விடுதி வாழ்க்கை

என் சிரிப்பினில் கூட
சோகமே
தெறிக்கின்றது
இப்பொழுதெல்லாம்....

உன் குரலையே
எதிர்ப்பாக்கின்றேன்
செல்பேசி
அழைக்கும் போதெல்லாம்....

அறுசுவை உணவும்
ஆலகால விஷமாய்
தொண்டையில்...

உன் மடித்தேடி
மறந்து போன
என் தூக்கம்.....

உன் குரல் கேட்காமல்
விடியாது போன
என்னிரவுகள்.....

விழிநீர் மழையில்
நனைந்த
உன் நினைவுகள்......

இனிமேலும்
வேண்டாம்
அம்மா
எனக்கிந்த
விடுதி வாழ்க்கை....!!

காதல்..??

சிற்பியை செதுக்கும்
உளி.....

இரவு பாடும்
பூபாளம்.....

வெயில் நேரத்து
வானவில்...

கண்ணீரில் கரையும்
கல்....

பி ரி வு

சப்தமில்லாமல்
படித்துக்கொள்ள
ஆயிரமாயிரம்
கவிதைகள்
நம் காதலில்...
சப்தமிட்டு
அழுகின்ற
மௌனங்கள்
நம் பிரிவில்....
*
என் கண்ணீரையும்
கவிதையாக்கக்
கற்றுக்கொண்டேன்
நம் பிரிவிற்கு
பிறகு....
*
திடீரென நினைவிற்கு வந்து
பேனா தேடும் முன்
மறந்து போகும்
கவிதைகளாய் அல்லாமல்
உன் நினைவுகள்
ஊமைக்காயங்களாய்
மனதினுள் ஆறாமல்......
*
அம்மாவைத் தேடி
அழும்
குழந்தைப்போல் உன்னைத்தேடி
அழும் மனதிற்கு
எப்படி சொல்வது
நம் பிரிவை......??
*
கண்கலங்காமல்
பார்த்துக்கொண்டாய்
காதலிக்கும்
காலம் வரை
இன்று
கலங்கிய கண்களோடு
மட்டுமே நான்......
*
என் வாழ்க்கையின்
அழகான பக்கங்களை
நீதான் நிரப்பினாய்
ஆனால்
புத்தகத்தையே
இன்று கிழித்தாய்
முறையா.......??
*
நீ தந்த
ரோஜா செடிக்கு
நம் பிரிவை
சொன்னது யார்
வெறும் முட்செடியாய்
இன்று.....
*
நீ தந்த
முத்தங்களை
நீயே எடுத்துக்கொள்
பருக்களாக
இல்லாமல்
அவை
இன்று
வடுக்களாக......
*
உனக்காக
நான்
எழுதிய கவிதைகள்
என்னைப் பார்த்து
ஏளனம் செய்கின்றன
அதற்காகவேணும்........
*
பசித்திருக்கிறேன்
தவி(னி)த்திருக்கிறேன்
விழித்திருக்கிறேன்
வேண்டாமே
இந்த பிரிவு......
*
நாம்
பிரிந்து விட்டோம்
நம்
காதல் குழந்தையை
என்ன செய்ய..??
*
காதலுக்குக்
காரணம்
தேவையில்லை என்றாய்
பிரிவுக்குமா.....??
*
உன்
காதல் கடிதங்களின்
வாசம் கூட மாறாமல்
என்னிடம்
நேசம் மாறிய நெஞ்சுடன்
நீ.......!!
*
பொம்மையைத்
தொலைத்துவிட்டு
அழும்
குழந்தையாய்
காதலைத்
தொலைத்துவிட்டு நான்.......

**

உயிர்


உன்

பெயருக்கும்

உயிர் இருக்கிறதா..??

யாரோ

யாரையோ

உன் பெயரால்

அழைக்கும் பொழுதும்..!!

பத்திரிக்கைகளில்

வாசிக்கும் பொழுதும்..!!

மனசுக்குள்

மழையடிக்கிறதே......!!

உன் காதலையும்.....

பேருந்தின்
நெரிசலில்
பயணத்தை
சுகிக்க
முடியாது
என்னால்.....!!

*
கூரையில்லா
குடிசையில்
மழையை
ரசிக்க
முடியாது
என்னால்....!!

*
பசித்திருக்கும்
வேளையில்
உணவை
ருசிக்க
முடியாது
என்னால்....!!

*
உறக்கமில்லா
இரவில்
நிலவை
நினைக்க
முடியாது
என்னால்.....!!

*
வாழ்க்கையோடு
போராடுகையில்
உன் காதலையும்......
**

எதை எழுதுவது...??

என் எழுத்து
மேஜை முழுவதும்
காகிதங்கள்
நிரம்பி வழிகிறது
மை கூடு
எதை எழுதுவது
உன்னை விட்டுவிட்டு...??

இதெல்லாம் ஏன்டா?


வெட்கப்
புத்தகத்தின்
வரிகளை
வாசிக்கக்
கற்றுத்தந்தவன் நீ..!!

*
தூக்கமன்றி
ஏதுமறியா
என்
இரவுகளை
கனவுகளால்
நிரப்பியவன் நீ..!!

*
என்
பெண்மையின்
பரிபூரணங்களை
புரியவைத்தவன் நீ..!!

*
என்
கோபம்,துக்கம்
இவற்றை
முத்தங்களால்
முடித்துவைத்தவன் நீ..!!

*
என் காதலின்
வெற்றுப்பக்கங்களை
கவிதைகளால்
நிரப்பியவன் நீ..!!

*
காற்றோடு
கைக்கோர்த்து
கடலலையில்
நடந்தவளை
காதலோடு
நடக்கப்பழக்கியவன் நீ..!!

*
கவிதை
ரசித்தவளை
எழுத
வைத்தவன் நீ..!!

*
நேற்றுவரை
குழந்தை
என்றிருந்தவளை
வருகையினால்
வயதறிய
வைத்தவன் நீ..!!

*
தனிமையோடு
சத்தமாக
பேசவைத்தவன் நீ..!!

*
'இதெல்லாம் ஏன்டா?'
சத்தமாக
சிரித்தபடி
மெதுவாக
சொன்னாய்'இதுதாண்டி காதல்'
என்று.......!!

தாஜ்மஹால்


மெயில்ல வந்தது........!! :-)

காதல்

இயேசுநாதர் தோள்
ஆட்டுக்குட்டியாய்.....!!
உன்னில்
என் காதல்
மிக பத்திரமாய்....!!

எப்போதடா வருவாய்.......??

காலைப்
பனித்துளியாய்
நான்
முயலாய்
எனைக் குடிக்க.....!!

*

காற்று தொடாத
மூங்கிலாய்
நான்
புல்லாங்குழலாய்
எனை மாற்ற......!!

*
பாதம் படாத
புல்வெளியாய்
நான்
என்னில்
மழையாய் பொழிய......!!

*
வளராத
நிலவாய்
நான்
என்னை
பௌர்ணமியாய்
ஒளிரச்செய்ய......!!

*

சிப்பி தொடாத
மழைத்துளியாய்
நான்
என்னை
முத்தாக்க.......!!

*

பறக்கத்துடிக்கும்
புறாவாக
நான்
என்
சிறகைக் கோதிவிட......!!

*

நானாகவே
இன்னும்
நான்
என்னில்
உன்னை
இட்டு நிரப்ப
எப்போதடா வருவாய்.......??

**

ஊமைக் காதல்

உனக்கான வார்த்தைத்

தேடலில் ஊமையான

உதடுகள்......!!

*

வருகை தந்த

வார்த்தைகளும்

வழுக்கி தொண்டைக்குள்

விழுந்த மௌனம்....!!

*

மெல்ல தீண்டவரும்

அலையாய்

சொல்ல முயன்று

தோற்ற கணங்கள்.......!!

*

கோடைக்கால தென்றலாய்

மெல்லச் சுடும்

என் மூச்சு.............!!

*

இமைகள் கூட

சுமையாகி போன

என்னிரவுகள்........!!

*

உன் நினைவை

உண்டு

காற்றைக் குடித்து

நான் வாழ்ந்த

நாட்கள்........!!

*

உன் வருகைக்கான

என்

எதிர்ப்பார்ப்புகள்..........!!

*

உன் தீண்டலால்

உயிர்தெழுந்த

என் வெட்கங்கள்........!!

*

எதுவுமே உணர்த்தவில்லையா

உனக்கான

என் காதலை..........??

**

நான்........!!

அழகான ஓர் அதிகாலையில்......

சலனமில்லாமல்

எனக்குள் விழுந்தாய்.......

கலங்கிய குளமாய் நான்........!!

ஓவியம்

வண்ணங்களால் நிரப்பி வைத்த
ஓவியம் போல......
என்னை உன் எண்ணங்களால்
நிரப்பி வைத்துள்ளேன்......
(கண்ணீர்) மழையில் நனைத்துவிடாதே......!!

வானவில்..!!

மழைத்துளி பிரதிபலிக்கும்
வானவில்லாய்....
என்
கண்ணீர் துளியிலிருந்து....
நம் காதல்.....!!

நீ.....!!

ஏதேதோ நினைக்கிறேன்
என்னென்னவோ பேசுகிறேன்
ஆனால்
அதில் எல்லாமுமாய்
நீ..!!

ஞானம்

போதி மரத்தடியில்
ஞானம் பெற்ற சித்தார்த்தர் போல...
உன் பார்வையால்
நானும் பெற்றேன் காதலை
அவர் புத்தரானார்...
நான் பித்தனானேன்.....

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது