உன்னில் நான்

உன்னை நேசிக்கிறேன்
என்பதை விட
உன்னால்
நேசிக்கப்படுகிறேன்
என்பதில்
உன்னதம் அடைகிறேன்..!!


காதலுக்கும் நட்புக்குமான
இடைவெளியில்
நட்புக்கு
ஒரு படி மேலும்
காதலுக்கு
ஒரு படி கீழும்
நீ நின்ற நாட்கள்
பூ மீது
பனிப்படாத நாட்கள்..!!


நீ நான் என்னும்
இடைவெளியை இட்டு
நிரப்ப வந்தது
'காதல்' என்னும்
அழகான வார்த்தை..!!

சில கவிதைகளை
முற்றுப் பெறாமலே
முடிக்கிறேன்
நீ புரிந்து கொள்வாய்...!!
உன்னில் நான்
என்பதை..

-அன்புடன்,
ஸ்ரீமதி.

தமிழ்மணம் சூடான இடுகையில் இடம் பெறுவது எப்படி??

என்ன தேடறீங்க விடையா??? அதுத் தெரியாம தானே நானே உங்கள கேட்ருக்கேன்... யாருக்காவது தெரிஞ்சா எனக்கும் கொஞ்சம் சொல்லிட்டு போங்க ப்ளீஸ்... நானும் என்னென்னமோ பண்றேன் ம்ஹும் வரலியே இது வரைக்கும்... :(

-அன்புடன்,
ஸ்ரீமதி.

கடவுள்.... காதல்.... நாரதர்....

செங்குத்தாகக் கட்டி மரங்களுக்கென இயற்கைத் தொங்கவிட்ட மழைத் திரையை இரண்டாகக் கிழித்தபடி சென்றுக்கொண்டிருந்தது, வேகமானதாகவும், தண்டவாளங்களின் மேல் மோகம் கொள்ளாததுவும், வட்டமானதுமான சக்கரங்களைக் கொண்டதுவுமான அந்த நீளமான புகைவண்டி. எண்ணிக்கையில் அதிகமான அதன் பெட்டிகளின் ஒன்றன் மீதொன்றான காதலில் லயித்தும் பின் சற்று ஆச்சர்யமுற்றதுமான என் மனம் மிக வேகமாக ரயிலை முந்தியும், மழையைப் பிய்த்தெறிந்தும், பள்ளம் மேடுகளைத் தாண்டியும், கொஞ்சம் அதனாலேற்பட்ட நடுக்கத்துடனும் பின்னோக்கிப் பயணித்தது.

அந்த வெளிச்சத்தைத் தொலைத்த பொழுதில் எண்ணங்கள் தடுமாறி மரத்தில் மோதி மிக வேகமாக என்னிடம் தஞ்சமடைந்தது. எண்ணங்களைத் தொலைத்த வார்த்தைகள் தங்களுக்குள் கறுப்பு வண்ணம் பூசிக்கொண்டன. நினைவுகளுக்கு பச்சையைப் பூசி பயணிக்கத் தயார்ப்படுத்தின. இதனால் என் விரல் நுனியிலிருந்து உண்டான சிறு வெப்பத்தைத் தணிக்க ஜன்னலோர மழைக்கு முகத்தையும், நினைவுகளுக்கு, வழிந்த இருளுகிடையில் வழியையும் கொடுக்க, இருளோடு கைக்கோர்த்து எண்ணங்கள் கலவையான வண்ணத்தில் நடைப்போட்டது.

இவை எல்லாம் கவனியாமல் கவனித்துக்கொண்டிருந்த அவன் கண்கள் முந்தைய ரயில் பயணங்களில், மழையால் ஆக்ரமிக்கப்பட்டக் காலத்தில், காளானாய் முளைத்த, அன்றைய எங்களுக்கானக் காதலை அவனுக்குள் நியாபகப்படுத்தப்பட்டிருப்பதைக் காட்டிக் கண்ணீரை சிந்தி நின்றதை என்னால் உணர முடிந்தது. அவன் துணையென நான் பகிரங்கப்படுத்தப்படாமல் இருந்த அந்தக் மாலைப் பொழுதின் விளிம்பில் ஊர்க் காத்து நின்ற கடவுளுக்கு கறுப்புக் கயிறுக் காணிக்கை அளித்து "இந்த சாமிக்குக் கருப்பு கயிறுக் கட்டினா சீக்கரம் கல்யாணம் நடக்குமாம்" என சொல்லிக் கட்டிய கயிற்றைப் போலவே கறுப்புக் கட்டி அலைந்துக் கொண்டிருக்கிறது அவன் மீதான என் காதலும் என் மீதான அவன் காதலும் இன்று.

இப்பொழுது, ஜன்னலில் மறைந்த என் முகத்திற்கு விழிகள் மட்டும் சொந்தமில்லை. ஒவ்வொரு முறை மழைத்துளி என்மீதுப் பட்டு உயிர்த் துறக்கும் போதும் கண்கள் அவன் மீது மோதித் திரும்புவதை என்னால் மறைக்கவோ, மறுக்கவோ இயலவில்லை. இனி காவல் மட்டுமே செய்வதாகவும், கறுப்புக் கயிறுக் கட்டிக்கொள்ளப் போவதில்லை, எனவும் கடவுள் சொன்னாதாக நாரதர் என்னிடம் சொல்லி மறைந்தார். ஆனால் மனிதனின் உயிர் மூச்சுகளாலும், பெரு மூச்சுகளாலும், நிரம்பி இருந்த அந்த இரும்புக் காதல் இன்னும் பயணித்துக் கொண்டு தான் இருந்தது, அடுத்த மழைத்திரையை நோக்கி...-அன்புடன்,
ஸ்ரீமதி.

பைத்தியம் தானடா....

உன்னிடமிருந்து
எனக்கு வரும்
மெயில்களையும்
நான் அனுப்பும்
பதில்களையும்
சேர்த்து வைக்கும்
நான்....

என் பெயரைவிட
உன் பெயர்
அழைப்புக்கு
அன்னிச்சையாய் திரும்பும்
நான்....

ஆயிரம் சொந்தங்கள்
அருகிலிருந்தும்
என் சுக, துக்கங்களில்
உன் தோள்சாயத்துடிக்கும்
நான்....

நல்லக் கவிதைகள்
நான் தந்தாலும்
நீ சொல்லும் பொய்களை
கவிதை என்னும்
நான்....

தினம் நூறு
தந்தாலும்
சோகத்தின் விளிம்பில்
என்
நெற்றியின் மத்தியில்
தரும் அந்த
ஒரு முத்தத்தை மட்டுமே
சுகிக்க நினைக்கும்
நான்....


நீ இழந்த
நாட்களை
நான் இறந்த
நாட்களென
உணரும்
நான்...


எல்லோரும் அருகிருக்க,
ஏதும் அறியாதவன்
போல்
நீயிருக்க,
மாற்றான்
மனைவியாகப் போகும்
நான்....


உன்
வார்த்தையில்
சொன்னால்
பைத்தியம் தானடா..!!


-அன்புடன்,
ஸ்ரீமதி.

துவையல்..

ஒருநாளை எப்படி வெட்டியா செலவழிக்கறதுன்னு நேத்து கத்துக்கிட்டேன். அதுக்கு நான் சொன்ன மாதிரி 10:00 மணிவரைக்கும்(!?) காலைல ஒழுங்கா தூங்கிருக்கலாம்...:( தூக்கத்துலத் தெரியாம 7:00 மணிக்கெல்லாம் எழுந்துட்டேன்..!! :( என்னைக்கும் இல்லாத் திருநாளா பேப்பர் படிக்கலாம்னு உட்கார்ந்தேன்.. பேப்பர் நுனி கண்ணுல பட்டு 10:00 மணிவரைக்கும் கண்ணேத் தொறக்கமுடியல.. :( அக்கா கிட்ட திட்டு வாங்கினதுதான் மிச்சம்..!!

சரி ஆனது ஆகிபோச்சு வீரர்கள் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்னு சொல்லி.. சாப்டுட்டு, டிவி பார்க்க உட்கார்ந்தா பவர் கட்..!! :( உட்கார்ந்து சலிச்சு போய் அப்படியே தூங்கிட்டேன்... திடீர்னு கனவுல யாரோ காலிங் பெல் அடிக்கற மாதிரி ஒரு சத்தம்.. என்னன்னு பார்த்தா அம்மா கிட்ட இருந்து கால்... 6 நாளும் நடந்தத சொல்லிட்டு செல்ல கீழ வெக்கும்போது மணி 12:00..!!

இனிமேலும் முழிச்சிருந்தா அக்கா வேல சொல்லி கொன்னுடுவான்னு தூங்கி எழுந்துக்கும் போது மணி 3:00...!! அப்பதான் தி-நகர் வரதா ஃப்ரெண்ட்ஸ் கிட்ட தலைல அடிச்சு சத்தியம் பண்ணது நியாபகம் வந்தது..!!இந்த வாரமும் அஸ் யூசுவல் திட்டு வாங்கியாச்சு..!! :( சோகத்துல என்ன செய்யரதுன்னுத் தெரியாம அக்கா குடுத்த காபி குடிச்சிட்டு மறுபடியும் தூங்கிட்டேன்..!! மறுபடி கண்ணு முழிக்கும்போது மணி 6:00...!!

"இப்பவாவது எழுந்திரிக்கிரீங்களா மேடம்?? மாதவன் ரெண்டு முறை கால் பண்ணிட்டான்... கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வர சொல்றான்...!!", அக்கா தான். உடன்பிறப்பு ஊருக்கு போயிட்டு வருது அத கூட்டிட்டு வர..!!ஸ்டேஷன் போகும் போது மணி 6:30...!! "ஏய் போன் பண்ணி எவ்ளோ நேரம் ஆகுது?? என்ன பண்ண இவ்ளோ நேரம்??", சாரி அவன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி பழக்கம் இல்லை...!! ;)

பக்கத்துல ஒரு பையன் போன்-ல: டேய் நாளைக்காவது சினிமாக்கு வருவியா?? மாடியாடா??
அவன்(ள்)(யார் கண்டா??):$#@%$^&&^&$@(திட்டல ஏதோ பதில் சொல்லிருப்பான்.)
இவன்: சரிடா.. நிஜம்மா வருவீல்ல??
அவன்(ள்):!@$#@$%^&*&
இவன்: டேய் சத்தியமா?? உன் லவ்வர் மேல சத்தியமா ??

டேய் என்னங்கடா நடக்குது இங்க?? யார் யார் மேல சத்தியம் செய்ய சொல்றதுன்னு ஒரு விவஸ்த்தை இல்லையா??

மாதவன்: ஏய் நீ இன்னும் தனியா சிரிக்கறத நிறுத்தலியா??

இவனுக்கு மட்டும் இதெல்லாம் காதுல விழாதா?? இல்ல விழாத மாதிரி நடிக்கறானா?? :(

ரொம்ப நாள் ம்ஹும் ரொம்ப வருஷம் கழிச்சு மாதவனோட சைக்கிள்ல போனேன்... ஸ்கூல் படிக்கும் போது போனது... அப்பல்லாம் சண்டைனா சைக்கிள்ல கூட்டிட்டு போக மாட்டான்.. இந்த ஒரு ரீசனுக்காகவே சண்டை போட்டாலும் சாக்லேட் வாங்கி கொடுத்து சமாளிச்சிடுவேன்...!! அப்படி அவன் கூட்டிட்டு போகனும்னா.. அவன் சொல்ற மாதிரி தான் நான் உட்காரனும்.. அதாவது ஆடாம, அசையாம.. (நான் என்ன பொம்மையா??) இதெல்லாம் சைக்கிள்ல ஏறுற வரைக்கும் 'ம்ம்ம்ம்'-ன்னு கேட்டுப்பேன்... ஏறினதும் நம்ம ராஜ்ஜியம் தான்...!! ;) அதெல்லாம் ஒரு காலம் இப்ப வீட்ல சைக்கிள்லே இல்ல..!! :(

சைக்கிள்ல விட்டு இறங்கினதும் மாதவன் கமெண்ட் : கொஞ்சம் இளைச்சுதான் போயிட்ட போலிருக்கு..!!

எதிர்காத்துல மிதிச்ச கஷ்டம் (ஸ்கூல் படிக்கும் போது) அவனுக்கு தான் தெரியும்..!! :)

"நைட்டு சாப்பிட என்ன செய்யலாம்??"

"சப்பாத்தி..!!"

"சரி வா வந்து சப்பாத்தி இட்டுக் குடு...!! நான் போட்டேடுக்கறேன்..!!"

'வாய வெச்சிகிட்டு சும்மாவே இருக்கமாட்டேனா??' :((

"ஏய்..!! சப்பாத்தினா ரவுண்ட் ஷேப்ல இருக்கணும்.. சதுரமா இல்ல..!!"

"போடா..!! ஏன் சதுரமா இருந்தா சாப்ட மாட்டியா??எனக்குத் தெரிஞ்ச மாதிரி தான் செய்வேன்..!! இஷ்டம் இருந்தா சாப்டு..!!"

"அக்கா இவள எழுந்திருக்க சொல்லு.. நானே இடறேன்..!!"

Great escape..!! ;)

மணி நைட்டு 9:00 "பத்ரி நீ என்ன லூசா?? அந்த இரும்பு ராட கீழ வெச்சிட்டு போய் எக்ஸாம்க்கு படி..!!"
"முடியாது..!!", அடுத்த ஐஞ்சாவது நிமிஷம் என் மண்டைல இரும்பு ராட போட்டுட்டான்...!!

பி.கு: தலைப்புக்கான காரணம்.. எல்லாரும் அவியல், பொறியல் , கூட்டு, குழம்புனு வெச்சிட்டதால.. நாம கொஞ்சம் புதுசா.. நோ... அடிக்ககூடாது, அழக்கூடாது...!! ஓகே..?? ;)

-அன்புடன்,
ஸ்ரீமதி.

காதல் கல்லூரி..!!

"அது என்னடா பேரு நிவாஸ்னு?? அப்படினா என்ன அர்த்தம் தெரியுமா?? வீடுன்னு அர்த்தம்...!! ஏன் இப்படி ஒரு பெயர் வெச்சாங்க??"


"ம்ம்ம்ம் உன்ன மாதிரி ஒரு ராட்சசி... அடிக்காதடி... உன்ன மாதிரி ஒரு அழகான ராட்சசி வந்து என் இதயத்துல குடி இருக்க போறான்னுத் தெரிஞ்சுதான் என் அம்மா, அப்பா அந்த பேர வெச்சிருக்காங்க....!!""எல்லாத்துக்கும் ரெடியா ஒரு பதில் வெச்சிருப்பியே..!!"


"சரி வா கிளாஸ்க்கு டைம் ஆச்சு... போகலாம்..!!"இதுக்கு மேலயும்... அவங்க காலேஜ் படிக்கறாங்க... அவங்க லவ் பண்றாங்கன்னு.. நான் சொல்லனும்னு நீங்க எதிர் பார்க்கறீங்க?? இல்ல தானே?? ;-) அதெல்லாம் இல்ல எனக்கு சொல்லனும்னு அடம்பிடிக்கரவங்களுக்கெல்லாம் ஒன்னு சொல்லிக்கறேன்............. அவங்க நிஜம்மா லவ் பண்றாங்க நம்புங்கப்பா...!! :-( அடடா நம்ம ஹீரோயின் பேர் சொல்ல மறந்துட்டனே... அவங்க பேர் ஷோபனா நல்லா இருக்கில்ல..??ஓவர் டு காலேஜ் கேம்பஸ்..!! ;-)

"ஹே கிளாஸ் முடிஞ்சு எவ்ளோ நேரம் ஆச்சு... இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்க..?? வீட்டுக்கு போகல..??"

"எனக்கு வீட்டுக்கு போக பிடிக்கல டா..!!"

"ஏன்?? என்ன ஆச்சு??"

"நான் சொன்னா நீ திட்ட மாட்டியே??"

"ம்ஹும்.. மாட்டேன்..!!"

"அடிக்க மாட்டியே??"

"மாட்டேன்......!!"

"இத ஏன் நீ என்கிட்டே முன்னமே சொல்லலைன்னு கேட்க மாட்டியே??"

"இப்ப சொல்ல போறியா இல்லையா??"

"பாத்தியா பாத்தியா இப்பவே திட்ட ஆரம்பிச்சுட்ட..!!"

"திட்ட மாட்டேன்டி சொல்லு..!!"

"இன்னைக்கு என்ன பொண்ணு பார்க்க வராங்களாம்..!!"

"அவ்ளோதானா??"

"என்னடா......?? இவ்ளோ ஈசியா கேட்டுட்ட??"

"பின்ன என்ன பண்ண சொல்ற??"

"அடப்பாவி என்ன ஒருத்தன் பொண்ணு பார்க்க வரான்னு சொல்றேன்.. உனக்கு கோவம் வர வேண்டாம்?? அப்படியே கொதிச்சு எழ வேண்டாம்?? உடனே அப்படியே என் அப்ப கிட்ட போய் பொண்ணு கேட்க வேண்டாம்?? அத விட்டுட்டு பின்ன என்ன பண்றதுன்னு என்ன கேள்வி கேட்கற....!!"

"முடிச்சிட்டியா?? பேசி முடிச்சிட்டியா??சரி வா போகலாம்..!!"

"போடா..!! நான் உன்கூட வர மாட்டேன்..!!"

"சரி போ..!!"

"ச்சே உன்ன லவ் பண்ணதுக்கு நான் சும்மாவே இருந்துருக்கலாம்...!! எனக்குத் தெரியும்டா நீ இப்படி செய்வன்னு..!! உன் பிஃரெண்ட்ஸ் அப்படி..!!"

"இப்ப எதுக்கு அவங்கள வம்புக்கு இழுக்கற??"

"அப்படி தான்டா சொல்வேன்... அதுவும் அந்த தலை பூர முடியோட இருக்கானே..!!"

"ஷோபா...!! வில் யூ ஸ்டாப் இட்..!!"

அது பாவம் அழுதுண்டே போயிடுத்து..!! :-( இந்த பையன் ஏன் இப்படி பண்றான்?? கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லேனா என்னத்துக்கு காதல் பண்ணனும்?? அதுவும் இன்னைக்கு காலை வரைக்கும் அவளை தேவதைன்னு சொன்னவன்... இப்ப ஏன் இப்படி நடந்துக்கணும்?? இதெல்லாம் எனக்கும் தெரியாது வாங்க படிக்கலாம் என்ன ஆகுதுன்னு..!! ஹி ஹி ஹி ஹி..!! ;-)

"என்னமா இது மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர நேரம் ஆச்சு இன்னும் இப்படியே உட்கார்ந்திருக்க...?? போய் பேஸ் வாஷ் பண்ணிட்டு வா....!!"

'அம்மாகிட்ட மட்டுமாவது நிவாஸ் பத்தி சொல்லலாமா..?? வேண்டாம்..!! அவனே ஒன்னும் ஸ்டேப் எடுக்கல...!! அதோட இப்ப சொன்னா அம்மா, அப்பா ரெண்டுபேருக்கும் சங்கடம்... சோ மாப்ள வீட்டுக்காரங்க வந்துட்டு போகட்டும் அப்பறம் சொல்லலாம்..!!'

"ஷோபனா வெளியில வாம்மா மாப்ள வீட்டுக்காரங்க எல்லாம் வந்தாச்சு..!!"

'ச்சே எவன் கண்டுப்பிடிச்சான் பொண்ணு பார்க்கறத..?? அவன் மட்டும் என் கைல மாட்டினான்.. அவ்ளோ தான்..!!'

திட்டிக்கொண்டே சென்றவளுக்கு அங்கு இன்னொரு அதிர்ச்சிக் காத்திருந்தது..!! அது வேற ஒன்னும் இல்ல மாப்பிளையா உட்கார்ந்திருந்தது சாட்ஷாத் நிவாஸ் தான்..!!அவளுக்கு வந்ததே கோபம்..!!

"யூ சீட் என்கிட்டே ஒரு வார்த்தை சொன்னியாடா??"

"என்ன சொல்ற??",அவனுக்கு இவ எதப் பத்தி கேட்கறான்னு புரியல..!!

"நான் சொன்னேனே...!! நீ சொன்னியா??"

"ஏய் என்னடி நான் சொன்னேனே..?? நீ சொன்னியா??",சத்தியமா பாவம் அவனுக்குப் புரியல..!!

"நடிக்காதடா..!! என்ன பொண்ணுப் பார்க்க வராங்கன்னு நான் சொன்னேனே.. நீ பொண்ணு பார்க்க போறேன்னு நீ சொன்னியா??"

அவன் பாவம் அடிச்சிண்டு அழ தனக்கு ஆயிரம் கை இல்லன்னு கவலைப் பட்டன்..!! :-(

"ஹே லூசே என்னடி பேசற?? உன்னதான் பொண்ணு பார்க்க வரேன்னு எனக்குத் தெரியும்... ஆனா நான் தான் உன்னப் பார்க்க வரேன்னு உனக்கு தான் தெரியாது..!! என்ன புரியலியா?? நம்ம லவ் மேட்டர நம்ம வீட்ல சொல்லி நான் எப்பவோ சம்மதம் வாங்கியாச்சு... இதெல்லாம் சும்மா உனக்கு ஒரு சர்ப்ரைசா இருக்கட்டுமேங்கறத்துக்காக தான் சொல்லல... போதுமா??"

அப்பறம் என்ன..?? 'அடடா இதுத் தெரியாம ஓவரா கத்திட்டோமே'-ன்னு அவ பீல் பண்ணா..!! அப்பறம் கல்யாணம் நல்லா முடிஞ்சது..!! இன்னும் என்ன 'ம்ம்ம்ம்' அவ்ளோ தான் கதை முடிஞ்சி போச்சு..!! ;-)

-அன்புடன்,
ஸ்ரீமதி.

சின்னக் குருவி...??

பட படக்கும்
நீர்த்துளிகளாய்
என் பேச்சு..!!

பள பளக்கும்
பனித்துளிகளாய்
என் எண்ணம்..!!

மொட்டை மாடி
என் குடியிருக்கும்
தாஜ்மஹால்..!!

நட்சத்திரங்கள் எண்ணுவேன்
கனவுகள் காணுவேன்
கவிதைகள் வடிப்பேன்
காகிதங்கள் சாட்சி..!!

உறவுகள் அதட்டும்
'புகுந்த வீடு
போறவளுக்கு
புதுக்கவிதை எதுக்கடி??' என்று

அவர்களுக்கு
எப்படித் தெரியும்
என் சின்னச்சின்ன
சுவாசங்கள்......??

வலைத் தேடத்
துவங்கினார்கள்
தடுத்துப் பார்த்தேன்..!!
தவித்துப் போனேன்..!!

இன்று,
ஜோடி சேர்ந்தச்
சின்னக் குருவியுடன்
உண்ணவும்,
உறங்கவும் மட்டுமே
கற்றுக் கொண்டேன்..!!

-அன்புடன்,
ஸ்ரீமதி.

அன்புள்ள உனக்கு...

'அன்புள்ள ,

ம்ஹீம் உன்ன எப்படி அழைக்கறதுன்னுத் தெரியலடா....!!இந்த நிலைமை ஏன்?? நீ விரும்பியோ, விரும்பாமலோ.. என் நண்பன்ங்கரப் பதவி உன்னை விட்டுப் போயிடுச்சு...!! இனிமே நீயோ, இல்ல நானோ நினைச்சாலும் மறுபடியும் உன்ன அப்படி நினைச்சுப் பார்க்கமுடியுமான்னுத் தெரியல...!!

என்னப் பத்தி உனக்கு நல்லாவேத் தெரியும்... இன்னும் சினிமாத் தனமா சொல்லனும்னா என்னைப் பத்தி என்னைவிட உனக்குத் தான் நல்லாத் தெரியும். ஆனா அதனாலத் தான் நான் அப்படி சொன்னேன்னு தயவு செஞ்சு தப்பா எடுத்துக்காதே.. இந்த விஷயத்த ரொம்பநாளா உன்கிட்ட சொல்லனும்னு ஆரம்பிப்பேன்... ஆனா எப்படி தொடங்கரதுன்னுத் தெரியாம அப்படியே மறைச்சிடுவேன். ஆனா, நான் அன்னைக்கு சொன்னப் பிறகாவது நீ அதைப்பத்தி எதாவது சொல்லுவன்னு நினைச்சேன்.. நீ அதற்குப் பிறகும் எதுவும் அதைப் பத்தி என்கிட்டே பேசல.. இவ்ளோநாள் காத்திருந்து இதோ நாம் பிரியவேண்டிய நாளும் வந்தாச்சு.. இப்பவும் உன் பதில் கிடைக்கல.. எப்படி கேட்கறதுன்னு எனக்கும் தெரியல.. அதற்குத்தான் இரண்டாம் முறை என் வெட்கம் விட்டு... ஆம்... அன்று நேரில் உங்ககிட்ட சொன்னபோது ஒரு முறை... இதோ, இன்று கடிதத்தில் இரண்டாம் முறை... நான் கேட்பதும், வெட்கம் மறப்பதும். நான் கேட்டது தப்புன்னா நீ அத அப்பவே சொல்லிருக்கலாம்... ஆனா, எதுவுமே நடக்காத மாதிரி நீ நடந்துக்கறது தான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...!!

சுடிதார், புடவை இதைத் தவிர ஒன்னும் தெரியாதவளை "நீ என்ன சங்க காலத்து பொண்ணா??"-னு கேட்டு ஜீன்ஸ் போட வெச்சவன் நீ...!! வீடு, வீடு விட்டா காலேஜ்னு இருந்தவள, எல்லார்கிட்டயும் பழக வெச்சு புது உலகத்தக்காட்டினவன் நீ..!! நானில்லாம நீயோ இல்ல, நீ இல்லாம நானோ, எங்கேயும் தனியா போகாம நாம எப்பவும் சேர்ந்தே இருந்ததுப் பார்த்து கேலிப் பண்ணவங்கள "ஃப்ரெண்ட்ஷிப்-னா என்னன்னே தெரியாத ஜென்மங்கள், நீ ஒன்னும் வருத்தப் படாத"-ன்னு ஆறுதல் சொன்னவன் நீ..!!

ஆனா, இப்ப அவங்கெல்லாம் சொன்னது நிஜமாகக் கூடாதுன்னா.... இல்ல ஒரு பெண்ணான நானே வந்து சொன்னதுனாலையா... எதனால நீ என் காதல ஏத்துக்கல?? நான் இத வேற எந்தக் காரணத்துக்காகவும் இப்ப உங்ககிட்ட கேட்கல... நிச்சயமா நீ இல்லாம, உன் நட்பு இல்லாம என்னால வாழ முடியாது... உன்னாலயும்தான்னு நம்பறேன்... என்னை இவ்ளோ புரிஞ்சிக்கிட்ட நீ ஏன் என் கணவரா அமையக்கூடாதுன்னு ஆசைப்பட்டேன்....நீ நினைக்கலாம் நீ யாரையோ.. நான் யாரையோ, கல்யாணம் பண்ணிக்கிட்டப் பிறகும் இந்த நட்புத் தொடரும்னு... ஆனா அது இந்த அளவு உண்மையா இருக்குமான்னுத் தெரியல...!!


இது எல்லாத்தையும் நீ புரிஞ்சுகிட்டியான்னு தெரியல... ஆனா, நான் என் முடிவ சொன்னப் பிறகும் நீ எந்த பதிலும் சொல்லாமலும், என்கிட்டே பேசவே தோணாதது போலவும் இருந்த... அது ஏன்?? ஒரு பெண்ணே தன் காதல வந்து சொன்னா அவ்ளோ தப்பாடா?? இப்பவும் எனக்கு நீ என் காதல ஏத்துக்காததுல கோபம் எதுவும் இல்ல... ஆனா, உனக்கு என்மேல வருத்தம் இருக்கலாம்... அந்த கஷ்டத்த உனக்குக் கொடுத்ததுக்கு என்ன மன்னிச்சிடு..!! இனியும் நான் உன் வாழ்க்கையில் வர மாட்டேன்... சொல்ல நினைச்ச எல்லாத்தையும் இந்தக் கடிதத்துல எழுதினேனாத் தெரியல.. ஆனா, உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நம்பறேன்... பை...!!இப்படிக்கு,
மதி. '


கடிதத்தை அவசரமாக கிறுக்கி, வைக்க அவன் மேசைமேல் இடம் தேடினாள். அது, அவன் மனம் போலவே இடம் இன்றி இருந்தது. சேர்த்து வைத்தத் துக்கம் அனைத்தும் வெளியில் வர வேளைப் பாத்துக்கொண்டிருந்தது.

"ஹே, மதி..!! அங்க எல்லாரும் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. நீ இங்க என்னடி பண்ணிட்டு இருக்க??".

"ம்.. வரேன்..!!"

-------------------------------------------------------------------------------

"சரி நான் கிளம்பறேன்..!!"

"ம்.. ஓகே. ஹாப்பி ஜேர்னி.... பத்திரமா போ..!! போனதும் போன் பண்ணு.. அம்மா, அப்பாவ கேட்டதா சொல்லு...!!",

'இல்லடா இனிமே நான் உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்..!!', மனதுக்குள் நினைத்ததை மறைத்து... "ம்", எனத் தலையை மட்டும் ஆட்டினாள்.

"ஹே என்ன யோசனை??"

"ஒன்னும் இல்ல..!!"

"பஸ் கிளம்பிட போகுது.. போய் உட்கார்..!! ஹே மதி இது என்ன புக்?? என் டேபிள்ல இருந்தது... இந்தா...!! ".

அவளுக்கான கடைசி வாய்ப்பும் அவனாலேயே தட்டிப் பறிக்கப்பட்டது. இரண்டு நாளாக தேக்கி வைத்தத் துக்கம் கண்கள் வழி கண்ணீராய் பெருகியது. அவளுக்கே அவளைப் பிடிக்கவில்லை.

இனி இந்த கடிதத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை என உணர்ந்து கடிதத்தை எடுக்க புத்தகத்தைப் புரட்டினாள். கிழித்துத் தூக்கியெரிய தயாராய் கையில் கடிதம்.... கடைசியாக ஒரு முறைப் படித்துப் பார்க்கலாம்..!!

'ஹாய் மதி..!!
என்ன ரெண்டு நாளா தவிச்சு போய்ட்டியா..?? இல்லன்னு பொய் சொல்லாத..!! ஏன்னா நான் தான் உன் கூடவே உன்னைக் கவனிச்சுகிட்டே இருந்தேனே உன் தவிப்ப...!! சாரி ரொம்ப படுத்திட்டேனா?? இதுக்கெல்லாம் சேர்த்து நம்ம கல்யாணத்துக்குப் பிறகு எனக்கு நல்ல 'கவனிப்பு' இருக்குன்னுத் தெரியும்... சிரிக்காதடி... எவ்ளோ நாளா இந்த விஷயத்த உன்கிட்ட சொல்ல முடியாம நான் தவிச்சிருப்பேன்?? கூடவே இருந்தும் என் காதல புரிஞ்சிக்காத மாதிரி என்னமா நடிச்ச..?? அதுக்குதான் இந்த ரெண்டுநாள் பனிஷ்மென்ட்.. ம்ஹீம் இன்பமான வலி.... உன்னை போய் எப்படிடி எனக்குப் பிடிக்காம போகும்?? உன்னுடைய குழந்தைத்தனமானப் பேச்சு, முட்டைக்கண்ண உருட்டி உருட்டி நீ பார்க்கிறப் பார்வை, மழைல நனைஞ்சிக்கிட்டே நம் தோள் உரசியபடி நாம நடந்து போன நாட்கள்... இது எதையுமே மிஸ் பண்ண நான் தயாரில்ல... இப்பக் கூட உன்ன அனுப்ப இஷ்டம் இல்ல... அதனால் சீக்கரம் என் மாமனார் மாமியார் கிட்ட நம்ம கல்யாணத்துக்கு பெர்மிஷன் வாங்கிண்டு வந்து சேரு... ஓகே?? பை..!!
Yours lovingly,
Arun.
கடிதத்தை படித்துப பார்த்தவளுக்கு இது கனவா நனவாத் தெரியவில்லை.
----------------------------------------------------------------------------
"ஹே போதும்... எத்தன முறை அந்த கடிதத்தையே திரும்ப திரும்பப் படிப்ப??"
"நிஜம்மாவே நான் நினைக்கலடா... நாம இப்படி சேருவோம்னு...!!".

தாயான பூ மாது தோள்மீது சாய்ந்திடும் போது
என் நெஞ்சில் பாலுறும் அன்புத்தவிப்பு
தலை நரைக் கண்டாலும்
தாளாது உந்தன் அன்பு
எப்போதும் வேண்டும் இந்த அணைப்பு
ஓடும் நதி ரெண்டு தான்
பாதை இனி ஒன்று தான்


-அன்புடன்,
ஸ்ரீமதி.

நாங்க பேர் மாத்திட்டோம்ல..!!

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னன்னா... உங்கள எல்லாம் இவ்ளோநாள் sri-ங்கற பேர்ல கொடுமைப்படுத்தின நான், இனிமே ஸ்ரீமதி-ங்கற பேர்ல கொடுமைப்படுத்தப்படுத்தப் போறேன். ஏன் இந்த திடீர் பெயர் மாற்றம்னு நீங்க கேட்கறது புரியுது... இது நான் ஏற்கனவே யோசிச்சது தான், ஆனா இப்ப இது நேயர் விருப்பமாவும் ஆகிட்டதுனால ;-) இன்னைக்கு நேரமும் கிடைச்சதினால் மாத்திட்டேன்..!! :-) இதுவரைக்கும் நீங்க கொடுத்துவந்த ஆதரவ இனிமேலும் தொடரும்படி ஆயில்ஸ் அண்ணா சார்பா கேட்டுக்கறேன்...!! :-)) (சாரி ஆயில்ஸ் அண்ணா உங்கள வம்பிழுக்காம இருக்க முடியல..!! ;-) )


-அன்புடன்,
ஸ்ரீமதி.

கவிதையே தெரியுமா??

என் நினைவுகளில்
நீர்த் தெளித்து
காதல் கோலம்
போட்டவள் நீ..!!

காலை காபியோடு
விழித்தவனைக்
கவிதையோடு
எழுப்பியவள் நீ..!!

என் சிரிப்பிற்குப்
பின்னால்
இழையோடும்
சிறு ஏக்கத்திற்குச்
சொந்தக்காரி நீ..!!

தேவையில்லாமல்
என் மீசைக்கு
வெட்க வண்ணம்
பூசியவள் நீ..!!

என் சட்டைக்கும்
உன் வியர்வையால்
வாசமூட்டியவள் நீ..!!

மார்கழி மாதத்து
முன்பனியாய்
மனதில்
உறைபவள் நீ..!!

கோடைகாலத்து
குளிர் நிலவாய்
நெஞ்சில்
உதிப்பவள் நீ..!!

எல்லாம்
செய்தது நீ..!!
எனக்கு
எல்லாமுமாய்
இருந்ததும் நீ..!!

இன்று
என் கன்னத்து
முத்தங்களை
காற்றுத் தீண்டாமல்
வேலியமைத்துக்
காத்து வருகிறேன்
நான்..!!

கவிதையே
உனக்கிது
தெரியுமா??

-அன்புடன்,
Sri.

பி.கு: இதை கவிதைன்னு சொல்லி நான் உங்கள கஷ்டப்படுத்த விரும்பல..!! :( ஏதோ எழுதனும்னு நினைச்சேனேத் தவிர, மனசு சரியில்லாததுனால சரியா எழுதமுடியல..!! சோ மன்னிக்கவும்...!! :((

நாங்களும் சமைப்போம்ல..!!-2

கஷ்டப்பட்டு ஒருவழியா காபி போட்டு முடிச்சு வெளில வந்தா அடுத்தது டிஃபன் பண்ணுன்னு வாய் கூசாம சொல்றான்....என்னடா இது வம்பா போச்சு.. காபி போட்டதே ஏதோ ஒலிம்பிக்-ல கோல்ட் மெடல் வாங்கின மாதிரி நான் நினைச்சா.... அதுக்குமேல டிஃபன் வேற செய்ய சொல்றானே இவனுக்கு உயிர் மேல ஆசையே இல்லையா??-ன்னு நினைச்சேனே தவிர சொல்லமுடியல...!!

'சரி என்னதான் நடக்கும் நடக்கட்டுமே'-ன்னு... என்னை இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போன என் அக்காவ திட்டிகிட்டே போய் பார்த்தா காலைல தோசை செய்ய சொல்லி எழுதிவெச்சிட்டு போயிருக்கா (அவ போகும் பொது எல்லாரும் தூங்கிட்டதுனால இப்படி ஒரு ஏற்பாடு)..எனக்கும் தோசைக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம். அதுக்கு ஒரு சின்ன பிளாஷ் பேக் இருக்கு...எல்லாரும் மேல பாருங்க...

அப்ப நான் டென்த் ஸ்டாண்டர்ட் படிச்சுகிட்டு இருந்தேன்....அம்மா திடீர்ன்னு பாட்டிக்கு உடம்பு சரி இல்லன்னு ஊருக்குப் போகவேண்டியதா போச்சு... நான் சின்ன பொண்ணுங்கறதால:) எல்லா பொறுப்பையும் (சமையல் உட்பட) அண்ணாகிட்ட ஒப்படைச்சிட்டு அம்மா போய்ட்டாங்க... இந்த இடத்துல என் அண்ணனோட சமையல் திறமையும், அதனால அவன் என்னைப் படுத்தும் பாடையும் சொல்லியாகனும்...

அவன் நல்லா காபி போடுவான், டீ போடுவான், எழுமிச்சம்பழம் ஜூஸ் போடுவான், நல்லா தோசை செய்வான்.. ஆனா இவன் இதெல்லாம் செய்யனும்னா நான் அவனுக்கு ஹெல்ப் பண்ணனும்... எப்படினா?? ஃபார் எக்ஸாம்பில் அவன் ஜூஸ் போடறான்னா.. நான் தான் அவன் உட்கார்ந்துருக்கற இடத்துக்கு எழுமிச்சம்பழம், டம்ளர், தண்ணி, பில்டர், சர்க்கரை, ஒரு பெரிய பாத்திரம், ஸ்பூன், உப்பு (தெரிஞ்சவரைக்கும் லிஸ்ட் பண்ணிருக்கேன்..)எல்லாத்தையும் கொண்டு போகணும்...அவன் அந்த பழத்த பிழிஞ்சு ஜூஸ் போட்டுட்டு... சர்க்கரை சரியா இருக்கான்னு பார்க்கறேன்னு சொல்லிட்டு.... பாதி ஜூஸ குடிச்சிட்டு..போனா போகுதுன்னு எனக்கும் கொஞ்சம் தருவான்... அதுவும் சர்க்கரை தண்ணி மாதிரி இருக்கும்... நானும் அதை ஜூஸ்ன்னு நம்பி குடிச்சிட்டு... மறுபடியும் நான் கொண்டுவந்த எல்லா பொருளையும் கழுவி, தொடைச்சு வெப்பேன்.

இப்படி அண்ணாங்கற பேர்ல கொடுங்கோல் ஆட்சி அவன் செஞ்சுட்டு வந்தப்பதான், என் அம்மா தெரியாத்தனமா அடுப்படிய அவன் கஸ்டடில விட்டுட்டு போய்ட்டாங்க...!!அவன் சும்மா இருப்பானா??

"ஏய் உனக்கு தோசை செய்யத் தெரியுமா??"

"ம்ஹும்..!!"

"சரி போய் மாவ எடுத்துண்டு வா..!! அந்த குழிகரண்டிய எடு... மாவ கலக்கு... தோசை திருப்பிய எடு.... தட்டு எடு... தோசைக் கல்ல எடு...", ன்னு ஓவரா வேலை சொல்லிக்கிட்டு இருந்தான்.... (இதுல எனக்கு எந்த வேல தெரியுமோ அத மட்டும் செஞ்சேன்..!! :))

"ஏய் இதுதான் உங்க ஊர்ல தோசைக் கல்லா??"

"அதுத் தெரியாது... ஆனா அம்மா இதுலதான் அன்னைக்கு சப்பாத்தி பண்ணா..!!", அப்பாவியா நான் தான்...

"லூசே சப்பாத்தி இடற கல்லு வேற.... தோசை சுடர கல்லு வேற...!!"

அன்னைக்கு விட்டது தான்...நான் அப்பறம் அந்த தோசைய பத்தியோ, தோசை கல்லைப் பத்தியோ வாயே தொறக்க மாட்டேன்... ஆனா விதி யார விட்டது?? இன்னைக்கு அக்கா ரூபத்துல வந்து மறுபடியும் என்னை அந்த கல்ல தேடவெச்சிடிச்சு...!! :(

நான் அந்த கல்லு எங்க இருக்குன்னு தேட போறப்பதான்... கிச்சன் வாசல்ல ஒரு நிழல்... யார்ரா அதுன்னு நிமிர்ந்து பார்த்தா... என் உடன்பிறப்பு அப்படியே ஒரு யோசனையோட என்னை பார்த்தது... "என்னடா??"

"ஹே உனக்குதான் தோசைக் கல்லுக்கும், சப்பாத்தி கல்லுக்கும் வித்தியாசமே தெரியாதே..!! அப்பறம் எப்படி தோசை சுடரன்னு பார்க்கவந்தேன்..!!"

'கிராதகா என்ன ஒரு சந்தோஷம் மூஞ்சில?' நான் கொஞ்ச நேரம் யோசிச்சது நல்லதா போச்சு...

"சரி சரி கோவப்படாத... நகரு நானே தோசை வார்க்கறேன்..!!"

"வேண்டாம் நானே பண்றேன்... என்ன கொஞ்சம் பிஞ்சிபோயிடும்... ஷேப்லெஸ்ஸா இருக்கும்..." (அவனோட வீக்னெஸ்)...

"அதெல்லாம் வேண்டாம்.. நானே வார்க்கறேன்... நீ நகரு..!!"

"பரவால்லடா..!!"

"அக்கா வந்தா நீதான் தோசை ஊத்தினன்னு சொல்றேன் நகரு..!!"

'ஹப்பா தப்பிச்சுட்டேன்...!!'.

அப்பறம் என்ன நல்லா சாப்டுட்டு ஆபீஸ் வந்தாச்சு... சும்மா சொல்லக்கூடாது நல்லாவே தோசை செய்திருந்தான் மாதவன்...!! :D-அன்புடன்,
ஸ்ரீ.

நாங்களும் சமைப்போம்ல..!!-1

இதுநாள் வரைக்கும் எந்த ஒரு விஷயம் எனக்கும், அதனால அசம்பாவிதம் மத்தவங்களுக்கும் நடக்காம கண்ணும், கருத்துமா கடவுள் காப்பாத்தி வெச்சிருந்தாரோ அந்த விஷயம் ஒருநாள் காலை, அவர் தூங்கற நேரமா பார்த்து நடந்துடிச்சு... அது வேற ஒன்னும் இல்லைங்க வீட்ல எல்லாருமா சேர்ந்து என் கழுத்தப் பிடிச்சு கிச்சன்க்குள்ளத் தள்ளிட்டாங்க...:( உள்ளப் போனா ஒரே இருட்டு... (அடடா இதுக்கு தான் முன்னப் பின்ன கிச்சனுள்ள வந்திருக்கனும்கறது)...:( செத்தாதான் சுடுகாடு தெரியும்னு சொல்றமாதிரி, சமைச்சிருந்தாதானே, இல்ல அட்லீஸ்ட் ட்ரை பண்ணிருந்தா தானே தெரியும் கிச்சன் எங்க இருக்கு..எப்படி இருக்குனு.. நாமதான் அதெல்லாம் தடை செய்யப்பட இடம் மாதிரி அதுக்குள்ளே போனதே இல்லையே...இப்ப என்னடா பண்றதுன்னு முழிச்சிகிட்டே நின்னேன்...


அப்பதான் உடன்பிறப்பு என்ட்ரி ஆச்சு, "ஏய் என்னடி பண்ற?? லைட் கூட போடாம இருட்டுல என்ன தேடற??", அடடா லைட் போடலியா..அதான் இருட்டா இருந்ததா?? நாமக் கூட நம்ம ஞானமின்மையால் வந்த இருட்டுன்னு நினைச்சிட்டோமே..., "அதெனக்குத் தெரியாதா சும்மா இருட்டுல கிச்சன் எப்படி இருக்குன்னு பார்க்கத் தான் லைட் போடல,(சமாளிச்சிடோம்ல..!!) சரி சொல்லு உனக்கென்ன வேணும் சாப்ட??"


"இவங்க பெரிய நளசக்ரவர்த்தி சொன்னவுடனே நளபாகம் செஞ்சிடப் போறாங்க... கேள்வி வேற...முதல்ல காபி போடு...அப்பறம் நீ சமைக்கலாம்..!!"


ச்சே...ரொம்ப கேவலப்படுத்திட்டான்....நாமளும் கொஞ்சம் ஓவரா தான் கேட்டுட்டமோ..?? சரி விடு இதெல்லாம் வீரர்கள் வாழ்க்கையில் சகஜம்னு.. சொல்லி உள்ளப் போனா அப்பதான் ஒரு பெரிய டவுட் வந்தது...என்னனு கேட்கறீங்களா??வேற என்ன இந்த காபி பொடி, சர்க்கரை இதெல்லாம் எங்க இருக்குன்னு தெரியல..:( கேட்டா அண்ணன் அடிக்க வருவான்....!! சமாளிப்போன்னு சொல்லி, "மாதவா காபி பொடி இல்லடா...பார்த்து வாங்கி வெக்க மாட்டியா??"-னு கொஞ்சம் கோவமா கேட்டேன்.. அப்படியே காபி பொடி டப்பாவோட டெரர்ரா ஒரு லுக் விட்டான்...,

"இதுக்கு பேர் என்ன உங்க ஊர்ல??"

"இது பில்டர் காபின்னா? நான் கேட்டது ப்ருடா..!!"

"அதெதுக்கு உனக்கு??"

(மனசுக்குள்)'எனக்கு பில்டர் காபி போட தெரியாது...!!' (சத்தமா) "இல்ல அது உனக்கு பிடிக்குமேனு கேட்டேன்...!!"

"இல்ல எனக்கு பில்டர் காபி தான் வேணும்..!!"


(பெட்ருமாஸ் லைட்டே தான் வேணுமா??)"சரி போடறேன்..!!"


"ஆமா உனக்கு டிகாஷன் போடத் தெரியுமா??"

"ஓஓ தெரியுமே..!!"

"சரி போடு..!!"

"அச்சச்சோ...!!" நான்தான்....நான்தான்...

"என்ன ஆச்சு??"

"லைட்டர காணோம் டா"

"என்னது லைட்டரா?? அதெதுக்கு??"

"அடப்பாவி...ஸ்டவ் எரியவைக்க அதுதான் வேணும் தெரியாதா??"

"அதுத்தெரியும்...ஆனா இந்த ஸ்டவ்க்கு எதுக்கு டி லைட்டர்??"


அது ஆடோமேடிக்-ங்கற உண்மை..அப்பதாங்க எனக்கேத் தெரியும். ஒருவழியா வெற்றிகரமா 6 மணிக்கு உள்ளப்போய் 7:30 மணிக்கு காபி கப்போட வெளில வரும் போது வேர்த்து விறுவிறுத்துப் போச்சு சரி இவ்ளோ கஷ்டப்பட்டு செஞ்சிருக்காளேன்னு கொஞ்சமாவது இரக்கப்படலாம்ல அதுதான் இல்ல... "ஆமா காபிக்கு சர்க்கரை போட்டியா?? உப்பு போட்டியா??"

"சர்க்கரை தான் போட்டேன்...",னு நான் கொஞ்சம் இழுக்க..

"ஆர் யு சூர்??"

"சூர்".

"காண்பிடென்ட்??",ன்னு என்னமோ கொடீஸ்வரன்ல கேட்கற மாதிரி கேட்டுட்டு LIC பாலிசி போட்ருக்கற தைரியத்துல குடிக்க ஆரம்பிச்சுட்டான். அவனுக்கு ஒன்னும் ஆகலைன்னு தெரிஞ்சப்பறம் நானும் ரொம்ப தைரியமா குடிச்சிட்டேன்.

அப்பறம் தான் கொடுமைலையே பெரிய கொடுமையான அந்த டிஃபன் செய்யற படலம் ஆரம்பமானது.....

பி.கு: இதை ஒரே பதிவா போடனும்ன்னு தான் நினைச்சேன்... ஆனா பதிவு நீளம் பிளஸ் நேரமின்மை காரணமாக அடுத்த பதிவு போட வேண்டியதா போச்சு...:( பொறுத்தருள்க...!! ;)

சத்தம் மறைக்கும் ஆயுதம்

என் வளையல்களின்
மாநாட்டில்
அவன்
கவன ஈர்ப்புத்தீர்மானம்
ஒருமனதாய்
இருமனதால்
நிறைவேற்றப்பட்டது
**
இனி உடைபடும்
வளையல்களுக்காய்
நீ வருந்தவேண்டாம்
அவை இந்நேரம்
மோட்ஷம் அடைந்திருக்கும்
**
வளையல்
ஏன்டா பிடிச்சிருக்கு??
உன் முத்தத்தின்
சத்தம் மறைக்கும்
ஆயுதம் என்பதாலா??
**
என் உடையாத
வளையல்களுக்கு
முத்தம் தராதே
உடைந்த
வளையல்களின்
சத்தம் தாங்கமுடியவில்லை
**
உன்னிடமிருந்து
உதிர்ந்து விழுந்த
முத்தத்திற்கு
மௌன அஞ்சலி
செலுத்தின
உடைந்த
என் வளையல்கள்
**
உன் மீது
நான் கொண்ட
காதலைப் போலவே
கணக்கிலடங்காதவை
நமக்காக உடைந்த
என் வளையல்களும்
**
'வலையல்'
தப்புடா
அது
'வளையல்'
ம்ஹீம்
உன்னுடையது மட்டும்
வளைந்திருப்பது அல்ல
வலைவிரிப்பது
**

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது