சத்தம் மறைக்கும் ஆயுதம்

என் வளையல்களின்
மாநாட்டில்
அவன்
கவன ஈர்ப்புத்தீர்மானம்
ஒருமனதாய்
இருமனதால்
நிறைவேற்றப்பட்டது
**
இனி உடைபடும்
வளையல்களுக்காய்
நீ வருந்தவேண்டாம்
அவை இந்நேரம்
மோட்ஷம் அடைந்திருக்கும்
**
வளையல்
ஏன்டா பிடிச்சிருக்கு??
உன் முத்தத்தின்
சத்தம் மறைக்கும்
ஆயுதம் என்பதாலா??
**
என் உடையாத
வளையல்களுக்கு
முத்தம் தராதே
உடைந்த
வளையல்களின்
சத்தம் தாங்கமுடியவில்லை
**
உன்னிடமிருந்து
உதிர்ந்து விழுந்த
முத்தத்திற்கு
மௌன அஞ்சலி
செலுத்தின
உடைந்த
என் வளையல்கள்
**
உன் மீது
நான் கொண்ட
காதலைப் போலவே
கணக்கிலடங்காதவை
நமக்காக உடைந்த
என் வளையல்களும்
**
'வலையல்'
தப்புடா
அது
'வளையல்'
ம்ஹீம்
உன்னுடையது மட்டும்
வளைந்திருப்பது அல்ல
வலைவிரிப்பது
**

80 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டூ!

ஆயில்யன் said...

அச்சச்சோ அக்கா !

திங்ககிழமை எப்ப வரும் ஆபிஸ் எப்ப தொறப்பாங்கன்னு இருந்திருப்பாங்க போல :)))))))))))

தமிழ் பிரியன் said...

வளையல் ஓசைக்கு பின்னால இம்புட்டு இருக்கா..... :)
நல்லா இருக்கு ஸ்ரீ தங்காச்சி!

naanal said...

நல்லா இருக்கு ஸ்ரீ... :))
வளையலுக்கு பின்னாடி இப்படி பல விஷயம் இருக்கோனு யோசிக்கறேன்...
கலக்கல் ஸ்ரீ...

naanal said...

//என் வளையல்களின்
மாநாட்டில்
அவன்
கவன ஈர்ப்புத்தீர்மானம்
ஒருமனதாய்
இருமனதால்
நிறைவேற்றப்பட்டது
**
இனி உடைபடும்
வளையல்களுக்காய்
நீ வருந்தவேண்டாம்
அவை இந்நேரம்
மோட்ஷம் அடைந்திருக்கும்
**
வளையல்
ஏன்டா பிடிச்சிருக்கு??
உன் முத்தத்தின்
சத்தம் மறைக்கும்
ஆயுதம் என்பதாலா??
**
என் உடையாத
வளையல்களுக்கு
முத்தம் தராதே
உடைந்த
வளையல்களின்
சத்தம் தாங்கமுடியவில்லை
**
உன்னிடமிருந்து
உதிர்ந்து விழுந்த
முத்தத்திற்கு
மௌன அஞ்சலி
செலுத்தின
உடைந்த
என் வளையல்கள்
**
உன் மீது
நான் கொண்ட
காதலைப் போலவே
கணக்கிலடங்காதவை
நமக்காக உடைந்த
என் வளையல்களும்
**
'வலையல்'
தப்புடா
அது
'வளையல்'
ம்ஹீம்
உன்னுடையது மட்டும்
வளைந்திருப்பது அல்ல
வலைவிரிப்பது
//

எல்லாமே sooper ஸ்ரீ... :))

வார விடுமுறையில் நிறைய வளையல்கள் வாங்கனீங்களோ.. ;-)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அசந்து போயிட்டேன் நான்.. இத்தனை விசயமிருக்கா இதுல.. :)

இவன் said...

ஆஹா ஆஹா கவிதை சூப்பரா இருக்குது.... எந்த மண்டபத்தில யார்கிட்ட எழுதி வாங்கினீங்க?? :p
சீரியஸாவே நல்லா இருக்குது

சந்திரன் said...

அனைத்தும் அருமையான நினைவுகளான கவிதைகள்...
உங்கள் கரையோர கனவுகள் நிறைவேற என் வாழ்த்துக்கள்..

Saravana Kumar MSK said...

தெரிஞ்சு போச்சி..
புரிஞ்சி போஞ்சி....
படு பயங்கர வளையல் ஆராய்ச்சி..


//'வலையல்'
தப்புடா
அது
'வளையல்'
ம்ஹீம்
உன்னுடையது மட்டும்
வளைந்திருப்பது அல்ல
வலைவிரிப்பது //

என்னங்க.. உங்க வலையில் எவனோ ஒரு அப்பாவி மாட்டிகிட்டான் போல..!!??

Saravana Kumar MSK said...

//இனி உடைபடும்
வளையல்களுக்காய்
நீ வருந்தவேண்டாம்
அவை இந்நேரம்
மோட்ஷம் அடைந்திருக்கும்//

கலக்கல்.. எப்படியெல்லாம் யோசிக்கறாங்க..

Saravana Kumar MSK said...

//என் உடையாத
வளையல்களுக்கு
முத்தம் தராதே
உடைந்த
வளையல்களின்
சத்தம் தாங்கமுடியவில்லை//

யப்பா.. தாங்க முடியலடா சாமி..

இந்த மாதிரியெல்லாம் எப்படிங்க எழுதறீங்க..??!!!!!

Saravana Kumar MSK said...

"சத்தம் மறைக்கும் ஆயுதம்"

என்னே ஒரு தலைப்பு..!!!
கலக்கல்.. கலக்கல்..

நீங்க கலக்குங்க Sri. ;)

Sri said...

@ ஆயில்யன்

//மீ த பர்ஸ்ட்டூ!//

ஆமா அண்ணா..!! :))

Sri said...

@ ஆயில்யன்

//அச்சச்சோ அக்கா !//

என்னது அச்சச்சோ அக்காவா?? :((

//திங்ககிழமை எப்ப வரும் ஆபிஸ் எப்ப தொறப்பாங்கன்னு இருந்திருப்பாங்க போல//

என்னதான் உண்மையா இருந்தாலும் அத இப்படியா அண்ணா எல்லாருக்கும் மத்தில போட்டு உடைக்கறது?? ;))

Sri said...

@ தமிழ் பிரியன்

//வளையல் ஓசைக்கு பின்னால இம்புட்டு இருக்கா.....//

இருக்குன்னு தான் நினைக்கறேன் அண்ணா..!! ;))

//நல்லா இருக்கு ஸ்ரீ தங்காச்சி!//

ரொம்ப நன்றி அண்ணா..!! :))

Sri said...

@ naanal

//நல்லா இருக்கு ஸ்ரீ... :))
வளையலுக்கு பின்னாடி இப்படி பல விஷயம் இருக்கோனு யோசிக்கறேன்..கலக்கல் ஸ்ரீ...//

ரொம்ப நன்றி அக்கா..!! :))

Sri said...

@ Naanal

//எல்லாமே sooper ஸ்ரீ... :))

வார விடுமுறையில் நிறைய வளையல்கள் வாங்கனீங்களோ..//

வளையல் கிடைக்காத சோகத்துல எழுதினது அக்கா..!! :((

Sri said...

@ முத்துலெட்சுமி-கயல்விழி

//அசந்து போயிட்டேன் நான்..//

நிஜம்மாவா அக்கா?? ;))

//இத்தனை விசயமிருக்கா இதுல.//

:)))))

நன்றி அக்கா முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்...!! :))

Sri said...

@ இவன்

//ஆஹா ஆஹா கவிதை சூப்பரா இருக்குது....//

நன்றிஸ்...!! ;))

//எந்த மண்டபத்தில யார்கிட்ட எழுதி வாங்கினீங்க?? :p//

Grrrrrrrrrrrrrrrr..!!

//சீரியஸாவே நல்லா இருக்குது//

அப்ப சீரியஸாவே நன்றி..!! :))

Sri said...

@ சந்திரன்

//அனைத்தும் அருமையான நினைவுகளான கவிதைகள்...
உங்கள் கரையோர கனவுகள் நிறைவேற என் வாழ்த்துக்கள்..//

நன்றி அண்ணா முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்....!! :))

Sri said...

@ Saravana Kumar MSK

//தெரிஞ்சு போச்சி..
புரிஞ்சி போஞ்சி....
படு பயங்கர வளையல் ஆராய்ச்சி..//

அச்சச்சோ தெரிஞ்சிடிச்சா?? ;))

//என்னங்க.. உங்க வலையில் எவனோ ஒரு அப்பாவி மாட்டிகிட்டான் போல..!!??//

அப்பாவியும் இல்ல படுபாவியும் இல்ல...!! ;))

Sri said...

@ Saravana Kumar MSK

//கலக்கல்.. எப்படியெல்லாம் யோசிக்கறாங்க..//

நன்றிஸ்..!! :))

Sri said...

@ Saravana Kumar MSK

//யப்பா.. தாங்க முடியலடா சாமி..

இந்த மாதிரியெல்லாம் எப்படிங்க எழுதறீங்க..??!!!!!//

:))))

Sri said...

@ Saravana Kumar MSK
//"சத்தம் மறைக்கும் ஆயுதம்"
என்னே ஒரு தலைப்பு..!!!
கலக்கல்.. கலக்கல்..
நீங்க கலக்குங்க Sri. ;)//

இருந்தாலும் உங்க அளவுக்கு தலைப்பெல்லாம் யோசிச்சு எனக்கு வைக்கத் தெரியாதுங்க..!! :(
நன்றி சரவணகுமார்..!! :))

நிஜமா நல்லவன் said...

ஆஹா...தலைப்பு சூப்பரோ சூப்பர்!

நிஜமா நல்லவன் said...

அத்தனையும் கலக்கல் கவிதைகள்!

நிஜமா நல்லவன் said...

ஒரு வளையல் வாங்க முடியாத சோகத்துக்கு இவ்ளோ எபக்ட்டா?

நிஜமா நல்லவன் said...

அடுத்து என்ன கவிதை எழுத போறீங்க 'கவிதாயினி'?

பிரேம்குமார் said...

//உன்னிடமிருந்து
உதிர்ந்து விழுந்த
முத்தத்திற்கு
மௌன அஞ்சலி
செலுத்தின
உடைந்த
என் வளையல்கள்
//


ஏங்க முத்தத்திற்கு அஞ்சலியா? முத்தம் ஒருவருக்கு கொடுக்கப்படும் போது தான் பூக்கும் என்றல்லவா நினைத்திருந்தேன்
;-)
//என் உடையாத வளையல்களுக்கு
முத்தம் தராதே
உடைந்த வளையல்களின்
சத்தம் தாங்கமுடியவில்லை//

அருமை !!!

Jeeves said...

வளையோசைக் கல கலவென கவிதைகள் படிக்குது


- good

Jeeves said...

கவிதாயினி காயத்திரி எழுதாத சோகத்தை தீர்த்து வைக்கும் வகையில் இருக்கும் புது கவுஜாயினிக்கு

வாழ்த்துகள்

Sri said...

@ நிஜமா நல்லவன்

//ஆஹா...தலைப்பு சூப்பரோ சூப்பர்!//

நன்றி அண்ணா..!! :))

Saravana Kumar MSK said...

//அப்பாவியும் இல்ல படுபாவியும் இல்ல...!! ;))//

அப்போ..???!!!

ரொம்ப நல்லவர் மாட்டிகிட்டாரோ..??!!
;)

Sri said...

@ நிஜமா நல்லவன்

//அத்தனையும் கலக்கல் கவிதைகள்!//

:)))

//ஒரு வளையல் வாங்க முடியாத சோகத்துக்கு இவ்ளோ எபக்ட்டா?//

என்ன அண்ணா வளையல்னு சாதாரணமா சொல்லிட்டீங்க?? :(

//அடுத்து என்ன கவிதை எழுத போறீங்க 'கவிதாயினி'?//

என்னது கவிதாயினியா?? ஏன் அண்ணா இந்த கொலைவெறி?? :(

Sri said...

@ பிரேம்குமார்

//ஏங்க முத்தத்திற்கு அஞ்சலியா? முத்தம் ஒருவருக்கு கொடுக்கப்படும் போது தான் பூக்கும் என்றல்லவா நினைத்திருந்தேன்//

இருந்தாலும் அந்த ஒரு முத்தம் அவனைவிட்டு உதிர்ந்து விட்டது தானே..அதற்கான அஞ்சலி தான் அது..!! :))

//அருமை !!!//

நன்றி அண்ணா முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்..!! :))

Sri said...

@ Jeeves

//வளையோசைக் கல கலவென கவிதைகள் படிக்குது
- good//

அப்படியா?? ;)

நன்றி அண்ணா..!! :))

Sri said...

@ Jeeves
//கவிதாயினி காயத்திரி எழுதாத சோகத்தை தீர்த்து வைக்கும் வகையில் இருக்கும் புது கவுஜாயினிக்கு வாழ்த்துகள்//

அண்ணா இது அவ்ளோ சொகமாவா இருக்கு?? :((

Sri said...

@ Saravana Kumar MSK

//அப்போ..???!!!
ரொம்ப நல்லவர் மாட்டிகிட்டாரோ..??!!//

சரவணன் இன்னும் யாரும் மாட்டல...!!மாட்டினா கண்டிப்பா சொல்றேன்..!! :))

Saravana Kumar MSK said...

இனி மாட்டபோகும் அந்த "அவருக்கு" என் ஆழ்ந்த அனுதாபங்கள்..

;)
;)

Jus kidding.. Dont be serious.. :)

Sri said...

@ Saravana Kumar MSK

//இனி மாட்டபோகும் அந்த "அவருக்கு" என் ஆழ்ந்த அனுதாபங்கள்..
Jus kidding.. Dont be serious.//

நானே இது தாங்க சொல்லிட்டு இருக்கேன்..!! ;))

நவீன் ப்ரகாஷ் said...

ஸ்ரீ...
வளையல்கள் இவ்வளவு வேலைகள்
செய்யுமா..?? :)))

எழுதிய வளைக்கரங்கள்
வலைக்கரங்களாக மாறி இழுக்கின்றன
மனதை... :))))

நவீன் ப்ரகாஷ் said...

//உன் மீது நான் கொண்ட
காதலைப் போலவே கணக்கிலடங்காதவை நமக்காக உடைந்த என் வளையல்களும்//

எல்லா வளைகளும் அழகென்றாலும்
இந்த வளை என்னை அதிகம்
வளைத்து விட்டது ஸ்ரீ... :))))

Sri said...

@ நவீன் ப்ரகாஷ்
//ஸ்ரீ...
வளையல்கள் இவ்வளவு வேலைகள்
செய்யுமா..?? :)))//

நீங்களே இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா அண்ணா?? ;))

//எழுதிய வளைக்கரங்கள்
வலைக்கரங்களாக மாறி இழுக்கின்றன
மனதை... //

:)))
நன்றி அண்ணா..!! :))

Sri said...

@ நவீன் ப்ரகாஷ்

//எல்லா வளைகளும் அழகென்றாலும்
இந்த வளை என்னை அதிகம்
வளைத்து விட்டது ஸ்ரீ..//

அப்படியா?? ;)
நன்றி அண்ணா..!! :))

Divyapriya said...

வளையல வச்சு இவ்ளோ விஷயமா? கலக்கல் வரிகள்…

Ramya Ramani said...

யப்பா ஒரு ச்ச்சின்ன்ன பொண்ணு செம்ம ரொமான்டிங்கா கவிதை..கலக்கும்மா நல்லா இருக்கு :)

sathish said...

ஆஹா ஸிஸ்டர் செம ரொமாந்டிக் மூட்ல இருகீங்க போல :)

sathish said...

//'வலையல்'
தப்புடா
அது
'வளையல்'
ம்ஹீம்
உன்னுடையது மட்டும்
வளைந்திருப்பது அல்ல
வலைவிரிப்பது //

அழகு சிந்தனை!

இனியவள் புனிதா said...

எல்லாமே அசத்தல் தங்கச்சி ;-)

இனியவள் புனிதா said...

அட வளையலில் இத்தனை விசயம் இருக்கா?

இனியவள் புனிதா said...

வளையோசையைப் போல் உங்கள் கவிதையும் கலகலன்னு காதல் படிக்குது :-) வாழ்த்துகள் ஸ்ரீ

Sri said...

@ Divyapriya
//வளையல வச்சு இவ்ளோ விஷயமா? கலக்கல் வரிகள்…//

நன்றி அக்கா..!! :))

Sri said...

@ Ramya Ramani
//யப்பா ஒரு ச்ச்சின்ன்ன பொண்ணு செம்ம ரொமான்டிங்கா கவிதை..கலக்கும்மா நல்லா இருக்கு//

சின்ன பொண்ணு உண்மைதான்..!! :)) ஆனா கவிதை என்ன அவ்ளோ ரோமண்டிகா வா இருக்கு?? ;))
நன்றி ரம்யா..!! :))

Sri said...

@ sathish
//ஆஹா ஸிஸ்டர் செம ரொமாந்டிக் மூட்ல இருகீங்க போல//

அப்படில்லாம் இல்ல அண்ணா..!! :))

Sri said...

@ sathish
////'வலையல்'
தப்புடா
அது
'வளையல்'
ம்ஹீம்
உன்னுடையது மட்டும்
வளைந்திருப்பது அல்ல
வலைவிரிப்பது //
அழகு சிந்தனை!//

நன்றி அண்ணா..!! :))

Sri said...

@ இனியவள் புனிதா
//எல்லாமே அசத்தல் தங்கச்சி//

நன்றி அக்கா..!! :))

Sri said...

@ இனியவள் புனிதா

//அட வளையலில் இத்தனை விசயம் இருக்கா?//

ம்ம்ம் இருக்குன்னு தான் நினைக்கிறேன்..!! ;))

Sri said...

@ இனியவள் புனிதா
//வளையோசையைப் போல் உங்கள் கவிதையும் கலகலன்னு காதல் படிக்குது :-) வாழ்த்துகள் ஸ்ரீ//

நன்றி அக்கா வருகைக்கும், வாழ்த்திற்கும்..!! :))

தாமிரா said...

பெண்கள் காதலை கொண்டாடி புலம்புவ‌தைப்போன்ற காதல் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. (ஏன்னா அது நிஜத்தில் நடப்பதில்லை என்பதாலா?) அதைப்போன்ற கவிதைகள் அரிது. இது மிக அருமை.

Sri said...

@ தாமிரா
//பெண்கள் காதலை கொண்டாடி புலம்புவ‌தைப்போன்ற காதல் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.//

அப்படியா?? :))

//(ஏன்னா அது நிஜத்தில் நடப்பதில்லை என்பதாலா?)//

நிஜத்தில் நடப்பதையும் சிலர் கவிதையாக எழுதுவதுண்டு.. சொல்வதுதான் இல்லை..!! :))


//அதைப்போன்ற கவிதைகள் அரிது. இது மிக அருமை.//

நன்றி அண்ணா முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும்..!! :))

YILAVEANIL said...

வணக்கம்..

சற்றே அதிகமாகி விட்ட பணிப் பளுவால்
இந்த பதிவிற்கான என் எண்ணப் பதிவை இத்தனை நாட்கள் கழிந்த பின்பு எழுதுகிறேன்..

காதல் வாழ்வில், வளையலுக்கு சிறப்பான இடம் உண்டு..

கரம் கோர்த்து நடக்கும் போது மெல்ல ஒன்றோடொன்று மோதி ஒலிக்கும் வளையல்
நம்மை சுயநினைவுக்கு மெல்ல அழைத்துவரும்..

சில சமயம் தவறுதலாய் உடையும் கண்ணாடி வளையல் 5 நிமிடம் அதிகம் பெற்றுததரும்...

"உன் கையில் சுழன்றாடும் வளையலாய் நான் இல்லாது போனேனே..." என்று முன்னொரு முறை எழுதிய கவிதையில் புலம்பியிருக்கிறேன்..

இன்று உங்களின் படைப்பைப் படித்த பின்பு..
என் உளறல் உள்ளத்தின் உளறல் என்றே பொருள் கொண்டு
மர்மப் புன்னகை பூத்தேன்..

மென்மேலும் எழுதுங்கள்...

அடுத்த முறை..

கொலுசுக்காக...

smiles

Yilaveanil

Sri said...

@ YILAVEANIL
//வணக்கம்..
சற்றே அதிகமாகி விட்ட பணிப் பளுவால்
இந்த பதிவிற்கான என் எண்ணப் பதிவை இத்தனை நாட்கள் கழிந்த பின்பு எழுதுகிறேன்..//

உங்கள் வருகையே மகிழ்ச்சி அண்ணா..!! :))

//காதல் வாழ்வில், வளையலுக்கு சிறப்பான இடம் உண்டு..
கரம் கோர்த்து நடக்கும் போது மெல்ல ஒன்றோடொன்று மோதி ஒலிக்கும் வளையல்
நம்மை சுயநினைவுக்கு மெல்ல அழைத்துவரும்..சில சமயம் தவறுதலாய் உடையும் கண்ணாடி வளையல் 5 நிமிடம் அதிகம் பெற்றுததரும்...
"உன் கையில் சுழன்றாடும் வளையலாய் நான் இல்லாது போனேனே..." என்று முன்னொரு முறை எழுதிய கவிதையில் புலம்பியிருக்கிறேன்..//

அழகான விளக்கம். உங்கள் கவிதைகளையும் வாசித்திருக்கிறேன் அண்ணா..!! :))

//இன்று உங்களின் படைப்பைப் படித்த பின்பு.. என் உளறல் உள்ளத்தின் உளறல் என்றே பொருள் கொண்டு மர்மப் புன்னகை பூத்தேன்//

:))))

//மென்மேலும் எழுதுங்கள்...//

கண்டிப்பாக அண்ணா...!! :))

//அடுத்த முறை..
கொலுசுக்காக...//

அச்சச்சோ அப்படியா?? ;))

நன்றி அண்ணா வருகைக்கும், வாழ்த்திற்கும், அதைவிட மிக மிக அழகான விளக்கத்திற்கும்..!! :)))))

அனுஜன்யா said...

ஸ்ரீ,

ஆஹா, சின்னத்தங்கை என்று நினைத்திருந்தால் இவ்வளவு விஷயம் இருக்கா வளையலில்? Amazing.

Jokes apart, ஸ்ரீ, இது காதலை சொல்லும் மிக அழகான கவிதை. இவ்வளவு நன்றாக எழுதக்கூடிய நீ மென்மேலும் கவிதைகள் எழுதத் துவங்கு. அழகிய வார்த்தைப் பிரயோகங்கள் உனக்கு இலகுவில் வருகிறது.

குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் இலக்கிய புலமை இருக்குமாம். அது உனக்கு வாய்த்திருப்பதில் அண்ணன்களான எனக்கும் மற்றும் ஆயில்யனுக்கும் மகிழ்ச்சியே. நாங்கள் இனி பின்னூட்டம் எழுதுவது மட்டும் செய்யப்போகிறோம்.

Way to go sissy. You have made us proud.

அனுஜன்யா

பி.கு. : லேட்டா வந்தாலும்.....

Saravana Kumar MSK said...

அனுஜன்யா.. ரொம்ப உணர்சிவசப்பட்டுடீங்க ஸ்ரீ-யின் கவிதைகளை படித்த பின்..

//நாங்கள் இனி பின்னூட்டம் எழுதுவது மட்டும் செய்யப்போகிறோம். //
அதற்காக நீங்கள் எழுதாமல் இருந்து விடாதீர்கள்..

நீங்களும் சிறப்பாகவே எழுதுகிறீர்கள். மேஜிகல் ரியலிசம், புனைவு, பி.ந இன்னும் பல இருக்கிறது..
:)

Saravana Kumar MSK said...

என்ன ஆச்சர்யம்...!!!

என் நூறாவது பின்னூட்டமிது உங்கள் தளத்தில்..
:)

Sri said...

@ அனுஜன்யா
//ஸ்ரீ,
ஆஹா, சின்னத்தங்கை என்று நினைத்திருந்தால் இவ்வளவு விஷயம் இருக்கா வளையலில்? Amazing.//

சின்னத்தங்கை தான் அண்ணா..!! :))

//Jokes apart, ஸ்ரீ, இது காதலை சொல்லும் மிக அழகான கவிதை. இவ்வளவு நன்றாக எழுதக்கூடிய நீ மென்மேலும் கவிதைகள் எழுதத் துவங்கு. அழகிய வார்த்தைப் பிரயோகங்கள் உனக்கு இலகுவில் வருகிறது.//

கண்டிப்பாக எழுதுகிறேன் அண்ணா..!! :))

//குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் இலக்கிய புலமை இருக்குமாம். அது உனக்கு வாய்த்திருப்பதில் அண்ணன்களான எனக்கும் மற்றும் ஆயில்யனுக்கும் மகிழ்ச்சியே.//

வெற்றி..!!வெற்றி..!!வெற்றி..!! :)))))))))


//நாங்கள் இனி பின்னூட்டம் எழுதுவது மட்டும் செய்யப்போகிறோம்.//

அச்சச்சோ இப்படி ஒரு முடிவுக்கு இவ்ளோ சீக்கரம் நீங்க வரக்கூடாது அண்ணா..!! :((

//Way to go sissy. You have made us proud.//

Really??? :)))

//பி.கு. : லேட்டா வந்தாலும்..//

லேடஸ்டா பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி..!! ;))

Sri said...

@ Saravana Kumar MSK
//அனுஜன்யா.. ரொம்ப உணர்சிவசப்பட்டுடீங்க ஸ்ரீ-யின் கவிதைகளை படித்த பின்..
//நாங்கள் இனி பின்னூட்டம் எழுதுவது மட்டும் செய்யப்போகிறோம். //
அதற்காக நீங்கள் எழுதாமல் இருந்து விடாதீர்கள்..
நீங்களும் சிறப்பாகவே எழுதுகிறீர்கள். மேஜிகல் ரியலிசம், புனைவு, பி.ந இன்னும் பல இருக்கிறது..//

இதை நான் முழுமையாக வழிமொழிகிறேன்..!! :)))

Sri said...

@ Saravana Kumar MSK
//என்ன ஆச்சர்யம்...!!!
என் நூறாவது பின்னூட்டமிது உங்கள் தளத்தில்..//

அப்படியா?? :)) வாழ்த்துக்கள்,;)) மற்றும் நன்றிகள் சரவணா..!! :))))

Vishnu... said...

மிக
அருமையான கவிதை ...
தாமதமாக வந்திருக்கிறேன் என புரிகிறது ...
தவறாக எடுக்க வேண்டாம் ...)

வளையல் ஓசைக்கு
இத்தனை மொழிகளா ...

அருமை
மிக மிக அருமை
வாழ்த்துக்கள் ..

Vishnu... said...

//'வலையல்'
தப்புடா
அது
'வளையல்'
ம்ஹீம்
உன்னுடையது மட்டும்
வளைந்திருப்பது அல்ல
வலைவிரிப்பது //

இந்த வரிகள் மிகவும் பிடித்தது....

சூப்பரோ சூப்பர் ...

Sri said...

@ Vishnu...
//மிக
அருமையான கவிதை ...
தாமதமாக வந்திருக்கிறேன் என புரிகிறது ...
தவறாக எடுக்க வேண்டாம் ...//

நீங்கள் தவறாமல் வருவதே எனக்கு மகிழ்ச்சி..!! :))

//வளையல் ஓசைக்கு
இத்தனை மொழிகளா ...
அருமை
மிக மிக அருமை
வாழ்த்துக்கள் ..//

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி..!! :))

Sri said...

@ Vishnu...
////'வலையல்'
தப்புடா
அது
'வளையல்'
ம்ஹீம்
உன்னுடையது மட்டும்
வளைந்திருப்பது அல்ல
வலைவிரிப்பது //

இந்த வரிகள் மிகவும் பிடித்தது....

சூப்பரோ சூப்பர் ...//

நன்றிகள்....!! :)))))

Maddy said...

"முத்தமெனும் சத்தம் மறைக்கும் ஆயுதம்"

குட்டி பொண்ணே!! என்னவொரு கற்பனை?? இது கண்டு தெரிந்து கொண்டதோ? இல்லை காணமல் அறிந்து கொண்டதோ?? கற்பனை தான் என்றால், கனவு காண்!! காலம் வரும்போது அது கைகூடட்டும், அதுவரை கவிதைகள் மலரட்டும். கொஞ்சம் அனுபவமும் கலந்திருந்தால் அதற்கும் வாழ்த்துக்கள்

Sri said...

@ Maddy
//"முத்தமெனும் சத்தம் மறைக்கும் ஆயுதம்"

குட்டி பொண்ணே!! என்னவொரு கற்பனை??//

நன்றி அண்ணா..!! :))

//இது கண்டு தெரிந்து கொண்டதோ?//

அச்சச்சோ இல்லை..!! :(

//இல்லை காணமல் அறிந்து கொண்டதோ??//

ஆமாம்..!! :))

//கற்பனை தான் என்றால், கனவு காண்!! காலம் வரும்போது அது கைகூடட்டும், அதுவரை கவிதைகள் மலரட்டும். கொஞ்சம் அனுபவமும் கலந்திருந்தால் அதற்கும் வாழ்த்துக்கள்//

அனுபவம் இல்லை..!! :))

முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி அண்ணா..!! :))

என் அண்ணா பேரும் மாதவன் தான். நான் அவன Maddy-ன்னு தான் கூப்பிடுவேன்..!! :))நீங்கள் அவன் இல்லையே?? ;))

gayathri said...

"வளையல்
ஏன்டா பிடிச்சிருக்கு??
உன் முத்தத்தின்
சத்தம் மறைக்கும்
ஆயுதம் என்பதாலா??"


இந்த வரிகள் நன்றாக உள்ளது.உங்கள கல்யாணம் பன்றவரு பாவம்.உங்களுக்கு வலயல் வாங்கி koduthey avar paisava kali panniduvenganu nenaikeren.Tamil type panna thereyathu naan eluthey vachi irukartha thayavu senji thettama padika sri ok.

naanal said...

//என் அண்ணா பேரும் மாதவன் தான். நான் அவன Maddy-ன்னு தான் கூப்பிடுவேன்..!! :))நீங்கள் அவன் இல்லையே?? ;)) //

:))

Sri said...

@ gayathri
//"வளையல்
ஏன்டா பிடிச்சிருக்கு??
உன் முத்தத்தின்
சத்தம் மறைக்கும்
ஆயுதம் என்பதாலா??"
இந்த வரிகள் நன்றாக உள்ளது.//

நன்றி காயத்ரி...!! :)

//உங்கள கல்யாணம் பன்றவரு பாவம்.உங்களுக்கு வலயல் வாங்கி koduthey avar paisava kali panniduvenganu nenaikeren.//

என்ன காயத்ரி இப்படி சொல்லிட்டீங்க??:( சரி பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!! ;)


//Tamil type panna thereyathu naan eluthey vachi irukartha thayavu senji thettama padika sri ok.//

Thats ok Gayathri..!! :))
நன்றி முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்...!! :))

Sri said...

@ naanal
////என் அண்ணா பேரும் மாதவன் தான். நான் அவன Maddy-ன்னு தான் கூப்பிடுவேன்..!! :))நீங்கள் அவன் இல்லையே?? ;)) //
:))//

:))))))))

ரமணன்... said...

Niccceeeee one :)

ஸ்ரீமதி said...

@ ரமணன்...
//Niccceeeee one :)//

Thank you Ramanan.. :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது