கனவில்
உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!
14 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:
நல்லாருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!!!
நன்றி அண்ணா :-)
en ovvoru linela ore oru vaarthai mattum irukuthu?? any reason or ilakkanam for kavithai?? ;)))
Nice one... :))
//en ovvoru linela ore oru vaarthai mattum irukuthu?? any reason or ilakkanam for kavithai?? //
அப்படியெல்லாம் இல்ல அண்ணா...!! வார்த்தைகள் பெரிசா இருந்த மாதிரி எனக்கு தோண்றியதால அப்படி வச்சிட்டேன்...!! :-)
//Nice one... //
நன்றி அண்ணா :-)
இவ்விறுதி வரிகள் என்னை மிகவும் கவர்கிறது. வாழ்வோடு போராடி வெற்றி பெறும் நெஞ்சுரம் படைத்தவர்களாலேயே இதுபோல் காதலை உதரித்தல்ல முடியும். அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.
உண்மைதான் அமுதா..!! வாழ்வோடு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நாளும் போராடிக்கிட்டுதானே இருக்கோம்??
நன்றிங்க அமுதா.....!! :-)
ரொம்பவும் பிடிச்சிருக்குங்க உங்கள் வரிகள். அதிலும் முக்கியமா கடைசி வரிகள்...
//ரொம்பவும் பிடிச்சிருக்குங்க உங்கள் வரிகள்//
நிஜமாவா?? ;-)
நன்றி புனிதா...!! :-)
//நிஜமாவா?? ;-)//
அதிலென்ன சந்தேகம் தங்கச்சி
நன்றி அக்கா..!! :-)
வாழ்க்கையோடு போராடுகையில் காதலாவது கத்தரிக்காயாவது ....
இதனைச் சொல்ல எததனை உவமைகள்
சிந்தனை அருமை - நல்வாழ்த்துகள் ஸ்ரீமதி
அழகான வரிகள் தோழி வாழ்த்துக்கள்
அழகான வரிகள் தோழி வாழ்த்துக்கள்
வாழ்க்கையோடு போராடுகையில் காதல் இருந்தா கொஞ்சம் நல்லா இருக்காது? ;)
Post a Comment