ரயிலே...ரயிலே..ஒரு நிமிஷம்..!! ரதியைப் பார்க்க நிற்பாயா??

சின்ன வயசுல இருந்தே எனக்கு ஏன் எல்லாருக்குமே ரயில பார்க்கறது அதுல பயணம் செய்யறது பிடிக்கும் தானே ஆனா எனக்கு கொஞ்சம் அதிகமாகவே பிடிக்கும். சின்னக் குழந்தையா இருக்கும் போதே யாராவது ஊருக்குப் போகலாமானு கேட்டா நான் உடனே அது பக்கத்து ஊரா இருந்தாலும் சரி ட்ரெயின்ல தான் போகனும்னு சொல்வேனாம் அவ்ளோப் பிடிக்கும் ட்ரெயின.

அப்பறம் ஸ்கூல் படிக்கும் போது என் ஸ்கூலுக்குப் பின்னாடியே Railway station இருந்தது அதைத் தாண்டி ஒரு கோவிலும் இருந்தது. நான் கோவிலுக்குப் போறேன்னு அம்மாக்கிட்ட சொல்லிட்டு நானும் அப்பறம் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து அங்க போய் உட்கார்ந்து வந்து போற விதவிதமான மனுஷங்கள வேடிக்கைப் பார்த்துட்டு இருப்போம். எல்லாம் 5 மணி வரைக்கும் தான்,ஏன்னா அதுவரைக்கும் கரப்பான் பூச்சில இருந்து காட்டெருமை வரைக்கும் எது வந்தாலும் சமாளிச்சிரலாம் அதுக்குமேல ஆச்சுன்னா தேவையில்லாம பேப்பர்ல படிச்சது பக்கத்து வீட்ல சொல்லக் கேட்டதுன்னு ரயில பத்தின திகில் கதையெல்லாம் நியாபகத்துக்கு வந்து தொலைக்கும். அதனால 5 மணி ஆச்சுன்னா ஜீட் விட்ருவோம் வீட்டுக்கு.

இப்படி ரயிலுக்கும் எனக்குமான சினேகம் வளர்ந்துவர யார் கண் பட்டதோ தெரியல நான் காலேஜ் சேர்ந்தப் பிறகு ரயிலயேப் பார்க்கல‌. என்னடா இது இப்படி ஆயிடிச்சே நம்ம நிலைமைன்னு நினைச்சுக்கிட்டு இருந்தப்போது தான் நாங்க ஃபைனல் இயர்ல tour போகலாம்ன்னு முடிவு பண்ணாங்க‌. உடனே எனக்குள்ள இருந்த ரயில் ஆசை எழுந்து உட்கார்ந்தது எல்லார்க்கிட்டயும் சொல்லி(கெஞ்சி) ரயில்லப் போகலாம்னு சம்மதம் வாங்கிட்டேன். அவங்களும் சரி போய் தொலைன்னு ஒத்துக்கிட்டாங்க. அப்பறம் என்ன பயங்கர‌ ஜாலியா கேரளாவோட மழைய ஜன்னலோரமா ரசிச்சுகிட்டேப் போய்ட்டு வந்தாச்சு.

இனிமே எப்படி ரயில்லப் போறதுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்பத்தான் ஹைதராபாத்-ல training-னு மெயில் வந்தது "இவ பக்கத்துல இருக்கறக் கடைக்குப் போக சொன்னாலே, நீயும் வாம்மான்னு சொல்றவளாச்சே, இவ எப்படி‌ ஹைதராபாத் போகப்போறா?"-ன்னு அம்மா யோசிச்சுட்டு இருக்கும் போதே, ரயில்ல போறோம்ன்னு சொன்னவுடனே ரெடியாகி நின்ன என்ன அம்மா ஒருமாதிரி தான் பார்த்தாங்க‌. ஆனா அங்க போனப் பிறகு ஒரு மூனு மாசம் ரயில பார்க்கக்கூட முடியல.

அப்பத்தான் இன்னும் ஒரு மாசம் training-க்கு பேங்களூர் போங்கன்னு எல்லாரையும் தொரத்திவிட்டுட்டாங்க‌. ஹைய்யா ஜாலி ட்ரெயின்‍ல போகலாம்னு நினைச்சா என்னைத்தவிர எல்லாரும் பஸ்ல புக் பண்ணிட்டு நீ பஸ்லத்தான் வரனும், நீயில்லாம நாங்க போகமாட்டோம்னு ஒரே அன்புத் தொல்லை வேற‌. என்னப் பண்றதுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப் போதுதான் என் க்ளோஸ் ஃப்ரெண்டுக்கு பஸ் ட்ராவல் ஒத்துக்காது, அவ ட்ரெயின்ல தான் போகப் போறான்னு தெரிஞ்சது உடனே சாரி நான் அவளுக்குத் துணைக்குப் போறேன்னு சொல்லி ட்ரைன்ல ticket வாங்கிட்டேன்.

அப்பறம் தான் என் மரமண்டைக்கு ஒரு விஷயம் உறைத்தது. அது என்னன்னா பஸ்னா எல்லாரும் சேர்ந்துப் போகறதால என் loggage எல்லாம் சேர்த்து எடுத்துட்டு போய்டுவாங்க நான் ஃப்ரீயா போகலாம் ஆனா இப்ப ட்ரெயிங்கறதால என்னோட சுமைகளப் பூரா நானே சுமக்கற நிலைமை. ஆனால் என் ஃப்ரெண்ட் ஐடியாவா அவ லக்கேஜ கூரியர் பண்ணிட்டா. என்னோடத என்னப் பண்ணாலும் தீராது அது வேற விஷயம். ஏன்னா ஒரு சின்னக் குடித்தனம் பண்ற அளவு இருந்தது. எப்படியோ கஷ்டப் பட்டு கஜ்ஜிகூடா எக்ஸ்பிரஸ் பிடிச்சு பேங்களூர்க்குள்ள நுழைஞ்சாச்சு. ஆனா அதுவரைக்குமே நாங்க எந்த ஸ்டேஷன்ல இறங்கனும்னு ரெண்டு பேருக்குமே தெரியாது. எப்படியோ கஷ்டப்பட்டு மெஜஸ்டிக்ல இறங்கி ஆட்டோபிடிச்சி மடிவாலா போயிறங்கினா பஸ்ல போன கும்பல் வரவே இல்ல‌.

இப்படியெல்லாம் நான் ரயில்ல போக படாதபாடு பட்டுட்டு இருக்கும் போது தான் எனக்கு போஸ்டிங் லொகேஷன் சென்னைன்னு வந்தது. அடடா சென்னைல தான் நிறைய ட்ரெயின் இருக்குமே, இனிமே தினமும் அலைப்பாயுதே ஷாலினி மாதிரி ட்ரெயின்லயே போகலாம்னு நினைச்சு இங்க வந்தா ட்ரெயின் வாசனையே இல்லாத ஒரு இடத்துல போஸ்டிங் போட்டு என்ன பஸ்ல போய் கஷ்ட்டப்பட வெச்சுட்டான். ஆனா அந்த சமயத்துல தான் நான் நிறைய நல்ல விஷயங்களான பஸ்ல அடுத்தவங்க கால்ல ஏறி நிக்கறது எப்படி? ஃபுட் போர்ட்ல ட்ராவல் பண்றது எப்படி?ன்னு கத்துக்கிட்டேன். இந்த லட்சணத்துல நான் மொபைல வேற தொலைச்சிட்டேன். பொறுத்துப் பார்த்த என் அண்ணன் இனிமே நீ அங்க இருக்க வேண்டாம் வீட்டுக்கே வந்துடுன்னு சொல்லி அவனோடவே கூட்டிக்கிட்டு போய்ட்டான். இனிமே இவன் போற மாதிரி தான் நம்மளையும் கூட்டிக்கிட்டு போவான் நம்ம ட்ரெயின் ஆசை அவ்ளோத்தான்னு முடிவு பண்ணிட்டேன். அடுத்த நாள் காலைல ஆஃபிஸ் போக கிளம்பின என்ன வான்னு கூட்டிக்கிட்டு போனான் எங்க போறான்னு பார்த்தா railway station-க்கு பார்ரா நாம இவ்ளோ நாளா எதுக்கு ஆச பட்டோமோ அதுலயே இனிமே போகப் போறோம்ன்னு நினைச்சுகிட்டே ஜாலியா ஆஃபிஸ் வர ஆரம்பிச்சிட்டேன் . இனிமே என்ன அலைப்பாயுதே மாதவன் மாதிரி ஒருத்தன் வந்து " நீ அழகா இல்ல, நான் உன்ன லவ் பண்ணல. ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு",ன்னு dialogue பேச வேண்டியது தான் பாக்கி...!! :-))

72 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

M.Saravana Kumar said...
This comment has been removed by the author.
M.Saravana Kumar said...

//" நீ அழகா இல்ல, நான் உன்ன லவ் பண்ணல. ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு"//

ஸோ.. இதுக்காகதான் ரயில் பயணமா..
;)

Sri said...

ச்சே..ச்சே..அப்படில்லாம் இல்ல. யாரோ உங்கக் கிட்ட தப்புத்தப்பா சொல்லிருக்காங்க என்னப்பத்தி..!! ;-)

M.Saravana Kumar said...

யாரும் சொல்லல.. நீங்கதான் உங்க பதிவ இத சொல்லித்தான் முடிச்சிருக்கீங்க..

கவலையே படாதீங்க..
கூடிய சீக்கிரம் Maddy வருவார்..

;)

Sri said...

என் அண்ணன் பேரு மாதவன்..!! :-)

Sri said...

ஆமா அதென்ன ஃபஸ்ட் கமெண்ட் போட்டுட்டு நீங்களே அழிச்சிட்டீங்க??
;-))

M.Saravana Kumar said...

//ஸோ.. இதுக்காகதான் ரயில் பயணமா..
;)//

இத மட்டும்தான் ஃபஸ்ட் கமெண்டா போட்டேன்.. பட் எதுக்காக போட்டேன்னு உங்களுக்கு தெரியாமா போயிடுச்சினா.. ஸோ.. செகண்ட் கமெண்ட்..

M.Saravana Kumar said...

அப்போ மாதவன் உங்க கூட தினமும் வரார்.. பதிவு படி..

விடுங்க.. நீங்க எதிர்பார்க்கிற ஒருத்தன் வர.. உங்கள் ரயில் பயணம் இனிதாகட்டும்..

பாவம் வர்ற பையனை உங்க அண்ணாகிட்ட மாட்டி விட்டுடாதீங்க.. இந்த பசங்களுக்கு முதல் எதிரியே பொண்ணுங்களோட அன்னனுங்கதான்..
:)

Sen22 said...

நான் இதுக்கு முன்னாடி போட்ட Command-ஐ Delete பண்ணிடுங்க...


Sorry...

Sen22 said...

உங்க எல்லா இரயில் அனுபவமும் நல்லா இருக்கு...

Keep Rocking...

நிஜமா நல்லவன் said...

ஆஹா...இப்படி கூட ரயில் அனுபவம் எழுத முடியுமா?....நல்லா இருக்கு!

ஆயில்யன் said...

:))

இவன் said...

நான் வேணும் என்னா வந்து சொல்லட்டுமா?? ஹி ஹி ஹி ஹி...
ரயில் பயணத்தின் போது பார்த்து பலபேர் ரயில்லதான் பொருட்கள் கொள்ளை அடிக்கிறாங்களாம்... யாரவது உங்கள் பொருட்களை கொள்ளை அடிக்காமல் மனதை கொள்ளை அடிக்க வாழ்த்துக்கள்

Sri said...

@ sen22

நன்றி அண்ணா..!! :-)

அத என்னால டெலிட் பண்ண முடியாது. நீங்களே வேணா முயற்சி செய்து பாருங்கள்..!! :-))

Sri said...

@ நிஜமா நல்லவன்
ஆமா அண்ணா இன்னும் நிறைய இருக்கு. அப்பப்ப சொல்றேன்..!!
;-)

Sri said...

@ ஆயில்யன்
:-))

நன்றி அண்ணா..!! :-))

Sri said...

@ இவன்
//நான் வேணும் என்னா வந்து சொல்லட்டுமா?? //

என்னக் கொடுமை இது?? இப்பத் தான் உங்க பின்னூட்டத்துல அண்ணானு உங்கள சொல்லிட்டு இங்க வந்தா..!! :-((

Ramya Ramani said...

ஹிம்ம் நல்லா ரசிச்சு சிரிச்சேன் ஸ்ரீ.. ரயில் பயணத்துல இரவு நேரத்துல தூங்கும் போது, யாரோ தாலாட்டுவது போல இருக்கும்..அதுனால எனக்கும் அப்படிப்பட்ட பயணம் பிடிக்கும்..விடியகாலைல(6-7 am) நீங்க சென்னைல ரயில போனீங்கன்னா சூப்பரா Enjoy பண்ணலாம்..நல்லா குளுமையான காத்து அப்படியே சொக்கும்..சொர்கம் தான் :)

//" நீ அழகா இல்ல, நான் உன்ன லவ் பண்ணல. ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு"//

ஓ இது வேறயா..வாழ்த்துக்கள்

naanal said...

ஸ்ரீ..
உங்க ரயில் பயண ஆசை நல்ல இருக்கு...
ஆனா மாதவன் ஐ உங்க அண்ணனு சொல்லி இப்படி ஏமாத்திட்டீங்களே ... :((
சரி பரவா இல்லை விடுங்க உங்க மனசுக்கு பிடித்த அந்த "அவரை" உங்களுக்கு பிடித்த ரயிலில் சந்திக்க என் வாழ்த்துக்கள் ;)

naanal said...

எனக்கும் ரயில் பயணம் ரொம்ப பிடிக்கும்...
அதுவும் வாசல் கிட்ட நின்னுட்டு போறதுன்னா ரொம்ப பிடிக்கும் ... :))

தமிழ் பிரியன் said...

நமக்கு இரயில் அனுபவம் இல்லை.. ஆனா உங்க அனுபவத்தில் இரயிலே வரலை... இன்னும் எழுதுங்க

sathish said...

இரதியை பார்த்து இரயில் நின்றதா :)

good one sister!

இனியவள் புனிதா said...

எனக்கும் இரயில் பயணம் மிகவும் பிடிக்கும் ஸ்ரீ! நாலு வருஷத்துக்கு முன்னாலே முதல் தடவையா விரைவு இரயிலில்(Komuter)பயணம் செய்த டிக்கெட் கூட பத்திரமா இருக்கு. :-) ஆனா இந்த வேலை கிடைத்தப் பிறகு ஒரு மாதமாக இரயில் பயணம்தான். அதுவும் சில சமயங்களில் இடம்கூட கிடைக்காது
:-) அடுத்த இரயிலுக்கு காத்திருந்து வேலைக்குப் போய் சேர்வதற்குள் தாமதமாகிடும்.

இப்பொதெல்லாம் கார் பயணம்தான்
:-( ஆனாலும் அந்த இரயில் பயணங்கள் மனதில் இன்னமும் ஈரமாய் இருக்கு.

இவன் said...

//
என்னக் கொடுமை இது?? இப்பத் தான் உங்க பின்னூட்டத்துல அண்ணானு உங்கள சொல்லிட்டு இங்க வந்தா..!! :-((//


என்னது அண்ணனா என்னை 10, 15 கெட்ட வார்த்தையில வேணும் என்னாலும் திட்டுங்க. தயவு செய்து அண்ணா என்னு மட்டும் சொல்லாதீங்க.... என் மனசு தாங்காது. :((

இவன் said...

//என்னக் கொடுமை இது?? இப்பத் தான் உங்க பின்னூட்டத்துல அண்ணானு உங்கள சொல்லிட்டு இங்க வந்தா..!! :-((//

உங்க பின்னுட்டத்தையே என் ப்லொக்ல காணோமே....

Sri said...

@ இவன்
நான் சொன்னது என்னுடைய "நீ இல்லாத நாட்களில்" கவிதைக்கு நீங்கப் போட்ட பின்னுட்டத்திற்கு நான் போட்ட பதிலை...!!

ஜி said...

//இனிமே என்ன அலைப்பாயுதே மாதவன் மாதிரி ஒருத்தன் வந்து " நீ அழகா இல்ல, நான் உன்ன லவ் பண்ணல. ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு",ன்னு dialogue பேச வேண்டியது தான் பாக்கி...!! :-)) //

varuvaan varuvaan.. kavalaiye padaatha ammani.. paavam antha machaan.. :(((

thodar kathai aduththa parta podumaa.. atha vituttu rayil payanam, athu ithunnu chinna pulla thanamaa...

Sri said...

@ Ramya ramani
//ஹிம்ம் நல்லா ரசிச்சு சிரிச்சேன் ஸ்ரீ..//
அட அப்படியா?? :)

//ரயில் பயணத்துல இரவு நேரத்துல தூங்கும் போது, யாரோ தாலாட்டுவது போல இருக்கும்..அதுனால எனக்கும் அப்படிப்பட்ட பயணம் பிடிக்கும்..விடியகாலைல(6-7 am) நீங்க சென்னைல ரயில போனீங்கன்னா சூப்பரா Enjoy பண்ணலாம்..நல்லா குளுமையான காத்து அப்படியே சொக்கும்..சொர்கம் தான் //

ஆமாம்..!! :)

//ஓ இது வேறயா..வாழ்த்துக்கள்//
;)

நன்றி ரம்யா..!! :)

Sri said...

@ Naanal
//ஸ்ரீ..
உங்க ரயில் பயண ஆசை நல்ல இருக்கு... //
நன்றி..!! :)

//ஆனா மாதவன் ஐ உங்க அண்ணனு சொல்லி இப்படி ஏமாத்திட்டீங்களே ... :(( //

நிஜமாவே என் அண்ணன் பெயர் மாதவன் தான்...!! :)

//சரி பரவா இல்லை விடுங்க உங்க மனசுக்கு பிடித்த அந்த "அவரை" உங்களுக்கு பிடித்த ரயிலில் சந்திக்க என் வாழ்த்துக்கள் ;)//

நன்றி அக்கா..!! :)

Sri said...

//எனக்கும் ரயில் பயணம் ரொம்ப பிடிக்கும்...
அதுவும் வாசல் கிட்ட நின்னுட்டு போறதுன்னா ரொம்ப பிடிக்கும் ... //

Footboard travel-ah பத்திரம்..!! :)

Sri said...

@ தமிழ் பிரியன்
//நமக்கு இரயில் அனுபவம் இல்லை.. ஆனா உங்க அனுபவத்தில் இரயிலே வரலை... இன்னும் எழுதுங்க//
ம்ம்ம்ம் சரி அண்ணா..!! :)

Sri said...

@ Sathish

//இரதியை பார்த்து இரயில் நின்றதா//

ம்ம்ம்ம்...!! ;)

நன்றி அண்ணா..!! :)

Divya said...

\\இனிமே என்ன அலைப்பாயுதே மாதவன் மாதிரி ஒருத்தன் வந்து " நீ அழகா இல்ல, நான் உன்ன லவ் பண்ணல. ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு",ன்னு dialogue பேச வேண்டியது தான் பாக்கி...!! :-))\\


:)))

ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் ஸ்ரீ!

J J Reegan said...

// இனிமே தினமும் அலைப்பாயுதே ஷாலினி மாதிரி ட்ரெயின்லயே போகலாம்னு நினைச்சு //

கொஞ்ச நாள் ஆள் வரலைனா இப்பிடியெல்லாம் பண்ணுவியா....

J J Reegan said...

// ஆனா அந்த சமயத்துல தான் நான் நிறைய நல்ல விஷயங்களான பஸ்ல அடுத்தவங்க கால்ல ஏறி நிக்கறது எப்படி? ஃபுட் போர்ட்ல ட்ராவல் பண்றது எப்படி?ன்னு கத்துக்கிட்டேன். //

இதெல்லாம் உங்களுக்கு நல்ல விஷயங்கள்....????

உன்னோட நேரம் அப்பிடி.....

J J Reegan said...

// ஆனா அந்த சமயத்துல தான் நான் நிறைய நல்ல விஷயங்களான பஸ்ல அடுத்தவங்க கால்ல ஏறி நிக்கறது எப்படி? ஃபுட் போர்ட்ல ட்ராவல் பண்றது எப்படி?ன்னு கத்துக்கிட்டேன். //

இதெல்லாம் உங்களுக்கு நல்ல விஷயங்கள்....????

உன்னோட நேரம் அப்பிடி.....

J J Reegan said...

// M.Saravana Kumar said...
//" நீ அழகா இல்ல, நான் உன்ன லவ் பண்ணல. ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு"//

ஸோ.. இதுக்காகதான் ரயில் பயணமா.. //


ரிபீட்டே... ரிபீட்டே.....ரிபீட்டே.....ரிபீட்டே.....
(ஒன்னும் இல்ல எக்கோ வருதானு பார்த்தேன்...)

J J Reegan said...

// சின்ன வயசுல இருந்தே //

// அப்பறம் ஸ்கூல் படிக்கும் போது //

// நான் காலேஜ் சேர்ந்தப் பிறகு ரயிலயேப் பார்க்கல‌ //

எனகென்னமோ கொஞ்சம் சரியா படலியே....

J J Reegan said...

//இனிமே என்ன அலைப்பாயுதே மாதவன் மாதிரி ஒருத்தன் வந்து " நீ அழகா இல்ல, நான் உன்ன லவ் பண்ணல. ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு",ன்னு dialogue பேச வேண்டியது தான் பாக்கி...!! :-)) //

இம் ....இம் .... நடத்துங்க...நடத்துங்க...

கிளைமாக்ஸ்ல வந்து அண்ணன்கிட்ட நிக்க கூடாது...

என் சொத்துல சல்லி காசு குடுக்க மாட்டேன்...

Sri said...

@ இனியவள் புனிதா
//எனக்கும் இரயில் பயணம் மிகவும் பிடிக்கும் ஸ்ரீ! நாலு வருஷத்துக்கு முன்னாலே முதல் தடவையா விரைவு இரயிலில்(Komuter)பயணம் செய்த டிக்கெட் கூட பத்திரமா இருக்கு. :-)//

:)))

//ஆனா இந்த வேலை கிடைத்தப் பிறகு ஒரு மாதமாக இரயில் பயணம்தான். அதுவும் சில சமயங்களில் இடம்கூட கிடைக்காது
:-) அடுத்த இரயிலுக்கு காத்திருந்து வேலைக்குப் போய் சேர்வதற்குள் தாமதமாகிடும். //

ஆமாம்கா..!! :(

//இப்பொதெல்லாம் கார் பயணம்தான்
:-( ஆனாலும் அந்த இரயில் பயணங்கள் மனதில் இன்னமும் ஈரமாய் இருக்கு//

:))

Sri said...

@ ஜி
//varuvaan varuvaan.. kavalaiye padaatha ammani.. paavam antha machaan.. :(((//

என்னது பாவமா??சரிதான்..!! :)

//thodar kathai aduththa parta podumaa.. atha vituttu rayil payanam, athu ithunnu chinna pulla thanamaa...//

சின்ன பசங்கன்னா அப்படித்தான் அண்ணா இருப்போம்..!! ;) இப்ப போட்டுட்டேன்ல‌..!! :))

Sri said...

@ Divya
//ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் ஸ்ரீ!
//

நன்றி அக்கா..!! ;))

Sri said...

@ jj Reegan
//கொஞ்ச நாள் ஆள் வரலைனா இப்பிடியெல்லாம் பண்ணுவியா..//

அச்சச்சோ அப்படியெல்லாம் இல்ல அண்ணா..!! :(

//இதெல்லாம் உங்களுக்கு நல்ல விஷயங்கள்....????//

:))))

//உன்னோட நேரம் அப்பிடி.....//

ஆமாம் அண்ணா..!! :((

//எனகென்னமோ கொஞ்சம் சரியா படலியே....//

இதுல என்னண்ணா இருக்கு? சும்மா ரயில பார்க்கத்தான் போவேன்..!!

//இம் ....இம் .... நடத்துங்க...நடத்துங்க...
கிளைமாக்ஸ்ல வந்து அண்ணன்கிட்ட நிக்க கூடாது...
என் சொத்துல சல்லி காசு குடுக்க மாட்டேன்...//

உங்களுக்கு தங்கைய விட சொத்து பெரிசா போச்சா?? :(

;))

M.Saravana Kumar said...

// உங்களுக்கு தங்கைய விட சொத்து பெரிசா போச்சா?? //

யப்பா. [சிவாஜி - சாவித்ரி மாதிரி]

இதுக்கு மேலயுமா ரீகன் இல்லன்னு சொல்ல போறாரு..

ரீகனோட மொத்த சொத்தும் உங்களுக்கு தான்..

Sri said...

@ M.Saravana kumar
அது சரி. ஆனா பங்கெல்லாம் கேட்கக் கூடாது...ஓகே?? ;)

M.Saravana Kumar said...

OK ;)

J J Reegan said...

// M.Saravana Kumar said...

யப்பா. [சிவாஜி - சாவித்ரி மாதிரி]

இதுக்கு மேலயுமா ரீகன் இல்லன்னு சொல்ல போறாரு.. //

சரவணணாணாணாணாணா.......
சர்ர்ர்ரவணணாணாணாணாணா.......

உனக்கு இந்த யங்கு ஹீரோவெல்லாம் தெரியாதா....

Sri said...

@ jj Reegan
அவர்(Saravanan), அவர் வயசுக்கு ஏற்ற மாதிரியான ஹீரோவதான் சொல்வார். இதுக்கு போய் கவலைப்பட்டுக்கிட்டு ஃப்ரீயா விடுங்க அண்ணா..!! ;)

J J Reegan said...

// Sri said...
@ jj Reegan
அவர்(Saravanan), அவர் வயசுக்கு ஏற்ற மாதிரியான ஹீரோவதான் சொல்வார். இதுக்கு போய் கவலைப்பட்டுக்கிட்டு ஃப்ரீயா விடுங்க அண்ணா..!! ;) //

என் வயித்துல காவேரி தண்ணிய வாத்தம்மா தங்கச்சி...

Sri said...

@ jj Reegan

திருச்சி காவேரி, கொள்ளிடத்துல தண்ணி இருக்கா அண்ணா??

மங்களூர் சிவா said...

அடடா இவ்ளோ சூப்பரான போஸ்ட் எப்பிடி மிஸ் பண்ணேன்??

மங்களூர் சிவா said...

அழகான நினைவுகள்.
உங்கள் ஆசை, கனவு எல்லாம் நினைவேற
[வேற என்ன :)))))]

வாழ்த்துக்கள்.

மங்களூர் சிவா said...

//
யாரவது உங்கள் பொருட்களை கொள்ளை அடிக்காமல் மனதை கொள்ளை அடிக்க வாழ்த்துக்கள்
//

ரிப்பீட்டு

Sri said...

@ மங்களூர் சிவா
//அடடா இவ்ளோ சூப்பரான போஸ்ட் எப்பிடி மிஸ் பண்ணேன்??//


நிஜமாதான் சொல்ரீங்களா அண்ணா??
;)

Sri said...

@ மங்களூர் சிவா

//அழகான நினைவுகள்.
உங்கள் ஆசை, கனவு எல்லாம் நினைவேற
[வேற என்ன :)))))]
வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்கு நன்றிகள் அண்ணா..!! :)

மங்களூர் சிவா said...

// ஆனா அந்த சமயத்துல தான் நான் நிறைய நல்ல விஷயங்களான பஸ்ல அடுத்தவங்க கால்ல ஏறி நிக்கறது எப்படி? ஃபுட் போர்ட்ல ட்ராவல் பண்றது எப்படி?ன்னு கத்துக்கிட்டேன். //

சென்னைல கொஞ்ச காலம் குப்பை கொட்டியதால் ஃபுட்போர்ட் அடிப்பதில் எக்ஸ்பர்ட்டாகவே இருந்தேன். இப்பல்லாம் சான்ஸே இல்லை
:)))

Sri said...

பெங்களூர் ட்ராஃபிக்ல மாட்டினா பஸ்ஸே நகராது. அப்பறம் எங்க ஃபுட் போர்ட்ல போறது? நடந்தே ஆஃபிஸ் போக வேண்டியது தான்..!! ;)

J J Reegan said...

// Sri said...

திருச்சி காவேரி, கொள்ளிடத்துல தண்ணி இருக்கா அண்ணா?? //

இப்போ வட கர்நாடகாவில் மழை அதிகமாகி இருப்பதால் தண்ணி வந்துகொண்டிருப்பதாக மொபைலில் வந்த செய்தி ...

- பெங்களூரிலிருந்து ..... ஜே.ஜே..

(வேலை இல்லங்கிற காரணத்த எப்பிடி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்குது பாரு....)

J J Reegan said...

// Sri said...

பெங்களூர் ட்ராஃபிக்ல மாட்டினா பஸ்ஸே நகராது. அப்பறம் எங்க ஃபுட் போர்ட்ல போறது? நடந்தே ஆஃபிஸ் போக வேண்டியது தான்..!! ;) //

இங்கதான் பஞ்சாரத்துல அடைச்சது மாதிரி கதவு அதுவா சாத்திகித்துள்ள....

Sri said...

@ jj Reegan

செய்திக்கு நன்றி அண்ணா..!! :) (யாருக்கு வேலை இல்ல‌?? )

Sri said...

@ jj Reegan

இங்க-னா?? எங்க அண்ணா??

J J Reegan said...

அப்புறம் இன்னொரு விஷயம்...

1 km தூரத்துக்கு 2 பஸ் மாறி போறதும் இங்கததான்....

இதுக்கு யாரையாவது பதிவு போட சொல்லி கூப்பிடனும்....

J J Reegan said...

@ Sri said...

இங்க-னா?? எங்க அண்ணா??


நம்ம BMTC தான்...

M.Saravana Kumar said...

@Sri
@Reegan
என்ன அண்ணனும் தங்கச்சியும் சேர்ந்து லந்து பண்ணுறீங்களா??

உங்க ரெண்டு பேரு வயசுக்கு சிவாஜி-சாவித்திரி-யத்தான் சொல்லமுடியும்..

விஜய்- மல்லிகா-வயா சொல்லமுடியும்??
;)

J J Reegan said...

// M.Saravana Kumar said...
@Sri
@Reegan
என்ன அண்ணனும் தங்கச்சியும் சேர்ந்து லந்து பண்ணுறீங்களா??

உங்க ரெண்டு பேரு வயசுக்கு சிவாஜி-சாவித்திரி-யத்தான் சொல்லமுடியும்..

விஜய்- மல்லிகா-வயா சொல்லமுடியும்??
;) //

இங்க்னா...இங்க்னா...

அவன பத்தி மட்டும் பேச வேணாம்னா...

Sri said...

@ M.Saravana kumar
@ JJ Reegan

எச்சூஸ்மி இங்க என்ன நடக்குது?? ;))

M.Saravana Kumar said...

@Reegan
//இங்க்னா...இங்க்னா...
அவன பத்தி மட்டும் பேச வேணாம்னா...//
சரி விடுங்க்னா.. :)


@Sri
//எச்சூஸ்மி இங்க என்ன நடக்குது?? ;))//
உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா??

Sri said...

எனக்கு ஒன்னுமே தெரியாதுன்னு நான் எப்ப சொன்னேன்?? ;) இங்க என்ன நடக்குதுன்னு தான் கேட்டேன்..!! :)

J J Reegan said...

ஏன் எல்லாரும் மணிரத்னம் படம் பார்த்துட்டு வர்றீங்களா.....

Sri said...

@ JJ Reegan

அவ்ளோ இருட்டாவா இருக்கு என் ப்ளாக்?? ;)

J J Reegan said...

// Sri said...

அவ்ளோ இருட்டாவா இருக்கு என் ப்ளாக்?? ;) //

Sri said...
@ JJ Reegan

அவ்ளோ இருட்டாவா இருக்கு என் ப்ளாக்?? ;)

J J Reegan said...

நான் அலைபாயுதே படம் பாத்திட்டு வந்தேன்மா...

உன்னோட ப்ளாக்தான் ச்சும்மா கலர்புல்லா இருக்கே...

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது