காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-5

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா?? ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு.நீ என்னருகில்

இருக்கையில்

தள்ளித்தான்

அமர்கின்றன

என் வெட்கங்களும்

உன் விரல்களின்

மௌனங்களும்
இதுவரை இப்படி ஒன்றை அவள் உணர்ந்ததே இல்லை. சாதாரணமாகவே தமிழை விட மதுவிற்கு தைரியம் அதிகம். க‌ல்லூரி ப‌டிப்பு முடிந்து உட‌னே வேலையில் சேர மைசூருக்கு அழைத்த‌ப் போதும், பாஷைத் தெரியாத‌ அந்த‌ ஊரின் க‌டைக‌ளில் பேர‌ம் பேசி பொருட்க‌ள் வாங்கிய‌ போதும், ப‌யிற்சிக் கால‌ம் முடிந்து த‌னி ஒருத்தியாக‌ த‌மிழையும் அழைத்துக்கொண்டு சென்னையில் ந‌ல்ல‌ விடுதித்தேடி மூன்று மாத‌ம் ம‌ட்டும் அங்கிருந்து, பின் விடுதி வாழ்க்கைப் பிடிக்க‌வில்லை என்று த‌மிழ் சொன்னதற்காக வீடுத் தேடி குடிவந்து, இன்று வரை எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் தான் முன் நின்று தமிழை வழி நடத்தி, என இவ்வளவும் செய்தவள் இன்று யாரோ ஒரு மேனேஜ‌ர் அழைக்கிறார் என்று சொன்ன‌த‌ற்கா இவ‌ள் இப்ப‌டி ஸ்த‌ம்பித்து நிற்கிறாள் எனத் தமிழ் வியந்துப் போனாள்.ம‌துவிற்குமே இது புதிய‌தாக‌ தெரிந்த‌து. அவ‌ன் வேறு யாரோ அல்ல‌ ஆறு வ‌ருட‌ம் ப‌ழ‌கிய‌ ந‌ண்ப‌ன், அப்ப‌டியே யாரோ ஒருத்த‌னாக‌ இருந்தாலும் தான் என்ன‌?? எதற்காக‌ ப‌ய‌ப்ப‌ட‌ வேண்டும்?? அவ‌ள் ஒரும‌ன‌ம் இப்ப‌டி சொன்னாலும் ஏதோ ஒன்று அவ‌ளை ஆட்டுவித்த‌து. முதல்முறையாக உட‌ல் ந‌டுங்கிய‌து. 'ச்சே...என்ன‌ இப்ப‌டி பய‌ப்ப‌ட‌றோம்?? அவ‌ன் என்ன‌ ப‌ண்ணிட‌ப் போறான், மிஞ்சிப் போனா நான் செய்யற வேலைல‌ குறை சொல்லுவான். அவ்ளோ தானே போய் பார்க்க‌லாம்', ஒருவ‌ழியாக‌ ம‌ன‌தைத்தேற்றிக் கொண்டு அவ‌ன் கேபினை நோக்கி ந‌டந்தாள்.


'ரொம்ப‌ நாள் க‌ழிச்சு பார்க்க‌ப்போறேன். என்ன‌ சொல்லுவான், கோவ‌மா இருப்பானோ, இல்ல அதெல்லாம் மறந்திருப்பானோ?? ம்ம்ம் பார்க்க‌ற‌துக்கும் ஆள் முன்ன‌ விட‌ ந‌ல்லா தான் இருக்கான். ஒருவேளை கல்யாணம் ஆயிருக்குமோ?? அத‌க்கேட்க‌ ம‌ற‌ந்துட்டோமே, இல்ல வேற கேர்ள்ஃப்ரெண்டு கிடைச்சிருக்கும். அவ‌ன் எப்ப‌டி இருந்தா ந‌ம‌க்கென்ன‌??'


"மே ஐ க‌ம் இன்??"


"எஸ்..!!"


'அழ‌கான‌ வாய்ஸ் அவ‌னுக்கு', இது ம‌ட்டும் தான் அவ‌ளுக்குத் தெரிந்த‌து. அத‌ற்குப் பிற‌கு ந‌டந்த‌ அனைத்தும் க‌ன‌வோ என அவ‌ளை எண்ண‌ வைத்த‌து. "மிஸ். ம‌து", என்று ஆர‌ம்பித்துப் பேசிய‌வ‌ன் ஒரு இட‌த்தில் கூட‌ அவ‌ளைத் தெரிந்த‌தாக‌வோ, அவ‌ள் மீது கோவ‌மாக‌வோ காட்டிக்கொள்ள‌வில்லை. மிக‌ அழ‌காக‌ புது ப்ராஜெக்ட் ப‌ற்றியும் அதில் அவ‌ளின் வேலைப் ப‌ற்றியும் பேசிச் சென்றான். இடையிடையே அழ‌கான‌ சிரிப்பால் வேறு அவ‌ளைக் கொன்றான். அவ‌ள் க‌ண்க‌ளை அவ‌ளாலேயே ந‌ம்ப‌ முடிய‌வில்லை. 'எப்ப‌டி இவ‌னுட‌ன் வேலை செய்ய‌ப்போகிறோம்?' என நினைத்த‌வ‌ளின் எண்ணம் முழுவ‌தும் மாறியிருந்த‌து.


"ம்ம் சொல்லுங்க‌ ம‌து எங்க‌ த‌ங்கியிருக்கீங்க‌??",அவ‌ள் முழித்தாள்.


"த‌ப்பா எடுத்துக்காதீங்க. இது வரைக்கும் எப்படியோ தெரியாது. ஆனா, இந்த ப்ராஜெக்ட பொறுத்தவரை நீங்க‌, அதாவ‌து ந‌ம்ம‌ டீம் லேட் நைட் வொர்க் ப‌ண்ண‌வேண்டிவ‌ரும். அப்ப‌த்தான் இத‌ சிற‌ப்பா முடிக்க‌ முடியும்ன்னு நான் ந‌ம்ப‌றேன் அதான் கேட்டேன். ப‌க்க‌த்துல‌ தான் இருக்கீங்க‌னா ஒன்னும் பிர‌ச்ச‌னை இல்ல‌".


'அதான் இவ்ளோ சின்ன‌ வ‌ய‌சுல‌யே அவ‌ன் டெக்னிக்க‌ல் மெனேஜ‌ர் ஆகிட்டான். ச்சே கிரேட் டா நீ..!! அச்ச‌ச்சோ என்ன‌திது அவ‌ன‌ப் ப‌த்தி ந‌ல்ல‌வித‌மா நினைக்க‌ ஆர‌ம்பிச்சிட்டோம்?? அவ‌ன் ந‌ல்ல‌வ‌ன் தான்..!!', அவளின் இந்த மாற்றத்தை நினைத்துக்கொண்டு த‌னியாக‌ சிரித்தாள்.


"ஹே லூஸ்..என்ன‌ ஆச்சு உன‌க்கு?? போகும் போது ஏதோ பேயறைஞ்ச மாதிரி போன, இப்பத் தனியா சிரிச்சிக்கிட்டு வர‌,என்ன‌ சொன்னார் அரவிந்த்?"


"நிஜ‌மாவே ஹி ஈஸ் அ ஜென்டில்மேன்".


"யு மீன் அர்ஜீன்'ஸ் ஜென்டில்மேன்??".


"இல்ல, ஷங்கர்'ஸ் ஜென்டில்மேன்", சொல்லி சிரித்தாள் மது. ஏதோ நிறைய‌‌ நாள் க‌ழித்து அவர்கள் சிரிப்ப‌து போன்ற‌ உண‌ர்வு இருவ‌ருக்குமே ஏற்ப‌ட்ட‌து. இப்பொழுதெல்லாம் அவ‌ளுக்கு ஆஃபிஸ் வ‌ருவ‌து போவ‌து க‌ஷ்ட‌மாக‌வே தெரிவ‌தில்லை. மிக‌வும் ச‌ந்தோஷ‌மாக‌வே உணர்ந்தாள். அத‌ற்குக் கார‌ண‌ம் அரவிந்த் என்ப‌து அவ‌ளுக்குக் கூடுத‌ல் ம‌கிழ்சித் தந்த‌து.
'ச்சே.. அவ‌ன் கூட‌ அவ்ளோ நாள் இருந்தும் அவ‌ன‌ப் ப‌த்தித் த‌ப்பா நினைச்சிட்டோமே, அவ‌ன் எதையும் வெளிக்காட்டிக்காம எவ்ளோ ந‌ல்ல‌வ‌னா இருக்கான்..!!', அவனைப் பற்றி நினைக்க‌ நினைக்க‌ அவ‌ளுக்கு ம‌கிழ்ச்சியாக‌ இருந்த‌து. அத‌ற்குள் அவ‌ன் வந்து ஒருமாத‌ம் ஓடியிருந்த‌து. இந்த ஒருமாதம் எப்படி போனதென்று அவளால் நம்பவே முடியவில்லை. அநியாயமாக தான் அவனை வெறுத்ததிற்காக தன்னையே தனிமையில் திட்டிக்கொண்டாள். அவன் அவளை மது என்று அழைத்தப்போதெல்லாம் மனம் மகிழ்ந்தாள். தன் நண்பன் தனக்கு மறுபடியும் கிடைத்துவிட்டான், என்பதைத் தவிர அந்த மகிழ்ச்சிக்கு வேறெந்தக் காரணமும் இல்லை, எனத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள். தமிழும் அவளின் மகிழ்சிக்குக் காரணம் கேட்டு கேட்டு சலித்துவிட்டிருந்தாள்.
வாழ்க்கை இப்ப‌டியே போயிருந்தால் தான் க‌வ‌லையில்லையே, ஆனால் ""நான் நீ நினைப்ப‌துப் போல் இல்லை"", என வாழ்க்கைத் தன் விளையாட்டை ஆரம்பித்தது.
-வ‌ருவாள்

50 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

sathish said...

//""நான் நீ நினைப்ப‌துப் போல் இல்லை"", என வாழ்க்கைத் தன் விளையாட்டை ஆரம்பித்தது.//

உண்மைதான் :)
அழகாய் கொண்டுசெல்கின்றீர்கள் இதுவரை!

keep up!

sathish said...

//நீ என்னருகில்
இருக்கையில்
தள்ளித்தான்
அமர்கின்றன
என் வெட்கங்களும்
உன் விரல்களின்
மௌனங்களும்//

இதுவும் அழகு!

sathish said...

//மைசூருக்கு அழைத்த‌ப் போதும், பாஷைத் தெரியாத‌ அந்த‌ ஊரின் க‌டைக‌ளில் பேர‌ம் பேசி பொருட்க‌ள் வாங்கிய‌ போதும், ப‌யிற்சிக் கால‌ம் //

Training in Mysore :)) Same here sister!

M.Saravana Kumar said...

/நீ என்னருகில்
இருக்கையில்
தள்ளித்தான்
அமர்கின்றன
என் வெட்கங்களும்
உன் விரல்களின்
மௌனங்களும்//

உண்மையிலேயே சத்தியமா ரொம்ப ரொம்ப அழகான கவிதை..

M.Saravana Kumar said...

இந்த பகுதியை பற்றி என்ன சொல்ல.. பின்னீட்டீங்க..

சரி. ஓகே.. அடுத்த பகுதி எப்போ..???

இந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமா போட்டு.. ஏன்?? எதுக்காக??
:(

M.Saravana Kumar said...

நீங்க எழுதறது எப்படி இருக்குனா..

நாடி நரம்பு ரத்தம் மூளைன்னு எல்லா எடத்துலயும் காதல் வெறி ஊறினா ஒருத்தராலதான் இப்படி எல்லாம் எழுத முடியும்..
(பாட்ஷா டயலாக் மாத்ரி படிக்கணும்)

M.Saravana Kumar said...

கம்பேர் பன்றேனு தப்பா எடுத்துகாதீங்க..

இன்னொரு இம்சை அரசி மாதிரி எழுதறீங்க..

M.Saravana Kumar said...

நான் FIRST இல்லையா??
:(

M.Saravana Kumar said...

//ஆனால் ""நான் நீ நினைப்ப‌துப் போல் இல்லை"", என வாழ்க்கைத் தன் விளையாட்டை ஆரம்பித்தது.//

வாழ்கை விளையாட போகுதா?? சோகமா எழுதிராதீங்க..

M.Saravana Kumar said...

//அச்ச‌ச்சோ என்ன‌திது அவ‌ன‌ப் ப‌த்தி ந‌ல்ல‌வித‌மா நினைக்க‌ ஆர‌ம்பிச்சிட்டோம்?? அவ‌ன் ந‌ல்ல‌வ‌ன் தான்..!!//

இத நான் முன்னாடியே எதிர்பார்த்தேன்..

பசங்க எப்போதுமே நல்லவங்கதான்..
:)

M.Saravana Kumar said...

முன்னாடியே சொல்ல வேண்டுமென்று நெனச்சேன்..

"கரையோரம்,கனவுகள்,கனவு காண,
கரையில், கனவுகளில் "

இது அழகான கோர்வை..

Ramya Ramani said...

கதை நல்லா ஜோரா போகுது :))

\\நீ என்னருகில்

இருக்கையில்

தள்ளித்தான்

அமர்கின்றன

என் வெட்கங்களும்

உன் விரல்களின்

மௌனங்களும்
\\

:))

ஸ்ரீ said...

கதை அட்டகாசமா பயணிக்குது. வாழ்த்துக்கள் இன்னும் கொஞ்சம் வேகமா போக டபுள் ரைட்

நிஜமா நல்லவன் said...

///நீ என்னருகில்

இருக்கையில்

தள்ளித்தான்

அமர்கின்றன

என் வெட்கங்களும்

உன் விரல்களின்

மௌனங்களும்//

மிக அழகான கவிதை....வாழ்த்துக்கள் இன்னும் நிறைய கவிதைகள் படைத்திட!

நிஜமா நல்லவன் said...

//ஆனால் ""நான் நீ நினைப்ப‌துப் போல் இல்லை"", என வாழ்க்கைத் தன் விளையாட்டை ஆரம்பித்தது. -வ‌ருவாள்//

அச்சச்சோ....என்னதிது....இதுவரைக்கும் சந்தோஷமா போய்ட்டிருந்த கதை வேற ட்ராக் போகுமா:(

ஜி said...

//நான் நீ நினைப்ப‌துப் போல் இல்லை"", என வாழ்க்கைத் தன் விளையாட்டை ஆரம்பித்தது//

Aarambikkum... aarambikkum... en ippadi oru break?? :((

intha thodar kathaiya aarambichu vachavana uthaikanum first :)))

M.Saravana Kumar said...

//ஜி said...

intha thodar kathaiya aarambichu vachavana uthaikanum first )//

கதைய முழுசா கேட்போம்.. முடிவு என்னாகுதுன்னு பார்போம்.. அப்பறம் DECIDE பண்ணலாம்..
;)

Alb said...

அழகு கவிதைல ஆரம்பிச்சு குழப்ப திருப்பத்துல வருவாள் சொல்றது... !! நல்லா இருக்கு.. கொஞ்சம் சீக்கிரம் வரட்டுமே... !! என்ன சொல்றீங்க... !!

naanal said...

பின்றீங்க போங்க ஸ்ரீ....
கவிதையும் கதையும் நல்ல இருக்கு....
அடுத்து என்ன மா நடக்க போகுது...
எனக்கு ஒரே ஒரு கேள்வி, ஆறு வருடம் பழகிய நண்பன் ஒரு முறை கூட பழைய நட்பை பற்றி பேச வில்லையே ஏன்?

Sri said...

@ Sathish
//உண்மைதான் :)
அழகாய் கொண்டுசெல்கின்றீர்கள் இதுவரை!
keep up!
இதுவும் அழகு!//

நன்றி அண்ணா...!! :-))

Sri said...

@ Sathish

//Training in Mysore :)) Same here sister!//

எனக்கு இல்ல அண்ணா.. என் கதை நாயகிக்குத் தான் மைசூர்..!!;-)

Sri said...

@ M.Saravana kumar
//உண்மையிலேயே சத்தியமா ரொம்ப ரொம்ப அழகான கவிதை..//

நல்லாருக்குன்னு சொன்னா ஒத்துக்கப்போறேன். அதுக்கெதுக்குங்க சத்தியம் எல்லாம்?? ;-)

//இந்த பகுதியை பற்றி என்ன சொல்ல.. பின்னீட்டீங்க..//

நன்றி..!!நன்றி..!!

//சரி. ஓகே.. அடுத்த பகுதி எப்போ..???//

சீக்கிரம் பதிக்கிறேன்..!!
//இந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமா போட்டு.. ஏன்?? எதுக்காக??//

சும்மா உல்லுல்லுக்கு..!!;-)

//நீங்க எழுதறது எப்படி இருக்குனா..
நாடி நரம்பு ரத்தம் மூளைன்னு எல்லா எடத்துலயும் காதல் வெறி ஊறினா ஒருத்தராலதான் இப்படி எல்லாம் எழுத முடியும்..
(பாட்ஷா டயலாக் மாத்ரி படிக்கணும்)
//

என்னக் கொடுமை சரவணா இது?? :-(

//கம்பேர் பன்றேனு தப்பா எடுத்துகாதீங்க..
இன்னொரு இம்சை அரசி மாதிரி எழுதறீங்க//

இந்த கம்பேரிசனுக்கு அவங்க தான் தப்பா எடுத்துக்கனும். ஏன்னா அவங்க எவ்ளோப் பெரியவங்க, இந்த சின்னப் பொண்ணுக்கூடப் போய் கம்பேர் பண்ணறீங்களே..!! :-)

//நான் FIRST இல்லையா??//

இல்ல சதீஷ் அண்ணா முந்திக்கிட்டார்..!! ;-)

//வாழ்கை விளையாட போகுதா?? சோகமா எழுதிராதீங்க//

அப்படியே எழுதினாலும் உங்க அளவுக்கு சோகமா வராதுப்பா..!!;-)

//இத நான் முன்னாடியே எதிர்பார்த்தேன்..
பசங்க எப்போதுமே நல்லவங்கதான்//

ஓ அப்படியா?? ;-)

//முன்னாடியே சொல்ல வேண்டுமென்று நெனச்சேன்..
"கரையோரம்,கனவுகள்,கனவு காண,
கரையில், கனவுகளில் "
இது அழகான கோர்வை..//

நன்றி..!!நன்றி..!!நன்றி..!! :-))

Sri said...

@ Ramya ramani

நன்றி ரம்யா..!! :-))

Sri said...

@ ஸ்ரீ
//கதை அட்டகாசமா பயணிக்குது. வாழ்த்துக்கள் இன்னும் கொஞ்சம் வேகமா போக டபுள் ரைட்//

நன்றி அண்ணா..!!:-))

Sri said...

@ நிஜமா நல்லவன்
//மிக அழகான கவிதை....வாழ்த்துக்கள் இன்னும் நிறைய கவிதைகள் படைத்திட!//

நன்றி அண்ணா..!! :-))

//அச்சச்சோ....என்னதிது....இதுவரைக்கும் சந்தோஷமா போய்ட்டிருந்த கதை வேற ட்ராக் போகுமா//

:-)))))

Sri said...

@ ஜி

//Aarambikkum... aarambikkum... en ippadi oru break??//

கொஞ்சம் ஆணியால்..!! ;-)

//intha thodar kathaiya aarambichu vachavana uthaikanum first//

என்ன எழுத சொல்லி ஐடியா கொடுத்தவர தானே தேடறீங்க??அவரும் இங்கத் தான் இருக்கார்-ன்னு காட்டிக்கொடுக்க மாட்டேன்..!! ;-)

நன்றி அண்ணா..!! :-))

Sri said...

@ M.Saravana Kumar
//M.Saravana Kumar said...
//ஜி said...

intha thodar kathaiya aarambichu vachavana uthaikanum first )//

கதைய முழுசா கேட்போம்.. முடிவு என்னாகுதுன்னு பார்போம்.. அப்பறம் DECIDE பண்ணலாம்..
;)//

ஏன் இந்த கொலவெறி?? :-(

Sri said...

@ Alb
//அழகு கவிதைல ஆரம்பிச்சு குழப்ப திருப்பத்துல வருவாள் சொல்றது... !! நல்லா இருக்கு.. கொஞ்சம் சீக்கிரம் வரட்டுமே... !! என்ன சொல்றீங்க... !!//

ஓ தாராளமா..!! :-))

நன்றி அண்ணா..!! :-)

Sri said...

@ Naanal
//பின்றீங்க போங்க ஸ்ரீ....
கவிதையும் கதையும் நல்ல இருக்கு.... //

நன்றி அக்கா..!! :-))

//அடுத்து என்ன மா நடக்க போகுது...//

:-))

//எனக்கு ஒரே ஒரு கேள்வி, ஆறு வருடம் பழகிய நண்பன் ஒரு முறை கூட பழைய நட்பை பற்றி பேச வில்லையே ஏன்?//

அக்கா ஆறு வருஷம் இல்ல, அறுபது வருஷம் பழகினாலும், நட்பு மீறி காதலா மாறும் போது, அந்தக் காதல் பொண்ணுக்குப் பிடிக்கலைனா, 'அப்போ அவன் முன்னாடி பழகினதும் நட்பில்லையோ?? காதல் தானோ??'-ங்கற சந்தேகம் பெண்ணுக்குள்ள வந்துடும். அது வந்துட்டா எப்படி அக்கா நட்பப் பாராட்ட முடியும்??இது என்னோட கருத்து. சுத்தமான பால்ல ஒரு சொட்டுத் தயிர் விழுந்தாலும் அது பால் தான்னு குடிக்க முடியாது அக்கா.

நன்றி அக்கா..!! :-))

M.Saravana Kumar said...

//சும்மா உல்லுல்லுக்கு..!!;-)//
குறும்பு.. :)

//இந்த கம்பேரிசனுக்கு அவங்க தான் தப்பா எடுத்துக்கனும். ஏன்னா அவங்க எவ்ளோப் பெரியவங்க, இந்த சின்னப் பொண்ணுக்கூடப் போய் கம்பேர் பண்ணறீங்களே..!! :-)//
நீங்க சின்ன பொண்ணா?? ;)

//அப்படியே எழுதினாலும் உங்க அளவுக்கு சோகமா வராதுப்பா..!!;-)//
ஆஆஆஆஆஆ.. (நாயகன் கமல் மாதிரி மாதிரி பீல் பண்ண வச்சீட்டீங்களே)

//ஏன் இந்த கொலவெறி?? :-(//
ச்சும்மா.. ச்சும்மா..

M.Saravana Kumar said...

//ஆறு வருஷம் இல்ல, அறுபது வருஷம் பழகினாலும், நட்பு மீறி காதலா மாறும் போது, அந்தக் காதல் பொண்ணுக்குப் பிடிக்கலைனா, 'அப்போ அவன் முன்னாடி பழகினதும் நட்பில்லையோ?? காதல் தானோ??'-ங்கற சந்தேகம் பெண்ணுக்குள்ள வந்துடும். அது வந்துட்டா எப்படி அக்கா நட்பப் பாராட்ட முடியும்??இது என்னோட கருத்து. சுத்தமான பால்ல ஒரு சொட்டுத் தயிர் விழுந்தாலும் அது பால் தான்னு குடிக்க முடியாது.//

மைன்டில வைச்சிகிட்டேன்.. யூஸ்பண்ணிக்கிறேன்.. (இந்த பொண்ணுங்கள புரிஞ்சிக்கிறது ரொம்ப கஷ்டமப்பா)
:(

M.Saravana Kumar said...

//அப்படியே எழுதினாலும் உங்க அளவுக்கு சோகமா வராதுப்பா..!!;-)//

நான் அடுத்து எழுதுற கவிதை ரொம்ப சந்தோஷமான கவிதையா இருக்கும்..
:)

Divya said...

கதை, கவிதை என்று உங்கள் வலைதளம் சூப்பரா இருக்கு ஸ்ரீ!!

மற்றைய பதிவுகளையும் படித்துவிட்டு கருத்து கூறுகிறேன்!!


அழகான எழுத்து நடை, படிக்க சுவாரஸியமாக இருக்கிறது, வாழ்த்துக்கள்!!!

naanal said...

//அக்கா ஆறு வருஷம் இல்ல, அறுபது வருஷம் பழகினாலும், நட்பு மீறி காதலா மாறும் போது, அந்தக் காதல் பொண்ணுக்குப் பிடிக்கலைனா, 'அப்போ அவன் முன்னாடி பழகினதும் நட்பில்லையோ?? காதல் தானோ??'-ங்கற சந்தேகம் பெண்ணுக்குள்ள வந்துடும். அது வந்துட்டா எப்படி அக்கா நட்பப் பாராட்ட முடியும்??இது என்னோட கருத்து. சுத்தமான பால்ல ஒரு சொட்டுத் தயிர் விழுந்தாலும் அது பால் தான்னு குடிக்க முடியாது அக்கா.//

சரி என்னமோ சொல்றீங்க...
நீங்க சொன்ன சரி தான்.... :))

Sri said...

@ M.Saravana kumar
//நீங்க சின்ன பொண்ணா??//

ஏன் Birth certificate குடுத்தாதான் ஒத்துப்பீங்களா??;-)

//நான் அடுத்து எழுதுற கவிதை ரொம்ப சந்தோஷமான கவிதையா இருக்கும்//

அப்படியா ரொம்ப சந்தோஷம்..!! :-)

Sri said...

@ Divya

//கதை, கவிதை என்று உங்கள் வலைதளம் சூப்பரா இருக்கு ஸ்ரீ!!மற்றைய பதிவுகளையும் படித்துவிட்டு கருத்து கூறுகிறேன்!!
அழகான எழுத்து நடை, படிக்க சுவாரஸியமாக இருக்கிறது, வாழ்த்துக்கள்!!!//

ரொம்ப நன்றி திவ்யா முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும்..!! :-))

Sri said...

@ Naanal

//சரி என்னமோ சொல்றீங்க...
நீங்க சொன்ன சரி தான்...//

அக்கா நிஜம்மாவே புரியலியா?? :-(

M.Saravana Kumar said...

//ஏன் Birth certificate குடுத்தாதான் ஒத்துப்பீங்களா??;-)//

கதை எழுதறத பார்த்த சின்ன பொண்ணு எழுதற மாதிரி இல்ல..
;)

Sri said...

@ M.Saravana kumar

//கதை எழுதறத பார்த்த சின்ன பொண்ணு எழுதற மாதிரி இல்ல//

என்ன கொடுமை சரவணா இது?? :(

M.Saravana Kumar said...

//என்ன கொடுமை சரவணா இது?? :( //
இப்படியெல்லாம் சொல்லிட்டா???

Sri said...

நான் சின்ன பொண்ணு தான்னு ஒத்துக்கணும் இல்லேனா அழுதுடுவேன்..!! :'-(

naanal said...

புரியுது ஸ்ரீ...
இப்படி ஒரு பதிலா உங்க கிட்ட இருந்து எதிர்பாக்களே... சின்ன பொண்ணுனு சொல்லிட்டு பெரிய பெரிய விஷயத்தை ரொம்ப simpleஆ சொல்லிட்டீங்க...ஆனால் நீங்க சொல்லி இருக்கறது 100/100 உண்மை தான்...

Sri said...

@ Naanal
அக்கா என்ன இப்படி சொல்லிட்டீங்க?? போங்க எனக்கு ஒரெ வெக்க வெக்கமா வருது..!!
;-) ஏற்கனவே இங்க ஒருத்தர் நான் சின்ன பொண்ணுன்னு சொன்னா நம்பமாட்டேங்கிறார். இதுல நீங்க வேற, ம்ம்ம் பரவால்ல சமாளிப்போம்..!! :-))

Divya said...

என் வலைதளம் பக்கம் வந்ததிற்கு நன்றி ஸ்ரீ!!

அடுத்த பகுதி எப்போ??

naanal said...

:))

M.Saravana Kumar said...

//நான் சின்ன பொண்ணு தான்னு ஒத்துக்கணும் இல்லேனா அழுதுடுவேன்..!! :'-(//

விடுங்க.. எவ்ளோ விஷயங்களை காரணமே இல்லாம நம்பறேன்..

உங்கள நம்பமாட்டேனா??
;)

M.Saravana Kumar said...

//போங்க எனக்கு ஒரெ வெக்க வெக்கமா வருது..!!
;-) ஏற்கனவே இங்க ஒருத்தர் நான் சின்ன பொண்ணுன்னு சொன்னா நம்பமாட்டேங்கிறார். //

யப்பா... இப்பவே கண்ணா கட்டுதே.. என்னால தாங்க முடியலடா சாமி..

Sri said...

@ Divya
//அடுத்த பகுதி எப்போ??//

சீக்கிரமே பதிக்கிறேன் அக்கா..!!:-))

Sri said...

@ M.Saravana kumar
//விடுங்க.. எவ்ளோ விஷயங்களை காரணமே இல்லாம நம்பறேன்..
உங்கள நம்பமாட்டேனா??//

நன்றி..!! :-))

//யப்பா... இப்பவே கண்ணா கட்டுதே.. என்னால தாங்க முடியலடா சாமி..//

:-))))

Sri said...

@ Naanal

:-)))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது