நாங்களும் சமைப்போம்ல..!!-2

கஷ்டப்பட்டு ஒருவழியா காபி போட்டு முடிச்சு வெளில வந்தா அடுத்தது டிஃபன் பண்ணுன்னு வாய் கூசாம சொல்றான்....என்னடா இது வம்பா போச்சு.. காபி போட்டதே ஏதோ ஒலிம்பிக்-ல கோல்ட் மெடல் வாங்கின மாதிரி நான் நினைச்சா.... அதுக்குமேல டிஃபன் வேற செய்ய சொல்றானே இவனுக்கு உயிர் மேல ஆசையே இல்லையா??-ன்னு நினைச்சேனே தவிர சொல்லமுடியல...!!

'சரி என்னதான் நடக்கும் நடக்கட்டுமே'-ன்னு... என்னை இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போன என் அக்காவ திட்டிகிட்டே போய் பார்த்தா காலைல தோசை செய்ய சொல்லி எழுதிவெச்சிட்டு போயிருக்கா (அவ போகும் பொது எல்லாரும் தூங்கிட்டதுனால இப்படி ஒரு ஏற்பாடு)..எனக்கும் தோசைக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம். அதுக்கு ஒரு சின்ன பிளாஷ் பேக் இருக்கு...எல்லாரும் மேல பாருங்க...

அப்ப நான் டென்த் ஸ்டாண்டர்ட் படிச்சுகிட்டு இருந்தேன்....அம்மா திடீர்ன்னு பாட்டிக்கு உடம்பு சரி இல்லன்னு ஊருக்குப் போகவேண்டியதா போச்சு... நான் சின்ன பொண்ணுங்கறதால:) எல்லா பொறுப்பையும் (சமையல் உட்பட) அண்ணாகிட்ட ஒப்படைச்சிட்டு அம்மா போய்ட்டாங்க... இந்த இடத்துல என் அண்ணனோட சமையல் திறமையும், அதனால அவன் என்னைப் படுத்தும் பாடையும் சொல்லியாகனும்...

அவன் நல்லா காபி போடுவான், டீ போடுவான், எழுமிச்சம்பழம் ஜூஸ் போடுவான், நல்லா தோசை செய்வான்.. ஆனா இவன் இதெல்லாம் செய்யனும்னா நான் அவனுக்கு ஹெல்ப் பண்ணனும்... எப்படினா?? ஃபார் எக்ஸாம்பில் அவன் ஜூஸ் போடறான்னா.. நான் தான் அவன் உட்கார்ந்துருக்கற இடத்துக்கு எழுமிச்சம்பழம், டம்ளர், தண்ணி, பில்டர், சர்க்கரை, ஒரு பெரிய பாத்திரம், ஸ்பூன், உப்பு (தெரிஞ்சவரைக்கும் லிஸ்ட் பண்ணிருக்கேன்..)எல்லாத்தையும் கொண்டு போகணும்...அவன் அந்த பழத்த பிழிஞ்சு ஜூஸ் போட்டுட்டு... சர்க்கரை சரியா இருக்கான்னு பார்க்கறேன்னு சொல்லிட்டு.... பாதி ஜூஸ குடிச்சிட்டு..போனா போகுதுன்னு எனக்கும் கொஞ்சம் தருவான்... அதுவும் சர்க்கரை தண்ணி மாதிரி இருக்கும்... நானும் அதை ஜூஸ்ன்னு நம்பி குடிச்சிட்டு... மறுபடியும் நான் கொண்டுவந்த எல்லா பொருளையும் கழுவி, தொடைச்சு வெப்பேன்.

இப்படி அண்ணாங்கற பேர்ல கொடுங்கோல் ஆட்சி அவன் செஞ்சுட்டு வந்தப்பதான், என் அம்மா தெரியாத்தனமா அடுப்படிய அவன் கஸ்டடில விட்டுட்டு போய்ட்டாங்க...!!அவன் சும்மா இருப்பானா??

"ஏய் உனக்கு தோசை செய்யத் தெரியுமா??"

"ம்ஹும்..!!"

"சரி போய் மாவ எடுத்துண்டு வா..!! அந்த குழிகரண்டிய எடு... மாவ கலக்கு... தோசை திருப்பிய எடு.... தட்டு எடு... தோசைக் கல்ல எடு...", ன்னு ஓவரா வேலை சொல்லிக்கிட்டு இருந்தான்.... (இதுல எனக்கு எந்த வேல தெரியுமோ அத மட்டும் செஞ்சேன்..!! :))

"ஏய் இதுதான் உங்க ஊர்ல தோசைக் கல்லா??"

"அதுத் தெரியாது... ஆனா அம்மா இதுலதான் அன்னைக்கு சப்பாத்தி பண்ணா..!!", அப்பாவியா நான் தான்...

"லூசே சப்பாத்தி இடற கல்லு வேற.... தோசை சுடர கல்லு வேற...!!"

அன்னைக்கு விட்டது தான்...நான் அப்பறம் அந்த தோசைய பத்தியோ, தோசை கல்லைப் பத்தியோ வாயே தொறக்க மாட்டேன்... ஆனா விதி யார விட்டது?? இன்னைக்கு அக்கா ரூபத்துல வந்து மறுபடியும் என்னை அந்த கல்ல தேடவெச்சிடிச்சு...!! :(

நான் அந்த கல்லு எங்க இருக்குன்னு தேட போறப்பதான்... கிச்சன் வாசல்ல ஒரு நிழல்... யார்ரா அதுன்னு நிமிர்ந்து பார்த்தா... என் உடன்பிறப்பு அப்படியே ஒரு யோசனையோட என்னை பார்த்தது... "என்னடா??"

"ஹே உனக்குதான் தோசைக் கல்லுக்கும், சப்பாத்தி கல்லுக்கும் வித்தியாசமே தெரியாதே..!! அப்பறம் எப்படி தோசை சுடரன்னு பார்க்கவந்தேன்..!!"

'கிராதகா என்ன ஒரு சந்தோஷம் மூஞ்சில?' நான் கொஞ்ச நேரம் யோசிச்சது நல்லதா போச்சு...

"சரி சரி கோவப்படாத... நகரு நானே தோசை வார்க்கறேன்..!!"

"வேண்டாம் நானே பண்றேன்... என்ன கொஞ்சம் பிஞ்சிபோயிடும்... ஷேப்லெஸ்ஸா இருக்கும்..." (அவனோட வீக்னெஸ்)...

"அதெல்லாம் வேண்டாம்.. நானே வார்க்கறேன்... நீ நகரு..!!"

"பரவால்லடா..!!"

"அக்கா வந்தா நீதான் தோசை ஊத்தினன்னு சொல்றேன் நகரு..!!"

'ஹப்பா தப்பிச்சுட்டேன்...!!'.

அப்பறம் என்ன நல்லா சாப்டுட்டு ஆபீஸ் வந்தாச்சு... சும்மா சொல்லக்கூடாது நல்லாவே தோசை செய்திருந்தான் மாதவன்...!! :D-அன்புடன்,
ஸ்ரீ.

70 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

Ramya Ramani said...

எப்படியோ அண்ணன வேலை வாங்கியாச்சு..ஹிம்ம் ஒரு டெக்னிக் சொல்லி தறேன்..ரகசியமா வெச்சுக்கனும்..நாம சமைக்காம உடன் பிறப்ப வெச்சு வேலை வாங்கனுமா, சும்மாவே எல்லாரும் வீட்ல இருக்கும் போது "ஹே நீ நேத்து பண்ணியே தோசை செம்ம சாவ்ட். அம்மா நீங்க இவ பண்ற தோசைய சாப்பிட்டிருக்கனும்..சூப்பர்.."அப்படின்னு பிட்ட போடுங்க..ஆனா கொஞசம் கம்மியா நம்ம மேல அவங்களுக்கு சந்தேகம் வராத மாதிரி பண்ணனும்..

Don't Worry you can master this art with practise :)

Saravana Kumar MSK said...

//அப்ப நான் டென்த் ஸ்டாண்டர்ட் படிச்சுகிட்டு இருந்தேன்....அம்மா திடீர்ன்னு பாட்டிக்கு உடம்பு சரி இல்லன்னு ஊருக்குப் போகவேண்டியதா போச்சு... நான் சின்ன பொண்ணுங்கறதால:) //

ஸோ.. இப்போ நீங்க சின்ன பொண்ணு இல்ல.. அந்த எண்ணத்தை மாத்திகோங்க..

ஒரு க்ளூ கிடைச்சாச்சி.. :)))

Saravana Kumar MSK said...

"மாதவன் அண்ணா சமைத்திட்டார்.." என்று தலைப்பை மாற்றவும்..
நீங்களோ சமைச்சீங்க..?? ("நாங்களும் சமைப்போம்ல..!!-2")..

நாங்கனா எங்க அண்ணாவும் சேர்த்துதான் என்றெல்லாம் சொல்ல கூடாது..
:)))

Saravana Kumar MSK said...

//Ramya Ramani said...
Don't Worry you can master this art with practise :)//


ரம்யா.. நீங்க ரொம்ப நல்லவங்க..

Saravana Kumar MSK said...

இன்னும் எத்தனை பகுதிகள் வரும்..???

ஆயில்யன் said...

அச்சச்சோ அக்கா!

நான் திங்கட்கிழமையில இங்க வந்து கமெண்ட் போடறதால்ல பிளான் பண்ணி வச்சிருந்தேன் :(

ஆயில்யன் said...

//saravana kumar msk said...
இன்னும் எத்தனை பகுதிகள் வரும்..??//

இப்பத்தானே காலை தோசை முடிஞ்சிருக்கு!

எனக்கென்னமோ அண்னனை வைச்சு வேலை வாங்கி நல்லா சமைச்சு புல்லாம் முழுங்கினத பார்ட்டு பார்டா போட பிளான் பண்ணிட்டாங்கன்னுத்தான் நினைக்கிறேன்!

ஆயில்யன் said...

//ramya ramani said...
எப்படியோ அண்ணன வேலை வாங்கியாச்சு..ஹிம்ம் ஒரு டெக்னிக் சொல்லி தறேன்..ரகசியமா வெச்சுக்கனும்..நாம சமைக்காம உடன் பிறப்ப வெச்சு வேலை வாங்கனுமா, சும்மாவே எல்லாரும் வீட்ல இருக்கும் போது "ஹே நீ நேத்து பண்ணியே தோசை செம்ம சாவ்ட். அம்மா நீங்க இவ பண்ற தோசைய சாப்பிட்டிருக்கனும்..சூப்பர்.."அப்படின்னு பிட்ட போடுங்க..ஆனா கொஞசம் கம்மியா நம்ம மேல அவங்களுக்கு சந்தேகம் வராத மாதிரி பண்ணனும்..

Don't Worry you can master this art with practise :)///

அவ்வ்வ்வ்வ்

எல்லாம் ஒரு க்ரூப்பாத்தான் திரியறாங்க போல!!!

பாவம் அண்ணன்கள் :((

ஆயில்யன் said...

//எனக்கும் தோசைக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்./

இட்லிக்கு எத்தினியாம் பொருத்தம்!

ஆயில்யன் said...

//அதுக்கு ஒரு சின்ன பிளாஷ் பேக் இருக்கு...எல்லாரும் மேல பாருங்க...//

ஒரு தோசைக்கு பின்னாடி இம்மாம் பெரிய பிளாஷ் பேக்ன்னா !

இனி வரும் சாதம் சாம்பார் பொறியலுக்கெல்லாம் எம்மாம் பெரிய பிளாஷ் பேக்கெல்லாம் முன்னாடி வரப்போகுதோ????

ஆயில்யன் said...

//நான் தான் அவன் உட்கார்ந்துருக்கற இடத்துக்கு எழுமிச்சம்பழம், டம்ளர், தண்ணி, பில்டர், சர்க்கரை, ஒரு பெரிய பாத்திரம், ஸ்பூன், உப்பு (தெரிஞ்சவரைக்கும் லிஸ்ட் பண்ணிருக்கேன்..)எல்லாத்தையும் கொண்டு போகணும்.//

எல்லா அண்ணன்களுமே இப்படித்தான் போல :)

ஆயில்யன் said...

//லூசே சப்பாத்தி இடற கல்லு வேற.... தோசை சுடர கல்லு வேற...!!"///

அட அண்ணனுக்கு தெரிஞ்சுப்போச்சா?

BTW எனக்கே இப்பத்த்தான் தெரியும் கல்லு வேற வேற இருக்குன்னு :(((

ஆயில்யன் said...

//அக்கா வந்தா நீதான் தோசை ஊத்தினன்னு சொல்றேன் நகரு..!!" ///

ஆஹா மொத்தத்தில இதுக்குத்தான் இம்மாம் பெரிய பில்ட் அப் நல்லா தின்னாச்சுல்ல அப்படியே ரெஸ்ட் எடுத்துட்டு போகலாம்ம்னு ஆபிஸ் வந்தீகளா?

நல்லது!

:)

sathish said...

:))

gayathri said...

"சும்மா சொல்லக்கூடாது நல்லாவே தோசை செய்திருந்தான் மாதவன்...!! :D "

மத்தவங்க செஞ்ஞி தந்தா நல்லா தான் இருக்கும் பா.
நிங்காலும் என்ன மாதிரி தானா.........

ஸ்ரீ said...

Dhosayum senjaacha gud.

Aaamam adhu enna pera ஸ்ரீ nu maathiyaacha?

Hello adhu copy right panni irukuma ;)

Pinnadi case poduven

ஆயில்யன் said...

//ஸ்ரீ said...
Dhosayum senjaacha gud.

Aaamam adhu enna pera ஸ்ரீ nu maathiyaacha?

Hello adhu copy right panni irukuma ;)

Pinnadi case poduven//

என்னது அச்சச்சோ அக்கா மேல கேஸ் போடுவீங்களா????

யேய்ய்ய்ய்ய்

கடையை மூடுங்கடா!

பஸ்ஸை கொளுத்துங்கடா?

தெருவுல போறவங்கள போட்டு கும்முங்கடா???

இன்னும் ஒன் அவர்ல இது கலவர பூமியாத்தான் நீயுஸ்ல கவர் ஆகணும்!

Divyapriya said...

//மறுபடியும் நான் கொண்டுவந்த எல்லா பொருளையும் கழுவி, தொடைச்சு வெப்பேன்.//

ஹய்யோ பாவம்...அதுக்கு ஜுஸ் போட்டு இருந்துருக்கலாம் ;-)

Divyapriya said...

//அப்பறம் என்ன நல்லா சாப்டுட்டு ஆபீஸ் வந்தாச்சு... சும்மா சொல்லக்கூடாது நல்லாவே தோசை செய்திருந்தான் மாதவன்...!! :D //

உங்க அண்ணனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் :-)

Divyapriya said...

@ Ramya

//Don't Worry you can master this art with practise :)//


experience ramya??? ;-)

நிஜமா நல்லவன் said...

/Ramya Ramani said...

Don't Worry you can master this art with practise :)/

:)

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

//எனக்கும் தோசைக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்./

இட்லிக்கு எத்தினியாம் பொருத்தம்!/


குட் கொஸ்டின்....நானும் ரிப்பிட்டிக்கிறேன்...:)

நிஜமா நல்லவன் said...

சரி...எனக்கு ஒரு சந்தேகம்....மாதவன் உன்னோட ப்ளாக் படிக்கிறானா இல்லையா?....இரு..இரு..நானே அவன் கிட்ட போட்டு கொடுத்திடுறேன்...:)

இவன் said...

என் தங்கச்சிக்கு நான் செஞ்ச அதே கொடுமை உங்க அண்ணன் உங்களுக்கும் செஞ்சிருக்கார்... என்ன அவர் மாதவன் நான் ஆதவன்

இவன் said...

//அப்ப நான் டென்த் ஸ்டாண்டர்ட் படிச்சுகிட்டு இருந்தேன்....//

இப்ப வரைக்கும் அதுதானே ஸ்ரீ நீங்க படிச்சிருக்கீங்க??

நிஜமா நல்லவன் said...

/அதுக்குமேல டிஃபன் வேற செய்ய சொல்றானே இவனுக்கு உயிர் மேல ஆசையே இல்லையா??-ன்னு நினைச்சேனே தவிர சொல்லமுடியல...!!/


உனக்கு உயிர் மேல ஆசைன்னு நினைக்கிறேன்...இல்லைன்னா நினைச்சதை சொல்லி இருப்பியே:)

நிஜமா நல்லவன் said...

/'சரி என்னதான் நடக்கும் நடக்கட்டுமே'-ன்னு... என்னை இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போன என் அக்காவ திட்டிகிட்டே போய் பார்த்தா காலைல தோசை செய்ய சொல்லி எழுதிவெச்சிட்டு போயிருக்கா/

தோசை செய்ன்னு மட்டும் தான் எழுதி வச்சிருந்தாங்களா இல்லை செய்முறையும் எழுதி வச்சிருந்தாங்களா?????

நிஜமா நல்லவன் said...

/எனக்கும் தோசைக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்./

எனக்கு ஏழரை (பொருத்தம்)ன்னு நினைக்கிறேன்...அதான் தெரியாத்தனமா இங்க வந்துட்டேன்:)

நிஜமா நல்லவன் said...

/"அதுத் தெரியாது... ஆனா அம்மா இதுலதான் அன்னைக்கு சப்பாத்தி பண்ணா..!!", அப்பாவியா நான் தான்.../

நீ அப்பாவியா இல்ல 'அடிப்பாவி'யான்னு மைல்டா ஒரு டவுட் வருதே:)

Sri said...

@ Ramya Ramani
//எப்படியோ அண்ணன வேலை வாங்கியாச்சு..ஹிம்ம் ஒரு டெக்னிக் சொல்லி தறேன்..ரகசியமா வெச்சுக்கனும்..நாம சமைக்காம உடன் பிறப்ப வெச்சு வேலை வாங்கனுமா, சும்மாவே எல்லாரும் வீட்ல இருக்கும் போது "ஹே நீ நேத்து பண்ணியே தோசை செம்ம சாவ்ட். அம்மா நீங்க இவ பண்ற தோசைய சாப்பிட்டிருக்கனும்..சூப்பர்.."அப்படின்னு பிட்ட போடுங்க..ஆனா கொஞசம் கம்மியா நம்ம மேல அவங்களுக்கு சந்தேகம் வராத மாதிரி பண்ணனும்//

இப்படி தான் அவன இவ்ளோ நாள் ஏமாத்திகிட்டு இருக்கேன்... பார்க்கலாம் இனிமே என்ன ஆகுதுன்னு..!! ;))

//Don't Worry you can master this art with practise//

Thank you Ramya..!! :))

Sri said...

@ Saravana Kumar MSK
////அப்ப நான் டென்த் ஸ்டாண்டர்ட் படிச்சுகிட்டு இருந்தேன்....அம்மா திடீர்ன்னு பாட்டிக்கு உடம்பு சரி இல்லன்னு ஊருக்குப் போகவேண்டியதா போச்சு... நான் சின்ன பொண்ணுங்கறதால:) //
ஸோ.. இப்போ நீங்க சின்ன பொண்ணு இல்ல.. அந்த எண்ணத்தை மாத்திகோங்க..
ஒரு க்ளூ கிடைச்சாச்சி.. :)))//

இப்படி ஒரு சந்தோஷமா??:( சரி மாத்திக்க ட்ரை பண்றேன்..!! :))

Sri said...

@ Saravana Kumar MSK
//"மாதவன் அண்ணா சமைத்திட்டார்.." என்று தலைப்பை மாற்றவும்..
நீங்களோ சமைச்சீங்க..?? ("நாங்களும் சமைப்போம்ல..!!-2")..
நாங்கனா எங்க அண்ணாவும் சேர்த்துதான் என்றெல்லாம் சொல்ல கூடாது..//

:((
:))

Sri said...

@ Saravana Kumar MSK
////Ramya Ramani said...
Don't Worry you can master this art with practise :)//

ரம்யா.. நீங்க ரொம்ப நல்லவங்க..//

ஆமா..!! :))

Sri said...

@ Saravana Kumar MSK
//இன்னும் எத்தனை பகுதிகள் வரும்..???//

அவ்ளோதான் முடிஞ்சு போச்சு..!! :))

Sri said...

@ ஆயில்யன்
//அச்சச்சோ அக்கா!
நான் திங்கட்கிழமையில இங்க வந்து கமெண்ட் போடறதால்ல பிளான் பண்ணி வச்சிருந்தேன் :(//

:))))

Sri said...

@ ஆயில்யன்
////saravana kumar msk said...
இன்னும் எத்தனை பகுதிகள் வரும்..??//
இப்பத்தானே காலை தோசை முடிஞ்சிருக்கு!
எனக்கென்னமோ அண்னனை வைச்சு வேலை வாங்கி நல்லா சமைச்சு புல்லாம் முழுங்கினத பார்ட்டு பார்டா போட பிளான் பண்ணிட்டாங்கன்னுத்தான் நினைக்கிறேன்!//

அதெல்லாம் இல்ல அண்ணா எல்லாத்தையும் என் அக்காவே செஞ்சு பிரிட்ஜ்ல வெச்சிட்டு போய்ட்டா... டிபன் மட்டும் தான் நாங்க..!! :))

Sri said...

@ ஆயில்யன்
//அவ்வ்வ்வ்வ்
எல்லாம் ஒரு க்ரூப்பாத்தான் திரியறாங்க போல!!!
பாவம் அண்ணன்கள் :((//

:))))))))))

Sri said...

@ ஆயில்யன்
////எனக்கும் தோசைக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்./
இட்லிக்கு எத்தினியாம் பொருத்தம்!//

இது என்ன கேள்வி ஏழுக்கப்பறம் எட்டு தானே..?? ;))

Sri said...

@ ஆயில்யன்
////அதுக்கு ஒரு சின்ன பிளாஷ் பேக் இருக்கு...எல்லாரும் மேல பாருங்க...//
ஒரு தோசைக்கு பின்னாடி இம்மாம் பெரிய பிளாஷ் பேக்ன்னா !
இனி வரும் சாதம் சாம்பார் பொறியலுக்கெல்லாம் எம்மாம் பெரிய பிளாஷ் பேக்கெல்லாம் முன்னாடி வரப்போகுதோ????//

அதெல்லாம் நான் இன்னும் ட்ரை பண்ணவே இல்ல... ரசம் மட்டும் ட்ரை பண்ணீருக்கேன்... அதப் பத்தி அப்பறம் சொல்றேன்..!! ;))

Sri said...

@ ஆயில்யன்
////நான் தான் அவன் உட்கார்ந்துருக்கற இடத்துக்கு எழுமிச்சம்பழம், டம்ளர், தண்ணி, பில்டர், சர்க்கரை, ஒரு பெரிய பாத்திரம், ஸ்பூன், உப்பு (தெரிஞ்சவரைக்கும் லிஸ்ட் பண்ணிருக்கேன்..)எல்லாத்தையும் கொண்டு போகணும்.//
எல்லா அண்ணன்களுமே இப்படித்தான் போல :)//

ம்ம்ம் பாவம் தங்கச்சிங்க தான்..!!
:(

Sri said...

@ ஆயில்யன்
////லூசே சப்பாத்தி இடற கல்லு வேற.... தோசை சுடர கல்லு வேற...!!"///
அட அண்ணனுக்கு தெரிஞ்சுப்போச்சா?
BTW எனக்கே இப்பத்த்தான் தெரியும் கல்லு வேற வேற இருக்குன்னு :(//

அண்ணா சப்பாத்தி மாவ இட்டு போடுவாங்கல்ல அந்த கல்லு..!! :))

Sri said...

@ ஆயில்யன்
////அக்கா வந்தா நீதான் தோசை ஊத்தினன்னு சொல்றேன் நகரு..!!" ///
ஆஹா மொத்தத்தில இதுக்குத்தான் இம்மாம் பெரிய பில்ட் அப் நல்லா தின்னாச்சுல்ல அப்படியே ரெஸ்ட் எடுத்துட்டு போகலாம்ம்னு ஆபிஸ் வந்தீகளா?
நல்லது!:)//

ம்ம்ம் ஆமாம்...!! ;))

Sri said...

@ sathish
:))
நன்றி அண்ணா...!! :))

Sri said...

@ gayathri said...
//"சும்மா சொல்லக்கூடாது நல்லாவே தோசை செய்திருந்தான் மாதவன்...!! :D "
மத்தவங்க செஞ்ஞி தந்தா நல்லா தான் இருக்கும் பா.
நிங்காலும் என்ன மாதிரி தானா.........//

ஹா ஹா ஹா ஆமாம்...!! :))

Sri said...

@ ஸ்ரீ
//Dhosayum senjaacha gud.//

அச்சச்சோ தேங்க்ஸ் அண்ணா..!! ;))

//Aaamam adhu enna pera ஸ்ரீ nu maathiyaacha?
Hello adhu copy right panni irukuma ;)//

அச்சச்சோ இல்ல அண்ணா... அது சும்மா..!!! என்னது காபி ரைட்-அ?? அதான் காபி பண்ணி ரைட் பண்ணிட்டேன்...!! ;))

//Pinnadi case poduven//

அடடா இத கவனிக்காம கிண்டல் பண்ணிட்டனே..!! :(

Sri said...

@ ஆயில்யன்
////ஸ்ரீ said...
Dhosayum senjaacha gud.
Aaamam adhu enna pera ஸ்ரீ nu maathiyaacha?
Hello adhu copy right panni irukuma ;)
Pinnadi case poduven//
என்னது அச்சச்சோ அக்கா மேல கேஸ் போடுவீங்களா????
யேய்ய்ய்ய்ய்
கடையை மூடுங்கடா!
பஸ்ஸை கொளுத்துங்கடா?
தெருவுல போறவங்கள போட்டு கும்முங்கடா???
இன்னும் ஒன் அவர்ல இது கலவர பூமியாத்தான் நீயுஸ்ல கவர் ஆகணும்!//

அச்சச்சோ அண்ணா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நிலைமை கட்டுக்குள்ள தான் இருக்கு..!! ;))

Sri said...

@ Divyapriya
////மறுபடியும் நான் கொண்டுவந்த எல்லா பொருளையும் கழுவி, தொடைச்சு வெப்பேன்.//

ஹய்யோ பாவம்...அதுக்கு ஜுஸ் போட்டு இருந்துருக்கலாம் ;-)//

அதுதான் அப்ப போட தெரியாதே..!! :(

Sri said...

@ Divyapriya
////அப்பறம் என்ன நல்லா சாப்டுட்டு ஆபீஸ் வந்தாச்சு... சும்மா சொல்லக்கூடாது நல்லாவே தோசை செய்திருந்தான் மாதவன்...!! :D //

உங்க அண்ணனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் :-)//

பக்கத்துல தான் இருக்கான். சொல்லிட்டேன்..!! ;))

Sri said...

@ Divyapriya
//@ Ramya

//Don't Worry you can master this art with practise :)//


experience ramya??? ;-)//

:))))))

Sri said...

@ நிஜமா நல்லவன்
///Ramya Ramani said...

Don't Worry you can master this art with practise :)/

:)//

:))))

Sri said...

@ நிஜமா நல்லவன்
///ஆயில்யன் said...

//எனக்கும் தோசைக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்./

இட்லிக்கு எத்தினியாம் பொருத்தம்!/

குட் கொஸ்டின்....நானும் ரிப்பிட்டிக்கிறேன்...:)//

:)))

Sri said...

@ நிஜமா நல்லவன்
//சரி...எனக்கு ஒரு சந்தேகம்....மாதவன் உன்னோட ப்ளாக் படிக்கிறானா இல்லையா?....இரு..இரு..நானே அவன் கிட்ட போட்டு கொடுத்திடுறேன்...:)//

அவன் படிக்கமாட்டான்...!! :))

Sri said...

@ இவன்
//என் தங்கச்சிக்கு நான் செஞ்ச அதே கொடுமை உங்க அண்ணன் உங்களுக்கும் செஞ்சிருக்கார்... என்ன அவர் மாதவன் நான் ஆதவன்//

:)))))))

Sri said...

@ இவன்
////அப்ப நான் டென்த் ஸ்டாண்டர்ட் படிச்சுகிட்டு இருந்தேன்....//

இப்ப வரைக்கும் அதுதானே ஸ்ரீ நீங்க படிச்சிருக்கீங்க??//

Grrrrrrrrrrr...!! :))

Sri said...

@ நிஜமா நல்லவன்
///அதுக்குமேல டிஃபன் வேற செய்ய சொல்றானே இவனுக்கு உயிர் மேல ஆசையே இல்லையா??-ன்னு நினைச்சேனே தவிர சொல்லமுடியல...!!/
உனக்கு உயிர் மேல ஆசைன்னு நினைக்கிறேன்...இல்லைன்னா நினைச்சதை சொல்லி இருப்பியே:)//

Grrrrrrrrrrrr....!! :))

Sri said...

@ நிஜமா நல்லவன் said...
///'சரி என்னதான் நடக்கும் நடக்கட்டுமே'-ன்னு... என்னை இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போன என் அக்காவ திட்டிகிட்டே போய் பார்த்தா காலைல தோசை செய்ய சொல்லி எழுதிவெச்சிட்டு போயிருக்கா/
தோசை செய்ன்னு மட்டும் தான் எழுதி வச்சிருந்தாங்களா இல்லை செய்முறையும் எழுதி வச்சிருந்தாங்களா?????//

அத சொல்லலியே...!! :(

Sri said...

@ நிஜமா நல்லவன் said...
///எனக்கும் தோசைக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்./

எனக்கு ஏழரை (பொருத்தம்)ன்னு நினைக்கிறேன்...அதான் தெரியாத்தனமா இங்க வந்துட்டேன்:)//

Grrrrrrrrrrrrrrr..!! :))

Sri said...

@ நிஜமா நல்லவன் said...
///"அதுத் தெரியாது... ஆனா அம்மா இதுலதான் அன்னைக்கு சப்பாத்தி பண்ணா..!!", அப்பாவியா நான் தான்.../

நீ அப்பாவியா இல்ல 'அடிப்பாவி'யான்னு மைல்டா ஒரு டவுட் வருதே:)//

வரும் வரும்..!! ;))

Saravana Kumar MSK said...

//இப்படி ஒரு சந்தோஷமா??:( சரி மாத்திக்க ட்ரை பண்றேன்..!! :))//

அப்பாடா.. இப்போ சந்தோஷம்..


//அவ்ளோதான் முடிஞ்சு போச்சு..!! :))//

ரொம்ப நன்றிங்கோ.. எங்கே இன்னும் ஒரு நாலைந்து பதிவு போடூவீங்கலோன்னு பயந்துட்டேன்..

Sri said...

@ Saravana Kumar MSK
////இப்படி ஒரு சந்தோஷமா??:( சரி மாத்திக்க ட்ரை பண்றேன்..!! :))//

அப்பாடா.. இப்போ சந்தோஷம்..//

:)))))

////அவ்ளோதான் முடிஞ்சு போச்சு..!! :))//

ரொம்ப நன்றிங்கோ.. எங்கே இன்னும் ஒரு நாலைந்து பதிவு போடூவீங்கலோன்னு பயந்துட்டேன்..//

Grrrrrrrrrrrrrrrr..!! :P

naanal said...

அப்பா ஒரு வழியா சமையல் செய்ய ஆரம்பிச்சுட்டீங்கப் போல...
வாழ்த்துக்கள்... :) உங்களுக்கு இல்லை உங்க சமையல் சாப்பிட போறவங்களுக்கு... ;-)
உங்க பதிவை படிச்சு உங்க புகழ பரப்பலாம்னு எங்க அம்மா கிட்ட நீங்க சுட்ட தோசையை பற்றி சொல்லப் போய் , நான் போட்ட கேவலமான காபியப் பற்றி எங்க அம்மா சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க... :(
அப்புறம் என்ன எஸ்கேப் தான்.... :)

Sri said...

@ naanal
//அப்பா ஒரு வழியா சமையல் செய்ய ஆரம்பிச்சுட்டீங்கப் போல...//

ஆமா அக்கா வேறவழி நம்ம வயித்துக்காகவாவது செஞ்சுதானே ஆகணும்..!! ;))

//வாழ்த்துக்கள்... :) உங்களுக்கு இல்லை உங்க சமையல் சாப்பிட போறவங்களுக்கு... ;-)//

Grrrrrrrrrrrrrr..!! ;))

//உங்க பதிவை படிச்சு உங்க புகழ பரப்பலாம்னு எங்க அம்மா கிட்ட நீங்க சுட்ட தோசையை பற்றி சொல்லப் போய் , நான் போட்ட கேவலமான காபியப் பற்றி எங்க அம்மா சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க... :(
அப்புறம் என்ன எஸ்கேப் தான்...//

ஹா ஹா ஹா..!! தன் வினை தன்னைச் சுடும்..!! ;))))

naanal said...

//ஹா ஹா ஹா..!! தன் வினை தன்னைச் சுடும்..!! ;))))//


:))

YILAVEANIL said...

//அன்னைக்கு விட்டது தான்...நான் அப்பறம் அந்த தோசைய பத்தியோ, தோசை கல்லைப் பத்தியோ வாயே தொறக்க மாட்டேன்... ஆனா விதி யார விட்டது?? இன்னைக்கு அக்கா ரூபத்துல வந்து மறுபடியும் என்னை அந்த கல்ல தேடவெச்சிடிச்சு...!! :( //

அபாரம்..

//ஹப்பா தப்பிச்சுட்டேன்...!!'.

அப்பறம் என்ன நல்லா சாப்டுட்டு ஆபீஸ் வந்தாச்சு... சும்மா சொல்லக்கூடாது நல்லாவே தோசை செய்திருந்தான் மாதவன்...!! :D //

நடக்கட்டும் நடக்கட்டும்..Smiles

Yilaveanil

Sri said...

@ naanal
////ஹா ஹா ஹா..!! தன் வினை தன்னைச் சுடும்..!! ;))))//

:))//

மந்திர புன்னகையோ?? மஞ்சள் முகமோ?? ;))

(எத்தன நாள் தான் ஸ்மைலிக்கு ஸ்மைலியே போடறது.. அது தான் கொஞ்சம் வித்தியாசமா இந்த பாட்டு..!! ;)))

Sri said...

@ YILAVEANIL said...

//அபாரம்..//

இந்த அபாரம் எதுக்கு?? நான் தோசைக் கல்ல தேடினதுக்கா?? ;))


//நடக்கட்டும் நடக்கட்டும்..//

நன்றி அண்ணா...!! ;))

naanal said...

(எத்தன நாள் தான் ஸ்மைலிக்கு ஸ்மைலியே போடறது.. அது தான் கொஞ்சம் வித்தியாசமா இந்த பாட்டு..!! ;)))

:)) அடடா இப்ப நான் எந்த பாட்டை ஸ்மைலிக்கு பதிலா போட...

Sri said...

@ naanal
//(எத்தன நாள் தான் ஸ்மைலிக்கு ஸ்மைலியே போடறது.. அது தான் கொஞ்சம் வித்தியாசமா இந்த பாட்டு..!! ;)))

:)) அடடா இப்ப நான் எந்த பாட்டை ஸ்மைலிக்கு பதிலா போட...//

தமிழ் பாட்டாக்கா பஞ்சம்?? "ஒரு புன்னகை பூவே சிறு பூக்களின் தீவே" அப்படின்னு எதாவது போடுங்க அக்கா..!! ;))

shivakumar said...

வனக்கம் ஸ்றீ (மன்னிக்கனும் பேரை அடிக்க தெரியலை). உங்களது முழு பேரும் தெரியாது. ஒற்றை அன்றில் வெப்சைடு வழியா உங்க பக்கதுக்கு வந்தேன். நல்லா கவிதை எழுதுறீங்க வாழ்த்துக்கல். ஒரு வருசமா நான் தமிழ்மனம் படிக்கிறேன். வந்த கொஞ்ச நாள்ளயே நிறைய வாசகர்கள் கிடைத்திருக்காங்க உங்களுக்கு மகிழ்ச்சி. ஒரு வருசத்துக்கும் மேலா ஒற்றை அன்றில் படிச்சிட்டு இருக்கேன் நான். இப்போ உங்க தளமும் படிக்கிறேன். ஆனா ஒற்றை அன்றிலில் கமன்ட்டு போட்டது இல்லை. உங்ககிட்ட வேண்டுகோள் ஒன்னு இருக்கு அதான் உங்களுக்கு போடுறேன். நிறைய பேரு எழுத வந்தாலும் ஏதோ கொஞ்சம் வித்தியாசம் இருந்தா தான் நிலையா இருக்க முடியும். அந்த விஷயத்தில் உங்களோட பேரு கொஞ்சம் நெருடலா இருக்குங்க. அந்த ஒரு விஷயத்திலேயே உங்ககிட்ட‌ தனித்தன்மை இல்லைன்னு நான் நினைக்குறேங்க. யாராவது ஒருத்தரை பேர மாத்த சொல்லணுல்னு நினைச்சேன். நீங்க இப்போ தான எழுத வந்திருக்கீங்க நீங்க மாத்திகிட்டா நல்லா இருக்குமே. இது என்னோட விண்ணப்பம் தாங்க தப்பா எடுத்துக்காதீங்க. இது உங்க சகோதரனோட ஆசையா நினைச்சு மாத்திக்குவீங்களா? மாத்திகிட்டா ரொம்ப சந்தோஷப்படுவேங்க.


அவரும் இதைப்பத்தி கமண்ட்டு போட்டிருக்காரு. அவரு இத எப்படி எடுத்துகிட்டாருன்னு தெரியலை எதுக்கு வீணா ஒரே மாதிரி பெயருல எழுதிகிட்டு. எவ்வளவோ பேரு இருக்குல்ல அதுல உங்களுக்கு பிடிச்ச பேருல எழுத ஆரம்பிங்க ப்லீஸ். இருவருக்கும் திறமை இருக்கு. உங்களுக்கு கிடைக்கும் பாராட்டு தெரியாமல் அவருக்கு போகலாம். ஏன் அதற்கெல்லாம் வழி கொடுக்கணும். (தப்பா நினக்காதீங்க உங்க எழுத்துக்கள் பிடித்து போனதால் உரிமையோடு சொல்றேன்)


சிவா.
(எனக்கு பிலாக் இல்லை அதான் அனானிமஸ் கமன்ட்டு).

Sri said...

நன்றி சிவகுமார் வருகைக்கும், உங்கள் கருத்துக்கும்..!! :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது