காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-7

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??- 1 , 2 , 3 , 4 , 5 , 6 .
பொம்மைக்குள் இருந்து

ஆட்டுவிக்கும்

நூலைப் போல

என்னுள்

எங்கோ

ஒளிந்துக் கொண்டு

ஆட்டுவிக்கிறது


உன் காதல்


"ஏன்டி வரும் போதே இவ்ளோ டென்ஷனா வர?? என்ன ஆச்சு? வேல ரொம்ப அதிகமா? யாராவது எதாவது சொன்னாங்களா? மகேஷ் ஏதாவது சொன்னானா??", தமிழின் கேள்விகள் மதுவின் காதில் விழாவே இல்லை.


"ஒன்னும் இல்ல...உனக்கு இப்ப எப்படி இருக்கு?? டாக்டர் கிட்ட போனியா?? என்ன சொன்னார்?? மாத்திரை போட்டியா?? ஏன் இவ்ளோ நேரம் முழிச்சிருக்க?? உன்ன நான் தான் தூங்க சொன்னேன்ல...!!"."இப்ப சரியா போச்சு...மார்னிங் டாக்டர் கிட்ட போயிட்டு தான் வந்தேன்".


"சரி தூங்கு..!!"."நீ சாப்டலியா??"."எனக்கு பசிக்கல...நீ சாப்டல்ல??தூங்கு..!!".'என்ன ஆச்சு இவளுக்கு?? நாம ஒன்னு கேட்டா, அவ ஒன்னு சொல்லிட்டு தூங்கறா..!!', தமிழுக்கு அதற்கு மேல் யோசிக்க முடியாமல் தூங்கி போனாள்.'சாரி தமிழ். எல்லாம் அவனால...ச்சே நல்லவன்னு நினைச்சேன், இப்படி சொல்லுவன்னு நினைக்கல..!!'"அப்ப காதல் சொன்னா கெட்டவனா?? அவன் மனசுல இருக்கறத அவன் சொல்லிட்டான். உனக்கு பிடிச்சிருந்தா ஓகே சொல்லு. இல்லேனா விட்டுடு. அதுக்கேன் அவன திட்டின??''பின்ன திட்டாம கொஞ்ச சொல்றியா?''ம்ம்ம்''என்னது?? ச்சே இந்த மனசு படுத்தும் பாடு பெரும்பாடா இருக்கு..!!', ஏதேதோ நினைவுகளில் ஆழ்ந்து பிறகு தூங்கியும் போனாள்."ஹே..!! இன்னைக்கு டீம் லஞ்ச் எல்லாரும் வந்துடுங்க..!!", மகேஷ் தான் சொன்னான்.


"ஹே என்ன இப்ப வந்து சொல்ற? நேத்தே சொல்றத்துக்கென்ன?", கோவமாக கேட்டாள் மது. 'ச்சே அவன் மேல இருக்கற கோவத்த இவன் மேல ஏன் காட்டறோம்??'."இப்ப தான் அரவிந்த் சொன்னார். அவர் சொல்ல சொன்னார், நான் சொல்லிட்டேன், நீ வந்துடு, அவ்ளோதான்"."அதெல்லாம் முடியாது. நான் வரல"."ஏன் டி வேண்டாம்கிற? நாமளும் கொண்டுவரல...எப்படியும் அந்த காபிடேரியால தான் சாப்ட போறோம்...அதுக்கு போகலாமே??", என்ற தமிழை கோவமாக பார்த்தாள்.'இவ வேற நேரம், காலம் தெரியாம'"நான் வரல டி"'வந்தா வீணா அவன பார்க்க வேண்டி இருக்கும். அப்பறம் பேசணும். எதுக்கு தேவை இல்லாம?'"நீ வேணா போயிட்டு வா....நான் வரல...!!", தமிழுக்கு காரணம் புரியாவிட்டாலும், அவள் எதோ ஒன்றை தன்னிடம் மறைக்கிறாள் என்பதை மட்டும் யூகித்தாள்."எல்லாரும் போகும் போது, நீ மட்டும் வரலேன்னா நல்லா இருக்காது. நீ ஏன் வரலைன்னு சொல்றனு எனக்குத் தெரியல. ஆனா, நீ வந்தா நல்லாருக்கும்னு நான் நினைக்கறேன்", தமிழுக்கு தன் தோழியை புரிந்து கொள்ளத் தெரியாத, முடியாத தன் நிலையை எப்படி சொல்வது எனத்தெரியவில்லை. கெஞ்சுவது போல அவள் முடித்ததும், மது மனசுக்குள் வலியாக உணர்ந்தாள்."சரி உனக்காக வரேன்",தமிழுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது."ஆமா என்ன அரவிந்த் திடிர்னு லஞ்ச் எல்லாம்??", மகேஷ் தான் ஆரம்பித்தான். அதுவரை எந்த பிடிப்பும் இல்லாமல் எங்கேயோ வெறித்துக்கொண்டிருந்த மது தன் காதுகளை கூர்மையாக்கினாள்.


கொஞ்சமாக சிரித்தான், "நான் மறுபடியும் பெங்களூர்க்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போகலாம்னு இருக்கேன்".


மதுவின் மனசுக்குள் இடி இறங்கியது போல இருந்தது. ஏதோ இனம் புரியாத ஒன்று அவள் நெஞ்சுக்கும், தொண்டைக்கும் இடையே நின்று அடைத்தது. அதற்குக் காரணம் தேடலானாள். கடைசியில் அதற்குக் காரணம் நம்மால் ஒருவன் மனது வேதனைப் பட்டதோ என நினைத்ததாலேத் தானே தவிர வேறெதுவும் இல்லை எனக் கூறிக்கொண்டாள்.


'பின் ஏன் தேவை இல்லாமல் கண்கள் கலங்குகிறது??'.


"மது என்ன ஆச்சு?? ரொம்ப காரமா சாப்டியா??",


"ஆமாம் டி ரொம்ப காரமா இருக்கு. எனக்கு போதும்".


"தட்ல இருக்கற ஒரு ஐட்டம் கூட சாப்டல...எதுடி காரம் உனக்கு??"


"ப்ளீஸ்....வேண்டம்னா விட்டுடேன்..!!".

"மது ஒரு நிமிஷம்..நாளைக்கு நான் கிளம்பறேன். இனிமே நீ என் தொல்லை இல்லாம நிம்மதியா இருக்கலாம். உன் கல்யாணத்துக்கு மறக்காம பத்திரிகை அனுப்பு ப்ளீஸ்...நான் அந்த லக்கி பெல்லோவ பார்க்கணும். கிட்டத்தட்ட ஆறு வருஷமா லவ் பண்ற என்னவிட, அவன் எந்த விதத்துல உனக்கு மேட்ச் ஆகறான்னு நான் பார்க்கணும். பயப்படாத நான் நிச்சயமா கல்யாணத்த எல்லாம் நிறுத்திட மாட்டேன். இப்பகூட நீ என்ன ஏத்துக்காததுனால நான் இந்த ஊரை விட்டு போகல, உனக்கு என் நியாபகம் இருக்கானு தெரிஞ்சிக்க தான் இங்க வந்தேன். தெரிஞ்சிகிட்டேன், கிளம்பறேன்", வேகமாக பேசி முடித்தான்.

திரும்பி பார்க்காமல் நடந்தாள். முதுகை அவன் பார்வை துளைக்க திரும்பியவள் உறைந்து நின்றாள்.

ஒரு பெண்ணின் கண்ணீருக்கு எவ்வளவு மதிப்போ, அதே அளவு உயர்வானது ஆணின் கண்ணீர். சிறு வயதில் அவன் அப்பாவை இழந்த போது கூட அவன் அழவில்லை என்று அவள் அப்பா சொன்ன நியாபகம், எப்பாடுபட்டாவது இந்த குடும்பத்தை காப்பாற்றுவேன் என்ற தைரியம் அவன் கண்ணில் இருந்ததாக சொன்னார். அப்படிப் பட்டவன் இன்று அவளால், அவள் மீது கொண்ட காதலால் கண்கலங்கி நின்றான்.

இதயம் சுமந்த

வாழ்நாள் கர்ப்பத்தைக்

கண்கள் வழிக்காட்டிக்

கொடுத்தப் பின்னும்

வார்த்தையில்

என் காதலை

சொல்லவும்

வேண்டுமோ??

"ஏய் என்னடி அதிசயமா ஸ்பூன்ல சாப்பிடற", அவன் மீசை இன்னும் உள்ளங்கையில் உறுத்துகிறது என்பதை இவளிடம் எப்படி சொல்வது...!!

இனி நீ கடனாகத்தரும்

முத்தங்களை

என்னுடன்

வைத்துக்கொள்ளப்

போவதில்லை

அவற்றை உடனடியாக

உன்னிடமே திருப்பித்தர

துணிந்து விட்டேன்..!!-முற்றும்.

அவார்ட் வேணுமா??(Blogging friends forever)


முதல்ல எனக்கு இந்த அவார்ட குடுத்த சரவணனுக்கு நன்றி.....!!

நண்பர் சரவண குமார் எனக்குக் கொடுத்த அவார்ட் இது...!!
இதே மாதிரி நானும் ஐந்து பேருக்கு தரணுமாம்..!!

அதற்கான விதிமுறைகள்,

1.நான் இந்த அவார்டை 5 பேருக்கு கொடுக்கணும்..!!(ஐந்து பேருக்கு தான் கொடுக்கனுமா?? என்னக் கொடும சரவணா இது??)

2.இந்த 5 பேருல 4 பேரு நம்ம ப்ளாகை தொடர்ந்து படிக்கிறவங்களா இருக்கணும்....!! ஒருத்தர் நம்ம ப்ளாகை புதுசா படிக்க தொடங்கினவங்களா இருக்கணும்...!!

3.இந்த அவார்ட் உங்களுக்கு யாரு கொடுத்தாங்களோ அவங்களுக்கு மறுபடியும் ஒரு link தரனும்...(ஒரு லிங்க் என்ன நாலு லிங்கே கொடுத்திடலாம்)

இவங்க தான் அந்த ஐந்து நண்பர்கள்..

தேச பக்தி கவிதைகள் எழுதற நாணல் அக்கா.

ரொம்ப நல்லவரான நிஜமா நல்லவன் அண்ணா.

இந்த ச்ச்ச்ச்சின்ன தங்கைய அன்போட அக்கானு கூப்பிடற ஆயில்யன் அண்ணா.

நம்ம தோஸ்த் ரம்யா ரமணி .

மனசுக்குள்ள மத்தாப்ப வெச்சிகிட்டு இருக்கற திவ்யா அக்கா.

சரவணன் சொன்ன ஐந்து பேர் கணக்கு முடிஞ்சிட்டாலும். இது எனக்காக,

இந்த பொன்னான நேரத்தில் ஐந்து பேருக்கு தான் அவார்ட் தரணும்னு சொன்ன சரவணன வன்மையாக கண்டிக்கிறேன்..இருந்தாலும் எனக்கு அவார்ட் குடுத்ததால மன்னிக்கிறேன்..!! ;-)

ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா சரவணா முடிச்சிட்டேன்..!! (நாலு லிங்க் குடுத்துட்டேனா சொன்ன மாதிரியே...!! ;-))

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-6

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??- 1 , 2 , 3 , 4 , 5 .
எங்கோ கண்காணாத்
தூரத்தில்
தொலைத்துவிட்டு
வந்தாலும்
வாசல் தேடிவந்து
வாலாட்டும்
இந்தக் காதலைக்
கொஞ்சாமல்
என்ன செய்ய??

'என்ன அதிசயம் தமிழ் இன்னும் எழுந்துக்கவே இல்ல',மதுவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. 'இப்படித் தமிழ் தூங்கியதே இல்லையே. என்ன ஆச்சு??' .


" ஹே தமிழ் எழுந்திரு மணி ஆச்சுப் பாரு. ஏய்..!! என்ன டீ உடம்பு சுடுது?. அப்பவே சொன்னேன் மழைல நனையாதேன்னு சொல்றத கேட்டாத்தானே. இப்பப் பாரு, சரி வா டாக்டர் கிட்ட போகலாம்"."வேண்டாம். நானே போய்கிறேன். நீ ஆஃபிஸ் போ. இன்னைக்கு முக்கியமான இன்ஸ்டாலேஷன் இருக்கு. ரெண்டு பேரும் போகலைனா மகேஷ் பாவம் தனியா கஷ்டப்படுவான்"."அதுக்குன்னு உன்ன இப்படியே விட்டுட்டுப் போக சொல்றியா?", கொஞ்சம் கோப‌மாகவே கேட்டாள்."ஃபீவர் ஒன்னும் அதிகமா இல்ல. நானே எழுந்துப் போறேன். நீ போ", தமிழின் பிடிவாதம் அவளுக்குத் தெரிந்த விஷயம். எனவே, அரை மனதுடன் அறையை விட்டுக் கிளம்பினாள்."என்ன மேடம் தனியா வந்திருக்கீங்க??".


"தமிழுக்கு ஃபீவர்". காலையிலிருந்துக் கேட்பவர்களிடம் இந்த பதிலைச் சொல்லிக் களைத்துப் போனாள். அவள் எப்படி இருக்கிறாளோ என்றக் கவலை வேறு. 'ச்சே.. இந்த வேலை வேற சீக்கிரம் முடிய மாட்டேங்குது. மணி என்னாச்சு?அச்சச்சோ ஆறாச்சா??.அவ வேற தனியா இருப்பா'."மது நான் கிளம்பறேன். நீ இருந்து ப்ளீஸ் இத கொஞ்சம் முடிச்சிட்டு போயிடு",என்று சொல்லி மகேஷ் கிளம்பிவிட்டான்.


"ம்ம் சரி", 'இந்த மகேஷிற்கு என்ன அவசரம் அதுக்குள்ள கிளம்பிட்டான்'.


"என்ன மது இன்னும் கிளம்பலயா மணி 9 ஆச்சே??", அரவிந்த் கேட்டதும் தான் கடிகாரத்தைப் பார்த்தாள்.

"ம்ம்ம்..போகனும்", இரண்டு வார்த்தையில் விடை சொல்வது குறித்து வேதனைப்பட்டாள். அவனுடன் அவன் இல்லாத போது நிறைய பேச வேண்டும் என் நினைப்பவள் அவனைப் பார்த்தவுடன் இப்படி சொற்களைச் சுருக்கிக் கொள்வது பழக்கமாகிப்போனது."தனியாவா??"


"ம்ம்ம்ம்"


" உனக்கு ஆட்சேபனை இல்லேனா நான் அந்தப் பக்கம் தான் போறேன் அப்படியே உன்ன உன் ரூம்ல விட்டுட்டுப் போறேனே".

"இல்ல வேண்டாம்" என்று தான் தொண்டைவரை வார்த்தை இருந்தது. அது எப்பொழுது கரைந்து "ம்ம்ம்ம் சரி" என்றானது என்று அவள் குழம்பினாள்.

'ம்ம்ம் நல்லா தான் இருக்கான். சின்னச் சின்ன வித்யாசங்கள் தான் அப்போதிருந்ததிற்கும் இப்போதைக்கும் ஆனால் அழகான மாற்றங்கள். பேசவே பயப்படுவான் ஆனா இப்போ எவ்ளோ நல்லா ஒரு டீம ஹேண்டில் பண்றான். அவன் அம்மா அப்பாப் பத்திக் கேட்கலாமா வேண்டாம் எதாவது நினைச்சிப்பான்'.

"ம்ம்ம் சொல்லு மது, என்ன அப்படி பார்க்கிற? எதோ சொல்ல வந்த போல இருக்கு".

"இல்லயே. சும்மா தான்", சமாளித்தாள்.

"அப்போ இருந்து பார்த்துக்கிட்டே வந்த, அதான் கேட்டேன்", சிரித்தான்.

'அடப்பாவி, இவ்ளோ நேரம் கவனிச்சுக்கிட்டுத்தான் வந்திருக்கான். இனிமே பார்க்கக்கூடாது', கஷ்டப்பட்டு கழுத்தை ஜன்னலுக்குத் திருப்பினாள், கொஞ்சம் சத்தமாகவே சிரித்தான். 'இனிமேலும் இப்படி உட்கார்ந்து இருந்தா இன்னும் எதாவது சொல்லுவான்'.

"ரொம்ப தாங்ஸ்".

"எதுக்கு??"

"எல்லாத்துக்கும் தான்"

"எல்லாத்துக்கும்-னா?"

"எல்லாத்துக்கும்-னா எல்லாத்துக்கும். இப்போ வண்டில கூட்டிட்டு வரதுக்கு அப்பறம்...!! "

"அப்பறம்??"

"பழசெல்லாம் மறந்து என் கூட பழகறதுக்கு..!!", நெடுநாளாக மனதில் வைத்திருந்ததை வார்த்தையில் சொன்னாள். ஆனால் எதிர்பார்த்த பதில் தான் கிடைக்கவில்லை.

"பழசுன்னா, எத?", அவன் வார்த்தைக் கொஞ்சம் கடினப்பட்டிருப்பதை உணர்ந்தாள்.

'அதை எப்படி என் வாயால் சொல்வது? ஒருவேளை, நான் சொல்லி அது அவன் மறந்ததை நானே நியாபகப்படுத்தினா மாதிரி ஆகிடிச்சுனா??ச்சே எப்பப்பாரு இவனால எனக்குக் குழப்பம் தான்...!!' ,கொஞ்சம் கோபமும் வந்தது.

"சொல்லு மது. ஏதோ பழசுன்னு சொன்ன. என்ன பழசு??"

"உனக்கு நிஜமாவே தெரியாது? நான் எத சொல்றேன்னு??",கோபமாகவே கேட்டாள்.

"எனக்கெப்படித் தெரியும் நீ என்ன சொல்லவரன்னு? நீ உன் மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டா, அடுத்தவங்களுக்கென்ன மூக்குல வேர்க்குமா?? நீ தான் சொல்லனும்",சொல்லி சிரித்தான்.

"உன் காதலத்தான் சொல்றேன்", கடைசியில் சொல்லியேவிட்டாள்.

"என் காதலா??", கேட்டவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.

'அச்சச்சோ நாம தேவையில்லாம நியாபகப்படுத்திட்டோமா??', குழம்பித் தவித்தாள். 'இனி எதுவா இருந்தாலும் அவனே பேசட்டும்', என அரை நாழிகைக் கழித்தாள். அவன் வாயைத் திறப்பதாகவே தெரியாது போக "என்ன ஆச்சு?" என்றாள்.

"ஒன்னும் இல்ல".

"சொல்லு, நான் எதாவது தப்பா சொல்லிட்டனா??", பதில்லில்லை .

'வாயைத்திறந்துத் தொலையேன்..!! இந்த அழுத்தம் மட்டும் இன்னும் இவன் கிட்ட இருந்துப் போகவே இல்ல‌..!!' ,மனதுக்குள் திட்டிக்கொண்டு இவளும் மௌனமானாள்.

"உன்னப் பார்த்த இந்த ஆறு மாசத்துல, நான் எப்பவாவது உன்கிட்ட வந்து, என் காதல மறந்துட்டேன்னு சொன்னேனா??", இந்தக் கேள்வியை அவனிடமிருந்து எதிர்ப்பார்க்கவில்லை அவள், என்ன சொல்வதெனத் திணறினாள்.

"இல்ல. ஆனா நீ இப்பவும் என்னக் காதலிக்கறதா காட்டிக்கலையே. அதான் நான் நீ மறந்துட்டன்னு நினைச்சேன்".

"ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோ, நான் காதல் சொன்ன விதமும், காலமும் வேணாத் தப்பா இருக்கலாம். ஆனா உன்மேலான என் காதல் தப்பானதில்ல. அப்பறம் ஏன் நான் அதை மாத்திக்கனும் இல்ல மறக்கனும்? உன் மேலான என் காதல் எப்பவும் மாறாது..!!",வேகமாக பேசி முடித்தான்.

"நிறுத்து..!! உன்னத்தான் சொல்றேன் வண்டிய நிறுத்து..!!".

"ஏன்??".

"உன் கிட்ட காரணம் சொல்லவேண்டிய அவசியம் இல்ல. அதோட எனக்கு உன் கூட வர இஷ்டம் இல்ல. வண்டிய நிறுத்து..!!".

"உனக்கென்ன பைத்தியமா?? நைட் டைம்ல எப்படித் தனியா போவ?"

"உன்ன நம்பியோ, உன் கார நம்பியோ, நான் இந்த வேலைக்கு வரல. எப்படி போகனும்னு எனக்குத் தெரியும். நீ போகலாம்..!!", எதற்குக் கோபப்பட்டாள் என்று இதுவரை அவளுக்கு சொல்லத் தெரியவில்லை.

-வருவாள்..

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-7

ரக்க்ஷபந்தன் வாழ்த்துக்கள்..!!

என்னை இந்தப் பதிவுலகத்துக்கு அறிமுகப்படுத்தின அருட்பெருங்கோ அண்ணா, ஸ்ரீ அண்ணா, தொடர்ந்து ஆதரவு தர (தேர்தல் பிரசாரம் மாதிரி ஆகிடிச்சோ?? ;-)) நிஜமா நல்லவன் அண்ணா, நான் போடறதும் ஒரு கவிதைன்னு நம்பிப் படிச்சிட்டுப் போற ஜி அண்ணா அப்பறம் சதீஷ் அண்ணா, நான் தமிழ்மணத்துல சேர உதவியா இருந்த தமிழ் பிரியன் அண்ணா, தம்பி தங்கைகளுக்கெல்லாம் சீக்கிரம் கல்யாணம் பண்ணிவைக்க ஆவலோட இருக்கற மிடில் கிளாஸ் மாதவன் சாரி அனுஜன்யா அண்ணா, தங்கைக்குக் கூட மரியாதைத் தருவேன்னு சொல்லி இன்னைவரக்கும் என்ன அக்கா-ன்னேக் கூப்பிடற ஆயில்யன் அண்ணா, ஒரே ஒரு பதிவுக்குப் பின்னூட்டம் மட்டும் போட்டுட்டு தலைமறைவா இருக்கற அபிஅப்பா, சென்ஷி அண்ணா அப்பறம் கோபி அண்ணா, நம்ம ரீகன் அண்ணா, இதுல யாரயாவது விட்டிருந்தாலும் அவங்களுக்கும் சேர்த்து ஒன்னு சொல்லிக்கறேன்....!!என்னுடைய எல்லாப் பதிவுலக அண்ணாக்களுக்கும் என் இனிய ரக்க்ஷபந்தன் வாழ்த்துக்கள்+ நன்றிகள்....!!! :-))

பைபை..!!

ரயிலே...ரயிலே..ஒரு நிமிஷம்..!! ரதியைப் பார்க்க நிற்பாயா??

சின்ன வயசுல இருந்தே எனக்கு ஏன் எல்லாருக்குமே ரயில பார்க்கறது அதுல பயணம் செய்யறது பிடிக்கும் தானே ஆனா எனக்கு கொஞ்சம் அதிகமாகவே பிடிக்கும். சின்னக் குழந்தையா இருக்கும் போதே யாராவது ஊருக்குப் போகலாமானு கேட்டா நான் உடனே அது பக்கத்து ஊரா இருந்தாலும் சரி ட்ரெயின்ல தான் போகனும்னு சொல்வேனாம் அவ்ளோப் பிடிக்கும் ட்ரெயின.

அப்பறம் ஸ்கூல் படிக்கும் போது என் ஸ்கூலுக்குப் பின்னாடியே Railway station இருந்தது அதைத் தாண்டி ஒரு கோவிலும் இருந்தது. நான் கோவிலுக்குப் போறேன்னு அம்மாக்கிட்ட சொல்லிட்டு நானும் அப்பறம் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து அங்க போய் உட்கார்ந்து வந்து போற விதவிதமான மனுஷங்கள வேடிக்கைப் பார்த்துட்டு இருப்போம். எல்லாம் 5 மணி வரைக்கும் தான்,ஏன்னா அதுவரைக்கும் கரப்பான் பூச்சில இருந்து காட்டெருமை வரைக்கும் எது வந்தாலும் சமாளிச்சிரலாம் அதுக்குமேல ஆச்சுன்னா தேவையில்லாம பேப்பர்ல படிச்சது பக்கத்து வீட்ல சொல்லக் கேட்டதுன்னு ரயில பத்தின திகில் கதையெல்லாம் நியாபகத்துக்கு வந்து தொலைக்கும். அதனால 5 மணி ஆச்சுன்னா ஜீட் விட்ருவோம் வீட்டுக்கு.

இப்படி ரயிலுக்கும் எனக்குமான சினேகம் வளர்ந்துவர யார் கண் பட்டதோ தெரியல நான் காலேஜ் சேர்ந்தப் பிறகு ரயிலயேப் பார்க்கல‌. என்னடா இது இப்படி ஆயிடிச்சே நம்ம நிலைமைன்னு நினைச்சுக்கிட்டு இருந்தப்போது தான் நாங்க ஃபைனல் இயர்ல tour போகலாம்ன்னு முடிவு பண்ணாங்க‌. உடனே எனக்குள்ள இருந்த ரயில் ஆசை எழுந்து உட்கார்ந்தது எல்லார்க்கிட்டயும் சொல்லி(கெஞ்சி) ரயில்லப் போகலாம்னு சம்மதம் வாங்கிட்டேன். அவங்களும் சரி போய் தொலைன்னு ஒத்துக்கிட்டாங்க. அப்பறம் என்ன பயங்கர‌ ஜாலியா கேரளாவோட மழைய ஜன்னலோரமா ரசிச்சுகிட்டேப் போய்ட்டு வந்தாச்சு.

இனிமே எப்படி ரயில்லப் போறதுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்பத்தான் ஹைதராபாத்-ல training-னு மெயில் வந்தது "இவ பக்கத்துல இருக்கறக் கடைக்குப் போக சொன்னாலே, நீயும் வாம்மான்னு சொல்றவளாச்சே, இவ எப்படி‌ ஹைதராபாத் போகப்போறா?"-ன்னு அம்மா யோசிச்சுட்டு இருக்கும் போதே, ரயில்ல போறோம்ன்னு சொன்னவுடனே ரெடியாகி நின்ன என்ன அம்மா ஒருமாதிரி தான் பார்த்தாங்க‌. ஆனா அங்க போனப் பிறகு ஒரு மூனு மாசம் ரயில பார்க்கக்கூட முடியல.

அப்பத்தான் இன்னும் ஒரு மாசம் training-க்கு பேங்களூர் போங்கன்னு எல்லாரையும் தொரத்திவிட்டுட்டாங்க‌. ஹைய்யா ஜாலி ட்ரெயின்‍ல போகலாம்னு நினைச்சா என்னைத்தவிர எல்லாரும் பஸ்ல புக் பண்ணிட்டு நீ பஸ்லத்தான் வரனும், நீயில்லாம நாங்க போகமாட்டோம்னு ஒரே அன்புத் தொல்லை வேற‌. என்னப் பண்றதுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப் போதுதான் என் க்ளோஸ் ஃப்ரெண்டுக்கு பஸ் ட்ராவல் ஒத்துக்காது, அவ ட்ரெயின்ல தான் போகப் போறான்னு தெரிஞ்சது உடனே சாரி நான் அவளுக்குத் துணைக்குப் போறேன்னு சொல்லி ட்ரைன்ல ticket வாங்கிட்டேன்.

அப்பறம் தான் என் மரமண்டைக்கு ஒரு விஷயம் உறைத்தது. அது என்னன்னா பஸ்னா எல்லாரும் சேர்ந்துப் போகறதால என் loggage எல்லாம் சேர்த்து எடுத்துட்டு போய்டுவாங்க நான் ஃப்ரீயா போகலாம் ஆனா இப்ப ட்ரெயிங்கறதால என்னோட சுமைகளப் பூரா நானே சுமக்கற நிலைமை. ஆனால் என் ஃப்ரெண்ட் ஐடியாவா அவ லக்கேஜ கூரியர் பண்ணிட்டா. என்னோடத என்னப் பண்ணாலும் தீராது அது வேற விஷயம். ஏன்னா ஒரு சின்னக் குடித்தனம் பண்ற அளவு இருந்தது. எப்படியோ கஷ்டப் பட்டு கஜ்ஜிகூடா எக்ஸ்பிரஸ் பிடிச்சு பேங்களூர்க்குள்ள நுழைஞ்சாச்சு. ஆனா அதுவரைக்குமே நாங்க எந்த ஸ்டேஷன்ல இறங்கனும்னு ரெண்டு பேருக்குமே தெரியாது. எப்படியோ கஷ்டப்பட்டு மெஜஸ்டிக்ல இறங்கி ஆட்டோபிடிச்சி மடிவாலா போயிறங்கினா பஸ்ல போன கும்பல் வரவே இல்ல‌.

இப்படியெல்லாம் நான் ரயில்ல போக படாதபாடு பட்டுட்டு இருக்கும் போது தான் எனக்கு போஸ்டிங் லொகேஷன் சென்னைன்னு வந்தது. அடடா சென்னைல தான் நிறைய ட்ரெயின் இருக்குமே, இனிமே தினமும் அலைப்பாயுதே ஷாலினி மாதிரி ட்ரெயின்லயே போகலாம்னு நினைச்சு இங்க வந்தா ட்ரெயின் வாசனையே இல்லாத ஒரு இடத்துல போஸ்டிங் போட்டு என்ன பஸ்ல போய் கஷ்ட்டப்பட வெச்சுட்டான். ஆனா அந்த சமயத்துல தான் நான் நிறைய நல்ல விஷயங்களான பஸ்ல அடுத்தவங்க கால்ல ஏறி நிக்கறது எப்படி? ஃபுட் போர்ட்ல ட்ராவல் பண்றது எப்படி?ன்னு கத்துக்கிட்டேன். இந்த லட்சணத்துல நான் மொபைல வேற தொலைச்சிட்டேன். பொறுத்துப் பார்த்த என் அண்ணன் இனிமே நீ அங்க இருக்க வேண்டாம் வீட்டுக்கே வந்துடுன்னு சொல்லி அவனோடவே கூட்டிக்கிட்டு போய்ட்டான். இனிமே இவன் போற மாதிரி தான் நம்மளையும் கூட்டிக்கிட்டு போவான் நம்ம ட்ரெயின் ஆசை அவ்ளோத்தான்னு முடிவு பண்ணிட்டேன். அடுத்த நாள் காலைல ஆஃபிஸ் போக கிளம்பின என்ன வான்னு கூட்டிக்கிட்டு போனான் எங்க போறான்னு பார்த்தா railway station-க்கு பார்ரா நாம இவ்ளோ நாளா எதுக்கு ஆச பட்டோமோ அதுலயே இனிமே போகப் போறோம்ன்னு நினைச்சுகிட்டே ஜாலியா ஆஃபிஸ் வர ஆரம்பிச்சிட்டேன் . இனிமே என்ன அலைப்பாயுதே மாதவன் மாதிரி ஒருத்தன் வந்து " நீ அழகா இல்ல, நான் உன்ன லவ் பண்ணல. ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு",ன்னு dialogue பேச வேண்டியது தான் பாக்கி...!! :-))

நீ இல்லாத நாட்களில்..!!

அர்த்தமில்லா
வார்த்தைகளைக்
கோர்த்துக்
கவிதையாக்க முயல்கிறேன்...

வீட்டின் திண்ணைக்கும்
வாசலுக்குமான
தொலைவை உணர்கிறேன்...

கண்களுக்கும்
கன்னத்துக்குமான
இடைவெளியைக்
கண்ணீரால் நிரப்புகிறேன்...

அழகுக்காக வளர்த்த
நகங்களையும்
ஆசையாக வளர்த்த
நாயையும்
கடித்(ந்)துக் கொள்கிறேன்...

ஒலி உணராத
காதுகளும்
ஒளி உணராத
கண்களுமென
ஊமையாகித்திரிகிறேன்...

மனதுக்கும்
மூளைக்குமான
வித்தியாசத்தை
அதிசயமாக உணர்கிறேன்...

தோழிகளுக்கும் எதிரியாய்
உறவுகளுக்கும் தூரமாய்
வெறுக்கப்படுகின்றேன்...

கொல்லும் கனவுகளால்
புதைக்கப்பட்டு
மீண்டும் எழுப்பப்படுகின்றேன்..

பனிவிழும் இரவுகளில்
வியர்வை மழையில்
நனைந்து
உன் நினைவுகளால்
குளிர்காய்கிறேன்...


கோடைக்கால
மழைப் போல
திடுமென வெட்கிப்
பின் கன்னத்தின்
வண்ணம் களைகிறேன்...

உன் வீடு
கடந்தப் பிறகும்
தெருமுனைகளைத்
திருப்பிப்பார்த்து
நடக்கிறேன்...

மௌனத்திற்கு
வார்த்தைகளைத் தந்து
என் வளையலுக்கும்,
கொலுசுகளுக்கும்
மௌனத்தைப் பரிசலிக்கிறேன்..

வெட்கங்களை வேரறுத்து
விருப்பங்களுக்கு
விடுமுறை அளிக்கிறேன்...

இப்படி ஏதேதோ
எழுதத் தொடங்கி
எங்கோ
கரைந்துப்போகிறேன்
நீ இல்லாத நாட்களில்...!!

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-5

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா?? ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு.நீ என்னருகில்

இருக்கையில்

தள்ளித்தான்

அமர்கின்றன

என் வெட்கங்களும்

உன் விரல்களின்

மௌனங்களும்
இதுவரை இப்படி ஒன்றை அவள் உணர்ந்ததே இல்லை. சாதாரணமாகவே தமிழை விட மதுவிற்கு தைரியம் அதிகம். க‌ல்லூரி ப‌டிப்பு முடிந்து உட‌னே வேலையில் சேர மைசூருக்கு அழைத்த‌ப் போதும், பாஷைத் தெரியாத‌ அந்த‌ ஊரின் க‌டைக‌ளில் பேர‌ம் பேசி பொருட்க‌ள் வாங்கிய‌ போதும், ப‌யிற்சிக் கால‌ம் முடிந்து த‌னி ஒருத்தியாக‌ த‌மிழையும் அழைத்துக்கொண்டு சென்னையில் ந‌ல்ல‌ விடுதித்தேடி மூன்று மாத‌ம் ம‌ட்டும் அங்கிருந்து, பின் விடுதி வாழ்க்கைப் பிடிக்க‌வில்லை என்று த‌மிழ் சொன்னதற்காக வீடுத் தேடி குடிவந்து, இன்று வரை எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் தான் முன் நின்று தமிழை வழி நடத்தி, என இவ்வளவும் செய்தவள் இன்று யாரோ ஒரு மேனேஜ‌ர் அழைக்கிறார் என்று சொன்ன‌த‌ற்கா இவ‌ள் இப்ப‌டி ஸ்த‌ம்பித்து நிற்கிறாள் எனத் தமிழ் வியந்துப் போனாள்.ம‌துவிற்குமே இது புதிய‌தாக‌ தெரிந்த‌து. அவ‌ன் வேறு யாரோ அல்ல‌ ஆறு வ‌ருட‌ம் ப‌ழ‌கிய‌ ந‌ண்ப‌ன், அப்ப‌டியே யாரோ ஒருத்த‌னாக‌ இருந்தாலும் தான் என்ன‌?? எதற்காக‌ ப‌ய‌ப்ப‌ட‌ வேண்டும்?? அவ‌ள் ஒரும‌ன‌ம் இப்ப‌டி சொன்னாலும் ஏதோ ஒன்று அவ‌ளை ஆட்டுவித்த‌து. முதல்முறையாக உட‌ல் ந‌டுங்கிய‌து. 'ச்சே...என்ன‌ இப்ப‌டி பய‌ப்ப‌ட‌றோம்?? அவ‌ன் என்ன‌ ப‌ண்ணிட‌ப் போறான், மிஞ்சிப் போனா நான் செய்யற வேலைல‌ குறை சொல்லுவான். அவ்ளோ தானே போய் பார்க்க‌லாம்', ஒருவ‌ழியாக‌ ம‌ன‌தைத்தேற்றிக் கொண்டு அவ‌ன் கேபினை நோக்கி ந‌டந்தாள்.


'ரொம்ப‌ நாள் க‌ழிச்சு பார்க்க‌ப்போறேன். என்ன‌ சொல்லுவான், கோவ‌மா இருப்பானோ, இல்ல அதெல்லாம் மறந்திருப்பானோ?? ம்ம்ம் பார்க்க‌ற‌துக்கும் ஆள் முன்ன‌ விட‌ ந‌ல்லா தான் இருக்கான். ஒருவேளை கல்யாணம் ஆயிருக்குமோ?? அத‌க்கேட்க‌ ம‌ற‌ந்துட்டோமே, இல்ல வேற கேர்ள்ஃப்ரெண்டு கிடைச்சிருக்கும். அவ‌ன் எப்ப‌டி இருந்தா ந‌ம‌க்கென்ன‌??'


"மே ஐ க‌ம் இன்??"


"எஸ்..!!"


'அழ‌கான‌ வாய்ஸ் அவ‌னுக்கு', இது ம‌ட்டும் தான் அவ‌ளுக்குத் தெரிந்த‌து. அத‌ற்குப் பிற‌கு ந‌டந்த‌ அனைத்தும் க‌ன‌வோ என அவ‌ளை எண்ண‌ வைத்த‌து. "மிஸ். ம‌து", என்று ஆர‌ம்பித்துப் பேசிய‌வ‌ன் ஒரு இட‌த்தில் கூட‌ அவ‌ளைத் தெரிந்த‌தாக‌வோ, அவ‌ள் மீது கோவ‌மாக‌வோ காட்டிக்கொள்ள‌வில்லை. மிக‌ அழ‌காக‌ புது ப்ராஜெக்ட் ப‌ற்றியும் அதில் அவ‌ளின் வேலைப் ப‌ற்றியும் பேசிச் சென்றான். இடையிடையே அழ‌கான‌ சிரிப்பால் வேறு அவ‌ளைக் கொன்றான். அவ‌ள் க‌ண்க‌ளை அவ‌ளாலேயே ந‌ம்ப‌ முடிய‌வில்லை. 'எப்ப‌டி இவ‌னுட‌ன் வேலை செய்ய‌ப்போகிறோம்?' என நினைத்த‌வ‌ளின் எண்ணம் முழுவ‌தும் மாறியிருந்த‌து.


"ம்ம் சொல்லுங்க‌ ம‌து எங்க‌ த‌ங்கியிருக்கீங்க‌??",அவ‌ள் முழித்தாள்.


"த‌ப்பா எடுத்துக்காதீங்க. இது வரைக்கும் எப்படியோ தெரியாது. ஆனா, இந்த ப்ராஜெக்ட பொறுத்தவரை நீங்க‌, அதாவ‌து ந‌ம்ம‌ டீம் லேட் நைட் வொர்க் ப‌ண்ண‌வேண்டிவ‌ரும். அப்ப‌த்தான் இத‌ சிற‌ப்பா முடிக்க‌ முடியும்ன்னு நான் ந‌ம்ப‌றேன் அதான் கேட்டேன். ப‌க்க‌த்துல‌ தான் இருக்கீங்க‌னா ஒன்னும் பிர‌ச்ச‌னை இல்ல‌".


'அதான் இவ்ளோ சின்ன‌ வ‌ய‌சுல‌யே அவ‌ன் டெக்னிக்க‌ல் மெனேஜ‌ர் ஆகிட்டான். ச்சே கிரேட் டா நீ..!! அச்ச‌ச்சோ என்ன‌திது அவ‌ன‌ப் ப‌த்தி ந‌ல்ல‌வித‌மா நினைக்க‌ ஆர‌ம்பிச்சிட்டோம்?? அவ‌ன் ந‌ல்ல‌வ‌ன் தான்..!!', அவளின் இந்த மாற்றத்தை நினைத்துக்கொண்டு த‌னியாக‌ சிரித்தாள்.


"ஹே லூஸ்..என்ன‌ ஆச்சு உன‌க்கு?? போகும் போது ஏதோ பேயறைஞ்ச மாதிரி போன, இப்பத் தனியா சிரிச்சிக்கிட்டு வர‌,என்ன‌ சொன்னார் அரவிந்த்?"


"நிஜ‌மாவே ஹி ஈஸ் அ ஜென்டில்மேன்".


"யு மீன் அர்ஜீன்'ஸ் ஜென்டில்மேன்??".


"இல்ல, ஷங்கர்'ஸ் ஜென்டில்மேன்", சொல்லி சிரித்தாள் மது. ஏதோ நிறைய‌‌ நாள் க‌ழித்து அவர்கள் சிரிப்ப‌து போன்ற‌ உண‌ர்வு இருவ‌ருக்குமே ஏற்ப‌ட்ட‌து. இப்பொழுதெல்லாம் அவ‌ளுக்கு ஆஃபிஸ் வ‌ருவ‌து போவ‌து க‌ஷ்ட‌மாக‌வே தெரிவ‌தில்லை. மிக‌வும் ச‌ந்தோஷ‌மாக‌வே உணர்ந்தாள். அத‌ற்குக் கார‌ண‌ம் அரவிந்த் என்ப‌து அவ‌ளுக்குக் கூடுத‌ல் ம‌கிழ்சித் தந்த‌து.
'ச்சே.. அவ‌ன் கூட‌ அவ்ளோ நாள் இருந்தும் அவ‌ன‌ப் ப‌த்தித் த‌ப்பா நினைச்சிட்டோமே, அவ‌ன் எதையும் வெளிக்காட்டிக்காம எவ்ளோ ந‌ல்ல‌வ‌னா இருக்கான்..!!', அவனைப் பற்றி நினைக்க‌ நினைக்க‌ அவ‌ளுக்கு ம‌கிழ்ச்சியாக‌ இருந்த‌து. அத‌ற்குள் அவ‌ன் வந்து ஒருமாத‌ம் ஓடியிருந்த‌து. இந்த ஒருமாதம் எப்படி போனதென்று அவளால் நம்பவே முடியவில்லை. அநியாயமாக தான் அவனை வெறுத்ததிற்காக தன்னையே தனிமையில் திட்டிக்கொண்டாள். அவன் அவளை மது என்று அழைத்தப்போதெல்லாம் மனம் மகிழ்ந்தாள். தன் நண்பன் தனக்கு மறுபடியும் கிடைத்துவிட்டான், என்பதைத் தவிர அந்த மகிழ்ச்சிக்கு வேறெந்தக் காரணமும் இல்லை, எனத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள். தமிழும் அவளின் மகிழ்சிக்குக் காரணம் கேட்டு கேட்டு சலித்துவிட்டிருந்தாள்.
வாழ்க்கை இப்ப‌டியே போயிருந்தால் தான் க‌வ‌லையில்லையே, ஆனால் ""நான் நீ நினைப்ப‌துப் போல் இல்லை"", என வாழ்க்கைத் தன் விளையாட்டை ஆரம்பித்தது.
-வ‌ருவாள்

ஆழியிலே முக்குளிக்கும் அழகே

படம் : தாம்தூம்

ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி
முந்தானை படியேறவா மூச்சோடு குடியேறவா
உன் இடையோடு நடமாடும் உடையாக
நான் மாறி எந்நாளும் சூடேறவா
என் ஜென்மம் ஈடேறவா

ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் விம்மென்ற‌ க‌ன்ன‌த்தில்
தின்னென்ற‌ நெஞ்ச‌த்தில் இச்சென்று
இத‌ழ் வைக்க‌வா இச்சைக்கோர் இலை வைக்க‌வா
உன் உம் என்ற‌ சொல்லுக்கும் ம் என்ற‌ சொல்லுக்கும்
இப்போது த‌டை வைக்க‌வா
மௌன‌த்தைக் குடி வைக்க‌வா

அக‌ம் பாதி முக‌ம் பாதி அகம்பாயும் சுக‌ம் மீதி
ம‌றைத்தாலும் ம‌றைக்காது அழ‌கே
அடிவான‌ம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிளந்தாலும்
உனைப் போல இருக்காது அழகே
அடிவான‌ம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிளந்தாலும்
உனைப் போல இருக்காது அழகே

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-4

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??- ஒன்று , இரண்டு , மூன்று.உனக்கான

என் காதலை

இதயத்தில்

புதைத்து வைக்கவில்லை

விதைத்து வைத்திருந்திருக்கிறேன்

உன் பார்வை

மழைப் பட்டதும்

துளிர்த்துவிட்டதைப் பார்..!!


நம் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வரும், மாறாமல் இருப்பது வாழ்க்கையும் அல்ல. வாழ்க்கை மாறாமலும் இருக்காது. "மாறாது மாறாது என்கிற வார்த்தை மட்டுமே மாறாது" மற்ற எல்லாமே மாறக்கூடியதுதான். அப்படி ஒரு மாற்றம் தான் அவளை இன்று அலைக்கழிக்க வைக்கிறது.'ச்சே எல்லாம் இந்த தமிழால வந்தது...''இன்னும் எவ்ளோ நேரம் தான் அவ மேல பழிப்போடப் போற??'' அவ தானே அந்த மெரூன் ஷர்ட பாருன்னு சொன்னா' .'ஆமா அவ மெரூன் ஷர்ட தானே பாருன்னு சொன்னா,உன்னை யாரு பக்கத்துல பைக்ல போன அரவிந்த பார்க்க சொன்னா?? '


'ச்சே.. வர வர என் மனசே என் பேச்சக் கேட்க மாட்டேங்குது. ரூமுக்கு போனா அவ வேற கேட்பா என்ன சொல்றது..?'."மது ஏதாவது சாப்டறியா?""இல்லடி எனக்கெதுவும் வேண்டாம். நீ சாப்பிட்டு வா"


"என்னாச்சு, மது உடம்பு சரியில்லையா?? காலைல ரூம்ல இருந்து கிளம்பர வரைக்கும் நல்லாத்தானே இருந்த, அப்பறம் என்ன ஆச்சு??""அதெல்லாம் ஒன்னும் இல்லடி சும்மா தான் யோசிச்சிகிட்டு இருக்கேன்"."எதைப் பத்தி யோசிச்சிட்டு இருக்க?", கேட்ட தமிழை ஏற இறங்க பார்த்து மது, "எதப்பத்தி யோசிக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்"."இவள போய் கேட்டோம் பாரு", முணுமுணுத்துக் கொண்டே தமிழ் நகர்ந்துச் சென்றாள்.அடுத்த நாள் மகேஷ் குதித்து ஓடி வந்தான். "உனக்கு ஒரு விஷயம் தெரியுமா நமக்கு புது டெக்னிக்கல் மேனேஜர் வரப் போறாராம்"."அதுக்கென்ன இப்போ??",என்ற மதுவை ஆச்சர்யமாகப் பார்த்தான்.
"என்ன தமிழ்? ஏன் இவ இப்படி இருக்கா??"."தெரியல. கொஞ்ச‌ நாளா ஒரு மாதிரித் தான் இருக்கா. சரி நீ சொல்லு, அவர் பேர் என்ன? ஆள் எப்படி??"."ம்ம்ம் பேர் சிவராம கிருஷ்ணமூர்த்தி வயசு 50 இருக்கும்" , சொல்லிவிட்டு முறைத்துவிட்டு சென்றான்.


-----------------------------------------------------------------------------"ஹே இன்னைக்கு புது மேனேஜரோட மீட்டிங் இருக்கு, எல்லாரும் கான்ஃபரன்ஸ் ரூமுக்கு வந்துடுங்க‌", மகேஷ் தான் கத்திவிட்டுச் சென்றான்.சில சமயங்களில் சினிமாவில் நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பும், நிஜ வாழ்க்கையில் சினிமாவின் தாக்கமும் காணப்படும். பல சினிமாவில் பார்த்து மது நம்பாத காட்சி அவள் வாழ்க்கையில் நடந்தப் போது அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவள் கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை. அவள் காண்பது நிஜம் தானா, இல்லை இது கனவா, யாராவது இது நிஜம் என்று சொல்ல வேண்டும், என்று அவள் மனம் ஏங்கியது. யார் சொல்வார்கள் யாருக்குமே தெரியாதே. இது ஒரு புறமிருக்க, இப்பொழுது என்ன செய்வது அவனிடம் பேசலாமா, வேண்டாமா?? நாம் பேசினால் அவன் பேசுவானா, கோபத்தில் இருப்பானா,இல்லை மறந்திருப்பானா??', என்கிற பல கவலைகள் அவள் மனதில் சூழ காரணமான அவன், அமைதியாக‌ அந்த குளிரூட்டப்பட்ட கான்ஃபரன்ஸ் ஹாலில் நடுவில் உட்கார்ந்திருந்தான்.

"ஹே மது நல்லா தான்டி இருக்காரு இந்த‌ மேனேஜர், அதனால தான் அந்த மகேஷ் லூசு நம்மக்கிட்ட பொய் சொல்லிருக்கான். இவர் பேர் அரவிந்தாம், ம்ம்ம்", பெருமூச்சுவிட்டபடி நகர்ந்தாள்.

"அரவிந்த்" இந்த பேயரே அவளை என்னவோ செய்தது. எத்தனை முறை சொல்லிருக்கேன், "ஹே உன் பேர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு டா,""ஏன் டீ??""தெரியல ஆனா பிடிச்சிருக்கு".அவன் பெயர் மட்டுமல்ல அவனையே பிடிச்சிருந்தது. அவன் காதலை சொல்லும் வரை. 'அப்பறம் ஏன் அவனைப் பிடிக்கவில்லை?', இன்று வரை இந்த கேள்விக்கு மட்டும் அவளிடம் விடை இல்லை.

'ஒருவேளை அவன் காதல் சொன்ன காலம் தவறானதோ?? பின் எப்பொழுது சொன்னால் ஏற்றுக் கொண்டிருப்போம்?? ஒருவேளை இப்பொழுது..??', என்று மனதுக்குள் நினைக்கும் போதே அவள் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது. 'ச்சே என்ன பைத்தியக்காரத்தனம்? ஏன் இப்படி நினைத்தோம்?' என தன்னைத்தானே நொந்துக்கொண்டாள்.

இனி அடுத்தென்ன செய்வது என்ற கவலையே அவளைக் கொன்றது. 'இனி தினமும் அவனைப் பார்த்துத்தான் ஆக‌ வேண்டும். பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ அவனிடம் பேசித்தான் ஆக வேண்டும். அவன் கோபம் என் வேலைக்கு ஏதேனும் இடஞ்சலாக இருந்தால் என்ன செய்வது?பேசாம இந்த வேலைய விட்றலாமா? ச்சேச்சே மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தின கதையாகும். சரி இருந்து சமாளிப்போம், என்னப் பண்ணிடுவான் பார்ப்போம்', யோசித்துக்கொண்டே இருந்தவளுக்கு அப்போதுதான் ஒன்று உறைத்தது. 'என்னதிது அவன் நம்மக்கிட்ட பேசவே இல்ல என்னப் பார்த்தானானுக்கூட சந்தேகமா இருக்கு அப்பறம் ஏன் லூசு மாதிரி என்னென்னமோ நினைச்சிகிட்டு இருக்கோம்?'.

அதற்குள் அங்கு வந்த தமிழ் "ஹே மது..!! உன்னை மேனேஜர் கூப்பிடறார்" மது உறைந்து நின்றாள்.

-வருவாள்.

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-5

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-6

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-7

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது