இதெல்லாம் ஏன்டா?


வெட்கப்
புத்தகத்தின்
வரிகளை
வாசிக்கக்
கற்றுத்தந்தவன் நீ..!!

*
தூக்கமன்றி
ஏதுமறியா
என்
இரவுகளை
கனவுகளால்
நிரப்பியவன் நீ..!!

*
என்
பெண்மையின்
பரிபூரணங்களை
புரியவைத்தவன் நீ..!!

*
என்
கோபம்,துக்கம்
இவற்றை
முத்தங்களால்
முடித்துவைத்தவன் நீ..!!

*
என் காதலின்
வெற்றுப்பக்கங்களை
கவிதைகளால்
நிரப்பியவன் நீ..!!

*
காற்றோடு
கைக்கோர்த்து
கடலலையில்
நடந்தவளை
காதலோடு
நடக்கப்பழக்கியவன் நீ..!!

*
கவிதை
ரசித்தவளை
எழுத
வைத்தவன் நீ..!!

*
நேற்றுவரை
குழந்தை
என்றிருந்தவளை
வருகையினால்
வயதறிய
வைத்தவன் நீ..!!

*
தனிமையோடு
சத்தமாக
பேசவைத்தவன் நீ..!!

*
'இதெல்லாம் ஏன்டா?'
சத்தமாக
சிரித்தபடி
மெதுவாக
சொன்னாய்'இதுதாண்டி காதல்'
என்று.......!!

25 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

ஜி said...

//காற்றோடு
கைக்கோர்த்து
கடலலையில்
நடந்தவளை
காதலோடு
நடக்கப்பழக்கியவன் நீ..!!
//

mihavum rasiththa varigal... :)))

moththa kavithaiyum azagu

ஸ்ரீ said...

Great Improvement Sri. Keep going. My wishes.

sathish said...

//கவிதை
ரசித்தவளை
எழுத
வைத்தவன் நீ..!!//

simple yet too good!

Sri said...

//mihavum rasiththa varigal... :)))

moththa kavithaiyum azagu//


நன்றி ஜி அண்ணா...!! :-)

Sri said...

ஸ்ரீ அண்ணா நன்றி..!! :-)

Sri said...

நன்றி sathish..!! :-)

தினேஷ் said...

சின்ன சின்ன மழைத்துளிப்போல் சின்ன சின்ன கவிதைகள்...

தினேஷ்

Sri said...

நன்றி தினேஷ் அழகான பின்னூட்டத்திற்கு...!! :-)

இத்யாதி said...

பெண்களுக்கு கூட இவ்வளவு காதல் வருமோ!!?

Sri said...

@இத்யாதி

ஏன் பெண்களுக்கு இவ்ளோ காதல் வராதா?? ;-)

இத்யாதி said...

வரலாம் தாயே...
ஆனால் அந்தரங்கமாக....
பெற்றோருக்கோ, தோழிகளின் கேலிக்கோ பயந்து
எப்போதும் அந்தரங்கமாக....
தான் வெளிவிடும் மூச்சு காற்றுக்குக் கூட தெரியாமல்...

Sri said...

@ இத்யாதி
என் கவிதையின் நாயகி கூட அப்படித்தான் ரகசியமாக தான் வைத்திருந்தாள். நாம் தான் அவள் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்தோம்.:-)

இத்யாதி said...

'பொன்னியின் செல்வன்' வாசம் தெரிகிறது இந்த வரிகளில்... நன்று!

Sri said...

@ இத்யாதி
கவிதையின் வரிகளிலா?? இல்லை பின்னூட்டத்திலா?? ;-)

இத்யாதி said...

நாம் தான் அவள் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்தோம்

இந்த வரிகளில் தான்..... கவிதை வரிகளில் இருந்தாலும் தவறேதும் இல்லையே :)

Sri said...

நன்றி இத்யாதி..!! :-)

இத்யாதி said...

'அருமை' என ஒரு வார்தையிலாவது வாழ்தாமைக்கு மிகவும் வருந்துகிறேன். ஒருமுறை மட்டும் படித்து விடமுடியவில்லை....

Sri said...

வருத்தம் கொள்ள வேண்டாம். :-) வாழ்த்தியமைக்கு நன்றி இத்யாதி..!!

M.Saravana Kumar said...

உங்களோட Master Piece படைப்பு..
:)

"இதெல்லாம் ஏன்டா?'
சத்தமாக
சிரித்தபடி
மெதுவாக
சொன்னாய்'இதுதாண்டி காதல்'
என்று.......!!"

கலக்கீட்டீங்க.. :)

Sri said...

Master piece-ah??இதுக்கு மேல எழுதாத‍னு சொல்றீங்களோ?? ;-)
நன்றி சரவணகுமார்...!! :-)

M.Saravana Kumar said...

உங்கள் Master Piece படைப்பை நீங்கள் கண்டிப்பாக இன்னொரு Master Piece படைப்பால் வென்றே ஆகவேண்டும்..
:)

If possible, please change the settings of Comments page view.. The comments page is now coming as "Pop-up page".. instead make it as "same page view".. so that the comments page will have your post..

Sri said...

கண்டிப்பாக எழுதறேன். :-)
//If possible, please change the settings of Comments page view.. The comments page is now coming as "Pop-up page".. instead make it as "same page view".. so that the comments page will have your post..//
மாத்திட்டேன்.
நன்றி சரவணகுமார்..!! :-)

M.Saravana Kumar said...

நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..

:)

M.Saravana Kumar said...

தயவு செய்து அண்ணா-னு மட்டும் கூப்பிடாதீங்க.. ப்ளீஸ்..

:(

M.Saravana Kumar said...

தயவு செய்து அண்ணா-னு மட்டும் கூப்பிடாதீங்க ப்ளீஸ்.
:(

நான் ரொம்ப பாவம்.. ;)

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது