உன்னைத் தேடும் கண்கள்

நெற்றிக்கு வைக்க
வேண்டிய பொட்டை
நெஞ்சுக்கு
வைக்கும் பொழுது

ஓர வகிடை மாற்றி
நேர் வகிடு
எடுக்கும் பொழுது

மயில் கோலம்
போட நினைத்து
மறந்து வெறும்
புள்ளிகளோடு
எழும் பொழுது

என் பெயர் சொல்லி
தோழி அழைக்கும்
போதெல்லாம்
நீ அழைத்ததாக‌
மகிழ்ந்த பொழுது

தண்ணீருக்காக
ஆற்றங்கரைக்கு சென்று
வெற்றுக் குடத்தோடு
வீடு திரும்பும்
பொழுதுகளில் எல்லாம்

ஏனோ
உன்னைத் தேடும்
என் கண்கள்

32 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

M.Saravana Kumar said...

யாரையோ தேடுகிறீர்கள் போலும்..!!

Sri said...

அப்படியெல்லாம் இல்ல. :-)
சும்மா தமிழ்மணம்-ல சேர்க்க எழுதினது...!!

M.Saravana Kumar said...

சும்மா ஒரு பதிவா? ok

நல்லவேளை இந்த தடவ அண்ணா-னு கூப்பிடல..
நன்றி..
இனிமேலும் கூப்பிடமாட்டீங்கனு நம்பறேன்..

:)

Sri said...

@ M.Saravana kumar
நன்றி வருகைக்கு..!! :-)

M.Saravana Kumar said...

கவிதையை இப்போதுதான் பதிவிட்டிருக்கிறீர்கள்..
நல்லா இருக்கு கவிதை..
:)

இத்யாதி said...

அவ்வளவாக நல்ல இல்லை ஸ்ரீ!!... 'இதெல்லாம் என்னடா' அளவு கூட இல்லை.... :(

Sri said...

நன்றி சரவணகுமார்...!! :-)

Sri said...

@ இத்யாதி
முதலில் தமிழ்மணத்தில் சேர்வதற்காக தலைப்பு மட்டும் போட்டேன். அப்பறம் ஏதாதவது இருக்கட்டுமே என்றுதான் இந்த கவிதை எழுதினேன். அவசர கோலம் அதான். அடுத்தமுறை நன்றாக எழுதுகிறேன். நன்றி இத்யாதி..!! :-)

இத்யாதி said...

தமிழ்மணத்தில் சேருவது குறித்து கூறுவது இயலுமா

Sri said...

@ ithyadhi
plz use this link : http://www.tamilmanam.net/user_blog_submission.php

ஆயில்யன் said...

//மயில் கோலம்
போட நினைத்து
மறந்து வெறும்
புள்ளிகளோடு
எழும் பொழுது
//

அக்கா இந்த வரிகள் சாதரணமாக இருந்தாலும் கூட சூப்பரா இருக்கு அக்கா!

நல்லா இருக்கு அக்கா உங்க கவிதை!:))

Sri said...

@ஆயில்யன்
நன்றி அண்ணா..!! :-)

சென்ஷி said...

முதல் மூணு பாரா சூப்பர்.... :))

அப்புறம் ஒண்ணுமே எழுதாம டெஸ்ட் போட்டாக்கா தமிழ்மணம் வேணும்னா ஏத்துக்கும். வந்து பார்த்து ஏமாந்து போற எங்களையும் கொஞ்சம் மனசுல வச்சு அதுலயும் ஏதாவது எழுதியிருக்கலாம். :((

இனிமேல் நிறைய கவிதைகள் எழுதுவீர்கள் என்று நம்பிக்கையில்....

Sri said...

@ சென்ஷி
நன்றி அண்ணா முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்..!! :-)
நிச்சயம் எழுதுகிறேன்..!! :-)

J J Reegan said...

// நெற்றிக்கு வைக்க
வேண்டிய பொட்டை
நெஞ்சுக்கு
வைக்கும் பொழுது

ஓர வகிடை மாற்றி
நேர் வகிடு
எடுக்கும் பொழுது

மயில் கோலம்
போட நினைத்து
மறந்து வெறும்
புள்ளிகளோடு
எழும் பொழுது //

என்னம்மா தங்கச்சி !

முதல் மூணு பாராவ கலக்கலா எழுதியிருக்க...

Sri said...

@ JJ Reegan
நன்றி அண்ணா..!! :-D

தமிழ் பிரியன் said...

வாழ்த்துக்கள் ஸ்ரீ! அவசர கவிதையே அழகா இருக்கும் போது பொறுமையா எழுதினா சூப்பரா இருக்குமே... தொடருங்கள் சகோதரி.. :)

Sri said...

@ தமிழ் பிரியன்
நன்றி அண்ணா..!! :-))

நவீன் ப்ரகாஷ் said...

//நெற்றிக்கு வைக்க
வேண்டிய பொட்டை
நெஞ்சுக்கு
வைக்கும் பொழுது //

பொட்டு நெஞ்சுக்குள் இருக்கும் அவருக்காக இருக்குமோ..?? :)))

Sri said...

@ நவீன் ப்ரகாஷ்
//பொட்டு நெஞ்சுக்குள் இருக்கும் அவருக்காக இருக்குமோ..?? //
ம்ம்ம் இருக்கலாம் அண்ணா.எதுக்கும் என் கவிதை நாயகி கிட்ட கேட்டு சொல்றேன்..!! ;-)
நன்றி அண்ணா..!! :-)

naanal said...

"தப்பு ஒண்ணும் இல்லை,
பயப்பட தேவை இல்லை
காதல் வந்த வரும் சுவடு புள்ளை " னு Autograph ல வர பாட்டு தான் நினைவுக்கு வந்தது உங்க கவிதையை
படித்த பிறகு. ;)

Sri said...

@ naanal
கரெக்டா சொல்லுங்க‌ அக்கா ஆட்டோகிராஃப் ஞாபகம் வந்ததா??இல்ல உங்க‌ ஆட்டோகிராஃப் ஞாபகம் வந்ததா?? ;-)
நன்றி...!! :-)

naanal said...

ஆஹா நானே வாய் கொடுத்து மாட்டிக்கிட்டேனா? ;-)
அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை ஸ்ரீ.. உங்க கவிதை படிச்ச உடனே அந்த பாட்டு ஞாபகம் வந்துது.. :)

Sri said...

@ naanal
:-))) நன்றி அக்கா...!! :-)

naanal said...

:)

Sri said...

@ naanal
:-)))

மங்களூர் சிவா said...

இன்னொரு கவுஜாயிணியா!?!?

தாங்குமா தமிழ்மணம்!?!?!?
:))

மங்களூர் சிவா said...

/
சென்ஷி said...

இனிமேல் நிறைய கவிதைகள் எழுதுவீர்கள் என்று நம்பிக்கையில்....
/

யோவ் சென்ஷி இப்பிடி ஏத்தி விடறதே உனக்கு வேலையா போச்சுய்யா

:)

Sri said...

@ மங்களூர் சிவா
//இன்னொரு கவுஜாயிணியா!?!?

தாங்குமா தமிழ்மணம்!?!?!?//
என்ன அண்ணா நீங்க இவ்ளோ பயப்படற அளவுக்கா எழுதீருக்கேன்??
;-)

Sri said...

@ மங்களூர் சிவா
அவர ஏன் அண்ணா திட்றீங்க‌??
பாவம் ஏதோ தெரியாம செஞ்சிட்டார்..!! ;-)
நன்றி அண்ணா..!! :-)

Divya said...

மிக அழகான தேடல்......கவிதை!!

மிகவும் ரசித்தேன் ஸ்ரீ!!

Sri said...

@ Divya

அப்படியா அக்கா?? :-))
நன்றி..!! :-))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது