சக்தி

"சக்தி..!!"


"சாரிமா... ப்ளீஸ் என்ன ஃபோர்ஸ் பண்ணாத..."

"உன்ன ரொம்ப எதிப்பார்க்கிறாங்க..."

"அம்மா நாந்தான் அப்போவே சொல்லிட்டேனே? எனக்கு என் வேல தான் முக்கியம்..."இதற்கு மேல் அவளிடம் வாதிடத் தோணாது அவளைவிட்டகன்றாள் அவள் அம்மா.

"என்னமா சொல்றா அவ?"

"ஒத்துக்கலங்க", சொல்லும்போதே கண்ணீர் திரையிட்டது கண்களை.
--
"ஹாய் ஷக்தி!! யூ ஆர் லேட்..", கணேஷ் அவளின் டீம் லீட்.

"எஸ் ஐ நோவ்", ஒட்டாத ஒரு புன்னகையை அவனுக்களித்தாள்.

செய்ய வேண்டிய வேலைகளை மனதிற்குள் பட்டியலிட்டபடியே கண்களை மட்டும் கணினிக்குக்கொடுத்து மனதை எங்கோ அலைப்பாயவிட்டிருந்தாள். எண்ணங்களின் வலிமை அபாரமானது, வெகு சுலபமாக நம் நினைவுகளை மீட்டும் திறமை அதற்குண்டு. இப்பொழுது எதுவும் யோசித்தல் கூடாது என அவள் செயல்பட்டாலும், மனமும் அதனுடனான எண்ணங்களும் எங்கோ சுழன்று கொண்டிருந்தது.

"ஏன் ஷக்தி ஒரு மாதிரி இருக்க?", நீலா அலுவலக தோழி.

"உனக்கு தான் தெரியுமே..."

"ம்ம்ம்.. பட் நீ என்ன முடிவு பண்ணிருக்க?"

"எப்படி இப்போ போய் என்னால போகமுடியும் சொல்லு? ப்ராஜெக்ட் டெட்லைன் கிட்ட இருக்கு... "

"ம்ம்ம் ஓகே உன் இஷ்டம்... லன்ச்க்கு வெளில போலாம்..."

--
தலையை நனைத்த தூரல் பாதம் தொடும் முன்னரே நின்றுவிட்டிருந்தது. சில நாட்களாக அவள் ஏங்கிய தனிமை அவளுக்குக் கிடைத்திருந்தது. ஆனாலும் அவள் தனிமையை உணரா வண்ணம் நினைவுகளால் தத்தளிதாள்.

ஒரு ஒன் வீக் லீவ் போட்டுட்டு போலாம் தான். ஆனா, அங்க போய் என்ன பண்ணபோறோம்? ஒரு அவசரத்துக்கு ஃபோன் பண்ணனும்னாக் கூட டவுன் வரவேண்டியதிருக்கும். கொஞ்சம் கூட வளராத வரப்பட்டிக்காடு ச்சே....

நானா இப்படியெல்லாம் நினைப்பது? என்னுடைய பால்யகால விடுமுறைகள் எதுவும் தவறவிட்டதில்லை அந்த நாட்களை...

"இது போட்டு இது போட்டு இது யாரு?"

"அம்மா இவன் என்ன கிள்ளிட்டான்"

"கண்ணாமூச்சி ரே ரே"

"நான் அவுட் இல்ல. ஒத்துக்கமாட்டேன் போ"

"பாட்டி எனக்கு தான் கத சொல்லனும் நீங்க"

"பாட்டி தான் சாதம் ஊட்டனும்"
--
"அம்மா எதாவது சாப்பிட இருக்கா?", அருகில் கேட்ட குரலின் நடுக்கம் அவளை அதிர வைத்தது.

" இல்ல பாட்டி. இந்தாங்க இத வெச்சிக்கோங்க"

"பணம் வேண்டாம்மா",பாட்டி வேகமாகக் கடந்துவிட்டிருந்தாள்.
--
" அம்மா நானே பாட்டிய பார்த்துக்க ஊருக்குப் போறேன்மா".


-அன்புடன்,
ஸ்ரீமதி.

எல்லாக்கனவுகளும்...

மண் மூடிய இடத்திலிருந்து
சிலிர்த்து
மெல்லத் துளிர்க்கத் தொடங்கி
செடியென விடியல் தேடத்துவங்குகின்றன
என் கனவுச்செடிகள்....
பூக்களரும்பும் வேளை
தேனீக்களாய் சிலர்,
காய் கனியும் தருணங்களில்
என் கனவுப்பறிக்கும் கண்களுடன் சிலர்,
என நேற்றுப்பார்த்த கீரைக்காரியில் துவங்கி,
தொலைக்காட்சித் தொடர்களின்
வில்லிகளின் முகங்கள் வரை
பறவை முகங்களாய்
நீளும் என் பட்டியல்....
பழம்தின்று இட்ட எச்சத்திலிருந்து
மீண்டும் முளைக்குமென்
கனவுச்செடி...

வளர்ந்தப்பின் தட்டிப்பறிக்கப்படலாம்
என் எல்லாக்கனவுகளும்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

படுத்தியதில் பிடித்தது...

உன்னை
எப்படி அழைப்பது என்பதில்
தொடங்கியதென்
முதல் குழப்பமும்
பின் காதலும்...
பளு தூக்கும்
குழந்தையெனத் திணறுகிறேன்
உன் காதல் உணர்ந்த
கணம் முதல்...
கன்னம் தர
மறுத்துவிட்டாள்
தற்கொலை செய்துக்கொண்டன,
முத்தங்கள் அனைத்தும்
இதழ்களில்...
ரோஜாச்செடி வளர்ப்பதெப்படி?
என ஆராய்கிறாய்
மரம் வெட்டினால்
அச்சச்சோ என்கிறாய்
என் இதயத்தை மட்டும்
பிடுங்கிக்கொண்டு சிரிக்கிறாய்...
படித்ததில்
பிடித்தது என்ன?
என்று கேட்கிறாய்...
உன் கண்களைக்கண்டதும்
அனைத்தும் மறந்த எனக்கு,
நீ படுத்தியதில்
பிடித்தது கேட்டிருந்தால்
சொல்லியிருப்பேன்...
கண்களை மூடிக்கொள்
காதில் ரகசியம் சொல்வேன்
என
நீ சொல்லியவையெல்லாம்
இன்றுவரை
நீ மட்டுமே அறிந்த
ரகசியங்கள்...


-அன்புடன்,
ஸ்ரீமதி.

முடிவிலி...

ஒவ்வொரு முறை
உனைக் காணும்போதும்
என் காதல்
உன்னை இட்டு
தன்னை நிரப்பிக்கொள்கிறது....

கொடுத்த முத்தத்தின்
ஈரத்தை
இதழ்களாலேயே
துடைக்கும் வித்தை
எங்கு கற்றாய்?

எனக்கென இப்போது
என் தனிமைக்கூட இல்லை
அங்கும் வந்தமர்ந்துக்கொள்கிறது
உன் நினைவுள்...

ஆளரவமற்ற சாலையில்
மரங்கள் உதிர்த்தப் பூக்கள் போன்றது
உன்னிடம் சொல்லாத
என் காதல்...
உன்னிடம் சொல்லாத
என் காதல்
காற்று வெளியில் பயணித்து
எங்கோ சேர்கின்றன
முடிவிலியாய்...

எனக்கு மகிழ்ச்சியே
உன்னிடம் வெளிப்படுத்தாத
என் காதல்
முடிவிலியாய் வாழ்வதில்...
வாடகைக்கல்ல
விற்பனைக்கு என்னிதயம்...
விலை உன்னிதயம்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

பின்னிரவு மழை


வசீகரமான வார்த்தைகளாலான
வாக்கியங்கள் கோர்த்து...
பின்னும் ஏதோ குறைவதாய் தோன்ற...
தடுமாற்றம் அணிந்து,
அதிகபட்ச வெட்கம் ஊற்றி,
நாணம் குழைத்து...
நீ கொடுத்துச்சென்ற
காதலுக்குப்பின்...
மழையுடனே கழிகின்றது...
என் பின்னிரவுகள் அனைத்தும்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.

கனவுகள் மீட்டும் நினைவுகள்...

கரிய இருளின் உருவங்கள்
புரிய தொடங்கிய இருளில்,
உன்னுருவம் தெரிய,
உணர்ந்து,
கனவு கலைந்து எழுந்தேன்...
மீதமிருந்த நினைவுகளை
மீட்டெடுத்து....
மாலை எனத்தொடுத்து
உனக்கணிவித்தப் பின்னும்
ஏதோ குறைவதாய் தோன்ற...
இன்று
இதயம் அனுப்பியுள்ளேன்...
நினைவுகளுடன் சேர்த்துக்கொள்...
திருப்பிமட்டும் அனுப்பிவிடாதே....

-அன்புடன்,
ஸ்ரீமதி.

ஹிட்லர் மீசை

மணித்துளிகள் சொட்டுச் சொட்டாய்
நெற்றிப் பொட்டில் தெறித்து
உயிர் நனைக்க....
காதலும், காற்று வாங்க
கனவுடன் கைக்கோர்த்து,
கதைகள் சொல்ல...
கண்களுக்குள் கனல் மெல்ல
கனன்றெரிய...
சிருங்கார ரசமிழந்து
நாழிகைகள் நான் கடத்த...
ஏதோ ஒரு கனவில்
எங்கோ சஞ்சரித்து..
போர்வைக்குள் ஒருக்களித்திருக்கும் உனக்கு
ஏனோ வரைந்துப்பார்க்கிறேன்
ஹிட்லரின் மீசை....

-அன்புடன்,
ஸ்ரீமதி.

கரையோரம்

My Photo
ஸ்ரீமதி கிரிதரன்
View my complete profile

Click 'n' Earn

Copyright

Copyright
கனவுகள் விற்பனைக்கல்ல‌

Blogging Friends Forever Award

Blogging Friends Forever Award
நன்றி சரவணகுமார்

Butterfly Award

Butterfly Award
நன்றி திவ்யப்ரியா அக்கா

Interesting Blog Award

Interesting Blog Award
நன்றி வியா மற்றும் கார்த்திக்

Scrumptious Blog Award

Scrumptious Blog Award
நன்றி ஆதவன் அண்ணா

கரையில் என்னோடு

கனவுகளில்

கரையில்

கனவில்

உன் தாவணி
முனைப்பார்த்து
காதல் வளர்த்தேன்...
சேலைக்கு மாறிவிட்டாயே
திருமணமா உனக்கு??
------------------------------------------
மெல்ல மெல்ல என்னை
மென்று கொண்டிருக்கும் காதல்
தின்று முடிப்பதற்குள்ளாவது சொல்வாயா??
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று.
-ஸ்ரீ
-------------------------------------------
உன்னிடமான
என் எதிர்ப்பார்ப்புகள் மட்டும்
எதிர்ப்பார்த்தபடியே
ஏமாற்றப்படுகின்றன..!! :'-(
------------------------------------------
"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்கும்
அழகுக்காகவே
பைத்தியமாகலாமடி...!!
-------------------------------------------
இனி சப்தமிடுவதில்லை
என சபதம்செய்துள்ளன
என் கொலுசுகள்
நீ இல்லாதநாட்களில்..!!
--------------------------------------------"
நீ என்ன லூசா??"
"இது வரைக்கும் இல்ல..
இப்பதானே உன்ன பார்த்திருக்கேன்..
பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு..!!" ;-)
--------------------------------------------
கல்லாக இருந்த
என்னை கல்வியால்
கடவுளாக சமைத்தாய்
இன்றும் உளியாகமட்டுமே
நீ
கடவுள்களை
உருவாக்கிக்கொண்டு..!!

தமிழிஷ்

மாற்று!

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

கரையில் கனவில்

கனவில் இப்போது