ஆழியிலே முக்குளிக்கும் அழகே

படம் : தாம்தூம்

ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி
முந்தானை படியேறவா மூச்சோடு குடியேறவா
உன் இடையோடு நடமாடும் உடையாக
நான் மாறி எந்நாளும் சூடேறவா
என் ஜென்மம் ஈடேறவா

ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் விம்மென்ற‌ க‌ன்ன‌த்தில்
தின்னென்ற‌ நெஞ்ச‌த்தில் இச்சென்று
இத‌ழ் வைக்க‌வா இச்சைக்கோர் இலை வைக்க‌வா
உன் உம் என்ற‌ சொல்லுக்கும் ம் என்ற‌ சொல்லுக்கும்
இப்போது த‌டை வைக்க‌வா
மௌன‌த்தைக் குடி வைக்க‌வா

அக‌ம் பாதி முக‌ம் பாதி அகம்பாயும் சுக‌ம் மீதி
ம‌றைத்தாலும் ம‌றைக்காது அழ‌கே
அடிவான‌ம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிளந்தாலும்
உனைப் போல இருக்காது அழகே
அடிவான‌ம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிளந்தாலும்
உனைப் போல இருக்காது அழகே

10 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

M.Saravana Kumar said...

நான் எப்போதும் இந்த படத்தின் "அன்பே அன்பே" பாடலைதான் விரும்பி கேட்பதுண்டு..
இந்த பதிவை பார்த்தபின்புதான், சென்று தேடி இந்த பாடலை கேட்டேன்..

அட.. ரொம்ப நல்லா இருக்குங்க.. பாடலை கேட்டேன் பதிவை படித்தபடி..
நல்ல வரிகள்..
நன்றி.

M.Saravana Kumar said...

//உன் உம் என்ற‌ சொல்லுக்கும் ம் என்ற‌ சொல்லுக்கும்
இப்போது த‌டை வைக்க‌வா
மௌன‌த்தைக் குடி வைக்க‌வா//

ஹரிச்சரன் பின்னி இருக்கார்..

naanal said...

நல்லப்பாட்டு..
நான் எப்ப கேட்டாலும் கேட்டுக்கிட்டே இருப்பேன்... :)
வரிகள் போட்டு அசத்திட்தீங்க ..

naanal said...

Hi,

Tomorrow @ 8 am its 08/08/08 08:08:08 ... so lets join exnora against global warming on this special day.. lets plan to switch off all lights and other electrical appliances @ 8 pm for 8 minutes....

சூர்யா said...

நல்ல பாடல்.

Profile-ல இருக்கற படம்.. அழகான கவிதை. எங்கிருந்து கிடைச்சுதுன்னு தெரிஞ்சுக்கலாமா?

Sri said...

@ M.Saravana kumar

நன்றி...!! நன்றி...!! :-)))

Sri said...

@ naanal

நன்றி அக்கா..!! :-))

Sri said...

@ சூர்யா
அந்த profile படம் மெயில்ல வந்தது.நன்றி அண்ணா முதல் வருகைக்கு...!! :-))

ShadowLord said...

இந்த பாடல் எனக்கும் ரொம்ப பிடித்த பாடல் ... திரும்ப திரும்ப கேட்கும் பாடல்...அதனால் தான் படிக்க ஆரம்பிச்சவுடன்... பிழை கண்டு பிடித்தேன் :)

/முந்தானை மடியேறவா மூச்சோடு குடியேறவா/

முந்தானை படியேரவா :)

Sri said...

@ Shadowlord

மாத்திட்டேன் அண்ணா நன்றி..!! :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது