காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-6

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??- 1 , 2 , 3 , 4 , 5 .
எங்கோ கண்காணாத்
தூரத்தில்
தொலைத்துவிட்டு
வந்தாலும்
வாசல் தேடிவந்து
வாலாட்டும்
இந்தக் காதலைக்
கொஞ்சாமல்
என்ன செய்ய??

'என்ன அதிசயம் தமிழ் இன்னும் எழுந்துக்கவே இல்ல',மதுவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. 'இப்படித் தமிழ் தூங்கியதே இல்லையே. என்ன ஆச்சு??' .


" ஹே தமிழ் எழுந்திரு மணி ஆச்சுப் பாரு. ஏய்..!! என்ன டீ உடம்பு சுடுது?. அப்பவே சொன்னேன் மழைல நனையாதேன்னு சொல்றத கேட்டாத்தானே. இப்பப் பாரு, சரி வா டாக்டர் கிட்ட போகலாம்"."வேண்டாம். நானே போய்கிறேன். நீ ஆஃபிஸ் போ. இன்னைக்கு முக்கியமான இன்ஸ்டாலேஷன் இருக்கு. ரெண்டு பேரும் போகலைனா மகேஷ் பாவம் தனியா கஷ்டப்படுவான்"."அதுக்குன்னு உன்ன இப்படியே விட்டுட்டுப் போக சொல்றியா?", கொஞ்சம் கோப‌மாகவே கேட்டாள்."ஃபீவர் ஒன்னும் அதிகமா இல்ல. நானே எழுந்துப் போறேன். நீ போ", தமிழின் பிடிவாதம் அவளுக்குத் தெரிந்த விஷயம். எனவே, அரை மனதுடன் அறையை விட்டுக் கிளம்பினாள்."என்ன மேடம் தனியா வந்திருக்கீங்க??".


"தமிழுக்கு ஃபீவர்". காலையிலிருந்துக் கேட்பவர்களிடம் இந்த பதிலைச் சொல்லிக் களைத்துப் போனாள். அவள் எப்படி இருக்கிறாளோ என்றக் கவலை வேறு. 'ச்சே.. இந்த வேலை வேற சீக்கிரம் முடிய மாட்டேங்குது. மணி என்னாச்சு?அச்சச்சோ ஆறாச்சா??.அவ வேற தனியா இருப்பா'."மது நான் கிளம்பறேன். நீ இருந்து ப்ளீஸ் இத கொஞ்சம் முடிச்சிட்டு போயிடு",என்று சொல்லி மகேஷ் கிளம்பிவிட்டான்.


"ம்ம் சரி", 'இந்த மகேஷிற்கு என்ன அவசரம் அதுக்குள்ள கிளம்பிட்டான்'.


"என்ன மது இன்னும் கிளம்பலயா மணி 9 ஆச்சே??", அரவிந்த் கேட்டதும் தான் கடிகாரத்தைப் பார்த்தாள்.

"ம்ம்ம்..போகனும்", இரண்டு வார்த்தையில் விடை சொல்வது குறித்து வேதனைப்பட்டாள். அவனுடன் அவன் இல்லாத போது நிறைய பேச வேண்டும் என் நினைப்பவள் அவனைப் பார்த்தவுடன் இப்படி சொற்களைச் சுருக்கிக் கொள்வது பழக்கமாகிப்போனது."தனியாவா??"


"ம்ம்ம்ம்"


" உனக்கு ஆட்சேபனை இல்லேனா நான் அந்தப் பக்கம் தான் போறேன் அப்படியே உன்ன உன் ரூம்ல விட்டுட்டுப் போறேனே".

"இல்ல வேண்டாம்" என்று தான் தொண்டைவரை வார்த்தை இருந்தது. அது எப்பொழுது கரைந்து "ம்ம்ம்ம் சரி" என்றானது என்று அவள் குழம்பினாள்.

'ம்ம்ம் நல்லா தான் இருக்கான். சின்னச் சின்ன வித்யாசங்கள் தான் அப்போதிருந்ததிற்கும் இப்போதைக்கும் ஆனால் அழகான மாற்றங்கள். பேசவே பயப்படுவான் ஆனா இப்போ எவ்ளோ நல்லா ஒரு டீம ஹேண்டில் பண்றான். அவன் அம்மா அப்பாப் பத்திக் கேட்கலாமா வேண்டாம் எதாவது நினைச்சிப்பான்'.

"ம்ம்ம் சொல்லு மது, என்ன அப்படி பார்க்கிற? எதோ சொல்ல வந்த போல இருக்கு".

"இல்லயே. சும்மா தான்", சமாளித்தாள்.

"அப்போ இருந்து பார்த்துக்கிட்டே வந்த, அதான் கேட்டேன்", சிரித்தான்.

'அடப்பாவி, இவ்ளோ நேரம் கவனிச்சுக்கிட்டுத்தான் வந்திருக்கான். இனிமே பார்க்கக்கூடாது', கஷ்டப்பட்டு கழுத்தை ஜன்னலுக்குத் திருப்பினாள், கொஞ்சம் சத்தமாகவே சிரித்தான். 'இனிமேலும் இப்படி உட்கார்ந்து இருந்தா இன்னும் எதாவது சொல்லுவான்'.

"ரொம்ப தாங்ஸ்".

"எதுக்கு??"

"எல்லாத்துக்கும் தான்"

"எல்லாத்துக்கும்-னா?"

"எல்லாத்துக்கும்-னா எல்லாத்துக்கும். இப்போ வண்டில கூட்டிட்டு வரதுக்கு அப்பறம்...!! "

"அப்பறம்??"

"பழசெல்லாம் மறந்து என் கூட பழகறதுக்கு..!!", நெடுநாளாக மனதில் வைத்திருந்ததை வார்த்தையில் சொன்னாள். ஆனால் எதிர்பார்த்த பதில் தான் கிடைக்கவில்லை.

"பழசுன்னா, எத?", அவன் வார்த்தைக் கொஞ்சம் கடினப்பட்டிருப்பதை உணர்ந்தாள்.

'அதை எப்படி என் வாயால் சொல்வது? ஒருவேளை, நான் சொல்லி அது அவன் மறந்ததை நானே நியாபகப்படுத்தினா மாதிரி ஆகிடிச்சுனா??ச்சே எப்பப்பாரு இவனால எனக்குக் குழப்பம் தான்...!!' ,கொஞ்சம் கோபமும் வந்தது.

"சொல்லு மது. ஏதோ பழசுன்னு சொன்ன. என்ன பழசு??"

"உனக்கு நிஜமாவே தெரியாது? நான் எத சொல்றேன்னு??",கோபமாகவே கேட்டாள்.

"எனக்கெப்படித் தெரியும் நீ என்ன சொல்லவரன்னு? நீ உன் மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டா, அடுத்தவங்களுக்கென்ன மூக்குல வேர்க்குமா?? நீ தான் சொல்லனும்",சொல்லி சிரித்தான்.

"உன் காதலத்தான் சொல்றேன்", கடைசியில் சொல்லியேவிட்டாள்.

"என் காதலா??", கேட்டவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.

'அச்சச்சோ நாம தேவையில்லாம நியாபகப்படுத்திட்டோமா??', குழம்பித் தவித்தாள். 'இனி எதுவா இருந்தாலும் அவனே பேசட்டும்', என அரை நாழிகைக் கழித்தாள். அவன் வாயைத் திறப்பதாகவே தெரியாது போக "என்ன ஆச்சு?" என்றாள்.

"ஒன்னும் இல்ல".

"சொல்லு, நான் எதாவது தப்பா சொல்லிட்டனா??", பதில்லில்லை .

'வாயைத்திறந்துத் தொலையேன்..!! இந்த அழுத்தம் மட்டும் இன்னும் இவன் கிட்ட இருந்துப் போகவே இல்ல‌..!!' ,மனதுக்குள் திட்டிக்கொண்டு இவளும் மௌனமானாள்.

"உன்னப் பார்த்த இந்த ஆறு மாசத்துல, நான் எப்பவாவது உன்கிட்ட வந்து, என் காதல மறந்துட்டேன்னு சொன்னேனா??", இந்தக் கேள்வியை அவனிடமிருந்து எதிர்ப்பார்க்கவில்லை அவள், என்ன சொல்வதெனத் திணறினாள்.

"இல்ல. ஆனா நீ இப்பவும் என்னக் காதலிக்கறதா காட்டிக்கலையே. அதான் நான் நீ மறந்துட்டன்னு நினைச்சேன்".

"ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோ, நான் காதல் சொன்ன விதமும், காலமும் வேணாத் தப்பா இருக்கலாம். ஆனா உன்மேலான என் காதல் தப்பானதில்ல. அப்பறம் ஏன் நான் அதை மாத்திக்கனும் இல்ல மறக்கனும்? உன் மேலான என் காதல் எப்பவும் மாறாது..!!",வேகமாக பேசி முடித்தான்.

"நிறுத்து..!! உன்னத்தான் சொல்றேன் வண்டிய நிறுத்து..!!".

"ஏன்??".

"உன் கிட்ட காரணம் சொல்லவேண்டிய அவசியம் இல்ல. அதோட எனக்கு உன் கூட வர இஷ்டம் இல்ல. வண்டிய நிறுத்து..!!".

"உனக்கென்ன பைத்தியமா?? நைட் டைம்ல எப்படித் தனியா போவ?"

"உன்ன நம்பியோ, உன் கார நம்பியோ, நான் இந்த வேலைக்கு வரல. எப்படி போகனும்னு எனக்குத் தெரியும். நீ போகலாம்..!!", எதற்குக் கோபப்பட்டாள் என்று இதுவரை அவளுக்கு சொல்லத் தெரியவில்லை.

-வருவாள்..

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-7

54 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

நிஜமா நல்லவன் said...

முதலில் வந்தது நானா?

நிஜமா நல்லவன் said...

நானே தான்....சரி பதிவை படிச்சிட்டு வர்றேன்..:!

நிஜமா நல்லவன் said...

ஒவ்வொரு தொடரையும் படிக்கும் போது அடுத்த தொடர் எப்ப வரும்னு நினைக்க தோணுதே.......ரொம்ப நல்லாவே எழுதுற ஸ்ரீ...வாழ்த்துக்கள்!

ஆயில்யன் said...

//எங்கோ கண்காணாத்
தூரத்தில்
தொலைத்துவிட்டு
வந்தாலும்
வாசல் தேடிவந்து
வாலாட்டும்
இந்தக் காதலைக்
கொஞ்சாமல்
என்ன செய்ய??
//

:)))))))))))

ஆயில்யன் said...

//எங்கோ கண்காணாத்
தூரத்தில்
தொலைத்துவிட்டு
வந்தாலும்
வாசல் தேடிவந்து
வாலாட்டும்
இந்தக் காதலைக்
கொஞ்சாமல்
என்ன செய்ய??
//

:)))))))))))

ஆயில்யன் said...

//ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோ, நான் காதல் சொன்ன விதமும், காலமும் வேணாத் தப்பா இருக்கலாம். ஆனா உன்மேலான என் காதல் தப்பானதில்ல.//


இது சூப்பரு!

ஆயில்யன் said...

//நிஜமா நல்லவன் said...
முதலில் வந்தது நானா?
//

ஆமாம்

ஆமாம்

நிஜமா நல்லவன் said...

ஆயில்ஸ் அண்ணா நீங்க ரெண்டு தடவை ஒரே பின்னூட்டம் போட்டது ஏன்??? உங்களுக்கு ரெண்டு காதல் இருக்கா??

ஆயில்யன் said...

//நிஜமா நல்லவன் said...
நானே தான்....சரி பதிவை படிச்சிட்டு வர்றேன்..:!
//

அப்ப நேரவே கமெண்ட் பாக்ஸ்த்தான் ஒபன் பண்றீங்களா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

நிஜமா நல்லவன் said...

///ஆயில்யன் said...
//நிஜமா நல்லவன் said...
முதலில் வந்தது நானா?
//

ஆமாம்

ஆமாம்///

என்ன அண்ணா எல்லாத்தையும் நீங்க ரெண்டு தடவை சொல்லுறீங்க????

நிஜமா நல்லவன் said...

///ஆயில்யன் said...
//நிஜமா நல்லவன் said...
நானே தான்....சரி பதிவை படிச்சிட்டு வர்றேன்..:!
//

அப்ப நேரவே கமெண்ட் பாக்ஸ்த்தான் ஒபன் பண்றீங்களா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!///

அண்ணா....நாம எல்லோருமே நேரா கமெண்ட் பாக்ஸ் தானே ஒப்பன் பண்ணுவோம்:)

அனுஜன்யா said...

Sri,

ம்ம், அட்டகாசமாத்தான் போகுது. ஆனாலும் இந்தப் பெண்களுக்கு ரொம்பத்தான் வீம்பு. ... இந்த காதல் படுத்தும் பாடு...... நல்லாயிருந்தா சரி.

அனுஜன்யா

அனுஜன்யா said...

சொல்ல மறந்தேன். கவிதை ரொம்ப அழகா இருக்கு. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

Ganesan said...

Good Going... This part is bit short i guess. Best of Luck for the remaining part and looking forward too.

ஆயில்யன் said...

//நிஜமா நல்லவன் said...
ஒவ்வொரு தொடரையும் படிக்கும் போது அடுத்த தொடர் எப்ப வரும்னு நினைக்க தோணுதே.......ரொம்ப நல்லாவே எழுதுற ஸ்ரீ...வாழ்த்துக்கள்!
//

நானெல்லாம் நி.நல்லவன் மாதிரி கிடையாது அக்கா! அந்த தொடரையே திரும்ப திரும்ப படிப்பேன்! - அடுத்த தொடர் வரும் வரைக்கும் :))

ஆயில்யன் said...

//நிஜமா நல்லவன் said...
///ஆயில்யன் said...
//நிஜமா நல்லவன் said...
நானே தான்....சரி பதிவை படிச்சிட்டு வர்றேன்..:!
//

அப்ப நேரவே கமெண்ட் பாக்ஸ்த்தான் ஒபன் பண்றீங்களா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!///

அண்ணா....நாம எல்லோருமே நேரா கமெண்ட் பாக்ஸ் தானே ஒப்பன் பண்ணுவோம்:)
//

நானெல்லாம் நல்லவன் கிடையாதுப்பா :)

YILAVEANIL said...

Well..

Sri... To be Honest, I saw your blog accidentally when I was searching for something else..

But I really admire the narrative manner you have adopted in the story and the rail story..

That was pretty cool...

Well Do write more and lemme try posting comments for all that you post coz, i'm impressed

All The Very Best...


Smiles

Yilaveanil

M.Saravana Kumar said...

//எங்கோ கண்காணாத்
தூரத்தில்
தொலைத்துவிட்டு
வந்தாலும்
வாசல் தேடிவந்து
வாலாட்டும்
இந்தக் காதலைக்
கொஞ்சாமல்
என்ன செய்ய??//

மிக மிக அழகான கவிதை..

M.Saravana Kumar said...

//"ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோ, நான் காதல் சொன்ன விதமும், காலமும் வேணாத் தப்பா இருக்கலாம். ஆனா உன்மேலான என் காதல் தப்பானதில்ல. அப்பறம் ஏன் நான் அதை மாத்திக்கனும் இல்ல மறக்கனும்? உன் மேலான என் காதல் எப்பவும் மாறாது..!!"//

இது.. இது.. இதைதான் எதிர்பார்த்தேன்..
;)

M.Saravana Kumar said...

//உன் கிட்ட காரணம் சொல்லவேண்டிய அவசியம் இல்ல. அதோட எனக்கு உன் கூட வர இஷ்டம் இல்ல.//

ஏன் பொண்ணுங்களெல்லாம் இப்படி இருக்காங்க..??
EGOISTIC..

M.Saravana Kumar said...

// அனுஜன்யா said...
ஆனாலும் இந்தப் பெண்களுக்கு ரொம்பத்தான் வீம்பு. ... இந்த காதல் படுத்தும் பாடு...... நல்லாயிருந்தா சரி.//

.. ரிப்பீட்டேய் ..

M.Saravana Kumar said...

ஓகே விடுங்க.. எப்படியும் உங்க கதை மாந்தர்களின் குணாதிசியங்கள் என்று தான் சொல்வீர்கள்..

நாம் கதையின் இந்த பகுதிக்கு வருவோம்..

கவிதை மிக மிக அழகாயிருந்தது.. கூடவே கதையும்..

பார்க்கலாம்.. இந்த கதையின் முடிவு என்னாகிறது என்று..

M.Saravana Kumar said...

ஆவலோடு எதிர்பார்கிறேன்.. அடுத்த பகுதியை..

naanal said...

//எங்கோ கண்காணாத்
தூரத்தில்
தொலைத்துவிட்டு
வந்தாலும்
வாசல் தேடிவந்து
வாலாட்டும்
இந்தக் காதலைக்
கொஞ்சாமல்
என்ன செய்ய??//

ஸ்ரீ... கவிதை அழகா இருக்கு...

இதை தான் , தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒண்ணு நினைக்கும்னு சொல்லுவாங்காளோ...

ஆனால் காதல் எப்ப எப்படி வந்தாலும் கொஞ்சி தானே ஆகணும் ;)

naanal said...

அரவிந்த், ஸ்ரீ க்கும் இடையில நடக்கிற வார்த்தை பரிமாற்றங்கள் நல்ல யதார்த்தமா இருக்கு...

ரொம்ப நாள் கழிச்சு சந்திக்கிற நண்பர்கள், காதலர்கள்.. ஒண்ணு "Sorry" னு பேச ஆரம்பிப்பங்க இல்லை "thanks" னு பேச ஆரம்பிப்பங்க...

naanal said...

M.Saravana Kumar said...
ஆவலோடு எதிர்பார்கிறேன்.. அடுத்த பகுதியை..


repeatuu..

Sri said...

@ நிஜமா நல்லவன்

//முதலில் வந்தது நானா?//

நீங்களே தான்..!! ;)

//நானே தான்....சரி பதிவை படிச்சிட்டு வர்றேன்..:!//

ம்ம்ம் படிச்சிட்டு வாங்க‌..!! :)

//ஒவ்வொரு தொடரையும் படிக்கும் போது அடுத்த தொடர் எப்ப வரும்னு நினைக்க தோணுதே.ரொம்ப நல்லாவே எழுதுற ஸ்ரீ...வாழ்த்துக்கள்!//

நன்றி அண்ணா..!! :))

Sri said...

@ ஆயில்யன்

//இது சூப்பரு!//

நன்றி அண்ணா..!! :)

Sri said...

@ அனுஜன்யா
//Sri,
ம்ம், அட்டகாசமாத்தான் போகுது. ஆனாலும் இந்தப் பெண்களுக்கு ரொம்பத்தான் வீம்பு. ... இந்த காதல் படுத்தும் பாடு...... நல்லாயிருந்தா சரி.//

:)))

//சொல்ல மறந்தேன். கவிதை ரொம்ப அழகா இருக்கு. வாழ்த்துக்கள்.//


நன்றி அண்ணா..!! :))

Sri said...

@ Ganesan

//Good Going... This part is bit short i guess. Best of Luck for the remaining part and looking forward too.//

Thank you anna..!! :)

Sri said...

@ Yilaveanil

//Well..
Sri... To be Honest, I saw your blog accidentally when I was searching for something else..
But I really admire the narrative manner you have adopted in the story and the rail story..
That was pretty cool...
Well Do write more and lemme try posting comments for all that you post coz, i'm impressed

All The Very Best...
Smiles
Yilaveanil//

Thank you for sharing your thoughts with me Yilaveanil..!! :)

Nice name..!! :)

Sri said...

@ M.Saravana kumar

//மிக மிக அழகான கவிதை..//

நன்றி..!! :)

//இது.. இது.. இதைதான் எதிர்பார்த்தேன்//

ஓ அப்படியா?? ;)

//ஏன் பொண்ணுங்களெல்லாம் இப்படி இருக்காங்க..??
EGOISTIC..//

பொண்ணுங்க மட்டும் தான் அப்படின்னு கிடையாது...

//ஓகே விடுங்க.. எப்படியும் உங்க கதை மாந்தர்களின் குணாதிசியங்கள் என்று தான் சொல்வீர்கள்..//

அது தான் உண்மையும் கூட‌..!! ;)

//நாம் கதையின் இந்த பகுதிக்கு வருவோம்..
கவிதை மிக மிக அழகாயிருந்தது.. கூடவே கதையும்..
பார்க்கலாம்.. இந்த கதையின் முடிவு என்னாகிறது என்று..//

மிரட்டற மாதிரியே இருக்கே.!! ;)

//ஆவலோடு எதிர்பார்கிறேன்.. அடுத்த பகுதியை..//

சீக்கிரம் பதிக்கிறேன் நன்றி..!! :))

Sri said...

@ Naanal
//ஸ்ரீ... கவிதை அழகா இருக்கு...//

நன்றி அக்கா..!! :)

//இதை தான் , தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒண்ணு நினைக்கும்னு சொல்லுவாங்காளோ//

ம்ம்ம் அப்படியும் சொல்லலாம்..!! ;)

//ஆனால் காதல் எப்ப எப்படி வந்தாலும் கொஞ்சி தானே ஆகணும்//

அப்படியா அக்கா?? நீங்க சொன்னா சரிதான்..!! ;))

Sri said...

@ Naanal
//அரவிந்த், ஸ்ரீ க்கும் இடையில நடக்கிற வார்த்தை பரிமாற்றங்கள் நல்ல யதார்த்தமா இருக்கு...//

யக்கா என்னதிது கதையவே மாத்துறீங்க?? அது ஸ்ரீ இல்லக்கா மது..!! :((

//ரொம்ப நாள் கழிச்சு சந்திக்கிற நண்பர்கள், காதலர்கள்.. ஒண்ணு "Sorry" னு பேச ஆரம்பிப்பங்க இல்லை "thanks" னு பேச ஆரம்பிப்பங்க..//

ஓஓஓஓஓ..!! :)

நன்றி அக்கா..!! :))

M.Saravana Kumar said...
This comment has been removed by the author.
M.Saravana Kumar said...

//பொண்ணுங்க மட்டும் தான் அப்படின்னு கிடையாது...//
அப்படீங்களா..

//மிரட்டற மாதிரியே இருக்கே.!! //
கதைய முழுசா படிக்காமே, எப்படி மிரட்ட முடியும்..??

:)

Ramya Ramani said...

\\எங்கோ கண்காணாத்
தூரத்தில்
தொலைத்துவிட்டு
வந்தாலும்
வாசல் தேடிவந்து
வாலாட்டும்
இந்தக் காதலைக்
கொஞ்சாமல்
என்ன செய்ய??

\\

சூப்பர்ர்ர்ர்


\\"ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோ, நான் காதல் சொன்ன விதமும், காலமும் வேணாத் தப்பா இருக்கலாம். ஆனா உன்மேலான என் காதல் தப்பானதில்ல. அப்பறம் ஏன் நான் அதை மாத்திக்கனும் இல்ல மறக்கனும்? உன் மேலான என் காதல் எப்பவும் மாறாது..!!",வேகமாக பேசி முடித்தான்.

\\

வாவ் நச்சுன்னு சொல்ராரே டயலாக் எல்லாம்..ஹிம்ம்ம் தொடரட்டும்..

Divya said...

\\'அடப்பாவி, இவ்ளோ நேரம் கவனிச்சுக்கிட்டுத்தான் வந்திருக்கான். இனிமே பார்க்கக்கூடாது', கஷ்டப்பட்டு கழுத்தை ஜன்னலுக்குத் திருப்பினாள், கொஞ்சம் சத்தமாகவே சிரித்தான். \\

அசத்தல்:)))

Divya said...

அழகான தொடர்.....அருமையான உரையாடல்களுடன், சூப்பர்ப் ஸ்ரீ!!

வாழ்த்துக்கள்!!

ஜி said...

:))) aduthathu enna nadakuthunnu paapoam...

6 parts aacha athukkulla... eppadithaan iththana paguthi ezuthareengalo??

aamaam... Innum eththana parts??

ஜி said...

//ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோ, நான் காதல் சொன்ன விதமும், காலமும் வேணாத் தப்பா இருக்கலாம். ஆனா உன்மேலான என் காதல் தப்பானதில்ல. அப்பறம் ஏன் நான் அதை மாத்திக்கனும் இல்ல மறக்கனும்? உன் மேலான என் காதல் எப்பவும் மாறாது..!//

Nice lines...

naanal said...

ஆமா ஆமா.. :((
ஸாரீ ஸாரீ ஏதோ ஞாபகத்துல எழுதிட்டேன் :((

sathish said...

:) நல்லாவே போகுது!

sathish said...

//ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோ, நான் காதல் சொன்ன விதமும், காலமும் வேணாத் தப்பா இருக்கலாம். ஆனா உன்மேலான என் காதல் தப்பானதில்ல. அப்பறம் ஏன் நான் அதை மாத்திக்கனும் இல்ல மறக்கனும்? உன் மேலான என் காதல் எப்பவும் மாறாது..!//

good!

Sri said...

@ M.Saravana kumar
//கதைய முழுசா படிக்காமே, எப்படி மிரட்ட முடியும்..??//

:((

Sri said...

@ Ramya ramani

//சூப்பர்ர்ர்ர்//

//வாவ் நச்சுன்னு சொல்ராரே டயலாக் எல்லாம்..ஹிம்ம்ம் தொடரட்டும்..//

நன்றிகள் ரம்யா..!! :)))

Sri said...

@ Divya

//அசத்தல்:)))//

//அழகான தொடர்.....அருமையான உரையாடல்களுடன், சூப்பர்ப் ஸ்ரீ!!

வாழ்த்துக்கள்!!//


நன்றி அக்கா..!! :))

Sri said...

@ ஜி
//aduthathu enna nadakuthunnu paapoam...
6 parts aacha athukkulla... eppadithaan iththana paguthi ezuthareengalo??
aamaam... Innum eththana parts??//

அண்ணா ரொம்ப கவலையா கேட்கற மாதிரி இருக்கு. வேணும்னா சொல்லுங்க அண்ணா அடுத்த பார்ட்‍ல முடிச்சிடலாம்..!! ;)

//Nice lines...//

நன்றி அண்ணா..!! :))

Sri said...

@ Naanal

//ஆமா ஆமா.. :((
ஸாரீ ஸாரீ ஏதோ ஞாபகத்துல எழுதிட்டேன் :((//

இதுக்கெதுக்குக்கா சாரி எல்லாம். நீங்க எப்பவும் என் நியாபகத்துலயே இருக்கறதா நினைச்சிக்கிறேன்..!! ;)

Sri said...

@ Sathish

//:) நல்லாவே போகுது!//
//good!//

நன்றி அண்ணா..!! :))

naanal said...

உண்மையயும் அது தான் ஸ்ரீ... :))

Sri said...

@ Naanal

அட நிஜமாவா??;)
நன்றி அக்கா..!! :)

Vishnu... said...

முழுவதும் படித்துவிட்டு சொல்கிறேன் ...படித்தது வரை அருமையாக இருக்கிறது ...

வாழ்த்துக்களுடன் ...

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு

Sri said...

@ Vishnu
//முழுவதும் படித்துவிட்டு சொல்கிறேன் ...படித்தது வரை அருமையாக இருக்கிறது ...
வாழ்த்துக்களுடன் ...//

நன்றி விஷ்ணு முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்...!! :))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது