நாங்களும் சமைப்போம்ல..!!-1

இதுநாள் வரைக்கும் எந்த ஒரு விஷயம் எனக்கும், அதனால அசம்பாவிதம் மத்தவங்களுக்கும் நடக்காம கண்ணும், கருத்துமா கடவுள் காப்பாத்தி வெச்சிருந்தாரோ அந்த விஷயம் ஒருநாள் காலை, அவர் தூங்கற நேரமா பார்த்து நடந்துடிச்சு... அது வேற ஒன்னும் இல்லைங்க வீட்ல எல்லாருமா சேர்ந்து என் கழுத்தப் பிடிச்சு கிச்சன்க்குள்ளத் தள்ளிட்டாங்க...:( உள்ளப் போனா ஒரே இருட்டு... (அடடா இதுக்கு தான் முன்னப் பின்ன கிச்சனுள்ள வந்திருக்கனும்கறது)...:( செத்தாதான் சுடுகாடு தெரியும்னு சொல்றமாதிரி, சமைச்சிருந்தாதானே, இல்ல அட்லீஸ்ட் ட்ரை பண்ணிருந்தா தானே தெரியும் கிச்சன் எங்க இருக்கு..எப்படி இருக்குனு.. நாமதான் அதெல்லாம் தடை செய்யப்பட இடம் மாதிரி அதுக்குள்ளே போனதே இல்லையே...இப்ப என்னடா பண்றதுன்னு முழிச்சிகிட்டே நின்னேன்...

அப்பதான் உடன்பிறப்பு என்ட்ரி ஆச்சு, "ஏய் என்னடி பண்ற?? லைட் கூட போடாம இருட்டுல என்ன தேடற??", அடடா லைட் போடலியா..அதான் இருட்டா இருந்ததா?? நாமக் கூட நம்ம ஞானமின்மையால் வந்த இருட்டுன்னு நினைச்சிட்டோமே..., "அதெனக்குத் தெரியாதா சும்மா இருட்டுல கிச்சன் எப்படி இருக்குன்னு பார்க்கத் தான் லைட் போடல,(சமாளிச்சிடோம்ல..!!) சரி சொல்லு உனக்கென்ன வேணும் சாப்ட??"

"இவங்க பெரிய நளசக்ரவர்த்தி சொன்னவுடனே நளபாகம் செஞ்சிடப் போறாங்க... கேள்வி வேற...முதல்ல காபி போடு...அப்பறம் நீ சமைக்கலாம்..!!"

ச்சே...ரொம்ப கேவலப்படுத்திட்டான்....நாமளும் கொஞ்சம் ஓவரா தான் கேட்டுட்டமோ..?? சரி விடு இதெல்லாம் வீரர்கள் வாழ்க்கையில் சகஜம்னு.. சொல்லி உள்ளப் போனா அப்பதான் ஒரு பெரிய டவுட் வந்தது...என்னனு கேட்கறீங்களா??வேற என்ன இந்த காபி பொடி, சர்க்கரை இதெல்லாம் எங்க இருக்குன்னு தெரியல..:( கேட்டா அண்ணன் அடிக்க வருவான்....!! சமாளிப்போன்னு சொல்லி, "மாதவா காபி பொடி இல்லடா...பார்த்து வாங்கி வெக்க மாட்டியா??"-னு கொஞ்சம் கோவமா கேட்டேன்.. அப்படியே காபி பொடி டப்பாவோட டெரர்ரா ஒரு லுக் விட்டான்...,

"இதுக்கு பேர் என்ன உங்க ஊர்ல??"

"இது பில்டர் காபின்னா? நான் கேட்டது ப்ருடா..!!"

"அதெதுக்கு உனக்கு??"

(மனசுக்குள்)'எனக்கு பில்டர் காபி போட தெரியாது...!!' (சத்தமா) "இல்ல அது உனக்கு பிடிக்குமேனு கேட்டேன்...!!"

"இல்ல எனக்கு பில்டர் காபி தான் வேணும்..!!"

(பெட்ருமாஸ் லைட்டே தான் வேணுமா??)"சரி போடறேன்..!!"

"ஆமா உனக்கு டிகாஷன் போடத் தெரியுமா??"

"ஓஓ தெரியுமே..!!"

"சரி போடு..!!"

"அச்சச்சோ...!!" நான்தான்....நான்தான்...

"என்ன ஆச்சு??"

"லைட்டர காணோம் டா"

"என்னது லைட்டரா?? அதெதுக்கு??"

"அடப்பாவி...ஸ்டவ் எரியவைக்க அதுதான் வேணும் தெரியாதா??"

"அதுத்தெரியும்...ஆனா இந்த ஸ்டவ்க்கு எதுக்கு டி லைட்டர்??"

அது ஆடோமேடிக்-ங்கற உண்மை..அப்பதாங்க எனக்கேத் தெரியும். ஒருவழியா வெற்றிகரமா 6 மணிக்கு உள்ளப்போய் 7:30 மணிக்கு காபி கப்போட வெளில வரும் போது வேர்த்து விறுவிறுத்துப் போச்சு சரி இவ்ளோ கஷ்டப்பட்டு செஞ்சிருக்காளேன்னு கொஞ்சமாவது இரக்கப்படலாம்ல அதுதான் இல்ல... "ஆமா காபிக்கு சர்க்கரை போட்டியா?? உப்பு போட்டியா??"

"சர்க்கரை தான் போட்டேன்...",னு நான் கொஞ்சம் இழுக்க..

"ஆர் யு சூர்??"

"சூர்".

"காண்பிடென்ட்??",ன்னு என்னமோ கொடீஸ்வரன்ல கேட்கற மாதிரி கேட்டுட்டு LIC பாலிசி போட்ருக்கற தைரியத்துல குடிக்க ஆரம்பிச்சுட்டான். அவனுக்கு ஒன்னும் ஆகலைன்னு தெரிஞ்சப்பறம் நானும் ரொம்ப தைரியமா குடிச்சிட்டேன்.

அப்பறம் தான் கொடுமைலையே பெரிய கொடுமையான அந்த டிஃபன் செய்யற படலம் ஆரம்பமானது.....

பி.கு: இதை ஒரே பதிவா போடனும்ன்னு தான் நினைச்சேன்... ஆனா பதிவு நீளம் பிளஸ் நேரமின்மை காரணமாக அடுத்த பதிவு போட வேண்டியதா போச்சு...:( பொறுத்தருள்க...!! ;)

76 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

நிஜமா நல்லவன் said...

அட கொடுமையே....நல்லா இருங்க தாயி....:)

நிஜமா நல்லவன் said...

என்ன கொடுமை மாதவா உனக்கு? காபி எங்கயாவது கடைல போய் குடிச்சிருக்கலாமே? என்னவோ போ....உன் பாடு....உன் தங்கச்சி உன்னை படுத்தும் பாடு....நாங்க தப்பிச்சதே போதும்:)

நிஜமா நல்லவன் said...

/கடவுள் காப்பாத்தி வெச்சிருந்தாரோ அந்த விஷயம் ஒருநாள் காலை, அவர் தூங்கற நேரமா பார்த்து நடந்துடிச்சு../

அட...கடவுள் காலைல தான் தூங்குறாரா? இது புதுசா இதுக்கே??

நிஜமா நல்லவன் said...

/வீட்ல எல்லாருமா சேர்ந்து என் கழுத்தப் பிடிச்சு கிச்சன்க்குள்ளத் தள்ளிட்டாங்க.../

ஐயோ பாவம்....உங்க வீட்டு கிச்சன்:(

நிஜமா நல்லவன் said...

/அப்பதான் உடன்பிறப்பு என்ட்ரி ஆச்சு,/

உங்க அண்ணனுக்கு மரியாதை கொடுக்க மாட்டேன்னு தெரியும்.....அதுக்காக அக்றிணை கணக்கா சொல்லுறியே?????

நிஜமா நல்லவன் said...

/பி.கு: இதை ஒரே பதிவா போடனும்ன்னு தான் நினைச்சேன்... ஆனா பதிவு நீளம் பிளஸ் நேரமின்மை காரணமாக அடுத்த பதிவு போட வேண்டியதா போச்சு...:( பொறுத்தருள்க...!! ;)/

அடுத்த பதிவு வேறயா? நான் எஸ்கேப்பு:))

Jeeves said...

எல்லாத்துக்குமா ஒரு திருப்பிச்சொல்லு சொல்லிட்டு எஸ்கேப்பாய்டறேன்

ஆயில்யன் said...

அட யே யப்பாடியோவ்!

அக்கா அடுப்படி பக்கமெல்லாம் போக ஆரம்பிச்சீட்டிங்களா?

Sri said...

@ நிஜமா நல்லவன்
//அட கொடுமையே....நல்லா இருங்க தாயி....//

எது கொடுமை அண்ணா நான் சமைச்சதா?? இல்ல என்னை சமைக்க சொன்னதா?? ;))

ஆயில்யன் said...

//நிஜமா நல்லவன் said...
/அப்பதான் உடன்பிறப்பு என்ட்ரி ஆச்சு,/

உங்க அண்ணனுக்கு மரியாதை கொடுக்க மாட்டேன்னு தெரியும்.....அதுக்காக அக்றிணை கணக்கா சொல்லுறியே?????
//

நல்லவேளை அச்சச்சோ அண்ணான்னு அழைக்காம போனாங்களே எங்க அக்கா அதை நினைச்சு பெருமை படுவீகளா??

ஆயில்யன் said...

//நிஜமா நல்லவன் said...
/வீட்ல எல்லாருமா சேர்ந்து என் கழுத்தப் பிடிச்சு கிச்சன்க்குள்ளத் தள்ளிட்டாங்க.../

ஐயோ பாவம்....உங்க வீட்டு கிச்சன்:(
//

யேய் அண்ணா! என்னது சின்னபுள்ளதனமா இப்படி எதுனா சொல்லி மிரட்டுனா அக்கா அரண்டு மிரண்டு போச்சுன்னா????

ஆயில்யன் said...

//நிஜமா நல்லவன் said...
/பி.கு: இதை ஒரே பதிவா போடனும்ன்னு தான் நினைச்சேன்... ஆனா பதிவு நீளம் பிளஸ் நேரமின்மை காரணமாக அடுத்த பதிவு போட வேண்டியதா போச்சு...:( பொறுத்தருள்க...!! ;)/

அடுத்த பதிவு வேறயா? நான் எஸ்கேப்பு:))
///

அச்சச்சோ அக்கா! அவுரு போகட்டும் நானிருக்கேன் அக்கா! நானிருக்கேன் உங்க தம்பி ஆயில்யன் இருக்கான் தைரியமா பூந்து விளையாடுங்க!

Sri said...

@ நிஜமா நல்லவன்
//என்ன கொடுமை மாதவா உனக்கு? காபி எங்கயாவது கடைல போய் குடிச்சிருக்கலாமே? என்னவோ போ....உன் பாடு....உன் தங்கச்சி உன்னை படுத்தும் பாடு....நாங்க தப்பிச்சதே போதும்//

அவன் கடைக்கு போறேன்னு தான் சொன்னான்..நான் தான் 'வேண்டாம் நானே போட்டுத் தரேன்'னு சொல்லி சொந்த காசுல சூனியம் வெச்சிகிட்டேன்... :(

ம்ம்ம் அப்புறம் அண்ணா இந்தியா வந்தா கண்டிப்பா என் கையால காபி குடிச்சிட்டு தான் போகணும்..!! ;))

ஆயில்யன் said...

//(பெட்ருமாஸ் லைட்டே தான் வேணுமா??)"சரி போடறேன்..!!"//

இந்த ப்ரூ இல்லாடி வெறும் வெந்நீரு இதை வைச்சு அட்ஜெஸ்ட்பண்ணிக்கமுடியாதா??

ஆயில்யன் said...

// Sri said...
@ நிஜமா நல்லவன்
//என்ன கொடுமை மாதவா உனக்கு? காபி எங்கயாவது கடைல போய் குடிச்சிருக்கலாமே? என்னவோ போ....உன் பாடு....உன் தங்கச்சி உன்னை படுத்தும் பாடு....நாங்க தப்பிச்சதே போதும்//

அவன் கடைக்கு போறேன்னு தான் சொன்னான்..நான் தான் 'வேண்டாம் நானே போட்டுத் தரேன்'னு சொல்லி சொந்த காசுல சூனியம் வெச்சிகிட்டேன்... :(

ம்ம்ம் அப்புறம் அண்ணா இந்தியா வந்தா கண்டிப்பா என் கையால காபி குடிச்சிட்டு தான் போகணும்..!! ;))
//

அக்கா வைச்சீங்க பாருங்க ஒரு ஆப்பு!

மவனே சிக்க்கிட்டியா?

இதுக்குத்தான் என்னிய மாதிரி சாப்ட் போயிருக்கணும்!

Sri said...

@ நிஜமா நல்லவன்
//அட...கடவுள் காலைல தான் தூங்குறாரா? இது புதுசா இதுக்கே??//

அவர் எப்ப தூங்குவார்ன்னெல்லாம் எனக்குத் தெரியாது அண்ணா... ஆனா, அவர் என்னை காப்பாத்த அந்த சமயத்துல வராததுனால, அவர் தூங்கறார்ன்னு நானே நினைச்சிகிட்டேன்..!! :)))

ஆயில்யன் said...

//இதை ஒரே பதிவா போடனும்ன்னு தான் நினைச்சேன்... ஆனா பதிவு நீளம் பிளஸ் நேரமின்மை காரணமாக அடுத்த பதிவு போட வேண்டியதா போச்சு...:( பொறுத்தருள்க...!! ;)//

நானெல்லாம் ரொம்ப ஆர்வமா இருக்கேன்!

ஆனா இரண்டு நாள் வெயிட் பண்ணனுமோ!

ஆயில்யன் said...

அச்சச்சோ அக்கா! மாதவன் அண்ணாக்கிட்ட நான் சொன்னேன் சொல்லி உடம்பை பத்திரமா பாத்துக்க சொல்லுங்க!

Sri said...

@ நிஜமா நல்லவன்
//ஐயோ பாவம்....உங்க வீட்டு கிச்சன்//

Grrrrrrrrrrrrrrr..!! :))

ஆயில்யன் said...

// Sri said...
@ நிஜமா நல்லவன்
//அட...கடவுள் காலைல தான் தூங்குறாரா? இது புதுசா இதுக்கே??//

அவர் எப்ப தூங்குவார்ன்னெல்லாம் எனக்குத் தெரியாது அண்ணா... ஆனா, அவர் என்னை காப்பாத்த அந்த சமயத்துல வராததுனால, அவர் தூங்கறார்ன்னு நானே நினைச்சிகிட்டேன்..!! :)))
///

இல்லையக்கா இல்லை!
அவுரு ஒளிஞ்சு நின்னு வேடிக்கை பார்க்கிறாரு! அல்லாங்காட்டி உங்க அண்ணனுக்கு சோதனை பண்ணி பாக்குறாரு! :))))))))

Sri said...

@ நிஜமா நல்லவன்
//உங்க அண்ணனுக்கு மரியாதை கொடுக்க மாட்டேன்னு தெரியும்.....அதுக்காக அக்றிணை கணக்கா சொல்லுறியே??//

அப்படி இல்ல அண்ணா...இது அளவு கடந்த அன்பு...!! :))(சமாளிசாச்சு..!! ;))

Sri said...

@ நிஜமா நல்லவன்

//அடுத்த பதிவு வேறயா? நான் எஸ்கேப்பு//

எங்க போனாலும் விட மாட்டேன்..!! :)) ஆயில்யன் அண்ணா நி.ந அண்ணாவ புடிச்சி கட்டுங்க...!! ;))

Sri said...

@ Jeeves
//எல்லாத்துக்குமா ஒரு திருப்பிச்சொல்லு சொல்லிட்டு எஸ்கேப்பாய்டறேன்//

நன்றி அண்ணா..!! :))

Sri said...

@ ஆயில்யன்
//அட யே யப்பாடியோவ்!
அக்கா அடுப்படி பக்கமெல்லாம் போக ஆரம்பிச்சீட்டிங்களா?//

நான் எங்க போனேன்?? :( எல்லாம் உள்நாட்டு சதி..!! :((

ஆயில்யன் said...

// Sri said...
@ நிஜமா நல்லவன்

//அடுத்த பதிவு வேறயா? நான் எஸ்கேப்பு//

எங்க போனாலும் விட மாட்டேன்..!! :)) ஆயில்யன் அண்ணா நி.ந அண்ணாவ புடிச்சி கட்டுங்க...!! ;))
//

நீங்க விடுங்க அக்கா!
அந்த ஆளு எங்க போறாருன்னு பார்ப்போம் கண்டிபப டிபன் சாப்பிட வந்துதானே ஆகணும்!
(எலிக்கு வைக்கிற மாதிரி வந்து மாட்டித்தானே ஆகணும்!)

Sri said...

@ ஆயில்யன்
////நிஜமா நல்லவன் said...
/அப்பதான் உடன்பிறப்பு என்ட்ரி ஆச்சு,/
உங்க அண்ணனுக்கு மரியாதை கொடுக்க மாட்டேன்னு தெரியும்.....அதுக்காக அக்றிணை கணக்கா சொல்லுறியே?????//
நல்லவேளை அச்சச்சோ அண்ணான்னு அழைக்காம போனாங்களே எங்க அக்கா அதை நினைச்சு பெருமை படுவீகளா??//

Grrrrrrrrrrrrrrrrrr...!! :)

ஆயில்யன் said...

//Sri said...
@ ஆயில்யன்
//அட யே யப்பாடியோவ்!
அக்கா அடுப்படி பக்கமெல்லாம் போக ஆரம்பிச்சீட்டிங்களா?//

நான் எங்க போனேன்?? :( எல்லாம் உள்நாட்டு சதி..!! :((
//
ஆஹா லோக்கல்லயே எனிமீஸ் இருக்காங்களா!அப்ப நீ சாக்கிரதையா இருக்கணும்க்கா சாக்கிரதையா இருக்கணும்!

Sri said...

@ ஆயில்யன்
////நிஜமா நல்லவன் said...
/வீட்ல எல்லாருமா சேர்ந்து என் கழுத்தப் பிடிச்சு கிச்சன்க்குள்ளத் தள்ளிட்டாங்க.../ஐயோ பாவம்....உங்க வீட்டு கிச்சன்:(//

யேய் அண்ணா! என்னது சின்னபுள்ளதனமா இப்படி எதுனா சொல்லி மிரட்டுனா அக்கா அரண்டு மிரண்டு போச்சுன்னா????//

ம்ம்ம் ஆமாம் அண்ணா..!! ;))

Sri said...

@ ஆயில்யன்
////நிஜமா நல்லவன் said...
/பி.கு: இதை ஒரே பதிவா போடனும்ன்னு தான் நினைச்சேன்... ஆனா பதிவு நீளம் பிளஸ் நேரமின்மை காரணமாக அடுத்த பதிவு போட வேண்டியதா போச்சு...:( பொறுத்தருள்க...!! ;)/
அடுத்த பதிவு வேறயா? நான் எஸ்கேப்பு:))///

அச்சச்சோ அக்கா! அவுரு போகட்டும் நானிருக்கேன் அக்கா! நானிருக்கேன் உங்க தம்பி ஆயில்யன் இருக்கான் தைரியமா பூந்து விளையாடுங்க!//

நன்றி அண்ணா..!! :P

Sri said...

@ ஆயில்யன்
////(பெட்ருமாஸ் லைட்டே தான் வேணுமா??)"சரி போடறேன்..!!"//

இந்த ப்ரூ இல்லாடி வெறும் வெந்நீரு இதை வைச்சு அட்ஜெஸ்ட்பண்ணிக்கமுடியாதா??//

இதெல்லாம் கேட்டா அடிக்க வருவான்..!! :((

Sri said...

@ ஆயில்யன்

//அக்கா வைச்சீங்க பாருங்க ஒரு ஆப்பு!
மவனே சிக்க்கிட்டியா?
இதுக்குத்தான் என்னிய மாதிரி சாப்ட் போயிருக்கணும்!//

என்னது சாப்டவரீங்களா?? இப்ப எனக்கு டவுட்-ஆ இருக்கு ஆப்பு வெச்சிகிட்டது அவரா?? நீங்களான்னு??
:(

அய்யோ!

இல்ல அக்கா
இல்ல!

நான் சாப்டா சொன்னேங்கறதையில்ல சொன்னேன்!ட்

Sri said...

@ ஆயில்யன்
////இதை ஒரே பதிவா போடனும்ன்னு தான் நினைச்சேன்... ஆனா பதிவு நீளம் பிளஸ் நேரமின்மை காரணமாக அடுத்த பதிவு போட வேண்டியதா போச்சு...:( பொறுத்தருள்க...!! ;)//
நானெல்லாம் ரொம்ப ஆர்வமா இருக்கேன்!
ஆனா இரண்டு நாள் வெயிட் பண்ணனுமோ!//

அதே ஆர்வத்தோட நான் சொல்லிக்குடுத்த மாதிரி காபி போட கத்துக்கோங்க..திங்கள் வந்து டிஃபன் எப்படி செய்யறதுன்னு சொல்லித் தரேன்..!!! ;))

Sri said...

@ ஆயில்யன்
//அச்சச்சோ அக்கா! மாதவன் அண்ணாக்கிட்ட நான் சொன்னேன் சொல்லி உடம்பை பத்திரமா பாத்துக்க சொல்லுங்க!//

Grrrrrrrrrrrrrrr....!! ;))

Sri said...

@ ஆயில்யன்

//அய்யோ!
இல்ல அக்கா
இல்ல!
நான் சாப்டா சொன்னேங்கறதையில்ல சொன்னேன்!ட்//

என்னதிது இதுக்கெல்லாம் சின்ன புள்ளத் தனமா கண்கலங்கிகிட்டு?? அக்கா சாப்ட மாட்டேன்னு சொன்னா விட்ற போறேன்..!! ;))

Sri said...

@ ஆயில்யன்
//நிஜமா நல்லவன் said...
/பி.கு: இதை ஒரே பதிவா போடனும்ன்னு தான் நினைச்சேன்... ஆனா பதிவு நீளம் பிளஸ் நேரமின்மை காரணமாக அடுத்த பதிவு போட வேண்டியதா போச்சு...:( பொறுத்தருள்க...!! ;)/
அடுத்த பதிவு வேறயா? நான் எஸ்கேப்பு:))//

அச்சச்சோ அக்கா! அவுரு போகட்டும் நானிருக்கேன் அக்கா! நானிருக்கேன் உங்க தம்பி ஆயில்யன் இருக்கான் தைரியமா பூந்து விளையாடுங்க!//

நன்றிஸ்..!! ;))

Sri said...

@ ஆயில்யன் said...
// Sri said...
@ நிஜமா நல்லவன்
//அட...கடவுள் காலைல தான் தூங்குறாரா? இது புதுசா இதுக்கே??//

அவர் எப்ப தூங்குவார்ன்னெல்லாம் எனக்குத் தெரியாது அண்ணா... ஆனா, அவர் என்னை காப்பாத்த அந்த சமயத்துல வராததுனால, அவர் தூங்கறார்ன்னு நானே நினைச்சிகிட்டேன்..!! :)))
///

இல்லையக்கா இல்லை!
அவுரு ஒளிஞ்சு நின்னு வேடிக்கை பார்க்கிறாரு! அல்லாங்காட்டி உங்க அண்ணனுக்கு சோதனை பண்ணி பாக்குறாரு! :)))))//

உங்களுக்கும் ஒரு நாள் காபி போட்டு குடுத்தாதான் அடங்குவீங்கன்னு நினைக்கறேன்..!! ;))

Sri said...

@ ஆயில்யன்
//// Sri said...
@ நிஜமா நல்லவன்
//அடுத்த பதிவு வேறயா? நான் எஸ்கேப்பு//
எங்க போனாலும் விட மாட்டேன்..!! :)) ஆயில்யன் அண்ணா நி.ந அண்ணாவ புடிச்சி கட்டுங்க...!! ;))//

நீங்க விடுங்க அக்கா!
அந்த ஆளு எங்க போறாருன்னு பார்ப்போம் கண்டிபப டிபன் சாப்பிட வந்துதானே ஆகணும்!
(எலிக்கு வைக்கிற மாதிரி வந்து மாட்டித்தானே ஆகணும்!)//

ஹா ஹா ஹா ஹா..!! :))

Sri said...

@ ஆயில்யன்
//Sri said...
@ ஆயில்யன்
//அட யே யப்பாடியோவ்!
அக்கா அடுப்படி பக்கமெல்லாம் போக ஆரம்பிச்சீட்டிங்களா?//

நான் எங்க போனேன்?? :( எல்லாம் உள்நாட்டு சதி..!! :((
//
ஆஹா லோக்கல்லயே எனிமீஸ் இருக்காங்களா!அப்ப நீ சாக்கிரதையா இருக்கணும்க்கா சாக்கிரதையா இருக்கணும்!//

ம்ம்ம்ம் சரி அண்ணா...!! :((

YILAVEANIL said...

//
(மனசுக்குள்)'எனக்கு பில்டர் காபி போட தெரியாது...!!' (சத்தமா) "இல்ல அது உனக்கு பிடிக்குமேனு கேட்டேன்...!!"

"இல்ல எனக்கு பில்டர் காபி தான் வேணும்..!!"

(பெட்ருமாஸ் லைட்டே தான் வேணுமா??)"சரி போடறேன்..!!"

"ஆமா உனக்கு டிகாஷன் போடத் தெரியுமா??"

"ஓஓ தெரியுமே..!!" //

அன்பு சகோதரி...

தங்களின் முதல் சமையல் அனுபவம் !?!?!? செம்ம டெரர்ரா இருந்தது..

நல்ல வேளை நீங்க உப்புமா செய்ய முயற்சி பண்ணல..

அண்ணன் எஸ்கேப் ஆயிட்டாரு..

மெய்யாலுமே உங்களுக்கு சமைக்க தெரியாதா? இல்ல சும்மா பூச்சாண்டி காட்ரிங்களா ??

எனக்கு சுமாராக சமையல் தெரியும் என்பதால்
சமையல் பற்றி பிறிதொரு முறை விரிவாய் பேசுவோம்..

நகைச்சுவை ஒரு பெரிய கடினக்கலை..

தங்கள் படைப்பு அபாரம்...

இது போல நிறைய எதிர்பார்க்கிறேன்...

அது போகட்டும்..

இன்று

ஆசிரியர் தினம்..

நீங்கள் உங்கள் ஆசிரியர்களுக்கு
வாழ்த்து தெரிவித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..

உங்கள் வரிகளில் ஒரு கவிதை ப்ளிஸ்....

அன்புடன்

இளவேனில்

Sri said...

இளவேனில் விருப்பப்படி ஆசிரியர்களுக்காக:

கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாக
மட்டுமே நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

பி.கு:அவசரத்துல எழுதினது சொற்பிழை பொருட்பிழை மன்னித்தருளுக..!! :)

Sri said...

@ YILAVEANIL

//அன்பு சகோதரி...
தங்களின் முதல் சமையல் அனுபவம் !?!?!? செம்ம டெரர்ரா இருந்தது..//

அதுவும் இருபத்தியோரு வயதில் எனும்போது எனக்கே டெரரா தான் இருக்கு..!! :(

//நல்ல வேளை நீங்க உப்புமா செய்ய முயற்சி பண்ணல..//

இவ்ளோ பெரிய டிஷ் எல்லாம் எனக்கு செய்யத் தெரியாது அண்ணா..!! ;))

//அண்ணன் எஸ்கேப் ஆயிட்டாரு..//

ஆமா கிரேட் எஸ்கேப்..!! :D

//மெய்யாலுமே உங்களுக்கு சமைக்க தெரியாதா? இல்ல சும்மா பூச்சாண்டி காட்ரிங்களா ??//

ஏதாவது கோவில்ல வந்து கற்பூரம் அணைச்சு சத்தியம் பண்ணா தான் ஒத்துப்பீங்களா?? ;))

//எனக்கு சுமாராக சமையல் தெரியும் என்பதால்
சமையல் பற்றி பிறிதொரு முறை விரிவாய் பேசுவோம்..//

ம்ம்ம்ம்...!!(ஆண்டவா இவருக்கு சமையல் மறந்துடக் கூடாது..!! ;))

//நகைச்சுவை ஒரு பெரிய கடினக்கலை..
தங்கள் படைப்பு அபாரம்...
இது போல நிறைய எதிர்பார்க்கிறேன்...//

நன்றி அண்ணா..!! நிச்சயம் பதிகிறேன்..!! :))

//அது போகட்டும்..

இன்று

ஆசிரியர் தினம்..

நீங்கள் உங்கள் ஆசிரியர்களுக்கு
வாழ்த்து தெரிவித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..

உங்கள் வரிகளில் ஒரு கவிதை ப்ளிஸ்....//

மேல போட்ருக்கேன் உங்கள் சார்பா.. நல்லா இல்லைனா திட்டமாட்டீங்க தானே?? ;))

நன்றி அண்ணா வருகைக்கும், விரிவான பின்னூட்டத்திற்கும்..!! :))

YILAVEANIL said...

அன்பு சகோதரி...

அருமை..

சொற்பிழை பொருட்பிழை ஏதுமில்லை..

அவசரத்தில் எழுதினாலும்..
அற்புதமாகவே உள்ளது...

வேண்டுகோளை நிறைவேற்றியதற்கு மிக்க நன்றி...

அன்புடன்

இளவேனில்

YILAVEANIL said...

சகோதரி..

//ம்ம்ம்ம்...!!(ஆண்டவா இவருக்கு சமையல் மறந்துடக் கூடாது..!! ;)) //

நான்கு வருடங்களாய் சமைக்கிறேன்..
இனியும் சொந்த சமையல்தான்..
எனவே மறப்பதற்கு வாய்ப்புக்கள் குறைவு..

//நல்லா இல்லைனா திட்டமாட்டீங்க தானே?? ;)) //

திருத்தம் சொல்லவே பெரிதும் தயங்கும் நான் உங்களைத் திட்டுவதா? வாய்ப்பே இல்லை..

//மேல போட்ருக்கேன் உங்கள் சார்பா.//

"என் சார்பாக" என்று பெருமைபடுத்தியதற்கு மிக்க நன்றி..

நான் என் ஆசிரியர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து ஒரு பதிவு மட்டும் எழுதினேன், பின் அழைத்துப் பேசினேன்...

பதிவை படித்து விட்டு கருத்துக் கூறுங்களேன்..

அகம் மிக மகிழ்வேன்...

அன்புடன்

இளவேனில்

ஆயில்யன் said...

//கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாக
மட்டுமே நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!//

அக்கா!

கலக்கல் :)

Saravana Kumar MSK said...

//கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாக
மட்டுமே நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!//

ஆகா.. இன்று ஆசிரியரும் சமைப்பது போன்ற உருவகமா??
செமையான சமையல் மூடில் இருகிறீர்கள் போலும்..

Saravana Kumar MSK said...

45 கமெண்டுக்கு அப்பறம் வந்து இருக்கிறேன் என்று நினைத்தேன்.. அப்பாடா.. நீங்கள், நிஜமான நல்லவர், ஆயில்யன், இளவேனில் குரூப் சாட் செய்திருக்கிறீர்கள்..பின்னூட்டங்கள் சுவாரசியம்..
;)

Saravana Kumar MSK said...

உங்கள் உடன்பிறப்புகளுக்காக மிகவும் வருந்துகிறேன்..

கடவுள் இருப்பின் அவர்களை காப்பாற்றட்டும்..
:)

Saravana Kumar MSK said...

//(பெட்ருமாஸ் லைட்டே தான் வேணுமா??)"//

எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை காட்சி.. எப்போது பார்த்தாலும் சிரிக்க வைக்கும் காட்சி.. நானும் அடிக்கடி உபயோகிக்கும் சொற்றொடர்..
:)))))))

Saravana Kumar MSK said...

நீங்கள் கவிதைகளிலும் கலக்குறீங்க.. தொடர்கதையிலும் பின்றீங்க..

நகைச்சுவையும் பிரமாதம்.. Multi dimensional personality..
:)

சீக்கிரத்தில் நானெல்லாம் இந்த பிளாக் உலகத்தை காலி செய்ய நேரிடும் போலிருக்கிறது..

பி.கு : ஆனால் உங்கள் சமையலை சாப்பிட்டால் இந்த உலகத்தையே காலி செய்ய நேரிடும்..

மங்களூர் சிவா said...

/

"இவங்க பெரிய நளசக்ரவர்த்தி சொன்னவுடனே நளபாகம் செஞ்சிடப் போறாங்க... கேள்வி வேற...முதல்ல காபி போடு...அப்பறம் நீ சமைக்கலாம்..!!"
/

இவங்கன்னு சொன்னாப்டியா இவ-ன்னு சொன்னாரா???
:)))

மங்களூர் சிவா said...

நல்லா இரு தாயி....:)

மங்களூர் சிவா said...

என்ன கொடுமை மாதவா உனக்கு? காபி எங்கயாவது கடைல போய் குடிச்சிருக்கலாமே?

மங்களூர் சிவா said...

/
Sri said...

@ நிஜமா நல்லவன்
//என்ன கொடுமை மாதவா உனக்கு? காபி எங்கயாவது கடைல போய் குடிச்சிருக்கலாமே? என்னவோ போ....உன் பாடு....உன் தங்கச்சி உன்னை படுத்தும் பாடு....நாங்க தப்பிச்சதே போதும்//

அவன் கடைக்கு போறேன்னு தான் சொன்னான்..நான் தான் 'வேண்டாம் நானே போட்டுத் தரேன்'னு சொல்லி சொந்த காசுல சூனியம் வெச்சிகிட்டேன்... :(
/

ஏன் தாயி சூனியம் சொந்த செலவுல வெச்சிகிட்டீங்களா? இல்ல காபின்ற பேர்ல அண்ணனுக்கு வெச்சீங்களா?

உண்மைய சொல்லணும்!!

:))))

A'n'B said...

sri உங்க காபி ய copy பண்ண ட்ரை செய்து இருக்கேன்...எப்படி இருக்குனு கொஞ்சம் பார்க்க வாங்க :)

ஸ்ரீ said...

Ha ha ha :)

gayathri said...

hai sri எனகும் சமைக்க கத்து தரிங்காள.எங்க அம்மா சமைக்க சொல்ராங்க.உங்கள மாதிரி சமைச்ச next timeb என்ன சமைக்க சொல்ல மாட்டாங்கல்ல..............

Divyapriya said...

//தெரியாதா சும்மா இருட்டுல கிச்சன் எப்படி இருக்குன்னு பார்க்கத் தான் லைட் போடல,(சமாளிச்சிடோம்ல..!!) //

ஹா ஹா ஹா :-த

//பாலிசி போட்ருக்கற தைரியத்துல குடிக்க ஆரம்பிச்சுட்டான்.//

ROTFL :-)

Sri said...

@ YILAVEANIL
//அன்பு சகோதரி...
அருமை..
சொற்பிழை பொருட்பிழை ஏதுமில்லை..
அவசரத்தில் எழுதினாலும்..
அற்புதமாகவே உள்ளது...
வேண்டுகோளை நிறைவேற்றியதற்கு மிக்க நன்றி...

நன்றி..நன்றி..நன்றி..இளவேனில் அண்ணா...!! :))

Sri said...

@ YILAVEANIL
//சகோதரி..
//ம்ம்ம்ம்...!!(ஆண்டவா இவருக்கு சமையல் மறந்துடக் கூடாது..!! ;)) //
நான்கு வருடங்களாய் சமைக்கிறேன்..
இனியும் சொந்த சமையல்தான்..
எனவே மறப்பதற்கு வாய்ப்புக்கள் குறைவு..//

:))

////நல்லா இல்லைனா திட்டமாட்டீங்க தானே?? ;)) //
திருத்தம் சொல்லவே பெரிதும் தயங்கும் நான் உங்களைத் திட்டுவதா? வாய்ப்பே இல்லை..//

:))

////மேல போட்ருக்கேன் உங்கள் சார்பா.//
"என் சார்பாக" என்று பெருமைபடுத்தியதற்கு மிக்க நன்றி..//

:))

//நான் என் ஆசிரியர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து ஒரு பதிவு மட்டும் எழுதினேன், பின் அழைத்துப் பேசினேன்...
பதிவை படித்து விட்டு கருத்துக் கூறுங்களேன்..
அகம் மிக மகிழ்வேன்...//

பார்த்தேன் அண்ணா..!! :))

Sri said...

@ ஆயில்யன்
////கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாக
மட்டுமே நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!//
அக்கா!
கலக்கல் :)//

நன்றி அண்ணா..!! :))

Sri said...

@ Saravana Kumar MSK
////கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாக
மட்டுமே நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!//
ஆகா.. இன்று ஆசிரியரும் சமைப்பது போன்ற உருவகமா??
செமையான சமையல் மூடில் இருகிறீர்கள் போலும்..//

அடடா அத நான் கவனிக்கலையே..!! ;))

Sri said...

@ Saravana Kumar MSK
//45 கமெண்டுக்கு அப்பறம் வந்து இருக்கிறேன் என்று நினைத்தேன்.. அப்பாடா.. நீங்கள், நிஜமான நல்லவர், ஆயில்யன், இளவேனில் குரூப் சாட் செய்திருக்கிறீர்கள்..பின்னூட்டங்கள் சுவாரசியம்..//

:)))

Sri said...

@ Saravana Kumar MSK
//உங்கள் உடன்பிறப்புகளுக்காக மிகவும் வருந்துகிறேன்..//

'உடன் பிறப்புகள்' இல்ல ஒன்னே ஒன்னு தான் அதுக்கே இந்த பாடு...!! ;))

//கடவுள் இருப்பின் அவர்களை காப்பாற்றட்டும்..//

Grrrrrrrrrrrrrrr..!! ;)))

Sri said...

@ Saravana Kumar MSK
////(பெட்ருமாஸ் லைட்டே தான் வேணுமா??)"//
எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை காட்சி.. எப்போது பார்த்தாலும் சிரிக்க வைக்கும் காட்சி.. நானும் அடிக்கடி உபயோகிக்கும் சொற்றொடர்..
:)))))))//

அப்படியா?? செம் பின்ச்..!! ;))

Sri said...

@ Saravana Kumar MSK
//நீங்கள் கவிதைகளிலும் கலக்குறீங்க.. தொடர்கதையிலும் பின்றீங்க..
நகைச்சுவையும் பிரமாதம்.. Multi dimensional personality..//

அச்சச்சோ அப்படியா?? ;)) இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்திதான் விரல் டைப் பண்ணி ரணகளமா இருக்கு..!! ;))))))

//சீக்கிரத்தில் நானெல்லாம் இந்த பிளாக் உலகத்தை காலி செய்ய நேரிடும் போலிருக்கிறது..//

அச்சச்சோ அப்பறம் யார் சோக கவிதை எல்லாம் எழுதறது?? ;))

//பி.கு : ஆனால் உங்கள் சமையலை சாப்பிட்டால் இந்த உலகத்தையே காலி செய்ய நேரிடும்//

Grrrrrrrrrrrrrrrrrr...!!

Sri said...

@ மங்களூர் சிவா
///"இவங்க பெரிய நளசக்ரவர்த்தி சொன்னவுடனே நளபாகம் செஞ்சிடப் போறாங்க... கேள்வி வேற...முதல்ல காபி போடு...அப்பறம் நீ சமைக்கலாம்..!!"/

இவங்கன்னு சொன்னாப்டியா இவ-ன்னு சொன்னாரா???//

சிவண்ணா அவன் கோவமா இருந்ததான் மரியாதையே தருவான்..!! ;))

Sri said...

@ மங்களூர் சிவா
//நல்லா இரு தாயி....:)//

நன்றிங்ணா..!! ;))

Sri said...

@ மங்களூர் சிவா
//என்ன கொடுமை மாதவா உனக்கு? காபி எங்கயாவது கடைல போய் குடிச்சிருக்கலாமே?//

:)))))விதி வலியது.!! :)))

Sri said...

@ மங்களூர் சிவா
///
Sri said...
@ நிஜமா நல்லவன்
//என்ன கொடுமை மாதவா உனக்கு? காபி எங்கயாவது கடைல போய் குடிச்சிருக்கலாமே? என்னவோ போ....உன் பாடு....உன் தங்கச்சி உன்னை படுத்தும் பாடு....நாங்க தப்பிச்சதே போதும்//
அவன் கடைக்கு போறேன்னு தான் சொன்னான்..நான் தான் 'வேண்டாம் நானே போட்டுத் தரேன்'னு சொல்லி சொந்த காசுல சூனியம் வெச்சிகிட்டேன்... :(
/
ஏன் தாயி சூனியம் சொந்த செலவுல வெச்சிகிட்டீங்களா? இல்ல காபின்ற பேர்ல அண்ணனுக்கு வெச்சீங்களா?
உண்மைய சொல்லணும்!!:))))//

;))))ரெண்டும் தான்..!! :))

Sri said...

@ A'n'B
//sri உங்க காபி ய copy பண்ண ட்ரை செய்து இருக்கேன்...எப்படி இருக்குனு கொஞ்சம் பார்க்க வாங்க//

இதோ வரேன்...!! :))

Sri said...

@ ஸ்ரீ
//Ha ha ha :)//

நான் கஷ்டபடரத பார்த்தா உங்களுக்கு சிரிப்பாவா இருக்கு அண்ணா?? ;))

Sri said...

@ gayathri
//hai sri எனகும் சமைக்க கத்து தரிங்காள.எங்க அம்மா சமைக்க சொல்ராங்க.உங்கள மாதிரி சமைச்ச next timeb என்ன சமைக்க சொல்ல மாட்டாங்கல்ல..//

Grrrrrrrrrrrrrr...!! ;))

Sri said...

@ Divyapriya
////தெரியாதா சும்மா இருட்டுல கிச்சன் எப்படி இருக்குன்னு பார்க்கத் தான் லைட் போடல,(சமாளிச்சிடோம்ல..!!) //
ஹா ஹா ஹா :-த
//பாலிசி போட்ருக்கற தைரியத்துல குடிக்க ஆரம்பிச்சுட்டான்.//
ROTFL :-)//

நன்றிஸ் அக்கா..!! :))

Saravana Kumar MSK said...

//அடடா அத நான் கவனிக்கலையே..!! ;))//
நீங்க தான் சமைக்கிறதிலையே கவனமா இருதிட்டீங்கள்ள..!!!

//அப்படியா?? செம் பின்ச்..!! ;))//
:))))

//அச்சச்சோ அப்பறம் யார் சோக கவிதை எல்லாம் எழுதறது?? ;)) //
GRRRRRRRRRRRRR..

Sri said...

@ Saravana Kumar MSK
////அடடா அத நான் கவனிக்கலையே..!! ;))//
நீங்க தான் சமைக்கிறதிலையே கவனமா இருதிட்டீங்கள்ள..!!!

//அப்படியா?? செம் பின்ச்..!! ;))//
:))))

//அச்சச்சோ அப்பறம் யார் சோக கவிதை எல்லாம் எழுதறது?? ;)) //
GRRRRRRRRRRRRR..//

:)))))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது