காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-1

"ஏய் எழுந்திருடீ மணி ஏழாகுது. இன்னைக்கு வெள்ளிக்கிழமை வேற கோவிலுக்குப் போகனும். அம்மா நேற்றிலிருந்து நாலுமுறை கால் பண்ணிட்டாங்க‌, ஆடி வெள்ளி கோவிலுக்குப் போ-னு. நீ என்னடானா இன்னும் தூங்கற‌" தமிழ் கத்தியதில் வேறு யாராக இருந்தாலும் எழுந்திருப்பார்கள், ஆனால் மது புரண்டு படுத்தாளே தவிர எழவில்லை. இது அவளுக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான், தினமும் அவளை எழுப்புவது தமிழ் தான். இது இன்று நேற்றல்ல கடந்த 5 வருடமாக, என்று அவளை முதன்முதல் சந்தித்தாளோ அன்றிலிருந்து.

தமிழும், மதுவும் கல்லூரி தோழிகள். தமிழ் தனது பள்ளிக்கல்வியை அவள் கிராம பள்ளிக்கூடத்தில் முடித்து முதன்முதலாக நகரத்தில் காலெடுத்து வைத்தது அவளின் கனவான பொறியியல் படிப்பிற்காக தான். மது திருச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அவளுடைய மேல்நிலை வகுப்பை முடித்து அவளும் அதே கல்லூரியில் சேர்ந்தாள். அந்த கல்லூரியில் அவர்களின் முதல் சந்திப்பே சுவாரசியமானது. முதன்முதலில் வீட்டைப் பிரிந்த சோகத்தில் மது அழ அன்று அவளைத் தேற்ற வந்தவள் தான் தமிழ். நகர சூழலில் வளர்ந்த மதுவிற்கும், தமிழுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் வந்தாலும் அவை அனைத்தும் புது ஆற்றுவெள்ளம் பழைய அழுக்குகளை அடித்துச் செல்வது போல் தமிழின் பொறுமையாலும், அன்பாலும் அடித்துச் செல்லப்பட்டன‌. இப்படியே 4 வருட படிப்பையும் முடித்து கேம்பஸில் தேறி இதோ நல்ல கம்பெனியில் வேலையும் சேர்ந்தாயிற்று. ஆனாலும் மதுவிற்கு எல்லாமே தமிழ் தான். இப்படி சோம்பேறி தனமாக அவள் இருக்கும் போது, சரியாக சாப்பிடாத போது, அவளுக்கு வரும் சின்ன சின்ன பிரச்சனைகளை தீர்க்கும் பொழுதும் தமிழ் நட்பு என்பதையும் தாண்டி மதுவுக்கு தாயாக தெரிவாள்.

இன்றும் அப்படிதான் ஆடி வெள்ளி கோவிலுக்கு போக வேண்டும் என்று அவளுக்கு தமிழ் ஒரு பத்து முறை மதுவின் அம்மா ஒரு நாலு முறை ஞாபகப்படுத்தியும் தூங்கும் அவளை என்ன செய்ய?
"ஹே மது எழுந்திருடீ மணியாச்சு ஆஃபிஸ்‍ ல வேலை வேற நிறைய இருக்கு சீக்கிரம் போகனும்" கொஞ்சம் விட்டிருந்தால் அழுதிருப்பாள் நல்லவேளை அதற்குள் மது எழுந்துவிட்டிருந்தாள்.

"மேடம் சீக்கிரம் கிளம்புங்க கோவிலுக்கு போகனும்".

"அய்யோ சரிடீ இதயே நீ எத்தன தடவ தான் சொல்லுவ‌??" தமிழ் முறைத்தாள்.

"சரி சரி கிளம்பறேன் முறைக்காத‌".

"இந்த பிள்ளையார் கோவிலுக்கு தான் அவ்ளோ அவசரமா என்ன கிளப்பினியா??".

மது கேட்ட கேள்வி அவளை எரிச்சலூட்டியது இருந்தும் பேசாமல் வந்தாள் மது எப்பவுமே இப்படித்தான் என்பது அவளுக்கு தெரியும்.

"ஏன்டீ உன்ன பார்த்தா ஒரு எம்.என்.சி-ல வொர்க் பண்ற மாதிரியா இருக்கு??"

மது இப்படி திடீரென கேட்டதும் தமிழுக்கு புரியவில்லை. ஏற்கனவே தமிழுக்கு தான் கிராமத்தில் பிற‌ந்து,வளர்ந்தவள் என்பதால், அவர்களுக்கே உரிய கூச்சமும், தாழ்வு மனப்பான்மையும் அதிகம். இதில் இவள் வேறு இப்படி கேட்டதால் கொஞ்சம் பதறி தான் போனாள். இருந்தாலும் எதற்கு அப்படி சொன்னாள் என்றறிய, "ஏன்டீ என்ன ஆச்சு??" என்றாள்.

" மாரியாத்தா கோவில்ல கூழு ஊத்த போறவ மாதிரி அதென்ன டீ அவ்ளோ குங்குமம்?? இப்படியே ஆஃபிஸ் வர போறியா??" என்றாள். கொஞ்சம் சிரித்தவள் " தொடைச்சு தான் விடேன்" என்றாள். மது துடைத்துவிட்டு கொண்டிருந்தாள் " ஹே!! அங்க பாரேன்" தமிழ் தான் கத்தினாள். அங்கே ஒரு மெரூன் கலர் ஷர்ட் போட்ட ஒருவன் நின்றுகொண்டிருந்தான். 'இவன் யார்?? தெரிந்த முகமாகவே இல்லயே?! இவள் இப்படி ஒருவனை இதுவரை காட்டியதே இல்லயே'. மதுவின் குழப்பம் தான் அதிகமாகியது. ஆனால் தமிழ் எதையும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. அவள் சொல்வதாகவும் இல்லை. இவளே கேட்டாள் "ஏய் எதுக்கு டீ கத்தின??"

"அவன் மெரூன் கலர் ஷர்ட் போட்டுருக்கான் டீ"

"அதுக்கென்ன இப்போ?? "

"உனக்கு தான் மெரூன் கலர் ஷர்ட்னா ரொம்ப பிடிக்குமே!!!"

அவளைக் கொல்லவேண்டும் போல் இருந்தது "ஹே லூஸ்..!! இதுக்குதான் அப்படி கத்தினீயா?? " என்றாள் கோபத்தை அடக்கியபடி அடுத்து நடக்கப்போவது தெரியாமல்.


-வருவாள்.

பி.கு: இது 110% கற்பனைக் கதை. :-)

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-2


காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-3

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-4

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-5

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-6

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-7
26 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

M.Saravana Kumar said...

"பி.கு: இது 110% கற்பனைக் கதை."


சரி சரி நான் நம்பிட்டேன்..
:)


அட நீங்களும் நம்பிடீங்க..

நிஜமா நல்லவன் said...

பதிவை தமிழ்மணத்திற்கு அனுப்பியாகிவிட்டது. ஆனா இன்னும் படிக்கலை:)இனிமேல் பதிவு போட்டா அப்படியே தமிழ்மணத்திற்கு அனுப்பிடுங்க.

ஆயில்யன் said...

//பி.கு: இது 110% கற்பனைக் கதை. :-)///

நம்புகிறோம் !

நம்பிக்கைத்தானே வாழ்க்கை :)

ஆயில்யன் said...

//மாரியாத்தா கோவில்ல கூழு ஊத்த போறவ மாதிரி அதென்ன டீ அவ்ளோ கும்குமம்?? இப்படியே ஆஃபிஸ் வர போறியா??" என்றாள்.//

:(

ஆயில்யன் said...

//உனக்கு தான் மெரூன் கலர் ஷர்ட்னா ரொம்ப பிடிக்குமே!!!"//

அப்படி என்னதான் காண்ட்ரஸ்ட் இருக்கோ அந்த மொரூன் கலர்ல பயபொண்ணுங்க பாதிக்குமேல உசுரையே வைச்சுருக்க்காங்க போல!

தமிழ் பிரியன் said...

தொடர்கதைப் புயலா?..... :) வாழ்த்துக்கள்.
////கும்குமம்/// ????

நிஜமா நல்லவன் said...

/
பி.கு: இது 110% கற்பனைக் கதை. :-)
/

கொஞ்சம் எக்ஸ்ட்ட்ரா கற்பனையா இருந்தாலும் ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீ. அடுத்த பாகம் எப்போ?

இத்யாதி said...

என்னம்மா கதை எழுத ஆரம்புச்சுடீங்க.. .. தொடர் கதையா?!..
'தமிழ்' பாத்திரப் பெயருக்கு நன்றி... 'ழ' தமிழுக்கு அழகு... ஆகா! 'அழகு' யில் கூட 'ழ' இருக்கு...

ஸ்ரீ said...

பி.கு: இது 110% கற்பனைக் கதை. :-)

அப்படியா?

sathish said...

அட, கதை கூட நல்லா எழுதுறீங்களே! தொடரட்டும் :)

Sri said...

@ M. Saravana kumar
அட நம்புங்க நிஜம்மா இது கற்பனைக் கதை தான்.:-)
நடந்தத எழுதற பாக்கியம் எனக்கில்ல‌..!! :-(
நன்றி...!! :-)

Sri said...

@ நிஜமா நல்லவன்
நன்றி அண்ணா...!! :-)

Sri said...

@ ஆயில்யன்
நீங்களாவது நம்பினீங்களே நன்றி அண்ணா...!! ;-)

Sri said...

@ ஆயில்யன்
:-((((
ஏன் என்ன ஆச்சு அண்ணா சோகம்??

Sri said...

@ ஆயில்யன்
அட உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?? ;-)

Sri said...

@ தமிழ் பிரியன்
//தொடர்கதைப் புயலா?//
அச்சச்சோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணா யாரோ உங்ககிட்ட தப்பா சொல்லிருக்காங்க‌..!! ;-)
நன்றி அண்ணா...!! :-)

Sri said...

@ நிஜமா நல்லவன்
எக்ஸ்ட்ட்ரா கற்பனையா?? குறைச்சிக்கறேன் அண்ணா..!! ;-) (நீங்களாவது இது கற்பனை-னு நம்பினீங்களே..!! :-))
நன்றி அண்ணா...!! :-)

Sri said...

@ இத்யாதி
ஆமா அண்ணா தொடர்கதை தான்..!!
நன்றி அண்ணா...!! :-)

Sri said...

@ ஸ்ரீ
ஆமா அண்ணா...!! :-)
நன்றி...!! :-)

Sri said...

@ sathish
நிஜம்மாவா?? ;-)
நன்றி அண்ணா...!! :-))

M.Saravana Kumar said...

//@ M. Saravana kumar
அட நம்புங்க நிஜம்மா இது கற்பனைக் கதை தான்.:-)
நடந்தத எழுதற பாக்கியம் எனக்கில்ல‌..!! :-(
நன்றி...!! :-)//

கூடிய சீக்கிரம் அந்த பாக்கியம் கிடைக்க வாழ்த்துக்கள்.
;)

Sri said...

@ M. Saravana kumar
இத பார்த்தா வாழ்த்து மாதிரி தெரியல‌..!! ;-)

M.Saravana Kumar said...

நிச்சயமா மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..
நம்புங்க..
:)

Alb said...

கற்பன.. நம்பிட்டோமுங்கோ ...!! ;)

Sri said...

@ M.Saravana kumar
நன்றி...!! :-)

Sri said...

@ Alb
நம்பினதுக்கு நன்றி..!! :-)

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது