பரிணாம வளர்ச்சிக்குப்பின் நான்

எல்லார்க்கும் சின்ன வயசில் இருந்தோ, இப்பவுமோ ஏதாவது ஒரு லூசுத்தனமான கெட்டப்பழக்கம் இருக்கும். எனக்கும் அப்படி ஒரு பழக்கம் இருந்தது, அது என்னனா நான் நடந்து வரும்போது அங்க யாரும் இல்லேனா ஓட ஆரம்பிச்சிடுவேன்(பயத்துல இல்ல). இதனால நிறைய முறை அம்மாகிட்ட திட்டு வாங்கிருக்கேன். வேகமா ஓடிவந்து சட்டுனு நிற்கத்தெரியாம சுவர்ல முட்டி நின்னதும் உண்டு. அப்பறம் அண்ணா மேல முட்டி அவன் என் மண்டைல‌ குட்டி நான் அழுததும் உண்டு.

இவ்ளோ நடந்தும் எனக்கு இந்த ஓடற ஆசை மட்டும் விடவே இல்ல. நான் காலேஜ் படிக்கும்போதும் அது என்ன தொடர்ந்துதுனா பார்த்துக்கோங்களேன். நான் காலேஜ், ஹாஸ்டல்‍ல தங்கிதான் படிச்சேன். எங்க ஹாஸ்டலும் காலேஜ் காம்பவுண்ட்குள்ள தான் இருக்கு,சோ நாங்க என்னச் சேட்டை பண்ணாலும் அது காலேஜ் வரைப் போகும். நான் 2-year படிக்கும் போது ஒரு ஞாயிற்றுக்கிழமை, மதிய சாப்பாட்டை முடிச்சிட்டு, நல்லா தூங்கலாம்னு ப்ளேன் பண்ணிக்கிட்டு இருந்த என்ன, என் ஃப்ரண்டு "வாடி கொஞ்ச நேரம் ground- ல போய் உட்கார்ந்துட்டு வரலாம்"-னு சொன்னா. அங்க stone bench-இருக்கும். அதோட வேப்பமரத்து காத்து வேற இன்னும் நல்லாவே தூக்கம் வரும்னு நானும் நம்பிப்போனேன்.

மாடி இறங்கினதுமே "நீ போயிட்டு இருடி, நான் இங்க ஒரு ஃப்ரண்ட பார்த்துட்டு வரேன்"-னு சொல்லிட்டு போயிட்டா. சரி நமக்கும் ஒரு தொல்லை விட்டுதுன்னு "யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க"ன்னு பாடிகிட்டே வந்தேன். அப்பத்தான் அதை கவனிச்சேன் ground-ல ஒரு ஈ, காக்கா இல்ல(பின்ன பேய்,பிசாசு மட்டும் முழிச்சிருக்கர மொட்டை வெயில்ல போனா அப்படித்தான் இருக்கும்). உடனே என் உள்ள இருந்த பி.டி.உஷா முழிச்சிகிட்டா.ஒரு முறை சுத்திப்பார்த்து கன்ஃபார்ம் பண்ணின்டு ஓட ஆரம்பிச்சேன், அவ்ளோ நேரம் அந்த பிசாசு எங்க இருந்ததுனு தெரியல, நான் ஓடும் போதா அது வரனும் :-(

அது என்னன்னு கேட்கறீங்களா?? அது ஒரு பெரிய்ய்ய்ய எலி. அச்சச்சோ அதை எங்கயாவது மிதிச்சிவெச்சி, அது மேனகா காந்தி கிட்டப்போய் கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டா என்ன பண்றதுன்னு?? எனக்கு ஒரே பயம். நான் எலிக்கு பயந்தேன்னு நினைச்சீங்களா அதான் இல்ல(அப்ப்ப்பா ஒருவழியா நம்பவெச்சாச்சு). பயத்துல பக்கத்துல இருந்த பென்ச்-ல வேகமா உட்காரப்போனேன், என் வேகத்துக்கு இந்த மூளைல உட்கார டிரைப் பண்ணி, அடுத்த மூளைல தான் இடம் கிடைச்சது. அப்பத்தான் அந்த அதி முக்கியமான, என் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட, என் ஓட்டத்தை நிறுத்திய, ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதுவேற ஒன்னும் இல்லீங்க அப்போதான் அங்க எங்க வார்டன் நின்னதையே நான் கவனிச்சேன். அவங்க மூஞ்சி அப்படியே மிளகாய் பழத்த வச்சி தேச்ச மாதிரி பயங்கரமா துடிச்சிகிட்டு இருந்தது.
"என்ன ஆச்சு எதுக்கு இப்ப அவ்ளோ வேகமா ஆள் வரது கூட தெரியாம ஓடின??",இப்படி ஒரு கேள்வி அது என்னப் பார்த்துக் கேட்டவுடனே, நான் என் சக்தியெல்லாம் ஒன்னுதிரட்டி மூச்சு வாங்க சொன்னேன் பாருங்க ஒரு பதில்,

"மேடம் அங்க முயல்"

"என்னது முயலா??"- னு அப்ப வாய பொளந்தது ஒருமாதிரியா என்ன பார்த்தது தான். நான் காலேஜ் முடிச்சி வெளியில வர வரைக்கும் அது அந்த பார்வைய மாத்தவே இல்லயே. இவ்ளோ பெரிய அவமானத்துக்குப் பிறகும் நீ ஓடனுமா??னு நான் என்னையே கேட்டுக்கிட்டு, எனக்குள்ள இருக்கற பி.டி. உஷா‍-வ தூங்க வெச்சிட்டேங்க‌..!! :-(

பி.கு: சரி தலைப்புக்கும் எழுதி இருக்கறதுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கறீங்களா??வால சுருட்டி வெச்சிகிட்டேன்-கறத இன்னும் டீசன்டா எப்படி சொல்றதுன்னு தெரியல‌...!! ;-)

35 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

ஈர வெங்காயம் said...

அம்மா தாயே,

கைய காலா நெனச்சுக் கெஞ்சி கேட்டுக்கறேன்....

தெரியாமா இந்தப் பக்கம் வந்திட்டேன்...

ஆள வுடுங்க சாமியோவ்வ்வ்....

ஆயில்யன் said...

எப்படி சொல்றதுன்னு தெரியல‌...!!

:)))))))))))

நிஜமா நல்லவன் said...

என்ன சொல்லுறதுன்னே தெரியல ஸ்ரீ...:))))

நிஜமா நல்லவன் said...

பின் குறிப்பு சூப்பர்!

M.Saravana Kumar said...

யப்பா... தாங்க முடியலடா சாமி..
:(

Ramya Ramani said...

ஹா ஹா ஹா :))

Sri said...

@ ஈர வெங்காயம்
//அம்மா தாயே,

கைய காலா நெனச்சுக் கெஞ்சி கேட்டுக்கறேன்....

தெரியாமா இந்தப் பக்கம் வந்திட்டேன்...

ஆள வுடுங்க சாமியோவ்வ்வ்....//

என்ன அண்ணா இப்படி சொல்லிட்டீங்க?? நீங்க இருந்து நான் எழுதின எல்லாத்தையும் படிச்சிட்டு தான் போகனும். யாரங்கே அண்ணன இழுத்து உட்காரவைங்க‌..!! ;-)
நன்றி...!! :-)

Sri said...

@ ஆயில்யன்
//எப்படி சொல்றதுன்னு தெரியல‌//

ம்ம்ம் பரவாயில்ல சொல்லுங்க அண்ணா...!! ;-)

Sri said...

@ நிஜமா நல்லவன்
//என்ன சொல்லுறதுன்னே தெரியல ஸ்ரீ...//
எதாவது சொல்லுங்க அண்ணா..!!
;-)

Sri said...

@ நிஜமா நல்லவன்
//பின் குறிப்பு சூப்பர்!//
அப்படியா?? ;-)
நன்றி அண்ணா..!! :-)

Sri said...

@ M.Saravana kumar
//யப்பா... தாங்க முடியலடா சாமி..
:(//
இதுக்கே இப்படி சொன்னா எப்படி?? இன்னும் எவ்ளோ இருக்கு அதெல்லாம் யார் படிப்பா,நீங்க தான்..!! ;-)
நன்றி...!! :-)

Sri said...

@ Ramya Ramani
//ஹா ஹா ஹா :))//
இந்த நாடு இன்னொரு பி.டி.உஷா-வ இழந்துடுச்சேனு கவலைப்படாம சிரிக்கறீங்களே ரம்யா..!! ;-)
நன்றி......!! :-D

naanal said...

நல்ல கெட்டப் பழக்கம் ஸ்ரீ ;-)

Sri said...

@ naanal
நீங்க சொன்னா சரி தான்கா..!! ;-)) நன்றி அக்கா...!! :-)

மங்களூர் சிவா said...

/
Labels: மொக்கை
/


Lable ல போட்டிருக்கிறதை நிரூபிச்சிட்டீங்க!

:)

Sri said...

@ மங்களூர் சிவா
//Lable ல போட்டிருக்கிறதை நிரூபிச்சிட்டீங்க!//

நிஜமாவா அண்ணா?? ;-)
நன்றி..!! :-)

M.Saravana Kumar said...

//இதுக்கே இப்படி சொன்னா எப்படி?? இன்னும் எவ்ளோ இருக்கு அதெல்லாம் யார் படிப்பா,நீங்க தான்..!! ;-)//

சொல்லிட்டீங்கல்ல..
கண்டிப்பா படிக்கிறேன்..
:)

நீங்க எழுதி தள்ளுங்க..

(விதி யார விட்டுது..)

M.Saravana Kumar said...

ஆனா சும்மா சொல்ல கூடாது..

மிக அருமையான் தலைப்பு..

"பரிணாம வளர்ச்சிக்குப்பின் நான்"

M.Saravana Kumar said...

நான் ஒரு அறிவியல் அல்லது SCI-FI கதை அல்லது பின் நவீனத்துவ கட்டுரை என்று தலைப்பை பார்த்த போது நினைத்தேன்..
:)

Lable பார்க்கவில்லை..
:(

கோவை விஜய் said...

புகைப்படப் பேழைக்கு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Sri said...

@ M.Saravana kumar
//சொல்லிட்டீங்கல்ல..
கண்டிப்பா படிக்கிறேன்..
நீங்க எழுதி தள்ளுங்க..
(விதி யார விட்டுது..)//
இப்படியெல்லாம் சொன்னா நாங்க உங்கள விட்டுடுவோமா நெவர்..!!
;-)

Sri said...

@ M.Saravana kumar
//ஆனா சும்மா சொல்ல கூடாது..
மிக அருமையான் தலைப்பு..
"பரிணாம வளர்ச்சிக்குப்பின் நான்"//

நன்றி..!!நன்றி...!!:-)

Sri said...

@ M.Saravana kumar
//நான் ஒரு அறிவியல் அல்லது SCI-FI கதை அல்லது பின் நவீனத்துவ கட்டுரை என்று தலைப்பை பார்த்த போது நினைத்தேன்..
Lable பார்க்கவில்லை.//

அதுக்குத்தான் அப்படி ஒரு தலைப்பு வச்சதே..!! ;-)
நன்றி..!! :-)

Sri said...

@ கோவை விஜய்
நன்றி அண்ணா..!! :-)

M.Saravana Kumar said...

என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.... சென்று பார்க்கவும்...
(இப்படிதான் என்கிட்டே சொன்னாங்க)

Sri said...

@ M.Saravana kumar
எனக்கு இன்பமா?? அதிர்ச்சியா இருக்கே..!! ;-)
நீங்க இன்ப அதிர்ச்சி-னு சொன்ன உடனே எனக்கு இது தான் ஞாபகம் வந்தது...!! :-))

M.Saravana Kumar said...

//எனக்கு இன்பமா?? அதிர்ச்சியா இருக்கே..!! ;-)
நீங்க இன்ப அதிர்ச்சி-னு சொன்ன உடனே எனக்கு இது தான் ஞாபகம் வந்தது...!! :-))//

குறும்பு....

ஜி said...

:))))))

அப்போ வாலோட எடுத்த ஃபோட்டோவ போட்டிருக்கலாமே... ;)))

Sri said...

@ ஜி
//அப்போ வாலோட எடுத்த ஃபோட்டோவ போட்டிருக்கலாமே//
அதை மாப்பிள்ளைக் கிட்டதான் காட்டுவேன்னு அம்மா பத்திரமா வெச்சிருக்காங்க‌..!! ;-)

நன்றி அண்ணா..!! :-))

Sri said...

@ M.Saravana kumar

நன்றி..!! :-)

M.Saravana Kumar said...

//அதை மாப்பிள்ளைக் கிட்டதான் காட்டுவேன்னு அம்மா பத்திரமா வெச்சிருக்காங்க‌..!! //

எனக்கு மட்டும் ஒரே ஒரு தடவ, அந்த போட்டோவ காட்டுங்க.. நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன்..
:) :) :)

Sri said...

@ M.Saravana kumar
//எனக்கு மட்டும் ஒரே ஒரு தடவ, அந்த போட்டோவ காட்டுங்க.. நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன்..//

அட நீங்க வேற, எனக்கே காண்பிக்க மாட்டேங்கிறாங்க‌..!! ;-))

M.Saravana Kumar said...

சரி சரி.. நான் நம்பிட்டேன்..

Sri said...

:-))

cheena (சீனா) said...

கதயும் புரில - மறுமொழிகலும் புரில - மொத்தத்தில மொக்கையர் திலகம் பட்டம் குடுத்துட வேண்டியது தான்

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது