காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-2

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-1

'சில சமயங்களில் வாழ்வில் சில விஷயங்கள் நடக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனத் தோன்றும். ஆனால் வாழ்க்கை நாம் நினைச்சபடியோ, நினைக்காதபடியோ, எப்படியோ மாறிகிட்டேதான் இருக்கு. ஏற்ற, இறக்கங்கள், இன்ப, துன்பங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை'.


'ஆனா இது இன்பமா??துன்பமா??-னு எனக்கே தெரியலியே . ஏன் எனக்கு மட்டும் இப்படியாகுது?? 'என்னக் கொடுமை சார் இதுன்னு' பிரேம்ஜி சொல்ற மாதிரி நான் சொல்ற காலமும் வந்திடிச்சா?? ச்சே என்னது இது தனியா பேச ஆரம்பிச்சுட்டேன்??. எல்லாம் அவனால இல்ல இல்ல இந்த தமிழால அவ மட்டும் அந்த மெரூன் கலர் ஷர்ட்-காரன காட்டாம இருந்திருந்தா இப்போ நான் இப்படி தனியா உட்கார்ந்து புலம்பாம இருந்திருப்பேன். இத்தனை வருஷம் கழிச்சு அவனைப் பார்த்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. ரெண்டு முறை அந்த டீம் லீட் வேற பார்த்துட்டு போயிடிச்சி.இன்னும் எவ்ளோ நேரம் தான் அதையே நினைத்துக் கொண்டிருப்பது'. கஷ்டபட்டு மனதை வேலை செய்ய திருப்பினாள்.


மனம் ஒரு குரங்கு என்பது சரியாக தான் இருந்தது. கொஞ்ச நேரத்தில் தானாக அவன் நினைவு வந்து அவளை ஆட்கொண்டது. 'அவன் என்னைப் பார்த்திருப்பானா??ஒருவேளை பார்த்திருந்தா அவனும் என்னை மாதிரி இப்படி யோசிச்சுகிட்டு இருப்பானோ?? இல்லை பார்த்திருக்க மாட்டான். பார்த்திருந்தா இப்படி பேசாமலா போயிருப்பான்?? இல்ல என்ன மறந்திருப்பானோ??'.அவன் மறந்திருப்பானோ என அவள் எண்ணும்போதே ஏனோ அழுகை வந்தது.


ஏன் அவனைப் பற்றி நினைத்தோம் எனத் தன்னையே அவள் நொந்துக்கொண்டாள்.இவள் இப்படியெல்லாம் அவனைப் பற்றி யோசிப்பாள் என ஒரு 5 வருடத்திற்கு முன் யாராவது அவளிடம் சொல்லியிருந்தால் அவள் நிச்சயம் நம்பியிருக்கமாட்டாள்.


சமூகம் மிகவும் வித்தியாசமானது. அதுவும் காத‌லைப் ப‌ற்றின‌ ச‌மூக‌த்தின் பார்வை விசித்திர‌மான‌து. பள்ளிப்ப‌ருவ‌த்தில் காத‌ல் என்றால் 'மொளைச்சு மூணு இலை விட‌ல‌ அதுக்குல்ல‌ காத‌லா??'-ன்னும், க‌ல்லூரி ப‌ருவ‌த்தில் காத‌ல் என்றால் 'ப‌டிக்க‌ற‌ வ‌ய‌சில் காத‌லா??'- ன்னும், வேலைக் கிடைத்த பிற‌கு காத‌ல் என்றால் 'ச‌ம்பாதிக்கிற‌ திமிரு' என‌ சொல்லும். 30-40 ல் காத‌ல் என்றால் 'இந்த‌ வ‌ய‌தில் என்ன‌ காத‌ல்??' என‌க்கேட்கும். இதை எல்லாத்த‌யும் அன்னைக்கு யோசிச்சு தான் முடிவெடுத்தேன் என‌ சொல்ல‌ முடியாது.அதே மாதிரி நான் சரியான முடிவு தான் எடுத்தேன்னும் என்னால சொல்ல முடியாது. ஆனா தப்பான முடிவு எடுக்கலன்னு மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும். ஏன்னா எதையும் ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கற வயசு அப்போ எனக்கும் இல்ல அவனுக்கும் இல்ல‌'.

************************************************

"ஹாய் மது என்ன அதிசயமா ground பக்கம் வந்திருக்க‌??".

"ஹாய் அரவிந்த்.உன்ன பார்க்கத் தான் exam முடிஞ்சப்பறம் ஆளையே காணோம். அதான் ஊர்ல தான் இருக்கியான்னு பார்த்துட்டு போக வந்தேன். அப்படியே மஞ்சுவையும் பார்த்துட்டு போலாமேன்னு" .


"அதானே பார்த்தேன். நீ என்னமோ அதிசயமா என்ன பார்க்க வந்திட்டியோன்னு நினைச்சிட்டேன்".


"ஹேய் உன்னையும் தான் பார்க்க வந்தேன். சரி உன் enterence class எல்லாம் எப்படி போகுது??".


அவர்களின் பேச்சு படிப்புப் பக்கம் திரும்பியது. இங்கு அவர்களின் என்று சொல்வதை விட அவளின் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். ஏனென்றால் அவள் பேசுகிறாள் என்பதற்காக தலையாட்டினானே தவிர அவன் மனதில் வேறு எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது‌.


அரவிந்தும், மதுவும் நண்பர்கள். இருவருமே நன்றாக படிப்பவர்கள். அப்பொழுதுதான் அவர்களின் உயர்நிலைத் தேர்வை எழுதிவிட்டு தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்தார்கள். இரண்டு வீட்டிலுமே நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.அது இருவருக்குமே தெரிந்திருந்தது. ஆனாலும் இதைவிட நல்ல சந்தர்பம் இனி அமையாது என்று அரவிந்த் நினைத்தான். ஏனெனில் அவனுக்கு எந்த கல்லூரியில் இடம் கிடைக்கிறதோ அங்கேயே குடியேறுவதென அவன் வீட்டில் முடிவு செய்திருந்தனர்.

"ம்ம்ம் அப்பறம்..!!"

"என்ன அப்பறம்?? நான் பேசி முடிச்சு ரொம்ப நேரம் ஆச்சு. நீ தான் ஒன்னும் பேசாம, நான் பேசினதையும் கவனிக்காம எங்கயோ பார்த்துகிட்டு வர. என்ன ஆச்சு உனக்கு??"

"ஒன்னும் இல்ல. சொல்லு எப்ப எங்க வீட்டுக்கு வர‌??"

"லூசா நீ?? இப்ப உங்க வீட்டுக்கு தானே வந்துகிட்டு இருக்கேன் அப்பறம் என்ன‌??"

"நான் நீ இப்போ வரத கேட்கல. இதே மாதிரி ஆனா உன் பொட்டி, படுக்கையோட, என் மனைவியா எப்போ என் வீட்டுக்கு வர சொல்லு..!! ".

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை, அவள் இதயத்துடிப்பு இந்த அளவு வேகமாக இதுவரைத் துடித்ததில்லை என்பதைத்தவிர‌.


-வருவாள்.

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-3

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-4

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-5

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-6

காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??-7

28 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

M.Saravana Kumar said...

"ரெண்டு முறை அந்த டீம் லீட் வேற பார்த்துட்டு போயிடிச்சி.இன்னும் எவ்ளோ நேரம் தான் அதையே நினைத்துக் கொண்டிருப்பது"

உங்ககிட்ட ஒரு நல்ல எழுத்து நடை இருக்கு..

ALL THE BEST.. :)

ஆயில்யன் said...

//சமூகம் மிகவும் வித்தியாசமானது. அதுவும் காத‌லைப் ப‌ற்றின‌ ச‌மூக‌த்தின் பார்வை விசித்திர‌மான‌து. பள்ளிப்ப‌ருவ‌த்தில் காத‌ல் என்றால் 'மொளைச்சு மூணு இலை விட‌ல‌ அதுக்குல்ல‌ காத‌லா??'-ன்னும், க‌ல்லூரி ப‌ருவ‌த்தில் காத‌ல் என்றால் 'ப‌டிக்க‌ற‌ வ‌ய‌சில் காத‌லா??'- ன்னும், வேலைக் கிடைத்த பிற‌கு காத‌ல் என்றால் 'ச‌ம்பாதிக்கிற‌ திமிரு' என‌ சொல்லும். 30-40 ல் காத‌ல் என்றால் 'இந்த‌ வ‌ய‌தில் என்ன‌ காத‌ல்??'//

நச்சுன்னு இருக்கு அக்கா!

கதையும் நல்லா இருக்கு அக்கா

கண்டினியூ
கண்டினியூ :)

Alb said...

.. கொசுவத்தி சுருள் ஏதாவது ஏத்திடீங்களா ?? ;) ;) செமத்தியா கத சொல்றீங்க.. "அப்டிங்கற பேர்ல எங்கயோ அழச்சிட்டு போயிட்டு இருக்கீங்களே.." .. வாழ்த்துக்கள்..!! ;) ;)

Sri said...

@ M.Saravana Kumar
நன்றி..!! நன்றி..!! :-)

Sri said...

@ ஆயில்யன்
நன்றி அண்ணா..!!;-)
நன்றி அண்ணா..!!:-)

Sri said...

@ Alb
இது கற்பனைக் கதை..!! :-)
நன்றி அண்ணா..!!:-)

நிஜமா நல்லவன் said...

/
'சில சமயங்களில் வாழ்வில் சில விஷயங்கள் நடக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனத் தோன்றும்.
/

எல்லோருக்குமே இப்படி ஒரு நினைவு உண்டு:)

நிஜமா நல்லவன் said...

/
வாழ்க்கை நாம் நினைச்சபடியோ, நினைக்காதபடியோ, எப்படியோ மாறிகிட்டேதான் இருக்கு. ஏற்ற, இறக்கங்கள், இன்ப, துன்பங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை'.
/

ஆமாம்....

நிஜமா நல்லவன் said...

//
சமூகம் மிகவும் வித்தியாசமானது. அதுவும் காத‌லைப் ப‌ற்றின‌ ச‌மூக‌த்தின் பார்வை விசித்திர‌மான‌து. பள்ளிப்ப‌ருவ‌த்தில் காத‌ல் என்றால் 'மொளைச்சு மூணு இலை விட‌ல‌ அதுக்குல்ல‌ காத‌லா??'-ன்னும், க‌ல்லூரி ப‌ருவ‌த்தில் காத‌ல் என்றால் 'ப‌டிக்க‌ற‌ வ‌ய‌சில் காத‌லா??'- ன்னும், வேலைக் கிடைத்த பிற‌கு காத‌ல் என்றால் 'ச‌ம்பாதிக்கிற‌ திமிரு' என‌ சொல்லும். 30-40 ல் காத‌ல் என்றால் 'இந்த‌ வ‌ய‌தில் என்ன‌ காத‌ல்??' என‌க்கேட்கும்.
//

சரியா சொல்லி இருக்கீங்க ஸ்ரீ. இந்த சமூகமே இப்படித்தான்:)

நிஜமா நல்லவன் said...

ரொம்ப நல்லா இருக்கு. சீக்கிரம் அடுத்த பாகத்தை தொடருங்க:)

Sri said...

@ நிஜமா நல்லவன்
//எல்லோருக்குமே இப்படி ஒரு நினைவு உண்டு//

அப்படியா அண்ணா?? ;-)

//சரியா சொல்லி இருக்கீங்க ஸ்ரீ. இந்த சமூகமே இப்படித்தான்//

நீங்க சொன்னா கரெக்டா தான் இருக்கும்..!! :-)

//ரொம்ப நல்லா இருக்கு. சீக்கிரம் அடுத்த பாகத்தை தொடருங்க//

நன்றி அண்ணா...!! :-)

இத்யாதி said...

விடலை வயசுல என்னங்க காதல் வேண்டியது கேடக்கு...
பிள்ளைங்கள பீஸ்புல்லா படிக்க விடுங்க....

Sri said...

@ இத்யாதி
நான் எப்பவும் யாரையும் காதலிக்க சொல்லல. காதலிச்சா இந்த சமூகம் என்ன சொல்லும்னு தான் சொல்ல வந்தேன். அது சரியா??தப்பா-னும் நான் இங்க சொல்லல.
நன்றி..!! :-)

இத்யாதி said...

'மொளைச்சு மூணு இலை விட‌ல‌ அதுக்குல்ல‌ காத‌லா??'- என்று கேட்கிற இந்த சமூகத்தின் கேள்வி நிச்சயம் அர்த்தமானதே!
கல்லூரி பருவத்தில்/ அதன் பிறகு வரும் காதலை நான் ஆதரிக்கிறேன்.
என்றாலும் அந்த இளம் பருவத்தில் வருவது வயது கோளாறு தானோ?
அதனால் தான் அந்த காலத்தில் குழந்தைத் திருமணம் செய்துவைத்தனரோ?
சிந்தித்துப் பாருங்கள், இப்பொது அவ்வாறிருந்தால் எல்லாம் சுமூகமாக செல்லும்....
தப்பு தண்டா நடக்காது... மனம் அலைபாயாது... ஆனால் அவ்வாறு அலை பாய்வதாலும் ஒரு இன்பம் இருக்கிறதல்லவா?

M.Saravana Kumar said...

//நான் எப்பவும் யாரையும் காதலிக்க சொல்லல. காதலிச்சா இந்த சமூகம் என்ன சொல்லும்னு தான் சொல்ல வந்தேன். அது சரியா??தப்பா-னும் நான் இங்க சொல்லல.//

நல்லா சமாளிக்கிறீங்க போங்க..
;) ;)

சார்பற்ற எழுத்தாளரின் நிலையில் இருந்து கொள்கிறீர்களா???
:)

sathish said...

//'இதை எல்லாத்த‌யும் அன்னைக்கு யோசிச்சு தான் முடிவெடுத்தேன் என‌ சொல்ல‌ முடியாது.அதே மாதிரி நான் சரியான முடிவு தான் எடுத்தேன்னும் என்னால சொல்ல முடியாது. ஆனா தப்பான முடிவு எடுக்கலன்னு மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும். ஏன்னா எதையும் ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கற வயசு அப்போ எனக்கும் இல்ல அவனுக்கும் இல்ல‌'.//

good!

sathish said...

//நான் எப்பவும் யாரையும் காதலிக்க சொல்லல. காதலிச்சா இந்த சமூகம் என்ன சொல்லும்னு தான் சொல்ல வந்தேன். அது சரியா??தப்பா-னும் நான் இங்க சொல்லல.
நன்றி..!! :-)
//

:)

Sri said...

@ இத்யாதி
//அந்த காலத்தில் குழந்தைத் திருமணம் செய்துவைத்தனரோ?
சிந்தித்துப் பாருங்கள், இப்பொது அவ்வாறிருந்தால் எல்லாம் சுமூகமாக செல்லும்....
தப்பு தண்டா நடக்காது... மனம் அலைபாயாது... //

என்னங்க சொல்றீங்க?? குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கறீங்களா??விடலைப் பருவத்தில் வரும் காதலை எதிர்க்கறீங்க‌.ஆனா குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கறீங்க.??!? :-(

Sri said...

@ M. Saravana kumar
//நல்லா சமாளிக்கிறீங்க போங்க..//

நன்றி..!! :-)

//சார்பற்ற எழுத்தாளரின் நிலையில் இருந்து கொள்கிறீர்களா???//

அப்படின்னா?? :-(

Sri said...

@ Sathish

//good!//

நன்றி அண்ணா...!! :-)

இத்யாதி said...

//என்னங்க சொல்றீங்க?? குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கறீங்களா??விடலைப் பருவத்தில் வரும் காதலை எதிர்க்கறீங்க‌.ஆனா குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கறீங்க.??!? :-(
//

அது என் சொந்த கருத்தாக இருக்கட்டும் =|:)

Sri said...

@ இத்யாதி
வாழ்த்துக்கள்..!! ;)
நன்றி...!! :-)

M.Saravana Kumar said...

அப்படின்னா?? :-(

//கதையின் பாத்திரங்களுக்கும் கதை எழுதும் எழுத்தாளருக்கும் சார்பற்ற நிலை..
கதையின் பாத்திரங்கள் கதை சொல்ல, எழுத்தாளர் கதை எழுதுகிறார்.. அவ்வளவே..//

Sri said...

@ M.Saravana kumar
ஓகோ அப்படியா..!! :-)
நன்றி..!! :-)

sathish said...

what about the next part sister :)

Sri said...

@ Sathish
எழுதிகிட்டேஏஏஏஏஏஏ இருக்கேன் அண்ணா....!! ;-)

naanal said...

//'சில சமயங்களில் வாழ்வில் சில விஷயங்கள் நடக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனத் தோன்றும். ஆனால் வாழ்க்கை நாம் நினைச்சபடியோ, நினைக்காதபடியோ, எப்படியோ மாறிகிட்டேதான் இருக்கு. ஏற்ற, இறக்கங்கள், இன்ப, துன்பங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை'.//

சரியா சொன்னீங்க ஸ்ரீ...
இதே எண்ணம் கண்டிப்பா எல்லார் மனசுலையும் ஒருதரமாவது வந்து போகும்..........

Sri said...

@ naanal
//சரியா சொன்னீங்க ஸ்ரீ...
இதே எண்ணம் கண்டிப்பா எல்லார் மனசுலையும் ஒருதரமாவது வந்து போகும்//
அட, அப்படியா அக்கா??
நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்.
:-) நன்றி...!! :-)

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது