காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-4

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??- ஒன்று , இரண்டு , மூன்று.உனக்கான

என் காதலை

இதயத்தில்

புதைத்து வைக்கவில்லை

விதைத்து வைத்திருந்திருக்கிறேன்

உன் பார்வை

மழைப் பட்டதும்

துளிர்த்துவிட்டதைப் பார்..!!


நம் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வரும், மாறாமல் இருப்பது வாழ்க்கையும் அல்ல. வாழ்க்கை மாறாமலும் இருக்காது. "மாறாது மாறாது என்கிற வார்த்தை மட்டுமே மாறாது" மற்ற எல்லாமே மாறக்கூடியதுதான். அப்படி ஒரு மாற்றம் தான் அவளை இன்று அலைக்கழிக்க வைக்கிறது.'ச்சே எல்லாம் இந்த தமிழால வந்தது...''இன்னும் எவ்ளோ நேரம் தான் அவ மேல பழிப்போடப் போற??'' அவ தானே அந்த மெரூன் ஷர்ட பாருன்னு சொன்னா' .'ஆமா அவ மெரூன் ஷர்ட தானே பாருன்னு சொன்னா,உன்னை யாரு பக்கத்துல பைக்ல போன அரவிந்த பார்க்க சொன்னா?? '


'ச்சே.. வர வர என் மனசே என் பேச்சக் கேட்க மாட்டேங்குது. ரூமுக்கு போனா அவ வேற கேட்பா என்ன சொல்றது..?'."மது ஏதாவது சாப்டறியா?""இல்லடி எனக்கெதுவும் வேண்டாம். நீ சாப்பிட்டு வா"


"என்னாச்சு, மது உடம்பு சரியில்லையா?? காலைல ரூம்ல இருந்து கிளம்பர வரைக்கும் நல்லாத்தானே இருந்த, அப்பறம் என்ன ஆச்சு??""அதெல்லாம் ஒன்னும் இல்லடி சும்மா தான் யோசிச்சிகிட்டு இருக்கேன்"."எதைப் பத்தி யோசிச்சிட்டு இருக்க?", கேட்ட தமிழை ஏற இறங்க பார்த்து மது, "எதப்பத்தி யோசிக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்"."இவள போய் கேட்டோம் பாரு", முணுமுணுத்துக் கொண்டே தமிழ் நகர்ந்துச் சென்றாள்.அடுத்த நாள் மகேஷ் குதித்து ஓடி வந்தான். "உனக்கு ஒரு விஷயம் தெரியுமா நமக்கு புது டெக்னிக்கல் மேனேஜர் வரப் போறாராம்"."அதுக்கென்ன இப்போ??",என்ற மதுவை ஆச்சர்யமாகப் பார்த்தான்.
"என்ன தமிழ்? ஏன் இவ இப்படி இருக்கா??"."தெரியல. கொஞ்ச‌ நாளா ஒரு மாதிரித் தான் இருக்கா. சரி நீ சொல்லு, அவர் பேர் என்ன? ஆள் எப்படி??"."ம்ம்ம் பேர் சிவராம கிருஷ்ணமூர்த்தி வயசு 50 இருக்கும்" , சொல்லிவிட்டு முறைத்துவிட்டு சென்றான்.


-----------------------------------------------------------------------------"ஹே இன்னைக்கு புது மேனேஜரோட மீட்டிங் இருக்கு, எல்லாரும் கான்ஃபரன்ஸ் ரூமுக்கு வந்துடுங்க‌", மகேஷ் தான் கத்திவிட்டுச் சென்றான்.சில சமயங்களில் சினிமாவில் நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பும், நிஜ வாழ்க்கையில் சினிமாவின் தாக்கமும் காணப்படும். பல சினிமாவில் பார்த்து மது நம்பாத காட்சி அவள் வாழ்க்கையில் நடந்தப் போது அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவள் கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை. அவள் காண்பது நிஜம் தானா, இல்லை இது கனவா, யாராவது இது நிஜம் என்று சொல்ல வேண்டும், என்று அவள் மனம் ஏங்கியது. யார் சொல்வார்கள் யாருக்குமே தெரியாதே. இது ஒரு புறமிருக்க, இப்பொழுது என்ன செய்வது அவனிடம் பேசலாமா, வேண்டாமா?? நாம் பேசினால் அவன் பேசுவானா, கோபத்தில் இருப்பானா,இல்லை மறந்திருப்பானா??', என்கிற பல கவலைகள் அவள் மனதில் சூழ காரணமான அவன், அமைதியாக‌ அந்த குளிரூட்டப்பட்ட கான்ஃபரன்ஸ் ஹாலில் நடுவில் உட்கார்ந்திருந்தான்.

"ஹே மது நல்லா தான்டி இருக்காரு இந்த‌ மேனேஜர், அதனால தான் அந்த மகேஷ் லூசு நம்மக்கிட்ட பொய் சொல்லிருக்கான். இவர் பேர் அரவிந்தாம், ம்ம்ம்", பெருமூச்சுவிட்டபடி நகர்ந்தாள்.

"அரவிந்த்" இந்த பேயரே அவளை என்னவோ செய்தது. எத்தனை முறை சொல்லிருக்கேன், "ஹே உன் பேர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு டா,""ஏன் டீ??""தெரியல ஆனா பிடிச்சிருக்கு".அவன் பெயர் மட்டுமல்ல அவனையே பிடிச்சிருந்தது. அவன் காதலை சொல்லும் வரை. 'அப்பறம் ஏன் அவனைப் பிடிக்கவில்லை?', இன்று வரை இந்த கேள்விக்கு மட்டும் அவளிடம் விடை இல்லை.

'ஒருவேளை அவன் காதல் சொன்ன காலம் தவறானதோ?? பின் எப்பொழுது சொன்னால் ஏற்றுக் கொண்டிருப்போம்?? ஒருவேளை இப்பொழுது..??', என்று மனதுக்குள் நினைக்கும் போதே அவள் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது. 'ச்சே என்ன பைத்தியக்காரத்தனம்? ஏன் இப்படி நினைத்தோம்?' என தன்னைத்தானே நொந்துக்கொண்டாள்.

இனி அடுத்தென்ன செய்வது என்ற கவலையே அவளைக் கொன்றது. 'இனி தினமும் அவனைப் பார்த்துத்தான் ஆக‌ வேண்டும். பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ அவனிடம் பேசித்தான் ஆக வேண்டும். அவன் கோபம் என் வேலைக்கு ஏதேனும் இடஞ்சலாக இருந்தால் என்ன செய்வது?பேசாம இந்த வேலைய விட்றலாமா? ச்சேச்சே மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தின கதையாகும். சரி இருந்து சமாளிப்போம், என்னப் பண்ணிடுவான் பார்ப்போம்', யோசித்துக்கொண்டே இருந்தவளுக்கு அப்போதுதான் ஒன்று உறைத்தது. 'என்னதிது அவன் நம்மக்கிட்ட பேசவே இல்ல என்னப் பார்த்தானானுக்கூட சந்தேகமா இருக்கு அப்பறம் ஏன் லூசு மாதிரி என்னென்னமோ நினைச்சிகிட்டு இருக்கோம்?'.

அதற்குள் அங்கு வந்த தமிழ் "ஹே மது..!! உன்னை மேனேஜர் கூப்பிடறார்" மது உறைந்து நின்றாள்.

-வருவாள்.

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-5

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-6

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-7

41 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

M.Saravana Kumar said...

"எதப்பத்தி யோசிக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்"
ஹே.. நான் எப்போதும் சொல்லும் டயலாக்.....
:)
:)

M.Saravana Kumar said...

கதையில புகுந்து விளையாடீட்டீங்க..
ரொம்ப ரொம்ப அருமையா இருந்துச்சு இந்த பார்ட்..
:)

M.Saravana Kumar said...

நான் இம்சைஅரசி ப்ளாக்ல தான் இந்த மாதிரி படிச்சிருக்கேன்..
:)

M.Saravana Kumar said...

சர்வ சத்தியமா இந்த கதை கற்பனை மாதிரி தெரியவில்லை.........
;)

M.Saravana Kumar said...

சீக்கிரமா அடுத்த பகுதியை எழுதுங்க.. இல்லனா எனக்கு பயங்கரமா கோபம் வந்துடும்..
:)

M.Saravana Kumar said...

அட.. நான் தான் பர்ஸ்டா..
:)

M.Saravana Kumar said...

//உனக்கான
என் காதலை
இதயத்தில்
புதைத்து வைக்கவில்லை
விதைத்து வைத்திருந்திருக்கிறேன்
உன் பார்வை
மழைப் பட்டதும்
துளிர்த்துவிட்டதைப் பார்..!!//

ரொம்ப ரொம்ப அழகா இருக்கு கவிதை..

rapp said...

//உனக்கான

என் காதலை

இதயத்தில்

புதைத்து வைக்கவில்லை

விதைத்து வைத்திருந்திருக்கிறேன்

உன் பார்வை

மழைப் பட்டதும்

துளிர்த்துவிட்டதைப் பார்..!!

//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........................வேணாம் விட்டுருங்க அழுதிடுவேன். இதத்தான் கூப்பிட்டு வெச்சு நக்கலடிக்கறதா?????????????? நீங்கல்லாம் பெரிய கவிதாயினியா இருக்கலாம், ஆனா போட்டிக்கு இங்க எக்கச்சக்கப் பேர் இருக்காங்க. என்னை மாதிரி கவுஜாயினிக்கு போட்டிக்கு ஆளே கிடையாது. நானும் யாரோடவும் போட்டி போடறதில்லை,அப்புறம் ஏன் இந்த கொலைவெறி?!?!?!

Naveen Kumar said...

very nice Sri:-)

Naveen Kumar said...

BTW thanks for your visit to my page.

நிஜமா நல்லவன் said...

//உனக்கான

என் காதலை

இதயத்தில்

புதைத்து வைக்கவில்லை

விதைத்து வைத்திருந்திருக்கிறேன்

உன் பார்வை

மழைப் பட்டதும்

துளிர்த்துவிட்டதைப் பார்..!!//


சூப்பர்!!!

நிஜமா நல்லவன் said...

கதை ரொம்ப விறுவிறுப்பா போக ஆரம்பிச்சி இருக்கு. வாழ்த்துக்கள்.

நிஜமா நல்லவன் said...

//M.Saravana Kumar said...
"எதப்பத்தி யோசிக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்"//

அட இது நல்லா இருக்கே!!

நிஜமா நல்லவன் said...

//M.Saravana Kumar said...
கதையில புகுந்து விளையாடீட்டீங்க..
ரொம்ப ரொம்ப அருமையா இருந்துச்சு இந்த பார்ட்..
:)//

நானும் வழிமொழிகிறேன்!

நிஜமா நல்லவன் said...

//M.Saravana Kumar said...
நான் இம்சைஅரசி ப்ளாக்ல தான் இந்த மாதிரி படிச்சிருக்கேன்..
:)//

அடடா என்ன இது நான் நினைக்கிற மாதிரியே நீங்களும் நினைச்சு இருக்கீங்க:)

நிஜமா நல்லவன் said...

//M.Saravana Kumar said...
சர்வ சத்தியமா இந்த கதை கற்பனை மாதிரி தெரியவில்லை.........
;)//

இதுக்கு நான் ரிப்பீட் போட நினைச்சாலும் போட முடியலை:)

நிஜமா நல்லவன் said...

//M.Saravana Kumar said...
சீக்கிரமா அடுத்த பகுதியை எழுதுங்க.. இல்லனா எனக்கு பயங்கரமா கோபம் வந்துடும்..
:)//

அச்சச்சோ என்ன இது திரும்ப திரும்ப நான் நினைக்கிறதையே நீங்களும் நினைக்குறீங்க. இருங்க உங்க ப்ளாக்குக்கு வர்றேன்:)

நிஜமா நல்லவன் said...

///rapp said...
//உனக்கான

என் காதலை

இதயத்தில்

புதைத்து வைக்கவில்லை

விதைத்து வைத்திருந்திருக்கிறேன்

உன் பார்வை

மழைப் பட்டதும்

துளிர்த்துவிட்டதைப் பார்..!!

//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........................வேணாம் விட்டுருங்க அழுதிடுவேன். இதத்தான் கூப்பிட்டு வெச்சு நக்கலடிக்கறதா?????????????? ///


:)

sathish said...

//உன் பார்வை
மழைப் பட்டதும்
துளிர்த்துவிட்டதைப் பார்..!!//

good one Sri!

naanal said...

//உனக்கான

என் காதலை

இதயத்தில்

புதைத்து வைக்கவில்லை

விதைத்து வைத்திருந்திருக்கிறேன்

உன் பார்வை

மழைப் பட்டதும்

துளிர்த்துவிட்டதைப் பார்..!!//

கவிதை அழகா இருக்கு.. :)

naanal said...

//"மாறாது மாறாது என்கிற வார்த்தை மட்டுமே மாறாது" மற்ற எல்லாமே மாறக்கூடியதுதான்.//

"மாற்றம் என்பது
மானிட தத்துவம்
மாறாதிருக்க யான்
வான விலங்கல்லன் " என்கிற கவியரசரின் கவிதை ஞாபகத்திற்கு வருகிறது

naanal said...

சரியான திருப்பம்..
அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன் ..

Selvanthana said...

கலக்கிட்ட ஸ்ரீ....
வாழ்த்துக்கள்!!
யார் அந்த அரவிந்த்??
சொல்லவேஇல்ல...
;)

Sri said...

@ M.Saravana kumar
//ஹே.. நான் எப்போதும் சொல்லும் டயலாக்.....//

அட அப்படியா?? ;-)

//கதையில புகுந்து விளையாடீட்டீங்க..
ரொம்ப ரொம்ப அருமையா இருந்துச்சு இந்த பார்ட்..//

ரொம்ப நன்றி..!! :-))

//நான் இம்சைஅரசி ப்ளாக்ல தான் இந்த மாதிரி படிச்சிருக்கேன்..//

ம்ம்ம் அவங்கெல்லாம் எவ்ளோ பெரிய ஆள். நான் ரொம்ப சின்னப் பொண்ணு..!! ;-)

//சர்வ சத்தியமா இந்த கதை கற்பனை மாதிரி தெரியவில்லை.........//

இது நிஜம்மாவே கற்பனைக் கதை தான் நம்புங்க‌..!! :-)

//சீக்கிரமா அடுத்த பகுதியை எழுதுங்க.. இல்லனா எனக்கு பயங்கரமா கோபம் வந்துடும்..//

சீக்கிரம் எழுதறேன். கோபப்படாதீங்க‌..!! :-))

//அட.. நான் தான் பர்ஸ்டா..//

அவார்ட் எதாவது வேணுமா?? ;-)
நன்றி உங்கள் வருகைக்கும், வாழ்த்துகும்...!! :-))

Sri said...

@ rapp
//விட்டுருங்க அழுதிடுவேன். இதத்தான் கூப்பிட்டு வெச்சு நக்கலடிக்கறதா??//

சத்தியமா இல்ல அக்கா..!! ;-)

//அப்புறம் ஏன் இந்த கொலைவெறி?!?!?!//

கொலைவெறியா அப்படில்லாம் ஒன்னும் இல்ல அக்கா.. முதல்முதல்ல வந்துருக்கீங்க இப்படியா அழறது கண்ணத்தொடைச்சிக்கோங்க.. நன்றி அக்கா வருகைக்கு..!! :-))

Sri said...

@ naveen kumar
//very nice Sri//

Thank you naveen..!! :-))

Sri said...

@ நிஜமா நல்லவன்
//சூப்பர்!!!
//கதை ரொம்ப விறுவிறுப்பா போக ஆரம்பிச்சி இருக்கு. வாழ்த்துக்கள்.
அட இது நல்லா இருக்கே!!
நானும் வழிமொழிகிறேன்!//
நன்றி அண்ணா தொடர் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்..!! :-))

//இதுக்கு நான் ரிப்பீட் போட நினைச்சாலும் போட முடியலை//

யூ டூ அண்ணா??????? :-(

Sri said...

@ Sathish
//good one Sri!//

Thank you anna..!! :-))

Sri said...

@ naanal
//கவிதை அழகா இருக்கு.. //
நன்றி அக்கா..!! :-))

//சரியான திருப்பம்..
அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன் //
சீக்கிரம் பதிக்கிறேன்..!! :-))

Sri said...

@ Selvandhana
//கலக்கிட்ட ஸ்ரீ....
வாழ்த்துக்கள்!!//

நன்றி.......!! :-))

//யார் அந்த அரவிந்த்??
சொல்லவேஇல்ல...//
அடிப்பாவி நீ ஒருத்திப் போதும் டீ என்னப் பத்தி சொல்ல.. அப்படியெல்லாம் யாரும் இல்ல..இருந்தா உன் கிட்ட சொல்லாமயா?? ;-)

ஜி said...

ம்ம்ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும்... அடுத்த பகுதி எப்போ??

நிஜமா நல்லவன் said...

/////Sri said...
@ நிஜமா நல்லவன்
//இதுக்கு நான் ரிப்பீட் போட நினைச்சாலும் போட முடியலை//

யூ டூ அண்ணா??????? :-( /////


ஆஹா...ஏனிந்த சோகம்....அதான் ரிப்பீட் போடலையே........:)

ஜி said...

kalakkal sis... Kaathala mounamaave solla poraangalo??

;)))

Sri said...

@ ஜி
//ம்ம்ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும்... அடுத்த பகுதி எப்போ??//
ரொம்ப சீக்கிரமே பதிக்கிறேன் அண்ணா
:-))
//kalakkal sis... Kaathala mounamaave solla poraangalo??//
தெரியல அண்ணா..!! ;-)
நன்றி..!! :-))

Sri said...

@ நிஜமா நல்லவன்
//ஆஹா...ஏனிந்த சோகம்....அதான் ரிப்பீட் போடலையே.//
நீங்க போட மாட்டீங்க எனக்குத் தெரியும்...!! :-))
நன்றி அண்ணா...!! :-))

M.Saravana Kumar said...

//அவார்ட் எதாவது வேணுமா?? ;-)//

அவார்டெல்லாம் எதுக்கு.. உங்க அன்பு மட்டும் போதும்..
:)

சீக்கிரம் அடுத்த பகுதிய பதிவில் போடுங்க..
:)

Sri said...

@ M.Saravana kumar
சீக்கிரம் போடறேன், நன்றி..!! :-))

இத்யாதி said...

கதை படிக்கின்ற அளவு நேரம் இல்லாத காரணத்தால்....
வாழ்த்துகள்!!!! எழுதுங்கள்....

Sri said...

நன்றி இத்யாதி..!! :-))

அனுஜன்யா said...

ஒரே இம்சையா போச்சு உங்களோட. அட, நான் அந்தக் காலத்து அண்ணனா இருக்கலாம். அதுக்காக காதலுக்கு எல்லாம் எதிர்ப்பு காட்ட மாட்டேன். ஸ்ரீ, இது உனக்கு மட்டும் இல்ல. ஜி மற்றும் சரவணனுக்கும் சேத்துதான். ஒரே சமயத்துல மூணு கல்யாண செலவு தாங்காதுப்பா. நான் மிடில் கிளாஸ் மாதவன். அதனால, ஒழுங்க விஷயத்த சொன்னா, ஆக வேண்டிய வேலைய பாப்போமில்ல!

அனுஜன்யா

Sri said...

@ அனுஜன்யா
//ஒரே இம்சையா போச்சு உங்களோட. அட, நான் அந்தக் காலத்து அண்ணனா இருக்கலாம். அதுக்காக காதலுக்கு எல்லாம் எதிர்ப்பு காட்ட மாட்டேன்.//

அடடா ரொம்ப நல்ல அண்ணாவா இருக்கீங்களே..!! :-))

//ஸ்ரீ, இது உனக்கு மட்டும் இல்ல. ஜி மற்றும் சரவணனுக்கும் சேத்துதான்.//

கேட்டுக்கோங்கப்பா..!! ;-)

//ஒரே சமயத்துல மூணு கல்யாண செலவு தாங்காதுப்பா. நான் மிடில் கிளாஸ் மாதவன். அதனால, ஒழுங்க விஷயத்த சொன்னா, ஆக வேண்டிய வேலைய பாப்போமில்ல!//

சரி, ஜி அண்ணா அண்ட் சரவணா சொல்வாங்க. நான் அப்பாலிக்கா சொல்றேன். (அப்படி எதுவும் இல்லன்னு அர்த்தம்..!! ;-)

நன்றி அண்ணா..!! :-))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது