இதெல்லாம் ரொம்ப ஓவர்....//

ஓஓ இது தான் ஓவரா?? நான் என்னமோ கிரிக்கெட்-ல ஆறு பால் போட்டுட்டு சொல்லுவாங்களே அது தான் ஓவர்ன்னு நினைச்சேன்..!! ;)) Jokes apart நான் இங்க ரஜினி பத்தி சொல்லல.. அந்த டைரக்டர் பத்தி தான் சொன்னேன். ஒரு நல்ல படத்த எப்படி கெடுக்கறதுன்னு அவர் கிட்ட தான் கத்துக்கணும். அந்த டைரக்டர் பத்தி நான் சொன்னதுக்கா நீங்க கோவிச்சிக்கிட்டீங்க?? :((

ஸ்ரீமதி said...

@ தமிழன்...
//கலக்கல்...:)//

நன்றி அண்ணா...!! :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்...
//இந்தப்பதிவுக்கு பலபேரு நகைச்சுவையா பதில் எழுதி இருந்தாங்க நீங்கதான் சிரிச்சுக்கிட்டே எழுதி இருக்கிறிங்க ரொம்ப சிரிச்சிருக்கிறிங்க போல...;)//

ஆமாம் அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்...
//நானும் பதிவை சிரிச்சுக்கிட்டே படிச்சேன் செமையா கலாய்க்கறிங்க கேள்வி கேக்குறவங்களையும் சினிமாவையும்...:)//

அண்ணா கேள்வி கேட்கறவங்கள கலாய்க்கல..:( அண்ணா நிஜமாவே சினிமா பத்தின என் அறிவு அவ்ளோதான்.. படம் பாத்தோமா வந்தோமான்னு இருப்பேன்.. மத்தபடி பார்த்த படத்தப் பத்தி கருத்துக்கூட சொல்லத் தெரியாது.. அதுதான் உண்மை.. :) சினிமாவ, சினிமாவா மட்டுமே பார்ப்பவள் அவ்ளோதான்..!! :))

தாரணி பிரியா said...

சீரியஸா இருந்த கேள்விகளுக்கு கூட சிரிக்கற மாதிரி பதில் சொல்லியிருக்கிங்க. நல்லாயிருக்குங்க ஸ்ரீமதி

ஸ்ரீமதி said...

@ தாரணி பிரியா
//சீரியஸா இருந்த கேள்விகளுக்கு கூட சிரிக்கற மாதிரி பதில் சொல்லியிருக்கிங்க. நல்லாயிருக்குங்க ஸ்ரீமதி//

ரொம்ப நன்றி அக்கா..!! :))

Subash said...

கலக்கலான பதில்கள்
:)))))))))

ஸ்ரீமதி said...

@ Subash
//கலக்கலான பதில்கள்
:)))))))))//

ஹை தேங்க்ஸ் அண்ணா..!! :))))

பொடியன்-|-SanJai said...

என்னை இந்தத் தொடருக்காக அழைத்த "மீ த ராப் " "பெரியக்கா மலேசியா மாரியாத்தா மைஃப்ரண்ட் " என் பாசமலர் "பின்னவீணத்துவ சுனாமி ஸ்ரீமதி " ஆகியோருக்கு கொலைவெறியுடன் ஆளுக்கு ஒரு நன்றி ):):)
http://podian.blogspot.com/2008/11/blog-post.html

ஸ்ரீமதி said...

@ பொடியன்-|-SanJai

பார்த்து, படிச்சு, கமெண்ட் போட்டுட்டேங்ணா... :)))))

முரளிகண்ணன் said...

True answers.

template very nice

ஸ்ரீமதி said...

@ முரளிகண்ணன்
//True answers.

template very nice//

Thank you anna.. :)))

ஆ! இதழ்கள் said...

பேசாம ரோஸ் செத்துருக்கலாம் அவனுக்கு பதிலா... ஹி ஹி ஹி...!! ;)))//


யென்னா.......... வில்லத்தனம்?

நச்சுனு இருக்கு உங்க பதில்களெல்லாம்

ஸ்ரீமதி said...

@ ஆ! இதழ்கள்
//பேசாம ரோஸ் செத்துருக்கலாம் அவனுக்கு பதிலா... ஹி ஹி ஹி...!! ;)))//


யென்னா.......... வில்லத்தனம்?

நச்சுனு இருக்கு உங்க பதில்களெல்லாம்//

நன்றி முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்.. :)))

cheena (சீனா) said...

150 மறுமொழிகளா - கேள்வி பதில் தொடர் இடுகைக்கா ??

நான் படிச்சாலும் நோ மறு மொழி

நல்வாழ்த்துகள் ஸ்ரீமதி

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது