காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-3

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-1

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-2

காதல சொல்றது எந்த அளவு கஷ்டமோ, அதே அளவு கஷ்டம் ஒரு பெண் தன் காதல தன் காதால கேட்கறதும் தான்னு யாரோ சொன்னது ஏனோ அவளுக்கு இன்று புரிந்தது. எவ்வளவு தான் அவன் தெரிந்தவன், பிடித்தவனாக இருந்தாலும் அவன் காதல் சொல்ல வரும் போது பெண்ணுக்கு ஒருவித பயம், நடுக்கம், நாணம் வந்து கொல்லதான் செய்யும். அவள் முதன்முதலாக ஏதேதோ உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டாள்.


"என்ன சொல்ற நீ??"" நிஜம்மாவே புரியலியா, இல்ல சும்மா கேட்கறியா??"" நல்லா தானே இருந்த. இப்போ என்ன திடீர்னு??"" முன்னமே சொல்லிருப்பேன். நமக்கு பரிட்சை இருந்ததால சொல்லல.""நீ இப்படி பேசறதா இருந்தா நான் உன் வீட்டுக்கே வர மாட்டேன் போ..!! " எனத் திரும்பினாள்."ஹே...!! அம்மா பார்த்துட்டாங்க நம்மள. பேசாம வா..!! "-கிட்டதட்ட அவளை இழுத்துக்கொண்டு போனான்."எப்படிமா இருக்க?? அம்மா அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க‌??""நல்லா இருக்கேன் ஆன்ட்டி. ம்ம் அவங்களும் நல்லா இருக்காங்க‌. நீங்க எப்படி இருக்கீங்க??""ம்ம் நல்லா இருக்கேன்மா. ஏன் எங்களை எல்லாம் மறந்துட்டியா ஆளையே காணோம்??""அப்படியெல்லாம் இல்லை ஆன்ட்டி enterence class இருந்ததால எங்கேயும் போக முடியல."


"ம்ம்ம் அரவிந்த் என்ன சொல்றான்??".அவளுக்கு ஒரு நிமிடம் கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.
'நாம பேசினது ஆன்ட்டிக்கு தெரிஞ்சிருக்குமோ?? அச்சச்சோ போச்சு அம்மாக்கிட்ட சொல்ல போறாங்க. அம்மா என்னைத் திட்டப் போறாங்க'.
கொஞ்சம் தெளிவுக்கு வந்தவளாய், 'என்னை ஏன் திட்டனும்?? என் மேல என்னத் தப்பு?? செஞ்சதெல்லாம் அவன். அம்மா கேட்டா நடந்தத அப்படியே சொல்லிடணும்' என்ற முடிவுக்கு வந்தாள்.'ஆனா இப்ப ஆன்ட்டி கிட்ட என்ன சொல்றது??' என யோசித்தாள். அதற்குள் அவரே, "என்னமா இப்படி யோசிக்கற?? Enterence class பத்தி உன் கிட்ட அரவிந்த் ஒன்னுமே சொல்லலியா??" என்ற போதுதான் அவளுக்கு மூச்சே வந்தது.


"இல்ல ஆன்ட்டி ஒன்னும் சொல்லல‌".


"ம்ம்ம் சரி நீங்க பேசிட்டு இருங்க. நான் சாப்பிட ஏதாவது கொண்டுவரேன்."

இதுவரை எவ்வளவோ நாட்கள் அரவிந்தோடு தனியாக உட்கார்ந்து பேசியிருக்கிறாள்,ஊர் சுற்றியிருக்கிறாள். ஆனால், அப்போதெல்லாம் தோண்றாத ஒரு பய உணர்ச்சி இப்போது அவளுக்குத் தோண்றியது.'பேசாமல் ஆன்ட்டியோட கிச்சன்ல போய் பேசிட்டு இருக்கலாமா??'-என்று அவள் யோசிப்பதற்குள் அவன் அம்மா இரண்டு டம்ளரில் பாலோடு வந்துவிட அந்த எண்ணத்தைக் கைவிட்டாள்."ரெண்டு பேரும் எடுத்துக்கோங்க‌" சொல்லிவிட்டு தள்ளி நின்றார், இல்லை என்றால் அவன் அடுத்து சொன்ன வார்த்தைக்கு அங்கு ஒரு பூகம்பமே வெடித்திருக்கும்.

பாலைக் குடிக்க‌லாமா வேண்டாமா என் யோசித்துக் கொண்டிருந்தவளிடம்,

"என்ன யோசிக்கற ரெண்டு டம்ளர்ல குடுத்துட்டாங்களேன்னா?? அம்மாக்குத் தெரியாதில்ல அதான் கொஞ்சம் அட்ஜெஸ் பண்ணிக்கோ",


என்று சிரித்தவனை முதல்முதலாக வெறுத்தாள். அது தான் அவனைப் பார்த்த கடைசி நாளாக அவள் நினைவில் இருப்பது. அதற்குப்பின், அவர்கள் வீடு மாற்றி போகும் போதோ, 'அவர்களின் புது வீட்டை பார்த்துவரலாம் வா', என அம்மா அழைத்த போதோ அவள் செல்லவில்லை. அதன் பிறகு இன்று தான் பார்த்தாள் அதுவும் தமிழால்,"என்னடீ இன்னும் அந்த மெரூன் ஷர்ட்காரன தான் நினைச்சிகிட்டு இருக்கியா?", என்றவளை முறைத்தாள். பதில் எதுவும் பேசாததால் தமிழே, "ஏய் என்னடீ ஆச்சு உனக்கு?? உடம்பேதும் சரி இல்லயா?? காலைல கூட நல்லா தானே டீ இருந்த. இப்போ ஏன் ஒரு மாதிரி இருக்க?? ஒருவேள என்னைக்கும் இல்லாம, இன்னைக்கு சீக்கரம் எழுந்ததனால இருக்குமோ..!!", கால நேரம் தெரியாமல் அவள் வேறு கிண்டலடித்தாள்.

"ஒன்னும் இல்ல", இவ்வளவு சின்ன பதிலை அவள் எதிர்ப்பார்க்கவில்லை. சாதாரணமாக தமிழ் பேசினாலே வார்த்தைக்கு வார்த்தைக் கிண்டலடிப்பவளா, இன்று இப்படி தான் கிண்டல் செய்தும் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறாள் என தமிழுக்கு ஆச்சர்யம்.

'எப்படியும் இப்போது கேட்டால் சொல்லமாட்டாள். ரூமுக்கு போனதும் கேட்டுக்கலாம்', என்ற முடிவுக்கு வந்தவளாய் அவள் இடத்தை விட்டு நகர்ந்தாள்.

-வருவாள்.

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-4

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-5

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-6

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-7

22 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

Alb said...

//காதல சொல்றது எந்த அளவு கஷ்டமோ, அதே அளவு கஷ்டம் ஒரு பெண் தன் காதல தன் காதால கேட்கறதும் தான்னு யாரோ சொன்னது ஏனோ அவளுக்கு இன்று புரிந்தது. // அப்படியா??? சொல்லவே இல்ல...

//எவ்வளவு தான் அவன் தெரிந்தவன், பிடித்தவனாக இருந்தாலும் அவன் காதல் சொல்ல வரும் போது பெண்ணுக்கு ஒருவித பயம், நடுக்கம், நாணம் வந்து கொல்லதான் செய்யும்.// இது சூப்பரு....

//அவள் முதன்முதலாக ஏதேதோ உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டாள்.// இருக்க வேண்டியது தான்..

.... வேகம் கொஞ்சம் குறைஞ்சாலும் இந்த இடத்துக்கு என்ன தேவையோ அத பூர்த்தி செஞ்சிருக்கீங்க.. வாழ்த்துக்கள்... //வருவாள்// .. வரட்டும் அதுக்குதான் நாங்களும் வெயிட் பண்றோம்..!!

M.Saravana Kumar said...

என்னது இந்த பகுதி முடிஞ்சிடுச்சா??
:(


இப்படி பாதி பாதியா கதை போடாதீங்க.. :)
முழு கதையும் போடுங்க.. அந்த ரெண்டு பேரையும் சேர்த்து வையுங்க..
;)

M.Saravana Kumar said...

இந்த கதை கற்பனையா??

நம்பலாமா??

உண்மையாய் நடந்த சொந்த கதை மாதிரி தெரியுது..

நிஜமா நல்லவன் said...

ஸ்ரீ கதை நல்லா தான் போய்ட்டு இருக்கு. அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங்!

ஜி said...

:)))) kalakkal... Innoru kaathal thodar...

nalla irukuthu.. second partla thideernu flashback vanthathula konjam confuse aayitten.. appuram purinjidichu...

menmelum kathai ezutha vaazththukkal Sis... :))

sathish said...

நன்று ஸ்ரீ :) இன்னும் வரட்டும்!

naanal said...

மீண்டும் எப்போ வருவாள்..
Mega Serial மாதிரி கொஞ்சமா கொஞ்சமா கதையை சொல்றீங்களே ... ;)

தமிழ் பிரியன் said...

வலைச்சரத்தில் பதிவர்

Sri said...

@ alb
//அப்படியா??? சொல்லவே இல்ல//
என்கிட்டயே சொல்லலியே அண்ணா அவ‌...!!:-)
//இது சூப்பரு//
நன்றி அண்ணா...!! :-)
//இருக்க வேண்டியது தான்//
ம்ம்ம்ம்...!!;-)
//.... வேகம் கொஞ்சம் குறைஞ்சாலும் இந்த இடத்துக்கு என்ன தேவையோ அத பூர்த்தி செஞ்சிருக்கீங்க.. //
அப்படியா அண்ணா?? :-(
//.. வரட்டும் அதுக்குதான் நாங்களும் வெயிட் பண்றோம்.//
நிச்சயம் வருவாள்.நன்றி அண்ணா வருகைக்கும்,வாழ்த்துக்கும்..!! :-)

Sri said...

@ M.Saravana kumar
//என்னது இந்த பகுதி முடிஞ்சிடுச்சா??
//
ஆமா..!! ;-)
//இப்படி பாதி பாதியா கதை போடாதீங்க..முழு கதையும் போடுங்க.. அந்த ரெண்டு பேரையும் சேர்த்து வையுங்க.. //
இது தொடர் கதைங்க இப்படித்தான் போடனும்னு சொல்லிருக்காங்க. :-( (யாருன்னு சொல்ல மாட்டனே..!! :-))

Sri said...

@ M.Saravana kumar
//இந்த கதை கற்பனையா??//
அட ஆமாங்க ஆமாம்..!!;-)

//நம்பலாமா??//
தாராளமா நம்பலாம்..!! :-)

//உண்மையாய் நடந்த சொந்த கதை மாதிரி தெரியுது..//
இப்படியெல்லாம் சின்ன்ன்ன்னப் பொண்ண வீணா மாட்டிவிடக்கூடாது..!! :-O
நன்றி..!! :-))

Sri said...

@ நிஜமா நல்லவன் அண்ணா
நன்றி அண்ணா வருகைக்கும்,வாழ்த்துக்கும்..!! :-)

Sri said...

@ ஜி அண்ணா
//kalakkal... Innoru kaathal thodar... //
இன்னொன்னா???? :-O
//nalla irukuthu.. second partla thideernu flashback vanthathula konjam confuse aayitten.. appuram purinjidichu...//
:-))
//menmelum kathai ezutha vaazththukkal Sis//
நன்றி அண்ணா...!! :-)))

Sri said...

@ sathish
நன்றி அண்ணா வருகைக்கும்,வாழ்த்துக்கும்..!! :-))

Sri said...

@ naanal
//மீண்டும் எப்போ வருவாள்..//
கூடிய சீக்கிரத்தில்..!! :-)
//Mega Serial மாதிரி கொஞ்சமா கொஞ்சமா கதையை சொல்றீங்களே//
Mega serial-லா அவ்ளோ கேவளமாவா இருக்கு இந்த கதை??
;-)
நன்றி அக்கா..!! :-))

Sri said...

@ தமிழ் பிரியன்
நன்றி அண்ணா..!! :-)

Ramya Ramani said...

கலக்குங்க...எப்படி இப்படி எல்லாம்..ஹிம்ம்ம் சூப்பர் flow வாழ்த்துக்கள் :))

P.S: நன்றி அக்கான்னு எல்லாம் போடாதீங்க..ரம்யான்னே சொல்லுங்க சரியா ஸ்ரீ :))

Sri said...

ஹை நன்றி ரம்யா...!! :-))

naanal said...

நான் சொன்னதா தப்பா புரிஞ்சிக்கிடீங்கன்ணு நினைக்கறேன்..:(
இப்படி கதை கொஞ்சம் கொஞ்சமா நகருதுனு சொல்ல வந்தேன்..
மற்றபடி கதை நல்லா இருக்கு .. :-)

Sri said...

@ naanal
அக்கா நான் சும்மாதான்கா கேட்டேன். அதுக்கேன் அக்கா தனி விளக்கம்..!!:-)) கொஞ்சம் வேலை இருந்ததால தான்கா நிறைய எழுத முடியல‌..!!
:-(
அடுத்தப் பதிவு சீக்கிரம் போடறேன்கா.
நன்றி அக்கா..!! :-))

naanal said...

:) சரி ஸ்ரீ

Sri said...

@ naanal
நன்றி அக்கா..!! :-))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது