விடுதி வாழ்க்கை

என் சிரிப்பினில் கூட
சோகமே
தெறிக்கின்றது
இப்பொழுதெல்லாம்....

உன் குரலையே
எதிர்ப்பாக்கின்றேன்
செல்பேசி
அழைக்கும் போதெல்லாம்....

அறுசுவை உணவும்
ஆலகால விஷமாய்
தொண்டையில்...

உன் மடித்தேடி
மறந்து போன
என் தூக்கம்.....

உன் குரல் கேட்காமல்
விடியாது போன
என்னிரவுகள்.....

விழிநீர் மழையில்
நனைந்த
உன் நினைவுகள்......

இனிமேலும்
வேண்டாம்
அம்மா
எனக்கிந்த
விடுதி வாழ்க்கை....!!

23 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

ஆயில்யன் said...

தங்களின் பதிவுக்கு தற்போதுதான் நுழைகிறேன்!

நுழைவிலேயே ஸ்தம்பித்துப்போனேன்

ஆறு - அழகிய வண்ண படத்தில்

அப்ப்டியே பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றே மட்டும் தோன்றுகிறது :)

ஆயில்யன் said...

//உன் மடித்தேடி
மறந்து போன
என் தூக்கம்.....

உன் குரல் கேட்காமல்
விடியாது போன
என்னிரவுகள்.....
//

அலை அலையாக வருகிறது!

அம்மா பற்றிய என் நினைவுகள் :((((

ஆயில்யன் said...

நினைவுகளினை தொடருங்கள் உங்கள் கவிதைகளில்....!


வாழ்த்துக்களுடன்....!

Sri said...

//தங்களின் பதிவுக்கு தற்போதுதான் நுழைகிறேன்!//
வருக.!!வருக..!! :-)
//ஆறு - அழகிய வண்ண படத்தில்

அப்ப்டியே பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றே மட்டும் தோன்றுகிறது //
ஓ..அப்ப கவிதைய படிக்கல..!! ;-)

//அலை அலையாக வருகிறது!

அம்மா பற்றிய என் நினைவுகள் //
எனக்கும் தான்..!! :-(

//நினைவுகளினை தொடருங்கள் உங்கள் கவிதைகளில்....!//

கண்டிப்பாக அண்ணா..!! :-)
நன்றி அண்ணா முதல் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும்..!! :-)

sathish said...

:) Nanru!

Sri said...

நன்றி அண்ணா...!! :-)

நிஜமா நல்லவன் said...

பார்த்து ரசிக்க
அழகிய ஆறு
படித்து ரசிக்க
அதனினும் அழகிய கவிதைகள்!
வாழ்த்துக்கள்!

Sri said...

மிக்க நன்றி அண்ணா முதல் வருகைக்கும்,அழகான வாழ்த்துக்கும்..!! :-)

yuvaraj said...

உன் மடித்தேடி
மறந்து போன
என் தூக்கம்.....

Enai pondravargalin kankalai pathu ezhuthinayo...

இனியவள் புனிதா said...

அனுபவ பூர்வமான உணர்வுகளின் பதிவிது. எனக்கும்கூட அம்மாவின் ஞாபகம் வந்துவிட்டது...

Sri said...

//எனக்கும்கூட அம்மாவின் ஞாபகம் வந்துவிட்டது//
அப்படியா?? :-(

//அனுபவ பூர்வமான உணர்வுகளின் பதிவிது//

நன்றி புனிதா..!!

Ithyadhi said...

'காதல்' இல்லாமல் இருப்பது இது ஒன்று தான் போலும் என நினைத்தேன்.....
இதுவும் தாய் மீது கொண்ட காதலே!
நானும் என் சோகத்தைப் பகிர்ந்து கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்

naanal said...

நல்லா இருக்கு ஸ்ரீ...
விடுதியில் இருக்கும் அனைவரின் பிரதிநிதியாக நீங்கள் நின்று இதை எழுதிருக்கீங்க...

Sri said...

நன்றி ithyadhi , naanal...!! :-)

அனுஜன்யா said...

விடுதி வாழ்க்கை கடினம்தான். தனிமையின் தீவிரம் தணிக்க அதான் கவிதை அழகாக எழுதுகிறீர்களே! வலைப்பூக்கள் மற்றும் தளங்கள் இருக்கவே இருக்கின்றன.
Make the most of it. முகப்பில் இருக்கும் புகைப்படம் பிரமாதம். எந்த எடம் அது?

அனுஜன்யா

Sri said...

@ அனுஜன்யா

அது தேக்கடி அண்ணா.
நன்றி அண்ணா...!! :-)

J J Reegan said...

தனிமை, மௌனம், நினைவுகள், சத்தமில்லாத கண்ணீர்...
இவையெல்லாமே... உங்க கவிதைகள்...

ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க...

J J Reegan said...

தனிமை, மௌனம், நினைவுகள், சத்தமில்லாத கண்ணீர்...
இவையெல்லாமே... உங்க கவிதைகள்...

ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க...

Sri said...

@ jj reegan

நன்றி அண்ணா...!! :-)

தினேஷ் said...

உணர்வுகளை எழுத்துக்கள் கொண்டு கவிதையாக்கிய விதம் அருமை....


தினேஷ்

ஜி said...

//ஆலகால// apdiina??

thalaippa paakaama vaasichittu irukkumpothu kaathalanai patriya kavithaiyonu nenatchitte irunthen.. thideernu paatha Amma entry aayittaanga... nice one :))

Sri said...

நன்றிங்க‌ தினேஷ்..!! :-)

Sri said...

@ ஜி
தேவர்கள் பாற்கடலை கடைந்த போது கிடைத்த விஷம். அதை உலக நன்மைக்காக சிவன் உண்டதாகவும்,பார்வதி அவர் தொண்டையை அழுத்தி பிடித்து அதை அங்கேயே நிறுத்தியதால் நீலகண்டர் என பெயர் வந்ததாகவும் கதைகள் உண்டு.
நன்றி அண்ணா..!! :-)

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது