நீ இல்லாத நாட்களில்..!!

அர்த்தமில்லா
வார்த்தைகளைக்
கோர்த்துக்
கவிதையாக்க முயல்கிறேன்...

வீட்டின் திண்ணைக்கும்
வாசலுக்குமான
தொலைவை உணர்கிறேன்...

கண்களுக்கும்
கன்னத்துக்குமான
இடைவெளியைக்
கண்ணீரால் நிரப்புகிறேன்...

அழகுக்காக வளர்த்த
நகங்களையும்
ஆசையாக வளர்த்த
நாயையும்
கடித்(ந்)துக் கொள்கிறேன்...

ஒலி உணராத
காதுகளும்
ஒளி உணராத
கண்களுமென
ஊமையாகித்திரிகிறேன்...

மனதுக்கும்
மூளைக்குமான
வித்தியாசத்தை
அதிசயமாக உணர்கிறேன்...

தோழிகளுக்கும் எதிரியாய்
உறவுகளுக்கும் தூரமாய்
வெறுக்கப்படுகின்றேன்...

கொல்லும் கனவுகளால்
புதைக்கப்பட்டு
மீண்டும் எழுப்பப்படுகின்றேன்..

பனிவிழும் இரவுகளில்
வியர்வை மழையில்
நனைந்து
உன் நினைவுகளால்
குளிர்காய்கிறேன்...


கோடைக்கால
மழைப் போல
திடுமென வெட்கிப்
பின் கன்னத்தின்
வண்ணம் களைகிறேன்...

உன் வீடு
கடந்தப் பிறகும்
தெருமுனைகளைத்
திருப்பிப்பார்த்து
நடக்கிறேன்...

மௌனத்திற்கு
வார்த்தைகளைத் தந்து
என் வளையலுக்கும்,
கொலுசுகளுக்கும்
மௌனத்தைப் பரிசலிக்கிறேன்..

வெட்கங்களை வேரறுத்து
விருப்பங்களுக்கு
விடுமுறை அளிக்கிறேன்...

இப்படி ஏதேதோ
எழுதத் தொடங்கி
எங்கோ
கரைந்துப்போகிறேன்
நீ இல்லாத நாட்களில்...!!

42 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

Sen22 said...

நல்லா இருக்குங்க Sri கவிதை...

Sen22 said...

//இப்படி ஏதேதோ
எழுத்தத் தொடங்கி
எங்கோ
கரைந்துப்போகிறேன்
நீ இல்லாத நாட்களில்...!! //


நல்லாவே ஃபீல்(கரையுறீங்க) பண்றீங்க...

Ramya Ramani said...

\\ஒலி உணராத
காதுகளும்
ஒளி உணராத
கண்களுமென
ஊமையாகித்திரிகிறேன்...\\

அருமை :))

valar said...

அர்த்தமில்லா
வார்த்தைகளைக்
கோர்த்துக்
கவிதையாக்க முயல்கிறேன்...

மற்றவர்களுக்கு
அர்த்தமில்லா வர்த்தைகள்???

VIKNESHWARAN said...

:) நன்கு உள்ளது..

M.Saravana Kumar said...

SRI என்னாச்சி உங்களுக்கு??

நல்லாதானே இருந்தீங்க???

ரொம்ப பீலிங்க்ஸா இருக்கு....

:(

M.Saravana Kumar said...

//மனதுக்கும்
மூளைக்குமான
வித்தியாசத்தை
அதிசயமாக உணர்கிறேன்...//

//உன் வீடு
கடந்தப் பிறகும்
தெருமுனகளைத்
திருப்பிப்பார்த்து
நடக்கிறேன்...//

அருமையான வரிகள்.. மிக்க சோகம்..

Sri said...

@ Sen22
//நல்லா இருக்குங்க Sri கவிதை..
நல்லாவே ஃபீல்(கரையுறீங்க) பண்றீங்க..//

நன்றி அண்ணா முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்..!! :-))

Sri said...

@ Ramya ramani
//அருமை//

நன்றி ரம்யா..!! :-))

Sri said...

@ Valar

//மற்றவர்களுக்கு
அர்த்தமில்லா வர்த்தைகள்???//

ஒரு மொழியின் அர்த்தமில்லா வார்த்தைகள்-னா, அந்த மொழியைச் சேர்ந்த எல்லோருக்கும் பொது தானே அக்கா..!! :-))

நன்றி அக்கா முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்..!! :-))

Sri said...

@ Vikenshwaran

//நன்கு உள்ளது//

நன்றி முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்..!! :-)))

Sri said...

@ M.Saravana kumar
//SRI என்னாச்சி உங்களுக்கு??//

ஒன்னும் ஆகலையே..!! :-))

//நல்லாதானே இருந்தீங்க???//

இப்பவும் நல்லாத்தான் இருக்கேன்..!!
;-)

//ரொம்ப பீலிங்க்ஸா இருக்கு....//

கவிதையா?? :-D

//அருமையான வரிகள்.. மிக்க சோகம்//

நன்றி..!!நன்றி..!! :-)

M.Saravana Kumar said...

//ஒன்னும் ஆகலையே..!! :-))
இப்பவும் நல்லாத்தான் இருக்கேன்..!!
;-)//

நீங்க கலக்குங்க..
;)

Sri said...

@ M.Saravana kumar
:-))

valar said...

அந்த அர்த்தமில்லா வார்த்தைகள்
தானே
உணர்வுகளை வெளிப்படுத்துகிறது

வீட்டின் திண்ணைக்கும்
வாசலுக்குமான
தொலைவை உணர்கிறேன்.

Sri said...

@ Valar
அக்கா சத்தியமா நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியல‌..!! :-((

நிஜமா நல்லவன் said...

செம செம செம சூப்பர்!

valar said...

மன்னிக்கவும்
ரொம்ப குழப்பிவிட்டேனா

அப்புறம் நான் அக்கா இல்ல தங்கச்சி

ஜி said...

:)))

Superu..

Divya said...

அருமை!!

sathish said...

:)) தொடரட்டும்!

naanal said...

//அழகுக்காக வளர்த்த
நகங்களையும்
ஆசையாக வளர்த்த
நாயையும்
கடித்(ந்)துக் கொள்கிறேன்...//

நல்லா இருக்கு ஸ்ரீ...

//மௌனத்திற்கு
வார்த்தைகளைத் தந்து
என் வளையலுக்கும்,
கொலுசுகளுக்கும்
மௌனத்தைப் பரிசலிக்கிறேன்..//

எப்படி ஸ்ரீ இப்படி எல்லாம்... :))

//இப்படி ஏதேதோ
எழுதத் தொடங்கி
எங்கோ
கரைந்துப்போகிறேன்
நீ இல்லாத நாட்களில்...!!//

கவிதைகள் எல்லாம் அருமை... என்னாச்சு ஸ்ரீ ... என் இந்த சோகம்?

Sri said...

@ நிஜமா நல்லவன்
//செம செம செம சூப்பர்!//

நன்றி அண்ணா..!! :-))

Sri said...

@ Divya
//அருமை//

நன்றி திவ்யா..!! :-))

Sri said...

@ Sathish
//தொடரட்டும்!//

நன்றி அண்ணா..!! :-))

Sri said...

@ Valar

//மன்னிக்கவும்
ரொம்ப குழப்பிவிட்டேனா//

குழப்பமெல்லாம் இல்ல..!! :-))
அதுக்கெதுக்கு மன்னிப்பெல்லாம்..!! :-)

//அப்புறம் நான் அக்கா இல்ல தங்கச்சி//

சரி தங்கச்சி..!! :-))

Sri said...

@ ஜி

//Superu..//

நன்றி அண்ணா..!! :-))

Sri said...

@ naanal

//நல்லா இருக்கு ஸ்ரீ... //

நன்றி அக்கா..!! :-))

//எப்படி ஸ்ரீ இப்படி எல்லாம்...//

அது தானா வருது அக்கா..!! ;-))

//கவிதைகள் எல்லாம் அருமை... என்னாச்சு ஸ்ரீ.என் இந்த சோகம்?//

சும்மா தான்கா..!! ;-))
இதனால் சகலமானவர்களுக்கும்.. எனக்கு ஒன்னும் ஆகல; எனக்கு ஒன்னும் ஆகல; ;-))

M.Saravana Kumar said...

//இதனால் சகலமானவர்களுக்கும்.. எனக்கு ஒன்னும் ஆகல; எனக்கு ஒன்னும் ஆகல; ;-))//

அப்படியா??
;)

M.Saravana Kumar said...
This comment has been removed by the author.
அனுஜன்யா said...

ஸ்ரீ,

மிக அழகாக எழுதுகிறாய். பிரிவின் துயரை விளக்கும் வரிகள். வாழ்த்துக்கள். அதானே, அண்ணன் எட்டு அடி பாய்ந்தால் (!!!), தங்கை பதினாறு அடி பாயமாட்டாளா!

அனுஜன்யா

Sri said...

@ M.Saravana kumar

அப்படித்தான் :)

Sri said...

@ அனுஜன்யா
//மிக அழகாக எழுதுகிறாய். பிரிவின் துயரை விளக்கும் வரிகள். வாழ்த்துக்கள்.//

நன்றி அண்ணா வருகைக்கும், வாழ்த்துக்கும்..!!! :-))

//அதானே, அண்ணன் எட்டு அடி பாய்ந்தால் (!!!), தங்கை பதினாறு அடி பாயமாட்டாளா! //

அதானே..!!!!! ;-))

இவன் said...

சூப்பர் கவிதை.... நல்லா இருக்கு

Sri said...

@ இவன்

நன்றி அண்ணா முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்

இவன் said...

//@ இவன்

நன்றி அண்ணா முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்//


ஏன் இந்த வில்லத்தனம்?? என்னை கெட்ட வார்த்தையில திட்டினாலும் பரவாயில்லை, அண்ணா என்னு மட்டும் சொல்லாதீங்க... என் மனசு தாங்காது.

J J Reegan said...

// கண்களுக்கும்
கன்னத்துக்குமான
இடைவெளியைக்
கண்ணீரால் நிரப்புகிறேன்... //

ஆஹா ... ஆஹா .....ஆஹா ...ஆஹா ...

ச்சும்மா பின்னீட்ட என் தங்கச்சி....

J J Reegan said...

// அழகுக்காக வளர்த்த
நகங்களையும்
ஆசையாக வளர்த்த
நாயையும்
கடித்(ந்)துக் கொள்கிறேன்...//

அருமை ....

J J Reegan said...

// பனிவிழும் இரவுகளில்
வியர்வை மழையில்
நனைந்து
உன் நினைவுகளால்
குளிர்காய்கிறேன்... //

நினைவுகளில்னு வந்திருந்தா நல்லாருக்குமோ....

J J Reegan said...

// கோடைக்கால
மழைப் போல
திடுமென வெட்கிப்
பின் கன்னத்தின்
வண்ணம் களைகிறேன்...

உன் வீடு
கடந்தப் பிறகும்
தெருமுனைகளைத்
திருப்பிப்பார்த்து
நடக்கிறேன்...//


Supper.....

J J Reegan said...

// இப்படி ஏதேதோ
எழுதத் தொடங்கி
எங்கோ
கரைந்துப்போகிறேன்
நீ இல்லாத நாட்களில்...!! //

ரொம்ப நல்லா எழுதியிருக்க ....

Sri said...

@ jj Reegan

//ஆஹா...ஆஹா ...ஆஹா ...
ச்சும்மா பின்னீட்ட என் தங்கச்சி.அருமை..Supper..ரொம்ப நல்லா எழுதியிருக்க //

நன்றி அண்ணா..!! :)

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது