எப்போதடா வருவாய்.......??

காலைப்
பனித்துளியாய்
நான்
முயலாய்
எனைக் குடிக்க.....!!

*

காற்று தொடாத
மூங்கிலாய்
நான்
புல்லாங்குழலாய்
எனை மாற்ற......!!

*
பாதம் படாத
புல்வெளியாய்
நான்
என்னில்
மழையாய் பொழிய......!!

*
வளராத
நிலவாய்
நான்
என்னை
பௌர்ணமியாய்
ஒளிரச்செய்ய......!!

*

சிப்பி தொடாத
மழைத்துளியாய்
நான்
என்னை
முத்தாக்க.......!!

*

பறக்கத்துடிக்கும்
புறாவாக
நான்
என்
சிறகைக் கோதிவிட......!!

*

நானாகவே
இன்னும்
நான்
என்னில்
உன்னை
இட்டு நிரப்ப
எப்போதடா வருவாய்.......??

**

8 பேருக்கு என் கனவுகள் பிடிச்சிருக்காம்:

Anonymous said...

Nice kavithai da,

This is not a thing to keep ice on ur head,
This is the thing that gives a Confidence and Hope to ur life,
Its my Compliment.
Fine doing,
Keep on Going,
Success is Coming ,

All the Very Best

Sri said...

Hi,
Thank you very much dear...!!

ஜி said...

//நானாகவே
இன்னும்
நான்
என்னில்
உன்னை
இட்டு நிரப்ப
எப்போதடா வருவாய்.......??
//

:)))... Maththa varihal konjam saatharanamaathaan irunthathu.. aana intha kadaisi vari thooki saaptuduchu ellaathaiyum :)))

sathish said...

//காலைப்
பனித்துளியாய்
நான்
முயலாய்
எனைக் குடிக்க.....!!
//

கற்பனை அழகு :)

Sri said...

//Maththa varihal konjam saatharanamaathaan irunthathu.. //

நல்லா எழுத முயற்சி செய்கிறேன் அண்ணா..!!

//aana intha kadaisi vari thooki saaptuduchu ellaathaiyum//

நன்றி அண்ணா...!! :-)

Sri said...

//கற்பனை அழகு //

நன்றி sathish..!! :-)

Alb said...

.. கடைசி வரிகள் படித்ததும் எதையோ நிரப்பியும் நிரப்பப்பட சில இடைவெளிகளை விடுத்தும் இதயத்தினுள் இயங்கிக்கொண்டிருக்கிறது.. அழகான வரிகள்.. வாழ்த்துக்கள்.. ;)

Sri said...

@ Alb
நன்றி அண்ணா...!! :-)

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது