திண்ணை

என்னையும் ஒரு ஆளா மதித்து இந்த தொடர் விளையாட்டுக்கு அழைத்த ஸ்ரீ அண்ணாவிற்கு நன்றி. திண்ணையை பற்றி எழுதனும் ஆனா உண்மையா எங்க வீட்ல திண்ணை இல்ல ஏன்னா நான் பிறந்தது,வளர்ந்தது,படிச்சது எல்லாம் வெவ்வேறு இடங்களில் கிட்டதட்ட நாடோடி மாதிரி.அடிக்கடி வீடு மாற்ற வேண்டிய நிர்பந்தம்,அதுமட்டுமில்லாமல் நாங்க இருந்ததெல்லாம் நகர்புறம் என்பதால் திண்ணையோடு வீடு கிடைக்கல. ஏன்னா அந்த திண்ணையையும் ஒரு அறையாக மாற்றி வாடகைக்குவிட்டிருந்தார்கள்.

அப்போ எப்படி திண்ணையை பற்றி எழுதறதுன்னு யோசிச்சிகிட்டு இருந்த போதுதான் ஞாபகம் வந்தது என்னனா எல்லா தமிழ்,தெலுங்கு மற்றும் சில கிராமத்து கதை சொல்ற மொழி படங்கள்ள வர மாதிரி ஹீரோயின்(?!) சிட்டி-ல இருப்பா ஆனா அவ பாட்டி வீடு கிராமத்துல இருக்கும். அவ எதாவது விடுமுறைனா அந்த கிராமத்துக்கு போயிடுவா.இப்ப புரிந்ததா நான் என்ன சொல்லவரேன்னு?? கரெக்ட் அந்த ஹீரோயின் மாதிரி தான் நானும் லீவ்-னா பாட்டி வீட்டுக்கு போயிடுவேன்.

அது ஒரு அழகான ஓட்டு வீடு,வாசல ஒட்டி ரெண்டு பெரிய திண்ணை. ஊருக்கு போனா அந்த திண்ணைதான் எங்க(என் அண்ணாவுக்கும்) உலகம். ஒரு திண்ணைல ஏரோப்ளேன் தாயக்கட்டம் இருக்கும் அது எப்படி விளையாடுறதுன்னு எனக்கு இன்னைக்கு வரைக்கும் தெரியாது.நான் அப்போ சின்ன பொண்ணுங்கறதால அம்மா எனக்காக விளையாடுவாங்க. ஆனா அண்ணா காய வெட்டணும்னு மட்டும் எனக்கு தெரியும். அவன் காய வெட்டிட்டு என்னோடத வேகமா உள்ள கொண்டு போயிடுவேன். என் காய அவன் வெட்டிட கூடாதில்ல அதுக்காக. அதையும் மீறி அவன் வெட்டினா ஒன்னு சண்டை நடக்கும்(எனக்கும்,அவனுக்கும் தான்) இல்ல ஆட்டத்த களைச்சிட்டு ஓடிடுவேன். அவன் பாவம் அழுவான் இல்ல தாத்தாகிட்ட சொல்லுவான். தாத்தாகிட்ட சொன்னா ரெண்டு பேருக்கும் சமமான தண்டனை அதாவது திண்ணைல ஏறி 4 தோப்புக்கரணம் போடனும். அதுக்கு பயந்து அவன் சொல்லமாட்டான்.அதேமாதிரி என் அம்மா, பெரியம்மா'ஸ், சித்தி, மாமா'ஸ்(கொஞ்சம் பெரிய்ய்ய்ய குடும்பம் தான்) எல்லாரையும் வளர்த்தது அந்த திண்ணை தான். அவங்கள்ளாம் சின்னவங்களா இருக்கும்போது அந்த திண்ணைல எல்லாரையும் உட்கார வெச்சிட்டு பாட்டி சமைக்க போயிடுவாங்களாம். ஆனா இவங்க எல்லாம் ரொம்ப சமர்த்தா அந்த திண்ணைல உட்கார்ந்து போறவங்க வரவங்கள வேடிக்கைப் பார்த்துகிட்டு இருப்பாங்களாம். தூங்கும் போதும் அந்த திண்ணைல படுத்து தூங்குவாங்களாம் தூக்கத்துல புரண்டு விழுந்தா மறுபடியும் ஏறி கடைசியா போய்(திண்ணையின் இன்னொரு ஓரத்தில்)படுத்துப்பாங்களாம். இப்படியே ஒருத்தரொருத்தரா விழுந்து எழுந்து போய் படுத்து காலைல எழுந்திரிக்கும்போது பார்த்தா அவங்க படுத்த இடம் ஒன்னும் எழற இடம் ஒன்னுமா இருக்குமாம். இப்படி நிறைய சம்பவங்கள் பாட்டி சொல்வாங்க.

இதே அளவு நெருக்கம் எனக்கும்,திண்ணைக்கும் உண்டு. நிலா இரவில் பாட்டி கதை சொல்லி சாதம் ஊட்ட கால் நீட்டி நான் கேட்டதும் அந்த திண்ணையில் தான். அம்மா திட்டினா காலிடுக்கில் முகம் புதைத்து அழுத்தும் அந்த திண்ணையில் தான். அண்ணா கூட சண்டை போட்டு கோபத்துல சாப்பிடாம நான் உடகார்ந்திருந்ததும் அந்த திண்ணையில் தான். கோலம் போட,பூ கட்ட நான் கத்துக்க இடம் கொடுத்ததும் அந்த திண்ணைதான். மழை பெய்யும் போது வசதியா ஏறி நின்னுகிட்டு காலை மட்டும் மழைல நனைத்து திண்ணை முழுதும் நடந்து, அதை நனைத்ததற்காக அடி வாங்கியதும் அந்த திண்ணையில் தான். நான் நானாகியதும் அந்த திண்ணையில் தான். சிலநாள் நான் ஒதுங்க பலநாள் இடம் கொடுத்ததும் அந்த திண்ணை தான்."நான் திண்ணைய புடிச்சி நடந்த போது நீ என்னய புடிச்சி நடந்தவ"-னு என் அண்ணன் திமிரா சொல்லிக்க காரணமா இருக்கறதும் அந்த திண்ணை தான்.

"என்னோட சந்தோஷம், துக்கம் ரெண்டையுமே இந்த வீடு பார்த்திருக்கு" அப்படின்னு காக்க காக்க படத்துல ஜோதிகா சூர்யா கிட்ட ஒரு வீட்ட காண்பிச்சு சொல்வாங்களே அதேமாதிரி நாளைக்கு என் ஆத்துக்கார(கணவர்) கூட்டிட்டு போய் நான் அந்த திண்ணைய காண்பிச்சாக்கூட ஆச்சர்யப்பட்றத்துக்கில்ல. ஏன்னா அந்த அளவு இந்த திண்ணை என் வாழ்க்கைல ஒரு அங்கமாவே இருந்திருக்கு.ஏதோ எனக்கு ஞாபகம் வந்தத சொல்லிட்டேன் எப்படி இருக்குனு நீங்க சொல்லுங்க.

நான் கூப்பிடும் இரண்டு பேர்:

1. எழில் பாரதி.24 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

Ithyadhi said...

கிராமத்து வாசம் அறிய பிள்ளை நான்...... இனியும் அந்த வாசத்தை சுவாசிக்க அடுத்த ஜென்மம் வரை தவம் இருக்க வேண்டும்... ஹ்ம்ம்!!!

ஸ்ரீ said...

Eppadiyo kudutha velaya correcta mudichittenga. Very gud :)

sathish said...

good one!! well written Sri!

தமிழ் பிரியன் said...

திண்ணை நினைவுகள் அழகா இருக்கு... :)
///கோலம் போட,பூ கட்ட /// மெய்யாலுமா?... ;)

தமிழ் பிரியன் said...

///சிலநாள் நான் ஒதுங்க பலநாள் இடம் கொடுத்ததும் அந்த திண்ணை தான்.///
( Culture )Still....... ;(

Sri said...

@ ithyadhi
//கிராமத்து வாசம் அறிய பிள்ளை நான்...... இனியும் அந்த வாசத்தை சுவாசிக்க அடுத்த ஜென்மம் வரை தவம் இருக்க வேண்டும்... ஹ்ம்ம்!!!
//

அடுத்த ஜென்மம் வரைக்கும் ஏன் போகனும்?? நல்ல கிராமத்து பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க அண்ணா. கிராமத்துல வாழ்ந்த மாதிரியும் ஆச்சு, மாமியார் வீட்ட பார்த்த மாதிரியும் ஆச்சு. ;-)
கவலைய விடுங்க அண்ணா..!! :-)

Sri said...

@ ஸ்ரீ
//Eppadiyo kudutha velaya correcta mudichittenga. Very gud :)//

Thank you anna..!! :-)

Sri said...

@ sathis
//good one!! well written Sri!//

Thank you anna..!! :-)

Sri said...

@ தமிழ் பிரியன்
//திண்ணை நினைவுகள் அழகா இருக்கு... :)//
நன்றி அண்ணா..!! :-)

//மெய்யாலுமா?... ;)//
நிஜம்தான் அண்ணா..!! :-)
ஆனா ரொம்ப நாள் ஆச்சு பழக்கம் விட்டுப்போய்..!! :-(

Sri said...

@ தமிழ் பிரியன்
//( Culture )Still....... ;(//

ம்ம்ம்ம்...!! :-(

இத்யாதி said...

@Sri
கல்யாணத்த பத்தி யோசிக்கிற அளவு நான் பெரியவன் இல்ல அக்கா.... காலம் வரட்டும்..... பொறுத்தார் பூமி ஆள்வார்.... நானும் பொறுத்து கிராமத்தில் வாழ்வேனா?!! பாப்போம்

Sri said...

@ இத்யாதி
அச்சச்சோ நான் உங்கள இப்போவேவா கல்யாணம் பண்ணிக்க சொன்னேன்??அப்படி ஒன்னு நடக்கும் போது இத மனசுல வெச்சுக்கோங்கன்னு சொன்னேன் அவ்ளோதான்.:-) அப்பறம் இன்னொரு விஷயம் நீங்க என்னை தங்கை-னே கூப்பிடலாம்..!! :-)

இத்யாதி said...

@Sri
<< அப்பறம் இன்னொரு விஷயம் நீங்க என்னை தங்கை-னே கூப்பிடலாம்..!! :-)>>
அதான் நான் கூறினேன் அல்லவா, நான் அவ்வளவு பெரியவன் அல்லவென்று !!:)

Sri said...

@ இத்யாதி
ம்ம்ம்ம் சரி தம்பி..!! :-)

naanal said...

நல்ல நினைவுகள் ஸ்ரீ..

//ஏன்னா அந்த திண்ணையையும் ஒரு அறையாக மாற்றி வாடகைக்குவிட்டிருந்தார்கள். //

சரி தான் ஸ்ரீ.. நகர வாசிகள் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் ....

Sri said...

@ naanal
//நல்ல நினைவுகள் ஸ்ரீ..//
நன்றி அக்கா..!! :-)
//நகர வாசிகள் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் ....//
ஆமாம் அக்கா..!! :-(

ஜி said...

/காக்க காக்க படத்துல ஜோதிகா சூர்யா கிட்ட ஒரு வீட்ட காண்பிச்சு சொல்வாங்களே அதேமாதிரி நாளைக்கு என் ஆத்துக்கார(கணவர்) கூட்டிட்டு போய் நான் அந்த திண்ணைய காண்பிச்சாக்கூட ஆச்சர்யப்பட்றத்துக்கில்ல//

:)))

Ramya Ramani said...

:)) Nalla Ezhudareenga Sri

Sri said...

@ ஜி
:-)))))))
நன்றி அண்ணா..!!

Sri said...

@ ramya ramani
:-) Thanks akka..!!

J J Reegan said...

:-))

நல்லா எழுதியிருக்கீங்க...

Sri said...

நன்றிங்க‌ ரீகன்..!! :-)

Aruna said...

திண்ணை மலரும் நினைவுகள் நன்றாக இருந்தது...
அன்புடன் அருணா

Sri said...

நன்றி அருணா அக்கா..!! :-)

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது