டல்லரசு
1 day ago
உனக்கான வார்த்தைத்
தேடலில் ஊமையான
உதடுகள்......!!
*
வருகை தந்த
வார்த்தைகளும்
வழுக்கி தொண்டைக்குள்
விழுந்த மௌனம்....!!
*
மெல்ல தீண்டவரும்
அலையாய்
சொல்ல முயன்று
தோற்ற கணங்கள்.......!!
*
கோடைக்கால தென்றலாய்
மெல்லச் சுடும்
என் மூச்சு.............!!
*
இமைகள் கூட
சுமையாகி போன
என்னிரவுகள்........!!
*
உன் நினைவை
உண்டு
காற்றைக் குடித்து
நான் வாழ்ந்த
நாட்கள்........!!
*
உன் வருகைக்கான
என்
எதிர்ப்பார்ப்புகள்..........!!
*
உன் தீண்டலால்
உயிர்தெழுந்த
என் வெட்கங்கள்........!!
*
எதுவுமே உணர்த்தவில்லையா
உனக்கான
என் காதலை..........??
**
11 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:
//உன் நினைவை
உண்டு
காற்றைக் குடித்து
நான் வாழ்ந்த
நாட்கள்........!!
உன் தீண்டலால்
உயிர்தெழுந்த
என் வெட்கங்கள்........!!//
இந்த இரண்டு பத்திகளிலும் வார்த்தைகள் கையாண்ட விதம் நல்லா இருக்குமா.
நன்றி அண்ணா....!! :-)
எல்லாம் உங்கள மாதிரி அண்ணாக்களின் ஆசிர்வாதம் தான்...!! ;-)
Another nice kavithai... Keep Rocking!!!!
Thank you anna..!! :-)
இமைகள் கூட
சுமையாகி போன
என்னிரவுகள்
really nice lines..i think u have experience in this...
// மெல்ல தீண்டவரும்
அலையாய்
சொல்ல முயன்று
தோற்ற கணங்கள்.......! //
ஏகப்பட்ட பேரு இங்கதாப்ப சொதப்பிர்றாங்க....
//really nice lines..//
நன்றி யுவராஜ்..!!
//i think u have experience in this//
No experience at all..!! :-)
@jj reegan
//ஏகப்பட்ட பேரு இங்கதாப்ப சொதப்பிர்றாங்க//
அப்படியா??
எனக்குத்தெரியாதே..!! :-( அனுபவமோ?? ;-)
நன்றி அண்ணா வருகைக்கு..!! :-)
வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி --> Add a Gadget --> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>
நல்ல கவிதை ஸ்ரீமதி
உதடுகள், தொண்டை, கணங்கள், மூச்சு, இமைகள், வாழ்ந்த நாட்கள், எதிர்பார்ப்புகள், வெட்கங்கள், இவை படும்பாடு எதுவுமே உணர்த்த வில்லையே உண்மைக் காதலினை
என்ன செய்வது
நல்ல சிந்தனை
நல்வாழ்த்துகள் ஸ்ரீமதி
Sri??
Superb one! :)
Post a Comment