பி ரி வு

சப்தமில்லாமல்
படித்துக்கொள்ள
ஆயிரமாயிரம்
கவிதைகள்
நம் காதலில்...
சப்தமிட்டு
அழுகின்ற
மௌனங்கள்
நம் பிரிவில்....
*
என் கண்ணீரையும்
கவிதையாக்கக்
கற்றுக்கொண்டேன்
நம் பிரிவிற்கு
பிறகு....
*
திடீரென நினைவிற்கு வந்து
பேனா தேடும் முன்
மறந்து போகும்
கவிதைகளாய் அல்லாமல்
உன் நினைவுகள்
ஊமைக்காயங்களாய்
மனதினுள் ஆறாமல்......
*
அம்மாவைத் தேடி
அழும்
குழந்தைப்போல் உன்னைத்தேடி
அழும் மனதிற்கு
எப்படி சொல்வது
நம் பிரிவை......??
*
கண்கலங்காமல்
பார்த்துக்கொண்டாய்
காதலிக்கும்
காலம் வரை
இன்று
கலங்கிய கண்களோடு
மட்டுமே நான்......
*
என் வாழ்க்கையின்
அழகான பக்கங்களை
நீதான் நிரப்பினாய்
ஆனால்
புத்தகத்தையே
இன்று கிழித்தாய்
முறையா.......??
*
நீ தந்த
ரோஜா செடிக்கு
நம் பிரிவை
சொன்னது யார்
வெறும் முட்செடியாய்
இன்று.....
*
நீ தந்த
முத்தங்களை
நீயே எடுத்துக்கொள்
பருக்களாக
இல்லாமல்
அவை
இன்று
வடுக்களாக......
*
உனக்காக
நான்
எழுதிய கவிதைகள்
என்னைப் பார்த்து
ஏளனம் செய்கின்றன
அதற்காகவேணும்........
*
பசித்திருக்கிறேன்
தவி(னி)த்திருக்கிறேன்
விழித்திருக்கிறேன்
வேண்டாமே
இந்த பிரிவு......
*
நாம்
பிரிந்து விட்டோம்
நம்
காதல் குழந்தையை
என்ன செய்ய..??
*
காதலுக்குக்
காரணம்
தேவையில்லை என்றாய்
பிரிவுக்குமா.....??
*
உன்
காதல் கடிதங்களின்
வாசம் கூட மாறாமல்
என்னிடம்
நேசம் மாறிய நெஞ்சுடன்
நீ.......!!
*
பொம்மையைத்
தொலைத்துவிட்டு
அழும்
குழந்தையாய்
காதலைத்
தொலைத்துவிட்டு நான்.......

**

16 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

நவீன் ப்ரகாஷ் said...

//உனக்காக
நான்
எழுதிய கவிதைகள்
என்னைப் பார்த்து
ஏளனம் செய்கின்றன
அதற்காகவேணும்........//

அனைத்தும் அழகென்றாலும்
சொல்லாமல் விட்டதால்....
...அருமை....

Sri said...

நன்றி அண்ணா..!! :-)

naanal said...

//கண்கலங்காமல்
பார்த்துக்கொண்டாய்
காதலிக்கும்
காலம் வரை
இன்று
கலங்கிய கண்களோடு
மட்டுமே நான்......//

பிரிவின் உக்சக் கட்டத்தை மிகவும் அழகா சொல்லி இருக்கீங்க...

Sri said...

@ naanal
நன்றி அண்ணா..!! :-)

J J Reegan said...

// திடீரென நினைவிற்கு வந்து
பேனா தேடும் முன்
மறந்து போகும்
கவிதைகளாய் அல்லாமல்
உன் நினைவுகள்
ஊமைக்காயங்களாய்
மனதினுள் ஆறாமல்...... //

இம்...ம்ம்....... இந்த வரிகள் ரொம்ப நல்லா இருக்கே....

J J Reegan said...

// பொம்மையைத்
தொலைத்துவிட்டு
அழும்
குழந்தையாய்
காதலைத்
தொலைத்துவிட்டு நான்....... //

இதுவும் நல்லாத்தான் இருக்கு....

Sri said...

நன்றி ரீகன் அண்ணா...!! :-)

தினேஷ் said...

ரொம்ப நன்றாக எழுதுகிறிர்கள்... நிறைய எழுதுங்கள்...

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்

ஜி said...

:(( En imbuttu sogam???

Kavithais valakkampola kalakitteenga sis...

Sri said...

நன்றி தினேஷ் அண்ணா..!! :-)

Sri said...

@ ஜி
//:(( En imbuttu sogam???//
சும்மாதான் அண்ணா...!! ;-)
//Kavithais valakkampola kalakitteenga sis...//
நன்றி அண்ணா..!! :-)

M.Saravana Kumar said...

எங்கோ படித்த சில கவிதைகள் ஞாபகம் வருகிறது..

ஆனாலும் பிரிவு என்ற வார்த்தைகளுகிடையே இடைவெளி விட்டு "பி ரி வு" என்று தலைப்பிட்டு இருப்பது அருமை.. மிக நயமாய் இருந்தது.. :)

Sri said...

//பிரிவு என்ற வார்த்தைகளுகிடையே இடைவெளி விட்டு "பி ரி வு" என்று தலைப்பிட்டு இருப்பது அருமை//
நீங்க ஒருத்தர் தான் இதை சரியா கண்டுபிடிச்சிருக்கீங்க‌ ரொம்ப சந்தோஷம்..!! :-)
நன்றி சரவணகுமார்...!! :-)

M.Saravana Kumar said...

:)

சிவாஜி said...

//நீ தந்த
ரோஜா செடிக்கு
நம் பிரிவை
சொன்னது யார்
வெறும் முட்செடியாய்
இன்று.....//

உணர்வுகளின் ஆழத்தைத் தொடுகிறது...
அருமை தோழி... வாழ்த்துக்கள்...

Sri said...

@ சிவாஜி

//உணர்வுகளின் ஆழத்தைத் தொடுகிறது...
அருமை தோழி... வாழ்த்துக்கள்...//

நன்றி தோழரே முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்..!! :-))

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது