ஐம்பதாவது பதிவு+அண்ணாவுக்காக... (குட்டிக்கதை)+ ஒரு மணத்தேடல்

நினைவுதெரிந்த இந்த இரண்டு வருடத்தில் இவன் இப்படி உட்கார்ந்திருந்து பார்ப்பது இரண்டாம் முறை. ஆனாலும் இன்று கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. கொஞ்சம் என்ன நிறையவே அழுகை கோபம் ஆதங்கம் வேறு இன்னும் என்னென்னவோ கலந்திருந்த அந்த முகத்தைப் பார்க்கவே எனக்கு பாவமாகவும் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஏனெனில் இப்படி பட்ட சமயத்தில் அவனிடம் சென்று அடிவாங்கிய அனுபவம் எனக்குண்டு. எனக்கு எதுவும் புரியாத இந்த நிகழ்வை வாயில் விரல் போட்டபடி பார்த்துக்கொண்டிருந்தேன். அம்மா அவனை என்னென்னவோ சொல்லி சமாதானப்படுத்த முயன்று முகமது கஜினியானாள். ஒவ்வொரு பெட்டியையும் அவள் கொண்டுவந்து வைக்கும்போதும் அவனின் அழுகையின் வீரியம் அதிகமானதை என்னால் உணர முடிந்தது.


ஒருவேளை அப்பா அண்ணாவை விடுதியில் சேர்க்கப் போகிறாரோ?? அண்ணா படிக்கப்படுத்துவான். அதனால், அப்பா அடிக்கடி சொல்வார் 'இனிமேலும் இப்படி இருந்தால் உன்னை ஹாஸ்டலில் கொண்டு விட்டுவிடுவேன்' என.. அதுபோல் எதுவும்?? இல்லையில்லை அப்படி இருக்காது.. அம்மா நிச்சயம் அதற்கு சம்மதிக்கமாட்டாள். அப்படியானால் இப்பொழுது என்னதான் நடக்கிறது??


அப்பா மீசை அங்கிளோடு பேசிக்கொண்டு வரும் சப்தம் கேட்டது. 'மீசை அங்கிள்' அவர் உண்மையான பெயர் தெரியாது. நாங்கள் முதன்முதலாக அப்பாவுக்கு மாற்றலாகி கொச்சின் வந்ததிலிருந்து எங்களுக்கு உதவியாக இருப்பவர். பெரிய மீசை தான் அவரின் அடையாளம். வழக்கம் போல அரவிந்துக்கு அவரைக் கண்டால் பயம். நன்றாக சிரித்து பேசுவார், என்னைத் தூக்கிக்கொண்டு ஊர் சுற்றுவார். அரவிந்த் அண்ணா மட்டும் அவரிடம் போக மாட்டான். அவரை வைத்து அண்ணாவை பயமுறுத்தி அம்மா சாதம் ஊட்டுவாள்.


இவரின் வருகையால் அண்ணாவின் அழுகை ஓய்ந்தது. வேலை முடிந்து அப்பா வழக்கம் போல இரண்டு சாக்லேட்டோடு வந்தார். அரவிந்த் அண்ணா வாங்கிக்கொள்ளவில்லை. இரவு வரை நடந்த இம்மாதிரி நிகழ்ச்சிகளால் எனக்கு புரிந்தது, அப்பாவுக்கு மறுபடியும் மாற்றலாகி இருக்கிறது. இம்முறை ஹைதராபாத்.


அண்ணாவின் சோகத்திற்கான காரணம் புரிந்தது. புது இடம், புது நண்பர்கள் என கொச்சின் வந்த போது அண்ணா பட்ட அதே கஷ்டம், இப்படி அடுத்த வருடமே மறுபடியும் சந்திப்பான் என அவன் நினைத்திருக்க மாட்டன். எனக்கு இந்த பிரச்சனை இல்லை. இனி தான் பள்ளி சேர போகிறேன். அண்ணா தான் பாவம். அவன் நண்பன் நவீனுக்கு அடுத்தவாரம் பிறந்தநாள் என அழுதுக்கொண்டே தூங்கிப் போனான்.

ஹைதராபாதில் நல்ல ஸ்கூல் அண்ணாவுடையது. ஆனால், தினமும் ஒரு குறையோடு வருவான். தினம் அவன் குறை சொல்ல உச்சரிக்கும் பெயர் ரிஷி. அன்றும் அப்படி தான், "அம்மா நான் ஒன்னும் பண்ணல மா ரிஷி தான் அழிச்சிட்டான்". பயங்கரமாக அழுதான் பார்க்கவே பாவமாக இருந்தது. அம்மா, "என்னடா அழிச்சான்??", அவன் "எங்க ஸ்கூல்ல ம்ம்ம்ம் ஒரு போர்டு இருக்குமா... ம்ம்... அதுல... ம்ம்.... பிரெண்ட்ஸ் நேம் எல்லாம் எழுதலாம் மா.. நான் என் பேர அதுல எழுதினேன் மா... அவனில்ல?? ரிஷி அவன் அழிச்சிட்டான்....ம்ம்ம்... அதனால பாப்பாவ அந்த ஸ்கூல்ல சேக்காத மா... நாம மறுபடியும் நம்ம ஊருக்கே போலாம் மா....!!", அண்ணா அழுவதைப் பார்த்த எனக்கும் அழுகை வந்தது.


"இனிமே அப்படி செய்யமாட்டான்.. கண்ணா... நீ சமத்து தானே?? அழக்கூடாது.. சரியா??"

அண்ணாவின் பயம் என்னையும் தொத்திக்கொண்டது. நல்லவேளை என்னை அண்ணாவின் வகுப்பில், ரிஷியோடு போடவில்லை. அதற்கு நான் சிறியவள் என்றுக் காரணம் சொல்லப்பட்டது. ஆனால் அண்ணா அவனோடு என்னை அழைத்து செல்வதில்லை "நீ கேர்ள்.. நான் பாய்.. நீ உன் பிரெண்டோட போ..." என்றான்.


முதலிலெல்லாம் அவனின் இந்த செய்கை எனக்குள் அழுகையையும், கோவத்தையும் தூண்டிவிட்டது. இப்பொழுது பழகிய ஒன்றாகிப் போனது மதுவால். அவள் அண்ணனும் அப்படி தானாம். நாங்கள் நல்ல நண்பர்களானோம். ஆனால், அண்ணா மட்டும் குறை சொல்வதை நிறுத்தவே இல்லை.


அன்று மது அவள் வீட்டுக்கு என்னை அழைத்திருந்தாள். நாங்கள் தங்கியிருந்த அதே குவார்ட்ரஸில் நான்கு வீடு தள்ளி இருந்தது அவள் வீடு. அம்மா என்னைத் தூக்கிக்கொண்டு போனாள். இப்பொழுதெல்லாம் நானே நடக்கக் கற்றுக்கொண்டேன். ஆனாலும், அம்மா திருப்திக்காக அவளிடம் தொத்திக்கொண்டேன். அண்ணா காலில் கிள்ளிவிட்டான். வலியோடு அழ எத்தனித்தவளை தூக்கிக்கொண்டு, அவன் முதுகில் ஒரு அடி போட்டுவிட்டு வேகமாக அம்மா மது வீடு வந்தடைந்தாள்.

அங்கு மதுவின் அம்மாவும், என் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தனர். நானும், மதுவும், அவன் அண்ணனும் வெளியில் விளையாடிக்கொண்டிருந்தோம். "அம்மா...........!!", கத்தியபடி அண்ணா ஓடி வந்தான். "அப்பா உன்ன வர சொல்றாங்க ம்மா..!!", சொல்லித் திரும்பியவன் என்னை பார்த்து முறைத்துவிட்டு ஓடினான். இன்னுமொரு கிள்ளு நிச்சயம் இன்று எனக்கு உண்டு என நினைத்துக்கொண்டே சென்றேன்.


மறுநாள் என்றும் இல்லாமல் பரவசமாக அண்ணா அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தான். அவன் கையில் ஒரு நோட், அவனுடையது தான், அதைக் காட்டி ஏதோ சொன்னான். என்னிடம் திரும்பியவன் அழகாக முத்தமிட்டான், "இங்க பாத்தியா... என் நோட்ல... இது கார்த்தி..... இது மகி.... இது ரோசி..... இது ரிஷி...... இது அரவிந்த்..... இங்க பார் கீழ ப்ஃரெண்ட்ஸ்..... 3 rd standard, 'B' section-ன்னு போட்ருக்கு...!!", அவன் சொன்ன எல்லாமே அந்த நோட்டில் கிறுக்கலாக எழுதப்பட்டிருந்தது.


"உனக்கு இப்ப மது ப்ஃரெண்ட்... எனக்கு இப்ப அவ அண்ணா ரிஷி ப்ஃரெண்ட்...!!". அண்ணாவின் சந்தோஷம் என்னையும் தொத்திக்கொண்டது. இப்பொழுதெல்லாம் அவன் என்னை அதிகம் அடிப்பதில்லை. அவனுடன் சேர்ந்துதான் பள்ளிக்கு செல்கிறேன். மதுவும் தான்.

888888888888888888888888888888888888888888888888888

ஹாய்.......!! உங்க எல்லாருக்கும் தெரியும் இது என்னோட ஐம்பதாவது பதிவு. நான் இந்த வலையுலகத்துக்கு வந்து உருப்படியா என்ன செஞ்சேன்னுத் தெரியல... ஆனா நிறைய நல்ல உள்ளங்கள சம்பாதிச்சிருக்கேன்.. அதுவே பெரிய விஷயமா நினைக்கிறேன். நான் இங்க (வலையுலகத்துக்கு) வர முடிவு பண்ணதுக்கு, வந்ததுக்கு, இப்ப இங்க நான் இருக்கறதுக்குன்னு எல்லாத்துக்கும் என் அண்ணாஸ் மற்றும் அக்காஸ் தான் காரணம் அதுக்கு நன்றி சொல்லிக்கிறேன். ஆனா நான் இத ஆரம்பிச்சதுக்கு இல்ல இத ஆரம்பி அப்படின்னு சொன்னது என் அண்ணா. ஆனா, அவன் சொன்னப்ப நான் ஆரம்பிக்கல. (நமக்கு தான் அவன் பேச்சைக் கேட்டு பழக்கமே இல்லையே..!! ;))


அதுக்கு ரெண்டு காரணம் உண்டு.. ஒன்னு எனக்கு வேலை இருந்தது (அப்ப இப்ப இல்லையான்னு கேட்கக் கூடாது..!!;)). ரெண்டு என்ன எழுதரதுன்னுத் தெரியல. அதுக்கும் என் அண்ணாவே ஐடியா சொன்னான் "என்ன பத்தி எழுத்துடி"-ன்னு..பாத்தீங்களா..?? இப்படிலாம் உங்கள கொடுமைப்படுத்தக் கூடாதுன்னு தான் நான் அவன் சொன்னப்ப ஆரம்பிக்கல...

ஆனாலும் அவன் சொன்ன இன்னொரு விஷயம் (கடைசியா சொல்றேன்) அதுக்காக தான் நான் இப்ப அவனப் பத்தி சொல்றேன்.ஆனா நான் இதை ஆரம்பிச்சதும் அவன் என்கிட்டே அவனப் பத்தி ஒரு பதிவு போட சொன்னான். நானும் தலையாட்டிட்டேன், நாக்கு ச்சீ வாக்குக் கொடுத்துட்டேன். ஆனா இதுவரைக்கும் அவனப் பத்தி அதிகம் எழுதல... சோ இந்தப் பதிவு அவனுக்கு மற்றும் என் அண்ணா அக்கா எல்லாருக்கும் சமர்ப்பணம்...!!


ஏற்கனவே பதிவு நீளமா போச்சு.. இதுல எங்க 21 வருஷ நட்பு, பந்தம் இதப் பத்தி சொல்லனும்னா இந்தப் பதிவு போதாது... அப்பறம் ஆயில்யன் அண்ணா என்ன ஆனாலும் சரின்னு கதார்லேர்ந்து என்ன அடிக்க வந்துடுவாரு.. சோ எங்க அண்ணன பத்தி சுருக்கமா சொல்லனும்னா.. "மாதா பிதா குரு (மணிரத்னம் படம் இல்ல) தெய்வம்"-ன்னு சொல்லுவாங்க.. இதுல மாதவன் எனக்கு எல்லாத்துக்கும் மேல... (நோ அழக்கூடாது..;))..!! ஏன்னு காரணத்தையும் சொல்லிடுறேன்.. என் அம்மாவுக்கு நான் ஒழுங்கா சாப்ட்டா போதும், என் அப்பாவுக்கு நான் ஒழுங்கா படிச்சா போதும், இது ரெண்டையுமே நான் ஓரளவுக்கு செய்யறதுனால என்ன அவ்ளோவா ஒன்னும் சொல்லமாட்டாங்க. அதனால என் அண்ணா தான் நான் என்னப் பண்ணனும், எப்படி இருக்கணும், எத்தன மணிக்கு எழுந்திருக்கனும்கறதுல இருந்து எல்லாத்தையும் கவனிக்கறது..!! இப்ப சொல்லுங்க அவன் எல்லாத்துக்கும் மேல தானே?? அதுக்காக நாங்க பாசமலர்ன்னு சொல்லமாட்டோம்.. காலைல எழுந்ததுல இருந்து ராத்திரி தூங்க போற வரைக்கும் எங்க சண்டைய தீர்த்து வைக்க ஒரு நாட்டாம வேணும்...!! :))ஓகே இப்போதைக்கு அவ்ளோதான் அவனப் பத்தி..!! :-)) அந்த விஷயம் கடைசியா சொல்றேன்னு சொன்னேனே... அது வேற ஒன்னும் இல்லைங்க நான் ப்ளாக் ஆரம்பிச்சா அதுல அவன் போட்டோ போட்டு, அவனுக்கொரு பொண்ணுப் பார்த்துத் தரணுமாம்.. வேறவழி இல்ல வாக்குக் கொடுத்துட்டேன்.. :-( சரி கீழ அவன் போட்டோ இருக்கு பார்த்து பொண்ணுக் கொடுங்க..!! :-)


சின்னப் பையனா இருக்கானேன்னு பார்க்காதீங்க... இது அவன் ஒரு வயசுல எடுத்தது...!! இப்ப அவனுக்கு 23 வயசு சிங்காரவேலன்-ல சின்ன வயசு போட்டோவ வெச்சி கமல் குஷ்புவ கண்டுபிடிச்ச மாதிரி கண்டுபிடிங்க...!! ;-) பை.....!!

-அன்புடன்,
ஸ்ரீமதி.

144 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

தமிழ் பிரியன் said...

மீ த பர்ஸ்ட்

தமிழ் பிரியன் said...

இது குட்டிக் கதையா? ஆயில்யன் அண்ணே! நீங்க இதையெல்லாம் கேக்குறது இல்லையா?

தமிழ் பிரியன் said...

ம்ம்ம்... 50 க்கு வாழ்த்துக்கள் தங்காச்சி!

Vanthana said...

வெகு சீக்கிரமே நூறாவது பதிவு போட வாழ்த்துக்கள்

தமிழ் பிரியன் said...

உண்மையைப் படிச்சேன்.. நல்லா இருக்கு... அண்ணனுக்கு பொண்னு பார்ப்பதற்கு முன்னாடி என்னோட தங்காச்சி ஒன்னுக்கு பையன் பார்க்கனும் உதவ முடியுமா? எனக்கும் நாக்கு...ச்சீ.. வாக்கு கொடுங்க... ;)

ஆயில்யன் said...

அம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் :)

ஆயில்யன் said...

/அதனால என் அண்ணா தான் நான் என்னப் பண்ணனும், எப்படி இருக்கணும், எத்தன மணிக்கு எழுந்திருக்கனும்கறதுல இருந்து எல்லாத்தையும் கவனிக்கறது..!! இப்ப சொல்லுங்க ///


அண்ணன் இல்லம்மா அண்ணன் இல்ல!

தெய்வம்!

(உன்னையெல்லாம் வைச்சு சமாளிக்கறாருல்ல!)

ஆயில்யன் said...

//நினைவுதெரிந்த இந்த இரண்டு வருடத்தில்//

ஹேய்ய்ய்ய்ய்!

ஆர் யூ ஜோக்கிங்க்!!!!!

சரி நான் உன்னோட தமிழ் பிழை திருத்தி தர்றேன்!

//நினைவு தெளிந்த இந்த இரண்டு வருடத்தில்!//

இப்படித்தான் இருக்கணும்!

அசோக்.எஸ்.குமார் said...

வாழ்த்துக்கள்..

விஜய் ஆனந்த் said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!!

:-)))..

ஆயில்யன் said...

நான் பத்து போடலாம்ன்னு வந்தேன் ஏற்கனவே விஜய் அண்ணாச்சி வந்து போட்டாச்சா????
:(

ஆயில்யன் said...
This comment has been removed by the author.
ஆயில்யன் said...

/ஏனெனில் இப்படி பட்ட சமயத்தில் அவனிடம் சென்று அடிவாங்கிய அனுபவம் எனக்குண்டு ///

ஒரு மனுசன் ஃபீலிங்க்ஸ்ல இருக்கும்போது மூஞ்சியை வந்து பார்த்துக்கிட்டே இருந்தா அதுவும் கிட்டத்தில? பார்த்துக்கிட்டு நின்னா....!? நானெல்லாம் மிதிச்சு துவம்சம் பண்ணிடுவேன்!

ஆயில்யன் said...

//எனக்கு எதுவும் புரியாத இந்த நிகழ்வை வாயில் விரல் போட்டபடி பார்த்துக்கொண்டிருந்தேன்///

அம்புட்டு அடியையும் வாங்கிக்கிட்டு பாவம்தாங்க இந்த புள்ள :(

ஆயில்யன் said...

//. அம்மா என்னைத் தூக்கிக்கொண்டு போனாள். இப்பொழுதெல்லாம் நானே நடக்கக் கற்றுக்கொண்டேன். //

அடடே வெரிகுட்!

ஆயில்யன் said...

//888888888888888888888888888888888888888888888888888///

ஆபிஸ்ல உக்காந்துக்கிட்டு அவசரவசரமா பிளாக்கு போடறது நல்லா தெரியுது!

குடுகுடுப்பை said...

நான் நல்லா இருக்கேன்னு சொல்லிட்டு போக வந்தேன். மத்தபடி எனக்கு கல்யாணம் ஆச்சு. எனக்கு யாரும் பொண்ணு பாக்கவேண்டாம்.

ஆயில்யன் said...

//நான் இத ஆரம்பிச்சதுக்கு இல்ல இத ஆரம்பி அப்படின்னு சொன்னது என் அண்ணா. ///

ஆஹா இங்கதான் அண்ணா வில்லன் கேரக்டர் பண்ணியிருக்காருப்போல.....!!!!
:)))

தமிழ் வலைப்பதிவர்கள் அவுருக்கு ஏதோ துரோகம் செஞ்சுப்புட்டாங்க போல :)))

ஆயில்யன் said...

//ஏற்கனவே பதிவு நீளமா போச்சு///

இல்லியே அதான் தெளிவா சொல்லியிருக்கீங்களே குட்டி கதைன்னு!

ஆயில்யன் said...

//அப்பறம் ஆயில்யன் அண்ணா என்ன ஆனாலும் சரின்னு கதார்லேர்ந்து என்ன அடிக்க வந்துடுவாரு.. ///

ஆஹா அம்பதாவது பதிவுல எனக்கு ஆப்பா?
நானெல்லாம் வில்லன் ரோல் பண்ணதே கிடையாதே எதுக்கு இம்புட்டு பில்ட் அப் கொடுத்து வில்லனா மாத்தியிருக்கு???? :((

ஆயில்யன் said...

//அதுல அவன் போட்டோ போட்டு, அவனுக்கொரு பொண்ணுப் பார்த்துத் தரணுமாம்.. //

சரி நெக்ஸ்ட் மெயில்ல நானும் என்போட்டோவை அனுப்புறேன்!
(என்னது இது மேட்ரிமோனியல் பிளாக்கா???)

ஆயில்யன் said...

//இது அவன் ஒரு வயசுல எடுத்தது...!!//

ஏன் அவர மறு வயசுல போட்டோவே எடுக்கலையா?
ஐ திங்க் வீட்டுக்குள்ளயே வைச்சு வளர்க்குறீங்க போல !!!!

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
இது குட்டிக் கதையா? ஆயில்யன் அண்ணே! நீங்க இதையெல்லாம் கேக்குறது இல்லையா?
//

அதான் குட்டி கதைன்னு சொல்லிட்டாங்கள்ல அப்புறம் என்னாத்தை கேக்குறது??/?

ஆயில்யன் said...

//ஆயில்யன் said...
அம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் :)
//

ஒரு தபா ரிப்பிட்டிக்கிறேன் :))

ஆயில்யன் said...

ஹ்ய்ய்ய் நான் 25 :))

ஆயில்யன் said...

//குடுகுடுப்பை said...
நான் நல்லா இருக்கேன்னு சொல்லிட்டு போக வந்தேன். மத்தபடி எனக்கு கல்யாணம் ஆச்சு. எனக்கு யாரும் பொண்ணு பாக்கவேண்டாம்.
//

எம்புட்டு நல்ல மனசுக்காரரு பாருங்க!

நல்லா இருங்க அண்ணாச்சி!

இனியவள் புனிதா said...

என்னுடைய வாழ்த்துகளும் தங்களின்
50வது பதிவுக்கு... :-)

குடுகுடுப்பை said...

//இப்ப அவனுக்கு 23 வயசு //

அதெப்படி உங்க அண்ணன்களுக்கெல்லாம் உன்னைவிட வயசு கம்மியா இருக்கு

ஆயில்யன் said...

//குடுகுடுப்பை said...
//இப்ப அவனுக்கு 23 வயசு //

அதெப்படி உங்க அண்ணன்களுக்கெல்லாம் உன்னைவிட வயசு கம்மியா இருக்கு
//

அது அப்படித்தான்!

அந்த அண்ணன் கொஞ்சம் பெரியவரு!

என்னிய மாதிரி இல்ல :)))

ஆயில்யன் said...

ஹய்ய்யா வந்த நேரம் முப்பது போட்டுட்டு போலாம் போல :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//மீ த பர்ஸ்ட்//

என் ஐம்பதாவது பதிவிலும் 'மீ த பர்ஸ்ட்' போட்ட தமிழ் பிரியன் அண்ணாவை இந்த சேவையைத் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்..!! ;))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//இது குட்டிக் கதையா? ஆயில்யன் அண்ணே! நீங்க இதையெல்லாம் கேக்குறது இல்லையா?//

அவர் கதை படிப்பாரு தெரியும்.. ஆனா கதை கேட்பாரா?? இது எனக்குத் தெரியாதே..!! ;))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//ம்ம்ம்... 50 க்கு வாழ்த்துக்கள் தங்காச்சி!//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ Vanthana
//வெகு சீக்கிரமே நூறாவது பதிவு போட வாழ்த்துக்கள்//

தாங்க்ஸ் டியர்..!! :))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//உண்மையைப் படிச்சேன்.. நல்லா இருக்கு... அண்ணனுக்கு பொண்னு பார்ப்பதற்கு முன்னாடி என்னோட தங்காச்சி ஒன்னுக்கு பையன் பார்க்கனும் உதவ முடியுமா? எனக்கும் நாக்கு...ச்சீ.. வாக்கு கொடுங்க... ;)//

சாரி உங்க தங்கைக்கு நீங்க தான் பையன் பார்க்கணும்.. அதுக்கெல்லாம் நான் உதவ முடியாது..!! ;))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//அம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் :)//

நன்றி அண்ணா..!! :)))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
///அதனால என் அண்ணா தான் நான் என்னப் பண்ணனும், எப்படி இருக்கணும், எத்தன மணிக்கு எழுந்திருக்கனும்கறதுல இருந்து எல்லாத்தையும் கவனிக்கறது..!! இப்ப சொல்லுங்க ///

அண்ணன் இல்லம்மா அண்ணன் இல்ல!

தெய்வம்!
(உன்னையெல்லாம் வைச்சு சமாளிக்கறாருல்ல!)//

அதான் எல்லாத்துக்கும் மேலன்னு சொல்லியாச்சில்ல.. அப்பறம் என்ன புதுசா கண்டுபிடிச்சு சொல்ற மாதிரி தெய்வம்னு சொல்றது ச்சின்னப் புள்ளத் தனமா..!! ;)))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////நினைவுதெரிந்த இந்த இரண்டு வருடத்தில்//

ஹேய்ய்ய்ய்ய்!

ஆர் யூ ஜோக்கிங்க்!!!!!

சரி நான் உன்னோட தமிழ் பிழை திருத்தி தர்றேன்!

//நினைவு தெளிந்த இந்த இரண்டு வருடத்தில்!//

இப்படித்தான் இருக்கணும்!//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....!! ;))))

ஸ்ரீமதி said...

@ அசோக்.எஸ்.குமார்
//வாழ்த்துக்கள்..//

நன்றி முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்..!! :)))))

ஸ்ரீமதி said...

@ விஜய் ஆனந்த்
//ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!!

:-)))..//

நன்றி அண்ணா..!! :))

பொடியன்-|-SanJai said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. தலைப்பை பார்த்ததும் எனக்கு தான் பொண்ணு பாக்கறேன்னு நெனைச்சி ஓடோடி வந்த என்னை ஏமாற்றிவிட்டாயே ஸ்ரீ.. அந்த பொடிப்பயல் மாதவனுக்கு இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்? இன்னும் பெரிய அண்ணனுக்கே ஆகலையே.. :(

நிஜமா நல்லவன் said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!!

நிஜமா நல்லவன் said...
This comment has been removed by the author.
ஜி said...

50வது பதிவுக்கு என்னுடைய வாழ்த்துகளும்.... :))

ஸாவரியா said...

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் :)

சிம்பா said...

congrats for your great work. a right page in a right time.

கோபிநாத் said...

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஸ்ரீமதி ;)

\\இன்னுமொரு கிள்ளு நிச்சயம் இன்று எனக்கு உண்டு என நினைத்துக்கொண்டே சென்றேன்.
\\

உங்களுக்கு கிள்ளா!! நமக்கு எல்லாம் தலையில் குட்டு தான்..அக்காவிடம் இருந்து ;)

ஸாவரியா said...

Srimathy,...

yenna appidiyee un baalya kaalathukku kootittu poittama...kootittu poitta

Time machine irundha anupi vaimma..

I'm still in Hyderabad,..u know (Namma Major Sundarrajan stylil padikkavam :) )

Divyapriya said...

கதை அருமை ஸ்ரீ...
அத விட கீழ நீங்க போட்டிருக்கற description சூப்பர்...
நல்லா சிரிச்சேன் ;) உங்க அண்ணன புகழ்ற மாதிரி புகழ்ந்து நல்லா வாரியும் விட்டிடீங்க :))

சொல்ல மறந்துட்டனே, அம்பதாவது பதிவுக்கு என்னோட வாழ்த்துக்கள்...

Ramya Ramani said...

வாழ்த்துக்கள் ஸ்ரீமதி :)

அனுஜன்யா said...

ஸ்ரீ,

அதற்குள்ளே ஐம்பதா? அட்டகாசம். இங்க வலையில் இத்தனை அண்ணன்களால உன் ஒருத்திய சமாளிப்பது பெரும் பாடாக இருக்கு. நீ எப்பிடிடா மாதவா செஞ்ச! என்னமோ போடா! வாழ்த்துக்கள் ஸ்ரீ. உன் எழுத்துக்கள் மேலும் மிளிரத் துவங்கிவிட்டன. நிறைய எழுது. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

gayathri said...

அதுக்காக நாங்க பாசமலர்ன்னு சொல்லமாட்டோம்.. காலைல எழுந்ததுல இருந்து ராத்திரி தூங்க போற வரைக்கும் எங்க சண்டைய தீர்த்து வைக்க ஒரு நாட்டாம வேணும்...!! :))

நான் ஃப்ரியா தான் இருக்கேன்.

நான் srimathy க்கு நாட்டாமயா இருக்கேன் எனக்கு எல்லாரும் ஓட்டு potunga ok.

AMIRDHAVARSHINI AMMA said...

வாழ்த்துக்கள்

ஐம்பதாவது பதிவிற்கு.

(நோ அழக்கூடாது..;))..!!

சாரி அழாம இருக்கமுடியல.

ஆயில்யன் தயவு செய்து வாங்க. (டிக்கெட் செலவு அதப்பத்தியெல்லாம் கவலைப்ப்டாதீங்க ப்ளீஸ் எப்படியாவது வாங்க)

ஜீவன் said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் தங்கச்சி !(தங்கச்சின்னு சொன்னாலே கண்ணு கலங்குது இந்த விசயத்துல நான் டி . ராஜேந்தர் மாதிரி )

"Its my world" said...

50 வது பாதிவுகு வாழ்த்துக்கள் ஸ்ரீ :))))


இன்னுமொரு கிள்ளு நிச்சயம் இன்று எனக்கு உண்டு என நினைத்துக்கொண்டே சென்றேன். ;-)

"இங்க பாத்தியா... என் நோட்ல... இது கார்த்தி..... இது மகி.... இது ரோசி..... இது ரிஷி...... இது அரவிந்த்..... இங்க பார் கீழ ப்ஃரெண்ட்ஸ்..... 3 rd standard, 'B' section-ன்னு போட்ருக்கு...!!", அவன் சொன்ன எல்லாமே அந்த நோட்டில் கிறுக்கலாக எழுதப்பட்டிருந்தது.......நல்ல இருக்கு ஸ்ரீ... என்னகு இந்த வரிகள் படிச்சா வுடன் என்னோட ஸ்கூல் நயபகம் வந்துடுச்சு :)))))))

ஹ ஹ ஹாஆஆஆ உங்க அண்ணா கு நல்ல தனன் பொண்ணு பாக்குறீங்க போங்க!!!!!!! :-) ;-)))))))))))

Vishnu... said...

ஐம்பதாவது பதிவு மிக அருமை தங்கையே ...அதி விரைவில் உன் நூறாவது பதிவை எதிர் நோக்கி ..

அன்புடன்
அண்ணன் ..

நாணல் said...

:)) முதலில் என் வாழ்துக்கள் ஸ்ரீ... :)

நாணல் said...

பெரிய மனசு ஸ்ரீ உங்களுக்கு, சரி நீங்க இப்படி பதிவுல வரன் தேடுற விஷயம் அண்ணாவுக்கு தெரியுமா... ;)

வெண்பூ said...

ஐம்பதிற்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்..

முகுந்தன் said...

ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் !!!

முகுந்தன் said...

அண்ணனுக்கு பொண்ணு தேடறதே உங்க லைன் சீக்கரம் கிளியர் ஆகனும்னு தானே ? எனக்கு மட்டும் சொல்லுங்க ஸ்ரீமதி..

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//நான் பத்து போடலாம்ன்னு வந்தேன் ஏற்கனவே விஜய் அண்ணாச்சி வந்து போட்டாச்சா????
:(//

:)))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
///ஏனெனில் இப்படி பட்ட சமயத்தில் அவனிடம் சென்று அடிவாங்கிய அனுபவம் எனக்குண்டு ///

ஒரு மனுசன் ஃபீலிங்க்ஸ்ல இருக்கும்போது மூஞ்சியை வந்து பார்த்துக்கிட்டே இருந்தா அதுவும் கிட்டத்தில? பார்த்துக்கிட்டு நின்னா....!? நானெல்லாம் மிதிச்சு துவம்சம் பண்ணிடுவேன்!//

:))))))))ஏன் இந்த கொலைவெறி?? :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////எனக்கு எதுவும் புரியாத இந்த நிகழ்வை வாயில் விரல் போட்டபடி பார்த்துக்கொண்டிருந்தேன்///

அம்புட்டு அடியையும் வாங்கிக்கிட்டு பாவம்தாங்க இந்த புள்ள :(//

ம்ம்ம்ம்ம் பாவம் தானே நான்..!! ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////. அம்மா என்னைத் தூக்கிக்கொண்டு போனாள். இப்பொழுதெல்லாம் நானே நடக்கக் கற்றுக்கொண்டேன். //

அடடே வெரிகுட்!//

தாங்க்ஸ் அண்ணா..!! ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////888888888888888888888888888888888888888888888888888///

ஆபிஸ்ல உக்காந்துக்கிட்டு அவசரவசரமா பிளாக்கு போடறது நல்லா தெரியுது!//

இதுல போயி உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?? அது சும்மா ஒரு டிசைன்காக போட்டது... யு நோ?? ;))

ஸ்ரீமதி said...

@ குடுகுடுப்பை
//நான் நல்லா இருக்கேன்னு சொல்லிட்டு போக வந்தேன். மத்தபடி எனக்கு கல்யாணம் ஆச்சு. எனக்கு யாரும் பொண்ணு பாக்கவேண்டாம்.//

ஓ நீங்க இங்க தான் இருக்கீங்களா?? அண்ணி உங்கள அங்க தேடிட்டு இருக்காங்க... மணத்தேடல்ன்னு எங்கயாவது போட்ருந்தா.. உடனே வரதா?? இன்னைக்கு ம்ம்மாட்டிகிட்டீங்க அண்ணிகிட்ட..!! ;))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////நான் இத ஆரம்பிச்சதுக்கு இல்ல இத ஆரம்பி அப்படின்னு சொன்னது என் அண்ணா. ///

ஆஹா இங்கதான் அண்ணா வில்லன் கேரக்டர் பண்ணியிருக்காருப்போல.....!!!!
:)))

தமிழ் வலைப்பதிவர்கள் அவுருக்கு ஏதோ துரோகம் செஞ்சுப்புட்டாங்க போல :)))//

ச்சே பாவம் அவனுக்கு தமிழ்மணம் பத்தியெல்லாம் ஒண்ணுமே தெரியாது..!! :)) அவன நான் தொல்ல பண்ணாம இருக்க இப்படி ஒரு ஐடியா குடுத்தான்னு நினைக்கிறேன்..!! :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////ஏற்கனவே பதிவு நீளமா போச்சு///

இல்லியே அதான் தெளிவா சொல்லியிருக்கீங்களே குட்டி கதைன்னு!//

:))))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////அப்பறம் ஆயில்யன் அண்ணா என்ன ஆனாலும் சரின்னு கதார்லேர்ந்து என்ன அடிக்க வந்துடுவாரு.. ///

ஆஹா அம்பதாவது பதிவுல எனக்கு ஆப்பா?
நானெல்லாம் வில்லன் ரோல் பண்ணதே கிடையாதே எதுக்கு இம்புட்டு பில்ட் அப் கொடுத்து வில்லனா மாத்தியிருக்கு???? :((//

என்ன அண்ணா நீங்க தானே ஆசையா கேட்டீங்க.. வில்லன் ரோல் நான் பண்ணதே இல்லன்னு அதான்..;)) இனிமே உங்களுக்கு எப்பவும் போலவே தாத்தா இல்ல அண்ணன் ரோல் குடுக்கறேன்... ஓகே..?? ;)))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////அதுல அவன் போட்டோ போட்டு, அவனுக்கொரு பொண்ணுப் பார்த்துத் தரணுமாம்.. //

சரி நெக்ஸ்ட் மெயில்ல நானும் என்போட்டோவை அனுப்புறேன்!
(என்னது இது மேட்ரிமோனியல் பிளாக்கா???)//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..!! அல்ரெடி கலயாணம் ஆனவங்களுக்கெல்லாம் பொண்ணு பார்த்து தர முடியாது..!! ;))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////இது அவன் ஒரு வயசுல எடுத்தது...!!//

ஏன் அவர மறு வயசுல போட்டோவே எடுக்கலையா?
ஐ திங்க் வீட்டுக்குள்ளயே வைச்சு வளர்க்குறீங்க போல !!!!//

ஹை கரெக்டா கண்டுப்பிடிச்சிட்டீங்களே..!! ;)) கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....!! :))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////தமிழ் பிரியன் said...
இது குட்டிக் கதையா? ஆயில்யன் அண்ணே! நீங்க இதையெல்லாம் கேக்குறது இல்லையா?
//

அதான் குட்டி கதைன்னு சொல்லிட்டாங்கள்ல அப்புறம் என்னாத்தை கேக்குறது??/?//

என்ன அண்ணா ரொம்ப நொந்துபோயிட்டீங்களா?? ;)) சரி அடுத்த முறை நிஜம்மாவே குட்டிக் கதை எழுதறேன். ஓகே?? ;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////ஆயில்யன் said...
அம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் :)
//

ஒரு தபா ரிப்பிட்டிக்கிறேன் :))//

நன்றி அண்ணா..!! :)))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//ஹ்ய்ய்ய் நான் 25 :))//

:)))))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////குடுகுடுப்பை said...
நான் நல்லா இருக்கேன்னு சொல்லிட்டு போக வந்தேன். மத்தபடி எனக்கு கல்யாணம் ஆச்சு. எனக்கு யாரும் பொண்ணு பாக்கவேண்டாம்.
//

எம்புட்டு நல்ல மனசுக்காரரு பாருங்க!

நல்லா இருங்க அண்ணாச்சி!//

:))))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//என்னுடைய வாழ்த்துகளும் தங்களின்
50வது பதிவுக்கு... :-)//

நன்றி அக்கா..!! :)))))))

ஸ்ரீமதி said...

@ குடுகுடுப்பை
////இப்ப அவனுக்கு 23 வயசு //

அதெப்படி உங்க அண்ணன்களுக்கெல்லாம் உன்னைவிட வயசு கம்மியா இருக்கு//

என் அண்ணங்க எல்லாம் நிறைய பொய் சொல்லுவாங்க அதனால..!! ;)))))))(இதிலிருந்து பொய் சொன்னா வயசு குறையாது..!!;))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////குடுகுடுப்பை said...
//இப்ப அவனுக்கு 23 வயசு //

அதெப்படி உங்க அண்ணன்களுக்கெல்லாம் உன்னைவிட வயசு கம்மியா இருக்கு
//

அது அப்படித்தான்!

அந்த அண்ணன் கொஞ்சம் பெரியவரு!

என்னிய மாதிரி இல்ல :)))//

:))))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
//ஹய்ய்யா வந்த நேரம் முப்பது போட்டுட்டு போலாம் போல :))//

:)))))))

ஸ்ரீமதி said...

@ பொடியன்-|-SanJai
//கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. தலைப்பை பார்த்ததும் எனக்கு தான் பொண்ணு பாக்கறேன்னு நெனைச்சி ஓடோடி வந்த என்னை ஏமாற்றிவிட்டாயே ஸ்ரீ.. அந்த பொடிப்பயல் மாதவனுக்கு இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்? இன்னும் பெரிய அண்ணனுக்கே ஆகலையே.. :(//

பெரிய அண்ணனுக்கு பொறுப்பு ஜாஸ்தி.. சோ நோ கல்யாணம்.. வானத்தை போல விஜயகாந்த் மாதிரி..!! ;)))) (யாரு பெரிய அண்ணனா?? நம்ம பொடியன் அண்ணா தான்..!! :P)

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
//ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!!//

நன்றி அண்ணா..!! :))))

ஸ்ரீமதி said...

@ ஜி
//50வது பதிவுக்கு என்னுடைய வாழ்த்துகளும்.... :))//

நன்றி அண்ணா..!! :))))

ஸ்ரீமதி said...

@ ஸாவரியா
//50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் :)//

நன்றி ஸாவரியா..!! :))))

ஸ்ரீமதி said...

@ சிம்பா
//congrats for your great work. a right page in a right time.//

Thank you very much anna..!! :))

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஸ்ரீமதி ;)//

நன்றி அண்ணா...!! :)))))

//\\இன்னுமொரு கிள்ளு நிச்சயம் இன்று எனக்கு உண்டு என நினைத்துக்கொண்டே சென்றேன்.
\\

உங்களுக்கு கிள்ளா!! நமக்கு எல்லாம் தலையில் குட்டு தான்..அக்காவிடம் இருந்து ;)//

:))))))

ஸ்ரீமதி said...

@ ஸாவரியா
//Srimathy,...

yenna appidiyee un baalya kaalathukku kootittu poittama...kootittu poitta

Time machine irundha anupi vaimma..

I'm still in Hyderabad,..u know (Namma Major Sundarrajan stylil padikkavam :) )//

:)))))நன்றி ஸாவரியா..!! :))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//கதை அருமை ஸ்ரீ...
அத விட கீழ நீங்க போட்டிருக்கற description சூப்பர்...
நல்லா சிரிச்சேன் ;) உங்க அண்ணன புகழ்ற மாதிரி புகழ்ந்து நல்லா வாரியும் விட்டிடீங்க :))

சொல்ல மறந்துட்டனே, அம்பதாவது பதிவுக்கு என்னோட வாழ்த்துக்கள்...//

ரொம்ப நன்றி அக்கா வாழ்த்துகளுக்கு..!! :)))))))))

ஸ்ரீமதி said...

@ Ramya Ramani
//வாழ்த்துக்கள் ஸ்ரீமதி :)//

நன்றி ரம்யா..!! :))))

ஸ்ரீமதி said...

@ அனுஜன்யா
//ஸ்ரீ,

அதற்குள்ளே ஐம்பதா? அட்டகாசம். இங்க வலையில் இத்தனை அண்ணன்களால உன் ஒருத்திய சமாளிப்பது பெரும் பாடாக இருக்கு. நீ எப்பிடிடா மாதவா செஞ்ச! என்னமோ போடா! வாழ்த்துக்கள் ஸ்ரீ. உன் எழுத்துக்கள் மேலும் மிளிரத் துவங்கிவிட்டன. நிறைய எழுது. வாழ்த்துக்கள்.//

நன்றி அண்ணா வாழ்த்துக்கு..!! :))) அவன் எங்க என்ன சமாளிக்கறான்?? எங்க ரெண்டு பேரையும் சேர்த்து அக்கா தான் சமாளிக்கறா..;) இன்பாக்ட் அவ தான் பாவம்..!! :))))

ஸ்ரீமதி said...

@ gayathri
//அதுக்காக நாங்க பாசமலர்ன்னு சொல்லமாட்டோம்.. காலைல எழுந்ததுல இருந்து ராத்திரி தூங்க போற வரைக்கும் எங்க சண்டைய தீர்த்து வைக்க ஒரு நாட்டாம வேணும்...!! :))

நான் ஃப்ரியா தான் இருக்கேன்.

நான் srimathy க்கு நாட்டாமயா இருக்கேன் எனக்கு எல்லாரும் ஓட்டு potunga ok.//

அல்ரெடி என் அக்கா அந்த வேலை தான் பண்றா... இஃப் யூ டோன்ட் மைண்ட்.. யூ கேன் ஜாயின் வித் ஹர்..!! ;)))

ஸ்ரீமதி said...

@ AMIRDHAVARSHINI AMMA
//வாழ்த்துக்கள்

ஐம்பதாவது பதிவிற்கு.//

நன்றி அம்மா..!! :)))

//(நோ அழக்கூடாது..;))..!!

சாரி அழாம இருக்கமுடியல.

ஆயில்யன் தயவு செய்து வாங்க. (டிக்கெட் செலவு அதப்பத்தியெல்லாம் கவலைப்ப்டாதீங்க ப்ளீஸ் எப்படியாவது வாங்க)//

ஆமா எல்லா செலவையும் அம்மா ஏத்துப்பாங்க.. நீங்க வந்துட்டு போங்க அண்ணா..!! ;)))

ஸ்ரீமதி said...

@ ஜீவன்
//ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் தங்கச்சி !//

நன்றி அண்ணா..!! :))))

//(தங்கச்சின்னு சொன்னாலே கண்ணு கலங்குது இந்த விசயத்துல நான் டி . ராஜேந்தர் மாதிரி )//

எல்லா அண்ணாவுமே கிட்டத்தட்ட இங்க விசயத்துல ஒன்னு தான் அண்ணா..!! :))பட் நோ க்ரையிங்.. ஓகே?? ;))

ஸ்ரீமதி said...

@ "Its my world"
//50 வது பாதிவுகு வாழ்த்துக்கள் ஸ்ரீ :))))//

ஹை நன்றி பவானி..!! :))


//இன்னுமொரு கிள்ளு நிச்சயம் இன்று எனக்கு உண்டு என நினைத்துக்கொண்டே சென்றேன். ;-)

"இங்க பாத்தியா... என் நோட்ல... இது கார்த்தி..... இது மகி.... இது ரோசி..... இது ரிஷி...... இது அரவிந்த்..... இங்க பார் கீழ ப்ஃரெண்ட்ஸ்..... 3 rd standard, 'B' section-ன்னு போட்ருக்கு...!!", அவன் சொன்ன எல்லாமே அந்த நோட்டில் கிறுக்கலாக எழுதப்பட்டிருந்தது.......நல்ல இருக்கு ஸ்ரீ... என்னகு இந்த வரிகள் படிச்சா வுடன் என்னோட ஸ்கூல் நயபகம் வந்துடுச்சு :)))))))//

அச்சச்சோ அப்படியா?? தேங்க்ஸ் பவானி..!! :)))))))

//ஹ ஹ ஹாஆஆஆ உங்க அண்ணா கு நல்ல தனன் பொண்ணு பாக்குறீங்க போங்க!!!!!!! :-) ;-)))))))))))//

பின்ன நாம தானே பொறுப்பு?? ;))))

ஸ்ரீமதி said...

@ Vishnu...
//ஐம்பதாவது பதிவு மிக அருமை தங்கையே ...அதி விரைவில் உன் நூறாவது பதிவை எதிர் நோக்கி ..

அன்புடன்
அண்ணன் ..//

நன்றி அண்ணா வருகைக்கும், வாழ்த்துக்கும்..!! :)))))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//:)) முதலில் என் வாழ்துக்கள் ஸ்ரீ... :)//

ஹை நன்றி அக்கா..!! :)) (முதலில் வாழ்த்துன்னா.. அடுத்தது வாரி விட போறீங்கன்னு அர்த்தமா?? ;))))))))

பொடியன்-|-SanJai said...

ஆபிஸ்ல வேலை எல்லாம் பாக்கற பழக்கம் உண்டா தங்காச்சி? :(

பொடியன்-|-SanJai said...

உங்க டிஎல் மெயில் ஐடி குடு..

ஸ்ரீமதி said...

@ நாணல்
//பெரிய மனசு ஸ்ரீ உங்களுக்கு, சரி நீங்க இப்படி பதிவுல வரன் தேடுற விஷயம் அண்ணாவுக்கு தெரியுமா... ;)//

ஹி ஹி ஹி இந்த சேவைய நாங்க காலேஜ் படிக்கும் போதே ஆரம்பிச்சாச்சு..!! சோ அவன் எதுக்கும் தயாரா தான் இருக்கான்..!! ;))) இது அவனுக்கு தெரியாது..!! :))))

பொடியன்-|-SanJai said...

100

பொடியன்-|-SanJai said...

100 அடிச்சாச்சி.. வர்ட்டா? :))

ஸ்ரீமதி said...

@ வெண்பூ
//ஐம்பதிற்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்..//

நன்றி அண்ணா..!! :))))))

ஸ்ரீமதி said...

@ முகுந்தன்
//ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் !!!//

நன்றி அண்ணா..!! :)))))

ஸ்ரீமதி said...

@ முகுந்தன்
//அண்ணனுக்கு பொண்ணு தேடறதே உங்க லைன் சீக்கரம் கிளியர் ஆகனும்னு தானே ? எனக்கு மட்டும் சொல்லுங்க ஸ்ரீமதி..//

ஏன் அண்ணா நீங்க வேற?? அவன் லைன்ல குறுக்க நிக்கறதே நான் தான்னு சொல்றான்..!! :(( ;))

Valai said...

You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to

valaipookkal@gmail.com to get your blog updated in the directory.

Let's show your thoughts to the whole world!

ஸ்ரீமதி said...

@ பொடியன்-|-SanJai
//ஆபிஸ்ல வேலை எல்லாம் பாக்கற பழக்கம் உண்டா தங்காச்சி? :(//

ஏன் அண்ணா உங்கள யாராவது வேல பாருன்னு சொல்லிட்டாங்களா?? இவ்ளோ கவலைப்படற...... ஆமா எனக்குத் தெரிஞ்சி ஆப்பீஸ்ல வேல பார்ப்பாங்க...... இதெல்லாம் சகஜம்... அதுக்கா சோகமா இருக்க?? ;))))))))

ஸ்ரீமதி said...

@ பொடியன்-|-SanJai
//உங்க டிஎல் மெயில் ஐடி குடு..//

ஓய் பெத்தராயுடு.... ஒய் திஸ் மர்டர் வெறி?? :(

ஸ்ரீமதி said...

@ பொடியன்-|-SanJai
//100 அடிச்சாச்சி.. வர்ட்டா? :))//

இதுக்கு தான் சண்ட போட்டியா?? ;)))))))

AMIRDHAVARSHINI AMMA said...

No. No.

டிக்கெட் செலவு முழுவதும் அந்த போட்டோவில் இருப்பவர் பார்த்துக்கொள்வார்

உதைக்கும் வேலை மட்டுமே உங்களுடையது.

பார்க்கும் வேலை எங்களுடையது.

ஸ்ரீமதி said...

@ AMIRDHAVARSHINI AMMA
//No. No.

டிக்கெட் செலவு முழுவதும் அந்த போட்டோவில் இருப்பவர் பார்த்துக்கொள்வார்

உதைக்கும் வேலை மட்டுமே உங்களுடையது.

பார்க்கும் வேலை எங்களுடையது.//

ம்ம்ம்ம்ம்ம் ஆசை, தோசை, அப்பளம், வடை.. ஆயில்ஸ் அண்ணா நீங்க அங்கேயே இருங்க..!! :P

Thena said...

Hey, it was nice..n congratuations on ur 50th blog.. :)

ஸ்ரீமதி said...

@ Thena
//Hey, it was nice..n congratuations on ur 50th blog.. :)//

Thank you very much Thena..!! :))

Subash said...

தங்கைக்கு 50ற்கு வாழ்த்துக்கள்
வீட்டிற்கு போய் முழுதாக வாசித்து சொல்றேன்!!!
:)

ஸ்ரீமதி said...

@ Subash
//தங்கைக்கு 50ற்கு வாழ்த்துக்கள்
வீட்டிற்கு போய் முழுதாக வாசித்து சொல்றேன்!!!:)//

நன்றி அண்ணா..!! :))

சுரேகா.. said...

50 வது பதிவுக்கு போஸ்டர் ஒட்டப்படுகிறது...

ஐ....115

சுரேகா.. said...

உங்க அண்ணாவுக்கு இன்னும் பொண்ணு
பொறக்கலையேம்மா...!

என்ன பண்றது....!???

Saravana Kumar MSK said...

அதற்குள் ஐம்பது பதிவு ஆகிவிட்டதா?? செம ஸ்பீடு.

வாழ்த்துக்கள் Sri.

Saravana Kumar MSK said...

உன்னுடைய முதல் பதிவுக்கும், இப்போதைய பதிவுகளின் எழுத்துக்கும் நல்ல வளர்ச்சி..

இன்னும் நிறைய எழுது.

படிக்க ஆவலாய் இருக்கிறேன்.. :))

Saravana Kumar MSK said...

//ஸ்ரீமதி said...
@ முகுந்தன்
//அண்ணனுக்கு பொண்ணு தேடறதே உங்க லைன் சீக்கரம் கிளியர் ஆகனும்னு தானே ? எனக்கு மட்டும் சொல்லுங்க ஸ்ரீமதி..//

ஏன் அண்ணா நீங்க வேற?? அவன் லைன்ல குறுக்க நிக்கறதே நான் தான்னு சொல்றான்..!! :(( ;))//

எப்படியும் அண்ணனுக்கு முன், உனக்கு கல்யாணம் என்பதனால் தானே அண்ணனுக்கு வரன் தேடுகிறாய்??

[அப்பாடா.. கொளுத்தி போட்டாச்சி..]

Saravana Kumar MSK said...

கதை மிக அழகு.. குழந்தை பருவ நிகழ்வுகளை அழகாக எழுதி இருக்க..
ரொம்ப நல்லா இருக்கு..
கலக்கல் Sri.
:)))

ஸ்ரீமதி said...

@ சுரேகா..
//50 வது பதிவுக்கு போஸ்டர் ஒட்டப்படுகிறது...

ஐ....115//

ஹை நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ சுரேகா..
//உங்க அண்ணாவுக்கு இன்னும் பொண்ணு
பொறக்கலையேம்மா...!

என்ன பண்றது....!???//

அச்சச்சோ அப்ப அவனுக்கு கல்யாணமாக இன்னும் 21 வருஷம் ஆகுமா?? :(
(ஒரு டவுட் எங்க அண்ணாவுக்கு பொண்ணு பொறக்கலியா?? இல்ல என் அண்ணாவுக்கான பொண்ணு பொறக்கலியா??)

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//அதற்குள் ஐம்பது பதிவு ஆகிவிட்டதா?? செம ஸ்பீடு.

வாழ்த்துக்கள் Sri.//

ஏன் சரவணா லேட்?? :(((
வாழ்த்துக்கு நன்றி..!! :))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//உன்னுடைய முதல் பதிவுக்கும், இப்போதைய பதிவுகளின் எழுத்துக்கும் நல்ல வளர்ச்சி..

இன்னும் நிறைய எழுது.

படிக்க ஆவலாய் இருக்கிறேன்.. :))//

ம்ம்ம்ம்ம் எழுதறேன் சரவணா..!! :)) (வேறவழி இல்ல நீ படிச்சிதான் ஆகணும்..!! ;))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////ஸ்ரீமதி said...
@ முகுந்தன்
//அண்ணனுக்கு பொண்ணு தேடறதே உங்க லைன் சீக்கரம் கிளியர் ஆகனும்னு தானே ? எனக்கு மட்டும் சொல்லுங்க ஸ்ரீமதி..//

ஏன் அண்ணா நீங்க வேற?? அவன் லைன்ல குறுக்க நிக்கறதே நான் தான்னு சொல்றான்..!! :(( ;))//

எப்படியும் அண்ணனுக்கு முன், உனக்கு கல்யாணம் என்பதனால் தானே அண்ணனுக்கு வரன் தேடுகிறாய்??

[அப்பாடா.. கொளுத்தி போட்டாச்சி..]//

அடப்பாவி... அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல..!! :)) இப்படி கவுத்துட்டியே சரவணா..!! :((((

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//கதை மிக அழகு.. குழந்தை பருவ நிகழ்வுகளை அழகாக எழுதி இருக்க..
ரொம்ப நல்லா இருக்கு..
கலக்கல் Sri.:)))//

ஹை நன்றி..!! :))

Saravana Kumar MSK said...

//ஏன் சரவணா லேட்?? :(((//
கடந்த நாலைந்து நாட்களாக ஊரில் இல்லை.. அவுட் ஆப் ஸ்டேஷன்.


//அடப்பாவி... அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல..!! :)) இப்படி கவுத்துட்டியே சரவணா..!! :((((//
ஏதோ என்னாலே முடிஞ்சது.. ;)

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////ஏன் சரவணா லேட்?? :(((//
கடந்த நாலைந்து நாட்களாக ஊரில் இல்லை.. அவுட் ஆப் ஸ்டேஷன்.//

ஓ அப்ப சரி..!! :))

////அடப்பாவி... அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல..!! :)) இப்படி கவுத்துட்டியே சரவணா..!! :((((//
ஏதோ என்னாலே முடிஞ்சது.. ;)//

கிர்ர்ர்ர்ர்ர்ர்...!! :))

வீரசுந்தர் said...

//சிங்காரவேலன்-ல சின்ன வயசு போட்டோவ வெச்சி கமல் குஷ்புவ கண்டுபிடிச்ச மாதிரி கண்டுபிடிங்க...!!//

அண்ணனோட இமெயில் ஐடி எதுவும் கிடைக்குமா.. உடனே கண்டுபிடிச்சுச் சொல்லிடறேன். :)

Valaipookkal said...

You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to valaipookkal@gmail.com to get your blog updated in the directory.

Let's show your thoughts to the whole world!

ஸ்ரீ said...

Vaaazthukkal ma :)

gayathri said...

hai sister srimathy wish u haappy vijaya dasame.

gayathri said...

hai friend ஆயில்யன் wish u happy vijaya dasame

gayathri said...

hai saravana wiah u happy vijaya dasame

மோகன் said...

ஸ்ரீமதி...
50வது பதிவுக்கு வாழ்த்துகள்...இதுதான் முதல்முறை உங்கள் பதிவுகளைப் படிப்பது...முழுதும் படித்துப் பார்க்கிறேன்...

ஸ்ரீமதி said...

@ வீரசுந்தர்
////சிங்காரவேலன்-ல சின்ன வயசு போட்டோவ வெச்சி கமல் குஷ்புவ கண்டுபிடிச்ச மாதிரி கண்டுபிடிங்க...!!//

அண்ணனோட இமெயில் ஐடி எதுவும் கிடைக்குமா.. உடனே கண்டுபிடிச்சுச் சொல்லிடறேன். :)//

ஹி ஹி ஹி எனக்கு எங்க அண்ணன தெரியும்.. உங்களுக்கு தான் அந்த டெஸ்ட்.. என்கிட்டயே ஐடி கேட்கறீங்களா?? ஆச தோச அப்பளம் வட..!! ;)))

ஸ்ரீமதி said...

@ ஸ்ரீ
//Vaaazthukkal ma :)//

நன்றி அண்ணா..!! :))

ஸ்ரீமதி said...

@ gayathri
//hai sister srimathy wish u haappy vijaya dasame.//

Thank you and wish you the same akka..!! :)))

ஸ்ரீமதி said...

@ gayathri
//hai friend ஆயில்யன் wish u happy vijaya dasame//

//hai saravana wiah u happy vijaya dasame//

:)))))

ஸ்ரீமதி said...

@ மோகன்
//ஸ்ரீமதி...
50வது பதிவுக்கு வாழ்த்துகள்...//

நன்றி அண்ணா..!! :))

//இதுதான் முதல்முறை உங்கள் பதிவுகளைப் படிப்பது...முழுதும் படித்துப் பார்க்கிறேன்...//

படிச்சு பார்த்துட்டு ஒன்னும் ஆகலைன்னா.. மறக்காம பின்னூட்டம் போடுங்க..!! ;)))))))))

anbudan vaalu said...

this is the first time i'm reading your blog and i simply love it.........itz marvellous.....very good writing style.........

keep it up....

ஸ்ரீமதி said...

@ anbudan vaalu
//this is the first time i'm reading your blog and i simply love it.........itz marvellous.....very good writing style.........

keep it up....//

Thank you very much for sharing ur thoughts with me...!! :)))

Maddy said...

ஐயோ அண்ணன்மேல இவ்ளோ பாசம் வச்சிருக்கிற பொண்ணையும், தங்கையே பாசத்தில உருக வைக்கிற அண்ணனையும் பார்க்க பொறாமை யா இருக்கு!! எப்போவும் நீங்க இப்படியே இருக்கனும்ன்னு வாழ்த்துக்கள்

ஸ்ரீமதி said...

@ Maddy
//ஐயோ அண்ணன்மேல இவ்ளோ பாசம் வச்சிருக்கிற பொண்ணையும், தங்கையே பாசத்தில உருக வைக்கிற அண்ணனையும் பார்க்க பொறாமை யா இருக்கு!! எப்போவும் நீங்க இப்படியே இருக்கனும்ன்னு வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி அண்ணா :)))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது