காதல் திருத்தம்-3


வார்த்தைகளால்
வடிவமைக்கப்படாத
காதல் ஒன்று
வெட்கம் பூசி
அலைந்தது
*****

காதல் தான் எவ்வளவு அழகான பைத்தியக்காரத்தனம்... இது போன்ற சில பைத்தியக்காரத் தனங்களால் தான் வாழ்க்கையே அழகாகிறது. காதலைக் கடக்காதவர் எவருமே இல்லை. "நான் கடக்கவில்லை", என சொல்பவன் காதல் அவன் வாழ்க்கையில் குறுக்கிட்டதைக்கூட அறியாத அப்பாவி அல்லது பொய் சொல்கிறான் என்று அர்த்தம் என எங்கேயோ படித்த ஞாபகம். இன்று அதுப் போன்றதொரு திசையை நோக்கித் தான் இருவருமே பயணித்தனர் என்கிற ரகசியம் இதுவரை அவர்களுக்கு ரகசியமாகவே இருந்தது.

"இப்படி பேசாமலே வந்தா தூக்கம் தான் வரும்... ஏதாவது சொல்லு..!!".

"என்ன சொல்ல..??".

"ம்ம்ம்.... உனக்கு பிடிச்சது, பிடிக்காதது என்னென்ன??".

"ஏன்?? அதெல்லாம் தெரிஞ்சு நீ என்ன பண்ணப் போற??".

"சரி விடு....!! நான் பேசல..!!".

"ஹே.. நான் சும்மா சொன்னேன்.. எனக்கு பிடிச்சது ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...!!"

"'ம்ம்ம்' தான் உனக்கு பிடிக்குமா??"

"ஹய்யோ நான் யோசிக்கறேன்....".

"பிடிச்சத சொல்ல ஏன் யோசிக்கணும்??"

"பிடிச்சத சொல்ல யோசிக்கல... பிடிச்சது என்னன்னு யோசிக்கிறேன்...!!"

"நீ இப்படியே யோசிச்சுகிட்டே இரு.... நான் தூங்கறேன்...!!".

"ஓய் தூங்கினா நீ தோத்ததா அர்த்தம்....".

"என்னது ஓய்யா??".

"ம்ம்ம் ஓய்... ஏன்??"

"ஒன்னும் இல்ல... நீ சொல்றது நல்லா இருந்தது.. அதான் கேட்டேன்..!!".

"இதுல நல்லா இருக்க என்ன இருக்கு??".

"சரி அத விடு... எனக்கு கிரிக்கெட், செஸ், கேரம் இப்படி கேம்ஸ் பிடிக்கும்.. உனக்கு...??"

"எனக்கு கவிதை எழுத, படிக்க, யோசிக்க பிடிக்கும்..!!"

"வாவ்...!! அப்ப நீ நல்லா கவிதை எழுதுவன்னு சொல்லு...!!".

"கவிதை எழுதுவேன்... நல்லா எழுதுவனான்னு தெரியாது..!!"

"ம்ம்ம் அப்ப எனக்கொரு கவிதை சொல்லேன்...!!"

"இப்படி திடீர்ன்னு கேட்டா... எப்படி சொல்றது??"

"சரி நான் ஊருக்கு போனதும் ஒரு லெட்டர் போடறேன்... அப்பறம் சொல்லு...ஓகேவா??"

"ம்ம்ம் சரி..!!"

"என்னது சரியா?? சரி தான்..!!".

அதன்பின் பாரதியாரும், பாரதிதாசன்களும் அவனுக்கும்.. சச்சினும் விசுவநாதன் ஆனந்தும் இவளுக்கும் விரும்பப்படும், விவாதிக்கப்படும் பொருட்களாயினர் வேற்றுமை எல்லாம் தற்காலிக ஒற்றுமையாகியிருந்தது.
"ம்ம்ம் அப்பறம் சொல்லு...!!"


"இன்னும் என்ன சொல்ல?? என்னை இப்படி கேள்வி கேட்டுகிட்டே இருந்தா கோவம் வரும்..!!"

"பார்த்தா அப்படி தெரியலியே...!!"

"பாத்தா தெரிய.. அது என்ன வாத்தா?? கோழியா?? அச்சச்சோ அது சாதாரண ஜோக் தான்.. அதுக்கேன் இப்படி சிரிக்கற??"

"அப்படியா..?? ஒருவேள நீ சொன்னதால அப்படி தெரிஞ்சதோ என்னமோ.. ".

அந்த இரவு சீக்கிரம் விடிந்ததாகவே இருவரும் உணர்ந்தனர். அவள் வாழ்க்கை புத்தகத்தின் அடிக்கோடிட்டு படிக்க வேண்டிய வரிகளில் எல்லாம் அருணே முதலும், முடிவும் ஆனான். இப்படியும் இன்னும் சில சின்ன சின்ன சண்டைகளோடும் அந்த பத்துநாள் சுற்றுலா இனிமையாக கழிந்தது. இப்பொழுதெல்லாம் அவனில்லாத வெற்று நிமிடங்களை எல்லாம் கொட்டி சிலையாக்க முயன்றால் , அது கடலோர மணல் வீடாகிக் கரைந்தது. அடுத்துவந்த நாட்களும் அவர்களுக்கு சாதகமாகவே அமைந்தது. சாதாரணமாக ஆண் பெண் பேசினாலே அது காதலைப் பற்றியதாகத் தான் இருக்கும் என நேற்று வரை நினைத்த அவளுக்கு அவன் பேச்சு பெருத்த ஏமாற்றத்தை தந்ததே அவன் மீது காதல் கொள்ளச் செய்தது.

"வசு நீ எங்க வீட்டு கொலுவுல பாடின பாட்டு நல்லா இருந்தது..!!"

"என்னப் பாட்டு??"

"ம்ம்ம் கண்ட நாள் முதலாய்-ன்னு பாடினியே..!!"

"ஓஓ அதுவா?? "கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடா'"

"கண்டதும் காதல்ல உனக்கு நம்பிக்கை இருக்கா??".

"ம்ஹும் இல்ல..!!"

"ஓ... ஓகே.. ஓகே.. நான் கேட்ட கவிதை என்ன ஆச்சு ??"

"நாளைக்கு நிச்சயமா கவிதையோட வரேன்.. ஓகே??"

"ம்ம்ம் ஓகே..!!"

காலை எழுந்தவள் கவிதையோடு மட்டுமல்ல, காதலோடும் எழுந்தாள் என அவள் கவிதை அவளுக்கு உணர்த்தியது. எழுந்ததும் மனதில் நினைத்ததை வார்த்தைகளாய் வடித்து வைத்தாள். குளித்து வந்தவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது அவளின் கவிதை உருவில்,.


வார்த்தைகள்

இல்லா மொழி

'காதல்'

அதை வாசிக்கக்

கற்றுத் தந்தவன்

நீ..!!

அவசர அவசரமாக எழுதியதை மறைத்து வைத்தாள். அடுத்த அதிர்ச்சி காத்திருப்பது தெரியாமல்...

-திருத்தங்கள் தொடரும்...

காதல் திருத்தம்-4

காதல் திருத்தம்-5

காதல் திருத்தம்-6

-அன்புடன்,
ஸ்ரீமதி.

130 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

இனியவள் புனிதா said...

மீ த 1sr!!!

இனியவள் புனிதா said...

இன்னமும் படிக்கல..அப்புறம் வரேன்...கவிதை சூப்பர்!!!

நாணல் said...

me the third.. :)

நாணல் said...

// "நான் கடக்கவில்லை", என சொல்பவன் காதல் அவன் வாழ்க்கையில் குறுக்கிட்டதைக்கூட அறியாத அப்பாவி அல்லது பொய் சொல்கிறான் என்று அர்த்தம் என எங்கேயோ படித்த ஞாபகம்.//

நாட்டுல பல ஜீவனுங்க இப்படி தான் அலையுதுன்னு நினைக்கறேன்... :)

நாணல் said...

//பாத்தா தெரிய.. அது என்ன வாத்தா?? கோழியா?? அச்சச்சோ அது சாதாரண ஜோக் தான்.. அதுக்கேன் இப்படி சிரிக்கற??"
"அப்படியா..?? ஒருவேள நீ சொன்னதால அப்படி தெரிஞ்சதோ என்னமோ.. ". //

புதுசா இருந்தது... நான் நல்லா சிரிச்சேன்.. :)

நாணல் said...

//அவனில்லாத வெற்று நிமிடங்களை எல்லாம் கொட்டி சிலையாக்க முயன்றால் , அது கடலோர மணல் வீடாகிக் கரைந்தது. //

இதுவும் புதுசா அழகாவும் இருக்கு...
எப்படி ஸ்ரீ இப்படி எல்லாம் எழுத முடியுது... :)

நாணல் said...

//வார்த்தைகள்
இல்லா மொழி
'காதல்'
அதை வாசிக்கக்
கற்றுத் தந்தவன்
நீ..!! //

:) நல்லா இருக்கு...

நாணல் said...

//அவசர அவசரமாக எழுதியதை மறைத்து வைத்தாள். அடுத்த அதிர்ச்சி காத்திருப்பது தெரியாமல்... //

நிச்சயம் இன்ப அதிர்ச்சியா தான் இருக்கும் என நம்புகிறேன்...

AMIRDHAVARSHINI AMMA said...

"கவிதை எழுதுவேன்... நல்லா எழுதுவனான்னு தெரியாது..!!""ம்ம்ம் அப்ப எனக்கொரு கவிதை சொல்லேன்...!!""இப்படி திடீர்ன்னு கேட்டா... எப்படி சொல்றது??"


ம்ம் என்னத்த சொல்ல

வேற்றுமை எல்லாம் தற்காலிக ஒற்றுமையாகியிருந்தது.
ஆகத்தான் வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே ,,,, காண்பதே.,, பதே... தே..

அவள் வாழ்க்கை புத்தகத்தின் அடிக்கோடிட்டு படிக்க வேண்டிய வரிகளில் எல்லாம் அருணே முதலும், முடிவும் ஆனான் - NICE

இப்பொழுதெல்லாம் அவனில்லாத வெற்று நிமிடங்களை எல்லாம் கொட்டி சிலையாக்க முயன்றால் , அது கடலோர மணல் வீடாகிக் கரைந்தது. - NICE

காலை எழுந்தவள் கவிதையோடு மட்டுமல்ல, காதலோடும் எழுந்தாள் என அவள் கவிதை அவளுக்கு உணர்த்தியது. எழுந்ததும் மனதில் நினைத்ததை வார்த்தைகளாய் வடித்து வைத்தாள். குளித்து வந்தவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது அவளின் கவிதை உருவில்,.
வார்த்தைகள்
இல்லா மொழி
'காதல்'
அதை வாசிக்கக்
கற்றுத் தந்தவன்
நீ..!!
இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்.

வார்த்தைகளால்
வடிவமைக்கப்படாத
காதல் ஒன்று
வெட்கம் பூசி
அலைந்தது
ரொம்ப அழகா இருக்கு.

AMIRDHAVARSHINI AMMA said...

அதிர்ச்சிக்காக காத்திருக்கிறேன்

AMIRDHAVARSHINI AMMA said...

// "நான் கடக்கவில்லை", என சொல்பவன் காதல் அவன் வாழ்க்கையில் குறுக்கிட்டதைக்கூட அறியாத அப்பாவி அல்லது பொய் சொல்கிறான் என்று அர்த்தம் என எங்கேயோ படித்த ஞாபகம்.//

காதலில் பொய் சொல்லலாம், காதலுக்காக பொய் சொல்லலாம். ஆனால் காதலிக்கவே இல்லை என்றும், காதலிக்கபடவே இல்லை என்றும் சொல்வது பொய் ஆகாது. அது பொய்யாக அவர்கள் ஒத்துக்கொண்ட உண்மை.

Saravana Kumar MSK said...

//காதலைக் கடக்காதவர் எவருமே இல்லை. "நான் கடக்கவில்லை", என சொல்பவன் காதல் அவன் வாழ்க்கையில் குறுக்கிட்டதைக்கூட அறியாத அப்பாவி அல்லது பொய் சொல்கிறான் என்று அர்த்தம் என எங்கேயோ படித்த ஞாபகம்.//

அப்படியா..!!

நான் ஒரு அப்பாவியா..??!!!

Saravana Kumar MSK said...

//வார்த்தைகளால்
வடிவமைக்கப்படாத
காதல் ஒன்று
வெட்கம் பூசி
அலைந்தது //

கொன்னுட்ட..
கவிதை.. அழகான கவிதை.. அழகழகான கவிதை.. :)

Saravana Kumar MSK said...

//காதலைக் கடக்காதவர் எவருமே இல்லை. "நான் கடக்கவில்லை", என சொல்பவன் காதல் அவன் வாழ்க்கையில் குறுக்கிட்டதைக்கூட அறியாத அப்பாவி அல்லது பொய் சொல்கிறான் என்று அர்த்தம் என எங்கேயோ படித்த ஞாபகம். //

இது Sri-க்கும் பொருந்துமா..??
[அப்பாடா... இன்னைக்கு தூக்கம் நல்லாவே வரும்..]

Saravana Kumar MSK said...

//வார்த்தைகள்
இல்லா மொழி
'காதல்'
அதை வாசிக்கக்
கற்றுத் தந்தவன்
நீ..!! //

கலக்கல்..

Saravana Kumar MSK said...

//அவசர அவசரமாக எழுதியதை மறைத்து வைத்தாள். அடுத்த அதிர்ச்சி காத்திருப்பது தெரியாமல்... //

இப்படி முடிக்கறதே இந்த தொடர்கதை எழுதரவங்களோட வேலையா போச்சி..

சீக்கிரம்.. இன்று மாலைக்குள் அடுத்தப் பகுதியை போடவும்.. :)))

Saravana Kumar MSK said...

Sri. ஒரு சின்ன விஷயம்.. I Jus wannna to convey that..

இந்த பகுதியின் உரையாடல்கள் எல்லாமுமே நீ எழுதி இருப்பது போல் இருக்கிறது.. அதாவது, Sriயின் உரையாடல்களாய் இருக்கிறது.. வசுமதி, அருண் பாத்திரங்களின் உரையாடல்களாய் இல்லை.. அந்த தொனி, குறும்பு எல்லாமே உன்னுடையதாய் இருக்கிறது..

எங்களோடு நீ பழகிவிட்டதின் காரணமாகவும் இருக்கலாம்.. :)

நிஜமா நல்லவன் said...

/"நான் கடக்கவில்லை", என சொல்பவன் காதல் அவன் வாழ்க்கையில் குறுக்கிட்டதைக்கூட அறியாத அப்பாவி அல்லது பொய் சொல்கிறான் என்று அர்த்தம் என எங்கேயோ படித்த ஞாபகம்./


அச்சச்சோ....நான் அப்பாவியா இருந்திருக்கிறேனே...:)

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//மீ த 1sr!!!//

:)))))

நிஜமா நல்லவன் said...

/வார்த்தைகளால்

வடிவமைக்கப்படாத

காதல் ஒன்று

வெட்கம் பூசி

அலைந்தது /


நல்லா இருக்கே...:)

நிஜமா நல்லவன் said...

/நாணல் said...

//அவசர அவசரமாக எழுதியதை மறைத்து வைத்தாள். அடுத்த அதிர்ச்சி காத்திருப்பது தெரியாமல்... //

நிச்சயம் இன்ப அதிர்ச்சியா தான் இருக்கும் என நம்புகிறேன்.../


ரிப்பீட்டேய்...:)

நிஜமா நல்லவன் said...

/ நாணல் said...

//பாத்தா தெரிய.. அது என்ன வாத்தா?? கோழியா?? அச்சச்சோ அது சாதாரண ஜோக் தான்.. அதுக்கேன் இப்படி சிரிக்கற??"
"அப்படியா..?? ஒருவேள நீ சொன்னதால அப்படி தெரிஞ்சதோ என்னமோ.. ". //

புதுசா இருந்தது... நான் நல்லா சிரிச்சேன்.. :)/


நாணல் அக்கா கொஞ்சம் மெதுவா சிரிங்க.....இங்க வரைக்கும் கேக்குது...:)

நிஜமா நல்லவன் said...

/ Saravana Kumar MSK said...

Sri. ஒரு சின்ன விஷயம்.. I Jus wannna to convey that..

இந்த பகுதியின் உரையாடல்கள் எல்லாமுமே நீ எழுதி இருப்பது போல் இருக்கிறது.. அதாவது, Sriயின் உரையாடல்களாய் இருக்கிறது.. வசுமதி, அருண் பாத்திரங்களின் உரையாடல்களாய் இல்லை.. அந்த தொனி, குறும்பு எல்லாமே உன்னுடையதாய் இருக்கிறது..

எங்களோடு நீ பழகிவிட்டதின் காரணமாகவும் இருக்கலாம்.. :)/


டபுள் ரிப்பீட்டேய்....:))

நாணல் said...

நிஜமா நல்லவன் said...
/ நாணல் said...

//பாத்தா தெரிய.. அது என்ன வாத்தா?? கோழியா?? அச்சச்சோ அது சாதாரண ஜோக் தான்.. அதுக்கேன் இப்படி சிரிக்கற??"
"அப்படியா..?? ஒருவேள நீ சொன்னதால அப்படி தெரிஞ்சதோ என்னமோ.. ". //

புதுசா இருந்தது... நான் நல்லா சிரிச்சேன்.. :)/


நாணல் அக்கா கொஞ்சம் மெதுவா சிரிங்க.....இங்க வரைக்கும் கேக்குது...:)


என்ன அண்ணா இப்படி சொல்லிட்டீங்க... :(

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//இன்னமும் படிக்கல..அப்புறம் வரேன்...கவிதை சூப்பர்!!!//

ஓகே அக்கா... நன்றி..!! :)))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//me the third.. :)//

ம்ம்ம் எப்பப்பாரு விளையாட்டு.. ச்சின்னப் புள்ளத் தனமா..!! ;))))))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//// "நான் கடக்கவில்லை", என சொல்பவன் காதல் அவன் வாழ்க்கையில் குறுக்கிட்டதைக்கூட அறியாத அப்பாவி அல்லது பொய் சொல்கிறான் என்று அர்த்தம் என எங்கேயோ படித்த ஞாபகம்.//

நாட்டுல பல ஜீவனுங்க இப்படி தான் அலையுதுன்னு நினைக்கறேன்... :)//

அதுங்க அலையறது இருக்கட்டும்.. அக்கா எந்த கேட்டகிரின்னு சொல்லாம போனது... ஏனோ?? ;))

ஸ்ரீமதி said...

@ நாணல்
////பாத்தா தெரிய.. அது என்ன வாத்தா?? கோழியா?? அச்சச்சோ அது சாதாரண ஜோக் தான்.. அதுக்கேன் இப்படி சிரிக்கற??"
"அப்படியா..?? ஒருவேள நீ சொன்னதால அப்படி தெரிஞ்சதோ என்னமோ.. ". //

புதுசா இருந்தது... நான் நல்லா சிரிச்சேன்.. :)//

அப்படியா?? நன்றி அக்கா..!! :)))))

ஸ்ரீமதி said...

@ நாணல்
////அவனில்லாத வெற்று நிமிடங்களை எல்லாம் கொட்டி சிலையாக்க முயன்றால் , அது கடலோர மணல் வீடாகிக் கரைந்தது. //

இதுவும் புதுசா அழகாவும் இருக்கு...
எப்படி ஸ்ரீ இப்படி எல்லாம் எழுத முடியுது... :)//

ம்ம்ம்ம் நன்றி அக்கா..!! :)))))

Divyapriya said...

வழக்கம் போல கவித சூப்பர்மா…ரெண்டாவது கவிதை ரொம்ப பிடிச்சது…
ஆனா, கதை தான் கொஞ்சம் சின்னதா, அவ்வளவா நகராத மாதிரி இருந்துச்சு…ஃப்ளாஷ் பேக்கோட, நிகழ் கால கதையும் கொஞ்சம் சொல்லி இருந்தா, இன்னும் விரு விருப்பா இருந்திருக்குங்கறது தான் என்னோட கருத்து…
ஆனா ஒன்னு, உன் முதல் கதையையும், இதையும் பாத்தா, இமாலய வித்யாசம்…அதில் கதை சொல்ல அப்படி ஒரு ஓட்டம், ரொம்ப அவசர அவசரமா சொல்லி முடிச்ச மாதிரி இருந்தது, ஆனா இந்த கதைய பொருமையா ரசிச்சு எழுதியிருக்க, எழுத்த நடை எங்கயோ போய்டுச்சு…வாழ்த்துக்கள்…

ஸ்ரீமதி said...

@ நாணல்
////வார்த்தைகள்
இல்லா மொழி
'காதல்'
அதை வாசிக்கக்
கற்றுத் தந்தவன்
நீ..!! //

:) நல்லா இருக்கு...//

நன்றி அக்கா..!! :)))))))

ஸ்ரீமதி said...

@ நாணல்
////அவசர அவசரமாக எழுதியதை மறைத்து வைத்தாள். அடுத்த அதிர்ச்சி காத்திருப்பது தெரியாமல்... //

நிச்சயம் இன்ப அதிர்ச்சியா தான் இருக்கும் என நம்புகிறேன்...//

ம்ம்ம்ம் நம்பிக்கைய வீணாக்க மாட்டேன்...!! :))))))

ஸ்ரீமதி said...

@ AMIRDHAVARSHINI AMMA
//"கவிதை எழுதுவேன்... நல்லா எழுதுவனான்னு தெரியாது..!!""ம்ம்ம் அப்ப எனக்கொரு கவிதை சொல்லேன்...!!""இப்படி திடீர்ன்னு கேட்டா... எப்படி சொல்றது??"


ம்ம் என்னத்த சொல்ல//

:))))))))

//வேற்றுமை எல்லாம் தற்காலிக ஒற்றுமையாகியிருந்தது.
ஆகத்தான் வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே ,,,, காண்பதே.,, பதே... தே..//

:)))))))))

//அவள் வாழ்க்கை புத்தகத்தின் அடிக்கோடிட்டு படிக்க வேண்டிய வரிகளில் எல்லாம் அருணே முதலும், முடிவும் ஆனான் - NICE//

Thanks akka..!! :))))))

//இப்பொழுதெல்லாம் அவனில்லாத வெற்று நிமிடங்களை எல்லாம் கொட்டி சிலையாக்க முயன்றால் , அது கடலோர மணல் வீடாகிக் கரைந்தது. - NICE//

Thanks akka..!! :))))))

//காலை எழுந்தவள் கவிதையோடு மட்டுமல்ல, காதலோடும் எழுந்தாள் என அவள் கவிதை அவளுக்கு உணர்த்தியது. எழுந்ததும் மனதில் நினைத்ததை வார்த்தைகளாய் வடித்து வைத்தாள். குளித்து வந்தவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது அவளின் கவிதை உருவில்,.
வார்த்தைகள்
இல்லா மொழி
'காதல்'
அதை வாசிக்கக்
கற்றுத் தந்தவன்
நீ..!!
இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்.//

அப்படியா?? ;)))

//வார்த்தைகளால்
வடிவமைக்கப்படாத
காதல் ஒன்று
வெட்கம் பூசி
அலைந்தது
ரொம்ப அழகா இருக்கு.//

நன்றி அக்கா..!! :))

ஆயில்யன் said...

//பிடிச்சத சொல்ல யோசிக்கல... பிடிச்சது என்னன்னு யோசிக்கிறேன்...!!" //


அட! படு கேட்சிங்கா இருக்கே!

டைமிங்க்ல எங்கயாச்சும் யூஸ் பண்ணிக்கிறேன் :)))

ஸ்ரீமதி said...

@ AMIRDHAVARSHINI AMMA
//அதிர்ச்சிக்காக காத்திருக்கிறேன்//

நிச்சயம் தருகிறேன் அக்கா அதிர்ச்சி..!! :)))))

ஸ்ரீமதி said...

@ AMIRDHAVARSHINI AMMA
//// "நான் கடக்கவில்லை", என சொல்பவன் காதல் அவன் வாழ்க்கையில் குறுக்கிட்டதைக்கூட அறியாத அப்பாவி அல்லது பொய் சொல்கிறான் என்று அர்த்தம் என எங்கேயோ படித்த ஞாபகம்.//

காதலில் பொய் சொல்லலாம், காதலுக்காக பொய் சொல்லலாம். ஆனால் காதலிக்கவே இல்லை என்றும், காதலிக்கபடவே இல்லை என்றும் சொல்வது பொய் ஆகாது. அது பொய்யாக அவர்கள் ஒத்துக்கொண்ட உண்மை.//

யக்கா உங்க பதில் செம செம செம சூப்பர்கா...!! :)))))))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////காதலைக் கடக்காதவர் எவருமே இல்லை. "நான் கடக்கவில்லை", என சொல்பவன் காதல் அவன் வாழ்க்கையில் குறுக்கிட்டதைக்கூட அறியாத அப்பாவி அல்லது பொய் சொல்கிறான் என்று அர்த்தம் என எங்கேயோ படித்த ஞாபகம்.//

அப்படியா..!!

நான் ஒரு அப்பாவியா..??!!!//

என்னது நீ அப்பாவியா?????? எல்லாம் கலிகாலம்... ஒன்னும் சொல்றதுக்கில்ல... ;))))))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////வார்த்தைகளால்
வடிவமைக்கப்படாத
காதல் ஒன்று
வெட்கம் பூசி
அலைந்தது //

கொன்னுட்ட..
கவிதை.. அழகான கவிதை.. அழகழகான கவிதை.. :)//

யப்பா என்னப்பா இப்படி ரசிக்கற..?? ஆனா சாமியாரா வரேன்னு சொல்ற.. உன்ன எப்படி நம்பறதுன்னே தெரியல.. ;)))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////காதலைக் கடக்காதவர் எவருமே இல்லை. "நான் கடக்கவில்லை", என சொல்பவன் காதல் அவன் வாழ்க்கையில் குறுக்கிட்டதைக்கூட அறியாத அப்பாவி அல்லது பொய் சொல்கிறான் என்று அர்த்தம் என எங்கேயோ படித்த ஞாபகம். //

இது Sri-க்கும் பொருந்துமா..??
[அப்பாடா... இன்னைக்கு தூக்கம் நல்லாவே வரும்..]//

ம்ஹும் பொருந்தாது.

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////வார்த்தைகள்
இல்லா மொழி
'காதல்'
அதை வாசிக்கக்
கற்றுத் தந்தவன்
நீ..!! //

கலக்கல்..//

நன்றி..!! :))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////அவசர அவசரமாக எழுதியதை மறைத்து வைத்தாள். அடுத்த அதிர்ச்சி காத்திருப்பது தெரியாமல்... //

இப்படி முடிக்கறதே இந்த தொடர்கதை எழுதரவங்களோட வேலையா போச்சி..

சீக்கிரம்.. இன்று மாலைக்குள் அடுத்தப் பகுதியை போடவும்.. :)))//

என்னது இன்னைக்கு மாலைக்குள்லா?? விளையாடறியா?? :))))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//Sri. ஒரு சின்ன விஷயம்.. I Jus wannna to convey that..

இந்த பகுதியின் உரையாடல்கள் எல்லாமுமே நீ எழுதி இருப்பது போல் இருக்கிறது.. அதாவது, Sriயின் உரையாடல்களாய் இருக்கிறது.. வசுமதி, அருண் பாத்திரங்களின் உரையாடல்களாய் இல்லை.. அந்த தொனி, குறும்பு எல்லாமே உன்னுடையதாய் இருக்கிறது..

எங்களோடு நீ பழகிவிட்டதின் காரணமாகவும் இருக்கலாம்.. :)//

ஒருவேள நானே என் குட்டி மூளைய வெச்சு யோசிச்சதால இருக்கலாம் சரவணா... அவங்கலும் என் கதை ஆளுங்க தானே.. சோ என்னை மாதிரி தானே இருப்பாங்க...;)) அது மட்டுமில்ல எனக்கு காதலர்கள் என்ன பேசுவாங்க, எப்படி பேசுவாங்கன்னெல்லாம் தெரியாது.. சோ எனக்கு தோணினத எழுதினேன்.. நல்லா இல்லையா??

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///"நான் கடக்கவில்லை", என சொல்பவன் காதல் அவன் வாழ்க்கையில் குறுக்கிட்டதைக்கூட அறியாத அப்பாவி அல்லது பொய் சொல்கிறான் என்று அர்த்தம் என எங்கேயோ படித்த ஞாபகம்./


அச்சச்சோ....நான் அப்பாவியா இருந்திருக்கிறேனே...:)//

நீங்க அப்பாவின்னு தான் ஊரு உலகத்துக்கே தெரியுமே..!! ;)))))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///வார்த்தைகளால்

வடிவமைக்கப்படாத

காதல் ஒன்று

வெட்கம் பூசி

அலைந்தது /


நல்லா இருக்கே...:)//

நன்றி அண்ணா...!! :)))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
///நாணல் said...

//அவசர அவசரமாக எழுதியதை மறைத்து வைத்தாள். அடுத்த அதிர்ச்சி காத்திருப்பது தெரியாமல்... //

நிச்சயம் இன்ப அதிர்ச்சியா தான் இருக்கும் என நம்புகிறேன்.../


ரிப்பீட்டேய்...:)//

:)))))))))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
/// நாணல் said...

//பாத்தா தெரிய.. அது என்ன வாத்தா?? கோழியா?? அச்சச்சோ அது சாதாரண ஜோக் தான்.. அதுக்கேன் இப்படி சிரிக்கற??"
"அப்படியா..?? ஒருவேள நீ சொன்னதால அப்படி தெரிஞ்சதோ என்னமோ.. ". //

புதுசா இருந்தது... நான் நல்லா சிரிச்சேன்.. :)/


நாணல் அக்கா கொஞ்சம் மெதுவா சிரிங்க.....இங்க வரைக்கும் கேக்குது...:)//

:))))))))

ஸ்ரீமதி said...

@ நிஜமா நல்லவன்
/// Saravana Kumar MSK said...

Sri. ஒரு சின்ன விஷயம்.. I Jus wannna to convey that..

இந்த பகுதியின் உரையாடல்கள் எல்லாமுமே நீ எழுதி இருப்பது போல் இருக்கிறது.. அதாவது, Sriயின் உரையாடல்களாய் இருக்கிறது.. வசுமதி, அருண் பாத்திரங்களின் உரையாடல்களாய் இல்லை.. அந்த தொனி, குறும்பு எல்லாமே உன்னுடையதாய் இருக்கிறது..

எங்களோடு நீ பழகிவிட்டதின் காரணமாகவும் இருக்கலாம்.. :)/


டபுள் ரிப்பீட்டேய்....:))//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!! :)))

ஸ்ரீமதி said...

@ நாணல்
//நிஜமா நல்லவன் said...
/ நாணல் said...

//பாத்தா தெரிய.. அது என்ன வாத்தா?? கோழியா?? அச்சச்சோ அது சாதாரண ஜோக் தான்.. அதுக்கேன் இப்படி சிரிக்கற??"
"அப்படியா..?? ஒருவேள நீ சொன்னதால அப்படி தெரிஞ்சதோ என்னமோ.. ". //

புதுசா இருந்தது... நான் நல்லா சிரிச்சேன்.. :)/


நாணல் அக்கா கொஞ்சம் மெதுவா சிரிங்க.....இங்க வரைக்கும் கேக்குது...:)

என்ன அண்ணா இப்படி சொல்லிட்டீங்க... :(//

அவர் சும்மா சொல்றார் அக்கா...!! :)) Dont worry..!! :))

ஸ்ரீமதி said...

@ Divyapriya
//வழக்கம் போல கவித சூப்பர்மா…ரெண்டாவது கவிதை ரொம்ப பிடிச்சது…
ஆனா, கதை தான் கொஞ்சம் சின்னதா, அவ்வளவா நகராத மாதிரி இருந்துச்சு…ஃப்ளாஷ் பேக்கோட, நிகழ் கால கதையும் கொஞ்சம் சொல்லி இருந்தா, இன்னும் விரு விருப்பா இருந்திருக்குங்கறது தான் என்னோட கருத்து…
ஆனா ஒன்னு, உன் முதல் கதையையும், இதையும் பாத்தா, இமாலய வித்யாசம்…அதில் கதை சொல்ல அப்படி ஒரு ஓட்டம், ரொம்ப அவசர அவசரமா சொல்லி முடிச்ச மாதிரி இருந்தது, ஆனா இந்த கதைய பொருமையா ரசிச்சு எழுதியிருக்க, எழுத்த நடை எங்கயோ போய்டுச்சு…வாழ்த்துக்கள்…//

அக்கா ரொம்ப ரொம்ப நன்றி அக்கா உங்க விரிவான பின்னுட்டத்திற்கு..!! :))))))) கண்டிப்பா நீங்க சொல்ற மாதிரியே கதையை நிகழ்காலத்தொட இணைச்சு கொண்டு போறேன்... :))))) நன்றி அக்கா...!! :)))))

ஸ்ரீமதி said...

@ ஆயில்யன்
////பிடிச்சத சொல்ல யோசிக்கல... பிடிச்சது என்னன்னு யோசிக்கிறேன்...!!" //


அட! படு கேட்சிங்கா இருக்கே!

டைமிங்க்ல எங்கயாச்சும் யூஸ் பண்ணிக்கிறேன் :)))//

ம்ம்ம் ஓகே அண்ணா.. :)) நன்றி..!! :)))))

கோபிநாத் said...

இப்போதைக்கு 51 ;)

ஜி said...

//அச்சச்சோ அது சாதாரண ஜோக் தான்//

intha dialoguelaam ulagaththula oruthtar mattumthaan adikirathaa oorukkulla sollikaraangale.. avungala unakku theriyumaa??

anbudan vaalu said...

nice sree.......:)))

Saravana Kumar MSK said...

//ஜி said...

//அச்சச்சோ அது சாதாரண ஜோக் தான்//

intha dialoguelaam ulagaththula oruthtar mattumthaan adikirathaa oorukkulla sollikaraangale.. avungala unakku theriyumaa??//

எனக்கு நல்லாவே தெரியும் ஜி..

Saravana Kumar MSK said...

//என்னது நீ அப்பாவியா?????? எல்லாம் கலிகாலம்... ஒன்னும் சொல்றதுக்கில்ல... ;))))))))))//

உண்மையா சொன்னா நம்பு.. ஏன் நாங்க எல்லாம் அப்பாவியா இருக்க கூடாதா..!!!
[நான் அப்பாவி என்பதை நிரூபிக்க எவ்ளோ போராட வேண்டி இருக்கு.. ஸ்ஸப்பா.]

//யப்பா என்னப்பா இப்படி ரசிக்கற..?? ஆனா சாமியாரா வரேன்னு சொல்ற.. உன்ன எப்படி நம்பறதுன்னே தெரியல.. ;)))))))//

சாமியாரா வரேன்னு சொன்னது உனக்கு கம்பனி கொடுக்கத்தான்.. அதே நேரத்தில் அழகை ரசிப்பது என் இயல்பு.. And moreover என்னை எப்போதுமே தாராளமா நம்பலாம்.. :))

//ம்ஹும் பொருந்தாது.//

உனக்கு மட்டும் ஏன் பொருந்தாது..?? [ஒரு அப்பாவியின் அப்பாவித்தனமான கேள்வி]

//என்னது இன்னைக்கு மாலைக்குள்லா?? விளையாடறியா?? :))))))))//

சீரியசா சொன்னேன்.. :))

//ஒருவேள நானே என் குட்டி மூளைய வெச்சு யோசிச்சதால இருக்கலாம் சரவணா... அவங்கலும் என் கதை ஆளுங்க தானே.. சோ என்னை மாதிரி தானே இருப்பாங்க...;)) அது மட்டுமில்ல எனக்கு காதலர்கள் என்ன பேசுவாங்க, எப்படி பேசுவாங்கன்னெல்லாம் தெரியாது.. சோ எனக்கு தோணினத எழுதினேன்.. நல்லா இல்லையா??//

எனக்கும் இதே பிரச்சனைதான்.. நானும் உங்க கதைகளை படிக்கும் போது, நம்மளும் காதல் கதை எழுதலாம்ன்னு தோணும்.. ஆனா அனுபவமும் கிடையாது.. பொண்ணுங்க கூட பேசி பழகியதும் இல்லை என்பதால், பொண்ணுங்க எப்படி பேசுவாங்க, ரியாக்ட் பண்ணுவாங்க என்பதும் தெரியாது என்பதால், காதல் கதை எழுதுவதை ஒத்தி போட்டு விடுவேன்.. :))

ஆனா கண்டிப்பா எழுதனும்.. நீ, ஜி, திவ்யா, திவ்யப்ரியா மாதிரி.. பார்க்கலாம்..

TKB Gandhi said...

//இப்பொழுதெல்லாம் அவனில்லாத வெற்று நிமிடங்களை எல்லாம் கொட்டி சிலையாக்க முயன்றால் , அது கடலோர மணல் வீடாகிக் கரைந்தது.//

//சாதாரணமாக ஆண் பெண் பேசினாலே அது காதலைப் பற்றியதாகத் தான் இருக்கும் என நேற்று வரை நினைத்த அவளுக்கு அவன் பேச்சு பெருத்த ஏமாற்றத்தை தந்ததே அவன் மீது காதல் கொள்ளச் செய்தது.//

ரொம்ப அழகான lines ஸ்ரீ! :) அதுவும் மேல இருக்கற line ரொம்பவே அழகு.

ஸ்ரீமதி said...

@ கோபிநாத்
//இப்போதைக்கு 51 ;)//

நன்றி அண்ணா..!! :))

"Its my world" said...
This comment has been removed by the author.
"Its my world" said...

"நீ இப்படியே யோசிச்சுகிட்டே இரு.... நான் தூங்கறேன்...!!".

"ஓய் தூங்கினா நீ தோத்ததா அர்த்தம்....".

"என்னது ஓய்யா??".

"ம்ம்ம் ஓய்... ஏன்??"

"ஒன்னும் இல்ல... நீ சொல்றது நல்லா இருந்தது.. அதான் கேட்டேன்..!!".

இந்த உரையாடல் ரொம்ப CUTE TA இருக்கு ஸ்ரீ :)))))........ எபோவும் போல உங்க கவிதை உம் சூப்பர்........ஏன் எப்படி பிட் பிட் த போடுறீங்க :(((((..........அதுத பார்ட் சிகிரம் போடுங்க ;-) :)))))

தமிழ் பிரியன் said...

ஸ்ரீமதி! சூப்பரா போய்கிட்டு இருக்கு...:)

தமிழ் பிரியன் said...

கவிதையெல்லாம் நமக்கு புரியாத வஸ்து என்றாலும் கதை செல்லும் விதம் நல்லா இருக்கு.. குறிப்பா கதை புரியக் கூடியதா இருக்கு.. :)

K.Ravishankar said...

மேடம் ,
எளிமையாக எழுதுங்கள். திறமை இருக்கிறது . Finetune செய்தால் சிறந்து விளங்குவிர்கள் .சொற்சிக்கனம் கண்டிப்பா வேண்டும் .சுஜாதா கதைகளில் இதை
நீங்கள் பார்க்கலாம் .

கவிதை ,கட்டுரை அண்ட் கதை எல்லாத்தையம் போட்டு மிக்ஸ்யில் அடித்து குடுக்க கூடாது .கதை மட்டும்தான் சொல்ல வேண்டும். romanticization காதலர்களின் பேச்சோடு ஒட்டி வர வேண்டும் .நீங்கள் முட்டு குடுக்கக் கூடாது .செயற்கைத்தனம்.

"காதல்தான் எவ்வளவு " எதற்கு இந்த தொகையறா அல்லது கோனார் நோட்ஸ் ..

என்னுடைய "முதல் முத்தம் " கதையை படித்துவிட்டு என்னை நீங்கள் விமர்சிக்கலாம் .இது அதிஷாவின் "முத்தம்" கதையை fine tune செய்து எழுதப்பட்டது .
நன்றி .

ஸ்ரீமதி said...

@ ஜி
////அச்சச்சோ அது சாதாரண ஜோக் தான்//

intha dialoguelaam ulagaththula oruthtar mattumthaan adikirathaa oorukkulla sollikaraangale.. avungala unakku theriyumaa??//

அது யார் அண்ணா?? எனக்குத் தெரியாதே... ;)))))))

ஸ்ரீமதி said...

@ anbudan vaalu
//nice sree.......:)))//

நன்றி வாலு.. ;)))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////ஜி said...

//அச்சச்சோ அது சாதாரண ஜோக் தான்//

intha dialoguelaam ulagaththula oruthtar mattumthaan adikirathaa oorukkulla sollikaraangale.. avungala unakku theriyumaa??//

எனக்கு நல்லாவே தெரியும் ஜி..//

உனக்குத் தெரியுமா?? அப்படின்னா எனக்கும் கொஞ்சம் சொல்லேன் சரவணா..!! :)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
//உண்மையா சொன்னா நம்பு.. ஏன் நாங்க எல்லாம் அப்பாவியா இருக்க கூடாதா..!!!
[நான் அப்பாவி என்பதை நிரூபிக்க எவ்ளோ போராட வேண்டி இருக்கு.. ஸ்ஸப்பா.]//

சரி சரி நம்பறேன்..!! ;)))

//சாமியாரா வரேன்னு சொன்னது உனக்கு கம்பனி கொடுக்கத்தான்.. அதே நேரத்தில் அழகை ரசிப்பது என் இயல்பு.. And moreover என்னை எப்போதுமே தாராளமா நம்பலாம்.. :))//

வேறவழி அதான் நம்பறேன்னு சொல்லிட்டேனே.. :)))

//உனக்கு மட்டும் ஏன் பொருந்தாது..?? [ஒரு அப்பாவியின் அப்பாவித்தனமான கேள்வி]//

அப்பாவிக்கெல்லாம் சொன்னா புரியாது.. :P

//சீரியசா சொன்னேன்.. :))//

:))))))

//எனக்கும் இதே பிரச்சனைதான்.. நானும் உங்க கதைகளை படிக்கும் போது, நம்மளும் காதல் கதை எழுதலாம்ன்னு தோணும்.. ஆனா அனுபவமும் கிடையாது.. பொண்ணுங்க கூட பேசி பழகியதும் இல்லை என்பதால், பொண்ணுங்க எப்படி பேசுவாங்க, ரியாக்ட் பண்ணுவாங்க என்பதும் தெரியாது என்பதால், காதல் கதை எழுதுவதை ஒத்தி போட்டு விடுவேன்.. :))

ஆனா கண்டிப்பா எழுதனும்.. நீ, ஜி, திவ்யா, திவ்யப்ரியா மாதிரி.. பார்க்கலாம்..//

நான் மட்டும் என்னவாம்.. எனக்கு தோண்றத தான் எழுதறேன்.. நீயும் அதே மாதிரி எழுது சரவணா.. படிக்க தான் நாங்க இருக்கோமே..!! :))))))

ஸ்ரீமதி said...

@ TKB Gandhi
////இப்பொழுதெல்லாம் அவனில்லாத வெற்று நிமிடங்களை எல்லாம் கொட்டி சிலையாக்க முயன்றால் , அது கடலோர மணல் வீடாகிக் கரைந்தது.//

//சாதாரணமாக ஆண் பெண் பேசினாலே அது காதலைப் பற்றியதாகத் தான் இருக்கும் என நேற்று வரை நினைத்த அவளுக்கு அவன் பேச்சு பெருத்த ஏமாற்றத்தை தந்ததே அவன் மீது காதல் கொள்ளச் செய்தது.//

ரொம்ப அழகான lines ஸ்ரீ! :) அதுவும் மேல இருக்கற line ரொம்பவே அழகு.//

நன்றி காந்தி..!! :))

ஸ்ரீமதி said...

@ "Its my world"
//"நீ இப்படியே யோசிச்சுகிட்டே இரு.... நான் தூங்கறேன்...!!".

"ஓய் தூங்கினா நீ தோத்ததா அர்த்தம்....".

"என்னது ஓய்யா??".

"ம்ம்ம் ஓய்... ஏன்??"

"ஒன்னும் இல்ல... நீ சொல்றது நல்லா இருந்தது.. அதான் கேட்டேன்..!!".

இந்த உரையாடல் ரொம்ப CUTE TA இருக்கு ஸ்ரீ :)))))........ எபோவும் போல உங்க கவிதை உம் சூப்பர்........ஏன் எப்படி பிட் பிட் த போடுறீங்க :(((((..........அதுத பார்ட் சிகிரம் போடுங்க ;-) :)))))//

நன்றி பவானி.. :)) அடுத்த பகுதி விரைவில் போடறேன்.. :)))))))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//ஸ்ரீமதி! சூப்பரா போய்கிட்டு இருக்கு...:)//

நன்றி அண்ணா..!! :))))))

ஸ்ரீமதி said...

@ தமிழ் பிரியன்
//கவிதையெல்லாம் நமக்கு புரியாத வஸ்து என்றாலும் கதை செல்லும் விதம் நல்லா இருக்கு.. குறிப்பா கதை புரியக் கூடியதா இருக்கு.. :)//

ம்ம்ம் அப்படியா?? :)) நன்றி அண்ணா.. :))))))

Saravana Kumar MSK said...

//உனக்குத் தெரியுமா?? அப்படின்னா எனக்கும் கொஞ்சம் சொல்லேன் சரவணா..!! :)))//

அவங்க "ஹட்ச்" companyoda managing directorஎல்லாம் கெடையாது.. என்னோட தோழி "அச்சச்சோ" Sri தான் அது..

Saravana Kumar MSK said...

//அப்பாவிக்கெல்லாம் சொன்னா புரியாது.. :P //

அப்பாவிக்கு புரியற மாதிரி சொல்லு..


//நான் மட்டும் என்னவாம்.. எனக்கு தோண்றத தான் எழுதறேன்.. நீயும் அதே மாதிரி எழுது சரவணா.. படிக்க தான் நாங்க இருக்கோமே..!! :))))))//

ஓகே.. அடுத்து ஒரு காதல் கதை என் பதிவில்.. :)) ட்ரை பண்ணி பார்போம்.. :))

ஸ்ரீமதி said...

@ K.Ravishankar
//மேடம் ,
எளிமையாக எழுதுங்கள். திறமை இருக்கிறது . Finetune செய்தால் சிறந்து விளங்குவிர்கள் .சொற்சிக்கனம் கண்டிப்பா வேண்டும் .சுஜாதா கதைகளில் இதை
நீங்கள் பார்க்கலாம் .

கவிதை ,கட்டுரை அண்ட் கதை எல்லாத்தையம் போட்டு மிக்ஸ்யில் அடித்து குடுக்க கூடாது .கதை மட்டும்தான் சொல்ல வேண்டும். romanticization காதலர்களின் பேச்சோடு ஒட்டி வர வேண்டும் .நீங்கள் முட்டு குடுக்கக் கூடாது .செயற்கைத்தனம்.

"காதல்தான் எவ்வளவு " எதற்கு இந்த தொகையறா அல்லது கோனார் நோட்ஸ் ..

என்னுடைய "முதல் முத்தம் " கதையை படித்துவிட்டு என்னை நீங்கள் விமர்சிக்கலாம் .இது அதிஷாவின் "முத்தம்" கதையை fine tune செய்து எழுதப்பட்டது .
நன்றி .//

நன்றி அண்ணா வருகைக்கும், விரிவான பின்னுட்டத்திற்கும்..!! :)) உங்கள் "முதல் முத்தம்" கதை படித்தேன்... எனக்கு பிடிச்சிருந்தது..!! :)))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////உனக்குத் தெரியுமா?? அப்படின்னா எனக்கும் கொஞ்சம் சொல்லேன் சரவணா..!! :)))//

அவங்க "ஹட்ச்" companyoda managing director
எல்லாம் கெடையாது.. என்னோட தோழி "அச்சச்சோ" Sri தான் அது..//

என்னது நானா???? ஜி அண்ணா என்னை நிச்சயம் சொல்லிருக்க மாட்டார்..!! ;))))))))

ஸ்ரீமதி said...

@ Saravana Kumar MSK
////அப்பாவிக்கெல்லாம் சொன்னா புரியாது.. :P //

அப்பாவிக்கு புரியற மாதிரி சொல்லு..//

:((((((

////நான் மட்டும் என்னவாம்.. எனக்கு தோண்றத தான் எழுதறேன்.. நீயும் அதே மாதிரி எழுது சரவணா.. படிக்க தான் நாங்க இருக்கோமே..!! :))))))//

ஓகே.. அடுத்து ஒரு காதல் கதை என் பதிவில்.. :)) ட்ரை பண்ணி பார்போம்.. :))//

ஹை நிஜமாவா?? அட்வான்ஸ் வாழ்த்துகள்...!! :))))))))))))

சென்ஷி said...

கலக்கலா இருக்குது!!!.. வாழ்த்துக்கள்.. மற்றும் சீக்கிரம் தொடருங்கள் :)

தாரணி பிரியா said...

கவிதை சூப்பர் ஸ்ரீமதி

ஸ்ரீமதி said...

@ சென்ஷி
//கலக்கலா இருக்குது!!!.. வாழ்த்துக்கள்.. மற்றும் சீக்கிரம் தொடருங்கள் :)//

நன்றி அண்ணா...!! :)))

ஸ்ரீமதி said...

@ தாரணி பிரியா
//கவிதை சூப்பர் ஸ்ரீமதி//

நன்றி அக்கா..!! :)))

உருப்புடாதது_அணிமா said...

///காதலைக் கடக்காதவர் எவருமே இல்லை. "நான் கடக்கவில்லை", என சொல்பவன் காதல் அவன் வாழ்க்கையில் குறுக்கிட்டதைக்கூட அறியாத அப்பாவி ////

என்னை பற்றி ( அப்பாவி ) என்று பொதுவில் சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன் ..

உருப்புடாதது_அணிமா said...

///காதல் தான் எவ்வளவு அழகான பைத்தியக்காரத்தனம்... இது போன்ற சில பைத்தியக்காரத் தனங்களால் தான் வாழ்க்கையே அழகாகிறது. ////

அப்போ நான் பைத்தியகாரனா இல்லியா??
( ஒன்னுமே புரியல )

உருப்புடாதது_அணிமா said...

///அவசர அவசரமாக எழுதியதை மறைத்து வைத்தாள். அடுத்த அதிர்ச்சி காத்திருப்பது தெரியாமல்... ////

அதிர்ச்சிக்கு காத்து கொண்டிருக்கிறேன் நானும் ..

நிஜமா நல்லவன் said...

/ நாணல் said...

நிஜமா நல்லவன் said...
/ நாணல் said...

//பாத்தா தெரிய.. அது என்ன வாத்தா?? கோழியா?? அச்சச்சோ அது சாதாரண ஜோக் தான்.. அதுக்கேன் இப்படி சிரிக்கற??"
"அப்படியா..?? ஒருவேள நீ சொன்னதால அப்படி தெரிஞ்சதோ என்னமோ.. ". //

புதுசா இருந்தது... நான் நல்லா சிரிச்சேன்.. :)/


நாணல் அக்கா கொஞ்சம் மெதுவா சிரிங்க.....இங்க வரைக்கும் கேக்குது...:)

என்ன அண்ணா இப்படி சொல்லிட்டீங்க... :( /


அச்சச்சோ.....ஏன் சோகம்????

gayathri said...

கவிதை கதை எல்லாமே நல்லா இருக்கு மா

அடுத்த பகுதி சீக்கிரம் எலுதுமா.

குடுகுடுப்பை said...

நல்லா இருக்கு மதியக்கா.

இவன் said...

செஞ்சரி போட்டு ரொம்ப நாள் அச்சுது இன்னைக்கு போட்டுடுவமா??

இவன் said...

87

இவன் said...

88

இவன் said...

89

இவன் said...

90

இவன் said...

91

இவன் said...

92

இவன் said...

93

இவன் said...

94

இவன் said...

95

இவன் said...

96

இவன் said...

சச்சின் மாதிரி 96ல போயிடுவேனா??? தெரியலையே பரவாயில்லை 97

இவன் said...

98

இவன் said...

100 அடிக்க போறேன் அடிக்க போறேன்.... ஆனா இப்போ 99

இவன் said...

யப்பா 100 போட்டாச்சு.... சரி அடுத்த திருத்தம் எப்போ?? திரும்ப வந்து செஞ்சரி ஒண்ணு போடனும்....

ஆங் சொல்ல மறந்திட்டேன் பதிவு நல்லா இருக்குது

தமிழன்...(கறுப்பி...) said...

நல்லாருக்கு கதை...

தமிழன்...(கறுப்பி...) said...

காதல் கதைன்னாலே அது நல்லாத்தானே இருக்கும்...:)

தமிழன்...(கறுப்பி...) said...

பொங்கி வழியறிங்க sri...:)

தமிழன்...(கறுப்பி...) said...

வசுமதிங்கிற பெயர் அரிதாகத்தான் வைப்பார்கள் இல்லையா...

தமிழன்...(கறுப்பி...) said...

வசுமதி யாரு உங்க அக்கா பெயரா...
:)

உங்க பெயரும் மதின்னு வருதே அதனால கேட்டேன் அல்லது அந்த வசுமதியே நீங்கதானா...:)

தமிழன்...(கறுப்பி...) said...

முதல் பகுதில வந்த முதல் கவிதை மூணாவது பகுதிக்கும் நினைவு வந்துட்டிருக்கு...

தமிழன்...(கறுப்பி...) said...

கவிதைகள் நல்லாருக்கு மதி...

தமிழன்...(கறுப்பி...) said...

எப்படிப்பா ஒரு கதையை எழுத முடியுது உங்களுக்கெல்லாம் சாதாரணமா பேசறமாதிரி எனக்கு என்னமோ அந்த நடை வரவே மாட்டேன் என்கிறது...

நல்லாருக்கு வாழ்த்துக்கள்...

விலெகா said...

ம்,ம்,ஆங், சொல்லு ,ம் ,ம் ஆங், சொல்லு ம்,ம் இது கூட காதல் கவிதைதாங்க :-))))))))))))

இனியவள் புனிதா said...

மீ த 100... :-) இன்னிக்குத்தான் வாசித்தேன்...நல்லா இருக்குடா!!!

இனியவள் புனிதா said...

//இனியவள் புனிதா said...
மீ த 100... :-) இன்னிக்குத்தான் வாசித்தேன்...நல்லா இருக்குடா!!!//

அட 110ன்னுல்ல இருக்கனும் :-(

ஸ்ரீமதி said...

@ உருப்புடாதது_அணிமா
/////காதலைக் கடக்காதவர் எவருமே இல்லை. "நான் கடக்கவில்லை", என சொல்பவன் காதல் அவன் வாழ்க்கையில் குறுக்கிட்டதைக்கூட அறியாத அப்பாவி ////

என்னை பற்றி ( அப்பாவி ) என்று பொதுவில் சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன் ..//

என்ன அண்ணா உங்கள பெருமைப்படுத்திருக்கேன்... இதுக்கு போயி கண்டிக்கறேங்கறீன்களே... ;)))))

ஸ்ரீமதி said...

@ உருப்புடாதது_அணிமா
/////காதல் தான் எவ்வளவு அழகான பைத்தியக்காரத்தனம்... இது போன்ற சில பைத்தியக்காரத் தனங்களால் தான் வாழ்க்கையே அழகாகிறது. ////

அப்போ நான் பைத்தியகாரனா இல்லியா??
( ஒன்னுமே புரியல )//

No comments.. ;)))

ஸ்ரீமதி said...

@ உருப்புடாதது_அணிமா
/////அவசர அவசரமாக எழுதியதை மறைத்து வைத்தாள். அடுத்த அதிர்ச்சி காத்திருப்பது தெரியாமல்... ////

அதிர்ச்சிக்கு காத்து கொண்டிருக்கிறேன் நானும் ..//

ம்ம்ம்ம் பெரிய அதிர்ச்சியே குடுத்திருக்கேன் அடுத்த பார்ட்ல போயி பாருங்க... ;)))))

ஸ்ரீமதி said...

@ gayathri
//கவிதை கதை எல்லாமே நல்லா இருக்கு மா//

நன்றி அக்கா... :)))

//அடுத்த பகுதி சீக்கிரம் எலுதுமா.//

எழுதிட்டேன் அக்கா... படிச்சிடுங்க.. ;))))))

ஸ்ரீமதி said...

@ குடுகுடுப்பை
//நல்லா இருக்கு மதியக்கா.//

நன்றி அண்ணா..!! :)))))

ஸ்ரீமதி said...

@ இவன்
//யப்பா 100 போட்டாச்சு.... சரி அடுத்த திருத்தம் எப்போ?? திரும்ப வந்து செஞ்சரி ஒண்ணு போடனும்....

ஆங் சொல்ல மறந்திட்டேன் பதிவு நல்லா இருக்குது//

சொல்லிவெச்சு செஞ்சுரி போட்டதுக்கு நன்றி அண்ணா..!! :)))))))))

ஸ்ரீமதி said...

@ தமிழன்...(கறுப்பி...)
//நல்லாருக்கு கதை...//

நன்றி அண்ணா... :))))))

ஸ்ரீமதி said...

@ தமிழன்...(கறுப்பி...)
//காதல் கதைன்னாலே அது நல்லாத்தானே இருக்கும்...:)//

ம்ம்ம்ம் ஆமாம் அண்ணா..!! :))))))

ஸ்ரீமதி said...

@ தமிழன்...(கறுப்பி...)
//பொங்கி வழியறிங்க sri...:)//

அப்படின்னா என்ன அண்ணா?? :))

ஸ்ரீமதி said...

@ தமிழன்...(கறுப்பி...)
//வசுமதிங்கிற பெயர் அரிதாகத்தான் வைப்பார்கள் இல்லையா...//

ம்ம்ம் ஆமாம் அண்ணா... :)))

ஸ்ரீமதி said...

@ தமிழன்...(கறுப்பி...)
//வசுமதி யாரு உங்க அக்கா பெயரா...
:)

உங்க பெயரும் மதின்னு வருதே அதனால கேட்டேன் அல்லது அந்த வசுமதியே நீங்கதானா...:)//

ம்ம்ம் என் தூரத்து சொந்தத்துல ஒரு அக்கா பெயர் வசுமதி.. பட் அவங்களுக்கும் இந்த கதைக்கும் சம்பந்தம் இல்ல...:)) எதோ ஒரு பெயர்ன்னு யோசிச்சப்ப.. இந்த பெயர் ஞாபகம் வந்தது.. அவ்ளோ தான். நான் ஸ்ரீமதி, வசுமதி இல்ல..:)) நான் இந்த கதை எழுதறேங்கரத தவிர, எனக்கும், இந்த கதைக்கும் வேற சம்பந்தம் இல்ல... :))))))))))

ஸ்ரீமதி said...

@ தமிழன்...(கறுப்பி...)
//முதல் பகுதில வந்த முதல் கவிதை மூணாவது பகுதிக்கும் நினைவு வந்துட்டிருக்கு...//

ம்ம்ம்ம் அப்படியா?? :)) நன்றி அண்ணா... :)))))

ஸ்ரீமதி said...

@ தமிழன்...(கறுப்பி...)
//கவிதைகள் நல்லாருக்கு மதி...//


நன்றி அண்ணா..!! :))))

ஸ்ரீமதி said...

@ தமிழன்...(கறுப்பி...)
//எப்படிப்பா ஒரு கதையை எழுத முடியுது உங்களுக்கெல்லாம் சாதாரணமா பேசறமாதிரி எனக்கு என்னமோ அந்த நடை வரவே மாட்டேன் என்கிறது...

நல்லாருக்கு வாழ்த்துக்கள்...//

இருந்தாலும் உங்க அளவுக்கு தேவதைக்கு மடல் எழுத எங்களுக்கு குடுப்பினை இல்லையே... :)))))

ஸ்ரீமதி said...

@ விலெகா
//ம்,ம்,ஆங், சொல்லு ,ம் ,ம் ஆங், சொல்லு ம்,ம் இது கூட காதல் கவிதைதாங்க :-))))))))))))//

ஒன்னே ஒன்னு விட்டுட்டீங்களே..:)) 'அப்பறம்' இந்த சொல் இல்லாம நம்மளால போனே பேச முடியாது... :)))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
//மீ த 100... :-) இன்னிக்குத்தான் வாசித்தேன்...நல்லா இருக்குடா!!!//

ரொம்ப நன்றி அக்கா..!! :))))))

ஸ்ரீமதி said...

@ இனியவள் புனிதா
////இனியவள் புனிதா said...
மீ த 100... :-) இன்னிக்குத்தான் வாசித்தேன்...நல்லா இருக்குடா!!!//

அட 110ன்னுல்ல இருக்கனும் :-(//

அட இதுக்கு ஏன்க்கா கவலைப்படறீங்க?? 'காதலிக்கும் பெண் வடிக்கும் கையெழுத்திலே கண்ட பிழைகள் கூட கவிதையாகுமாம்'... நீங்க என் அன்பு அக்கா.. சோ இந்த பிழையும் கவிதைதான்.. :)))))))

புதியவன் said...

//வார்த்தைகளால்
வடிவமைக்கப்படாத
காதல் ஒன்று
வெட்கம் பூசி
அலைந்தது//

//வார்த்தைகள்

இல்லா மொழி

'காதல்'

அதை வாசிக்கக்

கற்றுத் தந்தவன்

நீ..!!//

கவிதைகள் அழகு.

இனிய காதல் திருத்தத்தின் அடுத்த நிறுத்தத்தில் வருகிறேன்.

ஸ்ரீமதி said...

@ புதியவன்
////வார்த்தைகளால்
வடிவமைக்கப்படாத
காதல் ஒன்று
வெட்கம் பூசி
அலைந்தது//

//வார்த்தைகள்
இல்லா மொழி
'காதல்'
அதை வாசிக்கக்
கற்றுத் தந்தவன்
நீ..!!//

கவிதைகள் அழகு.

இனிய காதல் திருத்தத்தின் அடுத்த நிறுத்தத்தில் வருகிறேன்.//

நன்றி புதியவன் :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது